arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 23

அத்தியாயம் 23

visibility 264
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (5 மதிப்பீடுகள்)
பகிர்

வீட்டுக்கும் வாசலுக்குமாக நூறு முறை நடை பயின்று இருப்பாள் திவ்யா… மாலையானது முதல்! வழி மேல் விழி வைத்து காத்திருந்து கண்கள் தான் பூத்து போனதே தவிர கார்த்திகேயன் வந்த பாட்டை காணோமே! மங்கை அவளிடம் ஒரு பத்து முறை விசாரித்து சலித்து அப்போதுதான் கோவிலுக்கு கிளம்பினார்! அவளை காக்க வைத்து எட்டு மணிக்கு அவனது பிஎம்டபிள்யு வெள்ளை மாளிகையில் நுழைந்தது! அவனது கண்களில் சோர்வு தெரிந்தாலும் அதை ஆளும் கலை அவனுக்கு தெரிந்து இருந்தது!

“அம்மா… டிபன் வை…” கைகளை கழுவி கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தான்! வேலை செய்பவர்கள் இரவு வரை இருத்தி கொள்வது அங்கு பழக்கமில்லாததால் திவ்யா அவசரமாக அவனிடம் வருவது போல ஒரு பில்ட் அப் குடுத்தாள்! அடங்கொக்கா மக்கா… இதுக்கு தானே சாயங்காலத்துல இருந்து குட்டி போட்ட பூனையாட்டம் நடந்துட்டு இருக்க… Mrs. மனசாட்சி பேசியது!

“அத்தம்மா கோவிலுக்கு போயிருக்காங்க… இன்னும் வரலை…” அவனது கேள்விக்கு பதில் கூறி விட்டு அவசரமாக அவனுக்கு டிபன் பரிமாறினாள் உடன் அமர்ந்து கொண்டு! அவளை கையமர்த்தி விட்டு தானே டிபன் வைத்து கொண்டான் மௌனமாக!

“ஏன்… நான் பரிமாற கூடாதா கார்த்திக்?” வார்த்தைகளில் வலி! அவளது கேள்வியை கவனித்தவன் சிறிது நேரம் விட்டு…

“எனக்கு பரிமாறி உன்னோட தரத்தை குறைஞ்சுக்க வேணாம்…” ஒரே வார்த்தையில் முடிக்க, அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை! தான் பேசியவற்றை எனக்கே திருப்பி கொடுக்கிறானே! சிறிது நேரம் மெளனமாக அமர்ந்து இருந்தவள்… அவன் மாடிக்கு செல்லவும் அவன் பின்னே சென்றாள்! லுங்கிக்கு மாறி இருந்தான்… கையில் ஒரு புத்தகத்தை எடுத்து படுக்கையில் அமர்ந்து கொண்டான்! அவனுக்கு முன்னால் சென்று மனம் படபடக்க…

“க்கும்…” கனைத்தாள்! என்னவென்று கேட்காமல் கண்களை மட்டும் நிமிர்த்தி அவளை பார்க்க, அந்த பார்வையில் இருந்த அந்நியத்தன்மை அவளை பேச விடாமல் செய்தது! திக்கி திணறி…

“உங்க கிட்ட பேசணும்…” என்று கூறி முடித்தாள்!

“ம்ம்ம்… சொல்லு” எதை பற்றி பேசுவாள்… ஒன்று குழந்தையை கலைக்க போகிறேன் அல்லது இங்கே இருக்க பிடிக்கவில்லை என்று கூறுவாள் என்று எதிர்பார்த்து, அந்த கடுப்பில் கடுமையாகவே வந்து விழுந்தன வார்த்தைகள்!

“அதாவது…” பேச முடியாமல் தயங்கியவளை…

“என்ன… இந்த குழந்தைய அபார்ட் பண்ணனுமா… போ போய் செய்து தொலைச்சுக்கோ…” கடுப்படித்து வைக்க… திவ்யாவுக்கோ பதறி விட்டது!

“ஹய்யோ இல்ல இல்ல…” கண்களில் கலக்கம்! எனது குழந்தை என்ற உரிமை உணர்வில் கண்கள் லேசாக கலங்க…

அவளை கோபமாக பார்த்து விட்டு மறுபடி அந்த புத்தகத்தில் ஆழ்ந்தான்!

“கா… கார்த்திக்…” அவனது அந்த வார்த்தைகளுக்கு பிறகு மிகவும் தயங்கினாள்! பொறுமையற்றவனாக நிமிர்ந்தவன் ஏதாவது பேசும் முன்பே முந்தி கொள்ளலாம் என்றெண்ணி…

“தேங்க்ஸ்…” என்று கூறி விட்டு அவனது முகத்தை ஆர்வமாக பார்த்தாள்! ஒரு இளக்கார வளைவு தோன்றியது அவனது இதழ்களில்!

“எதுக்கு…” தெரிந்தும் தெரியாதது போல கேட்க…

“க்கும்… கா… காலைல… சித்தார்த் சார் சொன்னது… அ… அதுக்கு தான்…” கனைத்து திக்கி திணறி அவள் கூறுவதை கேட்டு…

“ஓ… இதுக்கு தான் பரிமாறவெல்லாம் ட்ரை பண்ணியா…” ஏளனமாக அவன் கூறியது அவளது மனதை தைத்தது!

“கா… கார்த்திக்… நா… நா… நான் உங்க வொ… வொய்ப்… பரிமாற வந்ததுக்கு இப்படி ரீ… ரீசன் கண்டுபிடிக்கறிங்களே…” அவளால் பேச முடியாமல் திணற…

“ஓ… அப்படியா… இப்போ தான் நினைவுக்கு வந்துதா…” கோபத்தில் மிதந்தது அவனது சொல்லம்புகள்! அவளது பார்வையின் வலியை உணர்ந்தவன் மனதிலும் வலி… ஆனால் உடைந்த மனது சட்டென்று ஒட்ட மாட்டேன் என்றது!

எனக்கு எப்போவோ நினைவுக்கு வந்துடுச்சு… ஆனா உனக்கு தான் மறந்துடுச்சு என்று நினைத்து கொண்டவள் ஒன்றும் பேசாமல் தலையணையை எடுத்து கொண்டு சோபாவுக்கு போனாள்! அவளுக்கும் உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தது… கொஞ்சம் பணிந்து போனால் இப்படி எகிறுகிறானே என்று ஆயாசமாக இருந்தது!

சிறுமை கண்டு தவித்தேன்… என் சிறகில் ஒன்றை முறித்தேன்

ஒற்றை சிறகில் ஊனபறவை… எத்தனை தூரம் பறப்பேன்!

அன்பே உனை அழைத்தேன்… உன் அஹிம்சை இம்சை பொறுத்தேன்

சீதை குளித்த நெருப்பில் என்னை… குளிக்க சொன்னாய் குளித்தேன்

அழுத நீரில் கரைகள் போய்விடும்… தெரியாதா!

குறைகள் உள்ளதே மனித உறவுகள்… புரியாதா!

இது கண்ணீர் நடத்தும் பேச்சுவார்த்தை… உடைந்த மனங்கள் ஒட்டாதா!

இது கண்ணீர் நடத்தும் பேச்சுவார்த்தை… உடைந்த மனங்கள் ஒட்டாதா!

இருவருக்குமே மனம் முழுக்க ரணமும் குழப்பமுமாக! சோபாவில் படுத்தவளை கார்த்திகேயனின் செல்பேசி சத்தம் எழுப்பியது!

“சொல்லுங்க…” பேசி கொண்டிருந்தான்!

“…”

“இதுல நான் ஒன்னும் பண்ண முடியாது அங்கிள்… உங்க முகத்துக்காக வேண்டி எவ்வளவோ செய்துட்டேன்… நான் தலையிட மாட்டேன் அங்கிள்…” கறாராக யாரிடமோ பேசி கொண்டிருந்தான்!

“…”

“ப்ளீஸ் அங்கிள்… அரவிந்த் செய்தது தப்பு… அவ்வளவு தான்…” கடவுளே… மாசி மாமாவிடமா பேசி கொண்டிருக்கிறான்! ஹிட் அன்ட் ரன் கேஸ் அந்த அளவுக்கு ஒன்றும் ஸ்ட்ராங் கிடையாதே… என்று எண்ணி கொண்டிருக்கும் போதே செல்பேசியை வைத்து விட்டு மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்தான்!

“அரவிந்த் மேல ஹிட் அன்ட் ரன் கேஸ் மட்டும் தானே இருக்கு…” முகத்தை சாதாரணமாகவே வைத்து கொண்டு கேட்க… கார்த்திகேயனின் பார்வை கூர்மை பெற்றது! புருவத்தை உயர்த்தியவன்…

“இல்ல…” ஒற்றை வார்த்தையில் முடித்தான்!

“பின்ன…” புருவம் முடிச்சிட கேட்டாள்!

“அவனை அரஸ்ட் பண்ணும் போது ஐம்பது கிராம் ஹெராயினோடத்தான் அரஸ்ட் பண்ணி இருக்காங்க…” சாதாரண குரலில் சொன்னதை கேட்டு சட்டென்று எழுந்தாள் திவ்யா! முகம் கேள்வியை சுமந்தது!

“அந்த அளவு அவன் முட்டாள் கிடையாது… இது உங்க வேலை தான்… ரைட்டா…” குறிபார்த்து அடித்தது அவனுக்கு வியப்பையே அளித்தது!

“ம்ம்ம்… யா”

“ஏன் கார்த்திக்…” பிரச்னையை இவன் இழுத்து கொள்கிறானே என்று மனம் அவஸ்தை பட்டது!

“பனிஷ்மென்ட்…”

“யாருக்கு…”

“அரவிந்துக்கு… அப்புறம் அந்த ஷாலினிக்கு…”

“நீங்க யார்… பனிஷ்மென்ட் குடுக்க…” என்று கேட்டவளை வெகு கூர்மையாக பார்த்து…

“குளவியோட இயல்பு கொட்டறது… அந்த இயல்ப மறந்தா அதோட லைப் அவ்வளவுதான்… அதே மாதிரிதான் நானும்… இதுதான் நான்… மாத்திக்கமாட்டேன்…” தெளிவாக சுருக்கமாக கூறி முடித்தவனை பார்த்த போது பய பந்து அடிவயிற்றில் சுருண்டது அவனது அந்த இயல்பை நினைத்து! எல்லா விதத்திலும் இவன் இப்படித்தானோ?

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 24

மேட்டுப்பாளையம் தாண்டி போய் கொண்டிருந்தது கார்த்திகேயனின் பிஎம்டபிள்யு! திருமணமாகி எங்கும் போகாததால் குலதெய்வ வழிபாட்டுக்காக இருவர் மட்டும் போகட்டும் என்று மங்கை கூற கார்த்திகேயன் திவ்யாவை அழைத்து கொண்டு மேட்டுபாளையத்தை அடுத்த வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தான்!வழியில் கடந்து சென்ற பாக்கு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்