arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 14

அத்தியாயம் 14

visibility 771
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (5 மதிப்பீடுகள்)
பகிர்

அறையில் குளிர் பரவி இருந்தது! கேமராமேன்களும், உதவியாளர்களும், இயக்குனரான ஸ்ரீராமும் பரபரப்பாக தங்கள் வேலைகளை பார்த்து கொண்டிருந்தனர்! செய்தியின் போது ஒளிபரப்பாக இருக்கும் நேரடி நிகழ்ச்சி என்பதால் கூடுதல் படபடப்பு ஸ்ரீராமுக்கு… அதுவும் கார்த்திகேயனை அல்லவா பேட்டி எடுக்க போகிறார்கள்! கார்த்திகேயனும் தயங்காமல் ஒப்புக்கொண்டான்! பேட்டி அறைக்கு கொஞ்சம் கூட அலட்டி கொள்ளாமல் ஒரு வித அலட்சியத்தோடே வந்தவனை பார்க்க சித்தார்த்துக்கு வயிற்றை பிறட்டியது என்னவோ உண்மை! இந்த பேட்டி சரியாக வரவில்லையென்றால் யார் அவனிடம் வாங்கி கட்டுவது என்ற பயம்! பேட்டி ஆரம்பித்தது!

“தடைசெய்யப்பட்ட சில மருந்துகளை நீங்க உற்பத்தி செய்யறதா உங்க மேல ஒரு குற்றசாட்டு நிலவுதே… அதற்கு நீங்க என்ன சொல்றீங்க?”

“தடை செய்யப்பட்ட மருந்துன்னு எதை சொல்றீங்க?” கார்த்திகேயன் சாதாரணமாகவே கேட்டான்! கண்களில் எப்போதும் தென்படும் ஆளுமையோடு கூடிய அலட்சியம்… அங்கிருந்த பெண்களுக்கு ஒரு நிமிடம் இதயம் துடிப்பதை நிறுத்த செய்தது!

“ரோபினால், கேட்டமைன் மாதிரியான மருந்துகள் பற்றி தான் சொல்றோம் சார்…”

“ரோபினால், கேட்டமைன் எல்லாம் மனஅழுத்தத்துக்கு குடுக்கற மெடிசின்ஸ்… antihistamines வகைய சேர்ந்தது! தடை செய்யப்பட்ட மருந்துன்னா பாரஸ் கம்பெனியோட டி கோல்ட் கூட தான் தடை செய்யப்பட்ட மருந்து வகையை சேர்ந்தது… அதுல இருக்கற பிணைல் ப்ரோப்பையில் அமின் தடை செய்யப்பட்ட ஒன்று… இன்னும் ஆக்ஷன் 500, அனால்ஜின், நிமிசுலிட், மாதிரி எவ்வளவோ சொல்லலாம்…”

“சார் அதை சொல்லல… போதை மருந்து சிலவற்றை நீங்க உற்பத்தி செய்யறதா கூறப்படுற குற்றசாட்ட பற்றி கேக்கறேன்…” பேட்டி எடுத்த ராஜீவ் கேட்க…

“ஒரு உதாரணம் சொல்றேன் ராஜீவ்… fortwinன்னு ஒரு இன்ஜெக்ஷன் இருக்கு… அது ஒரு பெய்ன் கில்லர்… ஆனா அதையே அதிகமா போட்டுக்கிட்டு போதைல மிதக்கறவங்க இருக்காங்க… அதை போதை மருந்துன்னு சொல்லமுடியுமா? சாதாரணமா கோரெக்ஸ் சிரப் இருமலுக்கு எடுத்துக்குவாங்க… ஆனா அதையையே பாட்டில் கணக்குல குடிச்சுட்டு போதைல இருக்கறது உண்டு… அது போதை மருந்தா? நீங்க சொல்ல வர மருந்துகள் மனஅழுத்தத்துக்கு மருத்துவர்களால பரிந்துரைக்கபடுற மெடிசின்ஸ்… ஆனா அதையும் தவறா உபயோகப்படுத்துவது நடக்குது… அதை யூஸ் பண்றவங்க கைல தான் இருக்கு… நாம பூ விக்கறோம்னா அதை வாங்குறவங்க என்ன பண்றாங்கன்னு பார்க்க முடியாதில்லையா… அதை அவங்க கோயிலுக்கும் கொண்டு போகலாம்… இல்லைன்னா வேறு மாதிரியும் யூஸ் பண்ணலாம்… அது மாதிரிதான் இதுவும்… கண்கானிக்கற வேலைய அரசாங்கம் தான் பார்க்கணும்…” என்று விளக்கமாக சொல்லி முடிக்க…

“சார்… ஒரு சில மருந்துகள்… உதாரணத்துக்கு பாராசிட்டமாலையே எடுத்துகிட்டா வேற கம்பெனிங்க தயாரிக்கறது முப்பது ருபாய்க்கு கூட வருது… ஆனா அதை நீங்க வெறும் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யறீங்க… இதே மாதிரி தான் இன்னும் நிறைய மருந்துகள் நிலைமையும் இருக்கு… அது எப்படி உங்களால முடியுது? போலின்னு தான் எல்லாருக்கும் சந்தேகம் வரும்! இது தவறு கிடையாதா? இது போலி மருந்து தானே…”

இதை கேட்டதும் வாய் விட்டு சிரித்து விட்டு…

“ராஜீவ்… ஒரு மருந்தை கண்டுபிடிச்சா சம்பந்த பட்ட கம்பெனி பேட்டன்ட் ரைட்ஸ் வாங்கிடுவாங்க… அப்போ அந்த மருந்தை அவங்க மட்டும் தான் தயாரித்து விற்பனை செய்ய முடியும்… அவங்க கண்டுபிடிக்க செலவு செய்த தொகை, மற்ற நிறைய செலவுகள் அதோட அவங்களோட அநியாய லாபம் எல்லாம் சேர்த்து வர்றதுதான் அந்த அநியாய விலை! ஆனா பேட்டன்ட் ரைட்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் யார் வேண்டுமானாலும் அந்த மருந்தை தயாரிக்க ரைட்ஸ் கிடைக்குது… அதுக்கு பேர் ஜெனரிக் ரைட்ஸ்… நமக்கு அந்த ஆர் அண்ட் டி செலவு இல்லாததால ரேட் குறைவா வைக்க முடியுது… உண்மையா பாரசிட்டமாலோட உற்பத்தி செலவு பத்து பைசாவுக்கும் குறைவு… அதை ஒரு ரூபாய்க்கு விக்கிற நாங்க குற்றவாளியா? இல்ல முப்பது ரூபாய்க்கு விக்கிற வெளிநாட்டு கம்பெனிங்க குற்றவாளியா? ஜெனரிக் மெடிசின்ஸ நாங்க மட்டும் உற்பத்தி பண்றது கிடையாது… நம்ம இந்தியாவுல தொண்ணூறு சதவிதத்துக்கும் மேல அதுதான்… உலக மருந்து உற்பத்தில முப்பத்தி ஐந்து சதவிதம் நம்ம இந்திய தயாரிப்பு தான்… ஆப்ரிக்கா மாதிரி பின் தங்கிய கண்டங்களுக்கு குறைவான விலைல மருந்து சப்ளை செய்யறது நாம தான்… ஜெனரிக் மெடிசின்ல உலகத்துல நம்பர் ஒன் நம்ம இந்தியாதான்… இதை போலின்னு சொல்றது மிக தவறு! மற்றபடி மருந்து கட்டுபாட்டு கழகத்துல முறையா அனுமதி வாங்கி, எல்லா விதிகளையும் பூர்த்தி செய்து, கிட்டத்தட்ட முப்பது வருஷமா இதே துறைல இருக்கற சுஷ்ருதாவ போலி மருந்து தயாரிக்கற கம்பெனின்னு சொல்றது மிக மிக கண்டிக்கத்தக்கது!” மிக மிக கண்டிப்புடன் முடித்தவனை பார்த்து அனைவரும் கை தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்!

இந்த பேட்டியோடு மத்திய மருந்து தர கட்டுபாட்டு அதிகாரிகளையும், தேசிய குடும்ப நல ஆணையத்தின் அதிகாரிகளையும் பேட்டி எடுத்து, அதையும் ஒளிபரப்பி ஒருவாறு மூச்சு விட்டார் சித்தார்த்!

பேட்டி ஆரம்பித்த போது இருந்த அலட்சியம் கலந்த கம்பீரம் கொஞ்சமும் குறையாமல் ஸ்ரீராம் அருகில் வந்தவனுக்கு, கைகுடுத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் ஸ்ரீ! அவனது தோளில் கைபோட்டு கொண்டு தன்னுடனே அழைத்து சென்ற கார்த்திகேயன் …

“ஸ்ரீ… எப்போ ப்ரீ ஆவ?”

“சொல்லுங்கண்ணா… உங்க பேட்டி தான் முடிஞ்சுதே… ஐ அம் ப்ரீ தான் கார்த்தி அண்ணா…”

“கொஞ்சம் பேசனும் ஸ்ரீ…”

“சொல்லுங்கண்ணா…” ஆர்வமாகவே கேட்டான்!

“உங்க ரெண்டு பேருக்கும் எந்த வழில தப்பு நடக்கிறதா ஸ்கூப் கிடைச்சுது? கொஞ்சம் சொல்லேன் ஸ்ரீ!” நேரடியாக விஷயத்திற்கு வந்தவனை பார்த்த போது கொஞ்சம் அயர்ந்து தான் போனான்!

“அண்ணா… அது வந்து…” தயங்கினான் ஸ்ரீ!

“ஸ்ரீ… நான் இப்போ என் கம்பெனி பேர் கெட்டுட கூடாதுன்னு எப்படி வேணும்னாலும் வாதம் பண்ணி ஜெய்க்கலாம்… இப்போ நான் பேசினது எல்லாம் சப்பைக்கட்டு தான்… எல்லாமே உண்மைதான்… ஆனா வெளிஉலகத்துக்கு புரியாத சப்பைக்கட்டு! ஆனா தப்பு நடக்கறது உண்மைன்னு எனக்கும் புரியுது! அதை நான் கண்டுபிடிக்கனும் ஸ்ரீ… என் கம்பெனிலையே இருக்கற அந்த கருப்பு ஆட தேடியே ஆகணும்… அதான் உன்கிட்டையும் ஹெல்ப் கேக்கறேன்…” என்று உணர்ந்து கூறியவனின் வார்த்தைகளில் பொய் இல்லை! கண்களில் கள்ளம் இல்லை… கிருஷ்ணாவிடம் கூறி இந்த விஷயத்தை கண்டுப்பிடிக்க பணித்திருப்பதையும் கூறினான்… கிருஷ்ணா மேலும் ஒரு மாதம் கேட்டிருந்தான்…

“கண்டிப்பா செய்யறேன் ண்ணா… திவி கிட்ட பேசி பார்த்தீங்களா… இது விஷயமா?”

“ம்ஹூம்… இல்ல… பேசவே பேசாதவ கிட்ட எதை கேக்குறது ஸ்ரீ?” வார்த்தைகளின் ஓரத்தில் வலி! ஸ்ரீக்கும் புரியவே செய்தது… இருவருக்கும் ஏதோ பெரிய சண்டை என்று மட்டும்… ஆனால் தன்னிடமே இவ்வளவு தகைந்து பேசும் கார்த்திகேயன் அவளிடமா சண்டை போடுவான்? ஆனால் இரண்டு நாட்களாக திவ்யா இருக்கும் நிலையும் ஒன்றும் சொல்லி கொள்ள முடியவில்லையே! எதையோ இழந்தார் போல!

மாமாவையும் ஐ சி யூனிட்டில் இருந்து கொண்டு வந்ததற்கு பிறகும் அவள் இப்படியே இருப்பது எதோ ஒன்றை கூறியது! ஆனால் என்னவென்று புரியாமல் இருக்கும் போது என்ன செய்ய? கார்த்திகேயன் திவ்யாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தது அவளுக்கு பிடிக்கவில்லையா? கார்த்திக்கை மறுக்க காரணமும் இல்லையே! இந்த பிரச்சனை ஒன்றை தவிர… அதுவும் அவள் அவசர குடுக்கையாக செயல்பட்டதால் வந்த வினை அல்லவா! கண்டிப்பாக கார்த்திகேயன் இந்த மாதிரி தவறுபவன் கிடையாது என்று தான் கூறியபோதும் ஒப்புகொள்ளாத பிடிவாதக்காரி ஆயிற்றே!

“விடுங்கண்ணா… நான் பார்த்துக்கறேன்… நீங்க கல்யாண வேலைல இறங்குங்க… இன்னும் ரெண்டு வாரம் தானே இருக்கு…”

“ம்ம்ம் ஆமா ஸ்ரீ… வைஷுவோட பிடிவாதம் தான் ஸ்ரீ… சச்சிதானந்தம் மாமா எந்த தேதில கல்யாணத்த பிக்ஸ் செய்தாறோ அதே தேதில இந்த கல்யாணத்த நடத்தனும்ன்னு… ப்ச்… நானும் கொஞ்சம் மூச்சு விட வேண்டாமா?” நொந்து போவது போல சிரித்து கொண்டே சொன்னவனை பார்த்து சிரித்த ஸ்ரீ…

“நீங்க கவலைபடாதீங்க ண்ணா… நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்… ஜமாய்ச்சுறலாம்… இந்த பிரச்சனை இதோட பினிஷ்ட்… இதுக்கு மேல நீங்க கவனிக்க வேண்டியது திவியத்தான்…” என்று கூறி சிரிக்க, பேசி கொண்டே கார் பார்க்கிங் வந்து இருந்தனர்!

“ஆமா அவளை ஓவரா கவனித்ததால வந்த பிரச்சனையே போதும்பா…” என்று ஸ்ரீக்கு கேட்காதவாறு முனக…

“ஓகே ஸ்ரீ… நான் கிளம்பறேன்…” கிளம்பினான்!

“அண்ணா ஒரு நிமிஷம்…”

“சொல்லு ஸ்ரீ…”

“ஆக்சுவலா என்ன ஆச்சு? ரெண்டு பேர்க்கு இடைல… திவ்யா இந்த அளவு உடைஞ்சு போய் நான் பார்த்ததே இல்லை…” என்று கேட்கவும் பெருமூச்சு ஒன்று புறப்பட்டது! கண்களை ஒரு நிமிடம் இறுக மூடி திறந்தவன், , மனதிற்குள் ஒரு முடிவுக்கு வந்தவனாக…

“அதெல்லாம் என்னனமோ நடந்துட்டது ஸ்ரீ…” நேரடியாகவே கூறிய போது முதலில் ஒன்றும் பிடிபடவில்லை ஸ்ரீராமுக்கு! என்ன சொல்கிறான் இவன் என்று மண்டையை குழப்பி கொள்ளாத குறை!

“உனக்கு முடியும்னா ஆபீஸ்ல இன்பார்ம் பண்ணிட்டு கூட வா ஸ்ரீ…” என்று அவன் அழைத்த போது அவனுக்குமே அதுதான் சரியென்று பட்டு போனிலேயே கூறி விட்டு அவனுடனே கிளம்பினான்!

சிறிது நேரம் பேசாமல் மௌனமாகவே வந்தவன், காரை ஓரமாக நிறுத்தினான்! மனதுக்குள் குழப்பம்… இதை ஸ்ரீராம் எப்படி எடுத்து கொள்வான் என்று! ஆனால் ஸ்ரீராமிடம் இருந்து மறைக்க விரும்பவில்லை கார்த்திகேயன்! அந்த மாலை பொழுதின் சம்பவத்தை நியாயப்படுத்தவும் தயாராக இல்லை… மூச்சை இழுத்து விட்டவன், எதற்கும் தயார் என்பது போல பார்த்து விட்டு…

“ஸ்ரீ… என்னை பற்றி என்ன நினைக்கிற?”

“ம்ம்ம்… பிசினெஸ்ல உங்களுக்கு எப்படி வேணும்னாலும் முகம் இருக்கலாம் ஆனா இயல்பில பார்த்தா நல்ல டைப்… நான் கவனித்த வரைக்கும் நிறைய விஷயங்களை நேர்மையா கையாள்றீங்க…”

“ம்ம்ம்… எனக்கு சுத்தமா பிடிக்காத விஷயம் முதுகுல குத்தறது ஸ்ரீ… சச்சிதானந்தம் அதை தான் செய்தார்… அரவிந்தன்… என்னால ஜீரணம் பண்ணவே முடியல… அவனை பார்க்கவே கூடாதுன்னு தான் நினைக்கிறேன்… அந்த அளவு கோபமா இருக்கு… எனக்கு தேவைப்பட்ட சமயத்துல விட்டுட்டு ஓடுன துரோகி அவன்…” கோபமாக சொல்லி கொண்டிருக்கும் கார்த்திகேயனை பார்க்க அவனுக்கு மனதுக்கு துயரமாகவே இருந்தது! அனுபவங்கள் இடர்களை தோற்றுவிக்கின்றன… இடர்கள் அனுபவங்களை தருகின்றன என்பது எவ்வளவு சரியான வார்த்தை! மனிதர்களின் உண்மை முகங்களை அறிந்து கொள்ளும் அந்த தருணங்கள் மிக கடுமையானதாகவே அமைகின்றன!

“அந்த நேரத்தில் தான் திவ்யா வந்தா ஸ்ரீ… அவளும் ஒரு துரோகியா முதுகுல குத்தின ஒரு தோழியா…” என்று வலியோடு கூறியபோது அவனும் அந்த வலியை உணர்ந்தான்!

“இல்லண்ணா திவி அப்படி இல்ல… அவளுக்கு கொஞ்சம் அவசரகுடுக்கைத்தனம் இருக்கே தவிர என்னைக்குமே யாரையும் முதுகுல குத்த நினைக்க மாட்டா… நிறைய லட்சியம் இருக்கு… எதையாவது சாதிக்கனும்ன்னு துடிப்பு இருக்கு… ஆனா வயசுக்கேத்த வால்தனம் தான் கொஞ்சம் அதிகம்… அதுவும் போக போக சரியாகிடும் ண்ணா… உங்க கல்யாணம் நின்ற செய்தி வந்தப்போ… நான் கூட இந்த நேரத்தில் போகாதன்னு எவ்வளவோ தடுத்து பார்த்தேன்… ஆனா நம்ம கார்த்திக் தானேன்னு என் வாயை அடைச்சுட்டு வந்தா… அவ அப்படி கிடையாதுண்ணா…” ஸ்ரீ கூறிய போது மனதை வருடியது கார்த்திகேயனுக்கு, எனது திவ்யா என்ற கர்வம் பிறந்தது!

“தெரியும் ஸ்ரீ… ஆனா அந்த நியூஸ் பிளாஷ் பண்றதுக்கு முன்னாடி என் கிட்ட கொஞ்சம் பேசி இருக்கலாம் இல்லையா… நான் அவளோட லட்சியத்தை அழிக்க மாட்டேன்… என்னோட நியாயத்தை புரிஞ்சுகிட்டு செய்திருக்கலாம்… நீயாவது அதை செய்து இருக்கலாம்… ஆனா அந்த கோபத்துல நான் செய்ததும் சரி கிடையாது…” என்று கூறி விட்டு தயங்கியவனை பார்க்கும் போது ஸ்ரீராம் ஆச்சரியம் அடைந்தான்! கார்த்திகேயனா தயங்குவது? அவனே தொடர்ந்தான்!

“அந்த கோபத்துல… நான் கொஞ்சம் தடுமாறிட்டேன் ஸ்ரீ… அவளை செக்ஷுவலா யூஸ் பண்ணிட்டேன்…” குரல் பிசிறு தட்ட தயங்கியவாறே கூறினான்! ஸ்ரீராம் அதிர்ச்சியின் எல்லைகளை கடந்தான்! கார்த்திகேயனா… திவ்யாவையா…?

“வாட்… கம் அகைன்…” கோபத்தோடு! கை முஷ்டி இறுக… தான் என்ன செய்கிறோம் என்பதை மறந்து அவனது சட்டையை பிடித்தான்! கார்த்திகேயன் மெதுவாக அவனது கையை எடுத்து விட்டு…

“இன்னொரு முறை சொல்ல விரும்பலை ஸ்ரீ… அதான் உடனே கல்யாணத்துக்கு அவசர பட்டேன்…” அவனது முகத்தில் இருந்ததென்ன?

“அப்படீன்னா நீங்க செய்தது சரி ஆகிடுமா?” கோபத்தில் கன்னம் துடிக்க…

“சரி கிடையாது… ஆனா அதை சரி செய்ய முடியுமே… இப்போவும் இந்த விஷயத்தை உன் கிட்ட மறைக்க நினைக்கிலை…”

“ச்சே உங்க கிட்ட கண்டிப்பா நான் இப்படி ஒரு பீகேவியர எதிர்பார்க்கலை, , , ச்சே…”

“ம்ம்ம்… கண்டிப்பா ஸ்ரீ… தப்பு தான்… எப்படியாவது சரி செய்ய நினைக்கிறேன்…”

“தப்பை செய்துட்டு மறைக்க அவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறீங்க… இது ஒரு பொண்ணுக்கு எவ்வளவு அவமானம் தர கூடிய விஷயம் தெரியுமா? ச்சே… நீங்க… உங்களுக்காக திவி கிட்ட எவ்வளவு பரிஞ்சு பேசி இருப்பேன்… ச்சே…” கோபத்தில் கிட்டத்தட்ட கொதித்து கொண்டிருந்தான்!

“தப்பை மறைக்க கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றது ஓரளவு உண்மைதான் ஸ்ரீ… ஆனா அதை கண்டுக்காம நான் விட்டுட்டு போக எவ்வளவு நேரமாகும்? புரிஞ்சுக்கோ… நான் அப்படி போக நினைக்கில…”

“அப்படி விட்டுட்டு போனா எங்க கையெல்லாம் பூ பறிச்சுட்டு இருக்குமா?”

“நான் எந்த விதமான கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு கல்யாணத்துக்கு ஒப்புக்கலை… ஒரே ரீசன்… அவளை நான் லவ் பண்றது தான்…” என்று வெளிப்படையாக கூறவும் அஒறு கனம் அதிர்ந்து தன்னிலைக்கு வந்தான் ஸ்ரீராம்!

“…”

“எஸ்… ஐ லவ் ஹெர் ஸ்ரீ…” மௌனமானான்! கார்த்திகேயன் தொடர…

“நான் மனதார காதலித்த ஒரே பொண்ணு திவி தான் ஸ்ரீ…” முதன்முதலாக தன் மனதை ஸ்ரீராமிடம் திறந்தான்!

“அப்போ ஷாலினி…?” குழப்பமாக கேட்க…

“அம்மா கமிட் பண்ணிட்டாங்களேன்னு ரொம்ப குழப்பத்துல இருந்தேன்… அந்த பொண்ணு கூட பேச கூட எனக்கு விருப்பம் இருந்தது இல்ல ஸ்ரீ… உனக்கே தெரியும்… அப்போதான் திவிய பார்த்தேன்… முதல் பார்வைலையே ரொம்ப பிடிச்சு இருந்தது… ஆனா அப்போ நட்புன்னு ஒரு முகமூடிய தான் போட்டுக்க முடிந்தது… எனக்கும் புரியலை… ஆனா போக போக தான் எனக்கும் புரிந்தது ஸ்ரீ… இந்த ரிலேஷன்ஷிப் வெறும் நட்பு இல்லைன்னு…” என்று கூறி விட்டு அவனது முகத்தை பார்த்தவன் தொடர்ந்தான்…

“இப்போ… நான் ரொம்ப லவ் பண்றேன் ஸ்ரீ… ஐ லவ் ஹெர் எ லாட்…” தலையில் கையை வைத்து கார் ஸ்டியரிங்கில் தலைசாய்ந்தபடி கூறியவனை பார்த்தபோது ஸ்ரீராம் வேதனைபட்டான்… இந்த அளவு மனம் வருந்துகிறானே என்று!

“அண்ணா… நீங்க இந்த அளவு சொல்லும் போது நிஜமா சந்தோஷமா இருக்கு… ஏதோ ஒரு கட்டாயத்துக்கோ இல்ல சச்சிதானந்தத்துக்கு போட்டியாவோ தான் இந்த ப்ரோபோசல சொன்னீங்கன்னு தப்பா நினைத்தேன்… ஆனா திவிய இவ்ளோ லவ் பண்ணி தான் கல்யாணம் பண்றீங்கன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு… நீங்க இதை எல்லாம் திவி கிட்ட பேசினீங்ளா?”

“இல்ல ஸ்ரீ… என் மேல ரொம்ப கோபமா இருக்கா… கார்னர் பண்ணி கல்யாணம் பண்றதா வேற என்னை கடிச்சுட்டு இருக்கா… அவகிட்ட என்னால இந்த அளவு மனம் விட்டு பேச முடியலை… எங்க போய்ட போறா? ம்ம்ம்… கொஞ்சம் அவ கோபம் ஆறட்டும்…” என்று மென்புன்னகையோடு கூறி விட்டு காரை ஸ்டார்ட் செய்தான்! எப்படியும் அவளை வென்று விட முடியும் என்றெண்ணி…

***

அன்றைய தினம் பரபரப்பாக விடிந்தது… ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்! திரும்பி பார்க்கும் போது பசுமை நினைவுகள் மயக்கத்தில் ஆழ்த்தும் அழகான நாட்கள்! கார்த்திகேயன் திவ்யாவின் திருமண நாள்! வைஷ்ணவி, சஞ்சய், ஸ்ரீராம் ஒரு இடத்தில் நிற்காமல் பறந்து கொண்டிருந்தனர்! ராகவேந்திரா திருமண மண்டபம் களைகட்டி இருந்தது! விஐபிக்களின் வருகையினால் மண்டபம் திணறி கொண்டிருந்தது!

முதல் நாள் பெண்அழைக்கும் வைபவத்தில் கலக்கி கொண்டிருந்த ஸ்ரீராம் சாஹித்யா ஜோடி, திருமணத்திலும் கலக்கி கொண்டிருந்தது… அவ்வப்போது குறும்பாக அவளை சீண்டி விட்டு வம்பு இழுத்து கொண்டிருந்தான் ஸ்ரீராம்! இருவரின் நெருக்கத்தை பார்த்த குடும்பத்தினரின் புருவம் உயர்ந்தது! ராமகிருஷ்ணன் ஆகட்டும், குணவதி, மங்கை என எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி கலந்த புன்னகை… பெருமிதம்! ராமகிருஷ்ணன் தனது உடல்நிலையை மறந்து மனம் முழுக்க சந்தோஷ ஊற்று பாய ஒவ்வொரு சடங்கையும் செய்து கொண்டிருந்தார்! அங்கேயும் ஒட்டாமல் வெறும் அலங்கார பொம்மையாக வலம் வந்தது ரக்ஷிதா மட்டும் தான்!

கனிஷ்கர் மனிஷா திவ்யாவை விட்டு அகலாமல் கூடவே இருந்து ஒவ்வொரு சடங்கையும் ஆர்வமாக பார்த்து பார்த்து கொண்டு இருந்தனர்! பக்கத்தில் இருந்த திருமண சடங்குகளை பார்ப்பது அவைகளுக்கு இதுவே முதல் முறை அல்லவா! ஆனால் யாருக்கு வந்த விருந்தோ என்று இயந்திரம் போல ஒவ்வொரு வேலையையும் செய்து கொண்டிருந்தாள் திவ்யா!

உடல் முழுவதும் சரிகை ஓடிய தங்க காஞ்சி பட்டில் அழகாக அலங்கரித்த சிலை போல பக்கத்தில் வந்து அமர்ந்த திவ்யாவை ஒரு கணம் இமைக்காமல் பார்த்தான் கார்த்திகேயன்! இத்தனை அழகா என்று! அந்த நேரத்தில் இயல்பாக தோன்றும் கர்வம் அவன் மனதில்!

என்றும் உன்னை கைவிட மாட்டேன் என்று மந்திரம் கூறி திவ்யாவின் சங்கு கழுத்தில் மங்கல நாண் பூட்ட… அவளது கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது… தனது வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற கழிவிரக்கத்தில் கண்களில் அருவி! அந்த கண்ணீரை பார்த்தவனுக்கோ இதயத்தில் வலி!

அதே நேரத்தில் மனம் கொதித்து கொண்டிருந்தது இருவருக்கு இன்னொரு இடத்தில் ! அது அரவிந்தன்… ஷாலினி!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 15

திருமண மண்டபம் திணறி கொண்டிருந்தது! முக்கியமான தென்னிந்தியாவின் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசாங்க அதிகாரிகள் என்று ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு வாங்கியதால் மூச்சு கூட விட கூட முடியாமல் தடுமாறி கொண்டிருந்தது! ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியே மேலாளர்கள் இருந்ததால் சிறிது கூட எங்கும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்