arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 7

அத்தியாயம் 7

visibility 794
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

வீடு திருவிழா கோலம் பூண்டு இருந்தது! விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளும் அமர்ந்து பேசி கொண்டிருந்த பெரியவர்களுமாக… பெரியவர் ராஜகோபாலுக்கு அறுபது வயது நிறைந்த விழா என்பதால் மிக முக்கியமானவர்கள் மட்டுமே வந்திருந்தனர்! வந்திருந்த அனைவரும் கார்த்திகேயனை மரியாதையுடன் பார்த்ததை வைத்தே அவனுக்கான முக்கியத்துவம் தெரிந்தது!

அரவிந்தனுக்கு அவனது தந்தை மாசிலாமணி மட்டும் தான்! மாசிலாமனிக்கோ அரவிந்தனை கார்த்திகேயனிடம் ஒப்படைத்து விட்ட திருப்தி! எப்போதும் கார்த்திகேயனை பெருமை பொங்க பார்ப்பவருக்கு வேறு என்ன வேண்டும்… அதுவும் சிறு வயது முதலே தனக்கு அடங்காத பிள்ளை கார்திகேயனுக்காவது அடங்குகிறானே என்று அவ்வப்போது சந்தோஷப்பட்டு கொள்வார்! அதுவும் இந்த திருமணத்தை அவனே பேசி முடிக்கும் போது அவரது மனம் நிம்மதியில் ஆழ்ந்து இருந்தது! இனியாவது அரவிந்த் நல்ல விதமாக இருந்தால் போதும் என்றே அவர் எண்ணினார்!

வைஷ்ணவியின் வீட்டில்… ஹாலை தாண்டி ஒரு சிறு ஹால் இருக்கும்… ஆண்கள் ஹாலில் அமர்ந்து இருக்கும் போது பெண்கள் கூட்டம் அந்த சிறு ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருப்பார்! அதற்கு பக்கத்தில் ஒரு பெரிய டைனிங் ஹால்… அதை தாண்டி சமையலறை என்று போகும்! மாடியில் வைஷ்ணவியின் அறையிலிருந்து வந்தவள் அந்த சிறு ஹால் வழியாக சமையலறை போய் வைஷ்ணவிக்கு உதவ ஆரம்பித்தாள்! உடன் மங்கை, குணவதி என்று இருந்ததால் அவளுக்கு எதுவும் வேலை இல்லாமல் போனது! வெறுமனே அவர்கள் வேலை செய்வதை வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது!

“காத்தாட உக்கார் கண்ணா… பாரு வேர்க்குது…” மங்கை ஆதராவாக கூறவும்…

“இல்ல ஆன்ட்டி… போர் அடிக்குது… வைஷு அண்ணி இல்லாம…”

“ஏய் வாலு… ரக்ஷிதா ஹால்ல இருப்பா இல்ல… போய் அங்க உட்காரு…” என்று கூறிய குணவதியை பார்த்து முறைத்தாள்!

“திவி… அண்ணா உன்கிட்ட என்னமோ பேசனும்ன்னு வந்தாங்க… பேசிட்டியா?” வைஷ்ணவி சாதாரணமாக கேட்க… திவ்யா மெளனமாக நின்றாள்! அதை பார்த்த மங்கை…

“கண்ணா… ஏன்டா இன்னமுமா சண்டை?” கேட்டது மங்கை!

“இல்ல ஆன்ட்டி… அதெல்லாம் ஒண்ணுமில்லையே…” என்று சமாளிக்கவும், குணவதி…

“என்னம்மா என்ன ஆச்சு? தம்பி கிட்ட என்ன பிணக்கு?” ஒன்றும் அறியாமல் கேட்டார்! ஸ்ரீராமும் சரி திவ்யாவும் எப்போதுமே வெளியில் சந்திக்கும் பிரச்சனைகளை வீட்டிற்கு எடுத்து வர மாட்டார்கள்! எதுவாக இருந்தாலும் அவர்களுக்குள்ளாக தீர்த்து கொள்வதே வழமையாக இருந்தது!

“அதெல்லாம் ஒன்னுமில்லம்மா… சும்மா…” தாயை சமாளிக்க முயன்று தோற்றாள்! தாய் அறியாத சூளா? ஆயினும் தோண்டி துருவாமல் சாதாரணமாக விட்டார்! இதுதான் குணவதி! தனது பிள்ளைகளின் மேல் அவர் வைத்த முழு நம்பிக்கை! அதை உணர்ந்த அவரது பிள்ளைகள்! பேசி கொண்டிருக்கும் போதே வந்த கனிஷ்கர் திவ்யாவிடம்…

“திவிக்கா… கார்த்திக் மாமா உங்களை தண்ணி கொண்டு வர சொன்னாங்க…” என்று கூற வைஷ்ணவி சிரித்து கொண்டாள்! தண்ணீரை எடுத்து அவளிடம் கொடுத்து…

“அரவிந்த் அண்ணா கேட்டு இருப்பாங்க… கொண்டு போம்மா தாயே… போய் குடு…” அவளை விரட்டினாள்! திவ்யா இன்னமும் கோபம் குறையாத நிலையில்… மற்றவர்கள் முன்னர் வேறு வழியில்லாமல் தண்ணீரை எடுத்து கொண்டு பெரிய ஹாலுக்கு போனாள்! கண்களால் கார்த்திக்கை துழாவியவள், அவன் இன்னொரு நெடுமரத்தோடு பேசி கொண்டிருக்க ஒன்றும் பேசாமல் அவனிடம் கொண்டு போய் தண்ணீரை கொடுத்தாள்! புன்னகையோடு வாங்கியவன்…

“தேங்க்ஸ் திவ்யா… ஒரு நிமிஷம்…” என்று கூறியவன் அந்த ஒரு சொம்பு தண்ணீரை குடித்து விட்டு…

“சுடுது திவ்யா… கொஞ்சம் சில்லுன்னு எடுத்துட்டு வாயேன்…” ஓரக்கண்ணால் பார்த்து குறும்பாக சிரித்துவிட்டு மறுபடி அவளை அனுப்ப அவனுக்கு மட்டும் புரியுமாறு வாய்க்குள் திட்டி கொண்டே போனாள்! சமையலறைக்கு போனவள்…

“அண்ணி… உங்க அண்ணனுக்கு சில்லுன்னு தண்ணி வேணுமாம்…” என்று கடுப்பாக கூற அதை கேட்டு சிரித்தவள்…

“நீ என்ன முறைச்சுகிட்டே கொடுத்தியா? அதான் அப்படி சொல்லி இருப்பாங்க… அர்விந்த் அண்ணா எப்படி… பார்த்தியா?”

“அண்ணி என்னோட பொறுமைய சோதிக்காதீங்க… நான் எந்த நெடுமரத்தையும் பார்க்கல…” கோபத்தில் கொதித்தாள்!

“பார்க்கலைன்னு சொல்ற… நெடுமரம்ன்னு சொல்ற… ரெண்டும் ஒத்து போகலியே…” சிரித்து கொண்டே திவ்யாவை வாரினாள்! முறைத்து கொண்டே மறுபடியும் தண்ணீரை எடுத்து கொண்டு ஹாலுக்கு போனாள்!

“தேங்க்ஸ் திவ்யா… ரொம்ப ஹாட் இல்லையா இன்னைக்கு சென்னை…”

“ம்ம்ம்… ஆமாம்…” வேறு வழியில்லாமல் பதில் கொடுக்க பின்னால் ஒரு பிஜிஎம் சத்தமில்லாமல் ஓடி கொண்டிருந்தது!

பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க…

காத்திருந்த காட்சி இன்று காண கிடைக்க…

வேறு யார் அர்விந்த் தான்! பார்த்தான்… பார்த்தான்… பார்த்து கொண்டே இருந்தான்… அவன் இப்படி பார்ப்பதை பார்த்த திவ்யாவுக்கோ அனல் மேல் நிற்கும் உணர்வு… கார்திகேயனோ, அர்விந்த் பார்ப்பதற்காகவே… விடுவேனா என்று பேச்சை வளர்த்த… திவ்யாவுக்கு உள்ளே எரிச்சல் கனன்றது! சட்டென்று பேச்சை முடித்து கொண்டு உள்ளே செல்ல முனைய… மீண்டும் அழைத்த கார்த்தி…

“திவ்யா… கொஞ்சம் லெமன் சோடா வித் பெப்பர் கிடைக்குமா? செம ஹாட்டா இருக்குல்ல…” எனவும் உள்ளுக்குள் லட்சார்ச்சனை செய்த திவ்யா ஸ்ரீராம் அழைக்கவும் திரும்பினாள்!

“திவி… அப்படியே எனக்கும்டா…” அவனை முறைத்து விட்டு உள்ளே சென்றாள்!

“அண்ணிஈஈஈ…”

“என்ன திவி?”

“ம்ம்ம்… உங்க அண்ணனுக்கு லெமன் சோடா வேணுமாம்…” சொல்லி விட்டு கடுப்படிக்க…

“ஆஹா… இன்னைக்கு நீ செம ஆள் கிட்ட தான் மாட்டி இருக்க… கவலையே படாத… கல்யாணம் வரைக்கும் ஓட்டி எடுத்துருவாங்க…” அவளை வாரிகொண்டே லெமன் சோடா கலக்கினாள்… அங்கே அமர்ந்து இருந்த அனைவருக்கும்…

“அண்ணி… அண்ணன் கூப்பிடறாங்க போல இருக்கே…” வைஷுவை அனுப்பியவள் கார்த்திக்கு மட்டும் உப்பை கொஞ்சம் அதிகமாக அள்ளி போட்டு கொண்டு எடுத்துப்போனாள்!

வரிசையாக கொடுத்தவள் கார்த்திக்கு மட்டும் அவளே எடுத்து…

“இது உங்களுக்கு” என்று குறும்பான வார்த்தைகளோடு கண்களின் ஓரத்தில் தெரிந்த சிரிப்போடு கொடுக்கவும் ஒரு நிமிடம் கார்த்தி ஏமாந்து போகவே நினைத்தான்!

“ஆஹா இதுல ஏதோ இருக்குடா…” என்று நினைத்து கொண்டே…

“டேய் மாப்ஸ்… இந்தா பிடி…” என்று அவனது கப்பை அரவிந்தனுக்கு கொடுத்து விட்டு அவன் இன்னொன்றை எடுக்க திவ்யாவுக்கு உள்ளே பற்றி கொண்டு வந்தது!

“அடப்பாவி… தப்பிச்சுட்டானே…” கடுப்பாக பார்த்தாள்! அரவிந்தனோ இந்த உலகத்தையே மறந்து திவ்யாவிடம் ஐக்கியமாகி அந்த லெமன் சோடாவை பருகி கொண்டிருந்தான்! திவ்யாவையே பருகுவதாக நினைத்து… அந்த பார்வை வேறு அவளை கொதிப்படைய செய்ய…

“எருமை எருமை… அப்படி பார்த்து தொலையாத…” உள்ளுக்குள் மட்டுமே திட்ட முடிந்தது! கார்த்திக்கோ அந்த கப்பில் ஏதோ உள்ளது என்ற சந்தேகம் வந்தது!

“மாப்ஸ் ஒரு நிமிஷம்…” என்று அவனது கப்பை வாங்கி சிறிது டேஸ்ட் செய்தவன் முகம் சிரிப்பில் மலர்ந்தது! ஆஹா… இதையும் இப்படி உலகத்தை மறந்து குடிக்கிறானே என்று நினைத்து கொண்டு… ஸ்ரீராமிடம் திரும்பியவன்…

“ஸ்ரீ… லெமன் சோடா சூப்பர் இல்லையா?”

“ஆமாண்ணா… சூப்பர்… திவி… எப்ப நீ இப்படி கலக்க கத்துகிட்ட?”

“எப்போ மாப்ஸ் இப்படி உலகத்தை மறந்து குடிக்க கத்துகிட்டானோ… அப்பவே தான் ஸ்ரீ…” நக்கலாக அவன் கூறியது ஸ்ரீக்கு புரியவில்லை!

“அண்ணா…” என்று சிரிக்க…

“இல்ல ஸ்ரீ… உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கனுமாம்ல… அப்படியா?” என்று கூறவும் அவனது நக்கல் புரிந்தது! ஆஹா எனக்கு சொல்லாம இந்த வேலையா என்று நினைத்து கொண்டே…

“அடப்பாவி…” என்று திவியை ஒரு பார்வை பார்த்தான்! அவளோ உள்ளே கடுகடுத்து கொண்டிருந்தது தெரிந்தது! அவளது அந்த கடுப்பெல்லாம் கார்த்திக்கு சிரிப்பாக மாற…

“மாப்ஸ்… டேய் போதும்டா… அங்கே கப்புல சோடா தீர்ந்து போய்டுச்சு… இன்னும் எதைடா குடிக்கற…” என்று கூறியபோதே ஸ்மரனை வந்து கப்பை அசட்டு சிரிப்பு சிரித்தவாறே திவியிடம் கொடுத்தான்! சபை சிரிப்பால் நிறைய…

“மாப்ஸ்… லெமன் சோடா எப்பிடி இருந்தது…?” குறும்பாக அரவிந்தனிடம் கேட்க…

“டேய் கார்த்தி… அது லெமன் சோடாவா? காபின்னு இல்ல நினைத்தேன்…” என்று அப்பாவியாக கூறவும் குபீரென்று சிரிப்பு எழுந்தது அனைவருக்கும்! கலாட்டாவும் சிரிப்புமாகவே பெண் பார்க்கும் படலமும் பெரியவர்களின் பிறந்த நாள் வைபவமும் நடக்க கார்த்தி…

“திவ்யா… பொரியல்…”

“திவ்யா… கூட்டு…”

“திவ்யா… சாம்பார்…”

ஒவ்வொன்றுக்கும் அவளையே அழைத்து வேலை வாங்கி, முடிந்த வரையில் அவளின் கோபத்தை எகிற வைத்து கொண்டிருந்தான்! அவனால் ஆன சேவை!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 8

மயக்கும் மஞ்சள் வெளிச்சம்! உடலை தாக்காமல் குளிர்வித்த இதமான ஏசி ... உணவின் மணத்தோடு இனிய வாசமும் நாசியை தாக்க... மனமோ மயங்கியது! ஒவ்வொரு மேஜையிலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஜோடிகள் தங்களது உலகத்தை மறந்து பேசி கொண்டிருந்தனர்! அப்படி எதை தான்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்