• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓ மை ஏஞ்சல் -- அத்தியாயம் 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
1,007
Reaction score
113,009
Location
anywhre
வணக்கம் டியர்ஸ்,

omy.jpeg

அத்தியாயம் 3

“என்னடி? இன்னிக்கும் அந்த வேண்டாத வேலையைப் பார்க்கப் போகறியா?” எனச் சலிப்பாகக் கேட்டாள் மேகலா.
“எதுடி வேண்டாத வேலை? என் ஆளுக்கு காதல் சொல்றது வேண்டாத வேலையா? பிச்சுப் பிச்சு” என எகிறினாள் இவள்.
காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்துக் கிளம்பி, ஆறு மணிக்கு முதல் ஆளாய் ஹாஸ்டல் சமையலறைக்குப் போய் காபி வாங்கிக் குடித்து விட்டுத் தெம்பாய் கட்டிலில் அமர்ந்திருந்தவளை முறைத்தாள் மேகலா.
“நீயும்தான் பல மாசமா வரைஞ்சும் எழுதியும் தள்ளற!! அவன் உன்னைத் தேடி வரவே இல்லையே!!! எனக்கென்னமோ உன்னை அவன் ஒரு லூசுன்னு நெனைச்சி டீல்ல விட்டுட்டான்னு தோணுது”
தோழி சொன்னதைக் கேட்டதும் முகம் வாடிப் போனது இவளுக்கு.
“நானே போய் அவன் முன்ன நின்னு லவ் யூடா, லவ் யூ சோ மச்னு வெக்கத்த விட்டுச் சொல்லிடவா? என்னமோ ரொம்ப பிடிக்குதுடி அவன! படிக்கறப்போ, படுக்கறப்போ, தூங்கறப்போ, சாப்பிடறப்போன்னு எல்லா பொழுதுகளிலும் என் மண்டைக்குள்ளயும் மனசுக்குள்ளயும் நின்னு டார்ச்சர் பண்ணுறான்டி! தூரமா நின்னு கலாய்க்க தெரிஞ்ச எனக்கு, அவன கிட்டக்க பார்த்தா, வாயையே திறக்க முடியல! நடுங்கிடுது! அவனுக்கு காதல் சொன்ன பல பேர்ல நானும் பத்தோட பதினொன்னா ஆகிடக் கூடாதேன்ற பதட்டம் வேற! அவன் மனசுல ஆழமா இறங்கனும்னு இந்த கிறுக்குத்தனமெல்லாம் பண்ணறேன்! ஆனா நான் யாருன்னு தெரிஞ்சுக்கனும்னு ஆவலே இல்லாம இருக்கானேன்னு நெனைக்கறப்போ மனசு சுக்கு நூறா வெடிக்குதுடி!” என்றவள் மார்பை ஒரு கையால் அழுத்திக் கொண்டாள்.
மஞ்சள் வர்ண சுடிதாரில், முகம் மகிழ்ச்சியில் மின்ன தேவதைப் போல கிளம்பி நின்றவளைத் தன் பேச்சு களை இழக்க வைத்து விட்டதை எண்ணி வருத்தமாகிப் போனது மேகலாவுக்கு. கட்டிலில் இருந்து இறங்கி வந்து, வயிற்றோடு இவளைக் கட்டிக் கொண்டாள்.
“செல்லம்! இந்த வயசுல காதல்லாம் தேவையாடி உனக்கு? படிச்சு முடிச்சு நல்ல வேலைல சேர்ந்து உங்கப்பாவுக்கும் தாத்தாவுக்கும் பெருமைத் தேடி தர போறேன்னு சொன்னதெல்லாம் எருமை சாணியா போச்சா கோபால்?”
மேகலாவை திருப்பி இறுக்கிக் கொண்ட இவள்,
“மேகி! போன செமஸ்டர்ல நீ எத்தனை பாடத்துல அரியர் வச்ச?” எனக் கேட்டாள்.
“ரெண்டு”
“நானு?”
“எல்லாமே கிளியர் பண்ணிட்ட! அதுவும் நல்ல மார்க் எடுத்து”
“நீ யாரையாச்சும் லவ் பண்ணறியா?”
“இல்ல”
“பிறகு ஏன் அரியர்?”
“அது…”
“இப்போ புரியுதா லவ்வுக்கும், மார்க்குக்கும் சம்பந்தம் இல்லைன்னு! மாட்டு வண்டில ஒரு மாடு காதல்னா, இன்னொரு மாடு கல்வி! ரெண்டையும் சரி சமமா பிடிச்சு ஓட்டினாத்தான் வாழ்க்கைப் பாதை ஒழுங்கா ஓடும்! ஒன்ன விட்டுட்டு, இன்னொன்னுக்கு இம்பார்ட்டண்ட் குடுத்தா வண்டி குடை சாஞ்சிடும். அப்படி ரெண்டு மாட்டையும் சீரா தட்டிக் குடுத்து வண்டி ஓட்டத் தெரியாதவங்க, காதல் கத்திரிக்காய்னு ரிஸ்க் எடுக்கவே கூடாதுடி! என்னால ரெண்டையும் மேனேஜ் பண்ண முடியும்! நீ கவலைப்படாத!” என்றவள் தோழியை விலக்கி விட்டு பாடப் புத்தகத்தோடு அமர்ந்து விட்டாள்.
மேகலாவோ மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டு தோழியையே பார்த்திருந்தாள். மாநிறத்தில், கொளு கொளுவென கொள்ளை அழகாய் இருந்தாள் பெண். வில் புருவம், கவி பாடும் பெரிய கண்கள், உப்பிய கன்னம், குட்டி உதடுகள், கியூட்டான சின்ன மூக்கு, முதுகு வரை புரண்டிருந்த அடர்த்தியான கேசம் என தேவதையாய் தெரிந்தாள்.
“அழகுடி நீ!”
பாடப் புத்தகத்தில் மூழ்கி இருந்தவள் எந்தப் பதிலும் சொல்லவில்லை.
“அடியே!” என மேகலா சத்தமாய் அழைக்க, நிமிர்ந்து பார்த்தாள் பெண்.
“படிச்சா நினைவுல அவன் வரான், படுத்தா கனவுல அவன் வரான்னு பொலம்பிட்டு எப்படிடி நல்லா படிச்சு மார்க் எடுக்கற?” எனத் தன் சந்தேகத்தைக் கேட்டாள் மேகலா.
புன்னகையுடன் தோழியைப் பார்த்து,
“படிக்கறப்போ ஞாபகம் வந்தா, மைண்ட்ல பாடத்தைப் பத்தி அவன் கிட்ட பேசுவேன். படுக்கறப்போ ஞாபகம் வந்தா எனக்குப் பிடிச்ச பாடல்களைப் பத்தி அவன் கிட்ட பேசுவேன், சாப்பிடறப்போ ஞாபகம் வந்தா இன்னிக்கு சாம்பார் சாதம் கன்றாவியா இருந்ததுன்னு கம்ப்ளேண்ட் பண்ணுவேன்! மொத்தத்துல மொத்தமா என்னோட ஆக்டிவிட்டிஸ்ல அவனையும் இணைச்சுப்பேன்! அதான் என்னால சமாளிக்க முடியுது போல” என்றாள்.
“மொத்தத்துல முத்திடுச்சு!”
போனில் அலாரம் அடிக்க,
“மணி ஆறு நாப்பந்தைஞ்சு ஆச்சுடி! நான் போய் என் வேலைய முடிச்சுட்டு காண்டின்ல வேய்ட் பண்ணுறேன்! மறுபடி படுத்துத் தூங்கிடாம கிளம்பி வந்துடு மேகி! பாய்” எனப் புத்தகப் பையை எடுத்துக் கொண்டுக் கிளம்பினாள் பெண்.
சில்லென்ற காற்று அவள் மேனியைத் தழுவியது. சில்லிப்பை விரட்டி, சுளீரெனும் சூட்டைக் கிளப்ப தன்னாலான வேலைகளைப் பார்க்க ஆரம்பித்திருந்தார் சூரியனார்.
இவர்கள் ஹாஸ்டல் அருகே ஓர் ஆலமரம் இருக்கும். ஏற்கனவே அங்கே தங்கி இருந்த பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு விநாயகர் சிலையை வைத்திருந்தார்கள் அம்மரத்தின் கீழ். விநாயகருக்கு முன் போய் நின்று சூடம் ஒன்று ஏற்றி வைத்து கை கூப்பி,
“காதல் கவலைய
நீ தீர்த்து வச்சா கணேசா
கோவில் வாசல் வந்து
வெடிச்சிடுவேன் பட்டாசா
யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா”(பிள்ளையார்பட்டி ஹீரோ பாடல் வரி) எனப் பாடி அவரையே பேஜார் செய்து விட்டுக் கிளம்பினாள் இவள்.
காலேஜீனுள்ளே இவள் நுழைய, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தலைகள் மட்டுமே தெரிந்தன. அவசர அவசரமாக இவள் ஆளின் கிளாஸ் ரூமை நாடி நடந்தாள். இருட்டாய் இருந்தது
 
vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
1,007
Reaction score
113,009
Location
anywhre
அவ்வறை. எல்லா விளக்குகளையும் எரிய விடாமல், வைட் போர்ட் மேல் இருந்த விளைக்கை மட்டும் போட்டு விட்டு, பேகில் இருந்து பரபரவென கலர் கேசை எடுத்தாள் இவள்.
வைட் போர்ட்டை சுத்தமாகத் துடைத்து விட்டு, சில நிமிடங்கள் கண் மூடி நின்றவள், மனதில் உள்ளவனை அழகாய் வரைய ஆரம்பித்தாள்.
அந்த கிளாஸ் ரூமின் கடைசி பென்ச் அருகே, தரையில் சற்று மறைவாக அமர்ந்திருந்த சங்கத்தமிழன், கண் இமைக்காமல், உள்ளே வந்ததில் இருந்து அவள் கண்கள் காட்டும் ஜாலத்தையும், கைகள் செய்யும் வித்தையையும் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
மெல்லியக் குரலில் பாடியபடியே வரைந்து கொண்டிருந்தாள் அவள். ஆளையும் அந்த குரலையும் அடையாளம் கண்டுக் கொண்டவனுக்கு முகம் மலர்ந்து போனது.
“அவளா நீ!!!” என முணுமுணுத்துக் கொண்டே கண் சிமிட்டாமல் அவளையே பார்த்திருந்தான்.
இவளோ, அங்கொருத்தன் அணு அணுவாக இவளையே ரசித்தபடி இருப்பதை அறியாமல் தன்னுலகத்தில் மூழ்கி இருந்தாள்.
“சுத்தத் தமிழ் வீரம்
ரத்தத்திலே ஊறும்
சிங்கத் தமிழன்
சங்கத் தமிழன்!!” என அவள் சன்னமாகப் பாடியபடியே வரைந்த போது, அவன் பெயரை அவள் குரல் வழி கேட்டு இவனுக்கு மேனியெல்லாம் சிலிர்த்தடங்கியது!
படத்தை வரைந்து முடித்தவள் இவனுக்கு முதுகு காட்டி எதையோ எழுதி கொண்டிருக்க, கடவுளைக் கண்ட பக்தனைப் போல ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தான் இவன்.
எழுதி முடித்து, சற்று நகர்ந்து தனது படைப்பை ரசித்தவள், கை பேசியில் படமும் எடுத்துக் கொண்டாள்.
“இயல் இசை நாடகம்
என்பது முத்தமிழாகும்
இவள் இனி உன் வசம்
என்பது சங்கத்தமிழாகும்!!!!!”
அந்த சங்கத்தமிழ் எனும் எழுத்தை விரல்களால் வருடி அவ்விரல்களை முத்தமிட்டுக் கொண்டாள் அவள்.
பின் மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்தவள்,
“ஆளுங்க வரும் நேரமாச்சு! ஓடிடுடி கைப்புள்ள” எனச் சொல்லியபடியே அவளது பொருட்களை பேகில் எடுத்து வைத்துக் கொண்டு வேக வேகமாய் கிளம்பி விட்டாள்.
அவள் வெளியேறி பல நிமிடங்கள் ஆன போதும் கூட அப்படியே அமர்ந்திருந்தான் சங்கத்தமிழன். கண்ணாமூச்சி ஆட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருந்தவனின் மனம் சந்தோஷ மிகுதியில் விம்மித் தணிந்தது. இதயம் படபடவென முரசுக் கொட்ட, அவளது செய்கைகளால் ஏற்கனவே லேசாய் மொட்டு விட்டிருந்த காதல் பூ, இப்பொழுது அவளைப் பார்த்த நொடி, மலர்ந்து மணம் வீச ஆரம்பித்தது!
“உன் சங்குக்கு சங்கூதற நேரத்துல கூட என் சரி பாதியா, சகதர்மிணியா நீதான் பக்கத்துல இருக்கனும்னு முடிவு பண்ணிட்டேன் நான்! யூ ஆர் மைன்! ஒன்லி மைன்!” என முணுமுணுத்தவன், மெல்ல எழுந்து வந்து அவள் எழுதிய கவிதையையும், வரைந்த இவன் படத்தையும் மென்மையாய் வருடிக் கொடுத்தான்.
எப்பொழுதும் போல அதை போனில் படம் பிடித்துக் கொண்டவன், காண்டீனை நோக்கி நடை போட்டான்.
அவளைக் கண்டுப் பிடிக்கப் போகிறேன் எனத் தந்தையிடம் சொன்ன தினத்தில் இருந்து தினமும் விடிகாலையிலேயே கிளாஸ் ரூமில் வந்து மறைந்து அமர்ந்து காத்திருக்கிறான். மூன்று நாள் சென்று இன்றுதான் அவள் இவனுக்குத் தரிசனம் கொடுத்திருந்தாள்.
கவிதை, ஓவியம், சுட்டித்தனம் என மனதை கவர்ந்தவளும், எல்லோரும் மரியாதையாக நடத்தும் தன்னை டேய் சங்கு என அழைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியவளும் ஒரே ஆள்தான் என அறிந்து கொண்டவனுக்குச் சிரிப்புதான் வந்தது.
ஆச்சரியம் நிறைந்த அடாவடி இவள்! மென்மையும் வன்மையும் கலந்த அராத்து இவள் எனப் புரிந்து கொண்டவனுக்கு அவளை இன்னும் இன்னும் பிடித்தது.
அவளை இடித்து கீழே தள்ளிய தினத்தில், பெண்ணின் பேச்சு இவனுக்கு கோபத்தைக் கொடுப்பதற்கு பதில் சிரிப்பைத்தான் வரவழைத்தது.
“மாது! இப்பத்தானடா அவள நல்லவனு புகழ்ந்தேன்! அதுக்குள்ள ஆப்படிச்சிட்டுப் போறா பாரேன்! என் பேரெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கா” என நண்பனிடம் சொல்லிச் சிரித்தவனைப் பார்த்து,
“உன் பேர் இந்த காலேஜ் பொண்ணுங்களுக்குத் தெரியலைனாத்தான்டா ஆச்சரியம்! ஹாட்டு ஃபிகர்டா நீ” எனக் கண்ணடித்தான் மாதவன்.
“அடச்சீ!! நண்பன பார்த்து ஃபிகருன்னு சொன்ன ஒரே ஆள் நீயாதான்டா இருப்ப” எனச் சொல்லி முதுகிலேயே மொத்தினான் சங்கத்தமிழன்.
அதோடு அந்தப் பெண்ணைப் பற்றி மறந்து போயிருந்தான் இவன். மனமெல்லாம் முகமறியா பெண்ணிடம் லயித்திருக்க, வேறொரு பெண்ணுக்கு சிந்தையில் கூட இடமளிக்கவில்லை. அடுத்த முறை பைக்கில் அவனோடு ஒட்டிக் கொண்டு வந்த போது, இந்த பெண்ணுக்கு என்ன ஆபத்தோ என்னவோ என பதட்டத்தில் இருந்தவனுக்கு அவளது ஒட்டுதல் அந்த நேரத்தில் கூட ஒரு வகை ஒவ்வாமையையே தந்திருந்தது.
அடுத்த முறை இந்த பெண் இப்படி எதாவது சிறுபிள்ளைத்தனமாய் நடந்தால், பிடித்து வைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட வேண்டுமென எண்ணிக் கொண்டுதான் இடத்தைக் காலி செய்தான் சங்கத்தமிழன். வயது வந்த ஒரு தங்கைக்கு பொறுப்பான அண்ணனாய் இருப்பவனுக்கு, இந்த மாதிரி செயலெல்லாம் பிடிப்பதில்லை. அவனது பைக் ஏறுவதற்கு உரிமை உள்ள பெண் என்றால் அது அவனது மனைவியாகப் போகும் காதலி மட்டுமே எனும் கோட்பாடு கொண்டிருந்தான்.
அந்த மனைவி இடத்தை அலங்கரிக்கப் போகும் பெண்தான் முதன் முதலில் அவன் பைக் ஏறி இருக்கிறாள் எனும் நிதர்சனம் இப்பொழுது உறைக்க, உதடுகள் புன்னகையில் நெளிந்தன இவனுக்கு.
உல்லாசமான மனநிலையுடன் காண்டினுக்குள் நுழைந்தவனுக்கு, தோழியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அவனவள் காட்சிக் கொடுத்தாள். இவன் வந்ததை எப்படித்தான் அறிந்து கொண்டாளோ, சட்டென விழி உயர்த்தி இவனைத் திருட்டுத்தனமாக ஓரப் பார்வைப் பார்த்து விட்டு தோழியுடன் பேசுவதை தொடர்ந்தாள்.
“இதுக்குப் பேருதான் பார்க்காம பார்க்கறது போல! அதுல பி.எச்.டி பண்ணிருப்பா போல நம்மாளு” என முணுமுணுத்தவனுக்குச் சிரிப்பு வந்தது.
காலையில் அனிதா இன்னும் உறங்கிக் கொண்டிருக்க, உணவுண்ணாமல் வந்திருந்தவனுக்கு, நெஞ்சம் சந்தோஷத்தில் நிறைந்து போனதும்தான் வயிறு இன்னும் நிறையவில்லை என விளங்கியது.
காபியும், வெண் பொங்கலும் வாங்கிக் கொண்டவன் அவள் அமர்ந்திருந்த மேசையைத் தள்ளி சில அடி தூரத்தில் அமர்ந்து கொண்டான். சாப்பாட்டில் இவன் கவனம் வைத்திருப்பது போல காட்டிக் கொள்ள, அவளது திருட்டுப் பார்வைகள் அடிக்கடி இவனை மோதிப் போனது.
“என்ன மச்சி, இன்னிக்கும் சீக்கிரம் வந்துட்டியா? பைக்க பார்க்கிங்ல பார்த்துட்டு இங்கத்தான் இருப்பன்னு தேடி வந்தேன்!” என அவன் அருகில் வந்து அமர்ந்தான் மாதவன்.
“மச்சி!”
“ஹ்ம்ம் சொல்லு”
“அந்த மஞ்ச சுடிதார மெல்லத் திரும்பிப் பாரு!”
கழுத்துக்கு ஸ்ட்ரெச்சிங் செய்வது போல அசைத்துக் கொண்டே, அவளைப் பார்த்தான் மாதவன்.
“யார்டா இந்த தர்பூஸ்?” எனக் கேட்ட நண்பனை முறைத்தான் சங்கத்தமிழன்.
“அவதான் இனி உன் மச்சியோட மச்சினி! உனக்குத் தங்கச்சி”
“சேச்சே! உனக்கு வேணும்னா மச்சினியா இருந்துட்டுப் போகட்டும்! நானெல்லாம் இந்த மாதிரி பொண்ணுங்கள தங்கச்சியா ஏத்துக்க மாட்டேன்! சாரி மச்சி! ஐ காண்ட்”
“ச்சீ போடா! தங்கச்சியா ஏத்துக்காட்டியும் போகுது! அவளுக்கு ஒழுங்கா மரியாதை குடு! என் முன்னால தர்பூஸ் அது இதுன்னே, முகரை பேந்துக்கும்”
“என்ன மச்சி, ஃபிகர பார்த்ததும் நண்பனைக் கழட்டி விட்டுட்ட! இந்த பசங்களே இப்படித்தான்டா! குத்துங்க எஜமான் குத்துங்கன்னு உங்கள எல்லாம் உலக்கையாலே குத்தனும்டா ப்ள்டி பிஸ்கட்ஸ்!” என்றவன்,
“இவ உனக்கு மச்சினின்னா, அந்த பாவப்பட்ட கவிதாயினி என்னடா ஆனா?” எனக் கேட்டான்.
“அவதான் இவ! இவதான் அவ”
“வாட்??? அந்த ஓவியப் பாவை, கவிதை மேதை இந்தப் பொண்ணுதானா? ஓ மை காட்” என வியந்தான் மாதவன்.
சில நாட்களாய் கிளாஸ் ரூமில் மறைந்திருந்து இன்று கண்டுப்பிடித்ததைச் சொன்னான் சங்கத்தமிழன்.
“ஓஹோ!!!! அன்றைக்கு உன்னை சங்கு டேய்னு நாரா கிழிச்சவளும், சங்கத்தில சேர்ந்துக்கவான்னு லைன் கட்டி நிக்கறவளும் ஒரே ஆளா?” என ஆச்சரியம் மிகக் கேட்டான் மாதவன்.
“ஆமாடா ஆமா”
“ஹ்ம்ம்ம்! ஏற்கனவே கவிதையால உன்னைக் கவுத்தா! ஓவியத்தால உன்னை ஒரு வழி பண்ணா! இப்போ குறும்புத்தனத்தால உன்னை குப்புற விழ வச்சிட்டாளே! கைகாரிடா இவ! பார்த்து மச்சி! சொன்ன மாதிரியே சங்கூதிடப் போறா”
“போடா போடா பொறாமைப் புடிச்சவனே”
“எதே!! இந்த மூஞ்சு உனக்கு லவ்வரா கிடைச்சதுல எனக்குப் பொறாமையா! போடாங்!!!” எனக் கலாய்த்தவன்,
“எனிவே மச்சி!!! அந்த மஞ்ச மாக்கானோட சேர்ந்து..” என இவன் பேச்சை முடிப்பதற்குள் தொடையைப் பிடித்துக் கிள்ளி இருந்தான் சங்கத்தமிழன்.
“ஆ!!!!! அடேய்! தொடைச்சிப் போட்டுட்டு போகப் போற ஒரு பொண்ணுக்காக நண்பன் தொடையைப் புடிச்சுக் கிள்ளிட்டல்ல! நல்லா வருவடா!” எனப் பரிதாபமாகப் பேசியவன்,
“அந்த மஞ்சக் கிளிக்கு மாங்கல்யம் கொடுத்து, மஞ்சம் கண்டு மக்கள் செல்வம் கொண்டு வாழ்வாங்கு வாழ வாழ்த்தறேன்டா! நல்லா இரு மேன்” என முடித்தான்.
நண்பனை ஆழ்ந்து பார்த்த சங்கத்தமிழன்,
“உன் வாய்ஸ்ல சோகம் தெரியுது மச்சி! நீ நெனைக்கறத போல, ஃபிகர் வந்துட்டா நட்ப வெட்டி விடற ஆள் நானில்லை! ஸ்கூல்ல இருந்து தொடரும் நட்பு நம்மளது! எனக்குன்னு ஒருத்தி, உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா கூட நம்ம ஃப்ரெண்ட்ஷிப்ப உடைஞ்சிப் போய்ட விட மாட்டேன் நான்! என்னை நம்பு” என அழுத்தமாகப் பேசினான்.
அவன் தோள் மேல் கை போட்டு அணைத்துக் கொண்ட மாதவன்,
“நண்பேன்டா!” எனச் சொன்னான்.
“சரி! அவ பேர் என்ன?”
“தேவதா!!!” எனச் சத்தமாகக் குரல் கேட்க, நண்பர்கள் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.
மஞ்சள் குருவியைப் பார்த்து, கவுண்ட்டரில் நின்றுக் கொண்டிருந்த அவள் தோழிதான் அழைத்துக் கொண்டிருந்தாள்.
“பத்து ரூபா குறையுதுடி” என அவள் கூப்பிட, இவள் எழுந்து போனாள்.
“தேவதா!!!” என ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துப் புன்னகையுடன் உச்சரித்தார்கள் நண்பர்கள் இருவரும்.

(மை ஏஞ்சல்???)
 
Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,588
Reaction score
6,867
Location
Salem

Nirmala vandhachu 😍😍😍
 
CRVS

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2021
Messages
183
Reaction score
728
Location
Ullagaram
ஓ... இந்த மஞ்சகாட்டு மைனா...
தமிழனை கொஞ்சி கொஞ்சி போறா..."
அவனை ஓவியமா வரைஞ்சு, கவிதை மழையா பொழிஞ்சு,
ஓவரா கலாய்ச்சு தள்றாளே....
இந்த சண்டிராணி
பேரு தேவதா வா..?
அதுசரி, இதுங்க ரெண்டு பேருமே இப்படி மனசுக்குள்ள காதலை
வளர்த்துக்கிட்டு, இறக்கை இல்லாமலே பறக்குதுங்களே...
எப்ப வெளிப்படையா காதலை
சொல்லப் போறாங்களாம்
தெரியலையே...? தவிர, நம்மாளுக்கு
கொஞ்சம் ஓவர் பொஸஸீவ்நெஸ்
வேற இருக்குதே.... இதுல மூக்குக்கு
மேல அடிக்கடி கோபம் வருதே...
இவளால ஈடு கட்ட முடியுமா...
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
Surya Palanivel

நாட்டாமை
Joined
Nov 8, 2019
Messages
34
Reaction score
221
தேவதா பேர் அழகா இருக்கு sis.

கண்டுபிடிச்சிட்டான்.

ரெண்டு பேரும் ஆழமா இருக்காங்க..

சங்கத்தமிழன் அம்மாவுக்கும் இவளுக்கும் ஏதானும் link?
 
saideepalakshmi

மண்டலாதிபதி
Joined
Nov 11, 2023
Messages
123
Reaction score
219
Location
Salem
சந்தோஷமாக ஆரம்பித்ததில் சந்தோஷம்.ஆனால் தீடீர் வெடிய வெடிக்க வைக்க ரெடியாக இருக்கீங்க போல.
வெடிய வேடிக்கை பார்க்க ரெடியாக இருக்கோம்.
நல்ல அழகான பதிவு.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top