arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 6

அத்தியாயம் 6

visibility 210
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

வைஷ்ணவியே வலுகட்டாயமாக திவ்யாவை அலங்கரித்தாள், வைஷ்ணவியின் அறையிலேயே ! பத்து நாளில் வைஷ்ணவிடம் அவள் சமாதானமாகி இருந்தாலும் உள்ளுக்குள் கார்த்திகேயனை நினைத்து கொதிக்காமல் இருக்க முடியவில்லை! அவன் பேசிய விதம் மட்டும் காரணமல்ல… அவனது செயல்களும் தான்! கிடைத்த ஆதாரங்கள் எப்போது என்னை உலகத்திற்கு பிரசவம் செய்ய போகிறாய் என்று கேட்டு கொண்டிருந்தது! இந்த நிலையில் இந்த பெண் பார்க்கும் படலம் தேவையாஎன்று உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தது!

நீளமான தலைமுடி இருந்தாலும் அதை எப்போதும் விரும்பியதில்லை திவ்யா… ஆனால் குணவதியின் மிரட்டலுக்கு பயந்து அதை மட்டும் தொடாமல் இருந்தாள்! இல்லையென்றால் அது எப்போதோ கத்திரிக்கு இரையாகி இருக்கும்! இப்போது வைஷ்ணவி அவளை பார்த்து அயர்ந்து போனாள்! என்ன அழகு! எங்கே மறைத்து ஒளித்து வைத்திருந்தாய் பெண்ணே இவ்வளவு அழகையும் என்று மனதிற்குள் மலைத்தாள்! திவ்யா பார்க்க முன்னமே மெழுகு பொம்மை போல இருப்பாள்! இப்போதோ டிசைனர் புடவையில் அளவாக சிறு நகைகளே அணிந்து முடியை தளர பின்னி மல்லிகை சரத்தை வழிய விட்டிருந்தவளை பார்க்க இரு கண்ணும் போதாமல் பார்த்தாள் வைஷ்ணவி!

“திவி… எனக்கே ஆசையா இருக்குடா… உன்னை பார்த்தா… ச்சே நான் ஆம்பிளையா பிறக்காம போயிட்டேனே!” என்று விளையாட்டாக கூறி பெருமூச்சு விட்டவளை பார்த்து சிரித்து…

“போங்க அண்ணி… உங்களுக்கு வேற வேலை இல்ல…”

“ஹே… எங்க ஊர்க்கு தான் போக போற! அரவிந்த் அண்ணாக்கிட்ட… பார்த்து என்னை தாஜா பண்ணி வெச்சுக்கோ திவி…” என்று வேடிக்கையாக கூறியவளை உள்ளுக்குள் வருத்தத்துடன் பார்த்தாள்!

“அண்ணி… இன்னும் ரெண்டு நாள்ல இப்படியே என் கிட்ட பேசுவீங்களா? கண்டிப்பா முடியாது அண்ணி உங்களால…” உள்ளுக்குள் மருகினாள் திவ்யா! வைஷ்ணவியின் செல்பேசி அழைக்க…

“ஹலோ… சொல்லுண்ணா…”

“…”

“ம்ம்ம்… காலைலேயே நல்லபடியா ஹோமம் முடிஞ்சுது”

“…”

“இங்க எல்லாம் ரெடி அண்ணா… மோஸ்ட்லி எல்லாரும் வந்துட்டாங்க… மாமா அத்தை எல்லாம் கோயிலுக்கு போய் இருக்காங்க… வந்தவுடனே கேக் கட் பண்ணிடலாம் அண்ணா…”

“…”

“ஓகே ண்ணா… வச்சுடறேன்…”

செல்பேசியை வைத்து விட்டு திவ்யாவை பார்த்து புன்னகைத்து கொண்டே…

“அரவிந்த் அண்ணா வந்துட்டு இருக்காங்க திவி!” அதை கேட்டு பெரிய உற்சாகம் எதுவும் வரவில்லை!

“ஓ… அப்படியா அண்ணி…” சுரத்தே இல்லாமல் வந்தது வார்த்தைகள்!

“கார்த்தி அண்ணா கூட தான் வர்றாப்ல திவி… கார்த்தி அண்ணா தான் சொன்னாங்க…” சாதாரணமாக கூறி விட்டு வைஷ்ணவி திவ்யாவின் சேலை கொசுவங்களை சரி செய்ய…

கார்த்திகேயன் வருகிறானா? மனம் பரபரத்தது! திமிர் பிடித்த வில்லன் இங்கேயும் வருகிறானா? எதற்காக அவன் வர வேண்டும்?

“இது வரைக்கும் கார்த்தி அண்ணா அதிகம் இங்க வந்தது இல்ல திவி… எந்த பங்க்ஷன்னாலும் அம்மா தான்… அப்பா இருந்த வரைக்குமாவது அண்ணா கொஞ்சம் ப்ரீயா வருவாங்க திவி… அப்பா நாலு வருஷத்துக்கு முன்னால ஹார்ட் அட்டாக்ல போனதுக்கு அப்புறம் அண்ணன ப்ரீயா பார்க்கவே முடியல திவி… எப்போ பாரு ஓட்டம் தான்… அம்மா தான் நொந்து போய்ட்டாங்க…” வைஷ்ணவி அவளது அண்ணனின் புராணத்தை பாடி கொண்டிருக்க அவனை பற்றிய செய்திகளே அவளது கோபத்தை மேலும் வளர்க்க எண்ணெய் ஆனது!

“நொந்து போக வேண்டியதுதான்… இப்படி ஒரு ஆள பெற்றதுக்காக! ஆனால் பாவம் அந்த ஆண்ட்டி என்ன பண்ணுவாங்க… இவங்களுக்கெல்லாம் ஒன்றுமே தெரியாத போது… அவன் எங்கே சொல்ல போகிறான்? அவனது வியாபாரம் என்னவென்று இவர்கள் அறிவார்களா? அறிந்தால் ஆண்ட்டியின் மனம் என்னவாகும்? பாவம் வைஷு அண்ணி…” மனதுக்குள் வருத்தப்பட்ட திவ்யா…

“அண்ணி… போதும் போதும்… இப்படி ஒரு பையன் இருந்தா எந்த அம்மா தான் நொந்து போக மாட்டாங்க…” என்று கிண்டலாக கூறுவது போலவே கூற அதை கேட்டு சிரித்த வைஷ்ணவி…

“போக்கிரி… ஆனா அண்ணா தொழில்ல எங்கயோ போய்ட்டாங்க… அத்தனைக்கும் காரணம் அண்ணாவோட டெடிகேஷன் அப்புறம் அர்விந்த் அண்ணாவும் தான் திவி…” அர்விந்தையும் விட்டு கொடுக்காமல் பேசினாள் வைஷ்ணவி!

“ஐயோ அண்ணா அண்ணான்னு… எனக்கு காது வலிக்குது… சரியான பீத்தல் பீதாம்பரமப்பா…” என்று சிரிக்க அவசரமாக உள்ளே வந்த குணவதி…

“வைஷு… அண்ணா அண்ணி கோயில்ல இருந்து வந்துட்டாங்க… உன்னை தான்டா கேக்கறாங்க… அப்புறம் மைசூர் பா பதம் வந்துடுச்சு… அது போதுமான்னு பாரு கண்ணா… அப்புறம்…” மூச்சு விடாமல் பேசியவரை பார்த்து சிரித்த வைஷ்ணவி…

“ஹய்யோ அத்தை… பார்த்து பார்த்து கொஞ்சம் மூச்சு விடுங்க… இதோ நான் வந்துடறேன்…” என்று அவருடன் விரைந்தாள்!

அவள் போன இரண்டு நிமிடங்களுக்குள் கதவு திறக்கும் ஓசை கேட்க திவ்யா திரும்பாமல்…

“மறுபடியும் பீத்தல் பீதாம்பரத்த ஆரம்பிக்காதீங்க அண்ணி… மீ ரொம்ப பாவம்… அண்ணன் ஒரு கோயில், அண்ணன் ஒரு ஆலயம்ன்னு… எப்பா… முடியல…” புன்னகையுடன் சொல்லி கொண்டே திரும்ப…

கதவில் சாய்ந்து கொண்டு கைகளை கட்டியபடி கண்களில் மின்னலான சிறுபுன்னகையுடன் கார்த்திகேயன்! மூச்சு விட மறந்தாள் திவ்யா!

அத்தியாயம் ஏழு

“ஹாய் திவ்யா!” புன்னகையோடு விளித்தவனை பார்த்து அவளால் புன்னகைக்க முடியவில்லை! மனதில் அவன் பொதுவாக என்று கூறிய வார்த்தைகளை விட அவனது சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளே நினைவுக்கு வந்து அவளை கடுகடுக்க வைத்தது! முறைத்து விட்டு வெளியே போக எத்தனிக்க…

“அண்ணி வெளிய இருக்காங்க…” அவனது முகத்தை பார்க்காமல் எங்கோ பார்த்து கொண்டு அவள் கூறினாள்! …

“ம்ம்ம்… தெரியும் வைஷுவ பார்த்துட்டு தான் வர்றேன்…” என்றும் கூறி புன்னகைக்கவும்… பின் ஏன் வைஷு அண்ணியின் அறைக்கு இவன் வருகிறான் என்று மனம் கடுத்தது! அறிவோ… அவனோட தங்கையோட அறைக்கு வர்றதுக்கு யார்கிட்ட திவி அனுமதி வாங்கணும்? என்ற அதிமுக்கியமான கேள்வியை எழுப்பி அவளை அடங்கு அடங்கு என்று கூறியது!

“ஏன் திவ்யா… இன்னும் கோபம் போகவில்லையா?” ஒரு கையால் வழியை மறுத்து கேட்டவனை பார்த்து…

“வழிய விடுங்க சார்… எனக்கு வேலை இருக்கு… நான் போகணும்…”

“ஆமாம்ல… நிறைய வேலை இருக்கு… வா ஹாலுக்கு போகலாம்… அங்க தான் அரவிந்த் இருக்கான்!” குறும்பாக கூறி விட்டு புன்னகைத்தபோது அவளால் வெட்கப்பட முடியவில்லை! முகத்தை திருப்பி கொண்டவளை பார்த்து மீண்டும் புன்னகைக்க அவனை முறைத்து விட்டு வெளியேறினாள்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 7

வீடு திருவிழா கோலம் பூண்டு இருந்தது! விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளும் அமர்ந்து பேசி கொண்டிருந்த பெரியவர்களுமாக... பெரியவர் ராஜகோபாலுக்கு அறுபது வயது நிறைந்த விழா என்பதால் மிக முக்கியமானவர்கள் மட்டுமே வந்திருந்தனர்! வந்திருந்த அனைவரும் கார்த்திகேயனை மரியாதையுடன் பார்த்ததை வைத்தே அவனுக்கான…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்