arrow_back
வீணையடி நீயெனக்கு அத்தியாயம் ஐம்பத்து ஆறு
வீணையடி நீயெனக்கு chevron_right பகுதி 56 / 64

அத்தியாயம் ஐம்பத்து ஆறு

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

“அவங்களை பத்தி எனக்கு தெரியும்மா… இதெல்லாம் அங்க சகஜம்… நீ தப்பா நினைக்காத…” வெகு சாதாரண குரலில் அவள் கூறியதை கேட்ட பைரவிக்கு, ‘அட லூசுப்பொண்ணே…’ என்று தான் திட்ட தோன்றியது.

யாரோ ஒருத்தி அவன் இடுப்பை பிடித்துக் கொண்டு சிரிக்குமளவு கணவனை விட்டு வைப்பார்களா என்று கேட்க தோன்றியது. அதை கேட்டும் வைத்தார்.

“ஏன்டி எவளோ ஒருத்தி அவர் இடுப்பை பிடிக்கறா… நீயும் கண்டிக்காம உன் புருஷனை தாங்கிப் பிடிக்கற… இதெல்லாம் எங்க போறது?”

மகாவுக்கு உள்ளுக்குள் சூட்டுக் கோலை வைத்து இழுத்தார் போலத்தான் தோன்றியது. ஆனாலும் அவனை விட்டுக் கொடுக்க முடியாது. அதை மறைத்துக் கொண்டு,

“ம்ம்மா… இப்படியெல்லாம் அவங்க முன்னாடி கேட்டு வெச்சுடாத… லூசு மாதிரி…” என்றவளை முறைத்த பைரவி,

“ஆமான்டி… உன்னை பெத்தவ நான் உனக்கு லூசு மாதிரி தான் தெரிவேன்… எனக்கு தோனுச்சு சொல்லிட்டேன்…” என்று புலம்ப,

“ம்மா… போதும்மா விடேன்…” என்று இவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, ஷ்யாமின் கார் உள்ளே நுழையும் சப்தம் கேட்டது.

சிரித்தபடியே உள்ளே வந்த ஷ்யாமையும் கார்த்திக்கையும் பார்த்தவர்கள் தங்களது வாக்குவாதத்தை சட்டென நிறுத்திக் கொண்டனர். மாப்பிள்ளையை கண்டவுடன் தன்னையும் அறியாமல் புன்னகை பூசிக்கொண்டு, மரியாதையாக,

“வாங்க மாப்பிள்ளை…” என்றவரை பார்த்து சின்ன புன்னகையை உதிர்த்தான். இருவருக்குமாக டிபன் தயார் செய்ய பைரவி உள்ளே சென்றுவிட, மஹாவை நெருங்கி அமர்ந்தான் ஷ்யாம். தள்ளி அமர முயன்றவளை விடாமல் அவளது தோளிலும் கைபோட்டுக் கொள்ள, தந்தை முன் என்ன இப்படி செய்கிறான் என்ற அவள் சங்கடத்தில் நெளிய, முருகானந்தம் புன்னகைத்துக் கொண்டார். திருமணமான புதிதில் தானும் இப்படித்தானே என்ற எண்ணம் புன்னகையை தோற்றுவித்து இருந்தது.

மற்றவர் முன் தன்னுடைய உரிமையை நிலைநாட்டும் ஒரு விதமான மனநிலை அது… புது மனத்தம்பதியருக்கே உரித்தான ஒரு ஸ்பெஷல் மனநிலை.

ஆனால் காலையிலேயே தன்னை கடுப்பேற்றி அனுப்பி வைத்த மனைவியை எப்படி கடுப்பேற்றுவது? உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே தான் அவளிடம் பேசாமலே வம்பு செய்து கொண்டிருந்தான். அதோடு எலெக்ஷன் விஷயத்தில் தன்னுடைய கை ஓங்கி இருப்பதில் உண்டான சந்தோஷம், முந்தைய தினம் விட்டல் ராவ் விஷயத்தினாலும் மனம் இலகுவாகி இருந்தது.

ஷ்யாமை பார்த்து கிண்டலாக சிரித்த கார்த்திக், பிருந்தாவும் இன்னமும் உடனிருப்பதை கண்டவன், “ஏய் வாலு… இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க இங்க?” என்று வேண்டுமென்றே அவளை சீண்ட, பிருந்தா முறைத்தாள்.

“நான் எங்க இருந்தா உனக்கு என்னன்னு கேளு பிருந்தா…” முருகானந்தம் எடுத்துக் கொடுக்க,

“மாமா… நான் யார்கிட்டயும் பேசற மாதிரி இல்ல… தேவையில்லாம என்னை யாரும் வம்பிழுக்க வேண்டாம்ன்னு சொல்லி வைங்க…” என்று கடுகடுத்தாள்.

“என்ன இப்படியொரு திடீர் ஞானோதயம்ன்னு கேளுங்கப்பா…” என்று அவனும் முருகானந்தம் வழியாகவே கேட்க,

“என்ன பண்றது? இப்பவாவது எனக்கு ஞானோதயம் வந்துச்சேன்னு சொல்லுங்க மாமா…” பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கூற, இருவரையும் சிரித்தபடி பார்த்து இருந்தனர் மற்ற மூவரும். இருவரின் சுவாரசியமான விளையாட்டை ரசித்து பார்த்தாள் மஹா.

“அதான் ஏன் வந்துச்சுன்னு கேளுங்கப்பா…” மீண்டும் சிரித்த கார்த்திக், அவளை விடாமல் வம்பிழுக்க,

“பேசாம இவங்களை கட் பண்ணி விட்டுட்டு நான் நிம்மதியா வேலை பார்க்க போறேன்னு சொல்லுங்க மாமா…”

“அட… சூப்பர்… எப்ப பண்ண போறான்னு கேளுங்கப்பா…” சிரித்துக் கொண்டே கூற, முருகானந்தம் இடைமறித்தார்.

அவருக்கு உண்மையிலேயே கோபம் வந்தது. காதலிக்கிறேன் என்பானாம். ஆனால் திருமணம் செய்ய முடியாது என்பானாம். மகனது காதலை உடனடியாக அங்கீகரித்து ஒப்புக்கொண்டதன் பலனா இது? அந்த சிறு பெண்ணையும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறானே என்ற கோபத்தில்,

“டேய் ஓவரா வம்பு பண்ற… அவங்க அப்பா கல்யாணத்தை பத்தி பேசும் போதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு இருக்க… அப்புறம் எதுக்கு லவ் பண்ணியாம்? இப்பவே மஹா கல்யாணத்துல உங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு கேட்காத ஆள் பாக்கி இல்ல… அந்த மனுஷனுக்கு எப்படி இருக்கும்?” கார்த்திக்கை வசமாக பிடித்துக் கொண்டார் முருகானந்தம்.

“அதுக்கு நான் என்னப்பா பண்ண முடியும்? அடுத்த பட வேலையெல்லாம் ஸ்டார்ட் பண்ணியாச்சு… இப்போதைக்கு என்னோட கான்சன்ட்ரேஷன் அதுல தான் இருக்கு… அதோட இந்த ப்ரொடியுசர் கவுன்சில் எலெக்ஷன் வேற… என்னால வேற எதையும் இப்போதைக்கு நினைச்சு கூட பார்க்க முடியாது…” என்று கார்த்திக் முடிக்க,

“யோவ்… கல்யாணம் பண்ணா எலெக்ஷன்ல நிக்க கூடாதுன்னு யாருய்யா சொன்னான்? இது ஒரு பக்கம்… அது ஒரு பக்கம்… அவ்வளவுதான்…” என்று ஷ்யாம் சிரிக்க,

“கான்சன்ட்ரேஷன் மிஸ் ஆகும் மச்சான்…” என்றவனிடம்,

“ஆஹா… அடடா… அடடா… இந்த அறிவு எனக்கில்லாம போச்சே…” என்றான் சிரித்தபடி, ஓரக்கண்ணால் அருகில் அமர்ந்திருந்த மஹாவை பார்த்தபடி.

“அப்படீங்கற?” என்று கிண்டலாக கார்த்திக் கேட்க,

“ஆமாங்கறேன்…” என்று சிரித்தான் ஷ்யாம்.

“மஹா… இந்த மாப்ள சாரை என்னன்னு கேளு…” என்று சிரிக்க, அவள் அவனையும் முறைத்தாள்.

“என்ன லட்டு… இந்த பக்கமும் அனல் வீசுது?” என்று கேலியாக கேட்ட கார்த்திக்கை,

“நான் உன்கிட்ட பேசற மாதிரி இல்ல…” இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறியவள், ஷ்யாமின் கையை எடுத்து விட்டு தள்ளி அமர முயல, அவன் இன்னமும் அவளை பக்கவாட்டில் கழுத்தோடு இறுக்கிப் பிடித்துக் கொண்டு,

“ஏன் லட்டு? உன் உடன்பிறப்பு மேல என்ன கோபம்?” என்று சிரித்தான். அவனுக்கு மகாவிடம் கோபத்தை இழுத்துப் பிடித்து வைக்கவேல்லாம் தெரியாது. தேவையும் இல்லை என்று தான் நினைத்தான். காலையில் அவள் கேட்ட கேள்வி அவனை அப்போது சுருக்கென்று தான் குத்தியது. ஆனால் சற்று நிதானித்து நினைத்து பார்க்கும் போது அவள் கடந்து கொண்டிருக்கும் குழப்பமான மனநிலையை தான் மட்டுமே சரி செய்ய முடியும் என்று தோன்றியது.

தன்னுடைய வார்த்தைகளே கண்டிப்பாக பூமராங் ஆகும் சாத்தியக் கூறுகள் நிறைய உள்ள நிலையில், அவள் கண்ட படங்களின் குழப்பம் இன்னமும் தீராத நிலையில், அவளது வார்த்தைகளை தான் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது.

ஆனால் என்னதான் தனக்குத் தானே சமாளிபிகேஷன் கொடுத்துக் கொண்டாலும், அனைத்தையும் மீறிய ஒரு வலி, நெஞ்சை அடைத்தது தான் உண்மை.

“யாருக்குமே நான் தேவைப்படலை… ஒருத்தருக்குமே என் மேல அக்கறையும் இல்ல… நான் எதுக்காக இருக்கணும்ன்னே தெரியல…” கண்களில் நீரோடு கூறியவளை கேள்வியாக பார்த்தான் கார்த்திக். அதிர்ந்தான் ஷ்யாம்.

“என்னடா இப்படி சொல்ற?” அருகில் அமர்ந்த கார்த்திக் தோளை அணைத்துக் கொண்டு கேட்க,

“இன்னைக்கு மனு தாக்கல் பண்றன்னு என்கிட்டே சொன்னியா கார்த்திண்ணா?” கண்களை துடைத்துக் கொண்டு மஹா கேட்க, கார்த்திக் நாக்கைக் கடித்து கொண்டான்.

“ஷ்யாம் சொல்லிருப்பாப்லன்னு நினைச்சேன் லட்டு…” என்று கூற,

“நீ சொன்னியா? நீ இன்னைக்கு மனு தாக்கல் பண்ண போற விஷயமே பிருந்தா சொல்லித்தான் எனக்கு தெரியும்… கல்யாணத்துக்கு முன்னாடி என் கிட்ட எல்லாத்தையும் டிஸ்கஸ் பண்ணுவல்ல… இப்ப ஏன் ஒரு இன்பர்மேஷன் கூட சொல்லலை?” என்று தழுதழுத்த குரலில் கேட்க,

“டேய்… நான் உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு எல்லாம் நினைக்கலையே… அரேஞ்ச்மென்ட்ஸ் முழுக்க பார்க்கறது ஷ்யாம் தான்… பேருக்கு தான்டா நான் நிக்கறேன்… அங்க இருக்கறது உன் வீட்டுக்காரர் நேம் தான்… மச்சான் சொல்லி இருப்பாப்லன்னு நெனச்சேன் மஹா… உன்னை அவாய்ட் பண்ணனும்ன்னு நினைப்பேனா?” என்று கேட்டவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது. என்னதான் இருந்தாலும் ஷ்யாம் சொல்வான் என்று தான் நினைத்திருக்கக் கூடாது தான். அது தன்னுடைய தவறு தான் என்று எண்ணிக் கொண்டுதான் கூறினான்.

“அவங்க சொல்லலை… அவங்களுக்கும் நான் தேவையில்லை… உங்க யாருக்கும் நான் தேவையில்லாம போயிட்டேன்ல…” என்றவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. சின்ன விஷயம் தான். ஆனால் கமு, கபி வேலை செய்து கொண்டிருந்தது. அதாவது கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின்! அந்த நேரத்தில் அந்த பெண்களின் மனநிலை.

அவளது வார்த்தைகள் ஷ்யாமுடைய மனதை தைத்தது.

“என்னடி லூசு மாதிரி பெரிய வார்த்தையெல்லாம் பேசற? அதுவும் அண்ணாவ வெச்சுகிட்டே… பேக்கு… இந்த தடவை விட்டுடு மஹா… ஏதோ தப்பு பண்ணிட்டாங்க… இனிமே இப்படி பண்ணா நாம மம்மி கிட்ட சொல்லிடலாம்…” பிருந்தா அவளை சமாதானம் செய்ய முயல,

“நீ ஈசியா சொல்லிடுவ பிருந்தா… முதல்ல பட வேலையெல்லாம் ஆரம்பிக்கறப்ப என்கிட்ட எவ்வளவு டிஸ்கஸ் பண்ணான்னு உனக்கு தெரியும்ல… இப்ப கல்யாணம் ஆகி போய்ட்டா எதையும் சொல்லக் கூட கூடாதுல்ல… நெக்ஸ்ட் பில்ம் ஆரம்பிக்கறான்… எலெக்ஷனுக்கு மனு தாக்கல் பண்ணிருக்கான்… ஆனா எனக்கு ஒண்ணுமே தெரியல… எல்லாருமா சேர்ந்து என்னை தலை முழுகிட்டீங்கல்ல…” என்று மீண்டும் அழ,

“அட அறிவுக் கொழுந்தே… படம் ப்ரடக்ஷன் மட்டும் தான் நான்… எல்லா கண்ட்ரோலும் மச்சான் தான்… அவர் உன்கிட்ட சொல்லலையா? இன்பாக்ட் ஷ்யாமோட மச்சான் படம்ன்னு தான் அட்ரெஸ் பண்றாங்க… ஒரே நாள்ல லக்ஷ்மில்லாம் மாறிப்போச்சு மஹா… ” சந்தோஷமாக கூறினாலும் உண்மையில் உள்ளுக்குள் வியப்பாக இருந்தது. இதை கூட மனைவியிடம் அவன் சொல்லவில்லையா என!

அவன் சொல்வான், தான் சொல்ல தேவையிருக்காது என்று சாதாரணமாகத்தான் நினைத்திருந்தான். ஆனால் அடிப்படையே ஆட்டம் காண்கிறதே இங்கு!

திரும்பி அவனை பார்த்தவள், “இவங்க எதையுமே என்கிட்டே சொல்லலை… நான் தான் தேவையே இல்லல்ல…” என்று மீண்டும் வெறுமையாக கூற,

“நான் எல்லாத்தையும் சொல்ற அளவுக்கு, ஷேர் பண்ணிக்கற அளவுக்கு, என்கிட்ட பேசறியா மஹா?” என்று கேட்டான் ஷ்யாம், உள்ளுக்குள் பரவிய வலியோடு.

இத்தனை பேரின் முன்பும் அதை கேட்க அவனுக்கும் ஒரு மாதிரியாக தான் இருந்தது. ஆனால் என்ன செய்வது என்றும் புரியவில்லை.

“ஏன்? உங்க கிட்ட பேசாம வேற யார்கிட்ட அந்த வீட்ல பேசப் போறேன்? நாலு சுவர் மட்டும் தான் இருக்கு…”என்றவளுக்கு தொண்டை அடைத்தது.

“ஆமா… ஜஸ்ட் ஃபோர் வால்ஸ் அண்ட் எ ரூஃப்… வி ஆர் லிவிங் அண்டர் ஒன் ரூஃப்… அவ்வளவுதான மஹா…” என்று அவன் கேட்டு விட, கார்த்திக்கும் பிருந்தாவும் அதிர்ந்து பார்த்தனர்.

முருகானந்தத்திற்கு அவன் கூறியது சட்டென புரியவில்லை. ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. ஒரு கூரையின் கீழ் வாழ்கிறோம். அவ்வளவுதான் என்பதை என்ன அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை.

அவளது அழுகையும், வெடிப்பும் அவளிடம் எதுவும் சொல்லாமல் இருந்ததற்கானது மட்டுமல்ல என்று கார்த்திக்கு புரிந்தது.

“சரி… நேத்து உன்கிட்ட ஒரு ஹேப்பியான விஷயத்தை ஷேர் பண்ணனும்ன்னு நினைச்சு அத்தனை தடவை கால் பண்ணேன்… எடுக்கலை… ஐ நோ யூ வேர் பிசி இன் ஹாஸ்பிடல்… ஆனா வீட்டுக்கு வந்தப்புறமும் கூட சொன்னேன்… ஆனா அதையும் இதையும் பேசி சண்டை போட்டதுதான் மிச்சம்… இட் வாஸ் ரியலி எ பிக் நியுஸ்… ரொம்ப நாள் எதிர்பார்த்துட்டு இருந்தது… இன்னும் யார்கிட்டயும் நான் ஷேர் பண்ணலை… அது என்னன்னு தெரிஞ்சுக்கவாச்சும் ட்ரை பண்ணியா?” என்று நிதானமாக அவன் கேட்க, இப்போது அவளுக்குள் முரண்டியது.

தான் செய்ததும் தவறோ? அவன் கூறினான் தான்… ஆனால் அதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் தான் நினைத்ததை மட்டும் பேசுவது என்ன முறை? தன்னை தானே கேட்டுக் கொண்டவள், அவனை பரிதாபமாக பார்த்து,

“சரி… இப்ப சொல்லுங்க…” என்று தகைந்து வர,

“நீ நினைச்சப்ப எல்லாம் சொல்ல முடியாது… எனக்கா மூட் வரும் போது தான் சொல்ல முடியும்…” அவன் கோபமாகவெல்லாம் சொல்லவில்லை. ஆனால் குரலில் சிறு வேதனை அவனையும் அறியாமல் தொனித்தது. யாரும் கண்டுகொள்ளாத அந்த உணர்வை கார்த்திக் கண்டுகொண்டான். ஆனால் கணவன் மனைவிக்கிடையில் அவன் செல்ல முடியாது. அப்படியேவும் விட முடியாதே என்று சங்கடமாக பார்த்தான். அருகிலேயே முருகானந்தம் வேறு, சற்று கலக்கமாக அமர்ந்திருந்தார்.

“சரி…கேக்காதது என்னோட தப்புதான்… சொல்லுங்க… ப்ளீஸ்…” என்று கீழறங்கி வந்தவளை பார்க்காமல்,

“யூ டோன்ட் அன்டர்ஸ்டேன்ட் மீ… அண்ட் அட்டைம்ஸ் ரொம்ப அண்டர்எஸ்டிமேட் பண்ற… இப்ப இங்க உக்கார்ந்து யாருக்குமே உன் மேல அக்கறை இல்லைன்னு எதுக்காக அழனும்? சோ யூ வான்ட் டூ கன்வே தட் ஐ ஆம் அரகன்ட்… ரைட்?”

“நான் எப்ப அப்படி சொன்னேன்?” தான் அவ்வாறு சொன்னோமா என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால் அவள் கூறியதன் கிளை அர்த்தம் அதுதான் என்பது அவளுக்கே புரியவில்லை.

“அப்படீன்னா நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்? கல்யாணத்துக்கு முன்னாடி நீ எப்படி வேணும்னாலும் பேசலாம்… ஆனா இப்ப நீ இப்படி பேசினா, நான் உன்னை நல்லா வெச்சுக்கலைன்னு தான் நினைப்பாங்க… அது உனக்கு இன்னும் புரியல…” அவளது சிறுபிள்ளை தனத்தை, சட்டென பேசிவிட்டு யோசிக்கும் சுபாவத்தை புரிந்தவர்களுக்கு அவள் செய்தது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் எந்த நேரத்திலும் அது சரியாக இருக்காதே. அதை மென்மையாக சொல்லியும் புரிய வைக்க முடியாது. சற்று தடாலடியாக அடித்தால் மட்டுமே அவள் வழிக்கு வருவாள் என்பது அவனது கணக்கு.

அவனது சாடலில் தலைகுனிந்தவள்,

“சாரி…” என்றவள் சட்டென எழுந்து கொண்டாள்.

உணர்வுகள் அனைத்தையும் அடக்கி வைக்க பழக சொல்கிறான். ஆனால் அவளால் அது முடியாத காரியம். மனதில் வைத்துக் கொள்ள தெரியாது… சட்டென பேசி விடுவது அவளது குணம், உடன் பிறந்தது. அடக்க அடக்க அவள் எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடலாம் என்று தான் தோன்றியது.

அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தான். ஒரு விதமான இறுக்கத்தோடு தான் இருந்தாள்.

“மேடம்ஜி என்ன எழுந்துட்டீங்க?” என்றவன் அவளது கையை பிடித்து அமர வைக்க முயல,

“நான் கிளம்பனும்…” என்று முறைத்தபடி கூறினாள்.

“என்னை விட்டுட்டு ஓடறதுலையே குறியா இருடி…” என்று சிரித்தவன், அவளை இழுத்து தன்னருகே அமர வைத்தான். பல்லைக் கடித்துக் கொண்டே அருகில் அமர்ந்தவளை சிறு சிரிப்போடு பார்த்தான்.

பிருந்தாவை நோக்கி குனிந்த கார்த்திக், “ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க, அவள் ஆமென்று தலையசைத்தாள். ‘என்ன?’ என்று பார்வையால் அவன் கேட்க, அவன் புறம் குனிந்த பிருந்தா,

“நீங்க மனு தாக்கல் பண்ணது டிவி நியுஸ்ல வந்துச்சு…” என்று நிறுத்த,

“ம்ம்ம்… சரி?”

“அதுல இந்த சௌஜன்யா ஷ்யாம் அண்ணனோட இடுப்பை பிடிச்சுட்டு சிரிக்கற மாதிரி காட்டிட்டாங்க…” என்று மென்று விழுங்கவும்,

“இடுப்பை பிடிச்சாளா?” என்று யோசித்தான். எப்படி யோசித்தாலும் அந்த சம்பவம் நினைவுக்கு வர மறுத்தது. அதாவது அது பெரிய சம்பவமாகவே அவனோ, ஷ்யாமோ நினைக்கவே இல்லை. அவளாக வந்தாள், ஷ்யாம் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருக்க, எதையோ அவன் காதில் கிசுகிசுத்தாள். அதை கேட்டவன், சாதாரணமாக, ‘நாம அப்புறமா இதைப் பத்தி பேசலாம் மா…’ என்று முடித்தான். அதன் பின் யாரோ சற்று நகைச்சுவையாக பேசிவிட, எல்லோரும் வாய்விட்டு சிரித்தது நினைவு இருந்தது. ஆனால் எந்த கேப்பில் அவள் இப்படி செய்திருக்கக் கூடும் என்பது நினைவில்லையே.

கார்த்திக்கு மண்டை குழம்பியது.

நடந்து கொண்டிருந்த அலம்பல்களை சமையலறையிலிருந்து பைரவி பார்த்துக் கொண்டுதானிருந்தார். அவருக்கு என்னவோ இருவரையும் பார்க்கையில் புது மண தம்பதியராகவே தோன்றவில்லை. காதலித்து மணம் செய்து கொண்டவர்கள் இப்படி இருப்பார்கள் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.

என்னவென்று மஹாவாக கூறினால் தான் உண்டு என தெரியும் அவருக்கு. அவளானால் கணவனை விட்டுத் தர முடியாமல் தங்களிடமே வாதம் செய்து கொண்டிருகிறாள். ஏதாவது பெரிய பிரச்சனை என்றால் என்ன செய்ய முடியும் அவளால் என்று தோன்றி அவரது அடி வயிறு கலங்கியது அதிலும் ஷ்யாம் போன்ற ஒருவனை சமாளிப்பது என்பதை அவரால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.

ஷ்யாமை பொறுத்தவரை நன்றாக பழகும் வரை அவனை போன்ற ஒரு நல்லவனை பார்க்க முடியாது. ஆனால் கொஞ்சம் மாறிவிட்டால் அவனைப் போன்ற மோசமான பிறவியை கண்டிருக்கவே முடியாது என்பது திண்ணம்.

பெண்ணை பெற்ற அந்த தாய்க்கு உள்ளுக்குள் ஏதோ நடுக்கம் ஓடியது.

ஆண்டவா… என் பெண்ணை காப்பாற்று என்று நினைத்துக் கொண்டார். திருமணம் செய்து கொடுக்கும் வரை இது தோன்றவே இல்லை அவருக்கு. ஷ்யாமின் அந்தஸ்து, அவனுக்கான மரியாதை, அவர்களது உயரம் எல்லாமாக கிட்டத்தட்ட பைரவியின் கண்ணை மறைத்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் இப்போது மகளின் நல்வாழ்க்கை தான் முக்கியம் என்று தோன்றியது.

ஆனால் இந்த கவலையெல்லாம் அவருக்கு தேவையே இல்லை என்பதை யார் கூற முடியும்? ஷ்யாமை அடித்து துவைத்துக் கொண்டிருப்பது அவரது மகள் தான் என்பதை அவர் உணர்வாரா?

உணர்ந்தால் மட்டும் அவரால் என்ன செய்து விட முடியும்?

“உங்க அம்மா உனக்கு காபி போட்டு தந்திருப்பாங்களே?” என்று கிண்டலாக ஷ்யாம் கேட்க,

“ஆமா…” சற்று கொதிப்போடு தான் கூறினாள் மஹா. அவள் புறமே திரும்பியிருந்தவனை, ‘ஸ்ஸ்ஸ்’ என்று சப்தமில்லாமல் அழைத்தான் கார்த்திக். இந்த பிரச்சனை குறித்து அவனை உஷார் படுத்தாவிட்டால் கண்டிப்பாக சேதாரம் அதிகமாகி விடுமே! ஆனால் அவன் திரும்பினால் தானே?! அவனது கவனம் முழுவதும் தான் அவனது மனைவி மேலேயே இருக்கிறதே!

“அப்புறம் என்ன கொட்டிகிட்ட?”

“ம்ம்ம்… என்னவோ…”

“அப்படி ஒரு டிஷ்ஷா?” என்று சிரித்தவனை பார்த்து முறைத்தாள் மஹா.

“ம்ம்ம்… ஆமா…”

“சரி… நீ மட்டும் கொட்டிகிட்டா போதுமா? நான் என் மாமியார் சமையலை ஒரு கை பாக்க வேண்டாமா?” அதே நக்கல் தான் அவனது குரலில்.

அதுவரை மெளனமாக இருவரது சண்டையும் பார்த்துக் கொண்டிருந்த முருகானந்தம்,

“சீக்கிரம் மாப்பிள்ளைக்கு டிபன் ரெடி பண்ணு பைரவி…” என்று சற்று சப்தமாக கூறியவர், “பாப்பா… ஏன்டா மாப்ள கிட்ட இப்படி முறைச்சுக்கற?” என்று மகாவிடம் கேட்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லப்பா… வேண்டுதல் தான்…” என்று குதர்க்கமாக கூற,

“வேண்டுதலா? எல்லாம் என் நேரம் தான்…” என்று சிரித்தவனை பார்த்த முருகானந்தம்,

“என்ன மாப்ள குட் நியுஸ்? உங்க பொண்டாட்டி கிட்ட மட்டும் தான் சொல்வீங்களா?” என்று சிரிக்க, ஷ்யாம் அர்த்தமாக மஹாவை பார்த்தான்.

புன்னகையோடு, “நம்ம விட்டல் ராவ் இருக்காரில்லையா…” என்று நிறுத்த, முருகானந்தம், “சென்ட்ரல் மினிஸ்டர் தானங்க சொல்றீங்க?” என்று கேட்க, மேலும் கீழுமாக தலையாட்டியவன்,

“ம்ம்ம்… ஆமா… அவரோட ப்ளாக்கை எல்லாம் நாம தான் முக்கால்வாசி வைட்டாக்கி கொடுக்கறோம் மாமா…” என்று கூற,

“நானும் கேள்விபட்டேன்…” என்றார்.

“மெடிக்கல் காலேஜ்ல அத்தனை இன்வஸ்ட்மென்ட்டும் போயிட்டு இருக்கு… மொத்தமா பெரிய அமௌன்ட்ட வெளிய எடுத்துட்டேன்… அதனால கொஞ்சம் பண முடைல இருந்தேன்…” என்று அவன் கூற, அந்த பண முடை எதனால் என்று கார்த்திக்கு புரிந்தது. மொத்தமாக இருபது கோடியை ரன்னிங் பிசினசிலிருந்து எடுப்பது என்பது எவ்வளவு ரிஸ்கியான விஷயம் என்பது அவனுக்கு புரியும். என்னதான் தான் தியேட்டரை எழுதி கொடுத்திருந்தாலும், அந்த தியேட்டர் அவ்வளவு ஒர்த் இல்லை என்பதை காட்டிலும், அது சாலிட் அசெட். லிக்விட் கேஷ் வெளியே போவது என்பது மொத்தமாக தன் மேல் ரிஸ்கை ஏற்றிக் கொள்ளும் விஷயம் என்பதை உணர்ந்தவனுக்கு ஷ்யாமின் அந்த துணிச்சல் மிக மிக பிடித்ததாக இருந்தது. ஆச்சரியமாக இருந்தது. பயமாக பதட்டமாக கூட இருந்தது.

கார்த்திக் பெரிய ரிஸ்க் எல்லாம் எடுத்தது இல்லை. பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்காமல், இருக்கின்ற நகைக் கடையை தான் வைத்து ஓட்டினான். அதன் பின் ஷ்யாம் இருக்கவும் கொஞ்சமாக இப்போது ரிஸ்க் எடுத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவனது செய்கை எல்லாம் பாதுகாப்பை ஒட்டியதாக மட்டும் தான் இருக்கும்.

ஆனால் ஷ்யாமை பொறுத்தவரை துணிச்சலாக அனைத்தையும் செய்துவிட்டு, யாரிடமும் எதுவும் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டிருந்திருக்கிறானே என்ற ஆச்சரியம் வேறு.

இதுவரை அந்த இருபது கோடி சமாசாரத்தை மகாவிடம் கூறவில்லை என்பதும் திண்ணம். எப்படி இப்படி இருக்கிறான் என்று ஆச்சரியமாக இருந்தது.

இந்த குருட்டு தன்னம்பிக்கை தனக்கு கண்டிப்பாக வர போவதில்லை என்று நினைத்துக் கொண்டான்.

“பெரிய அமௌன்ட்னா டுவன்டி சி தானே மச்சி?” என்று கேட்ட கார்த்திக்கை கண்களால் அடக்கினான்.

“இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி மச்சான்…” என்றவன், “ராவ், அடுத்த செட்டுக்கு பணத்தை இறக்கிட்டார்…” என்று இன்னமும் புன்னகைத்தான். “என்ன… அமௌன்ட் தான் கொஞ்சம் அதிகம்… முதல் கட்டமா ஐநூறை வைட் பண்ணி தர சொல்றார்… அப்புறமா இன்னும் வரும்… மொத்தமா ஒரு இரண்டாயிரம் கோடிக்கு அந்த ஆள் கணக்கு போட்டுட்டு இருக்கார்…” என்று கொஞ்சம் கூட அதிராமல் கூற, கேட்டவர்களுக்கு தான் தலை சுற்றியது. முருகானந்தம் பேசவே இல்லை.

“மச்சான்…” என்று மென்று முழுங்கியவன், “பார்த்து ஜாக்கிரதை…” என்று கூற,

“ப்ச்… இதை விட பெரிய அமௌன்ட் எல்லாம் நான் ஹேண்டில் பண்ணிருக்கேன்… என்ன ரிஸ்க் ஜாஸ்தி… கணக்கு கரெக்டா இருக்கணும்… நம்ம கணக்கு எப்பவும் பக்கா…” என்றவன், சற்று இடைவெளி விட்டு, “புலி வாலை பிடிச்ச கதை… விட முடியாது… விட்டா புலி நம்மளை அடிச்சுடும்…” என்றவன், வெகு அழுத்தமாக மஹாவை பார்த்தான்.

இது அவளுக்கான பதில்… கட் அன்ட் ரைட்டான பதில்… ஏன் அதை செய்கிறாய், இதை செய்கிறாய் என்று அவள் கேட்டதற்கான பதில். பிடித்த புலியை கண்டிப்பாக விட முடியாது… தீனி போடவில்லை என்றாலும் அது அவனையே அடித்து விடும். 

“இவ்வளவு ரிஸ்க் தேவையா?” என்று கார்த்திக் ஆரம்பிக்கும் போதே,

“ரிஸ்க் எடுக்க எனக்கு ரொம்ப பிடிக்கும் மச்சி… இப்ப உன் தங்கச்சியை கட்டி நான் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கேன் பாரு… இதை விட அந்த ரிஸ்க் எல்லாம் கம்மி தான்டா…” என்று சிரிக்க, மஹா அவனை முறைத்தாள்.

“வீட்டுக்கு போகணும்ன்னு ஆசையிருக்கா மச்சான்?” கார்த்திக் சிரிக்க,

“அதை நினைச்சா தான் பக்கு பக்குன்னு இருக்கு…” என்று நெஞ்சை பிடித்துக் கொள்ள, அதற்கும் மேல் தாள முடியாமல் அருகிலிருந்த குஷனை அவனது தலை மேல் மட்டென்று இறக்கினாள்.

“ஐயோ… என் பொண்டாட்டி என்னை கொல்ல பாக்கறா…” என்று வேண்டுமென்றே கத்த,

பிருந்தாவும் கார்த்திக்கும் சிரிக்க, பல்லைக் கடித்த மஹா, பேசாமல் பைரவியை நோக்கி போனாள்.

அதன் பின்னும் இரவு உணவை அங்கேயே முடித்துவிட்டு, அரட்டையை தொடர்ந்து விட்டுத்தான் கிளம்பினான். கார்த்திக் பிருந்தாவை அழைத்துக் கொண்டு போய் விட தயாராக, ஷ்யாம் மஹாவோடு கிளம்பினான்.

மஹா இறுக்கமாகவே தான் இருந்தாள் என்பது கார்த்திக்கும் புரிந்தது, பிருந்தாவுக்கும் புரிந்தது. ஆனால் ஷ்யாமுக்கு நேர இருக்கும் சேதாரத்தின் அளவு தான் அவர்களுக்கு புரியவில்லை.

கிளம்பியவனின் அருகில் சென்ற கார்த்திக்.

“மச்சி… நைட் ஒரு பன்னெண்டு மணிக்கு கால் பண்ணட்டா?” என்று கிசுகிசுப்பாக கேட்டான் சிரித்துக் கொண்டே.

“ஏன்டா? ஏன் இந்த கொலவெறி உனக்கு?” என்று சிரித்தவன், மஹாவை ஓரக்கண்ணால் பார்த்தான்.

“இல்ல மச்சி… பாத்தா அடி பலமா விழும் போல இருக்கு… அதான் என்னாச்சுன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்ல…”

“கிராதகா… நீயெல்லாம் ஒரு மச்சானா…” என்று மஹாவை பார்த்தவன், “யோவ் என்னய்யா பண்ணி வெச்சு இருக்க?” என்று அவனையே கேட்டான் ஷ்யாம்.

“நான் பண்ணி வைக்கல மச்சி, நீ தொட்ட குறை, விட்ட குறை தான்… வீட்டுக்கு போ… தெரியும்…” என்று கூறியவன், கண்ணடித்துவிட்டு, பிருந்தாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

ஓரக்கண்ணில் மீண்டும் மகாவை பார்த்தவன், நெஞ்சை நீவிக் விட்டுக் கொண்டான்.

“எத்தனையோ பாத்துட்டோம்… இதை பாக்க மாட்டோமா?”

*****

மெளனமாக வீட்டினுள் நுழைந்தவளின் முகம் கோவைப் பழம் போல சிவந்திருந்தது. எதுவும் பேசாமல் குளித்து விட்டு, பாலை சூடு செய்தவள், இரண்டு பேருக்குமாக எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றாள்.

அவள் வருவதற்கு முன்பாகவே படுத்திருந்தவன், இறுக்கமாக கண்களை மூடிக் கொண்டான்.

எந்த நேரம் வெடிகுண்டு வெடிக்க போகிறதோ என்ற உள்ளார்ந்த பயம் தான்!

ஆம் பயமே தான்!

‘ஊருக்கே நீ டானா இருக்கலாம் தம்ம்ம்ம்ப்ப்ப்ரி… ஆனா உன் பொண்டாட்டி கிட்ட டண்டணக்கா டான் தான…’ என்று வெண்ணிறாடை மூர்த்தி கூறுவது போல அசரீரி கேட்டது.

பாலை எடுத்துக் கொண்டு வந்தவள், நங்கென்று டேபிளில் வைக்க, அதை கண்டுகொள்ளாதவன் போல, கண்களை திறக்காமல் படுத்து இருந்தான்.

முந்தைய தின இரவே அவனது அத்தனை ஆசைகளுக்கும் மூடு விழா நடத்தியிருந்தாள் அவனது மனைவி. அதனால் பேருந்துகளில் குறிப்பிட்டு இருக்கும், ‘கரம், புறம், சிரம்’ நீட்டாதீர்கள் என்பதை வெகு நேர்த்தியாக கடைபிடிப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

அதிலும் மோகத்தின் ஆர்ப்பரிப்பில் ஆழ்ந்திருந்த அவனை, அணுவணுவாக அவளை ரசித்து புசித்துக் கொண்டிருந்தவனை பார்த்து கேட்டாளே ஒரு கேள்வி…

எவரெஸ்ட் உச்சியின், எண்பத்தி எட்டு நாற்பத்தி எட்டை கடக்க இன்னும் சில அடிகளே மிச்சம் உள்ளது என்ற நிலையில் அவள் கேட்ட அந்த கேள்வி அவனை அங்கிருந்து தூக்கி கீழே எறிந்து இருந்தது.

“ஒன்ஸ் யூஸ் பண்ணிட்டா உனக்கு இன்ட்ரெஸ்ட் போய்டுமே…” என்ற அவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அந்த இடத்தில், அந்த நிலையில், அந்த நேரத்தில் அவனுக்கு புரியவே இல்லை. தான் அவனல்ல என்று அவனது மனம் கத்திக் கூறிக் கொண்டிருந்த போது தான், அடுத்த கண்ணி வெடியில் அவன் கால் வைத்தான்.

“அவன் இல்லடி இவன்… இப்ப இருக்கவனுக்கு இந்த மஹா மட்டும் தான் வேணும்…” என்றவனை, ஆழ்ந்து பார்த்தவள்,

“அப்படீன்னா எப்படி அவ்வளவு டீப்பா ஃபீல் பண்ணிருக்க?” என்று கேட்க, அவனுக்கு புரியவில்லை.

“என்ன ஃபீல் பண்ணிருக்கேன்?” உண்மையிலேயே அவனுக்கு என்ன சொல்ல வருகிறாள் என்பதே புரியவில்லை.

“அந்த வீ… வீ…” என்று தயங்கியவள், “வீடியோல…” என்று முடிக்க,

என்னவென்று யோசித்தவன், நினைவுக்கு வந்ததும் தலையிலடித்துக் கொண்டான்.

“ஓ மை காட்… இன்னும் அந்த நெனப்புல தான் இருக்கியா?” என்று கேட்க, அவளது கண்களில் கண்ணீர் வெள்ளம். முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்து இருந்தாள்.

அவளது கண்ணீர் அவனை வெகுவாக சுட்டது. ஒன்பதாவது மேகத்தில் பறந்து கொண்டிருந்தவனை தரையில் தூக்கியடித்து இருந்தது.

அவளை தான் அழ வைக்கிறேனா? அதுதான் உண்மையா? மனம் வெகுவாக காயப்பட்டு இருந்தது. மெளனமாக அவளை விட்டு விலகியவன், குரல் கனக்க,

“லைஃப்ல தோத்துகிட்டு இருக்கனோன்னு எனக்கு தோணுது மஹா…” என்றவனின் கையை பிடித்தாள்.

“ப்ச்… விடு…” என்றவன், பால்கனியிலிருந்த மூங்கில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு இரவை வெறிக்க ஆரம்பித்து இருந்தான். எவ்வளவு சந்தோஷமாக துவங்கிய ஒரு உறவு… முடிவு பெறாமல், அதிலும் வெகுவாக காயப்பட்டு, இது போல முடியும் என்று அவன் நினைக்கவே இல்லை.

அதே மனநிலை தான் இன்றைக்கும் அவனுக்கு. முந்தைய தினம் இரவு முழுவதையும் பால்கனியிலேயே கழித்தவன், இப்போது கண்களை இறுக்கமாக மூடியபடி படுத்துக் கொண்டான்.

கண்ணை திறந்து பார்த்தால் தானே விசுவாமித்திரனின் தவத்தை மேனகை கலைக்க?!

“பால்…” என்றவளின் குரலுக்கு விழிக்க வேண்டுமா என்று யோசித்தது மனது.

‘யோசிடா ஷ்யாம்… நீ கண்ணை தொறந்தா கண்டிப்பா உன்னை சமாதி பண்ண ரெடியா இருக்கா… அதுவும் இன்னைக்கு… வேண்டாம் டா… சபலப்பட்டுடாத செல்லம்… ஸ்டெடி… ஸ்டெடி…’ தனக்கு தானே கூறிக் கொண்டவன்,

“நான் தூங்கிட்டேன்…” என்று இன்னமும் இறுக்கமாக கண்களை மூடிக்கொள்ள,

“அந்த தூங்கின மூஞ்சியை கொஞ்சம் இந்த பக்கம் காட்டு…” என்றாள் பல்லைக் கடித்து கொண்டு!

‘தூங்கினா எப்படி எனக்கு கேக்கும்… ஆஹா மாட்டிகிட்டேனே…’ என்று யோசித்தவன், அவள் புறம் திரும்பி, “ஹாய் பொண்டாட்டி… எப்படி இருக்கீங்க?” என்று கையை காட்டி, ‘ஈஈஈஈ’ என்று சிரித்து வைக்க,

“சகிக்கல…” என்று கடுப்படித்தாள்.

“அப்படியா? ஓகே… பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சு என்னோட மூஞ்சியை மாத்திக்கட்டா?” என்று அப்பாவியை போல அவன் கேட்டு வைக்க,

“ஏன்?” என்று கேட்டு முறைத்தாள்.

“நீங்க தான் சகிக்கலைன்னு சொல்லிட்டீங்களே மேடம் ஜி…”

“உன்னை…” என்று கடுப்பாக பல்லைக் கடித்தவள், “ஏன்டா… அத்தனை பேரையும் விட்டுட்டு உன்னை தான் கட்டிப் பிடிப்பாளா?” நின்று கொண்டு ரவுத்திரமாக கேட்க,

“யாரடி சொல்ற?” என்று கேட்டான் ஷ்யாம். உண்மையில் அவளது கேள்வி அவனுக்கு புரியவே இல்லை.

“ம்ம்ம்ம்… உன்னோட வப்… ம்ம்ம்ம்… எக்ஸ் கேர்ள்ப்ரென்ட்ட சொல்றேன்…” என்றவளின் முகத்தில் கோபம் கனன்றுக் கொண்டிருந்தது.

“எவடி அவ? எனக்கே தெரியாம?”

“ம்ம்ம்… சௌஜன்யா யாராம்?” சீறினாள்.

“அவ எப்ப டி என்னோட கேர்ள் ப்ரென்ட் ஆனா?”

“அப்புறம் எப்படிடா?” என்று கேட்க வந்தவள், அதற்கும் மேல் கேட்க முடியாமல் நிறுத்த,

“பேசிக்கலி பிசிக்கலி மெண்டலி உனக்கு ஒரு விஷயம் புரியல…” என்றவன், எழுந்து படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டவன், “லவ் வேற, லஸ்ட் வேற மஹா… ஆக்சுவலி அது லஸ்ட் கூட கிடையாது… ஜஸ்ட் ன் ஒன் நைட் ஸ்டான்ட்… இப்ப நாம…” என்று கூறிக் கொண்டே போக,

“நிறுத்து… எனக்கு ஒரு எழவும் தெரிய வேணா… எஸ்ஜே சூர்யா மாதிரி இருக்கு ஆனா இல்லையாம்… எனக்கு காது குத்திட்டாங்கடா…” பல்லைக் கடித்தவள், “அதை விட்டுத் தொலை… பழசை பேசி ஒண்ணுமே ஆக போறதில்லைன்னு வேற டையலாக் அடிப்ப… இப்ப எப்படி அவ உன்னை கட்டிபிடிச்சா? அதுக்கு பதிலை சொல்லாம நீ தூங்கறவனா?” 

“எப்படீ கட்டிப் பிடிச்சா?”

“ம்ம்… வேணா… என்னை கொலகாரியாக்காத…” என்றவளின் முகம் தக்காளிப் பழமாக சிவந்திருக்க, அப்போதுதான் சௌஜன்யா கவுன்சில் மீட்டிங்கின் போது சிரித்தபடி அவனது இடையை வளைத்தது நினைவில் வந்தது. ‘ஆஹா வெச்சுட்டாங்கய்யா ஆப்பு’ என்று தலை சுற்றித்தான் போனான். ‘எவன்யா வெச்சான் இந்த சூனியத்தை?’ படமெடுத்த மீடியா குழுவினரை மனதுக்குள் தாளித்துக் கொண்டிருந்தான்.

“ஏய் லூசு பொண்டாட்டி… அவ பழக்கமே இப்படித்தான்… உனக்கு தெரியாதா? அவ ஏதோ படம் ப்ரோடியுஸ் பண்ண போறாளாம்… முன்னாடியே ரெண்டு படம் ப்ரோடியுஸ் பண்ணிருக்கா… இப்ப பைனான்ஸ் கேட்டா… யோசிக்கறேன்னு சொன்னேன்… அவ்வளவுதான்டி நடந்தது…” என்று கூறியவனை முறைத்தாள்.

“அதுக்கு எதுக்குடா கட்டிப்பிடிக்கணும்? நீ ஈஈன்னு இளிக்கணும்?” மனைவியின் கிடுக்கிப் பிடி கேள்விக்கு அவன் பதில்களை தயார் செய்தா வைத்தான்? ‘அடேய் கிராதகா… சாமியாட போறான்னு சொன்னியே… இதான் மேட்டருன்னு சொன்னியாடா? தெரிஞ்சு இருந்தா கொஞ்சம் பிரிப்பர் பண்ணி இருப்பேனே…’ கார்த்திக்கை மனதுக்குள் வறுத்து எடுத்தவன்,

“டார்லிங்… அவ கட்டிப் பிடிக்கறதுக்கு நான் என்ன பண்ண? அதோட அவளை பார்த்து நான் எப்ப டார்லிங் சிரிச்சேன்? அந்த உன் அண்ணன் பன்னாடை என்னவோ சொன்னான்னு சிரிச்சேன் டா…ர்ர்ர்லிங்க்க்க்…” என்று கடுப்பாக கூற,

“என் அண்ணன் உனக்கு பன்னாடையா? எருமை…”

“பின்ன… பேரை வெச்சானே… அதுக்கு சோறு வெச்சானா? மேட்டரை சொல்லாம…” என்று பல்லைக் கடிக்க,

“என்னடா மேட்டர்?”

“ம்ம்ம் மண்ணாங்கட்டி மேட்டர்…”

“கொழுப்பா?” முறைத்தாள்!

“ம்ம்ம்… சரி உன்னோட க்ராஸ் எக்ஸாமினேஷன் முடிஞ்சுச்சா? நான் இப்ப படுக்கலாமா?” என்று கேட்டவனை முறைத்துக் கொண்டே பாலை அவனிடம் கொடுக்க, ஒரே மூச்சில் குடித்து விட்டு கவிழ்ந்தடித்து படுத்தான்.

முணுமுணுத்துக் கொண்டே அவள் அவனருகே படுக்க, அவளை நோக்கி ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு ஒற்றைக் கையால் தலையை தாங்கிக் கொண்டு,

“இங்க பார் மஹா… திஸ் இஸ் தி லிமிட்… இந்த கோட்டை தாண்டி நீயும் வரக் கூடாது… நானும் வர மாட்டேன்…” என்று இருவருக்குமிடையில் தலையணையை வைத்து விட்டு அவளிடம் பாடம் எடுக்க, அவள் தன்னுடைய வாயில் கை வைத்து,

“டோர் க்ளோஸ் பண்ணிக்க… ஆல் டீட்டைல்ஸ் ஐ நோ…” என்றவளை,

“அப்படித்தான்டி சொல்வ… ஆனா நீயே என்னை உசுப்பேத்தி விடுவ… காலை பாரு பாவா… அதைப் பாரு பாவா… இதை பாரு பாவான்னு ஹஸ்கியா பேசி மூடை ஏத்தி விடுவ… நானும் ஜொள்ளு விட்டுட்டு மானம் கெட்டு போய் உன்கிட்ட வருவேன்… அப்புறம் திடீர்ன்னு உனக்கு ஞான கண்ல ஏதாவது தெரிஞ்சுடும்… சிகரெட்டை தூக்கி போட்டு மிதிச்சு ராவர மாதிரி என் மூடை மிதி மிதின்னு மிதிச்சு ஒரு வழியாக்கிட்டு அழுவ… அப்புறம் உன் சோகம் என்னை தாக்க கண்மணி கண்மணின்னு நானும் பீல் பண்ணிட்டு ராத்திரி பூரா முழிச்சுட்டு இருக்கணும்… நோ சான்ஸ்… நீ அந்தபக்கம்… நான் இந்தப்பக்கம்… நோ டச்சிங் டச்சிங்… ஹஸ்கியா ஏதாவது பேசு… ராவிடறேன் ராவி…” நீளமாக கடுப்பு ப்ளஸ் எரிச்சலோடு பேசிவிட்டு கவிழ்ந்தடிக்க, அவளால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. வாய் விட்டு சிரித்தவள்,

“அப்படியா பாவா…” அவன் கூறியதை போலவே வேண்டுமென்றே ஹஸ்கியாக கூற,

“வேணான்டி… நேத்தே என்னை ரொம்ப டென்ஷனாக்கி விட்டுட்ட…” என்றவனை,

“என்ன பாவா… பொசுக்குன்னு இப்படி சொல்லீட்டீங்க…” என்றவளின் குரலில் அத்தனை போதையிருந்தது. ஆனால் அவள் அதை விளையாட்டாக செய்து கொண்டிருந்தாள்.

“ஏய் வேணா… அப்புறம் சேதாரமானா நான் பொறுப்பில்ல…” கையை நீட்டி எச்சரிக்க,

“அப்… ப்ப… டியா பாவ்வ்வா…” என்பதை அத்தனை போதையாக கூறியது அவளது அதரங்கள். அவளையே சற்று நேரம் பார்த்தவனுக்குள் ஒருவிதமான போதை ஏறியது.

நடுவிலிருந்த தலையணையை தூக்கிப் போட்டவன், அவளது முகத்தை பற்றி, ‘பாவ்வ்வா’ என்று போதையாக கூறிய அந்த அதரங்களையே பார்த்தவன், வன்மையாக கொய்தான்.

உள்ளுக்குள் சிலபல நிலநடுக்கங்கள் தான்… இருவருக்குள்ளும்!

அவனது கைகள் அதன் போக்கில் பயணிக்க, தன்னுள் அவளை மெய்மறந்து ஆழ செய்தவன், சற்று நேரம் கழித்து அவளை விடுவித்து விட்டு,

“நானும் மனுஷன் தான்டி… என்னை கன்னாபின்னான்னு உசுப்பேத்தி விட்டுட்டு, என்னவெல்லாம் பேசற…” என்றவன், “இன்னொரு தடவை பாவ்வ்வான்னு ஹஸ்கியா கூப்பிடு… அப்புறம் உனக்கு இதான் ட்ரீட்மெண்ட்…” என்றவனின் ட்ரீட்மென்ட்டில் சிரிக்கத் தான் தோன்றியது, வெட்கத்தோடு!

வெட்கமாக சிரித்தவளை பார்த்தவன்,

“நோஓஓ… கண்ட்ரோல் டா கண்ட்ரோல்… இன்னைக்கு இவ என்ன பண்ணாலும் நாம அசைஞ்சே கொடுக்கக் கூடாது…” என்றவன், இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தான்.

மஹா வாய்விட்டு சிரித்தாள்!

வெகு நாட்களுக்கு பிறகு, இலகுவான மனநிலையில் உறங்கினாள்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் ஐம்பத்து ஏழு

நீண்ட இடைவெளிக்குப் பின் சுஷ்ருதாவிற்கு வந்திருந்தாள் மஹா. ஷ்யாம் எப்போதும் வருவதுதான். தினம் ரவுண்ட்ஸ் போகும் போதெல்லாம் ஒரு நிமிடம் விஜியையும் பார்த்துவிட்டுத்தான் போவதும். அப்போது உடனிருக்கும் மருத்துவரிடம் அவனைப் பற்றிக் கேட்டுக் கொள்வானேயன்றி அவனிடம் பேச மாட்டான்.விஜியும் அவனது முகத்தை…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்