அத்தியாயம் 20
“ஹேய்… திவி கண்ணா… இங்க பாரும்மா… என்னடா… ஏன் இப்படி செய்த?” ஸ்ரீராம் மாற்றி மாற்றி இந்த கேள்வியை கேட்டு சலித்து விட்டான்… வந்த பதிலோ மௌனம் மட்டுமே… மீண்டும் மீண்டும் அவள் ஜெபித்தது… சென்னைக்கு அழைத்து செல்ல மட்டுமே!
“இங்க பாரு திவி… உன் இஷ்டத்துக்கு இப்படி எல்லாம் செய்தாக்கா நம்ம வீட்டோட கௌரவம் என்ன ஆகுறது? பொண்ண வளர்க்க தெரியாம வளர்த்து வெச்சு இருக்காங்க பாருன்னு எங்களை தான் திட்டுவாங்கம்மா… உன் பிறந்த வீட்டுக்கு இப்படி பேரைத்தான் வாங்கி தர நினைக்கிறியா?” கொஞ்சம் கடுமையாக அவன் கேட்கவும்…
“என்ன நடந்துதுன்னு உனக்கு தெரியாது ஸ்ரீ…” முகத்தை கல்லாக்கி எங்கோ பார்த்து கொண்டு அவள் பதில் உரைக்க…
“கார்த்தி அண்ணாவ பற்றியும் உனக்கு சரியாவே தெரியலை குட்டி…”
“உனக்கு என்ன தெரியும் அவனை பற்றி?” கோபத்தில் வார்த்தை தடிக்க…
“அடிச்சு பல்ல கழட்டிடுவேன் ராஸ்கல்… என்ன அவன் இவன்னு…” அவனுக்குமே கோபம் வந்தது!
“உனக்கு கண்டிப்பா தெரியாது ஸ்ரீ… நான் விரும்பியோ அவன்… அவர் விரும்பியோ இந்த கல்யாணம் நடக்கல… இந்த கல்யாணமே ஒரு விபத்து… அது உனக்கு தெரியுமா?” மனதில் அழுத்தி வைத்து இருந்தது வெளியே வந்தது!
“தெரியும் திவிம்மா… எனக்கு எல்லாமே தெரியும்…” அவனை அதிர்ச்சியாக பார்ப்பது திவ்யாவின் முறையானது!
“என்ன… இப்போ சொல்லி உன் கிட்ட மன்னிப்பு கேட்டு இருப்பாப்ல… இப்போ மறைக்க முடியாதில்ல… ஆம்பிளைன்னா என்ன வேனும்னாலும் செய்யலாம்… எப்படி வேனும்னாலும் போகலாம்… இல்லையா…” ஏளனமாக கூறினாள்!
“அண்ணன் சொன்னது இப்போ கிடையாது… மாமாவ ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ண மறுநாள்… அதாவது உன்னை பொறுத்தவரைக்கும் நீ அந்த நியூஸ் பிளாஷ் பண்ண அடுத்த நாள்… புரியுதா?” என்று அவன் கூறியதை அவள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது முகமே உணர்த்தியது! யாரிடமும் ஒன்றையும் கூறாமல் தான் செய்த தவறை காதும் காதும் வைத்தது போல சரி செய்ய முயன்றான் என்பதுதானே அவளது முதல் குற்றசாட்டு! அடிப்படையே ஆட்டம் கண்டது!
“தெரிஞ்சுமா ஸ்ரீ… நீயும் இந்த கல்யாணத்துக்கு ஒப்புகிட்ட?” ஏற்று கொள்ள கூடாது என்ற உணர்வு!
“கார்த்தி அண்ணன பற்றி முழுசா தெரிஞ்சுகிட்டு பேசு திவி… ஆரம்பத்துல இருந்தே ஏதோ நீயா அவரை பற்றி ஒரு டெம்ப்ளேட் க்ரியேட் பண்ணி வச்சுகிட்டு இருக்க… அப்படி கிடையாது… அவர் ஒரு டைனமிக் பெர்சனாலிட்டி… நினைத்து இருந்தா இந்த கல்யாணத்தை நடத்தாம விட்டிருக்கலாம்… செய்தாப்லையா? இல்லையே…”
“அப்படீன்னா ஆம்பிளைங்கற திமிர்ல அவன்… அவர் பண்ணது தப்பே கிடையாதுன்னு சொல்ல வர இல்லையா… உன் கிட்ட வேற என்ன எக்ஸ்பெக்ட் பண்ண முடியும்? நீயும் ஆம்பிளைதானே…”
“திவிகுட்டி… தப்பு செய்தது நிஜம்… அதை நினைச்சு கார்த்தி அண்ணா எவ்வளவு வருத்தபட்டாங்கன்னு எனக்கு தெரியும்டா… மன்னிப்பு கேக்கறது மனிதத்தன்மைன்னா மன்னிக்கறது தெய்வதன்மை… அதுவும் இல்லாம இப்போ அவர் யாரோ இல்லையே திவி… உன் ஹஸ்பண்ட்… உன்னோட பெட்டர்ஹாப்… இங்க கூட உன்னோட பெண்ணியத்தை பேசி உன் வாழ்க்கைய பாழ் பண்ணிக்காதேம்மா…” ஸ்ரீராம் அவனுக்கு தெரிந்த வரையில் கெஞ்சினான்!
“ஸ்ரீ… உனக்கு என்னோட நிலைமை புரியல… ஒரு பெர்சென்ட் கூட காதலில்லாம… ஒரு குழந்தைய சுமக்கறது எந்த அளவு கொடுமைன்னு உனக்கு புரியலை…” மனதின் அடி ஆழத்தில் தேக்கி வைத்த உணர்வுகளை அவனிடம் கொட்ட ஆரம்பித்தாள்!
“என்ன சொல்ற திவி… எனக்கு புரியலை…”
“கார்த்திக் என்னை கல்யாணம் செய்ததே… அந்த சம்பவத்தால மட்டும் தான் ஸ்ரீ… அந்த தப்பை சரி செய்ய மட்டும் தான்… மற்றபடி காதலோ மண்ணாங்கட்டியோ இல்ல…” குரல் மறுபடி தழுதழுத்து அழுகையில் முடிந்தது!
“அட லூசு… அப்படீன்னு நீயா நினைச்சுகிட்டியா? அண்ணா உன்னை எவ்வளவு லவ் பண்றாங்கன்னு அவங்க கண்ணை பார்த்து கூடவா புரிஞ்சுக்க முடியலை? என்னடா நீ…” ஒரு புதிர் விடுபட்ட உணர்வு அவனுக்கு! ஆக மொத்தம் இவளது பிரச்சனை இதுதான் என்பது புரிந்தது!
“என்ன சொல்ற ஸ்ரீ…” முகம் வியப்பில் ஆழ்ந்தது!
“பின்ன என்னவாம்… அண்ணாவே என்கிட்டே சொன்னது இது… இப்போ இல்லை… கல்யாணத்துக்கு முன்னாடி…”
“ஸ்ரீ…” உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு… நிம்மதியா?
“அட மக்கு மன்டூகமே… அண்ணா உன்னை பார்த்த முதல் பார்வைலேயே அவுட்டாம்… அப்போ அவரும் புரிஞ்சுக்காம இருந்து இருக்கார்… ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல அய்யாவுக்கு புரிஞ்சு இருக்கு… ஆனா நீ அதுக்குள்ளே என்னன்னவோ வேலை செய்துட்ட ஆத்தா…” அந்த சந்தர்ப்பத்தை அவளாலும் உணர முடிந்தது… அந்த இரவு! முகம் சிவந்தது!
“நிஜமாவா ஸ்ரீ… எனக்காக பொய் ஒன்னும் சொல்லலியே… ஏன் நீ இவ்வளவு நாள் ஒண்ணுமே சொல்லல…”
“நீயும் இதை பத்தி என் கிட்ட டிஸ்கஸ் பண்ணவே இல்லையே குட்டி… நீயே சொல்லாதப்போ நான் எப்பிடிடா உன்னோட பர்சனல் உள்ள வருவேன்…” நண்பனை பெருமையாக பார்த்தாள்! அவனே சிரித்தவாறு தொடர்ந்தான்…
“எல்லாரும் வொய்ப்க்கு டிவி வாங்கி தருவாங்க… இங்க ஒரு கூமுட்டை ஆசைபடுதேன்னு ஒரு டிவி கம்பெனியவே விலை பேசி முடிச்சு இருக்காங்க கார்த்தி அண்ணா… அந்த கூமுட்டை யாருன்னு சொல்லு பார்க்கலாம்…” என்று புதிர் போடுவது போல அவளது தலையை தட்டி சொல்லவும், சட்டென்று ஏற்பட்ட மகிழ்ச்சி வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் திணறினாள் திவ்யா!
“நிஜமாவா ஸ்ரீ…”
“ம்ம்ம்… இங்க நட்டநடு ராத்திரில உன்கிட்ட பொய் சொல்லணும்ன்னு எனக்கு வேண்டுதல் பாரு… சரி இப்போ அண்ணா பண்ணது தப்பு இல்லையா…” வேண்டுமென்றே சிரித்து கொண்டு ஸ்ரீ கிளற…
“சில விஷயங்களை மறக்கலாம்ன்னு நினைக்கிறேன் ஸ்ரீ… மன்னிப்புன்னு ஒரு வார்த்தைக்கு அவர் தகுதியானவரான்னு பார்க்கலாமே…”
“இல்லடா… ரொம்ப நொந்து போய்ட்டாப்ல மனுஷன்… பாவம்டா… எவ்வளவு கம்பீரமான பெர்சனாலிட்டி… இன்னைக்கு அப்படியே அவமானத்துல குறுகி போய் இருந்தாத பார்த்தா எனக்கு அப்படியே கோபம் பத்திகிட்டு வந்துச்சு உன் மேல… இப்படியா வீட்டை விட்டு வருவ… என்னவா இருந்தாலும் வீட்டுக்குள்ள தானே இருக்கணும்… நாலு சுவரை தாண்டிட்டாலே அது பொது பிரச்சனை ஆய்டுமே திவி… உனக்கு இது புரியாதா?”
“கொஞ்சம் தான் நொந்து போகட்டும்… ஏன் ஸ்ரீ… எதுக்கெடுத்தாலும் கைய்ய ஓங்கினா எனக்கும் கோபம் வராதா?”
“நீ என்ன பேசின… சும்மா அண்ணன் அடிக்கவே மாட்டாங்க…”
“இதுதான் ஆண்களோட புத்தி… அப்படீன்னா நீங்க தப்பு செய்தா நாங்களும் அடிக்கலாமா?”
“நல்லா அடிப்பா… யார் வேணாம்ன்னு சொல்றது? இப்போ தொண்ணூறு சதவித வீட்டுல நடக்கறது அதுதானே… ஆனா நீ என்ன பேசின? அதை சொல்லு…”
“ஏன் அதை உன் அண்ணன் சொல்லலியா?”
“தோடா… இப்போ மட்டும் என் அண்ணனா? என்னமோ என் கார்திக்குன்னு சொன்ன… என்ன பிரச்சனைன்னு கேட்டதுக்கு ஒரு வார்த்தை கூட சொல்லல… திவ்யா சின்ன பொண்ணு… அவ என்ன பேசி இருந்தாலும் நான் அடிச்சு இருக்க கூடாதுன்னு மட்டும் தான் சொன்னாங்க…” என்று சொல்லவும் ஒரு விதமான குற்ற உணர்வில் தவித்தாள் திவ்யா!
“அபார்ஷன் செய்துக்க போறதா சொன்னேன் ஸ்ரீ… ’ என்று மெதுவாக கூறவும் பற்களை நறநறவென கடித்தான்!
“அறிவு கெட்ட முண்டம்… இதுக்கு எவனா இருந்தாலும் சாத்தி இருப்பான்… உனக்கு என்ன இப்படி ஒரு தைர்யம்… இப்படி எல்லாம் பேச யாரு சொல்லி கொடுத்தா? ஏன் இப்படி நம்ம வீட்டோட மானத்தை வாங்குற?” ஸ்ரீக்கு வந்த கோபத்தை பார்த்து மிரண்டு தான் போனாள்! இதற்கே இந்த கோபம் என்றால் இன்னொரு கேள்விக்கு நிச்சயமாக இவனிடமே அடி கிடைக்கும் தான்… உன்னுடைய குழந்தை தான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று தான் கேட்ட கேள்வியை நினைத்து!
“ஒரு சிலருக்கு அவங்களோட காதல உணர்த்த தெரியாம இருக்கலாம்… கொஞ்சம் கடினமானவங்களா இருக்கலாம்… ஆனா அவங்க தான் ரொம்ப நம்பிக்கைக்கு உரியவங்க திவி… பெரும்பாலான ஆண்களோட இயல்பு அதுதான்… அதுவும் ரொம்ப நேர்மையானவங்க கார்த்தி அண்ணா… உன் விஷயத்துல… வேற யாரையும் நிமிர்ந்து கூட பார்த்தது இல்ல… நிச்சயம் பண்ண ஷாலினி கிட்டேயே எப்படி நடந்து இருக்காங்கன்னு உனக்கே தெரியாதா? அப்படி பட்டவரை நீ புரிஞ்சுக்கலையே… ஒரே ஒரு வார்த்தை தான் சொல்ல முடியும்… கார்த்தி அண்ணா உனக்கு கிடைத்த பொக்கிஷம்… அந்த பொக்கிஷத்தை பத்திரமா வெச்சுக்கறதும் தவற விடறதும் உன் கைல தான்டா இருக்கு…”

forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!