arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 8

அத்தியாயம் 8

visibility 784
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

மயக்கும் மஞ்சள் வெளிச்சம்! உடலை தாக்காமல் குளிர்வித்த இதமான ஏசி … உணவின் மணத்தோடு இனிய வாசமும் நாசியை தாக்க… மனமோ மயங்கியது! ஒவ்வொரு மேஜையிலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஜோடிகள் தங்களது உலகத்தை மறந்து பேசி கொண்டிருந்தனர்! அப்படி எதை தான் பேசி கொண்டே இருப்பார்களோ என்று திவ்யாவுக்கு சந்தேகமே வந்தது! கார்த்தியிடம் கிசுகிசுப்பாக கேட்க அவனோ அவளை வேற்று கிரகவாசியை பார்ப்பது போல் பார்த்தான்!

“ஸ்வீட் நத்திங்க்ஸ் திவி…” என்று கூறி புன்னகைக்க…

“என்ன நத்திங்கோ… நீங்க பேசாம ஷாலினிய கூட்டிட்டு வந்திருக்கலாம்”

“கல்யாணத்துக்கு முன்னாடியே பாண்டில இருந்து சென்னைக்கு… ஹும்… விளையாடாத திவி!”

“ஏன் இப்போ என்னை பிடிவாதமா இழுத்துட்டு வரலையா நீங்க…”

“அர்விந்த் ஆசைப்பட்டான்… அதான்… அதுவும் இல்லாம ஒரே ஊர்ல தானே…”

“ஷாலுவ இந்த மாதிரி கேண்டில் லைட் டின்னருக்கு கூட்டிட்டு போய் இருக்கீங்களா கார்த்திக்?” என்று அவள் கேட்கவும் அவன் புன்னகைத்து கொண்டே…

“இப்போ உன் கிட்ட யார் கம்ப்ளைன்ட் பண்ணது?”

“யாரும் இல்ல… நானே தான் கேக்கறேன்…”

“சரி… இனிமே அழைச்சுட்டு போறேன்… விடு…” என்று முடிக்க பார்க்கவும்…

“நீங்க மட்டும் ஒரு கொள்கையோட இருக்கேன்னு சொல்லலாம்… ஆனா நாங்க சொன்னா அப்பா கிட்ட சொல்லி இழுத்துட்டு வருவீங்க… அப்படித்தானே…” வம்புக்கே அலைந்தாள் திவ்யா!

“சரி சரி… எல்லாம் சரி… ஸ்ரீ எங்க?” டாப்பிக் மாத்து என்று மாற்றினான்!

“அவன் சாஹித்யாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு ஹாஸ்பிட்டல் அழைச்சுட்டு போய்ட்டான்!”

“சாஹித்யாக்கு இங்க யாரும் இல்லையா திவி?”

“ம்ம்ம்… ஆமாம் கார்த்திக்… ஹாஸ்டல்ல தான் இருக்கா…” பேசி கொண்டிருக்கும் போதே அரவிந்தன் வர அவர்களது பேச்சு தடைப்பட்டது! வரும்போதே புன்னகை மன்னனாக வந்தவன் திவ்யாவுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்தான்!

“ஹாய்… வந்து ரொம்ப நேரம் ஆச்சா?”

“ம்ஹூம்… இல்ல… அர்விந்த்” பதில் கூறியது கார்த்திகேயன் தான்!

திவ்யாவுக்கோ அவனை பார்க்கும் போதே கூசியது! ஏன் இப்படி பார்த்து வைக்கிறான்? கார்த்திகேயனோடு இவ்வளவு நேரம் பேசி கொண்டிருக்கையில் வராத ஒரு சங்கடம், அரவிந்தனை பார்த்த நொடியே வருகிறதே! ஏன் என்று புரிந்தது திவ்யாவுக்கு! கார்த்திகேயனின் கண்ணியமான சிநேகமான பார்வை! அது இவனிடம் சுத்தமாக இல்லை என்பதை உணர்ந்தாள்! ஒரு வேளை திருமணம் செய்ய போகும் பெண் என்பதால் பார்க்கும் பார்வையா? ஆனால் இன்னமும் எதுவும் முடிவு செய்யாத நிலையில் அவளுக்கு வெறுப்பையே தந்தது!

அவளின் முகச்சுளிப்பை கண்ட கார்த்திகேயன், சட்டென்று உணர்ந்து உணவு பற்றி இருவரிடமும் கருத்து கேட்க, அதையெல்லாம் சிறிதும் கண்டுகொள்ளாத அர்விந்த் திவ்யாவையே விழுங்குவது போல பார்த்து கொண்டு…

“எதுவா இருந்தாலும் ஓகே கார்த்தி… திவ்யா என்ன சாப்பிடறாளோ அதையே நானும் சாப்பிட்டுக்கறேன்…” என்று கூறவும் திவிக்கு தலையில் அடித்து கொள்ளவே தோன்றியது!

“திவ்யா… யூ லுக் கார்ஜியஸ்…” அரவிந்தன் தன்னை மறந்து கூற அப்போதுதான் கார்த்திகேயனும் அவளை அந்த நோக்கில் பார்த்தான்! கடல் நீல டிசைனர் சேலையில்… தனது நீளமான முடியை தளர பின்னி… அதற்கு தகுந்த மெல்லிய நகைகள் அணிந்து அந்த வென்பளிங்கு முகத்தில் சிறு பொட்டும் மிக மெல்லிய லிப்ஸ்டிக் தீற்றலுமாக வெண்ணிலவே அமர்ந்து இருப்பதை போல இருந்தவளை ஏன் இவ்வளவு நேரம் கவனிக்கவே இல்லை? உடையவன் வந்தால் தான் பொருளுக்கு மதிப்பிருக்கும் போல! என்று எண்ணி கொண்டான் கார்த்திகேயன்!

“உனக்கு என்னப்பா ஆர்டர் பண்ணலாம்? நீ என்ன சாப்பிட்டாலும் சார் சாப்பிடுவாராம்!” சிரித்து கொண்டே அவன் கேட்க…

“அப்படியா… நான் வைக்கோல் சாப்பிட போறேன்… ஓகே வா… உங்க பிரெண்ட கூட சாப்பிட சொல்லுங்க…” உள்ளுக்குள் இருந்த கடுப்பில் வெளியே சிரித்துகொண்டே வந்து விழுந்தன வார்த்தைகள்!

“நீ சாப்பிடறத இப்படி பப்ளிக்கா சொல்லுவைன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை திவி… எப்போவுமேவா… இல்ல எப்பயாவதுதானா?” சிரிக்காமல் அவளை பார்த்து கேட்ட போதே அவளுக்கு உரைத்தது! ஆஹா மாட்டிகொண்டேமே!

“இல்ல கார்த்திக்… எப்போவாச்சும் உங்களை மாதிரி இரண்டு கால் பிராணிங்களோட சாப்பிட போறப்போ மட்டும் தான்! என்ன பண்றது… உங்க மெனுவ அடாப்ட் பண்ணி தானே ஆகணும்…” என்று அவளும் மிக சீரியசாகவே கூறுவது போல நடிக்க…

“ஏய் வாலு…” என்று சிரித்து கொண்டே அவளை அடிக்க வருவது போல் பாவனை செய்ய அவளும் சேர்ந்து சிரித்தாள்! ஒவ்வொரு உணவாக ஆர்டர் செய்ய செய்ய இது கனிஷ்கருக்கு பிடித்தது, இது விக்கி அண்ணாவுக்கு பிடித்தது, இது வைஷு அண்ணிக்கு பிடித்தது, இது ஸ்ரீராமுக்கு பிடித்தது, இது மனிஷாவுக்கு பிடித்தது என்று சைட் கமென்ட் கொடுத்து கொண்டே வர…

“பேசாம உன் கூட மனிஷா, கனிஷ்கர அழைச்சுட்டு வந்து இருக்கலாம் போல இருக்கே…” கார்த்திகேயனுக்கு ஒரு புறம் ஆச்சரியமாக இருந்தாலும் சலிப்பாக கூறுவது போல் கூறினான்!

“ஆமா கார்த்திக்… அப்போவாவது என்ஜாய் பண்ணியிருப்பேன்…” என்று சோக கீதம் வாசிக்க…

“அடிங்க… உனக்கு உன் உட் பீ கூட சாப்பிட வர்றது அவ்வளவு போர் அடிக்குதா?” என்று கூற அரவிந்தனும் சேர்ந்து சிரித்தான்! பேசிகொண்டிருக்கும் போதே அருகில் வந்த ஒருவர்…

“ஹே கார்த்திக்… வாட் எ சர்ப்ரைஸ் மேன்… நீ ஒரு பொண்ணோட… ரியல் சர்ப்ரைஸ்…”

“ஹலோ செந்தில் சார்… வாங்க வாங்க… நான் மட்டும் தனியா வரலை… அர்விந்த் கூட தான் வந்து இருக்கேன்… பார்க்கலியா நீங்க?” என்று சிரித்து கொண்டே கேட்கவும்…

“ஹஹஹா… ஆமாம்… ஹாய் அர்விந்த்” என்று முகமன் கூறிவிட்டு கார்திக்கேயனோடு பேச்சில் ஆழ்ந்தார்! அவ்வப்போது வெடி சிரிப்பு சிரித்தபடி!

“திவி… இது செந்தில்முருகன் சார்… தெரியும் தானே… தமிழ்நாட்டு கல்வி அமைச்சர்… நமக்கு ரொம்ப வேண்டியபட்டவர்…” என்று சிரித்தவாறே கூறி விட்டு அவரிடம் திரும்பி பேச…

“ஏன்ப்பா… நீ தான் பாண்டிச்சேரிகாரனாச்சே… எங்களை எல்லாம் கண்டுக்க மாட்டியே?” அவர் சிரித்து கொண்டே! எப்போதும் நகைச்சுவையாகவே பேசுபவர்… கார்த்திகேயனின் நலம் விரும்பி!

“சார்… நான் எந்த ஊரா இருந்தாலும் நீங்க எனக்கு வேண்டபட்டவர்தான் போதுமா?” புன்னகையோடே கூறிவிட்டு திவி பக்கம் திரும்பி…

“சார்… இது திவ்யா… என் கசின்…” நீட்டி முழக்காமல் சுருக்கமாக முடித்தான்! அவரிடம் சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு , அமைச்சர் அவனை தனியாக அழைத்து கொண்டு போக இருவரிடமும் உணவு சாப்பிட கூறி விட்டு போனான்!

அரவிந்தனுக்கு கை கால் ஒன்றுமே ஓடவில்லை! தன்னுடைய தேவதையுடன் இருக்கிறோமா என்ற உணர்வே அவனுக்கு மயக்கத்தை தர கண்கள் சொக்கி போய் இருந்தான்! அவனும் எத்தனையோ பெண்களிடம் பழகி உள்ளவன்தான்! படுக்கையை பகிர்ந்து கொண்டு வாழ்ந்தவன் தான்… ஆனால் திவ்யாவிடம் தோன்றிய மயக்கம் வேறு யாரிடமும்… ம்ஹூம்… கிடையவே கிடையாது என்று அவனது மனது சத்தியம் செய்தது!

“திவ்யா… ஷால் வி டான்ஸ்?” பால்ரூம் டான்ஸ் ஆரம்பித்து கொண்டிருந்தது!

“நோ அர்விந்த்… ஐ டோன்ட் ஹவ் இன்ட்ரெஸ்ட்!”

“ப்ளீஸ் திவ்யா…” அவன் கெஞ்ச சரி நடனம் தானே என்று அவனுடன் நடனமாட சென்றவள், பார்த்து அதிர்ந்தாள்! அப்போதுதான் சல்சா ஆரம்பமாகி இருந்தது! சல்சா என்பது ஆண்களும் பெண்களும் மிக நெருக்கமாக ஆடப்படும் நடனம்… பொதுவான நடன அமைப்பே மிகவும் சூடேற்றுவதாக இருக்கும்!

“நோ அர்விந்த்… ஐம் நாட் கம்பார்ட்டபில் வித் சல்சா!”

“ஹே… ஜஸ்ட் எ கப்பில் ஆப் ஸ்டெப்ஸ் டியுட்… கமான்…”

நடனமாட அழைத்து சென்று ஆரம்பத்தில் சற்று ஒழுங்காக ஆடியவன், போக போக அத்துமீற துவங்கினான்! அதுவும் இல்லாமல் அன்று உடுத்தி இருந்த சேலை வேறு அவனது அத்துமீறல்களுக்கு ஒத்துழைக்க திவியால் ஒன்றும் செய்ய முடியாமல் சுற்றி இருந்தவர்களை பார்த்து தவித்தாள்! கண்களில் கண்ணீர் சூழ பார்த்தது!

“அரவிந்த்… போதும்… ஐம் கோயிங்…” கடுமையாக கூற பார்த்து சுற்றுப்புறம் உணர்ந்து… மெல்லிய குரலில் ஆனால் அதே கடுமையோடு கூற அவளை அணைத்து ஆடி கொண்டிருந்தவனுக்கு அவை காதில் விழுந்தால் தானே? உலகத்தை மறந்து கண்களில் ஆசை மின்ன…

“ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் பேபி… கூல்…”

“அரவிந்த் என்னை விடுங்க… இங்க சீன் க்ரியேட் பண்ணாதீங்க… ஜஸ்ட் லீவ் மீ!” கண்களில் கோபத்தோடு கூற அவனோ விடுவேனா என்று இன்னும் நெருங்கினான்! கண்களில் கோபமும் அவனை எரித்து விடுவது போல பார்த்த பார்வையுடன் அவனை விட்டு விலக முடியாமல் போராடி கொண்டிருக்க, சட்டென்று அவளின் கையை பற்றியது வலிய கரம்! கார்த்திகேயன்! நிம்மதி சூழ்ந்தது திவ்யாவின் நெஞ்சில்!

அவளின் கையை பற்றி வெளியே அழைத்து போனவனை பார்த்து அரவிந்துக்கு கோபமே வந்தது! இவன் யார் என்னுடைய விஷயத்தில் தலையிட? எனக்கு பார்த்த பெண்ணுடன் நடனமாட யாரை கேட்க வேண்டும்?

“கார்த்தி… அவளை விடு…” அவளது கையை பற்றியிருந்தவன் அர்விந்தை பார்த்து முறைத்தான்!

“அர்விந்த்… திவியை இப்போ என்னை நம்பி அனுப்பி வைச்சு இருக்காங்க… நீ இப்படி பண்றது நல்லா இல்ல…”

“டான்ஸ் பண்றது தப்புன்னு எங்கயுமே சொல்லலையே… அதோட ஷி இஸ் மை கேர்ள்…” அர்விந்தின் கோபமும் உச்சியை தொட்டு கொண்டிருந்தது! இருவரின் கோபத்தையும் செயலிழந்து பார்த்து கொண்டிருந்தாள் திவ்யா!

“விருப்பம் இருந்தா தப்பு கிடையாது… விருப்பம் இல்லாத பொண்ண மனைவியா இருந்தாலும் தொடறது தப்பு தான்… வேணாம் அர்விந்த் தப்பு பண்ற?” உஷ்ணமாக வார்த்தைகளை வீச…

“அவ இருக்கற மீடியால இதெல்லாம் சகஜம் இல்லையா? எத்தனை பேர் கூட டேட் பண்ணாளோ? எத்தனை பேர் கூட போனாளோ… என்னமோ நான் தான் முதல்ல அவளை தொட்டுட்ட மாதிரி இல்ல நீ சிலிர்த்துகற… நான் என்ன அவளை படுக்கைக்கா கூப்பிட்டேன்?” என்று வார்த்தைகளை கொட்ட அதை கேட்டு அதிர்ச்சியடைந்த திவி அடிக்க கையை ஓங்கினாள்!

இடியென இறங்கியது கார்த்திகேயனின் கை… அரவிந்தனின் கன்னத்தில்!

“இன்னொரு வார்த்தை திவ்யாவை பத்தி பேசுன… கொலை விழும் ராஸ்கல்… யார பத்தி என்ன பேசுற? உனக்கு அந்த தகுதி இருக்கா? எங்க வீட்டு பொண்ண பத்தி பேசிட்டு நீ உயிரோட போய்டலாம்ன்னு நினைக்காத… அங்கிள்காக பார்க்கறேன்… தப்பு பண்ணிட்டேன்… சாக்கடைக்கு சந்தனத்தை இணை சேர்க்கலாம்ன்னு நினைச்சது தப்பு…” கோபத்தின் உச்சியில் கொதித்தான்!

“கார்த்தி… இது சரி இல்ல… ஒரு பொண்ணுக்காக நாம பகைச்சுக்கறது!” அரவிந்தன் மிரட்ட… திவ்யாவுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக வாய் பேசவே முடியாமல் இருந்தாள்! அவளுக்கு கார்த்திகேயனின் முகத்தை தவிர வேறொன்றும் தெரியவில்லை!

“என்னடா நினைச்சுட்டு இருக்க? உன் மிரட்டல என் கிட்டவே காட்டுறியா நீ… பொறுக்கித்தனமா சுத்திட்டு இருக்கியேன்னு உங்க அப்பா ரொம்ப வருத்தப்பட்டார் என்கிட்ட… நான் தான் திவிய பார்க்கலாம்ன்னு சொன்னேன்… அப்போவாவது நீ திருந்த மாட்டியான்னு தான்… ஆனா எப்ப நீ அப்படி ஒரு வார்த்தைய சொல்லிட்டியோ… அதோட இந்த மேட்டர் ஓவர்… நமக்குள்ள இருக்கற ரிலேஷன்ஷிப் பத்தி பாண்டி போய் நான் தான் முடிவு பண்ணனும்… என் முகத்துல விழிக்காத… போய்டு…” என்று கொதித்து கொட்டிவிட்டு திவ்யாவை அழைத்து காரில் ஏறி அமர்ந்தவன் உடனடியாக கிளம்பினான்!

பார்த்து கொண்டிருந்த அரவிந்தனின் மனமோ உலை களனாக கொதித்து கொண்டிருந்தது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 9

கார் அமைதியாக கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்து கொண்டிருந்தாலும் இருவரின் மனமும் கொதித்துக் கொண்டிருந்தது! அரவிந்தனின் செய்கை திவ்யாவுக்கு அவன் மேல் கோபத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக கார்த்திகேயன் மேல் ஆத்திரத்தையே வரவழைத்தது! கார்த்திகேயனுக்கோ அரவிந்தனை பற்றி தெரிந்தும் இந்த வேலையில் இறங்கி…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்