அத்தியாயம் 1
அத்தியாயம் 1
மாலை மேகங்கள் தங்கள் நிறத்தை கருமையின் ஆதிக்கத்தில் இழக்க ஆரம்பித்த நேரத்தில் …மேகங்களை உடைத்து கொண்டு வான் மழை பூமியை முத்தம் இட துவங்கியிருந்தது …
அதை சற்றும் ரசிக்காத தோற்றத்துடன் பயத்தின் விளிம்பில் ஓர் ஒதுக்கமான இடத்தில் நின்றிந்தாள் சீதா … சீதாலக்ஷ்மி…நம் கதையின் நாயகி …
” ச்சே …இப்ப பார்த்து நேடிவ்வர்க் ஒழுங்கா கிடைக்கமாட்டேங்குதே …” என்று புலம்பியவள் தன் கைபேசியில் இருந்த “uber app “க்கு சென்று திரும்பி ரெப்பிரேஷ்
( refresh ) செய்தாள் …ஆனால் பலன் தான் பூஜ்யம் …அவள் எவ்வளவு முறை திரும்பி பார்த்தும் டவர் (tower) கிடைக்கவேயில்லை …
அதுவும் மாலை ஆறு மணிக்கே இருளடைந்த சாலையை பார்த்தால் பயம் தொண்டையை கவ்வியது …இப்படி ஆள் இல்லாத சாலையில் தான் மட்டும் …இங்கு இப்பொது தனக்கு என்ன நேர்ந்தாலும் யாருக்கும் தெரியாதே …ஒருவேளை யாரவது நம்மை பாலியல் துன்புறுத்தல் தந்தாள் …ஐயோ தனக்கு தன்னை காக்க தற்காப்பு கூட தெரியவில்லையே என்று தனக்குள் பேசி கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் தாம் என்ன யோசிக்கிறோம் என்றே புரிந்தது …
” அய்யே …ஏன் சீதா இப்படி பயத்துக்கு செத்தவ மாதிரி யோசிக்கிற ..
எதுவும் ஆகாது ” என்று தனக்கு தானே சொன்னவள் …மறுபடியும் தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்துக்கொண்டாள் …இன்று பேசாமல் அண்ணன் கல்லூரி வந்து கூட்டிக்கொண்டு செல்லவா என்று சொன்ன போதே சரி என்று சொல்லாமல் வீம்புக்கு தான் ஒரு பெரியமனுஷி குழந்தை ஒண்ணுமில்லை என்று நிரூபிக்க தானே ஒரு பிரச்னையை விலை குடுத்து வாங்கிவிட்டோம் என்று இப்போது தான் புரிந்தது அந்த பெரியமனுஷிக்கு …
எப்படியும் ஓர் டாக்ஸி ( taxi ) புக் செய்தால் அது வந்துவிடும் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இருப்போம் என்று நினைத்தால் …இப்படி மழை வானத்தை பிய்த்து கொண்டு கொட்டுகிறது …இன்று வேறு வாரவிடுமுறையாக இருக்க வரப்போகும் பரீட்சைக்காக சில புத்தகங்கள் கல்லூரியில் வாங்க வந்தவள் இப்படி மாட்டி கொண்டாள் …
” ச்சே …இந்த காலேஜ்ல ஒரு வாட்ச்மன் கூட இல்லை …வாட்ச்மன் இல்லாத காலேஜ் என்ன காலேஜ் …” என்று திட்டிகொண்டவள் …தான் இங்கு தனியாக மழைக்கு ஒதுங்கி நிக்கிறேன் என்று பார்த்தும் பாராமல் போன சில ஆசிரியர்களின் மீது வார்த்தைகள் வரம்பின்று வந்தது …
” இந்த காலேஜ் கிட்ட பஸ் தான் வரலன்னு பார்த்தா …இப்போ ஒரு நெட் கூட கிடைக்கமாட்டேங்குது ” என்று சலித்து கொண்டவள் சாலையில் எதாவது வண்டி வருகிறதா என்று பார்க்க ஆரம்பித்தாள் …
இப்படியே ஓர் அறை மணி நேர பயத்திற்கு பிறகு அந்த இருளை கிழித்து கொண்டு ஓர் ஒளி …கண்கள் கூசினாலும் இதற்கு மேல் இங்கு இருக்க முடியாது என்று நின்னைத்தவள் அந்த ஈரம் சொட்டும் மழையில் அந்த கருப்பு நிற காரின் முன் கை ஆட்டி நின்றாள் …அவளுக்கே அது அதிர்ச்சிதான் அந்த வண்டி அவளிடம் வந்து நின்றது …அவளே அந்த வண்டி கடந்து விடும் என்று நம்பியிருக்க இப்போது தனக்காக அந்த வண்டி நின்றது …உள்ளே சந்தோஷச்செடி முளைத்தாலும் அதனுடன் தேவையில்லாத பயமும் வந்து சூழ்ந்ததில் …இப்போது போவோமா வேண்டாமா என்று அவளுக்குள் ஓர் பட்டிமன்றமே தொடங்கியுர்ந்தது …
” ஏய் …இன்னும் எவ்வளவு நேரம் கல் போல நிப்ப ” என்றவனின் குரலில் உயிர்பெற்றவள் அப்போது தான் அந்த காரின் உள் யார் அமர்ந்து உள்ளார் என்றே பார்த்தாள் …அவன் அமரன் …
இத்தனை நேரம் உள்ளே இருந்த பயம் நீங்கி முகத்தில் ஒரு விதமான அலட்சியம் குடியேற ” அய்யே ..உன்ன பார்த்து கல் மாதிரி நிப்பாங்களாம் ….அவ்ளோ ஒன்னும் பேரழகன் இல்ல நீ ” என்று சொல்லிக்கொண்டே காரின் முன் இருக்கையில் வந்து அமர்ந்தவளை ஒரு முக சுளிப்புடன் பார்த்தவன் …
” இந்த வாய் இல்லனா உன்ன நாய் கூட்டிட்டு போய்டும் …” என்று சொன்னவன் காரை இயக்க …
” ஹலோ மிஸ்டர் …இப்ப நீங்க தான் என்ன உங்க கார்ல கூட்டிட்டு போறீங்க …அப்ப நீங்க என்ன நாயா ” என்று நக்கலாக தன்னை பார்த்து சொன்னவளை அடித்து விடும் ஆத்திரம் எழுந்தாலும் …
” மூடிட்டு வாடி …இல்லனா அடிச்சேன்னு வை அவ்வளவு தான் ” என்று நாக்கை மடித்து சொன்னவனின் பிம்பத்தை பார்த்தவள் அப்படியே வாய் மூடி
அமர்ந்துவிட்டாள் …இதற்கு மேல் பேசினால் சொன்னதை செய்வான் என்று அறிந்தவள் ஆகிற்றே …தான் கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டோமா என்று ஆராயந்தவள் …இவனிடம் எல்லாம் இப்படி தான் பேசனும் என்று நினைத்துக்கொண்டே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் …
தொடரும் …






Nice start.
Thanks ma