அத்தியாயம் 13
விதி ஆட்டுவிக்கும் பொம்மலாட்டத்தில் நாம் அனைவரும் பொம்மைகளே! ஒவ்வொரு பொம்மைக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம்! ஆடுவது நாமாக இருந்தாலும் ஆட்டுவிப்பது இயற்கை அல்லவா! சில நேரங்களில் நடக்கும் செயல்களுக்கு நம்மால் விளக்கம் தேட முடியாது! அதே போல் மனிதர்களும் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே நிறத்தில் இருப்பவர்கள் கிடையாது! இடத்துக்கு தக்க நிறமும் சமயசந்தர்பங்களுக்கு ஏற்ப மாறுவதுமே மனித இயல்பு! இதற்கு யாரும் விதிவிலக்கல்ல! அந்த பரந்தாமனே மனிதனானாலும் இயற்கையின் கட்டுபாட்டுக்குள் அதாவது விதியின் விளையாட்டுக்கு இரையாகாமல் இருக்க முடியாது! எல்லாவற்றுக்கும் விடையாய் அமைவதும் ரகசியங்களின் புதைகளனாக விளங்குவதும் இயற்கை மட்டுமே!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்…
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்…
அமைதியாக காரில் அமர்ந்து இருந்த திவ்யா உள்ளுக்குள் கொதித்து கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க அவனை திரும்பியும் பார்க்காமல் வெளியே பார்த்து கொண்டு வந்தாள்! எவ்வளவு அழகான நட்பு! ஒரே நாளில் அத்தனையும் வீண்! இதில் யாரை குற்றம் சொல்ல? அவளது வாகனத்தில் ஏற விடாமல் வலுகட்டாயமாகவே பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று கைக்கு கட்டு போட்டு விட்டு அவனுக்கும் பார்த்து கொண்டு அழைத்து வந்தான்!
“திவி…” மென்மையாக அழைத்தவனை திரும்பியும் பார்க்கவில்லை! சிறிது நேரம் காத்திருந்திவன், அவளது கையை பற்றினான்!
“திவிகுட்டி…” இதை கேட்டதும் கோபமாகவே திரும்பினாள்! அவனை எரிக்கும் பார்வை பார்த்து, கையை சட்டென்று உருவியவள்…
“டோன்ட் கால் மீ ஆஸ் சச்…” கடுப்பாக கூறியவளை பார்த்து புன்னகைத்து…
“எனக்கு பிடிச்சிருக்கே…” குறும்பாகவே கூறினான்!
“எனக்கு பிடிக்கல…” முறைத்து கொண்டே கூற…
“ம்ம்ம்… கண்டிப்பா இனிமே பிடிக்கும்…” புன்னகைத்து கொண்டே…
“கண்டிப்பா பிடிக்காது… உன்னை என் பிரெண்டா நினைச்சேன்… நல்ல மனுஷன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்… எல்லாமே தப்புன்னு ப்ரூவ் பண்ணிட்ட… அத்தனையும் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி பேசினா…” சொல்லும் போதே உடைந்தவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்!
“நானும் உன்னை என்னோட க்ளோஸ் பிரெண்டா தான் நினைச்சேன்… அதுக்கு நீ செய்தது கொஞ்சமும் சரி கிடையாதே திவி… ஆனாலும் நான் செய்தத சரின்னு சொல்லல… அதை சரி செய்யத்தான் நினைக்கிறேன்…”
“நான் செய்தது தப்புன்னு நீ நினைச்சா என்னை கொலை கூட பண்ணி இருக்கலாம்… ஆனா இது…” முடிக்க முடியாமல் திணறி உடைந்தாள்!
“சரி நீ இவ்வளவு சொல்றியே… அந்த விஷயத்த என் கிட்ட டிஸ்கஸ் பண்ணி இருக்கலாமே திவி… அப்போ எந்த பிரச்சனையும் வந்து இருக்காதே!”
“எதை… தப்பு செய்றவன் கிட்டயே வந்து நீ இதை செய்யறியான்னு கேக்க சொல்றியா? அப்புறம் அந்த ஆதாரங்களை எல்லாம் அழிக்கத்தானே பார்ப்ப… இப்போ என்னை நீ அழித்த மாதிரி!”
“ரப்பிஷ்… முதல்ல உன்னோட வாதத்தோட அடிப்படையே தப்பு… அந்த விஷயத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல… நான் விசாரிக்க சொல்லி இருக்கேன்… ஒரே ஒரு விஷயத்த மட்டும் ஒப்புக்கறேன்… முதல்ல உன்னோட குற்றசாட்டுக்கு முகாந்திரமே இல்லை… இது போலின்னு நினைச்சேன்… அந்த கோபம் உன் மேல ரொம்ப இருந்தது… ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கமிஷனர் பேசினப்போ தான் இது சுஷ்ருதா வழியாத்தான் நடக்குதுன்னு தெரிந்தது…”
“முதல்ல இது நடக்கவே இல்லை, நான் வெறுமனே புகழுக்காக அடிக்கிற ஸ்டன்ட்ன்னு சொன்ன… இப்போ எனக்கு தெரிஞ்சு நடக்கலைன்னு சொல்ற… ச்சே… பொய் சொல்றதுக்கு ஒரு அளவு வேண்டாமா?”
“நீ ஒத்துகிட்டாலும் இல்லைன்னாலும் இதுதான் உண்மை திவி… ஒரு நண்பனா நினைச்சு இருந்தா என்கிட்டே நீ விவாதம் பண்ணி இருக்கலாம்… அதை விட்டுட்டு சின்ன பிள்ளைத்தனமா வேலை செய்தது நீ தான்… ஆனா ஒரு விஷயம்… ஒரே நல்லது என்னன்னா…” என்று கூறி இடைவெளி விட… திரும்பி அவனை பார்த்து முறைத்து கொண்டே என்னவென்பது போல் பார்க்க…
“நீ… ம்ம்ம்… ரொம்ப சந்தோஷமா இருக்கு திவி…” முகம் விகசிக்க சொன்னவனை பார்த்து…
“எனக்கு அருவருப்பா இருக்கு…” சட்டென்று கூற அவளை பார்த்து தோளை குலுக்கினான்!
“ம்ம்ம்… அப்படியா… பார்க்கலாம் கல்யாணத்துக்கு அப்புறம்…” உறுதியாக சொன்னவனை…
“கல்யாணம்… ம்ம்ம்… கெடுத்தவனையே கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தனுமா? என்னோட உணர்வுகளுக்கு அப்புறம் என்ன மதிப்பு? என்ன சொன்ன… யார் கிட்டயும் சொல்ல கூடாதா? கண்டிப்பா சொல்லுவேன்… எல்லார்கிட்டயும் சொல்லுவேன்… என்னை கிள்ளுக்கீரையாயா நினைச்சு நீ பண்ண காரியத்த சொல்லி உன்னை ஒரு வழி செய்யாம விட மாட்டேன்!” சபதமெடுப்பது போல கூற அதை கேட்டு சிரித்த கார்த்திகேயன்…
“ம்ம்ம் தாராளமா சொல்லு… எனக்கு ஒரு வேலை மிச்சம்… உங்க வீட்ல விஷயத்த சொல்லி கல்யாணம் பண்ணி பர்மிஷன் வாங்குறது… கோ அஹெட்…” அவள் கூறுவதை ரசித்தபடியே கூறியவனை பார்த்து…
“ச்சே… அதிலேயே நிற்கிற… உனக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லையா?” என்று கேட்டவளை பார்த்து புன்னகைத்தான்! அந்த புன்னகையில் இருந்தது என்ன? அவனது செல்பேசி அழைத்தது! ஸ்ரீராம் அழைத்து இருந்தான்!
“சொல்லு ஸ்ரீ…”
“அண்ணா எங்க இருக்கா திவி?” குரலில் பதட்டம்!
“ஏன் ஸ்ரீ? இங்க தான் என் கூட தான்…”
“அவ போன் என்னாச்சு ண்ணா? ரீச் ஆக மாட்டேங்குது… இங்க கொஞ்சம் நிலைமை சரி இல்லை…”
“என்னாச்சு ஸ்ரீ” அவனது குரலில் பதட்டம் தொற்றவும் அவளும் பயந்து போய் அவனை பார்த்தாள்!
“நீங்க அவ கிட்ட ஒன்னும் சொல்லாம கீழ்பாக்க அப்பல்லோ அழைச்சுட்டு வாங்கண்ணா… அங்க பேசிக்கலாம்…” அப்போதுதான் இருவரின் கைக்கும் டிரசிங் செய்து விட்டு வீட்டிற்கு போய் கொண்டிருக்க ஸ்ரீராம் கூறியது அவனுக்கு பதட்டத்தை தோற்றுவித்தது! ஆனால் மேலும் அவன் குரலில் பதட்டத்தை காட்டாமல்…
“என்ன ஸ்ரீ… என்ன விஷயம்?” என்று கேட்கவும்…
“மாமாக்கு ஹார்ட்அட்டாக் அண்ணா… அங்க தான் அட்மிட் பண்ணி இருக்கோம்…” விஷயத்தை சொல்லவும் ஒரு கணம் அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை!
“ஸ்ரீ இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்போம்… டோன்ட் ஒர்ரி… பாத்துக்கலாம்…” என்று அவன் முடித்து விட்டு வைத்த போது ஸ்ரீராமுக்கு ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது! ஹப்பாடா… நாம் நினைத்த அளவு பிரச்சனை பெரிதாகவில்லை… இல்லையென்றால் கார்த்தி இந்த அளவு இறங்கி வந்து பேச மாட்டாரே என்று தான் தோன்றியது!
“என்னாச்சு…” மொட்டையாக அவனிடம் திவ்யா கேட்க…
“நத்திங்…” மொட்டையாகவே பதில் கூறினான்!
“சொல்லி தொலை…”
“ஒண்ணுமில்ல… பேசாம வா திவ்யா” அவன் பேசும் போதே கார் படுவேகமேடுத்து இருந்தது!
***
மருத்துவமனை வளாகம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது! மருத்துவர்கள் இங்கும் அங்கும் போய் கொண்டிருக்க, நோயாளிகள் மருத்துவர்களை பார்க்க ஒவ்வொருவருடைய லவுஞ்சில் காத்து கொண்டிருந்தார்கள்! மருத்துவமனைக்கே உரிய வாசம்… ரிசெப்ஷனில் ராமகிருஷ்ணன் பெயரை கூறி விசாரிக்கும் போதே ஸ்ரீராம் அவசரமாக வந்தான்!
“ஹப்பா… இப்போ தான் உயிரே வருது திவி…” முதுகை தட்டி கொடுத்து கூறியவனை பார்க்கும் போதே கண்களில் கண்ணீர் தேங்க துவங்கியது!
“ஸ்ரீ…” நா தழுதழுக்க அழைத்தவளை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டு…
“ஒன்னும் இல்லடா… ஜஸ்ட் சின்ன அட்டாக் தான்… மாமா சரி ஆகிடுவாங்க” என்று கூறும் போதே அவளுக்கு உண்மை நிலை தெரிந்தது!
“ஸ்ரீ…” அதிர்ச்சியில் பேச முடியவில்லை! இதை பற்றி ஒன்றுமே கூறவில்லையே கார்த்திகேயன்! செல்பேசியில் யாருடனோ பேசி கொண்டே இருந்தான்! திவ்யா அதன் பின்னர் எப்படி தன் தந்தையை பார்க்க அவசர சிகிச்சை பிரிவுக்கு போனாள் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்! குணவதியோடு, விகாஷும், வைஷ்ணவியும், சஞ்சய் அதாவது வைஷ்ணவியின் கணவரும் வெளியே காத்து கொண்டிருந்தனர்! ரக்ஷிதாவை காணவில்லை! ஆனால் திவ்யா எதையும் கவனிக்கவில்லை… அவளுக்கு அப்போது தெரிந்ததெல்லாம் அந்த அவசர சிகிச்சை பிரிவு தான்!
“அம்மா…” துக்கம் வெடிக்க குணவதியின் தோளில் சாய்ந்தாள்! கண்களில் கண்ணீர் பெருகியது!
“திவி கண்ணா…” அவருமே மிகவும் பயந்து போய் இருந்தார்… அவரது கண்களிலும் கண்ணீர்… ஆனால் ஸ்ரீராமுக்கோ திவ்யாவின் செய்கை வித்யாசமாக தெரிந்தது!
எத்தகைய கஷ்டம் என்றாலும் ஒரு சொட்டு கண்ணீர் விடாதவள் திவ்யா! பொண்ணுன்னா அழனுமா என்று எதிர்கேள்வி கேட்பவள்… அவளது இன்றைய அழுகை… அவளுக்குள் இருந்த மென்மையான மனதை உணர்துகிறதா? இல்லை வேறு எதாவதுமா? அந்த கண்களில் விடையை தேடினான்! ஆனால் அதில் வலியை தவிர வேறு எதையும் கண்டுகொள்ள முடியவில்லை!
“எப்படி ஸ்ரீ… என்னாச்சு…” அறிந்து கொள்வதற்காக அவள் கண்களில் கண்ணீரோடு கேட்க சிறிது தயங்கியவன்…
“ஒண்ணுமில்ல திவி… அப்புறம் பேசிக்கலாம்…”
“ஒழுங்கா சொல்லு ஸ்ரீ…” என்று வற்புறுத்தவும் தயங்கியவாறே பேசினான்!
“முதல் காரணம்… உனக்கும் அரவிந்தனுக்கும் பேசிட்டு இருந்த கல்யாணம் நின்றது திவி, அரவிந்தன் மாமாவ கூப்பிட்டு என்னமோ சொல்லி இருக்கான்… அப்புறம் நீ கார்த்திகேயன் அண்ணாவ பற்றி பிளாஷ் பண்ணினது…”
“ஏன் அதனால என்ன?”
“எதாச்சும் பெரிய பிரச்சனை வந்துடுமோன்னு ரொம்ப குழப்பிகிட்டாங்கடா… அதெல்லாம் ஒன்னும் ஆகாதுன்னு எவ்வளவு சொல்லியும் டெண்ஷனாவே இருந்தாங்க… அதோட…”
“அதோட…”
“ரக்ஷிதா உன்னை பற்றி கொஞ்சம் மோசமா பேசிடுச்சு திவி… வீட்ல கொஞ்சம் பெரிய சண்டை… நீ போனதுக்கு அப்புறம்… அது தான் மாமாவ ரொம்ப கவலை பட வச்சுட்டது…”
“என்ன பேசினாங்க?” உணர்ச்சியை தொலைத்த முகத்துடன்!
“அதை விடு… உனக்கு அதெல்லாம் வேண்டாம்…”
“இல்ல ஸ்ரீ சொல்லு…”
“நீ மீடியால இருக்கியாம்… எப்படி வேணும்னாலும் போற பொண்ணாம்… அதுக்காக தான் நீ கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றியாம்… கல்யாணம் பண்ணா…” என்று கூற வந்து விட்டு மிகவும் தயங்கி கொண்டு நிறுத்தினான்!
“சொல்லு ஸ்ரீ…” உறுதியாக…
“வேணாம்டா… அதுக்கு விக்கி அடிச்சுட்டான் திவி…”
“அவங்க என்ன சொன்னாங்க ஸ்ரீ…”
“கல்யாணம் பண்ணா கூட சேர்ந்து இருக்க மாட்டியாம்… ஏன்னா ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுன்னு என்னென்னமோ கேனத்தனமா பேசிடுச்சு…” வெளியே வருத்தம் உள்ளே அந்த ரக்ஷிதா பேசியதை நினைத்து கோபம் கொந்தளித்தது ஸ்ரீராமுக்கு! எப்படி எல்லாம் பேசிவிட்டாள் ராட்சசி… அதை கேட்டு நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்தவர்தானே! கசப்பாக புன்னகைத்தாள் திவ்யா!
“அவங்களுக்கு தீர்க்கதரிசனம் ஜாஸ்தி ஸ்ரீ…” ஒரே வாக்கியத்தில் முடித்தவள் தளர்ந்து அமர்ந்தாள்! தலை விண் விண்ணென்று வலித்தது! எதை நினைத்து கவலைப்பட? மதியமும் வயிற்றுக்கு உணவிடாதது, அதோடு சேர்த்து அவனுடன் போராடியது… இப்போதைய தந்தையின் நிலை எல்லாமாக சேர்ந்து அவளை மிகவும் தளர செய்ய கண்களில் நீரோடு சாய்ந்து அமர்ந்தாள் திவ்யா! மருத்துவமனையின் தலைமை மருத்தவரோடு பேசி கொண்டு வந்தான் கார்த்திகேயன்! அருகில் வந்தவர், அனைவரையும் பார்த்து…
“ராமகிருஷ்ணன் சேப்ஃபா இருக்கார்… எதுக்கும் ஒரு ஆஞ்சியோ பண்ணிடலாம்ன்னு இருக்கோம்…” என்று கூறிவிட்டு கார்த்திகேயனை பார்த்து…
“கவலைபடாதீங்க கார்த்திக்… உங்க மாமா எழுந்து உங்க கூட டென்னிஸ் விளையாடுவாங்க… ஓகே…” என்று தட்டி கொடுத்து விட்டு ஐசி வார்டுக்குள் நுழைந்தார்! அப்போதுதான் தளர்ந்து அமர்ந்து கைகளால் கால்களை கட்டிக்கொண்டு விட்டத்தை பார்தது கொண்டிருந்த திவ்யாவை கண்டான் கார்த்திகேயன்!
“திவி…” அவளை எப்படியாவது தேற்றிவிடவே நினைத்தான் யாருமறியாமல் அவனை எரிக்கும் பார்வை பார்த்தவள் கண்களில் கண்ணீர் வழிந்தது! கிராமங்களில் கூறுவார்கள்… பாம்பென்று தாண்டவும் முடியாமல் கயிரென்று மிதிக்கவும் முடியாமல் இருக்கிறது என்று! தந்தையின் இந்த நிலையில் கார்த்திகேயன் தன் பெண்மையை பறித்ததை கூற முடியுமா? கூறி ஏதாவது ஆனால் என்ன செய்வது? இப்படி என்னை நிறுத்திவிட்டாயே என்று அவனை கண்களால் குத்தி கிழித்து கொண்டிருந்தாள்!
வெளியே வந்த மருத்துவரிடம் காதில் ஏதோ கேட்டவன், திவியின் கையை பற்றி அழைத்துகொண்டு மருத்துவரோடு உள்ளே சென்றான்! ஏசியின் குளிர் உள்ளே நடுங்க வைத்தது! பெரிய பெரிய மருத்துவ உபகரணங்கள் இயங்கி கொண்டிருக்க தந்தையை பார்த்தவளுக்கு வருத்தம் பொங்கியது! என்றுமே பிள்ளைகள் யாருக்கும் செல்லம் குடுத்தது இல்லை ராமகிருஷ்ணன்! விகாஷ் பிறந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு திவ்யா பிறந்திருந்தாலும் தனி கவனிப்போ செல்லமோ அவரிடம் இருந்து கிடைத்ததில்லை! விகாஷ், திவ்யா எப்படியோ அதே போல தான் ஸ்ரீராம் அவருக்கு! கண்டிப்பான தந்தையாக இருந்தாலும் அவரவர்க்கு என்ன திறமை இருந்ததோ அதை ஊக்குவிப்பார்! ஆனால் இந்த அளவு தன் மேல் பாசம் வைத்து இருப்பார் என்று அவளுமே நினைக்கவில்லை! ஏனென்றால் அதை அவர் என்றுமே காட்டிகொண்டதில்லை!
“திவி…” ஹீனமாக அழைத்து கையை பிடித்தார்! கண்களில் ஒளி அருகில் இருந்த கார்த்திகேயனை பார்த்து!
“அப்பா… உங்களுக்கு ஒன்னும் இல்லப்பா… சரி ஆகிடுவீங்க… டோன்ட் ஒர்ரி பா…” வருத்தம் எதையும் சிறிதும் காட்டி கொள்ளாமல் கூற…
“அதெல்லாம் கவலை படல கண்ணா… உன்னை நினைச்சுதான் கவலையா இருந்தது…” சோர்வாக கூறியவரை பார்த்து…
“அதெல்லாம் கவலைபடாதீங்க மாமா… நீங்க சரியாகி எழுந்து வாங்க… உங்க கிட்ட ஒரு நல்ல விஷயம் பேசணும்…” புன்னகைத்து கொண்டே அவன் கூற அந்த நிலையில் மறுதலிக்க கூடிய நிலையில் திவ்யா இல்லை! அந்த நேரத்தில் அவருக்கு மிகவும் தேவைப்பட்டது அவனது அந்த வார்த்தைகள் தானே!
“அந்த அரவிந்தன் போன் பண்ணி இருந்தாப்ல கார்த்தி… என்னென்னமோ பேசிட்டாப்ல… அப்புறம் எப்படி நல்ல விஷயம்?” கனத்த வருத்தத்துடன் அவர் கூற…
“ஏன் மாமா… நான் உங்க கண்ணுக்கு தெரியலையா? எனக்கு திவிய குடுக்க மாட்டீங்களா…? முதல்ல நீங்க வீட்டுக்கு ஓடி வாங்க…” புன்னகையோடே கேட்ட அந்த ஒரு வார்த்தையே அவருக்கு போதுமானதாக இருந்தது! எல்லா பிரச்னையும் முடிந்தது ஆண்டவா என்று கண்களில் மின்னல் கீற்று…
“எனக்கு இதை விட வேற சந்தோஷம் இல்லை மாப்பிள்ளை… சீக்கிரமே ஓடி வந்துடுவேன்ல…” உற்சாகமாக! அவரது சோர்ந்த முகத்தில் டன்கணக்கில் மகிழ்ச்சி வெள்ளம்!
பெரும் ஆயாசமாக இருந்தது திவ்யாவுக்கு! விதி கூட உன் பக்கமா கார்த்திகேயா?

