arrow_back
தஞ்சம் உன்னிடம் என் மனம் !! அத்தியாயம் – 2

அத்தியாயம் – 2

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் – 2

கால் மணி நேரம் கடந்து இருக்கும் இன்னும் வீடு சென்று சேர்ந்த பாடில்லை …” இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்என்று கேட்டவளை பார்க்காமல் சாலையை பார்த்து கொண்டேஇன்னும் ஒரு மணி நேரம் ஆகும்என்று அவன் முடிப்பதற்குள்

என்னஇன்னும் ஒரு மணி நேரமா …” என்று கத்தியவளை இப்போது முகத்தை திருப்பி முறைத்தவன்

டிராபிக்லேட்டா தான் போக முடியும்என்று வாயில் இருந்து வார்த்தைகளை துப்பியவனை பார்த்தவள்

ட்ராபிக்காவது மண்ணாவதுஉனக்கு வண்டி டிரைவ் பண்ண தெரியலைனு சொல்லுஎன்று சொன்னவளை கண்ணில் தீ கொண்டு முறைத்தவன் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் வண்டியை நிறுத்தினான்

எதுக்கு இப்ப வண்டியை நிறுத்தின …” என்று அப்போது நக்கலாக பயமின்றி பேசியவளை கண்டு ஆத்திரம் தான் வந்தது

ஏய் வாயை கிழிச்சிருவேன்நானும் பாக்குறேன் அப்போ இருந்து என்ன பார்த்து அவன் இவனு பேசுறஎன்று பல்லை கடித்தவனை பார்த்து

அப்படிதாண்டா பேசுவேன் …” என்று இவள் இன்னும் நக்கலான குரலில் கண்ணில் ஓர் வீம்புடன் பேச

அடிங்குஎனக்கு உன் அண்ணன் வயசாகுது ஒழுங்கா மரியாதையா கூப்பிடுஅடி குரலில் மிரட்ட அதை சிறிதும் பொருட்படுத்தாமல்

நான் எங்க அண்ணனுக்கே மரியாதை தரமாட்டேன் உனக்கு வேற தரனுமா டாஅவள் சொல்லி முடிக்கவில்லை சீதாவை தன் இதழ்கள் கொண்டு சரண் எடுத்திருந்தான் அமரன்அவளின் திமிறல்களும் திமிர்நிறைந்த வார்த்தைகளும் அந்த முத்த யுத்தத்தில் அவனிடம் தோற்று தான் போகி இருந்ததுஅவளின் அத்தனை நேர துள்ளல்கள் எல்லாம் தோல்வி அடைந்து அவனின் முத்தத்தில் கைப்பாவை ஆகி இருந்தாள் சீதா

அவள் பேசிய வார்த்தைகள் இனி அவளிடம் வரவே கூடாதென்று நினைத்தானோ அவளின் இதழில் தன் பற்களின் தடத்தை தந்துவிட்டே நகரந்தவன்காரை எடுக்காமல் அந்த அமைதியின் கணத்திலே நிறைந்திருந்தான்

டைம் ஆகுதுவண்டியை எடுங்கஎன்ற மெல்லிய குரலிலே தெளிந்தவன் அவளை பார்க்காமல் தன்னிடம் இருந்த கைக்குட்டையை தந்தவன் ஓர் ஐந்து நிமிடங்களுக்கு பின்னே வண்டியை எடுத்தான்

அவள் வீட்டின் முன் காரை நிறுத்தியவன் அவள் இரங்கும் முன் ” I am sorry , Seetha ” என சொல்லஅதை ஒரு வியப்புடன் பார்த்தவள்பரவால்லபாலாஜி மாதிரி ஒரு அண்ணனுக்கு தங்கச்சியா இருக்குறவ அவனை மாதிரியே இருப்பானு நினைச்சது உங்க தப்பில்லஎன்று சொல்லியவள் அவனை பார்க்காமல் விடு விடுவென அவளின் வீட்டிற்குள் சென்று மறைந்து கொண்டாள்

அந்த உருவம் மறையும் வரை முகத்தில் ஒரு கோபம் அலட்சியம் என

நிறைந்திருக்கஇப்போது ஏனோ முகம் கசங்கி நீர் நிரம்பிய கண்களோடு வண்டியை எடுத்தான் திமிருக்கு சொந்தக்காரனான அமரன்

*****

இந்த நிகழ்வுகள் நடந்து இன்றோடு மூன்று வாரங்கள் ஆகிவிட்டதுஅதன் பின் அவளை அவன் பார்க்கவும் இல்லை பார்க்க தயாராகவும் இல்லைஏன் அவளின் கல்லூரி வழி தன் அலுவளுகத்துக்கு வரும் வழியே மாற்றி இருந்தான்பாலாஜியும் எதுவும் இந்த இடைப்பட்ட வாரங்களில் அவனுக்கு தொலைபேசியில்

பேசவில்லைஅன்று அந்த முத்தத்திற்கு பிறகு அதையே நினைத்து கொண்டிருந்தவன் பிறகு என்ன நினைத்தானோ தன் நாளின் பாதிற்கும் மேற்பட்ட கணங்களை தன் வேலையிலே செயல் படுத்த ஆரம்பித்திருந்தான்காலம் சிறிதானாலும் அவன் உழைப்புக்கு பலன் அதிகமாகவே வந்திருந்தது

அமரா …” என்று கூவிக்கொண்டே உள்ளே வந்தவனை சிறிது கண்கள் சுருக்கி பார்த்தான் ..Chairman .Amaran …Amaran enterprise owner …

அவனை கண்ணை சுருக்கி பார்த்தவன் தன் இருக்கையில் அமர்ந்தவாறே என்ன என்று தோரணையுடன் கண்ணாலே கேட்கஅதை புரிந்து கொண்ட

பாலாஜி … ” உன்னோட பார்ட்னெர்ஷிப்ல இப்போ ப்ரோபிட் எங்க கம்பெனில 5 கோடிநீ இல்லாம இது நடந்து இருக்காது …” என்று சொன்னவனை நக்கலாக பார்த்து புன்னகை புரிந்தவன் மறுபடி தன் லெப்டோபில் வேலை பார்க்க தொடங்க

என்ன அமராஎவ்வளவு பெரிய விஷயம் சொல்றேன் ..கண்டுக்காம இருக்கஎன்று சொன்னவனை அலட்சியத்துடன் பார்த்த அமரன்

அதுக்கு ?” என்று கேட்க

என்ன அமராஎதாவது கேளு உனக்கு எதாவது நான் பரிசா தந்தே ஆகணும்என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்து கொண்டிருந்தான் பாலாஜி

எது கேட்டாலும் தருவியா ? ” என்றவனின் வார்த்தையின் சூட்சமம் அறியாமல்

எதுனாலும் தரேன்கம்பெனியை மட்டும் கேட்காதஎன்று சொன்னவனை அலட்சியம் புன்னகையோட பார்த்தவனின் வார்த்தைகள் பாலாஜியின் சந்தோஷத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது

எனக்கு சீதா வேணும்

தொடரும் ….

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 3

அத்தியாயம் - 3" சொல்லு ...எதோ பேசணும்னு கூப்பிட்ட ...இப்ப அமைதியா இருக்க " என்ற அமரனின் குரல் அந்த கனமான அமைதியை கலைத்தது ..." சொல்றேன் ..." என்று சொன்னவளுக்கும் அவனிடம் எப்படி இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

உங்கள் கருத்தைப் பகிருங்கள்