arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 3

அத்தியாயம் 3

visibility 928
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.9/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

மணி பதினொன்றை தாண்டி இருந்தது! ஊரே அமைதியாக இருக்க வீட்டில் எரிந்த விளக்குகளும் வந்த குட்டீஸ் சத்தமும் அனைவரும் உறங்காமல் இருப்பதை அறிவித்தது! வைஷ்ணவி வந்திருந்தாள்! கார்த்திகேயனின் உடன்பிறந்த தங்கை… திருமணம் முடித்துச் சென்னையில் இருப்பவள்! இரண்டு வாண்டுகள் மனிஷா, கனிஷ்கர்… அதுவும் இரட்டை… அறுந்த வால் வானரங்கள்! கார்த்திகேயன் உள்ளே நுழைந்த சமயம் இரண்டும் சண்டையில் இறங்கி இருக்க அவர்களைச் சமாளிக்கும் வழி தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருந்தனர் வைஷ்ணவியும் மங்கையும்…

“டேய் பிசாசு… என்னை விடுடா…” என்ற மனிஷாவின் தலைமுடியை பற்றி இழுத்து அவளிடம் சண்டை பிடித்துக்கொண்டிருந்தான் ஐந்து வயது கனிஷ்கர்!

“அப்படீன்னா என்கிட்டே அந்த ப்ளே ஸ்டேஷன் சிடிய குடு…” கனிஷ்கர் அவனது வயதுக்கு தன் சகோதரியை மிரட்டிக்கொண்டிருந்தான்!

“நோ… முடியாது… நீ சீட்… பிராட்… இவ்வளவு நேரம் நீ தானே விளையாண்ட… இப்போ எனக்குக் குடு டா…” மனிஷாவோ விடுவேனா என்று மல்லுகட்ட…

“அதெல்லாம் முடியாது… திவிக்கா எனக்கு வாங்கி தந்தது… நான் யாருக்கும் தரமாட்டேன்… ஒழுங்கா குடுடி…” என்று அடிக்க…

“அம்மா…” என்று அலறினாள் மனிஷா!

“ஏய் பிசாசுங்களா… பன்னிரண்டு மணி ஆகப் போகுது… இப்போ ஏன்டா என் உயிரை வாங்குறீங்க? போய்ப் படுத்துத் தொலைங்களேன்…” வைஷ்ணவி சமாதானபடுத்தும் வழி தெரியாமல் கத்த…

“அப்படீன்னா ஒழுங்கா சிடிய குடுக்க சொல்லும்மா… திவிக்கா குடுத்தது…” கனிஷ்கர் ஒரு பக்கம் இடித்தான்!

“அம்மா… ரெண்டு பேருக்கும் சேர்த்துதானே குடுத்தா அக்கா… இவன் என்னம்மா எனக்குக் குடுக்கவே மாட்டேங்கறான்…” மனிஷா ஒரு பக்கம் இடிக்க அவளுக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை! தலையில் கை வைத்து அமர்ந்தபோதே வாண்டுகள் இரண்டும் தங்களது மாமனை பார்த்தன!

“ஹய் மாமா…” இரண்டும் கோரசாகக் கத்த… வேகமாக வந்த கார்த்திகேயன் இருவரையும் தூக்கி தட்டாமாலை சுற்றினான்!

“ஹேய்ய்ய்ய்யி செல்லக் குட்டீஸ்… எப்போ டா வந்தீங்க?” மகிழ்ச்சியோடு வினவ…

“காலைலேயே வந்துட்டோம் மாமா… ஒன்னு தெரியுமா… இன்னைக்கு நாங்க ஊசுட்டேரி போனோமே…?” என்று துள்ளி கொண்டு மனிஷா கூற, அதற்கு…

“அப்படியா தங்க குட்டி…” என்று சிறுபிள்ளையாக மனிஷாவிடம் கதை கேட்டான் கார்த்திகேயன்!

“ஆமா மாமா… இன்னைக்கு முழுசா நாங்க சம்பூர்ணால தான் விளையான்டோம்… அது தெரியுமா?” என்று கனிஷ்கர் கூற…

“அச்சோ… மாமாவ விட்டுட்டே போயிட்டீங்களா? மாமா பாவம் தானே… போ உங்க ரெண்டு பேர் கூடவும் டூ…” விளையாட்டாக வாண்டுகளிடம் கூறஅதை கேட்ட மனிஷா…

“ஏன் மாமா… கூப்பிட்டா மட்டும் நீ வந்துட போறியா? ஏன் மாமா இப்படி ரீல் சுத்தற?” என்று கேலியாகக் கேட்டு விட்டுச் சிரிக்க…

“ஆஹா… என் பட்டுத் தங்கத்துக்கு தெரிஞ்சு போச்சா…” என்று கூறி சிரித்து விட்டு இரண்டு வாண்டுகளையும் அனைத்து கொண்டு முத்தம் தர…

“ச்சீ போ மாமா எச்சி…” என்று துடைத்து விட்டு ஓடினான் கனிஷ்கர்!

அவன் ஓடுவதை பார்த்துச் சிரித்த கார்த்திகேயன்… மனிஷாவை பார்த்து…

“ஏன்டா குட்டி… நீ ஓடலியா?” கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்து கொண்டே கேட்ட மாமனின் கழுத்தை கட்டி கொண்டு…

“ஐ லவ் மை மாமா…” என்று மனிஷா குட்டி கொஞ்ச அந்த மழலையில் மயங்கிய அண்ணனைப் பார்த்து…

“அண்ணா மயங்கிடாத… அந்தக் குட்டி பிசாசுக்கு எதாச்சும் காரியம் ஆகணும்னா தான் இப்படி கொஞ்சும்…” என்று சிரித்த தங்கையைப் பார்த்து…

“என் செல்லத்துக்கு நான் என்ன வேணும்னாலும் செய்வேன்… உனக்கு என்ன போச்சு வைஷு… நீ சொல்லுடா கண்ணா… உனக்கு என்ன வேணும்?” என்று தன கழுத்தை கட்டி கொண்டிருந்த மனிஷாவை பார்த்துக் கேட்க…

“ஒண்ணுமில்ல மாமா… அந்த கூஸ் தான் திவிக்கா குடுத்த ப்ளே ஸ்டேஷன் சிடிய தர மாட்டேங்கறான்… எனக்கு அது மாதிரி… டூ… ம்ஹூம்… இல்ல… இல்ல… டென் வாங்கி தா மாமா…”

“இவ்வளவு தானா… நாளைக்கு நாம சண்டே மார்கட் போலாம்… அப்போ செல்லம் என்னவெல்லாம் கேக்கறீங்களோ எல்லாமே வாங்கி தருவேனாம்… ஓகே வா…” என்று கொஞ்சி கொண்டே சொன்ன மாமனை பார்த்து கனிஷ்கர் கோபமாக…

“மாமா… எனக்கு…” கோபமாகக் கேட்க ஆரம்பித்தவன் அழுவது போல் முடிக்க…

“உனக்கும் தான் செல்லம்…” என்று சிரித்து கொண்டே…

“ஓகே…” என்று கோரசாகக் கூறி விட்டு மாற்றி மாற்றி முத்தம் குடுக்க சிரித்து கொண்டே பெற்று கொண்டான் கார்த்திகேயன்! முத்தம் குடுத்துவிட்டு யோசித்த கனிஷ்கர்…

“மாமா அப்படீன்னா திவிக்காவுக்கு…” வேண்டுகோளை வைத்தான்…

“ஓகே… திவிக்காவுக்கும் சேர்த்தே வாங்கிடலாம்… ஓகே வா…”

“ஹய்ய்ய்யய்யி… தேங்க்ஸ் மாமா…” என்று இன்னும் ரெண்டு முத்தத்தைப் பதிக்க…

“ஓகே ஓகே… மணி பன்னிரெண்டாகப் போகுது… ரெண்டு பேரும் போய்ச் சீக்கிரம் படுங்க… யார் முதல்ல தூங்குறீங்களோ அவங்களுக்கு நாளைக்கு ஸ்பெஷல் ப்ரைஸ்…” கார்த்திகேயன் ஆசை காட்ட…

“ஹாய்ய்ய்ய்யய்யி ஜாலி ஜாலி…” வாண்டுகள் இரண்டும் கத்தி கொண்டு அவர்களது அறைக்குச் சென்று போட்டி போட்டுக் கொண்டு இழுத்து போர்த்தி கொண்டு…

“மாமா… நான் தான் பர்ஸ்ட்…” கனிஷ் கத்த…

“இல்ல மாமா… நான் தான் பர்ஸ்ட்…” மனிஷ் பதிலுக்குக் கத்தினாள்!

அதைக் கேட்டுச் சிரித்து விட்டு…

“யார் பேசாம தூங்கறீங்ளோ அவங்களுக்கு தான்…” பதிலுக்கு வெளியிலிருந்து சத்தம் குடுக்க…

“ஓகே ஓகே…” என்று கத்தி விட்டு நிஜமாகவே உறங்கத் தொடங்கினார்கள் இருவரும்! இரண்டு குழந்தைகளும் ஒருவர் மேல் ஒருவர் கால் போட்டுக் கொண்டு உறங்குவதை சிறிது நேரம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் லைட்டை நிறுத்தி விட்டு ஏசி அளவை குறைத்து வைத்து விட்டுக் கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தான்! வந்தவன் வைஷ்ணவியை பார்த்து…

“நல்லா இருக்கியாடா…” என்று வாஞ்சையுடன் கேட்க…

“ஹஹா… அண்ணா இப்போ தான்  ? பாரும்மா அண்ணன…” சிரித்து விட்டுத் தாயை துணைக்கு அழைத்தாள்!

“ஆமா வைஷு… இனிமே எங்களுக்கு இந்தக் குட்டீஸ் தானே முக்கியம்…” என்று சிரித்து விட்டு, “மாப்பிள்ளை எப்படிம்மா இருக்கார்? வீட்ல எல்லாரும் சௌக்கியமா?”

“நல்லா இருக்காங்கண்ணா… ஆனா அதிசயமால்ல இருக்கு… எங்களையெல்லாம் ஞாபகம் வெச்சுட்டு கேக்கற?” சிரித்துக்கொண்டே வாரினாள்!

“ஹேய் போக்கிரி… நான் உங்களையெல்லாம் கேக்காம வேற யார கேப்பேனாம்?” என்று அவளது தலையைத் தட்ட…

“உனக்குத் தான் உன் மில் இல்லைன்னா அந்த ஆபீஸ் தவிர வேற ஒண்ணுமே தெரியாதேன்னா… அதான் கேட்டேன்…” என்று சிரிக்க…

“ஓகே ஓகே ரொம்ப வாராத ஆத்தா… நாளைக்கு எல்லாரும் வெளிய போகலாம் ஓகே வா?”

“ஹஹா ஓகே… சரி உன் பேச்சுவார்த்தை எந்த லெவல்ல இருக்குண்ணா?”

“எது?” என்றான் குழப்பமாக…

“நான் என்ன அமெரிக்க பொருளாதார பேச்சுவார்த்தைய பற்றியா கேட்கப் போறேன்… ஷாலு கூடத் தான்…” என்று புன்னகையோடு கேட்க அவனை முந்திக் கொண்டு மங்கை புலம்ப ஆரம்பித்தார்!

“வைஷு அதைக் கேக்காத… அவன் அந்தப் பொண்ணு கிட்ட பேசக் கூட மாட்டேங்கறான்… அது புலம்புதுடா… எனக்குத் தான் சங்கடமா இருக்கு…” ஆரம்பிக்க…

“அம்மா… பன்னிரண்டு மணிக்கு உன் புலம்பலை ஆரம்பிச்சுட்டியா… வேணாம்மா… ஷாலினி கிட்ட பேசிட்டு தான் வரேன்… நீ உன் எப்எம்மை ஸ்டாப் பண்ணு…” என்று முடித்து விட்டு அறைக்கு ஓட எத்தனிக்க…

“அண்ணா… உனக்கெல்லாம் அமைதியா இருக்கற பொண்ணுங்க சரியே வராது… நீ பண்ற ரோதனைக்கு உன்னை ட்ரில் வாங்குற பொண்டாட்டி தான் வரணும்… வேணும்னா நான் ஷாலினிக்கு திவிய விட்டு கிளாஸ் எடுக்கச் சொல்றேன்…”

“நீ என்னமோ பண்ணு… இப்போ என்னை ஆள விடு ஆத்தா… நான் போய்ப் படுக்கப் போறேன்…” என்று சிரித்து விட்டுத் தலையைத் தட்டி விட்டுப் போனான்!

விதியும் பார்த்துச் சிரித்தது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 4

“ஹாய் வைஷு... காலை வணக்கம்...” என்று ஆங்கிலம் பாதி தமிழ் பாதியெனச் சிரித்து கொண்டே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு அன்றைய செய்தித்தாளைப் புரட்டினான் கார்த்திகேயன்! “அண்ணா... என்ன இன்னைக்கு செம மூட்ல இருக்க... எது கேட்டாலும் கிடைக்கும் போல...”…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

உங்கள் கருத்தைப் பகிருங்கள்