arrow_back
கொண்டவன் கொடுத்தானடி கொண்டவன் கொடுத்தானடி – 7

கொண்டவன் கொடுத்தானடி – 7

visibility 87
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கொண்டவன் கொடுத்தானடி – 7

 

மாலை பொழுதை எட்டி பிடிக்கக் காத்திருக்கும் தருணம் போலும்.குடும்ப மக்கள் அனைவரும் வாடிப்பட்டி மருது வீட்டின் முன் அமர்ந்திருந்தனர்.சுந்தரியின் ஒப்பாரி தவிர்த்து, அந்த இடமே அத்தனை அமைதியாக இருந்தது.அம்சவள்ளியின் கையைப் பிடித்துக் கொண்டு கத்தி அழுது கொண்டிருந்தாள் சுந்தரி.அவளை சுற்றி நான்கு தமக்கை மார்களும் அமர்ந்திருந்தனர்.

 

வீட்டின் பெரியவர்களாகச் சொக்கப்பன் மற்றும் மருதுவின் தாய் மாமன் இசக்கி முத்து அமர்ந்திருந்தார்.அவர்களுக்கு எதிரில் வீட்டின் மாப்பிள்ளளைகள் அவர்களுடன் முத்துகாளையும், மருதுவும் அமர்ந்திருந்தார்கள்.நாச்சியும், கந்தசாமியும் மட்டும் தனியாக அமர்ந்து கொண்டார்கள். அது என்னவோ மருது,வள்ளி,முத்துவை தவிர அனைவரிடமும் கந்தசாமி கொஞ்சம் ஒதுக்கம் காட்டி தான் நிற்பான்.

 

வெகு நேரமாகச் சுந்தரி புலம்பி கொண்டே போக, இதற்கு மேல் விட்டால் ஆகாது என்று எண்ணிய மருது சொக்கப்பனை பார்க்க.மருதுவின் பார்வைக்காகவே காத்திருந்தவர் போல் குரலை செருமி கொண்டு பேச்சை தொடங்கினார் சொக்கப்பன்.

 

“இந்தாரு சுந்தரி செத்த ஒப்பாரியை நிறுத்து புள்ள. புள்ள பொழைச்சு வந்ததே பெருசு அடுத்து என்னான்னு ஓசி, அதை வுட்டுப்புட்டு ஒப்பாரி வைச்சுக்கிட்டு கிடக்க”

 

“இன்னும் என்னத்த பெரியப்பு ஓசனை? ராணியாட்டம் பிள்ளையை பெத்து வச்சிருக்கேன், கண் அசந்த நேரத்துல காவ கொடுத்திருப்பேன். இன்னும் என்னத்த பேச? எம்புள்ளைய கட்டிக்கிட அம்புட்டு கசந்து கிடக்கா அவனுக்கு” முத்துகாளையை முறைத்தவாறு சுந்தரி சொல்ல.முத்துக்காளை எந்த உணர்வையும் காட்டாமல் நின்று கொண்டிருந்தான்.

 

“அதுக்குத்தேன் பெரிவுக கூடி இருக்கு செத்த கம்முன்னு இரு ” சுந்தரியை கடிந்த மருது சொக்கப்பன் அருகில் அமர்ந்திருக்கும் இசக்கி முத்துவை பார்த்து.

 

“மாமா! என்னான்னு பேசுக” என்றதும் எந்தவித மேல் பூச்சுகளும் இல்லாமல் நேரடியாக முத்து காளையைப் பார்த்தவர்.

 

“ஏலேய்! காளை என்ன சொல்லுத? உமக்கு வேண்டி புள்ள உசுரை கொடுக்கப் போயிடுச்சு.உம்ம அக்காகாரி நியாயம் கேட்குறா என்ன செய்ய போற?” என்றதும் அவனது பார்வை மங்கல நாச்சியைத் தான் பார்த்தது.அவளும் அவனையே தான் பார்த்து கொண்டிருந்தாள்.

 

“நாச்சி அம்மாளு கூடப் பேசிப்புட்டு ஒரு நல்ல முடிவுக்கு வாரேன்” வாக்கியத்தைக் கூட அவன் முடிக்கவில்லை வரிந்து கட்டி கொண்டு வந்தாள் சுந்தரி.

 

“இந்தாரு உம்ம கண்ணாலத்தை நீதேன் முடிவு செய்யனும் அவ என்னத்துக்கு?” என்றதும் முத்து காளை கோபமாகத் தமக்கையிடம் திரும்பியவன்.

 

“எமக்கு ஆத்தா அதுதேன் அது கிட்ட பேசனும்”

 

“இது நல்லா இருக்கே மருதுவின் பெரிய மகள் பொன்னியும் பேச்சுக்கு வர”

 

“இந்தாரு தூக்கி வளர்த்த பாசத்துல அவேன் சொல்லுதான் அதுல என்ன தப்புருக்கு, அதேன் நல்ல செய்தி சொல்லுதேன்னு சொல்றான் தானே புள்ள, அப்புறம் என்ன வம்புக்கு வாறீக?” சொக்கப்பன் பேச்சை காதில் கேட்கும் நிலையில் சுந்தரியும், அவளது தமக்கைகளும் இல்லை.ஏற்கனவே மங்கல நாச்சியின் பாசத்தையும், உழைப்பையும் ஆளுமை என்று கருதி நிற்கும் பெண்கள், அவளிடம் ஒட்டுதல் இல்லாமல் விலகியே இருந்தனர்.

 

நாச்சிக்குத் திருமணம் முடிந்த பின்பு சுத்தமாக ஒட்டுதல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.விஷே நாள், திருவிழா என்று பார்த்தால் கூட மறைமுகமாக அவளை எதாவது பேசி வம்பு செய்து கொண்டிருந்தனர்.

 

மொத்தத்தில் மங்கல நாச்சியின் செழுமையும், வளமையும் கொஞ்சம் கண்ணை உறுத்தி தான் வைத்தது.இப்போது கண்ணுக்கு நிறைவான ஒழுக்கம் கொண்ட ஆண் மகனான தம்பியை தங்கை பெண்ணுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற வெறியும் சேர்ந்து கொண்டது.முறையில் சுந்தரி மற்றும் நாச்சியின் பெண் பிள்ளைகள் மட்டுமே வயதில் சிறியவர்கள், மற்றவர்கள் எல்லாம் பெரிய பெண்கள் என்பதால் வந்த வினை.

 

“அப்போ அவ எம்புள்ளையைக் கட்ட வேணான்னு சொன்னா என்னடா செய்வ?” கொஞ்சமும் யோசிக்கவில்லை முத்துகாளை பட்டென பதில் கொடுத்தான்.

 

“உம்ம பொண்ணை கட்டிக்கிட மாட்டேன்”அவ்வளவு தான் மொத்த வன்மமும் வெறியாக மாற மங்கல நாச்சியிடம் சென்றவள்.பேச கூடாத பேச்சை எல்லாம் பேசி வைத்து விட்டாள்.

 

“ஏண்டி சதிகாரி என்ன ஜாதகமடி உமக்கு? ஆயி, அப்பன் வூட்டலையும் ராணித்தேன்.இதோ புருசங்காரேன் வூட்டலையும் ராணித்தேன். பெத்தவன் தொடங்கிப் பொறந்தவன், கட்டுனவேன் வரை உம்மைத் தாங்கி நிக்கிற மெத்தப்பா?”

 

“சுந்தரி தேவையில்லாம பேசி வைக்காத புள்ள?” மங்கல நாச்சி பொறுமையாக எடுத்து சொல்ல. அதையெல்லாம் கேட்கும் நிலையில் சுந்தரி இல்லை.இதில் நான்கு அக்கா மார்களும் வந்து சுந்தரியுடன் நின்று கொள்ள தனித்து நின்றாள் மங்கல நாச்சி.

 

“என்னடி தேவையில்லாத பேச்சு? எம்புள்ள வாழ்க்கைக்குப் பேசிகிட்டு கிடக்கேன், இது தேவையில்லாத பேச்சா? அது சரி உம்ம பொண்ணைக் கணக்குல வச்சு பார்த்தா எம்புள்ள உமக்குத் தேவையில்லதேன்”

 

“சுந்தரி அது என்ன உம்புள்ள, எம்புள்ள? எமக்கும் அம்சவேணி புள்ளதேன்”

 

“இந்தாரு இந்த நடிப்பு வைக்கிற சோலி எல்லாம் வேணாம், உம்ம கணக்கு எமக்குத் தெரியாதுன்னு பார்த்தியாக்கும்”

 

“என்னபுள்ள பேசுற நீ? நான் என்ன கணக்கு வச்சேன்?”

 

“ஏன் இல்லை, நீயும் உம்ம புருஷங்காரனும் இவனைத் தூக்கி வளர்த்து, சொத்து முதற்கொண்டு எழுதி வச்சது எதுக்குன்னு கேக்கேன்? எந்த ஊருல மச்சானுக்குச் சொத்து தாராய்ங்க? அதுவும் எந்த ஆதாயமும் இல்லாம?” என்றதும் நாச்சி பதறி தனது கணவனைப் பார்க்க.அவனோ சுந்தரியின் பேச்சை கூர்ந்து கொண்டிருந்தான்.

 

“சுந்தரி!”

 

“இந்தாரு நிறுத்துடி பசப்பி, வளர்த்த பாசத்துக்கு இவனுக்குச் செஞ்சா அக்காளும், மாமாவும் நமக்கு வேண்டி செஞ்சாய்ங்கன்னு, அவனும் நன்றிக்கு வேண்டி நீ கட்டிக்க சொன்னா? முத்து உம்ம மவளை கட்டிக்கிடுவான்.

 

ஏன்னா! நீ ஊனத்தைப் பெத்து வச்சிருக்க , அது விலை போகுமா? ஆரு கட்டுவா அவளை? ” சுந்தரி பேசி முடிக்கும் முன்னே சுந்தரியை நோக்கி பாய்ந்திருந்தனர் கந்தசாமியும், முத்துவும். அதற்குள் சுந்தரியின் கணவன் கந்தசாமியை இழுத்துப் பிடித்திருந்தான்.

 

“என்னடா அக்கான்னு கூட மறுவாதி இல்லாம பாயிர? முத்துவை பார்த்து கத்திய வேம்பு என்ன கந்தசாமி கொழுந்தியான்னு பார்க்கம்மா வெஞ்சுகிட்டு போறவேன்” வேம்புவின் குரலில் அத்தனை கடுமை.அவனது கையை உதறி விட்டு அதிர்ந்து நிற்கும் மங்கல நாச்சியின் கையை பற்றி கொண்டான் கந்தசாமி, தனது கோபத்தை கையின் பிடியில் காட்டி நின்றான்.

 

சுந்தரியின் பேச்சில் அதிர்ந்து நின்ற பெரியவர்களைப் பார்த்து,” எம்புள்ள குணத்துக்கு எம்புட்டுக் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது.எம்புள்ளையை ஊனம் சொன்னீக கழுத்தை திருகி ஆத்துல வீசிப்புடுவேன்.

 

எம்புட்டு கொடுத்தாலும் குணம் கண்ட எம்புள்ளைக்கு ஈடாகாது என்றவன் சுந்தரியை பார்த்து இதே ஒரு ஆம்பளை பேசி இருந்தா இந்நேரம் கொன்னு பொதைச்சிட்டுப் போயிருப்பேன்.ஆருக்கு வேணும் உம்ம தம்பி? நீயே வச்சுக்கிடு உம்ம தம்பிய. அப்புறம் அவனை எம்புள்ளைய பார்த்துதேன் அம்புட்டும் செஞ்சேன்” என்றவன் நாச்சியை இழுத்துக் கொண்டு செல்ல.

 

வள்ளி தனது வயதை மறந்து அவர்கள் பின்னே சென்றாள்.மருது மிகுந்த அதிர்ச்சியில் தள்ளாடி நிற்க.முத்துவும் நாச்சியின் பின் செல்ல போக அவனது கையை எட்டி பிடித்து நிறுத்திய சுந்தரி.”அவ பின்னாடி போன நானும், எம்புள்ளையும் இங்கனயே கொழுத்திகிட்டு செத்து போவோம்” என்றதும் அத்தனை கோபமாகத் தனது இயலமையைக் காட்டியவன் சடாரென வீட்டுக்குள் நுழைந்து கொண்டான்.

 

சொக்கப்பனும், இசக்கி முத்துவும் சுந்தரியை நோக்கி “எப்படிப் புள்ள ஒரே இரத்தத்துல வேறுபாடு பார்க்க முடியுது? என்றவர்கள் வேம்புவிடம் திரும்பி  நீயே பார்த்துகிடு வேம்பு.எங்க பேச்சுக்கு இங்கன காது கொடுக்க முடியலைன்னா எங்களை எதுக்குப் பேச வர சொன்னீக? நீங்களே பேசிக்கிடுங்க” என்றவர்கள் கோபமாகக் கிளம்பி சென்று விட்டனர்.

 

சுந்தரியும் தம்மைகளும் ஒன்று கூடி பேச தொடங்க.அதுவரையில் ஒரு வித அதிர்ச்சியில் நடக்கும் கூத்தை பார்த்துக் கொண்டிருந்த அம்சவேணி தலையில் பட், பட்டென அடித்து கொண்டாள்.தான் செய்து வைத்த ஒரு முட்டாள் தனம், இப்போது குடும்பச் சண்டையாக மாறி, சந்தி சிரித்து நிற்கும் என்று அவள் கனவிலும் நினைக்க வில்லை. அத்துடன் தனது தாய் இத்தனை சாதுரியமாகக் காய் நகர்த்தி வைப்பாள் என்றும் அவள் எதிர் பார்த்திருக்கவில்லை போலும்.சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்து நின்றாள்.சில மௌனங்களும் பயங்களும் மற்றவர்களுக்கு பெரும் பாதகம் அல்லவா

 

இங்கு கொட்டாம்பட்டியில்!…

 

இரவு வீடு வந்து சேர்ந்தவர்கள் நடந்த சங்கதியை சொல்ல கருப்பன் கொதித்துப் போக, அவனை அடங்கி அமர வைத்தார் முனியசாமி.அழகு நாச்சி கண்ணீருடன் தனது அறைக்குள் முடங்கிக் கொள்ள.

 

சாந்தா,”நாச்சி வுடு சாமி மனசை போட்டு அலட்டி வைக்காத” என்றவளுக்கும் மனம் கலங்கி தான் போனது.கூடவே இத்தனை நாள் இல்லாமல் வெளியில் தனது பேத்தியின் தோற்றம் இப்படித் தானே என்ற பயமும் அவரைப் பிடித்துக் கொண்டது.

 

“அம்மாடி போயி படுக விடியட்டும் பேசிக்கிடலாம்” என்றதும் நாச்சி எழுந்து கொள்ள, கருப்பனும் அவளுடன் எழுந்து கொண்டான், இருவரும் தங்கள் அறைக்குள் நுழைந்து கதவை அடைக்க.

 

இந்தத் தனிமைக்கு வேண்டியே காத்திருந்தவள் போல் கதறி விட்டாள் நாச்சி,” நான் எங்கன மாமா தப்பு செஞ்சேன்? எம்புள்ளைய பார்த்து இப்படிச் சொல்லிப்புட்டாளே சண்டாளி.எம்புள்ளைக்குக் கண்ணாலம் ஆகாத மாமா? அந்த அளவுக்கா எம்புள்ள கிடக்கு? அது சாமி சிலை மாமா!  ஐயோ!” என்று தலையில் அடித்துக் கொண்டு கதற.

 

“நாச்சி! ஏய் நாச்சி! எங்கன புள்ள போச்சு உம்ம உறுதி? நம்பப் புள்ள பொறந்தப்ப கூடத்தேன் இது போலப் பேசி வச்சாக. அப்போ எல்லாம் எம்புட்டு உறுதியா பதில் சொன்ன. நடக்கவே முடியாம போயிடும்னு பயம் காட்டி வச்சாய்ங்க.நீ உறுதியா கிடந்து நம்ம புள்ளைய நடக்க வைக்கலையா?” மனைவியின் கதறல் தாங்காமல் கந்தசாமி தவித்து வைத்தான்.

 

“இப்போ அந்தத் தெம்பும் இல்லை, மனசும் இல்லை மாமா! பயந்தேன் கிடக்கு” ஒரு பேச்சால் அவளது உறுதியை உடைத்து எரித்திருந்தால் போலும் சுந்தரி.

 

“அப்படிச் சொல்லாத புள்ள! எமக்கு வேண்டி செய், எம்ம குலசாமிடி நீ எம்ம பலம்,பகட்டு,உறுதி, வைராக்கியம் எல்லாம் நீதேன் புள்ள.நீ சுணங்கி வச்சா நான் சரிஞ்சு போவேன்” என்றவன் நாச்சியை இறுக்கி கொள்ள.அவனை விட இறுக்கமாக அணைத்து கொண்டு,”மாமா!” என்று கதறி விட்டாள் மங்கல நாச்சி.

 

அவளது கதறல் வெளியில் கேட்க படக்கென எழுந்து கொண்ட சாந்தாவின் கையைப் பற்றி முனியசாமி தடுக்க ,”என்னங்க?”

 

“அய்யாவு பார்த்துக்கிடுவாக நீ இரு சாந்தா” என்றதும் மனமே இல்லாமல் அமர்ந்து விட்டாள் சந்தா.

 

பெற்றவள் கதறல் கேட்டு அழகு நாச்சியும் கதறி வைக்க. அவளைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டான் கருப்பன்.சங்கதியை கேட்டுக் கோபத்தில் வெளியில் சென்று நின்று கொண்டவன் சில மணி நிமிடங்கள் தன்னை ஆசுவாசம் பண்ணி கொண்டு.தங்கையின் நிலையை அறிய அவசரமாக உள்ளே வர.அவன் எண்ணியது போலவே அழுது கரைந்து கொண்டிருந்தாள் அழகு நாச்சி.

 

அவளை அதட்டி கொஞ்சமாக உண்ண வைத்தவன் அவளிடமே அமர்ந்து கொள்ள.இதோ பெற்றவளின் கதறல் கேட்டு இரு பிள்ளைகளும் தவித்து அமர்ந்திருந்தனர்.

 

 

 

 

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்