அத்தியாயம் 12
“கார்த்திக் விளையாடாதீங்க…” திவ்யாவின் குரலில் நடுக்கம்!
“ம்ஹூம்… கண்டிப்பா இல்ல… எனக்கு என்னோட தொழில் ரொம்ப முக்கியம்… அதை பாதிக்கிற எதுவா இருந்தாலும் அதை நான் டெலீட் செய்தே ஆகணும்… அது நீயா இருந்தாலும் கூடத்தான் திவ்யா… எனக்கு வேற எதை பற்றியும் கவலை கிடையாது…” நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக தேர்ந்தெடுத்து அவன் சொன்ன விதம் அவளை நிலைகுலைய செய்தது! ஆனால் உலகம் முழுக்க ஒளிப்பரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்பதென்பது அதுவும் உண்மையை மறுத்து பொய் கூறுவது என்பது அவளது லட்சியத்திற்கு அவளே அடித்து கொள்ளும் சாவுமணி அல்லவா? அதை எவ்வாறு செய்ய முடியும்?
“நோ கார்த்திக்… நீங்க செய்தது தப்பு… சட்டவிரோதம் கூட இல்ல மனசாட்சி இருக்கிற எந்த மனிதனுமே செய்ய துணியாத தப்பு… காலாவதியான மருந்தை மறுபுழக்கத்திற்கு விடுவதும் எத்தனையோ பேரோட வாழ்க்கைல விளையாடற போதை மருந்த கடத்துறதும் சும்மா சாதாரணமா செய்யற வேலையா? இதை தான் நீங்க உயிரை கொடுத்து செய்தீங்களா கார்த்திக்… இதை நான் மக்களுக்கு தெரியபடுத்தறது எந்த வகைல தப்புன்னு சொல்றீங்க?” எப்படியாவது அவனது தவறை உணரவைக்க போராடினாள்!
“ஹே… இங்க பாரு… நீ சொல்ற மாதிரி எதுவும் என்னோட சுஷ்ருதால இல்ல… கிடையவே கிடையாது… முதல்ல சுஷ்ருதாவோட ஆனுவல் டர்ன் அவுட் என்னன்னு தெரியுமா? கிட்டத்தட்ட எண்ணூறு கோடி… அப்படி இருக்கும் போது இதெல்லாம் பண்ணி தான் நான் சம்பாதிக்கனும்ன்னு கிடையாது… எனக்கு தேவையும் இல்ல… உன்னை மாதிரி பொறுப்பு இல்லாத… லட்சியம்ன்னு சும்மா சொல்லிட்டு… கேவலமா… வெறும் புகழ் மட்டுமே தேவைப்படுற ஜென்மங்கள் சொல்றதெல்லாம் உண்மையா?”
“நான் பொய் சொல்லணும்ன்னு எனக்கும் அவசியம் கிடையாது… நான் சொன்னது உண்மைதான்… ஆதாரங்கள் என்கிட்டே இருக்கு கார்த்திக்…”
“என்ன ஆதாரம்? அந்த டேப்… அது மாதிரி ஆயிரம் டேப்ப நான் இப்போ உனக்கு குடுக்கட்டா… போட்டோஸ்? இப்போ உன்னை நியுட்டா இருக்கற மாதிரி மார்பிங் பண்ணி காட்டட்டா?”
“கார்த்திக்… ச்சே உன்னை போய்…” மனதுக்குள் அருவெறுப்பு… இவனிடமா நேற்று இரவு மயங்கினேன் என்று…
“ம்ப்ச்… எனக்கு எந்த விளக்கமும் தேவை இல்ல திவ்யா… இதுல நோ சென்டிமென்ட்ஸ்… இப்போ மணி ஆறு… ஏழு மணி நியூஸ்ல உன்னோட சாரி நோட் வந்தாகனும்… இல்லைன்னா நான் சொன்னது நடக்கும்…” கல்நெஞ்சோடு தீர்மானமாக! மனதினுள் வலி… என் உயிரை தீண்டிய ஒரே பெண்ணிடம் பேச வேண்டிய வார்த்தைகளா இவை? நேற்றைய மாலை பொழுதோடு இந்த உலகம் இயக்கத்தை நிறுத்தி இருந்தாலும் சந்தோஷப்பட்டு இருப்பேன்… இவளே என்னுடைய முதுகில் குத்தி துரோகம் செய்வதை பார்க்கும் துரதிர்ஷ்டம் வாய்த்து இருக்காதே!
“நடக்காது கார்த்திக்…” அவளுமே இறுதியான தீர்மானமாக! லட்சியங்கள் கண்முன்னே எரிந்து சாம்பலாவதை பார்ப்பதை விட இறந்து விடுவதே மேல் என்று நினைத்து கொண்டே…
“அப்படீன்னா… முழுசா நீ வெளிய போக முடியாது…” நிதானமாக!
“வாட் டு யூ மீன்?” அவன் சொல்வதை ஜீரணிக்க முடியாமல்! கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைந்தாள்! இவன் என்ன சொல்கிறான்?
“ஐ மீன் வாட் ஐ சே! இன்னொருத்தனுக்கு மனைவியாகற தகுதிய நீ இழந்துடுவ திவ்யா…” அடுத்த மிரட்டலா இது என்று தோன்றினாலும் அவனது நிதானம் அவளது மனதில் குளிரை பரப்பியது! இது உயிர் போவதை விட கொடுமை அல்லவா! மேலும் நகர முடியாமல் சுவரோடு ஓட்டினாள்!
“இப்போ நீங்க நடந்துக்கறது அதை விட தப்பு கார்த்திக்… வேணாம்…” கண்களில் பயத்தோடும் குரலில் நடுக்கத்தோடும் அவள் ஒற்றை விரலை காட்டி மிரட்ட, அந்த விரலோடு கையை பற்றியவன்… நிதானமாக… அவளது மருண்ட கண்களை பார்த்து கொண்டே, உதட்டுக்கு எடுத்து சென்று முத்தமிட… திவ்யாவுக்கு முதுகு தண்டில் சிலீரென்றது! கொஞ்சம் கொஞ்சமாக அவளை நெருங்கி…
“சரி… நான் உன்னை ஒன்னும் பண்ணல… இதெல்லாம் போலியான ஆதாரம்ன்னு டிவில ஒப்புக்கோ…” அவளது முகத்தை நெருங்கி கொண்டே!
“ச்சே… இப்படி எல்லாம் செய்ய உனக்கு வெட்கமா இல்ல?” முகத்தை திருப்பி வேதனையோடு கூற, வலுகட்டாயமாக அவளது முகத்தை தன் பக்கம் திருப்பி…
“ம்ஹூம்… எனக்கு என் வேலை ஆகணும்… அதுக்கு என்ன வேணும்னாலும் செய்வேன்… அது என்ன வேலையானாலும்…” என்ன வேலையானாலும் என்பதில் அழுத்தம் கொடுத்து, அவளது இடையை வளைக்க, அவனை பலம் கொண்ட மட்டும் தள்ளினாள்! ஆனால் அவனது வலுவான கரங்கள் அவளை அசைய விடாமல் செய்திருந்தது!
“ச்சே… நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா? இப்படி ரூம்ல அடைச்சு வச்சு மிரட்டுற…” தன்னை மீறி கத்தி, பளாரென்று அவனை அறைய… ஏற்கனவே இருந்த போதை மயக்கம், திவ்யா துரோகம் செய்து விட்டாள் என்ற அவனது வெறுப்பு, ஷாலினி தன்னிடம் திருமணம் வேண்டாம் என்று மறுத்து கூறிய விதம், அரவிந்தன் செய்த துரோகம், எல்லாவற்றுக்கும் மேலாக தான் வளர்த்த தொழில் தனது கண் முன்னரே அழிந்து விடுமோ என்ற கோபம், அதற்கு காரணம் திவ்யா என்ற கண் மண் தெரியாத ஆத்திரம், எல்லாமுமாக அவனது அறிவை மறைத்தது!
அவள் கெஞ்சியதும் கதறியதும் அதற்கு பின் அவனது காதில் விழவில்லை! இத்தனை நாளாக கொள்கை என்று கட்டி காத்து வந்த கண்ணியம் பறந்தது! நீ ஒரு ஆம்பிளையா என்று அவள் கேட்ட வார்த்தை நின்றது! உறங்கவா விழிக்கவா என்று அவனுக்குள் கேட்டு கொண்டிருந்த மிருகம் விழித்தெழுந்து முழுமையாக தாண்டவமாடிவிட்டது!
***
தன்னுடன் போராடி… முடியாமல்… கசங்கிய பூவாக படுக்கையில் பக்கத்தில் மயக்கமாகி கிடந்த திவ்யாவை பார்த்தான் கார்த்திகேயன்! போதை சுத்தமாக இறங்கி இருந்தது! தனது வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்ட இந்த மாலை பொழுதை என்னவென்று சொல்ல? அவள் செய்தது அவனை பொறுத்தவரையில் தவறென்றால் இப்போது தான் செய்தது என்ன? ஆனாலும் இவ்வளவு அழுத்தம் உனக்கு வேண்டாம் திவ்யா என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே நீ மட்டும் என்ன குறைந்தவனா என்று மனசாட்சி எள்ளி நகையாடியது!
செல்பேசி அழைத்தது! புதுவை கமிஷனர் சபாபதி அழைத்து இருந்தார்! பிரச்சனை பெரிதாகி விட்டதோ என்று எண்ணி கொண்டே நெற்றியை தேய்த்தபடியே செல்பேசியை காதுக்கு கொடுத்தான்!
“சொல்லுங்க கமிஷனர் சார்…”
“கார்த்தி சார்… எப்படி இருக்கு நிலைமை?”
“ம்ம்ம்… ப்ராப்ளம் ஆகாதுன்னு நினைக்கிறேன்… அங்க எப்பிடி சார்?”
“கொஞ்சம்… பணம் எதிர்பார்க்கறாங்க…” தயங்கினார்!
“ம்ம்ம் எவ்ளோ வேணும்ன்னு செக்ரட்டரி கிட்ட சொல்லுங்க… வந்துடும்…”
“நான் முதல்லயே சொல்லணும்ன்னு நினைச்சேன் சார்… ஆனா எப்பிடி சொல்றதுன்னு விட்டுட்டேன்… விநாயகம் கூட சொன்னார்…” என்ன சொல்கிறார் இவர்… குழம்பினான் கார்த்திகேயன்!
“என்ன சொல்றீங்க சபாபதி சார்?”
“மாதத்துக்கு பத்து முறைக்கு மேல சரக்கு போயிட்டு இருக்கும் போது நாம தானே ஜாக்கிரதையா இருக்கணும்…” கார்த்திகேயனின் அதிர்ச்சியை என்ன சொல்ல?
“எந்த சரக்க சொல்றீங்க?” நெற்றியை சுருக்கி கொண்டு கேட்டான்!
“இன்னைக்கு டிவில வந்ததுதானே சொல்றேன் கார்த்தி சார்…” எங்கேயோ புரிவது போல…
“சார்… அப்படீன்னா இந்த சரக்கெல்லாம் நிஜமாவே நம்ம கம்பெனி பேர்ல போகுதா? இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லல?” உச்சகட்ட அதிர்ச்சியில் பேசி கொண்டிருந்த கார்த்திகேயனின் கவனத்தை கலைத்தது திவ்யாவிடம் இருந்து வந்த முனகல்!
“தண்ணீர்…” என்று ஹீனமாக முனக அவசரமாக தண்ணீர் எடுத்து புகட்டினான்! மயக்கம் கலையாமல் அவன் மேல் சரிந்து இருந்தாள் திவ்யா! சபாபதி தொடர்ந்தார்…
“ஆமா சார்… நம்ம கம்பெனி பேர்ல தானே போகுது… இது உங்களுக்கு தெரியாதா?” அவரது குரலிலும் அதிர்ச்சி! தனக்கு தெரியாமல் இத்தனை எப்படி நடக்க முடியும்? யார் செய்திருக்க கூடும்? கார்த்திகேயனின் அதிர்ச்சியை அளவிட வார்த்தை இல்லையே! இதை தானே திவ்யா படித்து படித்து கூறினாள்… உன்னுடைய அவசர புத்தியை என்று அவனை கடித்து மென்று துப்பியது மிஸ்டர் மனசாட்சி!
“சார்… இந்த விஷயத்துல யார் சம்பந்த பட்டு இருக்காங்கன்னு கொஞ்சம் விசாரிங்க… நானும் விசாரிக்கறேன்… யார்ன்னு தெரிய வந்தா உயிரோட விட மாட்டேன்… ஏன்னா அவ்வளவு கோபத்துல இருக்கேன் சபாபதி சார்… விநாயகத்த எனக்கு போன் பண்ண சொல்லுங்க…” என்று அவரிடம் பேசி முடித்து விட்டு திரும்ப திவ்யாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பி கொண்டிருந்தது! உடனே மதகடிப்பட்டு சர்கிள் இன்ஸ்பெக்டர் விநாயகத்திடம் இருந்து அழைப்பு வர, அவரிடம் பேசி முடித்த போது அவனுக்கு தெளிவாகி இருந்தது! யாரோ கருப்பு ஆடு உள்ளே இருக்கிறது என்று!
செல்பேசியை எடுத்தவன் அழைத்தது தனது நண்பன் கிருஷ்ணாவுக்கு! தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வருபவன்… பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரும் நல்ல நண்பன்!
“ஹாய் கிருஷ்ணா…”
“சொல்லு கார்த்தி…” விஷயம் கேள்விபட்டு இருந்தவன், எப்படியும் தன்னை அழைப்பான் என்று நினைத்து இருந்தான்…
“பார்த்திருப்ப இல்லையா…”
“ம்ம்ம் ஆமாம் கார்த்தி… நீ கூப்பிடுவன்னு கெஸ் பண்ணேன்…”
“கிருஷ்ணா நீ ஒன்னு செய்யணுமே…” என்று ஆரம்பித்து விஷயங்களை சொல்லி, “இதை யார் பண்ணாங்க… பண்ணிட்டு இருக்காங்கன்னு கண்டுபிடி…”
“ஓகே கார்த்தி… இன்னும் ஒன் வீக்ல உனக்கு ரிசல்ட் சொல்றேன்… ஓகே…”
“ஓகே…” என்று கூறி விட்டு செல்பேசியை வைத்தவன் திவ்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருந்தான்! கசங்கிய பூவாக அவனது கைகளில் சரிந்து இருந்தவளை பார்க்கும் போது அவனுக்கு முதலில் இருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது! ஒருபுறம் மனம் பிரச்னையை நினைத்து கொதித்து கொண்டிருந்தாலும் மறுபுறம் ஆழ்ந்த அமைதியை நோக்கி போய்கொண்டிருந்தது! நிதானமாக யோசிக்க தொடங்கினான்!
“இந்த விஷயத்தை முதலில் என்னிடம் சொல்லி இருக்கலாமே இவள்! இந்த ஸ்ரீயாவது இதை சொல்லி இருந்தால் நான் சுதாரித்து இருப்பேனே… சரி இருக்கட்டும்… அந்த கருப்பு ஆடு மட்டும் என் கைகளில் கிடைக்கட்டும்… ம்ம்ம்” செல்பேசி அழைக்க எடுத்து பார்த்தவன், சித்தார்த் தான் அழைத்து இருந்தார்!
“கார்த்தி சார்… திவ்யா எங்க?”
“ம்ம்ம் யா… ஷி இஸ் பைன்… டோன்ட் ஒர்ரி…”
“சார்… நான் வேணும்னா ஒரு ஐடியா சொல்றேனே…”
“சொல்லுங்க சித்தார்த் சார்…”
“ஒரு சின்ன பேட்டி… இந்த அலிகேஷன்ஸ முன் வைக்காம… நீங்க இந்த விஷயத்துல இருந்து வெளிய வர்ற மாதிரி… கேள்வி என்ன கேக்கலாம்ன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க… அதை பெரிய அளவுல ப்ராட்காஸ்ட் பண்ணிடலாம்… அப்போ இந்த விஷயம் சரி ஆகிடும்… ஓகே வா கார்த்தி சார்…” ரொம்பவுமே யோசித்திருப்பார் போல… இதே கொஞ்சம் நேரம் முன்னதாக இருந்தால் குதித்து இருப்பான்… நான் எதற்காக பேட்டி குடுக்க வேண்டுமென்று… இப்போதோ மனம் அமைதியடைய தொடங்கி இருந்ததால் அதே அமைதியோடு…
“ம்ம்ம்… ஓகே… அக்செப்ட் பண்ணிக்கறேன்… எப்போ ஸ்டுடியோ வரணும்…?”
“திவ்யாவோட செல் நாட் ரீச்சபில்ல இருக்கு கார்த்தி சார்…” அவள் இன்னமும் அவர்களிடம் பேசவில்லை எனபதை மறைமுகமாக சுட்டி காட்டினார் அவர்! திவ்யாவை இவனிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமே… என்ற பயம்… அவளது திறமையை அறிந்த மனிதர்!
“வேணாம்… திவ்யா வேணாம்… அவ இனிமே பேட்டி எடுக்க மாட்டா…” என்றதும் அவருக்கு தூக்கி வாரி போட்டது!
“ஏன் கார்த்தி சார்…” பதட்டமாகவே வினவினார்!
“ஏன்னா அவ என்னோட பியான்சி சித்தார்த் சார்…”
“வாட்… அவங்க சொல்லவே இல்ல… ஆல் தி பெஸ்ட்…” ஹப்பாடா பிரச்சனை முடிந்தது என்று பெருமூச்சு விட்டார் சித்தார்த்!
“தேங்க்ஸ் சார்…” என்று கூறிவிட்டு செல்பேசியை அவன் வைக்க அவனை உறுத்து விழித்து கண்களில் நீர் வழிய முறைத்தபடி திவ்யா… அவசரமாக தன்னை சரி செய்ய முயல, அவளது கரத்தை பிடித்தவன் சட்டென்று இழுத்து தன் மேல் சரித்தான்… புன்னகையோடு!
“ச்சீ… என்னை விடு…” கோபத்தில் கண்களில் கண்ணீர் பொங்க அவனிடம் இருந்து விலக பெரும் பிரயத்தனப்பட்டு கொண்டிருந்தாள் திவ்யா!
“ம்ஹூம்… சான்ஸே இல்ல… முடிஞ்சா போய்க்க…” என்று இடையை வளைத்து கழுத்து வளைவில் முகம் புதைக்க அவளுக்கோ சொல்ல முடியாத கோபமும் ஆற்றாமையும் தன்னிடம் இருந்து வலுகட்டாயமாக பெண்மையை பறித்த அவனது திமிர்தனத்தை பார்த்த வெறுப்புமாக அவனை பார்த்து முறைத்தவள் கண்களில் அருவி வழிந்தது! கண்ணீர் அவனது கன்னத்தை நனைக்க, விழி உயர்த்தி பார்த்தவன் நெஞ்சில் வலி!
அவளிடம் இருந்து சற்று விலகி, உச்சியோடு அவளது கன்னத்தை ஆதூரமாக தடவியவன்…
“திவி… டோன்ட் ஒர்ரி கல்யாணம் பண்ணிக்கலாம்… ஓகே வா…” நெற்றியில் முத்தமிட்டு! அதை கேட்டு இன்னமும் ரௌத்திரமாகினாள்… தனது முழு பலத்தையும் பிரயோகித்து அவனை தள்ளி விட்டவள் முகத்தில் இருந்தது கோபமா? ஏளனமா? ஆக்ரோஷமா? இல்லை அருவருப்பா…
“ச்சீ… நீயெல்லாம் அந்த வார்த்தைய சொல்லாத! அதுக்கு உனக்கு அருகதை இல்ல… என்னை என்னன்னு நினைச்சுகிட்ட? என் உணர்வுகள கொஞ்சம் கூட மதிக்காம கால்ல மிதிச்சு கொலை செய்த உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கனுமா? ஷிட்… அதுக்கு வேற ஆள பாரு… என் புத்திய செருப்ப எடுத்து தான் அடிச்சுக்கணும்… தனியா போக வேண்டாம்ன்னு ஸ்ரீ சொன்னான்… நான் தான்… உன்னை போய் பிரெண்ட்ன்னு நம்பி வந்தேனே…” சொல்ல முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்து கொள்ள அதற்க்கு மேல் பேச்சு வராமல் கேவலாக வெடித்தது! தோளை சேர்த்து பிடிக்க வந்தவனை தள்ளி விட்டுவிட்டு…
“என்னை தொடாதே…” ரௌத்ரமாகியவள் உடைந்து இருந்த டீபாயின் கண்ணாடி துண்டை எடுத்து தனது கையை கிழித்து…
“இனிமே தொட்ட… இப்போ என் கைய தான் அறுத்தேன்… அப்புறம் என் கழுத்த இங்கேயே அறுத்துக்குவேன்… என்ன செய்ய மாட்டேன்னு நினைச்சியா?” அவளது இந்த செயலை பார்த்து செயலற்று நின்றான்!
“ஐயோ திவி… ரத்தம்…”
“ச்சீ தொடாத… அருவருப்பா இருக்கு…” அவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை. செல்பேசி அழைத்தது! வைஷு அழைத்து இருந்தாள்…
“அண்ணா… திவ்யா வந்தாளா?” குரலில் மெல்லிய பதட்டம்! என்ன பிரச்சனையோ என்று?
“ம்ம்ம் இங்க தான் இருக்கா வைஷு… டோன்ட் ஒர்ரி…”
“இல்லண்ணா… இன்னமும் காணோம்ன்னு அத்தை ரொம்ப புலம்பிட்டு இருக்காங்க… அண்ணா! ஏதும் பிரச்சனை இல்லையே? சின்ன பொண்ணு அண்ணா… தெரியாம செய்துட்டா… ப்ளீஸ் ணா…” குரலில் மெய்யான வருத்தம்!
“ஹே அதெல்லாம் இல்ல… ப்ராப்ளம் ஆல்மொஸ்ட் சால்வ்ட்… இப்போ அவளை அழைச்சுட்டு நான் வர்றேன்… ஓகே வா வைஷுகுட்டி!”
“நான் சும்மா பேச்சுக்கு சொல்லலண்ணா… கல்யாணம் நின்னுடுச்சுன்னு சொல்லவும் யார் சொல்லியும் கேக்காம, கார்த்திக் என்னோட பிரெண்ட்… இந்த நேரத்துலதான் கூட இருக்கணும்ன்னு பிடிவாதமா உன்னை பார்க்க வந்தா… எதாச்சும் பிரச்சனை ஆகும்ன்னு ஸ்ரீ சொன்னப்போ கூட நம்ம கார்த்திக் தானேன்னு எல்லார் வாயையும் அடைச்சுட்டு வந்தா… தயவு செஞ்சு அவ மேல கோபப்படாதேண்ணா… ப்ளீஸ்…” விளக்கமாக வைஷு கூற அவன் கண்களில் காதல் கரைபுரண்டு ஓடியது! திவ்யாவின் கண்களில் நீர் தானாக வழிந்து கொண்டிருக்க அதை துடைத்தபடி… தள்ளாடியபடி தன்னை சரி செய்து கொண்டு இருந்தாள்! மனம் வலித்தது! எனக்காக… நம்பிய முகங்கள் தங்களை அடையாளம் காட்டிய போதும் எனக்காக வந்தவளை… ச்சே… என்ன மனிதன் நான்? காதலோடு கலந்திருக்க வேண்டிய தருணங்களை நானே நாசம் பண்ணி கொண்டேனே! ஆத்திரம் கண்ணை மறைத்து விட்டதே!
“கண்டிப்பா இல்லடா… முதுகுல குத்திட்டான்னு முதல்ல தான் நான் கோபப்பட்டேன்… ஏன்னா அந்த அளவு திவிய எனக்கு பிடிக்கும்…” திவ்யாவுக்கு கேட்க்காத தூரத்தில் நின்று கொண்டு!
“அண்ணா…” ஆச்சரியமாக!
“ஆமா வைஷு… சச்சிதானந்தம் கல்யாணத்த நிறுத்தலைன்னா நான் நிறுத்தி இருப்பேன்… பிகாஸ் ஐ லவ் திவி…”
“அண்ணா… நிஜமா ரொம்ப சந்தோஷமா இருக்கு… யாருக்கு எங்கன்னு கடவுள் தான் முடிவு பண்ணுவார் ணா… அதே முகூர்த்தத்துல இந்த கல்யாணத்த ஜாம் ஜாம்ன்னு நடத்திடலாம்ணா!” வைஷ்ணவி மகிழ்ச்சியில் தள்ளாடினாள்!
“இந்த பிரச்சனைய கொஞ்சம் முடிச்சுக்கலாம் வைஷு… கொஞ்ச நாள் போகட்டும்…” உள்ளுர திவ்யாவின் கோபத்தை நினைத்து தயங்கினான்!
“பிரச்சனை அது பாட்டுக்கு இருக்கட்டும் ணா… கல்யாணம் அது போக்குல முடிச்சுடலாம்… அப்போ தான் அந்த ஆள் முகத்துல கரிய பூசுன மாதிரி இருக்கும்… அரவிந்தனுக்கும் ஷாக் குடுத்தாப்ல இருக்கும்… ரெண்டு பேரும் துரோகிங்க…”
“ம்ம்ம்… அதுவும் சரியா தான் படுது… ஒரு அரை மணி நேரத்துல கிளம்பி வர்றேன் வைஷு…” என்று கூறி விட்டு வைத்தான்! திவ்யா கதவை திறக்க முயன்று தோற்று கொண்டிருந்தாள்! ரிமோட் கதவாயிற்றே!
“திறந்து விடு…” எங்கோ பார்த்து சொன்னவளை பார்க்கும் போது சிரிப்பாகவே வந்தது!
“எங்க போற?” சிரித்து கொண்டே கேட்க…
“ம்ம்ம்… சாக போறேன்… உனக்கு என்ன? திறந்து விட்டு தொலை…”
“அப்படியா… வா போலாம்…” பேச்சில் இருந்த குறும்பு அவளது கோபத்தை எகிற வைத்தது!
“நீ இல்லாத இடமா பார்த்து போக போறேன்… என்னை விட்டு தொலை…” எரிச்சலாக…
“அப்படீன்னா அதுக்கு இன்னொரு ஜென்மம் தான் எடுக்கணும் நீ… அப்பவும் உன்னை நான் துரத்திட்டு வந்துடுவேன்ல… கல்யாணம் பண்ணிக்க” குறுஞ்சிரிப்போடு கூறியவனை பார்த்து…
“அதை மட்டும் நீ நினைச்சு கூட பார்க்காத… செத்தாலும் சாவேனே தவிர உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது…” குரலில் தீர்மானமாக!
“அடுத்த மாசம் இந்நேரம் நீ என்னோட மனைவி… நான் தீர்மானம் பண்ணிட்டேன்…” முடிவாக அவன் கூற…
“நீ தீர்மானம் பண்ணினா அதுக்கு நான் பிணை இல்ல…”
“சரி… என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற? வேற யார கல்யாணம் பண்ண போற?” சரியான இடமாக பார்த்து அடிக்க அவளுக்கு அந்த நினைவே இன்னும் அருவருப்பை தந்தது!
“ச்சே…” என்று முகம் திருப்பியவளை வலுகட்டாயமாக தன் புறம் திருப்பிய கார்த்திகேயன்…
“இதுல என்னோட முடிவு தான் இறுதியானது திவி… இப்போ ஹாஸ்பிட்டல் போறோம்… முடிச்சுட்டு வீட்டுக்கு போய் நம்ம விஷயத்த சொல்றோம்… இப்போ நடந்த விஷயத்த சொல்றதும் சொல்லாததும் உன்னோட விருப்பம்… எனக்கு நீ அதை சொல்றது பிடிக்கல… இது தான் முடிவு… போலாமா?” மிக தீர்மானமாக!
“உன் பேச்சுக்கு தலையாட்ட வேற யாரைச்சும் பாரு… உன்னை பார்த்தாலே ஆயிரம் கம்பளி பூச்சி என் மேல ஊருற மாதிரி இருக்கு…” என்று மிக கடுமையாக கூறியவளை நெருங்கினான்… திவ்யா முறைத்து கொண்டே பின்வாங்க சுவர் தட்டி நின்றாள்! கையை இருபுறமும் ஊன்றி அவளது கண்களை பார்த்து…
“அதையும் தான் பார்த்துடலாம்… கல்யாணத்துக்கு அப்புறம்…”

