• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ்??? …. அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்??? பொங்கலை முன்னிட்டு பெரிய எபி ??? இதுக்கு மேல பெருசா கேட்டுடாதீங்க… மீ பாவம்??? படிச்சுட்டு ரொமான்ஸ் எப்படி இருந்துச்சுன்னு கமெண்ட்ல சொல்லுங்க???

1579009507301.jpg

ஈர்ப்பு 33

அபியின் அறையில்…

“சோ உங்களுக்கு என்ன பிடிக்கும்… ஆனா என் ஸ்டேட்டஸால தான் என்ன அவாய்ட் பண்ணிருக்கீங்க… அப்படி தான…”

அபியோ அவளின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

“இவ்ளோ நேரம் உங்க அம்மா கிட்ட பெரிசா எக்ஸ்பிளைன் பண்ணீங்கள… இப்போ மட்டும் எதுக்கு வாயடைச்சு நிக்கிறீங்க... எதுவா இருந்தாலும் நேரடியா என்கிட்ட சொல்லுங்க… அத விட்டுட்டு அவாய்ட் பண்ணாதீங்க…” என்ற அவளின் குரலில் சோகத்தினால் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது.

என்ன முயன்றும் அடக்கமுடியாமல் மெல்லிய கேவல் வெளிப்பட்டது அவளிடம். அவளின் சிறு சோகத்தையும் பொறுக்க முடியாமல், “ரியா ப்ளீஸ் அழுகாத…” என்று முதல் முறையாக அவனாக அவளை நோக்கி அடியெடுத்து வைத்திருந்தான்.

‘ரியா’ என்ற அவனின் செல்லப் பெயர் கூறியது அவளின் மேல் அவனுக்கிருக்கும் நேசத்தை. ப்ரியா இதைக் கவனித்தாலும், எது சொல்வாதாயிருந்தாலும் அவனே கூறட்டும் என்று கண்ணீர் வழிந்தபடிஅமைதியாக இருந்தாள்…
அவனே அருகில் வந்து அவளது கண்ணீரைத் துடைத்தான்…


“இதுக்காகத் தான்… உன் கண்ணுல இருந்து எந்த காரணத்துக்காகவும் கண்ணீர் வரக் கூடாதுன்னு தான் உன்ன பிடிச்சிருந்தும் உன்ன அவாய்ட் பண்ற மாதிரி நடிச்சேன்…”

அவள் தன் கண்களை உயர்த்தி அவன் முகத்தைப் பார்க்கவும், அவனும் சிரித்துக்கொண்டே, “ஆமா நடிக்கத் தான் செஞ்சேன்… ஒவ்வொரு தடவையும் நீ என்ன சுத்தி வரும் போதும் என்ன கண்ட்ரோல் பண்ண நான் தான் படாத பாடு பட்டேன்… எங்க என் கண்ட்ரோல மீறி உன்கிட்ட லவ் சொல்லிடுவேனோன்னு பயந்து தான் உன்ன திட்டி அனுப்பிருக்கேன்…” என்று கூறினான்.

அதைக் கேட்டு அவள் முறைக்க… அவனோ அவள் மூக்கை பிடித்து ஆட்டி, “ஆனா கடைசில குடும்பமே சேர்ந்து இப்போ என் லவ்வ சொல்ல வச்சுடீங்கள…” என்றான்.

“இப்போ கூட எங்க சொன்னீங்க… அரை பக்கத்துக்கு டையலாக் தான் பேசியிருக்கீங்க…” என்று அவள் முணுமுணுக்க… “ஏன் மேடம்க்கு சொன்னா தான் தெரியுமா???…” என்றான் அவளை ரசனையுடன் பார்த்தபடி…

“ஹலோ இன்னும் பேச வேண்டியது எவ்ளோவோ இருக்கு… அதுக்குள்ள என்ன லுக்…???”

“??? இதுக்கு தான் அந்த ரவுடி கூட அதிகமா சேராதன்னு சொல்றது… இப்போ பாரு அவள மாதிரியே பேசுற… சின்ன வயசுல எவ்ளோ ஸாஃப்டா பேசுவ…”

“அப்போ என்ன சின்ன வயசுல பார்த்ததும் நியாபகம் இருக்கு உங்களுக்கு???…”

“ஹ்ம்ம் அந்த குட்டி முகம் ரோஸ் கலர் மப்ளர்குள்ள இருந்து எல்லாரையும் பார்த்து அழகா சிரிக்குமே… அந்த ஏஞ்சல நியாபகம் இல்லாம இருக்குமா… அப்பறம் ஸ்கூல்ல நதிய கூப்பிட வரப்போ என் சவுண்ட் கேட்டாலே அங்க இருந்து ஓடிப் போற அந்த குட்டிப் பொண்ண மறக்கத் தான் முடியுமா… இல்ல பெங்களூர்ல நான் பார்க்காதப்போ என்ன ரசிச்சுப் பார்த்துட்டு, நான் பார்க்குறப்போ எல்லாம் பிரென்ட் பின்னாடி ஒளிஞ்ச என் பிரின்சஸ நினைக்காம இருக்க முடியுமா???…”

“ஹே நா… நான் உங்… ங்கள பெங்களூர்ல பார்த்தது உங்களுக்கு எப்படித் தெரியும்???... அப்போ உங்களுக்கு என்ன அடையாளம் தெரிஞ்சுதா...” என்றாள் கொஞ்சம் தடுமாற்றம் நிறைய ஆச்சர்யத்துடன்…

“அது எப்படி தெரியாம போகும்… நீயும் உன் பிரெண்டும் பண்ண அலப்பரைகள் அப்படி.. டெய்லி என் மொபைல செல்ஃபி எடுக்கப் போறேன்னு வாங்கி அவ பண்ண கூத்துல அதுல அப்படி என்ன பண்ணுறான்னு பார்த்தபோ தான் உன் ஃபோட்டோவ பார்த்தேன்… அதுவும் போஸ் கொடுக்குறேன்னு நாக்க வெளிய விட்டு ஏதோ ஜோக்கர் மாதிரி இருந்த…???”

“ஹலோ அதெல்லாம் என் பிரெண்டுக்கு அனுப்பின ஃபோட்டோஸ்… நீங்க அத திருட்டுத்தனமா பார்த்ததும் இல்லாம என்கிட்டயே கமெண்ட் பண்ணுறீங்களா???...”

“ஓய் திருட்டுத்தனமாவா… அது என் மொபைல்… மொபைல பிடுங்கி வச்சுக்கிட்டு பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் சேர்ந்து அட்ராசிட்டிஸ் பண்ணிட்டு… இப்போ என்ன திருடன்னு சொல்றியா…”

“ஆமா ஆமா திருடன் தான்???…” என்று அவள் முணுமுணுக்க…

“என்ன ரியா சொன்ன… எனக்கு சரியா கேக்கல???…” என்றவாறே அவளை நெருங்கினான்…

“ஹலோ இன்னும் ஃபுல்லா சொல்லி முடிக்கல… சோ அங்கேயே நின்னு சொல்லுங்க…”

“அது என்ன ஹலோ… நீ தான் எனக்கு ஷார்ட் நேம் வச்சுருக்கியே… அத சொல்லி கூப்பிட வேண்டியது தான…???”

“அ…அது… எப்படி உங்களுக்கு தெரியும்…”

“ம்ம்ம் சிலர் ‘என் ஆளு என் உரிமை… அப்படி தான் பார்ப்பேன்’ன்னு சொல்லிட்டு இருந்தத கேட்டேன்???…”

“அப்போ ஒட்டு கேட்டீங்களா…”

“நீங்க என்ன சீக்ரெட் மாதிரியா பேசுனீங்க…”

“ஹ்ம்ம்… இப்போ என்ன டாபிக் மாத்துறீங்களா???…”

“நானா மாத்தல மா… நீ தான் டெம்ப்ட் பண்ணுற…” ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு, “ம்ம்ம் சரி நீ எப்படி பெங்களூர் வந்தனு சொல்லு…”

“ஃபர்ஸ்ட் நீங்க சொல்லுங்க…”

“இவ்ளோ நேரம் நான் தான சொன்னேன்… இப்போ நீ சொல்லு..”

“நாங்க ஐ.விக்காக பெங்களூர் வந்தோம்… எல்லாம் முடிச்சுட்டு ஷாப்பிங் பண்றப்போ தான் உங்கள பார்த்தேன்… பாத்தவோடனே நீங்க நதியோட அண்ணான்னு தெரிஞ்சுது… ஃபர்ஸ்டே உங்க மேல கிரஷ் இருந்தது… அன்னைக்கு உங்கள நேர்ல பார்த்ததும், என்னனே தெரியாத புது ஃபீல்… என்ன அறியாமலேயே உங்கள பார்த்துட்டு இருந்தேன்…”

“ம்ம்ம் நீ அப்படி பார்த்தத தான் என் பிரென்ட் பார்த்து என்கிட்ட சொன்னான்… அப்பறம் தான் உன்ன பார்த்தேன்… வயலட் கலர் ஃபிரில் ட்ரெஸ்ல அழகா பிரின்சஸ் மாதிரி இருந்த…” என்றவாறே அருகில் நெருங்கினான்.

அவளோ சுவரில் இடித்து நிற்க… அவன் தன் இரு கைகளையும் அவள் இரு புறமும் ஊன்றி நின்றான்.

“இவ்ளோ லவ் உள்ள வச்சுட்டு எதுக்கு என் ஸ்டேட்டஸ் பார்த்து என்ன அவாய்ட் பண்ணீங்க…” என்று அவள் கூறியபோது தானாக ஒரு இறுக்கம் அவனுள் எழுந்தது. அவள் கூற்றில் அவன் கைகள் தானாக இறங்கின.

அவன் விலக எத்தனிக்க, அவளோ விடாமல் அவன் கைகளைப் பற்றி, “இப்போ என்னாச்சு… எங்க வீட்டுல நம்ம லவ்வ அக்ஸெப்ட் பண்ணிட்டாங்கன்னு சொன்னா நார்மல் ஆகிடுவீங்களா???…” என்று அவள் கேட்க, அவனிற்கோ பெரும் ஆச்சர்யம்…

“ரியா, என்ன சொல்ற… உங்க வீட்டுல தெரியுமா…”

“ம்ம்ம் இங்க வரும்போதே உங்கள பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு தான் வந்தேன்…அப்பா கிட்ட தான் உங்கள லவ் பண்றேன்னு ஃபர்ஸ்ட் சொன்னேன்… சொன்னதும் அவரு ஒன்னும் சொல்லல… எனக்கும் பயமா தான் இருந்துச்சு… அப்பறம் ரெண்டு நாள் கழிச்சு, அவரே உங்கள பத்தி விசாரிச்சதுக்கு அப்பறம் அவருக்கும் ‘நோ’ சொல்ல எந்த ஆப்ஷன்ஸும் இல்ல…” என்றாள் முகம் முழுதும் சந்தோஷத்துடன்.

அவள் சொன்னதைக் கேட்டதும் சில நொடிகள் அமைதியாக இருந்த அபி, “சாரி ரியா… நீ நம்ம லவ்வுக்காக இவ்ளோ பண்ணிருக்க… ஆனா நான் எதுவுமே பண்ணல… உன்ன நெறையா ஹர்ட் பண்ணிருக்கேன்… அதுவே எனக்கு கில்ட்டியா இருக்கு…” என்றான்.

அவள் ஆதரவாக அவன் கைகளைப் பிடித்ததும், “உன்ன அவாய்ட் பண்ணதுக்கு காரணம் நான் முன்னாடியே சொன்ன மாதிரி நீ எப்பவும் கஷ்டப் படக் கூடாதுன்னு தான்… நீ அழக்கூடாதுன்னு நான் மீன் பண்ணது, என் கூடயிருந்து கஷ்டப்படுறது இல்ல… அதுக்காக நீ ஃபீல் பண்ண மாட்டேன்னு எனக்குத் தெரியும்… (இதை அவன் சொன்னதும், அவளுக்கு கர்வமாக இருந்தது… தன்னவன் தன்னை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறான் என்று…) சப்போஸ் நம்ம லவ்வுக்கு உங்க வீட்டுல சம்மதிக்கலைனா அதுக்காக நீ ஃபீல் பண்ணக் கூடாதுன்னு தான்… எப்பவும் உன் பேரண்ட்ஸா இல்ல நானான்னு ஒரு சாய்ஸ உனக்கு கொடுக்கக் கூடாதுன்னு தான்…” என்று அவனின் நிலையை விளக்கினான்… அவன் குரலில் அவள் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்பு இருந்தது.

அவளின் நிலையோ வார்த்தைகளால் சொல்ல முடியாததாக இருந்தது. தன் காதல் கைக்கூடுமா என்று ஐயம் கொண்டிருந்தவளுக்கு, தன் காதலைக் காட்டிலும் பல மடங்கு காதலுடன், தன் மகிழ்ச்சிக்காக யோசித்து இவ்வளவு நாட்கள் காத்திருந்தவனது காதல், அவள் இத்தனை நாட்கள் அடைந்த வருத்ததிற்கு மருந்தானது...

அவன் முகமோ அவள் என்ன கூறப் போகிறாள் என்று தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவனை ஒத்திருந்தது...

அவளோ அவன் நிலையைக் கண்டு, சன்ன சிரிப்புடன், “என் அனவ்வ எனக்குத் தெரியும்???… நீங்க ‘நம்ம லவ்’ன்னு சொன்னதே எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு… இதுக்கு முன்னாடி லவ் பண்ணலைனா என்ன…இதுக்கு அப்பறம் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு லவ் பண்ணுங்க…” என்றாள்.

அவளின் ‘அனவ்’விலேயே அவன் குழப்பமெல்லாம் தெளிவடைந்து, முகம் பிரகாசமானது… அவள் சொல்லி முடித்ததும், தோளோடு சேர்த்தணைத்து, “தேங்க்ஸ் ரியா… என்ன புரிஞ்சிகிட்டதுக்கு…”

“ ஹலோ…” என்று அவள் ஏதோ கூற வருவதற்குள் அவள் இடையோடு தூக்கி அருகில் நிறுத்தி, “இன்னும் என்ன டி ஹலோன்னு ஏலம் போட்டுட்டு இருக்க… அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அழகா அனவ்ன்னு கூப்பிட்டேல… அப்பறம் என்ன…” என்று பேசிக் கொண்டிருக்க…

அவளோ நடந்தவற்றிலிருந்து இன்னும் வெளிவர முடியாமல் அதிர்ச்சியில் இருந்தாள்.
அதைப் பார்த்து சிரித்த அவன், “என்ன பேபி ரொம்ப ஷாக்கா இருக்கா… இதுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் பண்ணிடலாமா???…” என்றவாறே அவளின் இதழ்களை நோக்கினான்…


அதில் சுயத்திற்கு திரும்பிய அவள், “சீ போ… பேட் பாய்???...” என்று அவன் அசந்திருந்த நேரம் அவனைத் தள்ளிவிட்டு கீழே சென்று விட்டாள்.
அபியோ அன்று காலை ராகுல் அவனிடம் தன் தோழிக்காக பேசியது மனதில் ஓடியது… அதுவும் ஒரு காரணம் அவன் இன்று தன் மனம் திறந்து ப்ரியாவிடம் பேசியதற்கு…
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
அபியும் ப்ரியாவும் பேசிக் கொண்டிருந்த வேளையில், எனக்கு போர் அடித்ததால், வெராண்டாவில் உலவிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர் வீட்டு வாசலில் ஆனந்த் பைக்கை நிறுத்துவது தெரிந்தது… (நேஹா அங்கு இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது…???)

‘ஆஹா… பயபுள்ள அன்னைக்கு எஸ்கேப் ஆகிடுச்சு… இன்னைக்கு விடக் கூடாது…’

நான் இங்கிருந்தே விசில் அடித்தேன். அவனோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, நடக்க ஆரம்பித்தான். மறுபடியும் விசில் அடித்தேன். இம்முறை என்னைக் கண்டுகொண்டான்.

அவனிடம் சைகையிலே மொட்டைமாடிக்கு வருமாறு கூறினேன். அவனோ சைகையிலேயே வேலை இருப்பதாகக் கூறினான். ஒரு நொடி அவனை முறைத்து விட்டு, ‘நேஹா’ என்று அழைக்கப் போக, அவன் தலையிலடித்துக் கொண்டு வருவதாகக் கூறினான்.

“என்ன சார்… அன்னைக்கு ஏதோ மூட் சரி இல்ல… அதனால இன்வெஸ்டிகேஷன விட்டுட்டேன்… ஆனா அதுக்கு அப்பறம் ஆளையே காணோம்…”

“அ.. அது வந்… வந்து நதி எனக்கு டைம் இல்ல…”

“ஓ… எதிர்த்த வீட்டுக்கு வர டைம் இருக்கு… ஆனா இங்க வர டைம் இல்லயா…”

‘அச்சோ இவ கிட்ட நானே வாய கொடுத்து மாட்டிக்கிட்டேனே… இப்போ அங்க எதுக்கு போறன்னு கேப்பாளே…’ என்று அவன் முணுமுணுக்க…

“சார் என்ன முணுமுணுக்குறீங்க... சரி நான் இப்போ கூப்பிட்டதுக்கு வேலை இருக்குன்னு சொன்னீங்களே, அப்படி என்ன வேலை அந்த வீட்டுல உங்களுக்கு…”

‘ஐயையோ கேட்டுட்டாளே…’
“அது… நா…நான் நேஹா…” என்று கூறியவாறு வெட்கப்பட்டான்.


“ஹலோ என்னாது இது… தயவு செஞ்சு வெட்கமெல்லாம் படாதீங்க… ???”

“??? நான் நேஹாவ பார்க்கத் தான் வந்தேன்… போதுமா… பதில் சொல்லிட்டேன்ல நான் கிளம்புறேன்…”

“சார் எங்க கிளம்புறீங்க… ஃபர்ஸ்ட் கொஸ்டின்னுக்குத் தான் ஆன்ஸர் பண்ணிருக்கீங்க…மத்ததுக்கெல்லாம் யாரு ஆன்ஸர் பண்ணுவா…”

“சரி மா நான் கிளம்பல… நீ கேளு…” ‘எல்லாம் தல விதி…’ என்று அவன் முணுமுணுக்க…

“என்ன அங்க சத்தம்…”

“??? ஒன்னும் இல்ல…”

“ஹ்ம்ம் நேஹாக்கும் உங்களுக்கும் என்ன ரிலேஷன்ஷிப்… ஃபர்ஸ்ட் அவள எங்க பார்த்தீங்க… எப்போ பார்த்தீங்க…”

“ம்ம்ம் அவ என்ன ஃபர்ஸ்ட் பார்த்தது அவங்க அப்பாவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணப்போ… ஆனா நான் அவள முன்னாடியே ராகுல் கூட பார்த்திருக்கேன்… அப்போ அவள லவ் பண்ற மாதிரி ஐடியாலாம் இல்ல… பட் அவள பிடிச்சுருந்தது… ஆனா ஹாஸ்பிடல்ல அவங்க அப்பாக்காக துடிச்சப்பவும், அந்த ரவுடிங்க மிரட்டுனப்போ பயந்தப்பவும், அவ ஃபியூச்சர நெனச்சு சோர்ந்து போனப்பவும் அவ பட்ட கஷ்டத்துல இருந்து அவள மீட்கனும்னு வெறியே வந்துச்சு… அப்போ தான் நான் அவள அவ்ளோ தூரம் லவ் பண்ணுறேன்னு புரிஞ்சது… அவ அங்க இருந்தா அதையே நெனச்சு ஃபீல் பண்ணுவான்னு தான் அவள இங்க அனுப்பி வச்சோம்… உங்க கூட இருந்தா அதுலயிருந்து சீக்கிரம் மீண்டு வருவான்னு நெனச்சோம்…”

“ஓ அப்போ என்னையும் ஏற்கனவே தெரியும் அண்ட் ராகுல் உங்க பிரென்ட்… அப்படி தான… ஹ்ம்ம்… என்ன எப்படி உங்களுக்குத் தெரியும்… ராகுல உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தும் ஏன் அன்னைக்கு ஊட்டில தெரியாத மாதிரி நடந்துக்கிட்டீங்க..

‘அச்சோ இவ வேற லாயர் மாதிரி கிராஸ் கொஸ்டின்ஸ் கேக்குறாளே…’ என்று அவன் புலம்புவது எனக்கும் கேட்டது…

“அதெல்லாம் உன் ஆளு சொல்லி தான் மா செஞ்சேன்… எதனாலும் அவன் கிட்டேயே கேட்டுக்கோ… என்ன விட்டுடு…” என்று கெஞ்ச…

“சரி போனா போகுதுன்னு உங்கள விடுறேன்…”

“ரொம்ப தேங்க்ஸ் டா நதி… நான் இப்போ கிளம்புறேன்…”

“ஹலோ எங்க கிளம்பிடீங்க… அந்த ரெண்டு கொஷ்டின்ஸுக்கான ஆன்ஸர் தான் வேண்டாம்ன்னு சொன்னேன்… மீதி கொஸ்டின்ஸ நான் இன்னும் கேக்கவே இல்லையே…”

“ஐயோ இன்னமும் இருக்கா…” -சத்தமாகவே அலறிவிட்டான் அவன். அதில் சிரிப்பு வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்கத் துவங்கினேன்.

“டெல்லில அதுக்கு அப்பறம் என்ன ஆச்சு… அந்த பொறுக்கி என்ன ஆனான். அவங்க அப்பாக்கு என்ன ஆச்சு…”

“அத தான் உன் பிரென்ட் உன்கிட்ட சொல்லிருப்பாளே…”

“ஹ்ம்ம் சொன்னா தான்… அத எப்படி நீங்க அச்சீவ் (!!!) பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கனும்ல…” என்றேன் கிண்டலாக…

“ம்ம்ம் அந்த பொறுக்கிய போலீஸ் என்கவுன்டர்ல போட்டுத் தள்ளிட்டாங்க… அப்பறம் அந்த மந்திரிய ஊழல் வழக்குல சிக்க வச்சு, வெளிய வராத படி செஞ்சாச்சு…”
என்றான் சற்றே பெருமையாக…


“ஓ… அவன போட்டுத் தள்ளிட்டங்களா… இல்ல தள்ளிட்டீங்களா..”

“ஹே நான் ஒன்னும் பண்ணலமா… என் பிரென்ட்… க்ம்ம்… போலீஸ் பிரென்ட் தான் என்கவுண்டர் பண்ணது…”

“யாரு உங்க பிரென்ட் கிருஷ்ணாவா???”

‘ஸ்ஸ்ஸ் இவ ரொம்ப நோண்டுராலே…’

“ம்ம்ம் அதெல்லாம் உன் பின்னாடி நல்லவன் மாதிரி நிக்குறானே அவன் கிட்ட கேளு… என்ன ஆள விடு மா தாயே…”

‘ச்சே நானே என் லவர் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலான்னு வந்தா… இதுங்க ரெண்டு பேரும் சேர்ந்து அத கெடுக்குறதுக்கே இருக்குதுங்க…’ என்று புலம்பியவாறே அவன் செல்ல, அவனை அழைக்கத் திரும்பிய நான் பார்த்தது அங்கு சுவற்றில் ஸ்டைலாக காலை மடக்கி என்னை நோக்கி புன்னகைத்துக் கொண்டிருந்த ராகுலைத் தான்…

‘அச்சோ இவன் வேற ஒரு மாதிரி சிரிக்கிறானே…???’

அவன் பக்கம் செல்லத் துடித்த பார்வையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனுக்கு மறுபுறம் திரும்பி நின்றேன். இரண்டு நொடிகள் ஆனதும், அன்று மாதிரி இன்று எதுவும் நடக்காததால் பெரும் ஆசுவாசத்தோடும் சிறிது ஏமாற்றத்தோடும் (???) நின்றிருந்தேன்.

‘அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் நடக்கனும்ன்னு தான எதிர்பார்த்துட்டு இருந்த???’ என்று என்னை நன்கு அறிந்து வைத்திருந்த மனச்சாட்சி கிண்டலடித்தது…

‘அதெல்லாம் ஒன்னும் இல்லையே…’ என்று அதனோடு நான் வாதாடிக் கொண்டிருந்தபோது, என் பின் அரவம் உணர்ந்தேன்… அவனே தான்…

‘போச்சு… இன்னைக்கு என்ன செய்ய காத்திட்டுருக்கானோ???…’

“க்கும்…” அவன் செருமி அவன் இருப்பை உணர்த்தினான்.
நானோ நின்ற இடத்தை விட்டு அசையவில்லை…


“ஹ்ம்ம் மேடம் ஏதோ என்கிட்ட கேட்கனுமாமே…”

‘இவன பார்த்தாலே சாதாரணமா பேசுறது கூட மறந்து போய்டும்… இதுல இவன் கிட்ட நான் என்ன கேக்க போறேன்…???’

நான் அமைதியாகவே இருந்தேன்…
சில நொடிகள் கழித்து மீண்டும் அவன் குரல் ஒலித்தது.


“என்ன மேடம் பேச்சே காணோம்… இவ்வளவு நேரம் ஆனந்த போட்டு அந்த பாடு படுத்துன… இப்போ என்ன ஆச்சு…”

‘ஹ்ம்ம் உன்ன பார்த்தா வாயிலயிருந்து வெறும் காத்து தான் வருது…’ என்று மனதிற்குள்ளேயே கவுண்டர் கொடுத்துக் கொண்டேன்.

“இவ்வளவு நேரம் வாயடிச்ச அந்த வாயாடி எங்க… ஹ்ம்ம் என்ன பார்த்து பயந்துட்டியா… இல்ல…” என்று இழுத்து கொஞ்சம் ‘கேப்’ விட்டு, “மயங்கிட்டியா…???” என்றான் கிசுகிசுப்பாக…

‘அச்சோ இவன் என்ன அடுக்கிட்டே போறான்… இப்போ நான் வாயத் திறந்து பேசலைனா என்னையவே ‘நான் அவன் கிட்ட மயங்கிட்டேன்னு ஒத்துக்க வச்சுடுவான்..’

‘அப்போ நீ அவன் கிட்ட மயங்கலையா…???’

என் மனச்சாட்சி கூறி(வி)யதை டீலில் விட்டு அவனை நேருக்கு நேர் பார்க்கத் திரும்பினேன்.

என் போதாத காலம், நான் திரும்பும் போது கீழேயிருந்த கம்பியைக் கவனிக்காமல் இடறி அவன் மீது சாய்ந்தேன். அவனும் இப்படி நடக்கும் என்று அறியாததால் நாங்கள் இருவரும் பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்தோம்… அவன் கீழே, நான் அவன் மேலே…

ஒரு நிமிடம் இருவருக்கும் அதிர்ச்சி தான்… எனக்கோ உடல் முழுவதும் நடுங்கியது… நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்க கூட முடியவில்லை… அவ்வளவு வெட்கம்…??? கண்களை மூடியபடியே அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தேன்…

“க்கும்… மேடம் நான் ஒன்னும் உன் பெட் இல்ல… எவ்ளோ நேரம் இப்படியே இருப்ப???… பார்க்க தான் குட்டியா இருக்க… ஆனா என்ன வெய்ட்டு…” என்றான் சிரித்துக்கொண்டே…

முதல் வரியில் நாணி என்னையே திட்டிக் கொண்டிருந்தவள்… அவனின் இரண்டாவது வரியில் அவனை முறைத்துக் கொண்டே எழுந்தேன்…

“ஹலோ என்ன நீ எழுந்தா போதுமா… என்ன யாரு தூக்கி விடுவா…”

முறைத்துக் கொண்டே அவனுக்கு கை கொடுத்து தூக்கி விட முயன்றேன்…

‘அம்மாடி நல்லா ‘ஹல்க்’ மாதிரி
இருக்கான்???...’


அவன் எழுந்ததும் என்னைப் பார்த்து விஷமச் சிரிப்புடன், “ம்ம்ம் கேளு???” என்றான். அவன் கண்களோ என்னை மேலிருந்து கீழாக அலசியது…

நானோ சற்று முன்பு நடந்த சம்பவத்திலிருந்தே வெளிவரவில்லை…

கீழே விழுந்ததில் எசகு பிசகாக அவன் கைகள் என் மேனியில் பதிந்தது… அந்த இடங்களிலெல்லாம் இன்னமும் குறுகுறுப்பு இருப்பதைப் போன்று உணர்ந்தேன்…. இதில் அவன் பார்வை வேறு என்னை இம்சிக்க…

‘இப்போவே எஸ்கேப் ஆகுறது தான் கரெக்ட்… இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா நானே ஏதாவது பண்ணிடுவேன்???…’

“இ.. இல்.. இல்ல… எனக்கு வேலை இரு…இருக்கு.. நான் கி..கிளம்புறேன்…” திக்கித் திணறி ஒருவாறு அவன் முகம் பார்க்காமல் உரைத்து விட்டு வேகமாக அவனை விட்டு ஓடி வந்தேன்…

அவன் சிரிப்போ என்னை தொடர்ந்தது… அதில் எனக்கும் மெல்லிய புன்னகை தோன்றியது…

**********

என் வீட்டிலோ அப்போது தான் ப்ரியாவும் அபியின் அறையிலிருந்து வெளி வந்தாள்.

என் பதட்டத்தை மறைத்து அவளிடம், “என்ன டி முகத்துல தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரியுது… என்ன சக்ஸஸா???…” என்றேன்...

“ம்ம்ம்…” என்றாள் வெட்கத்துடன்…

அபியும் அவளின் பின்னே அறையிலிருந்து வெளிப்பட்டான்…
சிறிது வெட்கத்துடன் தான்…


“ப்ரோ…” என்று நான் ஆரம்பிக்கும் போது வாசலில் என் அப்பாவின் சத்தம் கேட்டு அனைவரும் அமைதியானோம்…

அவர் உள்ளே வந்ததும், ப்ரியாவைப் பார்த்து நலம் விசாரித்தார்… (அவள் ஏற்கனவே அவருக்கு அறிமுகமாகியவள் தான்…) நல விசாரிப்புகள் முடிந்தன… ப்ரியா கிளம்புவதாகக் கூறினாள்.

“இந்த நேரத்துல தனியா எப்படி மா போவ…” என்றார் என் அப்பா…

“ஆட்டோல தான் போகனும் அங்கிள்…

“இந்த நேரத்துல ஆட்டோல போறது சேஃப் இல்ல மா… ஏன் டி இதெல்லாம் சொல்ல மாட்டியா… உன் பையன போய் பத்திரமா விட்டுட்டு வர சொல்லு…” என்று ப்ரியாவிடம் ஆரம்பித்து அம்மாவிடம் முடித்தார்…

‘இதெல்லாம் நம்ம லிஸ்ட்லேயே இல்லையே ???’ மொமெண்ட் எனக்கு…

அவர்களை குறுகுறுவென பார்க்க, அவர்களோ சிரிப்புடன் விடைப் பெற்றனர்.

அவர்கள் பைக்கில் ஒன்றாக செல்வதைப் பார்த்த எனக்கு தேவை இல்லாமல் மொட்டை மாடியில் நடந்தது நினைவு வந்து வெட்கம் வந்தது???….

ஈர்ப்பான்(ள்)…
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top