• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மல்லிப் பூவே 🌸 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,331
Reaction score
6,424
Location
India
Hi friends ❣
இதோ கதையின் அடுத்த பதிவோடு தங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன் 🙏🙏🙏🙏🙏
SM ஈஸ்வரி 🥰 🥰 🥰 🥰 🥰
1000001118.jpg
8
“ஏங்க, பேரு மாத்துற ஐடியா ஏதும் இருக்கா?”

“நான் ஏங்க பேர மாத்தணும்.‌ அப்படி மாத்தறதா இருந்தா எங்க அப்பாயி பேரையே மாத்தணும்?”

“அவங்க பேர எதுக்குங்க மாத்தணும்?”

“அவங்க பேருதான எனக்கு வச்சுருக்கு.‌ அதுவுமில்லாம பேச்சியம்மா எங்க கொலசாமிங்க. பேரமாத்தினா சாமி கண்ண குத்திரும்.”

“நல்லா குத்துச்சு போங்க” அன அலுத்துக் கொண்டவன், “

“சத்தியமா இதுதான் உங்க உண்மையான பேருன்னு நெனக்கலீங்க. அன்னைக்கு ஏதோ வெளையாடுறீங்கனு நெனச்சே.” அப்பாவி போல் சொல்ல, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். அவள் பெயரை யார் கேட்டாலும் முதலில் நம்பமாட்டார்கள். விளையாடுவதாக நினைத்துக் கொள்வார்கள்.‌ செழியனும் அப்படித்தான் நினைத்தான் என்பது அவளுக்குத் தெரியும். அன்று கடையில் சேல்ஸ் கேர்ள் என்றுதான் நினைத்தான். பெண்பார்க்க வந்த பொழுதுதான் அவள்தான் மதியழகனின் தங்கை என்பதே தெரியும். அப்பொழுதும் ஏதோ உதவிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்றுதான் நினைத்தான். அவள்தான் கடன் பட்டிருப்பதாகச் சொன்னாளே. பெண்ணிற்கு பூ வைக்க, தன் அம்மாவோடு அவளும் எழுந்து வரும் பொழுதுதான் தங்கை என்றே தெரியும். உதவிக்கு வந்த பெண் பட்டும், நகையுமாக வந்திருப்பதே அப்பொழுதுதான் அவனுக்கு உரைத்தது.

“முத்து” என அவள் அம்மா அழைக்க, உண்மையிலேயே இவ பேரு முத்துப்பேச்சிதானா என விளக்கெண்ணெய் குடித்த பாவனை காட்டியது செழியன் முகம். ஏதோ வயதுப் பெண்ணிடம் பெயர் கேட்டதால் நக்கலாக சொல்வதாக நினைத்திருந்தான். அதையே இன்று வெளிப்படுத்த,

“முத்துக்கருப்பனுக்கு முத்துப்பேச்சி எவ்வளவோ தேவலங்க.”

“அது சும்மா சொன்னேங்க.‌ எம்பேரு அதில்ல.” என்றான் எங்கோ பார்த்தபடி.

“தெரியும்.”

“எப்படி?”

“பத்திரிக்கை நேம் லிஸ்ட் நாந்தாங்க எழுதுனே. பத்திரிகை ப்ரூஃப் வந்துச்சே… பாக்கல.”

“பாத்தேன்… பாத்தேன்… தாய்மாமன்‌கள் தொடர்ச்சி, சித்தப்பா பெரியப்பா தொடர்ச்சி, அத்தை, மாமா தொடர்ச்சி, சகோதர சகோதரிகள் தொடர்ச்சினு ஒரு நண்டு சிண்டு விடல. நாப்பது பக்கம் நோட்டு மாதிரி இருக்கு பத்திரிகை.”

“அதெல்லாம் சொந்த பந்தத்துக்குனு அடிச்சது. நம்ப பக்கம் அதுதானே பழக்கம். ஒரு பேரு விடுபட்டாலும் வெட்டுக்குத்துனு ஆகிப்போகும்ல... அதான் ஃப்ரென்ட்ஸ்களுக்குனு தனியா அடிக்கக் கொடுத்துருக்கோமே? சாவியக் கொடுங்க. அங்க எல்லாரும் வெயிட் பண்றாங்க” என‌ கை நீட்டினாள்.

இன்று மாலை திவ்யா, மதியழகன் நிச்சயதார்த்தம். நிச்சயதார்த்தம் எப்பொழுதும் பெண் வீட்டார் விசேஷம். கல்யாணம் மாப்பிள்ளை வீட்டுக்கல்யாணம்.
எனவே நிச்சயதார்த்தம் தேனியிலும், கல்யாணம் நிலக்கோட்டையிலும் என முடிவு செய்யப்பட்டது.
மதியத்திற்கு மேல் மாப்பிள்ளை வீட்டார் மண்டபம் வந்துவிட்டனர். அவர்களுக்கு அறைச் சாவியை கொடுக்க வந்தவன்தான் முத்துப்பேச்சியிடம் பெயர் மாற்றம் பற்றி விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறான்.‌

“எம்பேர்ல எனக்கில்லாத சங்கட்டம் உங்களுக்கென்னங்க?”

“வயசான மாதிரி இருக்குல்ல?” தனக்குள்ளே சொல்லிக் கொள்ள,

“என்னங்க… சரியா கேக்கல” காதில் கைவைத்து கேட்க,‌

“அதெல்லாம் நல்லாதான் கேட்டுச்சு” முணங்கிக் கொண்டே சாவியைக் கொடுத்தான்.

“இன்னும் என்னடா பண்ற?” கேட்டுக்கொண்டே வேந்தன் வர,

“வாம்மா…‌நல்லாருக்கியா?” சம்பிராதாயமாக அவளையும் நலம் விசாரித்தான்.

“நல்லாருக்கேன் மாமா” என்றாள்.‌

“ஏதாவது வேணும்னா அப்பாவ ஃபோன் பண்ணச் சொல்லும்மா. செழியனும் இங்கதான் இருப்பான்” என்றவன்,

“வந்தவங்களுக்கு குடிக்க ஏற்பாடு பண்ணு செழியா. சமையலப் பாத்துக்கோ. நான் வீட்டுக்குப் போயி அவங்கள அழைச்சுட்டு வர்றே” என்றவன் மண்டப பொறுப்பை தம்பியிடம் ஒப்படைத்துச் சென்றான். அண்ணன் நகர்ந்ததும், தனது ஃபோன் நம்பரைச் சொல்ல,

“எதுக்கு?” என்றாள்.

“ஏதாவது வேணும்னா ஃபோன் பண்ணனும்ல அதுக்கு தான்.”

“பெரிய மாமா நம்பர் எங்கிட்ட இருக்கு. அவருக்கு ஃபோன் பண்ணிக்கிறே.”

“அவரு மட்டும் மாமாவா. அப்ப நாங்கல்லாம் யாரு?” என வாய்க்குள் முணங்கிக் கொண்டே திரும்ப,

“என்னாது?” என்றாள் சத்தமாக.

“அதான் நல்லா கேக்குதுல்ல… அப்பறமென்ன என்னாது நொன்னாதுன்னுட்டு. போங்க… போயி வந்தவேலையப் பாருங்க” என நடையக்கட்டியவனைப் பார்த்து வாய்விட்டு சிரித்தாள்.
சமையல்கட்டு சென்றவன். வந்தவர்களுக்கு குளிர்பானமும், காபியும் கொண்டு போகச் சொன்னான்.

“சாவி வாங்கிட்டுவர இம்புட்டு நேரமா முத்து?” என கேட்டுக் கொண்டே பாக்யலஷ்மி மகளைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார்.

“வாங்கிட்டேம்மா… வாங்க போகலாம்” என, வந்தவர்களுக்கு அறைகளைத் திறந்துவிட்டு,‌ சொந்த பந்தங்கள் தங்க ஏற்பாடு செய்தனர். விநாயகம் ஆம்னி பஸ்தான் மாப்பிள்ளை வீட்டாரை அழைத்துவர நிலக்கோட்டை சென்றிருந்தது.
மாலைதான் விசேஷம், உள்ளூர் என்பதால் இன்னும் பெண் வீட்டார் வந்திருக்கவில்லை. மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றுவிட்டு, அவர்கள் பொறுப்பை தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு தங்கள் வீட்டாரை அழைக்க வேந்தன் வீடுவந்தான்.

அவனது சித்தப்பாக்கள் குடும்பம், மற்ற நெருங்கிய சொந்தங்கள் என வெகுநாட்கள் கழித்து வீடு சொந்தபந்தங்களால் நிறைந்திருந்தது. வீட்டிற்கு வந்த வேந்தன் அனைவரையும் கிளம்பச் சொல்லி துரிதப்படுத்திக் கொண்டிருந்தான்.

தாமரையும் எல்லாவற்றையும் சரிபார்த்து எடுத்து வைக்க, அங்கு வந்த அம்மையப்பன்,
“தாமரை… இன்னும் நேரமிருக்கு. அவசரப்படாம எடுத்து வை. ஏன் இப்படி பரபரன்னு இருக்க?”

“உமக்கென்ன… சொல்லிட்டு ஜம்பமா உக்காந்திருவீரு. அங்க போயி, ஏதாவது விட்டுப்போச்சுனா எனக்குத்தான் டென்ஷன். உங்க மகன் கால்ல சுடுதண்ணிய ஊத்திக்கிட்டு நிக்கிறான்” என வேலையில் கவனமாக, பிபி மாத்திரையையும், தண்ணீரையும் எடுத்து வந்தவர் பிடிவாதமாக மனைவியின் கையில் கொடுத்து போடச்சொன்னார்.

“இன்னைக்கு கூட இதப் போடனுமா?”

“இப்ப உன் உடம்பு இருக்குற கன்டிஷனுக்கு நீ போட்டுத்தான் ஆகணும்.”

“இதெல்லாம் வயசானா தன்னால வர்றதுதான?”

“உனக்கு வயசாகல தாமரை. மறுபடியும் சின்னப்பிள்ளையாகுற. பெண்களுக்கு மட்டும் தான் குழந்தையில் இருந்து குமரியாகி, தாயாகி, மீண்டும் குழந்தையாகும் வாய்ப்பு.”

“மருமகன் வந்தாச்சு. இன்னும் சின்னப்பிள்ளைனுட்டு.” நொடித்துக் கொண்டாலும், இதழில் புன்னகை நெளிந்தது.

“எனக்கு நீ சின்னப்புள்ளதான்டி. மொதல்ல மாத்திரயப் போடு. பேசிட்டே மறந்துருவ.” என விடாப்பிடியாக போட வைத்தார்.

இந்த மாதிரி நேரத்தில் இருக்கும் படபடப்போடு, மகளின் திருமணமும் சேர்ந்து கொண்டதில் தாமரைக்கு இரத்த அழுத்தம் அதிகரித்திருந்தது. வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சோர்ந்து போகும் மனைவியைக் கவனித்தார். மனைவி தன்னைப்பற்றி கண்டுகொள்ள மாட்டாள் எனத்தெரியும். அம்மையப்பன் கட்டாயத்தில்தான் மருத்துவமனை அழைத்துச் சென்று, மனைவிக்கு முழு பரிசோதனை செய்து மருந்துகள் வாங்கிவந்தார். இப்பொழுதும் மாத்திரை போட்டிருக்க மாட்டாள் என அவரே எடுத்துக் கொடுத்தார்.
தேவையானதெல்லாம் எடுத்து வைத்து, பூஜை அறையில் விளக்கேற்றி பெரியவர்கள் திருநீர் பூசி ஆசீர்வாதம் செய்ய, அனைவரும் மண்டபம் கிளம்பினர். அங்கு வைத்துதான் அலங்காரம் என்பதால் திவ்யாவும் எளிமையாக கிளம்பியிருந்தாள்.

பெண்பார்க்க வந்த அன்றே வீட்டளவில், ஒப்புத்தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். திருமணத்திற்கும் நிச்சயத்திற்கும் பதினைந்து நாட்கள்தான் இடைவெளி என்பதால் நல்ல நாள் பார்த்து பத்திரிகை அடிக்கக் கொடுத்துவிட்டனர்.
கல்யாணத்திற்கு இணையாக அம்மையப்பன் நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு செய்திருந்தார். இரு வீட்டார்க்கும் முதல் விசேஷம். தன் மகள் மீது உள்ள பாசத்தை மட்டுமல்ல, தனது டாம்பீகத்தையும் நிச்சயதார்த்தத்திலேயே அம்மையப்பன் காட்டினார்.

மாலை நெருங்கும் நேரம்தான் பெண் வீட்டார் வந்திறங்கினர். சொந்த பந்தங்களுக்கு ஒரு பஸ் ஏற்பாடு செய்துவிட்டு, இவர்கள் குடும்பத்தோடு காரில் வந்திறங்கினர்.‌ சித்தப்பாக்கள் குடும்பம் தனித்தனியாக அவரவர் காரில் வந்தனர்.
நண்பர்களுடன் வெளியே நின்றிருந்த மதியழகன் பார்வை திவ்யாவைத்தான் மொய்த்தது. மென்பட்டில், எளிமையான அலங்காரங்களுடன் காரிலிருந்து இறங்கினாள்.

இப்பொழுதும் அவளிடம் பேசத்தெரியாமல் பேசியதை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
பெண்பார்க்கும் அன்றே ஒப்புத்தாம்பூலம் என முடிவு செய்ய, இவனும் அதற்கு முன் ஒருதடவை பெண்ணைப் பார்த்துவிடுவதென முடிவு செய்தான். ஏற்கனவே பட்ட சூடோ என்னவோ அவனுக்கும் அப்படித் தோன்றியது.

பெண்ணைப் பார்க்கலாம் என கல்லூரி வாசல் வந்தவனை, தோழிகளுடன் நடந்து வந்தவள் உள்ளிருந்தே கண்டுகொண்டாள்.‌ உள்ளேயே மரத்தடியில் நின்று கொண்டாள். தோழிகள் கேட்டதற்கு, அண்ணன் அழைத்துச் செல்ல வருவதாக அவர்களை முன்னே போகச் சொல்லிவிட்டாள். பதட்டத்தில் சின்ன அண்ணனை அழைத்தும்விட்டாள்.

“நாங்க மட்டும் மாத்தி மாத்தி போயி விசாரிச்சோம்ல. அவருக்கும் உன்ன பாக்கணும்னு தோனிருக்கும் பாப்பா.”

“அதுக்குன்னு யாராவது காலேஜ் வருவாங்களா?”

“அந்தக்காலம் மாதிரி ஊரணியில வச்சா பாக்கமுடியும். இல்ல, வீட்டுக்கு வரமுடியுமா?”

“உங்கிட்ட சொன்னேம்பாரு. நான் பெரிய அண்ணங்கிட்ட பேசிக்கிறேன். இவரு சரிப்பட்டு வரமாட்டாரு. அதான் அடுத்தவாரம் பொண்ணு பாக்க வர்றாங்கள்ல. அதுக்குள்ள இங்க வந்தா என்ன அர்த்தம். என்னய நோட்டம் பாக்குறாங்களா?” என்றவள் குரல் உள்ளிறங்கியது.

“ஏய்… லூசு… பொண்ண வெளியவச்சுப் பாத்தா நோட்டம் பாக்கத்தான் வருவாங்களா? சும்மா பாத்துட்டுப் போக வந்திருப்பாரா இருக்கும். வேற வேலையாக்கூட வந்திருக்கலாம். நாங்களும்தானே அவங்க கடைக்கே போனோம். உங்கிட்டவந்து பேசுனா பேசு.‌ பொண்ணு பாக்குறப்ப தனியால்லாம் பேச நம்மவீட்டு பெருசுங்க விடமாட்டாங்க.”

“டேய்… நீயெல்லாம் ஒரு அண்ணனா?‌ இப்படி கோர்த்துவிடறியே?”

“உனக்கு அண்ணன் தான். ஆனா அவருக்கு மச்சானாச்சே!” என எதிர்முனையில் சிரிக்க,

“அடப்பாவி… முடிவே பண்ணிட்டியா?”

“பொண்ணு பாக்கவர்றது சம்பரதாயத்துக்குதான் திவ்யா. விசாரிச்ச வகையில அண்ணே, அப்பாவுக்கெல்லாம் முழு திருப்தி. இல்லைனா எங்க வீட்டுப் புள்ளய சும்மா ஒருத்தர் முன்னாடி நிக்க வைப்போமா?” என, வேறு வழியில்லாமல் ஃபோனை அணைத்துவிட்டு வெளியே வர, சாலையின் எதிர்ப்புறம் இருந்து மதியழகனும் இவளை நோக்கி வர, உள்ளங்கை வியர்த்துவிட்டது திவ்யாவிற்கு. வீட்டில் ஆண்களோடு மட்டுமே பேசிப் பழகியவள் தான்.‌ ஆனால் இவனைக் கண்டதும் பதட்டம் அதிகரித்தது.
செழியன் உடனே அண்ணனுக்கு அழைத்து விபரத்தை சொல்லிவிட, அரைமணி நேர இடைவெளியில் தம்பியைக் கிளம்பி போகச் சொன்னான்.‌
தன்னைவிட செழியனிடம்தான் தங்கைக்கு ஒட்டுதல் என்று தெரியும். இவன் இடையில் வந்து இவர்களோடு சேர்ந்து கொண்டவன்தானே.‌ இப்பொழுதும் தேனி, பெரியகுளம் என்றுதானே மாற்றி மாற்றி இருக்கிறான். அதனால் செழியன் உடனிருந்தால் அவளும் தைரியமாக இருப்பாள் என தம்பியை போகச்சொன்னான். செழியன் உடனிருக்கும்போது பார்ப்பவர்களுக்கும் தவறாகத் தெரியாதென.

மதியழகன் நெருங்கிவர, பதட்டத்தை மறைத்துக் கொண்டு புன்சிரிப்பொன்றை உதிர்த்தாள்.‌
ஏதோ ஒரு வேகத்தில் அவளை நெருங்கி விட்டானே ஒழிய என்ன பேசுவதென்று‌ அவனுக்கும் தெரியவில்லை. சுற்றிலும் பார்வையை ஓட்ட, பஸ் நிறுத்தத்தில் நின்றவர்கள் பார்வை தங்கள் மீது படிய, அருகிலிருந்த காஃபி ஷாப்பிற்கு அழைத்தான். அவள் தயங்கி நிற்க, “ரோட்ல நின்னு பேசுனா நல்லாருக்காது.‌ ப்ளீஸ்…” என,
காஃபி ஷாப்தானே சுற்றிலும் ஆட்கள் இருப்பார்கள் என தைரியமாக பின்னே சென்றாள்.

ஓரமாக இருந்த டேபிள் பார்த்து அமர்ந்தவன்,
“என்ன வேணும். கூல்ட்ரிங்க் சொல்லவா. இல்ல காஃபியா?” என கேட்க,

“அடிக்கிற வெயிலுக்கு காஃபி வேண்டாம். ஃப்ரெஷ் ஜுஸ் ஏதாவது சொல்லுங்க” என,
இருவருக்கும் மாதுளை ஜுஸ் சொன்னான். கைகளைப் பின்னிக்கொண்டு, இறுக்கத்தோடு அமர்ந்திருந்தவளைப் பார்த்தான்.

“சின்னத்தம்பி அண்ணனுங்க ரேஞ்சுக்கு உங்க அண்ணனுக பில்டப் பண்ணவும்தான் நானும் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன். சும்மா சொல்லக் கூடாது, குஷ்பூ மாதிரிதான் இருக்கீங்க” என்றவனை பதட்டத்தையும் தாண்டி முறைத்துப் பார்த்தாள்.‌ (என்னமோங்க… இன்னும் மாப்பிள்ளைனா அரவிந்த்சாமி, பொண்ணுனா குஷ்பூ, ஜோதிகானு தொன்னூறுகளுக்குதான் ரசனை போகுது.)

அவளது பார்வையில் வித்யாசத்தைப் பார்த்தவன், ‘தப்பா ஏதும் சொல்லலியே?’ என யோசிக்க,

“கரெக்ட் தாங்க. கடைசில கல்யாணம்னா என்னானு தெரியாத லூசுக்கு கட்டி வச்சுருவாங்க. இந்த அண்ணந்தங்கச்சி செண்டிமென்ட் படமெல்லாமே இப்படித்தான். அதனாலேயே நான் பாக்குறதில்ல.” என்றாள் வெடுக்கென.

“இப்ப என்னங்க சொல்லிட்டே… நல்லவிதமாத்தானே சொன்னே…” மெல்லிய பதட்டம் அவனிடமும்.

“குண்டா இருக்கேன்னு சொல்லாம சொன்னீங்க” என, அப்பொழுதுதான் அவனே அவளை உற்றுக் கவனித்தான். சற்றே பூசின உடல்வாகு. மாநிறத்தை மிஞ்சிய பொன்னிறம். தண்ணிவாகிற்கு ஏற்றபடி நீண்ட கருங்கூந்தல். சடையை முன்பக்கமாக போட்டிருந்தாள். அவன் பார்வை தன்மீது படிவதை உணர்ந்தவள் துப்பட்டாவை சரி செய்வதுபோல் அசைய, சுதாரித்தவன்…

“குண்டா எல்லாம் இல்லீங்க. ஆனா, கொஞ்சம் பூசுன‌மாதிரித்தான் இருக்கீங்க” என மனதில் பட்டதை மறைக்காமல் சொல்ல,

“இதத்தான் சொன்னே. ஒரு பொண்ணுகிட்ட பேசத் தெரியுதா?.”

“இப்படியெல்லாம் மடக்கி மடக்கி கேள்வி கேட்காதீங்க. எனக்கு பதில் தெரியாது. நான்‌வந்த விஷயமே வேற.”
‘இவ அண்ணனுககிட்ட பேசுன மாதிரி இவகிட்ட ஏன் பேசமுடியல. இப்படி சொதப்புதே, முதன் முதலாக பார்க்கும் ஒரு பெண்ணிடம் நீ குண்டா இருக்கேன்னு சொன்னா எந்தப் பொண்ணுக்கு தான் புடிக்கும்’ என‌ உள்ளுக்குள்ளேயே தலையில் அடித்துக் கொண்டான்.

“அது வந்து…” எனத் தயங்கியவன், “உங்களுக்கும் முழு சம்மதம்தானங்க. அது கேட்டுப் போகத்தான் வந்தேன்” என்றான் சிறு தயக்கத்தோடே. ஒரு பெண்ணிடம் இப்படி வெளிப்படையாக கேட்பது அவனுக்கே சற்று அதிகப்பிரசங்கித் தனமாகத்தான் இருந்தது. அவன் கேட்டதன் உள்ளர்த்தம் புரிந்தவள்,

“எனக்குப் பிடிக்காத எதையும் எங்க வீட்ல செய்யமாட்டாங்கங்க. எனக்கு என்னப்பெத்தவங்க மேல நம்பிக்கை இருக்கு. அதுக்கு மேல அவங்க என்ன நம்புறாங்க. அப்படியே எனக்கு யாரையாவது மனசுக்குப் புடிச்சாலும் தைரியமா எங்க வீட்ல சொல்லுவேன்” படபடத்தவள் பேச்சில் கோபம் துளிர்த்திருந்தது. எனக்குப் புடிச்சது, புடிக்கலைனு எங்க வீட்ல சொல்லப் போறேன். நீ என்ன வந்து கேக்குறது. அதுக்குள்ள எனது அந்தரங்கத்திற்குள் நுழையும் உரிமை உனக்கு எங்கிருந்து வந்தது என்ற கோபம்.

அவள் கோபம் உணர்ந்தவன், தனக்கு நடந்த முன் அனுபவத்தைச் சொல்லிவிட்டு,
“உன்னப் பெத்தவங்க மேல வச்ச நம்பிக்கையை எம்மேலயும் வைக்கலாம். எனக்கும் அவங்கள விட உம்மேல அதிகமா நம்பிக்கையிருக்கு. கடைக்கி வர்ற பொண்ணுககிட்ட ஈசியாப் பேசுற மாதிரி உங்கிட்ட பேசமுடியல. முன்ன பின்ன இந்த மாதிரி ஒரு பொண்ணுகிட்டப் பேசி பழக்கமுமில்ல. அதனால என்னால சரியான வார்த்தைகளைப் போட்டு பேசமுடியல. உனக்கும் மேல எனக்கும் டென்ஷனாத்தான் இருக்கு.” ஒருமைக்கு தாவியவன் தன் பதட்டத்தையும் வெளிப்படுத்த, இவளுக்கும் கோபம் குறைந்து சிரிப்பு வந்தது. அவனைப் பார்க்க, அவனுமே கைவிரல்களை இறுகக் கோர்த்துதான் அமர்ந்திருந்தான். ஒரு பெண்ணை இப்படி தனிமையில் சந்தித்ததில் பதின் பருவ விடலைப்பையன் மாதிரி அவனும் வித்யாசமான ஒரு உணர்வில் தான் தவித்துக் கொண்டிருந்தான். நமக்கு ஒரு தங்கை உண்டு. அவளை எவனாவது தப்பாகப் பார்த்தால் சும்மா விடுவோமா என்ற எண்ணத்திலேயே அவன் பார்வை பெண்களிடம் வரம்பு மீறியதில்லை.

அந்நேரத்திற்கு செழியன் அழைக்க, அழைப்பை ஏற்றவள் காஃபி ஷாப்பில் இருப்பதாகச் சொல்ல இரண்டு நிமிடத்தில் அங்கு செழியன் வந்தான். அண்ணனைப் பார்த்ததும் சட்டென, அவளது இறுக்கம் தளர்ந்து முகம் இலகுவாகியதுபோல் இருந்தது. அவள் முகத்திலும் அப்பட்டமாக மதியழகனுக்குத் தெரிந்தது. இந்த ஒரு உணர்வை ஒரு பெண்ணிடம் உருவாக்குவது அத்தனை சுலபமல்ல. பெற்றவர்கள், உடன் பிறந்தவர்களிடம் வரும் இயல்பான பாதுகாப்பு உணர்வை இன்னொரு ஆண்மகன் ஏற்படுத்துவது லேசுப்பட்ட காரியமல்ல எனப் புரிந்தது. அப்படி நம்பிக்கை வைத்துவிட்டால் பெற்றவர்களும், உடன் பிறந்தவர்களுமே பெண்களுக்கு மூன்றாம் பட்சமே.

செழியனும் இவர்களோடு வந்து இணைந்து கொள்ள, அதன்‌பின் பேச்சு மச்சான்களுக்குள் இயல்பாகச்செல்ல திவ்யா அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அண்ணன் வந்த பிறகு, அவளுக்கிருந்த பசிக்கு, செழியனிடம் சமோசா, பஃப்ஸ் என கேட்க,
“கல்யாணம் வரைக்குமாவது வாயக்கட்டு திவ்யா.” செழியன் தங்கையை கேலி பேச, சட்டென மதியழகனைத்தான் திரும்பிப் பார்த்தாள். அவன் வெளியே தெரியாமல் உதடு மடித்துச் சிரிக்க,

“வீட்டுக்கு வா. இன்னைக்கு உனக்கு இருக்கு” அண்ணன் பக்கம் குனிந்து, பல்லைக்கடித்து சத்தமில்லாமல் மிரட்ட,‌ மதியழகனே அவள் கேட்டதை ஆர்டர் செய்தான்.

******
“வா வித்யா. மூனாம் மனுஷி மாதிரி நேரா மண்டபத்துக்கு வர்ற. அதுவும் நீ மட்டும் வர்ற. பையனுகள கூட்டியாரலியா? ஃபோன் பண்ணியிருந்தா தம்பிக யாரையாவது கார் எடுத்துட்டு பஸ் ஸ்டான்ட் அனுப்பியிருப்பேன்ல.” தங்கையை தாமரை வரவேற்க,
“எனக்குத்தான் குடும்பமா எங்கேயும் போற கொடுப்பினை இல்லையே. ஒனக்கு அந்த ஊரத்தவிர வேற ஊர்ல மாப்பிள்ளையே கெடைக்கலியா?” மண்டப வாசலில் வைத்தே வித்யாவதி கேட்க, தாமரை பதட்டமாக அக்கம்பக்கம் திரும்பிப்பார்த்தார். சற்று தள்ளிதான் சம்பந்தி மாணிக்கம் தனது உறவினர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். நல்லவேளை அவர் காதில் விழவில்லையென அவரைப் பார்த்துவிட்டு அம்மையப்பன் முகம் பார்க்க, தாமரைக்கு கிலி பிடித்தது. அவரது பார்வை சுட்டெரித்தது. கணவர் முகம் காட்டிய பாவனையில் அவசரமாக தங்கையை உள்ளே அழைத்துச் சென்றார்.

“திவி… சித்தி வந்துருக்கா பாரு” என, ஒப்பனைப் பெண்ணிடம் தன்னை ஒப்படைத்துவிட்டு அமர்ந்திருந்த மகளிடம் விட்டு விட்டு மீண்டும் அவசரமாக கணவனிடம் ஓடி வந்தார.

“உன் தங்கச்சி திருந்தவே மாட்டாளா? கணபதிக்கு இல்லாதது இவளுக்கென்ன வந்துச்சு?” அம்மையப்பன் தாமரையிடம் முகம் காண்பிக்க,

“அவளப்பத்தி தெரிஞ்சதுதான. வர்றவங்களப் பாருங்க” என கணவனின் கவனத்தை வருபவர்கள் பக்கமாகத் திருப்பினார் தாமரை.

எப்பொழுதும் தங்கையின் பேச்சில் ஒரு சலிப்பு இருக்கும். ஒரே வீட்டில் ஒரே மாதிரியாக வளர்க்கப்பட்டாலும், ஒரே மாதிரியான வாழ்க்கை பெண்களுக்கு அமைவதில்லை. முன்ன பின்ன அமைவதுண்டு. ஒரே மாதிரியாக வளர்ந்த தாமரைக்கும், வித்யாவதிக்கும் ரொம்பவே முன்ன பின்ன அமைந்துவிட்டது. அக்காவிற்குக் கிடைத்த வாழ்க்கைபோல் தனக்கு அமையவில்லை என்ற பொறாமையுணர்வு எப்பொழுதும் வித்யா‌ மனதில் இருக்கும். அது அவ்வப்போது பேச்சிலும் வெளிப்படும்.

அன்பான வாழ்க்கைத் துணை, பொறுப்பான பிள்ளைகள், நிம்மதியான வாழ்க்கை என இன்னும் இளமை பூரிப்பு குறையாமல், மண்டப வாயிலில் வரவேற்பிற்காக பட்டும், நகையுமாக கணவன் அருகில் நிற்கும் அக்காவைப் பார்த்தவுடன், பஸ்ஸைவிட்டு இறங்கி, வியர்க்க விருவிருக்க நடந்துவந்த தன்னை நினைத்து, அவரையும் மீறி பேச்சில் அது வெளிப்பட்டுவிட்டது.

இதுவரை எப்படியோ. தங்கள் வீட்டில் நடக்கும் முதல் விசேஷம். அதுவும் பெண்பிள்ளை விசேஷம். கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாதே. இங்கும் வந்து தன் அங்கலாய்ப்பைக் கொட்ட, அம்மையப்பனுக்கு கோபம் எல்லை மீறியது.
கணபதியே முதலில் அந்த ஊரா என்றவர், நல்ல சம்பந்தம் எனில் ஏன் விட வேண்டுமென தாமரையைப் போல மனதை சமாதானப் படுத்திக் கொண்டார். பின் எதுவும் கண்டுகொள்ளவில்லை. தாய்மாமனாக தன் கடமையாற்ற வந்துவிட்டார்.

முகூர்த்த நேரம் நெருங்க,‌ மதியழகன் தாய்மாமனும், திவ்யாவின் மாமன் கணபதியும் சந்தனம் பூசி சம்பந்தம் கலக்க, திவ்யாவை அழைத்து நிச்சயம் புடவை கொடுத்து கட்டி வரச் சொல்ல, அவளுடன் நாத்திமுறைக்கு முத்துப்பேச்சி உடன் சென்றாள்.
இலைப் பச்சை புடவைக்கு, பட்டு ரோஜா வண்ண பார்டர் வைத்த பட்டுப் புடவையில் மேடைக்கு வந்தவளை, மதியழகன் கண் விலக்காமல் பார்க்க,
திவ்யாவின் கைபிடித்து வந்த முத்துதான், “அண்ணா…” என,‌ வாய்க்குள் அழைத்து அண்ணனை தரையிறக்கினாள். அசடுவழிய பார்த்தவனை,
“தொடச்சுக்கோ” தங்கை கேலி பேச, திவ்யா குனிந்த தலை நிமிரவில்லை.

தாய்மாமன் மாலையெடுத்துப் போட, பெற்றவர்கள் தட்டு மாற்றிக்கொள்ள, மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொள்ள, நிச்சயப் பத்திரிகை வாசிக்கப் பட்டது.

பத்துப் பவுனில் ஆரம், அதற்கு செட்டாக நெக்லஸ், தோடு, வளையலென பரிசமாகவே இருபத்து ஐந்து பவுன் நகை தட்டில் வைத்து மணமகள் கையில் கொடுக்கப்பட்டது.
அனைவரும் பந்தி செல்ல, அண்ணனும் தம்பியும் தங்கை விசேஷத்தில் பம்பரமாகச் சுழன்றனர். மாணிக்கமும் இருவரையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். *

****
“என்னடி… நோட்ஸ் காபிபண்ண வந்துட்டு ஃபோனவே பாத்துட்டுருக்கவ?” மங்கா ஆர்த்தியை அதட்டினாள். ஆர்த்தியின் பெற்றோரும் மதியழகனுக்கு சொந்தம் என்பதால் நிச்சயத்திற்கு சென்றுவிட்டனர். அவர்கள் வரும்வரை மங்காவுடன் இருப்பதாக வந்துவிட்டாள்.

“விசேஷத்துக்குப் போனவங்க எப்ப வருவாங்கனு தெரியல மங்கா. மணி பத்தாகப்போகுது. தூக்கம் வேற வருது.” சொடக்குப்போட்டு கொட்டாவி விட்டவள்,

“நம்ப கூட ஸ்கூல்ல படிச்சாளே முத்துப்பேச்சி, அவ அண்ணனுக்குதான் நிச்சயதார்த்தம்.” என்றாள்.

“ம்ம்ம்… தெரியும். எங்க வீட்ல ஒரு வாரமா அந்த சினிமாதான் ஓடுது. பத்மாவ வேண்டாம்னுட்டு அங்க முடிக்கிறாங்கனு.”

“யாத்தே… இது வேறயா… உங்க அத்தை அதுக்கும் சேத்து உந்தலயத்தானே உருட்டிருப்பாங்க. அவங்க உங்களுக்கும் சொந்தமாமே” என கேட்ட ஆர்த்தியிடம் எந்த பதிலும் சொல்லவில்லை மங்கா. அன்று நகைக்கடையில் வேந்தனைப் பார்த்தது நினைவு வந்தது.

ஆர்த்தி சொன்னதுபோல் தமிழ்ச்செல்வி தண்ணியக்குடித்துக் கொண்டே பேசியே ஓய்ந்து போனார். பெரிய இடம் வந்ததால்தான் பத்மாவை தட்டிக் கழித்ததாக வந்த தகவலில், அந்த பெரிய இடம் எதுவெனத்தெரிய ஆடித்தீர்த்துவிட்டார்.
விமலிடமும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார். இதற்கு ஏதாவது செய்தே தீரவேண்டும் என விமலோடு சேர்ந்து திட்டம்போட ஆரம்பித்தார். அதற்குதான் இப்பொழுது அக்கா கணவரை தேடிச் சென்றுள்ளார்.‌

“இப்பவிட்டா மறுபடியும் எல்லாரையும் ஒன்னா புடிக்க முடியாது மாமா. எங்க வீட்டு ஆளுக இதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க. நீங்கதான் அவரையும் சரிக்கட்டணும். எப்படினாலும் விமலுக்குதானே வந்துசேரும். நம்ப புள்ளய வேண்டாம்னுட்டு அங்க போனாங்கள்ல. மறுபடியும் இந்த ஊருக்கே பொண்ணக் கொடுக்குறாய்ங்கன்னா அவிங்களுக்கும் எம்புட்டு தெனாவெட்டு இருக்கணும். அம்புட்டும் இங்கருந்து போனதுதான மாமா. இவிங்கள இப்படியே விட்டா ரொம்ப எளக்காரமாப் போயிரும். நாஞ்சொன்னமாதிரி செய்ங்க. கல்யாண வீட்ல வச்சே அவிங்கள மூக்கறுத்துருவோம்” என மாமனை உசுப்பேற்றிக் கொண்டிருந்தார் தமிழ்ச்செல்வி.

‘இவ பேச்சக்கேட்டு இந்த மனுஷ தேவையில்லாத வேல பாக்கப்போறாரு.’ செல்வவராணிக்கு மெல்லவும் முடியாத, துப்பவும் முடியாத நிலை மகள் செய்த காரியத்தால்.

“சித்தி சொல்றது சரிதான்ப்பா. நம்ப பிள்ளைய வேண்டாம்னாய்ங்கள்ல. நம்ப யாருன்னு அவிங்களுக்குத் தெரியனும்.”

கொழுந்தியாளும், மகனும் சொல்வது சரியெனப்பட்டது செல்லபாண்டிக்கு. நாளைக்கு எல்லாம் தன் மகனுக்குத்தானே என மனம் கணக்குப்போட்டது. சும்மா கிடந்த சங்கை ஊதிவிடப் போவது தெரியாமல்.

Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,572
Reaction score
6,856
Location
Salem
Hi friends ❣
இதோ கதையின் அடுத்த பதிவோடு தங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன் 🙏🙏🙏🙏🙏
SM ஈஸ்வரி 🥰 🥰 🥰 🥰 🥰
View attachment 41302

Nirmala vandhachu 😍😍😍
 
Labal

மண்டலாதிபதி
Joined
Aug 25, 2019
Messages
187
Reaction score
160
Location
Chennai
Apdi enna thaan plan panni irukaanga Thamizhselvi?Plan backfire aagidum polirukke
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top