• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரண்டாம் உலகின் இதய ராணி -02

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

T.Shalokshan

புதிய முகம்
Joined
Nov 13, 2021
Messages
1
Reaction score
1
Location
SriLanka
இதயம் 💓 02

எங்கோ புதைக்கப்பட்ட
நினைவுகளை தோண்டி
எடுக்கின்றன!!!
சிலரின்
வார்த்தைகளும்
பார்வைகளும்...!!!
நீ உரைத்த பின் அதே
சொற்களை பிறர்
கூறும் போது
அதில் எவ்வித
சுவாரஸ்யமும் இருப்பதில்லை
அதிலும் நீயே
வருகிறாய்....!!
என் கண்களை
விட்டு கலையாத
உயிராய்,உறவாய்
என்றும் நீ.....!!!​


💓...................
சென்னையில் செல்வந்தர்கள் வசிக்கும் நகரின் மையப் பகுதியில் வெள்ளை நிறத்தில் கம்பீரமாக காட்சி அளித்த,அரண்மனை போன்ற அந்த வீட்டின் முன் வந்து நின்றது, அந்த உயர் ரக கார்!!! காரிலிருந்து இறங்கி வீட்டினுள் செல்ல........

கண்ணா என்றபடி வெளியே வந்த அன்னையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் எவ்வளவு நாள் கழித்து அதித்யனைக் கான்கிறார் அவனை அணைத்து உச்சி முகர்ந்தார் ராஜேஸ்வரி.

தேவேந்திரன் ராஜேஸ்வரி தம்பதியின் மூத்த புதல்வனே ஆதித்தியன் இளைய புதல்வன் மதுராந்தகன்.பல்கலைக்கழகத்தை நிறைவு செய்த கையோடு தான் எடுத்த பாடந்துறையில் ஸ்பெஷல் செய்கிறான் அதிலும் கடைசி வருட மாணவன்.

ஆதித்யனோ தங்களது ஆர்.ஜே.ஜேம்ஸ் தொடர்பாக சில அலுவல்களை மேற்கொள்ளச் சிங்கப்பூர் சென்றவனோ, அங்கே அதன் கிளையில் சிறிது காலம் கழித்தான். சிறு வயதில் வந்த மாற்றங்கள் போலவே தற்போதும் வர தாய் , தந்தையிடம் காரணம் சொல்லாது சிங்கப்பூர் பயணத்தை காரணமாக கொண்டு அங்கு சென்று தங்கிக் கொண்டான் ஆதித்யன்.

தற்போது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என அறிந்தே வந்துள்ளான். கண்ணா,....வாபா போலாம் உள்ள என்றபடி மகனுடன் உள்ளே செல்ல அந்த பிரமாண்டமான வீட்டில் எங்கிலும் செல்வச் செழிப்பு.

தந்தையின் அறைக்கு செல்ல....
அவரோ ஆழ்ந்த துயிலின் இருந்தார். ம்மா,.....பிரஸாகிடு வாரன் என்றபடி இரண்டாம் மாடியில் இருக்கும் தனது அறைக்கு சென்றான்.

தனது அறைக்குள் நுழைந்தவனின் உதடுகளில் கண்ணுக்கே தெரியாத சிறு புன்னகை.... தனது தாய் தான் இல்லாவிடினும் தனது அறையினை அழகாகவும், நேர்த்தியாகவும் பராமரித்து வந்துள்ளதை எண்ணி...

கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பூச்சும் கறுப்பு,வெள்ளை கலந்த கேர்டன் உட்பட அறையினுள் உள்ள அனைத்தும் கறுப்பு வெள்ளை நிறத்திலே காணப்பட்டன.

குளியல் அறைக்குள் நுழைந்து தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வெளியே தலையை துவட்டிய படி வர கண்ணா,...."அப்பா எழுந்துடாருபா"என சொல்லியபடி ராஜேஸ்வரி வந்தார். முட்டிவலினு சொல்லிக்
கொண்டு இப்பிடி தான் மேல கீழேனு ஏறி இறங்குறதா!!!! என அன்னையை கடிந்து கொள்ள,அவரோ "தலை ஈரமா இருக்கு கொடு டவல" என அவரே தலையை துவட்டி நெற்றி முறித்தார்.....

அன்னையுடன் பேசியபடி தந்தையின் அறைக்கு வர அவரோ வாப்பா டிராவல் எல்லாம் எப்படி எனக் கேட்க..... அவனோ அவரை உணர்ச்சியற்ற பார்வை பார்க்க இது ப்ர்ஸ்ட் இல்ல செகண்ட் டைம் நீங்க!!!. எப்படி உங்களாள மறைக்க முடிஞ்சுது????.என கேட்க தாயோ கண் கலங்கிப் போக அவரைப் பார்த்தவன்.


ம்மா... தலை வலிக்கு காஃபி என சொல்ல அவரும் சமையலறைக்கு செல்ல.மகனின் தலையை வருடியபடி "அப்படி இல்லப்பா மறைக்க..... நினைக்கல கவலைப் படுவீங்க அதனாலான் என சொல்ல"ஏதோ சொல்லி சமாளிங்குறீங்க ம்ம்.... என சொல்ல அவரும் சோகையாகவே புன்னகைத்தார். தேவேந்திரனுக்கு கார்ட் பிரச்சினை அதை மறைந்து மருத்துவம் செய்து வந்தார்.ஆப்ரேசன் பண்ணிய பிறகு தான் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய நேர்ந்தது.அவரை எமோஷனல் ஆக விடாது பார்த்துக் கொள்ள வேண்டும் ஆகவே தந்தையை கடிந்து கொள்ளவும் முடியவில்லை........

ராஜேஸ்வரியும் காபிகளுடன் வர அதை அருந்தியபடி மூவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

மது எங்க, அவனுக்கு எக்ஸாம் நட்ககுது.என சொல்ல சாருக்கு என்ன செய்ற ஐடியா!!!!வரடும் பார்ப்போம். என்றான்.

இங்கு கேம்பிங் இருந்து வந்தவளோ தந்தையிடம் அங்கு நடந்தது, பறந்தது என சொல்லி அவரை ஒரு வழிபடுத்திவிட்டாள். அவரும் மகளின் மகிழ்ச்சியைப் பார்த்து மகிழ்ந்து போனார்.ஆமாப்பா கடைசில அது எங்க போச்சுனு தெரியல.... என சோகமாக முடிக்க தந்தையோ அது எங்க இருந்து வந்துசோ அங்கவே யோயிருக்கும்.இல்லாட்டி யார்ரையும் கண்ணுல படாம மறைஞ்சிருக்கலாம். என சொல்ல.......இப்பிடியும் இருக்குமோ!!!! என யோசித்தபடி தனதறைக்கு சென்றாள்.

ஏண்டா கருணா வயசுப் பொண்ணு போலவா நடக்கிறா!!!!நீ தான் அவள செல்லம் குடுத்து வச்சிருக்க..இருபத்தைந்து வயசாச்சி இப்பயும் சின்னப் புள்ள நினைப்பு.அவ வயசுப் பொண்ணுங்க கைல ஒன்னு இடுப்புல ஒன்னுனு திரிராளுக இவ என்டான!!!!!!வானத்துல காக்கா பறந்துசி...... குருவி பறந்துசினு..... சொல்றா!!! நான் கண்மூடுறதுகுள இவளயும் கரை சேர்த்திடனும்டா....என சொல்ல


விடுமா..... நம்ம வீட்டுலான் இப்படி இருக்க ஏலும் அடுத்த வீட்டுக்கு வாழப்போனா இருக்க முடியாது. அது என்னமோ வாஸ்தவம் தான்யா!!!!

நம்ப ப்ரியா புள்ளைக்கு வளகாப்பு வைக்க சம்மந்தியம்மா வீட்டுல பேசினாங்கபா...

ஆமாம்மா சம்மந்தியம்மா பேசினாங்க அடுத்த மாதம் நல்ல நாள் இருக்காம் சொன்னாங்க.ஆமாப்பா எங்கிடயும் பேசினாங்க நாம வேணா ஒரு எட்டு நாளைக்கு போயிட்டு வருவமா!!!! எனக் கேட்க ..

ஆமாம்மா, "நாளைகக்கு லீவு நாள் தான் போவம்" என்றபடி தனதறைக்கு சென்றார்....."பாட்டி......." என சத்தமாய் அம்மு அழைக்க என்னடி என்றபடி அவளிடம் செல்ல இங்க பாரு பாட்டி உனக்கு வாங்கினன். என்றபடி முட்டி வரைக்குமான குளிர் நேரம் போடக் கூடிய ஸ்விட்டரைக் கொடுக்க.நல்லாரிக்குடி தங்கம்,என்றார்.....

"கருணாகரன், அகிலா தம்பதியினர்க்கு இரு புதல்வியர் மூத்தவள் ப்ரியா,இளையவள் அமுல்யா. அமுல்யா பிறந்து ஒரு வருடத்திற்கு பிறகு உடல் நிலை சரியில்லாமல் போய், அகிலா இறக்க இரு குழந்தைகளையும் வளர்கக் பெரிதும் கஷ்டப்பட்டார்".தனது தாய் விசாலாட்சி தான் தாய்க்கு தாயாக இருந்து இரு குழந்தைகளையும் வளர்த்தார்...


பாட்டிமா என தன் பின்னே திரியும் பேத்திகளின் மேல் கொள்ளைப் பிரியம் அதிலும் "பொட்டிப் பாலில் வளர்ந்த சுட்டிப் பெண்" அம்முவின் மீது அதீத பாசம்

மனைவி இறந்த சோகத்தில் இருந்தவர்.. படிப்படியாக தனது குழந்தைகளுக்காகவே வாழத் தொடங்கினார். அருகில் உள்ள "பேங்கில் கணக்காளராக பணியாற்றும்" கருணாகரனுக்கு. பொருளாதார கஷ்டம் இருக்கவில்லை.... நடுத்தர வர்க்க குடும்பமே இருப்பினும் பணக்கஷ்டம் வரவில்லை...... கல்லூரி வரை படித்த ப்ரியாவிற்கு தூரத்து உறவில் நல்ல வரன் அமைய திருமணத்தை வெகு சிறப்பாகவே செய்து வைத்தார்.


ப்ரியாவின் கணவன் ஹரிகரன் "சாப்ட்வேர் கம்பெனியில்" வேலை செய்கிறார்.இருவரும் மகிழ்ச்சியாகவே தங்கள் வாழ்கையை கொண்டு செல்கின்றனர்.தங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கவே "ப்ரியா கருவுற்றாள்", மகளை கையில் வைத்து தாங்கும் மருமகன்.இத விட என்ன வேண்டும்......மன நிறைவு கொண்டவரோ "அடுத்த மாதம் மகளின் வளைகாப்பிற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெறுகிறது .....

அமுல்யா தற்போது தான் பல்கலைக்கழகத்தை முடித்துக் கொண்டு வெளியேறி இருக்க, அப்போது தான் ஆர்.ஜே ஜேம்ஸில் டிசைனர்களுக்கான போட்டி அறிவிக்கப்பட்டது. வரைதில் ஆர்வம் கொண்டவளோ அதில் கலந்து கொண்டு போட்டியில் வெற்றியும் பெற்றாள்.

அத்தோடு அக் கம்பனியே வெற்றி பெற்றவர்களை, கம்பனிக்குள் உள்வாங்கிக் கொண்டது. தற்போது ஒரு வருட காலமாக அங்கு தான் வேலை பார்கிறாள். படித்த "படிப்புக்கு வேலை செய்யாது பிடித்த துறையிலே வேலை செய்கிறாள்".

அகிலாவின் நினைவு அடிக்கடி துறத்தும்...தன் இரு பிள்ளைகளையும் மனதில் இருத்தி சோகத்தையும் போக்கிக் கொள்வார்.விசாலாட்சி தனது மகனிற்கு உருதுனையாக இருக்கிறார்.

அன்றைய தினம் அவ்வாறே கழிய கதிரவன் தன் பொன் நிறக் கதிர்களை பரப்ப இனிதாக விடிந்தது அந்த காலைப் பொழுது........

கண்விழித்த ஆதி காலைக் கடமைகளை முடித்துக் கொண்டு...... வெளியே வாக்கிங் சென்று திரும்ப...சற்றுத் தள்ளி தேவேந்திரன் கைகளை வேகமாக வீசியபடி நடந்து கொண்டிருந்தார். குட் மார்னிங் ப்பா...குட் மார்னிங்...!!!!!"ப்பா ஆபிஸ் "இன்னைக்கு போரன்பா" ஓகேபா ஏதும் தேவைனா ஹால் பண்ணு. என சொல்ல அதைக் கேட்க இருந்தால் தானே அவன் ஹாலினுள் நுழைந்தவனோ அங்கே.. மதுராந்தகன் காஃபி குடித்துக் கொண்டு இருந்தான்.

தமையனைக் கண்டவனோ "குட் மார்னிங்ணா" என சொல்ல.... அவனோ அவனை மேல் இருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்து விட்டு.."குட் மார்னிங் ரெடியாகி இரு"...என்றபடி தனதறைக்குச் சென்றான்.ஏன் இப்படி பார்க்கான் என யோசித்தபடியே இருந்தான் மது......


தனதறைக்கு வந்தவனோ குளித்து ஆயத்தமாகி கிழே கிறங்கி வந்தவனை பெருமை போங்க பூரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.... தேவேந்திரன்....கரிய நிற கோட் சூட் சகிதம்..கைகளில் ரோலக்ஸ் வாட்ச் மின்ன தனது அழுத்தமான பார்வையுடன் கையினால் முடியை வாரியபடி உணவு மேசையில் அமர்ந்தவனோ... வாட்சைப் பார்க்க மதுவும் டிப் டாப்பாக வந்தமர்ந்தான். மதுவோ தாய்க்கு கண்ணால் சைகை செய்ய மூவருக்கும் உணவினைப் பரிமாறிக் கொண்டு இருந்தவரோ... ஆதியிடம், இன்னும் ”ஒரு எக்ஸாம் தானே இருக்கு, படிக்கடுமேபா தம்பி" என சொல்ல..... இதுக்கு தானா கண் காட்டின எனக் கேட்க....மதுவோ இவனுக்கு வளச்சி கண்ணு என நினைத்துக் கொண்டான்.

ம்ம் வளச்சி கண் தான்.... என மேலும் ஆதி சொல்ல இவனோட இதே வேலை மனசுல கூட ஒன்னயும் நினைக்க முடியல......என முனுமுனுத்துக் கொண்டே சாப்பிட தொடங்கினான்.

மூன்று தோசைகளை சாப்பிடதும் கைகழுவிக் கொண்டு எழந்து தந்தையுடன் அலுவலகம் தொடர்பான சில தகவல்களைக் பேசிக் கொண்டு இருக்க மதுவோ ஐந்தாவது தோசையை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தான்.......

வார எண்ணம் இல்லையா ????என சத்தமிட இதோணா என்றபடி அன்னையை பாவமாகப் பார்த்து விட்டு கையைக் கழுவிக் கொண்டு அண்ணனுடன் வெளியேறினான்......


இங்கு அம்மனியோ ஆழ்ந்த தூக்கத்தில் தனது கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தாள் அம்மு....!!!!என அழைக்கும் பாட்டியின் சத்தம் வேறு எங்கோ கேட்பது போல் இருந்தது... அத்தோடுஃபோன் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்தமர்தாள்.பின் குளியல் அறையில் நுழைந்தவளோ ப்ரஸாகவே உணர்ந்தாள். குளித்து விட்டு வெளியே வந்தவளோ அக்காவை காணச் செல்ல ரெடியாகி பாட்டியிடம் வர...."நேரம் என்னானு தெரியுமாடி".... பொழுது விடிஞ்சதுக்கு அப்புறமும் தூங்குற என தனது பல்லவியை தொடர பாட்டி....."நாளைல இருந்து நேரத்தோட எழும்புறன்" இப்ப காஃபி கொடு...எனக் கேட்க

காபியை குடித்து விட்டு கருணா சாப்பிட வாபா என அழைக்க எனக்கு வேணாம்பா!!! என சொல்ல பாட்டியும் தந்தையும் காலை உணவை உண்ண அவளோ இருவருக்கும் பரிமாறினாள். பின் மூவருமாய் ப்ரியாவைப் பார்க்க ஆட்டோவில் ஏறி சென்றனர்.

போகும் வழியில் பழங்களும்,இனிப்புக்களும் வாங்கிக் கொண்டு சென்றனர்.
ப்ரியாவும் தனது வீட்டினறைக் கண்டு சந்தோசமே. வளைகாப்பு சம்மந்தமா பேசி விட்டு மதிய உணவை ப்ரியா வீட்டிலே முடித்துக் கொண்டு மூவரும் வீடு திரும்பினர்.....


வீட்டிற்கு வந்து தனது ஃபோனைப் பார்க்க (அது வரை அம்மனிக்கு போன் ஞாபகமே இல்லையே) சஞ்சு மற்றும் மிருணாவிடம்,இருந்து தவறவிட்ட அழைப்புகள் தான் அதிகம்......"என்ன மாறி மாறி எடுத்திருக்காளுங்க"....... என தனக்குள் எண்ணியபடி சஞ்சுவிற்கு ஹால் செய்ய.....
ஏன்டி லூசு ஹால் பண்ணா ஆன்சர் பண்ண மாட்டியா!!!!!... சாரிடி அக்காட போனம் ஃபோன் விட்டுடு போயிடன் என சொல்ல.....

எரும ஆபிஸ்ல தேவா சார்ட மகன்தான் இனி பாத்துக்க போராராம் இன்னிக்கு சின்ன மீடிங் போல நடந்திருக்கு......

இன்னைக்கு லீவ் நாள்ளையா!!!!டி
ஆமாடி......

"எல்லாரயும் தான் வர சொல்லிருக்கு.......நீ போன் பார்த்தா தானே".....சாரிடி

பிறகு "என்னாச்சுடி"......அவர் "ஜுவல்ஸ் சைட் ஆட்கள் போகல"
மிருணா போனாளோ தெரில......என சொல்ல அம்முவோ
மிருணா ஹால் பண்ணிருக்கால்டி... நாளைக்கு ஏர்லியா வா!!!சரிடி என்றபடி ஹாலை கட் செய்து விட்டு மிருணாக்கும் ஹால் பண்ணி பேசி விட்டு பாட்டியுடன் இரவு உணவு தயாரிக்க தொடங்கினாள்.


இங்கு ஆர்.ஜே.கம்பனியில் மீடிங்கை முடித்து விட்டு தனக்கான பீ.ஏவாக ரோகித்தை நியமித்தவனோ.. இதற்கு முதல் இருந்தவர் இரு மாதத்தில் ஓய்வில் செல்ல இருப்பதால் ரோகித்தை நியமித்து சில ஊழியர்களையும் மாற்றம் செய்தான்.

மதுவிடமும் சில ஃபைல்களை செக் செய்ய கொடுக்க அவனும் அதில் முனைப்பாக இருந்தான்.பிறகு யார் ஆதியிடம் பேச்சுக் கேட்பது.........

வீடு வந்தனர் இருவரும் ராஜேஸ்வரி காஃபி கொடுக்க அதை அருந்திய படி இன்றைய தினம் நடந்தவற்றை சொல்ல தேவேந்திரனுக்கு சந்தோசமே....... பிஸ்னஸில் இறங்கினால் ஆதி வெளிப் பயணங்களை மேற்கொள்ளாது தங்களுடனேயே இருப்பான் என நம்பினார்.நாம் விரும்புவது எங்கே.... நடந்தால் தானே...

மதுவோ களைப்பாக உணர தனதறைக்கு நுழைந்தான்.
தந்தையிடம் பேசிவிட்டு தனதறையினுள் நுழைந்த ஆதியும் உடலை சுத்தம் செய்யும் பொருட்டு குளியலறையில் நுழைந்து சவரின் கீழ் நிற்றான்.

அப்போது அவன் எண்ணங்கள் எங்கெங்கோ பயனிக்க எப்போதும் தோன்றும் நட்சத்திரக் கூட்டங்களே கண் முன் தோன்றியது. அத்தோடு இடது பக்க மார்பின் மீதிருந்த டாட்டூவை வருட தான் வேறேங்கோ நிற்பது போலவும் ஒளிவளையங்கள் தோன்றி மறைந்தது."அடிக்கடி போரிஸ்கா எனும் குரலும் தன்னை துரத்த தொடங்கியது "........

குளித்து விட்டு வெளியே வந்தவன்.சார்ட்ஸ் மற்றும் கையில்லாத ஆம்கட் டீ சர்ட் அணிந்து வெளியே வந்து டீவியை உயிர்ப்பிக்க...
மதுவும் ஃபோன் பேசியபடி வந்தான்.....

நியூசில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது அதில் சமீபமாக வானில் அடிக்கடி மர்மான பறக்கும் பொருளொன்று தெரிவதாகவும் இது வரை அது பற்றி தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் நியூசில் சில படங்களுடன் செய்தி ஓடிக் கொண்டிருந்தது.அதைப் பார்த்துக் கொண்டு இருந்தவனோ "கால வாகனம்' என்று புரியாது பேச.......

மதுவோ அவனை திரும்பிப் பார்க்க... செய்தியைப் பார்த்தவனின் மனதில் சொல்லவொன்னா நினைவலைகள்.!!!! ராஜேஷ்வரி உணவுன்ன அழைக்க மதுவும் ஆதியும் உணவுன்டனர்.

அப்பா சாப்பிடாரா....??ஆமாபா...அப்பாவும் நானும் சாப்பிடம்....ம்ம்....அந்த" ஃபோன வைச்சிடு சாப்பிடேன்டா" என மதுவிடம் ராஜேஸ்வரி சொல்ல..... ஆதியும் மதுவைப் பார்க்க ஐ ஹால் யூ பெக் என்றபடி அன்னையை முறைக்க..... என்ன பாத்த காணும் சாப்பிடு என அவர் சொல்ல இருவரும் சாப்பிட்டு தங்கள் அறைக்குச் சென்ரனர்.

எத்தனை வேலைக் காரர்கள் இருப்பினும் கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு உணவை சமைக்க, உணவு பரிமாறுவது என செய்வது ராஜேஸ்வரியே.... வேலைக் காரர்களை அனுமதிக்க மாட்டார்.

பெட்டில், கண்மூடிய ஆதிக்கோ பல குழப்பங்கள் இது வரை தனது உடல்நிலை குறித்து மருத்துவ துறையில மாத்திரம் சிந்தித்தவன்.....வேறு யோசிக்கவில்லை....இன்று செய்தியை பார்த்தில் இருந்து தன்னுள் ஏற்பட்ட மாற்றங்கள் சிந்தனையை வலுக்கச் செய்தது.....தனது மார்பிலும் முதுகிலும் உள்ள டாட்டூக்கள்.... தான் மேலும் குழப்பத்தை விதைத்தது..

தாய் தந்தை ஏன்?? இப்படி ஒரு "டாட்டூவை தனக்கு போட வேனும்" என சிறிய வயதில் இருந்து தோன்றும் கேள்வியே இது......

இந்த டாட்டுவிற்கும் ஆதிக்கும் என்ன சம்பந்தம்...........

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் சகோஸ்.......

இவள் ✍
அனாமிகா 51.

இரண்டாவது அத்தியாயம் பதித்து விட்டேன். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்... ஏதும் எழுத்துப் பிழைகள் இருப்பின் பெரிது படுத்தாது மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்க.உங்களது கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்..........

💖💖💖💖💖💖💖💖
வாழ்த்துகள்
 




Last edited:

Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
சூப்பர் பதிவு
ஆதி தான் போரிஸ்காவா 😍
சின்ன சின்ன மிஸ்டேக்ஸ் இருக்கு....flow miss ஆகுது correct பன்னிருங்க... nice update
 




Anamika51

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
47
Reaction score
57
Location
Sri Lanka
சூப்பர் பதிவு
ஆதி தான் போரிஸ்காவா 😍
சின்ன சின்ன மிஸ்டேக்ஸ் இருக்கு....flow miss ஆகுது correct பன்னிருங்க... nice update
Thank you 😍
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் சூப்பர் எபிசோட்🤩🤩🤩

ஆதி தான் போரிஷ்கா, டைம் டிராவல் பண்ணி இங்க வந்துட்டன் போல, செம்ம இனி எப்ப தெரிஞ்சிப்பான், அவனை பத்தி....

மது😂😂😂😂
 




Anamika51

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
47
Reaction score
57
Location
Sri Lanka
வாவ் சூப்பர் எபிசோட்🤩🤩🤩

ஆதி தான் போரிஷ்கா, டைம் டிராவல் பண்ணி இங்க வந்துட்டன் போல, செம்ம இனி எப்ப தெரிஞ்சிப்பான், அவனை பத்தி....

மது😂😂😂😂
[/QUOTE]
Thank you sister 😊 viraivil
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,613
Reaction score
36,887
Location
Srilanka
சின்ன வயசில் இந்த டாட்டூவை ஏன் போட்டாங்கனு சின்ன வயசுலே இருந்தே டௌப்ட்னா அதை இன்னமுமா பெற்றோறிடம் கேட்காம இருக்கான்...??

தேவேந்திரன் ஹார்ட் ஆபரேஷன் பண்ணி அதுக்குள்ள கை வீசி நடக்குறார்:oops::oops::oops:

Nice ud dear...

Spelling mistake மட்டுமில்ல வசனங்களும் கொஞ்சம் தெளிவில்லாம தொடர்புகள் இல்லாம இருக்கு...அதை கொஞ்சம் கவனிச்சு பாருங்க டியர் போஸ்ட் போட முதல்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top