arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 18

அத்தியாயம் 18

visibility 751
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

திவ்யா எழும்போதே அவளுக்கு தலைவலி மண்டையை பிளந்தது! தலையை சுற்றி கொண்டு வந்தது! மணி என்னவென்று பார்த்தாள்… எட்டாகி இருந்தது! ஐயோ இவ்வளவு நேரமா என்று பதறி எழ முயன்றவளை சாய்த்தது தலைசுற்றலும் சோர்வோடு வந்த காய்ச்சலும்! ஆகா மொத்தம் இரவில் அவனை கடுப்பேற்ற செய்த செயல் தனக்கே ஆப்பு வைத்து இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவள் எப்படியாவது எழுந்து நிற்க முயன்றாள்! கால்கள் துவண்டு விழுந்தன! அவளது சப்தம் கேட்டு ஷேவ் செய்து கொண்டிருந்த கார்த்திகேயன் அவசரமாக வந்தான்!

“ஹாய் திவி… எழுந்திட்டியா?” என்று பக்கத்தில் வந்தவனை பார்த்து ஒரு அடி பின்னடைந்தாள்! இரவு மழையில் நனைந்தது தான் நினைவுக்கு வந்தது… பின் எப்படி? என்ற ரீதியில் யோசிக்க ஆரம்பித்தது மனம்! அவசரமாக தன்னை ஆராய்ந்தாள்! உடைகள் மாற்றப்பட்டு இருந்தன!

“ச்சே… நீங்கதான் மாற்றி விட்டீங்களா?” கடுப்பாக திவ்யா கேட்க சுழித்த புன்னகையோடு…

“பின்ன… என்ன பண்ண… என் விதி…” குறும்பான நக்கலோடு கூற திவ்யாவுக்கு தான் கோபம் தலைக்கேறியது!

“சிச்சுவேஷன யூஸ் பண்ணிகிட்டீங்க…” வெறுப்பாக கூற…

“அடிச்சு… பல்ல கழட்டிடுவேன் ராஸ்கல்… மயங்கி போய் கிடந்தவளை ஜன்னி வராம இருக்க டிரஸ்ஸ மாத்தி விட்டா… இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ…”

“ஏன்… அம்மாவ கூப்பிட்டு இருக்கலாம்ல… ச்சே…” இதை கேட்டதும் பக்கத்தில் வந்தான்! திவ்யா மனதில் படர்ந்த பயத்தோடு பின்னடைய, கார்த்திகேயன் இன்னமும் நெருக்கமாக வர, சுவரோடு ஓட்டினாள்! சோர்வு வேறு அவளை பலவீனப்படுத்த… அவனை எப்படி எதிர்கொள்வது என்ற பயமும் ஆட்கொண்டது! கண்ணோடு கண் பார்த்து கொண்டு மிக நெருக்கமாக வந்தவன் அவளது இருபுறமும் கைகளை ஊன்றி…

“திவி… நீ என் வொய்ப்… அதை அப்போ அப்போ ஞாபகப்படுத்திகிட்டே இருக்கனுமா?” என்று கேட்டு அவளை இன்னமும் நெருங்க அப்போதுதான் அவளது உடம்பு சூட்டை உணர்ந்தான்! நெற்றியில் கை வைத்து பார்த்தபோது கொதித்தது!

“ஓ ஷிட்… போதுமா… காய்ச்சல் அடிக்குது… என்னமோ பெரிய இவளாட்டம் பேச வந்துட்டா… ஷவர்ல நிக்கற மாதிரி மழைல நிற்க வேண்டியது… சின்ன பொண்ணாடா நீ…” அக்கறையிலும் கோபத்திலும் குதித்தான்!

“உஷ்… ரொம்ப சீன் போடாதீங்க… ஒரு மாத்திரை போட்டா சரியா போய்டும்…” என்றபோது என்னிடமேவா என்று முறைத்து பார்த்து விட்டு மருத்துவராக இருக்கும் அவனது தோழியான ஜானகியை அழைத்தான்!

“ஹாய் ஜானு…” ஜானுவா யார் அது என்று வியப்பாக பார்த்தாள் திவ்யா! பெரிதாக பெண் தோழிகள் யாரும் இல்லை என்று கூறினானே!

“ஹாய் கார்த்தி… சொல்லுப்பா”

“கொஞ்சம் வீட்டுக்கு வாயேன் ஜானு… திவிக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை…”

“ஹேய்… என்னடா விசேஷமா?” சிரிப்போடு அந்த ஜானகி கேட்க ஆமாம் இது ஒன்று தான் குறைந்து விட்டது என்று அவளை கடிக்க தோன்றியது!

“அட என்ன டாக்டர் நீ… அங்க இருந்தே இப்படி சொதப்புற… திவி மழைல நனைஞ்சுட்டா… கொஞ்சம் பீவர்… அதுக்குள்ளே உன்னோட கற்பனை குதிரைய பறக்க விடற…” சிரித்தவாறே கூறினான்!

“கத்தரிக்காய் முத்துனா கடைத்தெருவுக்கு வந்து தான் ஆகணும் மோனே…” என்று கிண்டலடித்து விட்டு செல்பேசியை வைத்தாள் ஜானகி! செல்பேசியை வைத்து விட்டு நிமிர்ந்த போது நகத்தை கடித்துக்கொண்டே படுக்கையில் சாய்ந்து இருந்தாள் திவ்யா! ரொம்பத்தான் சிரிப்பு வேண்டி கிடக்கிறது இவனுக்கு என்று மனம் பொருமியது!

“திவி… வா பிரஷ் பண்ணிட்டு கொஞ்சம் சூடா காபி குடி… கொஞ்சம் நல்லா இருக்கும்…” வேலையாள் கொண்டு வந்து காபியை வைத்து கொண்டு அக்கறையாக அழைத்தவன் மேல் பாய தோன்றியது!

“எல்லாம் எனக்கு தெரியும்… உங்க வேலைய பார்த்துட்டு போங்க…”

“இப்போ நீ வரலைன்னா… நான் உன்னை தூக்கிட்டு போய் பிரஷ் பண்ண வைப்பேன்… என்ன ரெடியா?” என்று தன்னை தூக்க பக்கத்தில் வந்தவனிடம் இருந்து தள்ளி…

“சரி… செய்யறேன்…” என்று கூறிவிட்டு பல் துலக்கி காபியை அருந்தியபோது உடல் தேவலாம் என்று இருந்தது! காபி அருந்தி முடிக்கவும் ஜானகி வரவும் சரியாக இருக்க, இன்டர்காமில் கேட்டவர்களிடம் மாடிக்கு அனுப்ப கூறினான்!

“ஹாய் கார்த்தி… ஹாய் திவ்யா…” என்றபடி உள்ளே வந்தாள் ஜானகி! கார்த்தியிடம் சிரித்து பேசியபடியே திவ்யாவுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டாள்! அவளுக்குமே காபி வந்திருக்க, அருந்தி கொண்டே நண்பனிடம் பள்ளி கால அனுபவங்களை பேசி கொண்டிருந்தாள் ஜானகி!

“ஹேய் திவ்யா… பார்த்து இவனை ஜாக்கிரதையா ஹேண்டில் பண்ணுடா… இல்லைன்னா நம்மளை முழுங்கி ஏப்பம் விட்டுட்டு போயிட்டே இருப்பான்!” திவ்யாவிடம் போட்டு கொடுக்க…

“அடபாவி… உனக்கு நான் என்ன கொடுமை செய்தேன்… இப்படி இவ கிட்ட நல்ல வார்த்தைய சொல்றியே கிராதகி…”

“பார்த்தியா திவ்யா… இப்போவே மிரட்டுறான்… உன்னையும் மிரட்டித்தான் வெச்சு இருக்கானா? டிவில எவ்வளவு நல்லா பேசுன பொண்ணு… இப்போ வாயே திறக்க மாட்டேங்குதே…” ஜானகி கிண்டலடிக்கவும் இவளை தான் மிரட்ட வேறு வேண்டுமா? என்று எண்ணம் ஓடியது கார்த்திகேயனுக்கு!

“அவ வாய திறந்தா எட்டு ஊர் கிழியும் தாயே… இப்போதான் என்னமோ வாய மூடிகிட்டு இருக்கா… அதுல மண்ணை போட்டுடாதே…” சிரித்து கொண்டே சொன்னவனை பார்த்து முறைத்தாள் திவ்யா!

“சரி நான் ஒன்னும் மண்ணை போடல… இப்போ நீ வெளிய போ…”

“ஏன் ஏன்… என் பொண்டாட்டிக்கு டெஸ்ட் பண்ணும்போது நான் இருக்க கூடாதா?” வேண்டுமென்றே கொடி பிடித்தவனை வெளியே தள்ளி விட்டு…

“படவா… வெளியவே இரு… நான் கூப்பிடற வரைக்கும்…” என்று கூறிவிட்டு திவ்யாவின் அருகில் வந்தாள்!

“எல்எம்பி டேட் என்ன திவ்யா…” என்று கேட்டு கொண்டே!

பரிசோதனைகளை முடித்து காய்ச்சலுக்கு ஊசி போட்டுவிட்டு வெளியே வந்தவள் கார்த்திகேயனிடம்…

“கார்த்தி… ஊசி போட்டு இருக்கேன்…” என்று கூறி விட்டு குரலை தழைத்து…

“டேட் தள்ளி போய் இருக்கு போல… டெஸ்ட்க்கு ஆள் அனுப்பறேன்… டெஸ்ட் பண்ணிட்டு கன்பார்ம் பண்ணிக்கலாம்… ஓகே வா…” என்று ஜானகி கூறியபோது முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை! தலையில் அடித்தவாறு புரிய துவங்கியது!

‘குழந்தை’

தனக்கு ஒரு குழந்தை வர போகிறதா? தன்னை அப்பா என்று அழைக்க போகிறதா? என்னுடைய ரத்தம், என் வாரிசு! என்னுடைய உயிர்… எனது பிரதிபிம்பமா? இந்த சாம்ராஜ்யத்தின் இளவரசனா இளவரசியா? உலகை வென்ற உணர்வு ஆட்கொண்டது!

“ஜானு… என்ன சொல்ற நீ?” மகிழ்ச்சியில் பறந்தான் கார்த்திகேயன்!

“கன்பார்ம் ஆனா எனக்கு என்னடா தருவ?” கிண்டலாக கேட்ட தோழியிடம்…

“ஹேய்… என்ன வேணும்ன்னு கேளு… ஐம் சோ ஹாப்பி…” என்று கார்த்தி குதிக்க…

“ம்ம்ம்… இன்னொரு கப் காபி வேணும்…” என்று சிரிக்காமல் ஜானகி கூறினாள்!

“அட ச்சே… அல்பை” என்று ஜானகியை பார்த்து தலையில் அடித்து சிரித்து கொண்டே மங்கையை அழைத்து விஷயத்தை கூற, அவருக்கும் சந்தோஷம் தாள முடியவில்லை!

“இப்போவெல்லாம் முப்பது நாள்லயே தெரிஞ்சுடுது ஜானு…” என்று கள்ளமில்லாமல் ஜானகியிடம் கூறியவாறே அழைத்து சென்று பட்டுபுடவை வைத்து பூ பழம் வைத்து கொடுத்தார்! கார்த்திகேயனுக்கு மனதின் ஓரத்தில் சங்கடமாக இருந்தது!

“என்னம்மா நீங்க… இதுக்கு போயா?” என்று ஜானகி பின்னடைய…

“என்னடா கண்ணா… எவ்வளவு நல்ல விஷயம் சொல்லி இருக்க…” என்று சிரித்தார் மங்கை!

“கன்பார்ம் ஆகட்டும்மா…” என்று கூறிவிட்டு மகிழ்ச்சியாக விடைபெற்று போனாள் ஜானகி! விடைகொடுத்து விட்டு மனதில் மகிழ்ச்சி பொங்க மாடிக்கு விரைந்தான்! இனியாவது திவ்யா தன்னை ஏற்பாளா என்ற ஏக்கம் சூழ்ந்தது! அவளது மணிவயிற்றில் சூல் கொண்டிருந்த தன் குழந்தையை அப்போதே கொஞ்ச வேண்டும் என்ற ஆவலோடு கதவை தள்ளி கொண்டு போனான்!

திவ்யா தலையில் கை வைத்தவாறே கட்டிலில் அமர்ந்து இருந்தாள்! முகத்தில் டன் கணக்கில் குழப்பம்! ஜானகி கேட்ட கேள்விகளை வைத்தே தன்னுடைய நிலை சிறிது புரிந்தது! தனக்கு ஒரு குழந்தையா? இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத திவ்யா அயர்ந்து போனாள்! கார்த்திகேயனையே வேண்டாம் என்னும் போது இந்த குழந்தை தேவையா என்ற எண்ணம் அவளது மனதில்! மனதின் ஓரத்தில் ஒரு எண்ணம்… இந்த குழந்தை ஒன்றும் இருவரின் அதீத காதலில் உருவாகி விட வில்லையே… தனது விதி தான் இந்த குழந்தையின் ரூபத்தில் வந்திருக்கிறதோ? வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது!

“திவி…” மென்மையாக அழைத்தது கரகரப்பாகி இருந்தது!

“ம்ம்ம்…” நிமிர்ந்தே பார்க்காமல் கேட்டாள்! அவளது கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்து கொண்டவனிடம் இருந்து சட்டென்று உருவினாள் திவ்யா!

“ஐம் ஹாப்பி திவ்யா… எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?”

“எனக்கு ரொம்ப துக்கமா இருக்கு… பிடிக்கவே இல்லை…” சட்டென்று கூறினாள் திவ்யா! பதறிய கார்த்திகேயன்…

“வேணாம் திவ்யா… அப்படி சொல்லாதே… அந்த குழந்தையால உன்னோட வெறுப்ப உணர முடியும்… இப்போவே நம்ம அம்மா நம்மை வெறுக்கறான்னு அந்த சிசுவும் மனசுல அழ வேணாம்… நீ வெறுத்து ஒத்துக்கற கொடுமை என்னோட போகட்டும் திவ்யா…” மனத்தால் உணர்ந்து கூறியவனை வித்தியாசமாக பார்த்தாள் திவ்யா! கண்களில் வலியை தாண்டிய சோகம்!

“நீங்களா தேடிகிட்டது கார்த்திகேயன்… என்னோட லட்சியத்த அழிச்சு… ஆசையெல்லாம் குலைச்சு தான் என்னை நீங்க இங்க உட்கார வெச்சு இருக்கீங்க… அப்படி இருக்கும் போது உங்க குழந்தை எனக்கு தேவை இல்லையே…” என்று கூறிய போது அவனுக்கு அவளை இழுத்து வைத்து அறையலாம் போல இருந்தது! ஆனாலும் அவளது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கியமாக தன் வாரிசை சுமந்து இருப்பவள் என்ற நிதர்சனத்தில் தன்னிலைக்கு வந்து தணிந்தே பேசினான்!

“வேணாம் திவ்யா… இன்னொரு முறை அப்படி ஒரு வார்த்தைய சொல்லாத… உன்னை நான் கெஞ்சி கேட்டுக்கறேன்…” என்று கூறியவன் அவளை நெருங்கி…

“நான் செய்தது தப்புத்தான்… அன்றைக்கு நீ தப்பு செய்துட்டன்னு ஆத்திரப்பட்டு… அந்த ஆத்திரத்துல நான் செய்தது தப்புத்தான் திவ்யா… அதுக்காக என்னை என்ன வேணும்னாலும் தண்டிச்சுக்கோ… ஆனா இந்த குழந்தைய மட்டும் மனசார வெறுக்காத திவ்யா… ப்ளீஸ்… நமக்கு வேணும்மா” அவனது ஈகோவை மறந்து அவளிடம் கெஞ்சிய கார்த்திகேயன் அவளுக்கு வித்தியாசமாக தெரிந்தான்! அவளது கையை பிடித்து கொண்டு…

“இது நம்ம குழந்தை திவ்யா… நம்ம ரெண்டு பேரோட வாரிசு… நம்ம ரத்தம்… நம்மளை அம்மா அப்பான்னு கூப்பிட போற ஓவியம்… அந்த குழந்தைக்கு உயிர் இருக்கு… உணர்வு இருக்கு… அம்மா என்னை வெறுக்கறா… நாம யாரை நம்பி இந்த உலகத்துக்கு வரதுன்னு அந்த உயிருக்கு ஒரு நினைப்பு வந்துட கூடாது திவ்யா… ஐ பெக்… ப்ளீஸ் திவ்யா…” தனது கம்பீரத்தை எல்லாம் விட்டு அவளிடம் கெஞ்சிய கார்த்திகேயனை விழி விரிய பார்த்தாள் திவ்யா!

சாய்ந்து கொண்டிருந்தவளின் வயிற்றை பற்றி மென்மையாக முத்தமிட்டுவிட்டு வெளியே விரைந்தவனை கண் சிமிட்டாமல் பார்த்தாள்… அவனது கண்கள் கலங்கி இருந்ததோ? கார்த்திகேயன் தன்னை காதலித்து மணந்து இருக்க கூடாதா என்று மனம் எண்ண… அந்த எண்ண ஓட்டத்தை பார்த்து அதிர்ந்தாள் திவ்யதர்ஷினி!

***

திவ்யா அந்த செல்பேசி தகவலை பார்த்து கொண்டே இருந்தாள்! கார்த்திகேயன் அலுவலகம் புறப்பட்டு போய் சுமார் ஒரு மணி நேரம் ஆகி இருந்தது! காய்ச்சல் மட்டுப்பட்டு இருந்தது… லேபில் இருந்து ஒரு பெண் வந்து டெஸ்ட்க்கு சாம்பிள் வாங்கி கொண்டு போயிருந்தாள்! ப்ளீஸ் மெசேஜும் சாரி மெசேஜுமாக கார்த்தியிடமிருந்து வந்து கொண்டிருந்த மெசேஜுக்கிடையில் வந்த இந்த தகவலை பார்த்து புருவம் சுளித்து யோசித்தாள்! கார்த்திகேயனுக்கு உணர வைக்க இந்த அளவு தான் இறங்க வேண்டுமா என்ற யோசனை வராமல் இல்லை! செல்பேசியை எடுத்து ஸ்ரீராமுக்கு அழைத்தாள்! சிறிது நேரம் பேசி விட்டு அவனது அறிவுரைகளை கேட்டு விட்டு வைத்தாள்! எழுந்தவளுக்கு தலை சுற்றி கொண்டு வந்தது! மெசேஜ் டைப் செய்து அரவிந்தனுக்கு அனுப்பி வைத்தாள்…

“பத்து நிமிடத்தில் கிளம்பி வருகிறேன்…” மனதின் ஓரத்தில் பயம்!

மங்கையிடம் கூற அவரோ ரெஸ்ட் எடு என்பதிலேயே குறியாக இருந்தார்!

“இல்ல அத்தை… ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவேன்…” தன்நெஞ்சறிய பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னை சுடும்… சுட்டது திவ்யாவுக்கு!

“இல்லம்மா… கார்த்தி கேட்டா ரொம்ப கோபப்படுவாப்ல… வேணாம் திவ்யா… நீ ரெஸ்ட் எடு…” பல நாள் காத்திருந்த சந்தர்ப்பத்திற்காக காத்து கொண்டிருந்த கொக்கு ஒப்புகொள்ளுமா? மங்கையிடம் கெஞ்சி ஒப்புக்கொள்ள வைத்து கிளம்பியும் விட்டாள்! அரவிந்தன் வந்த போது கார்த்திக்கும் அரவிந்தனுகும் இடையில் நடக்கும் பனிபோரை பற்றி தெரியாத மங்கை மனதுக்குள் அவளின் உடல் நிலையை நினைத்து பயந்து கொண்டே மருமகளை சிரித்த முகமாக ஆரோவில் அனுப்பி வைத்தார்!

***

“ரொம்ப அமைதியா இருக்கு அரவிந்த்… இந்த பிளேஸ் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு…” தியான மண்டபத்தை பார்த்து கொண்டே கூறினாள் திவ்யா!

“ஆமா திவ்யா… ரொம்ப அழகு…” திவ்யாவை பார்த்து கண்களில் ஆசை மின்ன கூறினான் அரவிந்த்!

“வீக்லி ஒன்ஸ் வந்துடனும் அரவிந்த் இங்க… எவ்வளவு அழகு…” தன்னை மறந்து அந்த இடத்தை ரசித்தாள் திவ்யா!

“உலக மக்கள் எல்லாம் ஒன்றா இருக்கறதுக்காக ஒரு கமியுனிட்டி லிவிங் இருக்கு திவ்யா… அந்த இடமும் நல்லா இருக்கும்…”

“அங்க போகலாமா அர்விந்த்…”

“ம்ம்ம்… இங்க இருந்து கொஞ்ச தூரம் போகணும்… உன்னை இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்ல கொண்டு வந்து விட சொல்லி இருக்காங்க அம்மா… அதனால இன்னொரு தடவை கூட்டிட்டு போறேன் திவ்யா…” அடுத்த முறை வெளியே செல்ல அடி போட்டு வைத்தான்!

“ம்ம்ம் ஓகே…” மனமே இல்லாமல் அந்த இடத்திலிருந்து வந்தவளை கண்கொட்டாமல் பார்த்தான் அரவிந்தன்! என்ன அழகு! ச்சே… தனது அவசர புத்தியை நினைத்து அவனே வருந்தினான்! அவசரப்பட்டு பேசாமல் இருந்து இருந்தால் இந்நேரம் இந்த அழகு அனைத்தும் தனக்கே சொந்தமாகி இருக்கும் என்ற நினைவு அவனை பாடாய் படுத்தியது! செல்பேசி அழைக்க எடுத்து பேசி விட்டு வைத்தான்!

“ஐபோரா அரவிந்த்…” அந்த ஐபோனை பற்றி கேட்க உற்சாகமாக அவனும் விளக்கினான்!

“ஹேய்… ஒரு நிமிஷம் கொடு… பார்த்துட்டு தரேன்…” என்று வாங்கி ஆசையாக பார்த்தாள்!

“திவ்யா… டூ யு லைக் இட்…” அவளை தாபமாக பார்த்து கொண்டே…

“ம்ம்ம்… யா அரவிந்த்… கார்த்திக் கிட்ட சொல்லணும்…” அவன் தன்னை பார்ப்பதை உணராமல்! கொஞ்சம் பொறு அரவிந்த் என்று அவனது மனம் கடிவாளமிட்டது! இவளுக்கு திருமணமாகி விட்டது… அதில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டுமென்றால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றால் முடியாது… பொறுமை பொறுமை என்று அவனது மனம் கூச்சலிட்டது!

“அரவிந்த்… இந்த வால் பேப்பர் நல்லா இருக்கே… டௌன்லோட் பண்ணிக்கட்டா…” ஆசையாக கேட்டவளிடம்…

“ஹேய் திவ்யா… இதை போய் என்கிட்டே கேக்கணுமா? உன் இஷ்டம் ப்பா…” அவன் அனுமதி கொடுக்கவும் சிறு குழந்தையாக அந்த போனை வைத்து விளையாடி கொண்டிருந்தாள்!

வீட்டிற்கு வெளியே அவன் இறக்கி விட்டு சென்றபோது இரவு மணி ஏழாகி இருந்தது! மாலை வரை கார்த்திகேயனை சமாளித்த மங்கை அதற்க்கு மேல் மறைக்க முடியாமல் கூறி இருந்தார்! அரவிந்தனுடன் வெளியே சென்று இருக்கிறாள் என்பதை கேட்ட கார்த்திகேயன் கோபத்தின் உச்சிக்கு சென்றான்! அவளது செல்பேசிக்கு அழைத்த போது சைலென்ட் மோடில் இருந்த போனை அவள் எடுக்காமல் விட, அவளது உடல்நிலையை நினைத்து கடுப்பின் எல்லைக்கு சென்று இருந்தான்! இந்த நேரத்தில் இவளுக்கு என்ன நெஞ்சு துணிவு இருந்தால் இப்படி செய்வாள் என்று கோபம் கொதித்தது கார்த்திகேயனுக்கு! அப்போதுதான் ஜானகி அழைத்து விஷயத்தை உறுதி செய்து இருந்தாள்! அந்த சந்தோஷத்தை அனுபவிக்க விடாமல்… ச்சே என்ன வாழ்க்கை இது என்ற வெறுப்பு கரை கடந்தது!

கார்த்திக் அறையில் கோபத்தில் உறுமி கொண்டு நடந்து கொண்டிருக்க… திவ்யா காரை விட்டு இறங்கியவுடனே ஸ்ரீராமுக்கு அழைத்தாள்!

“ஸ்ரீ… ஆச்சா…”

“ம்ம்ம் ஆச்சு திவி…”

“ஏதாவது கிடைச்சுதா?” ஆர்வமாக கேட்டாள் திவ்யா!

“செம மேட்டர்மா…”

“என்ன சொல்லு…”

“டீலிங் வச்சு இருக்கற ஆள், அப்புறம் எங்க ஸ்டாக் வச்சு இருக்கான்… யாருக்கெல்லாம் சப்ளை பண்றான்னு எல்லாம் கலெக்ட் பண்ணியாச்சு… இனி இதை உறுதிப்படுத்தறது ஒன்று தான் வேலை…”

“அப்புறம்… அந்த எக்ஸ்பையர்ட் மெடிசின் விவகாரம்…”

“ம்ம்ம்… அது சம்பந்தமாவும் ஸ்கூப் கிடைச்சு இருக்கு திவி… இன்னைக்கு பேசி இருக்கான்…”

“வாவ்… இன்னைக்கு முழுக்க இருந்தும் தனியா தனியா போய் பேசிகிட்டே இருந்தான் ஸ்ரீ… நினைச்சேன்… சரி ரெக்கார்டிங்ஸ் எல்லாம் wav பைலா பண்ணி எனக்கு இப்போவே அனுப்பி வை ஸ்ரீ…”

“ஓகே டா… ஒரு நிமிஷம்… அனுப்பி வெச்சுடறேன்… சரி அண்ணன் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு தானே போன…”

“ம்ம்ம்… சொல்லிட்டேன் ஸ்ரீ… அரவிந்த் கூட வெளிய போறேன்னு… எங்க போறன்னு சொல்லி இருந்தேன்… அதான் உன்கிட்ட ஜிபிஆரேஸ் டிராக்கிங் இருந்துதில்ல… அதான் கொஞ்சம் துணிச்சலா போயிட்டேன்…”

“ஆனாலும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து இருக்க திவ்யா… அண்ணா கோவுச்சுக்காம இருந்தா சரி…”

“சரி நீ எங்க இருக்க…”

“ம்ம்ம்… இன்னும் அரை மணி நேரத்துல உன் வீட்ல இருப்பேன் திவி…”

“ஓகே சீக்கிரம் வா…”

பேசி கொண்டே உள்ளே வந்தவள் கார்த்தியை கவனிக்கவில்லை! அவனது முகம் கோபத்தில் சிவந்து இருந்தது!

உடல் ஓய்வை யாசிக்க, முகம் கழுவி விட்டு வரலாம் என்று குளியலறையில் காலை எடுத்து வைத்தவளை தடுத்தது ஒரு குரல்!

“நில்லு…” கடுமையான குரலில் கூறியவனை அப்போதுதான் பார்த்தாள் திவ்யா!

“இதென்ன சத்திரமா சாவடியா? அவங்க அவங்க இஷ்டத்துக்கு வர்றதுக்கும் போறதுக்கும்… குடும்பம் நடக்கற இடம்… அதை புரிஞ்சுக்கோ”

“இப்போ அதுல என்ன குறைஞ்சு போச்சு கார்த்திக்…”

“என்ன குறையல… என்ன தைர்யம் இருந்தா நான் சொல்ல சொல்ல கேட்காம அவன் கூட வெளிய போயிருப்ப…” காலையில் அவ்வளவு ஆசையாக பேசி கெஞ்சியவனா இவன்? திவ்யாவின் சுயமரியாதை தானாக விழித்தது!

“யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல…” முகத்தை கல் போல வைத்து கொண்டு! தூண்டி விட்ட கோபம் கண் மண் தெரியாமல் வேலை காட்ட அடிக்க ஓங்கிய கையை அப்படியே கீழே இறக்கினான்! அவளது உடல் நிலையை எண்ணி! எவ்வளவு கெஞ்சி இருப்பேன்… எந்த அளவு இறங்கி போய் பேசி… ச்சே… பெண்ணா இவள்?

“திவ்யா… ஒழுங்கா பேசு… நீ என் குழந்தைய சுமந்து கிட்டு இருக்கறதுனால தான் இவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்கேன்…” அவனது கோபம் அவளையும் தூண்டி விட்டு இருக்க…

“அது உன் குழந்தைதான்னு என்ன ஆதாரம்…” சிறுபிள்ளையாக வார்த்தையை தவற விட்டாள் திவ்யா! பேசி முடிக்கும் போதே சுருண்டு படுக்கையில் கிடந்தாள்! அடி அவளது கன்னத்தை பதம் பார்த்து இருந்தது!

“ச்சே… நீயெல்லாம் ஒரு பெண்ணா? என்னை பழி வாங்குறதா நினைச்சு உன்னை நீயே தரத்தை குறைச்சுகிட்டு… ச்சே…” தலையில் கை வைத்து கொண்டு வெறுப்பின் விளிம்பு நிலையில் இருந்து பேசினான்! அப்போதுதான் அவளுக்குமே தான் பேசிய வார்த்தையின் வீரியம் புரிந்தது! ஆனாலும் அவளால் சட்டென தனது சுயமரியாதையை விட்டு கொடுக்க முடியவில்லை!

“நான் தான் பொண்ணே இல்லையே… அப்புறம் ஏன் கார்த்திக் இன்னமும் என்னை இங்க வச்சு இருக்க… என்னை எங்க வீட்டுக்கு அனுப்பிடலாமே…” வார்த்தைகளில் வலி!

“ஆமா… அதை தான் செய்ய போறேன்… நாளைக்கு முதல் காரியம் அதுதான்… உன்னை கொண்டு போய் உங்க வீட்ல விடறதுதான்… போதும் சாமி… போதும்… கல்யாணம் பண்ணதும் ஆச்சு… என் உயிர் போனதும் ஆச்சு… வெறுத்து போயிட்டேன்… எனக்கு வேற எதுவுமே வேணாம்… நிம்மதி தான் வேணும்… அங்க தொழில்ல ஆயிரம் பிரச்சனை… வெளிய ஆயிரம் பிரச்சனை… வீட்லயாவது நிம்மதியா இருக்கலாம்னா இங்கயும் பிரச்சனை… நானும் மனுஷன் தானே…” தலையில் கை வைத்து கொண்டு படுக்கையில் அமர்ந்தவனை பார்த்த போது மனது வலித்தது!

இன்று வேண்டுமானால் அவன் மேல் இருந்த காதல் வெறுப்பாக ஆகி இருக்கலாம்… ஆனால் ஒரு கட்டத்தில் அவனை காதலித்தவள் தானே! ஷாலினியை நினைத்து தன் மனதை அடக்கியவள் தானே! இன்று அவனே தனது கணவனாக வாய்த்தும் தன்னால் ஏற்று கொள்ள முடியாமல் இருக்க காரணம்… கார்த்திகேயன் தன்னை மணந்ததே, அவன் செய்த தவறை சரி செய்தானே… கடமைக்காக மணந்த தன்னிடம் எப்படி காதலை எதிர்பார்க்கலாம் என்று மனம் குரங்கு பிடிபிடித்தது!

“சரி கார்த்திக்… உனக்கு அந்த கஷ்டம் வேண்டாம்… நானே போயிடறேன்…” என்று நினைத்து கொண்டு கடைசியாக அவனிடம்…

“நான் ஒன்னும் ஊர் சுத்த போகலை… என் மேல நீங்க ஒரு குற்றசாட்டு வைத்தீங்க… ஞாபகம் இருக்கா? நான் முதுகுல குத்திட்டேன்னு…” என்று சொல்லி இடைவெளி விட்டாள்… கார்த்திகேயன் நிமிர்ந்து அவளை பார்த்தான்!

“அதை நான் தப்புன்னு நிரூபிக்கத்தான் இவ்வளவு நாள் காத்துகிட்டு இருந்தேன்… இதை கேளுங்க…” என்று அவளது செல்பேசியின் மெயில் பாக்ஸில் வந்து ஸ்ரீ அனுப்பி இருந்த ஆதாரங்களை ப்ளே செய்தாள்! அரவிந்தனுக்கும் இன்னொரு போதை மருந்து வியாபாரிக்கும் இடையிலான உரையாடல் மற்றும் காலாவதியான மருந்துகளை மறுவிற்பனை செய்வது தொடர்பான உரையாடல்கள்… இதற்காகத்தானே கிருஷ்ணாவும் அவனும் காத்து கொண்டிருந்தது! மனதுக்குள் பரபரப்போடு கூடிய சந்தோஷத்தோடு…

“இது எப்படி கிடைத்தது…” என்று அவன் நிமிர்ந்து கேட்க…

“அது உங்களுக்கு அவசியம் இல்லை கார்த்திக்… உங்களுக்கு எப்படி வெறுத்து போச்சோ… அதை விட அதிகமா வெறுத்து போய் தான் நானும் இருந்தேன்… இனிமே நீங்களும் வேண்டாம்… எனக்கு இந்த குழந்தையும்…” என்று கூற வந்தவள் ஒரு நிமிடம் நிறுத்தி…

“வேண்டாம்…” என்று முடித்தாள்!

“அப்படீன்னா…”

“எனக்கு என் லட்சியம் முக்கியம்…”

“அதுக்காக…”

“நான் போறேன்…”

“அப்போ குழந்தை…”

“எனக்கு வேண்டாம்…”

“என்ன செய்வ…” இயந்திரமாக வந்து விழுந்தன வார்த்தைகள்!

“எவ்வளவோ வழி இருக்கு…”

“உன் வாயல சொல்லு… அதை நான் காது குளிர கேட்டுக்கறேன்…” என்று உணர்ச்சியே இல்லாமல் கூறியவனிடம், மனதை கல்லாக்கி கொண்டு…

“அபார்ஷன் பண்ணிக்குவேன்…” சொல்லி முடிக்கும் போதே கண்களில் பூச்சி பறந்தது! ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டிருந்தான்!

உண்டு எனலாம் இல்லை எனலாம்…

இரண்டும் கேட்டு கண்ணன் சிரிப்பான்…

இணைந்தும் வரலாம் பிரிந்தும் தரலாம்…

உறவை போலே கண்ணன் இருப்பான்…

பனி மூட்டம் மலையை மூடலாம்…

வழி கேட்டு பறவை பாடலாம்…

புதிரான கேள்வி யாதிலும்…

விடையாக கண்ணன் மாறுவான்…

ஒளிந்திருப்பான் எங்கும் நிறைந்திருப்பான்…

அவன் இசை மழையாய் எனை உடன் இணைப்பான்-அந்த…

கண்ணனை கனிவு மன்னனை தினம் பாடிவா அழகே!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 19

வீட்டை விட்டு வெளியே வந்தவள் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள்! எங்கு போவது என்ன செய்வது என்ற குறிக்கோள் இல்லாத நடை... தலையை கையால் தாங்கி முகத்தை மூடி கட்டிலில் அமர்ந்து இருந்தவனை ஒரு முறை முழுக்க பார்த்து விட்டு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்