Kandam Thandiya Paravaigal

Aparna

Author
Author
Oh...அப்டியா..க்கா..!!!?
I didnt know it ...
Time...kidaikkarappa...read.panrenkka..
Thanks.for..the.info..
Continue your writing .....???
My..heartiest.. wishes..to. you..??
☺☺☺
தங்களின்..எழுத்துக்களின்..தாக்கம்..
அளப்பரியது. ??
So..Keeeeeppppppp. rockkkiiiinnnggggg
???????
Kandipa padi avanga Tamil Avalo azaga irukum..i love u rasana la varum Da u will enjoy.. eludarathu pakalam Da ??
 

Aparna

Author
Author
Enakkum apdi thaan irukku ivanga innum elutha maataangalunu avlo nalla irukku unga writing skill ungalukku rasanaiyum ennai polavaenu feel panraen vanishakka story review kuduthappovae itha feel pannaen na air travel pannathilla train travel kooda athiha ponathilla aana rasipaen romba pudikkum romba thooram trainla pohanum iravil vilakku vaeluccathil madurai kollai alahu thoonga nagaram ipdi ellaam unga varihal nyabaha padithiduccu seekrama oru novel eluthunga am waiting
Jasha thanks a lot dear.. seekarame nee air travel panuvada..Apo vandu en kooda share pananum un experience ah ok ?..Alaga describe panra da madurai.ya.. super baby
 

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
காய்கறிகள்

கண்களைப் பாதுகாக்க ஊட்டச்சத்து மிகவும் அவசியம். காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, இ, இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் உள்ள உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும். இவை கண்களை பாதுகாக்கும். வைட்டமின் ‘ஏ‘ யில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கியச்சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ‘ஏ‘ சத்து பற்றாக்குறையால் தோன்றும் அறிகுறியே மாலைக்கண் நோய். கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளதால் உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ளலாம்.

வைட்டமின் ‘ஏ‘வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் உள்ளது. அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் அடங் கியிருப்பதால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை சேர்த்துக்கொள்வதன் மூலம் பார்வையை கூர்மையாக்கவும் உதவும். அலுவலகம் செல்லும்போது கேரட், பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி எடுத்துச் சென்று இடைவேளை நேரங்களில் சாப்பிட கண்களுக்கு குளுமை பரவும். புத்துணர்ச்சி பெறலாம்.

கண்களை பாதுகாக்க

கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று பார்க்கக்கூடாது. கண்ணில் நீர் வடிந்தால், கண்களை கசக்கக் கூடாது. கண் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். தலையணை உறையை தினமும் மாற்றவும்.

தூரத்தில் இருக்கும் பொருட்களை அதிக நேரம் உற்றுப்பார்க்க கூடாது. அடிக்கடி கண் சிமிட்டுவது நல்லது. அதிகமாக வேலை செய்யும்போது கண்ணில் அழர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ செய்யும் வேலையை நிறுத்தி விட வேண்டும்.

தூசி, புகை, அதிக சூரிய வெளிச்சம், அடர் காற்று ஆகியவற்றிலிருந்து கண்ணைப் பாதுகாப்பது அவசியம். நாளொன்றுக்கு 10 முறை கண்ணை மேல், கீழ், பக்கவாட்டுகளில் அசைத்து, பயிற்சி செய்து வர கண் தெளிவாக இருக்கும்.

குடல் சுத்தமாக இருந்தால், கண் பார்வையும் தெளிவாக இருக்கும். படபடப்பு, மன உளைச்சல், சோகம், கோபம், கவலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் கண்களை பாதுகாக்கலாம்."

அவர் சொல்ல சொல்ல விழி விரித்து பார்த்தேன்..
" அது மட்டுமில்ல மா உன் கண்கள் பேசும், கண் பொய் சொல்லாது.. அதனால் தான் என் கண்ண பார்த்து சொல்லுனு சொல்லறது கேள்வி பட்டிருக்கோம், உளவியல் ரீதியாக கண்களைஸ வைத்து நிறைய தகவல்கள் உண்டு என்றார்"..

கண்தானம் ரொம்ப பெரிய விஷயம் மா , ஒருவருக்கு உலகை காட்டறது கண்தான்.. இருட்டு எங்க இருந்தாலும் கஷ்டம் மா, அது மனசிலயும் சரி , வெளியிலும் சரி.. நம்ம இருந்தோம் போனோம்னு சொல்லிக்கொண்டே இந்த இடைப்பட்ட காலத்தில், நம்ம பிரஸன்ஸ காட்ட நாம போராட்டம் பண்ணணும், புரட்சி பண்ணும், பிரபலமாகணும் னு அவசியமில்ல மா, நாம் ஒருத்தருக்கு ஒரு மெழுகுவர்த்தி யா இருந்து ஒளியேத்தலாம்ல கண்ணதானம் பண்ணி? கண் தானமும் விளையாட்டு இல்ல,தானம் பண்றவருக்கு ஸூகர்,ப்ரஷர்மாதிரி இருக்க கூடாது.. இறந்து இரண்டு மணி நேரத்திற்குள் தானம் பண்ணணும் னு நிறைய இருக்கு... மக்கள் கண் தானம் பண்ண முன் வரணும்னு , இப்படி கூட கூறபட்டதை கேட்டிருப்பியே.."உங்களுக்கு நீங்கள் இறந்த பின்னும் சைட் அடிக்கணுமா? கண்தானம் செய்து பிறர் வழியா பாருங்க என்றார்".

அசதியில் அனைவரும் தூங்க ஆரம்பிக்க எங்கள் உரையாடல் பிறர்க்கு தொல்லையாக இருக்கும் என்று நிறுத்தினோம்..

கண் இமைகள் அணைத்து என் கண்களுக்கே என் மனதை கொண்டு சென்றேன்.. ஆமாம் நேற்று இன்னாரின் மகள், இன்று இன்னாரின் மனைவி, நாளை இன்னாரின் தாய்.. என்று நான் ஆவேன் இன்னாராகிய நான்..????? இறந்த பின் என்ன என் கண்களுக்கு அஞ்சனம் தீட்ட போகிறார்களா? மஸ்காரா, ஐ லயனர் லொட்டு லொசுக்கு இட போகிறார்களா? கை , கால்களை கட்டி விழி மூடப்போகிறார்கள்..மூடிய விழிகளில் கண்மணி தெரிய போகிறதா என்ன??

"வேண்டும் பாசமாக பெற்றோரை பார்த்த விழிகள்!!

வேண்டும் நட்புடன் சிரித்து சிரித்து நீர் கோர்த்த விழிகள்!!!

வேண்டும் காதலாயும் கிரக்கத்துடன் என்னவனை பார்த்த விழிகள்!!!

வேண்டும் அன்பையும், அணைப்பையும் என் குழந்தைக்கு ஊட்டிய விழிகள்!!!

வேண்டும் பிறர் வலி கண்டு தவிக்கும் என் கருணை விழிகள்!!!!!"

மனதால் கூறிக்கொண்டே உறங்கி போனேன்.. லேண்டிங் கான அறிவிப்பில் உணர்வு பெற்று விழித்தேன்..

டாக்டர் ராம் மற்றும் அவர் மனைவிக்கும் நன்றி கூறி அடுத்த ஃப்ளைட் டெர்மினலை நோக்கி நடக்க தொடங்கினேன்...

வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமான விஷயங்களை உள்ளடக்கியது..நம்மால் பிறர்க்கு உதவ முடிந்தால் எவ்வளவு பெரிய விஷயம். அதுவும் நாம் இறந்த பிறகு? பிடித்தமானதை பார்க்கலாம், படிக்கலாம்.. பழகலாம், எல்லாம்...

ஊருக்கு போய் டிரைவிங் லைசன்ஸ்ல டோனர் என்று சேர்க்க சொல்லணும்னு எண்ணியபடி "கண்"டம் தாண்டி வந்தேன்..

கண்டம் தாண்டிய பறவைக்கும் ஜெட் லேக் வந்தது.. கண்ணான என் கண்கள் உறங்க அணைத்து அழைகின்றது..

ஒரு நிமிடம்!. நீங்களும் யோசிச்சு பாருங்களேன் கண்தானம் பத்தி !!!??
ஹாய் அபர்ணாக்கா.. அழகா கண் பத்தி சொல்லிருக்கீங்க... நான் தினமும் காலை 10 மணியில் இருந்து இரவு 12 மணி வரை லேப் யூஸ் பண்ணுறேன்...கிட்ட தட்ட 4 வருசமா இதே தான்... கம்ப்யூட்டர்ல இருக்கும் பொழுது கண்ணாடி போடணும்னு நினைப்பேன்.. பட் இன்னும் கண்ணாடி யூஸ் பண்ணல.. ஆனால் இப்பொழுது நீங்க சொல்வதை பார்த்தால். கண்ணாடி போட்டால் கண்ணை பாதிக்கும் போலவே.. அடிக்கடி கண் உறுத்தல் அதிகமாவே இருக்கு.. ஆனால் தினமும் ஒரு டம்ளர் காரட் ஜூஸ் குடிக்கிறேன். அது தான் என் கண்ணு இன்னும் நல்லா இருக்குனு நினைக்கேன்... ஆனால் கண்ணாடி போட்டால் நல்லா இருக்கும்னு தோணுது ? இப்போ இதை படிச்ச பிறகு கண்ணாடி போடக்கூடாதுனு இருக்கு...
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Aparna dear .... sema pa evvalavu alaga eluthirukkeenga .... unga writing skilla nijamaave nallaa irunthathu ...
eyes pathi alagaa sollirukkeenga .... niriaya perukku thevaiyaana onnu ...
romba pudichirukku ... aal the very best ...
 

Aparna

Author
Author
Aparna dear .... sema pa evvalavu alaga eluthirukkeenga .... unga writing skilla nijamaave nallaa irunthathu ...
eyes pathi alagaa sollirukkeenga .... niriaya perukku thevaiyaana onnu ...
romba pudichirukku ... aal the very best ...
Awww naemi ? that was a great compliment from you ?? ?, thanks a lot dear...
 

Maha

Author
Author
SM Exclusive Author
"உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்ன பார்த்தாலே..."
காதோடு காதலுடன் பாடிய சங்கர் மஹாதேவனோடு, ட்ராலியை தள்ளிக்கொண்டு, லக்கேஜ் செக்கின் செய்ய வரிசையில் நின்றிருந்தேன்....

சென்னை பன்னாட்டு விமானம், பள்ளி காலங்களில் வானத்தில் பறந்த விமானத்தை பார்த்து டாடா சொன்ன நான் இன்று அதற்குள்ளே!!!! சிரித்து கொண்டே முன்னேறினேன்..

மக்கள் கூடும் இடம் தான் எவ்வளவு உணர்ச்சி குவியல்களை சுமந்திருக்கும் பூக்கூடை!!!!

கனவுகளோடும், கடமைகளோடும் வான் பறக்க சிறகுகளை விரித்திருந்த இளவட்டங்கள்.. தன் வாழ்வில் வெற்றி பிள்ளைகளைகளின் வெற்றி என்று பெருமையுடனும், கர்வத்தோடும் பிள்ளைகளை காண செல்லும் பெற்றோர்கள்.. குடும்பத்தை விட்டு, இதயத்தை அவர்களிடம் தந்து, நினைவுகளையும் கண்ணீரையும் சுமந்து பயணிப்பவர்கள் என் பலரை கடந்த செல்லும் போது..

பல நாள் கழித்து கண்ட உயிரை கட்டி அகமகிழும் உறவுகள்," எப்படி இருக்க, மெலிஞ்சிட்டயே" என்றும் , "டேய் மச்சான் பாட்டில் வாங்கிட்டு வந்தியா?" என உறக்க கூறி பின்பு சுற்றம் புரிந்து" சென்ட் பாட்டில் டா " என்று நகைச்சுவையாய் பேசி வரவேற்க்கும் நட்புகளின் கூவல்களை நினைத்த போது, மூன்று வாரம் முன்பு என்னையும் என் குடும்பம் இப்படி தானே வரவேற்றது என்ற அசை போட்ட மனம் என்னையும் மீறி அவர்களிடம் அழைத்து சென்றது, விழி நீர் சூழ..

உள்ளிளுத்தேன் கண்ணீரோடு, 3 வார பொக்கிஷமான நொடிகளை..." விஷ் யூ எ ஹாப்பி ஃப்ளைட் மேடம்" என்று பயணச்சீட்டு தந்த பெண்ணிடத்தில் நன்றி கலந்த புன்னகையை வீசியபடி.. இமிகிரேஷன் ஆபிஸர் " போய்ட்டு வா மா செல்லம், இந்தியா விட்டு இன்னிக்கு போற" என்ற ரீதியில் கடவுச்சீட்டில் முத்திரை குத்தி , முறையாக விடை குடுத்தார்..

ஓ.கே.. இதோ உனைத் தேடி வருகிறேன்.. என் வேடந்தாங்கல் வாசம் முடிந்து பணி கூட்டுக்குள் வந்து சேர பறக்கிறேன்.. சுதந்திர தேவியை சுமக்கும் நாடு.. குடியேறியவர்களின் நிலம் அமெரிக்கா.. இதோ வருகிறேன்..
விவேக் சீனிவாசனை போன்ற பல மேக காதலர்களான பைலட்கள், விமான பணிபெண்கள் புடை சூழ வருகிறேன்...

வாழ்க்கையில நிறைய தருணங்கள் நமக்கு நிறைய பாடங்கள் கற்று தரும் தானே, ஒவ்வொரு பக்கத்திலும்..அந்த புத்தகத்தோடு கடக்கும் இரயில் பயணிகள் தாம் நாம்.. வாங்க நாம் அவங்க அவங்க புத்தகத்தோட அடுத்த பக்கத்த புரட்டுவோம்..

"நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே ..!!" அட ஃப்ளைட் கிளம்பிடுச்சுபா வேற‌ ஒண்ணுமில்ல ??

கடவுசீட்டு கையிலேந்தி , கனவுகள் பல சுமந்தபடி

கடல் கடந்து வந்தோமடி கிளியே!!!

பெற்றோர் கூடயில்லை, சூழும் சொந்தம் அருகிலில்லை

தனிமையினை அணைத்தோமடி கிளியே!!

உடுக்கை இழந்தவன் கை போல என்

இடுக்கண் களைய வந்ததடி நட்பு கிளியே!!!

ஜாதி,மத,மொழி, இனம் மறந்து ஒரு

கூட்டு பறவையாய் வாழ்கிறோமடி கிளியே!!!

நிலச்சோறு தின்ற ஏக்கம் போக்க

கூட்டாஞ்சோறு உண்கிறோமடி கிளியே!!!

காக்கை கூட்டுக்குள் குயில்கள் ஆயினும் இன்பமாய்

கூவிக்கொண்டு இனிமை காண்கிறோமடி கிளியே!!!

வேடந்தாங்கல் பறவையென மூன்று வார விடுப்பில்

தாய் மண்ணை தொட பறக்கிறோமடி கிளியே!!!

பெட்டி நிறைய பரிசு கொண்டு கனமான

இதயம் வாங்கி வருகிறோமடி கிளியே!!!

பஞ்சு மெத்தை பார்ப்பவர்களுக்கு வெளிநாடுவாசம்

நாங்கள் முள்ளின் மேல் ரோஜாவடி கிளியே!!!

வெளிநாடு வந்த பின்பும் தணியாத தமிழ் தாகம்

இதை பகிறவைத்ததடி கிளியே!!

நாங்கள் முள்ளின் மேல் ரோஜாவடி கிளியே!!!

Continued....
அப்பு மா ஹர்ட் டாச்சு பண்ணிட்டே டா செல்லமே??☺?
உருகுதேனு பாடுன ஆமாடி அப்புகுட்டிமா உருகி போயிட்டேன் டா உன்னோட எழுத்துவழியாக வந்த உன்னோட வலி ஏக்கம் ஆசை படித்த என் விழியோரம் கண்ணீர் உருளுதே ஒவொருத்தரும் தன்னோட நாட்டை விட்டு பிரிந்து போகும் போது அவங்க உடல் தான் உயிரோட அங்கே போகுது அவங்க நினைவு எண்ணங்கள் எல்லாம் அவங்க தாய் நாட்டையே தான் சுத்தி கிட்டு இருக்கும் சுபெர் டா உன் எழுத்து என்னை கட்டி போடுதடி கிளியே god bless my dear இனி இந்த
Kandam Thandiya Paravaigal உன்னோட கைவண்ணத்தில் மேலும் மெருகு ஏற்று இதன் முலம் உனக்கு நிரய அன்பு உள்ளங்கள் கிடைக்க வாழ்த்துக்கள் பாங்காரம்????
 

Aparna

Author
Author
அப்பு மா ஹர்ட் டாச்சு பண்ணிட்டே டா செல்லமே??☺?
உருகுதேனு பாடுன ஆமாடி அப்புகுட்டிமா உருகி போயிட்டேன் டா உன்னோட எழுத்துவழியாக வந்த உன்னோட வலி ஏக்கம் ஆசை படித்த என் விழியோரம் கண்ணீர் உருளுதே ஒவொருத்தரும் தன்னோட நாட்டை விட்டு பிரிந்து போகும் போது அவங்க உடல் தான் உயிரோட அங்கே போகுது அவங்க நினைவு எண்ணங்கள் எல்லாம் அவங்க தாய் நாட்டையே தான் சுத்தி கிட்டு இருக்கும் சுபெர் டா உன் எழுத்து என்னை கட்டி போடுதடி கிளியே god bless my dear இனி இந்த
Kandam Thandiya Paravaigal உன்னோட கைவண்ணத்தில் மேலும் மெருகு ஏற்று இதன் முலம் உனக்கு நிரய அன்பு உள்ளங்கள் கிடைக்க வாழ்த்துக்கள் பாங்காரம்????
ரொம்ப நன்றிக்கா , ரொம்ப‌ கஷ்டமா இருக்கும் க்கா, அதவும் விட்டு பிரியும் போது... வெற்றுடலா தான் போவோம்?? இதுவும் கடந்து போகும்ன்னு போயிட்டே இருக்க வேண்டியது தான்.. என்ன நம்பியும் இரண்டு ஜீவன்‌ இருக்கே??
 
Last edited:

Maha

Author
Author
SM Exclusive Author
ரொம்ப நன்றிக்கா , ரொம்ப‌ கஷ்டமா இருக்கும் கண்காணிப்பு, அதவும் விட்டு பிரியும் போது... வெற்றுடலா தான் போவோம்?? இதுவும் கடந்து போகும்ன்னு போயிட்டே இருக்க வேண்டியது தான்.. என்ன நம்பியும் இரண்டு ஜீவன்‌ இருக்கே??
ஆமா டா????
 

Maha

Author
Author
SM Exclusive Author
என்று என்றோ நான் கிறிக்கிய கவிதை நினைப்பு வர .. இருள் சூழ்ந்த அந்த இரவு வானத்தை திரும்பி பார்த்தேன்.. ஆம் இங்கு தான் வளர்ந்தேன், படித்தேன் .. என் உறவுகள் இங்கு தான் என் உரிமைகள் இங்கு தான் என் பிரபு மாதிரி "என் தங்கம் என் உரிமை" னு சத்தம் போட்டு கொண்டிருந்த என் மனதை பார்த்து ப்ளிஸ் உனகெல்லாம் ஆங்கிரி பேர்ட் ஃபேஸும், அழுமூஞ்சிதனமும் சுத்தமா செட் ஆகால என என் மூளை கிண்டலடிக்க, அட ஆமாம்ல தெரிஞ்சு தானே வந்தோம் கொஞ்ச நாள் தான் இருப்போம்னு அப்பறம் என்ன, இதோ அடுத்த லீவ் வர போது அப்ப இன்னும் ஜாலியாய் இருக்கணும். எங்கெல்லாம் போகணும் , திருப்பியும் தி.நகர் போணும்னு எனக்குள்ளே அடுத்த வருட பயணத்துக்கு ப்ளான் போட ஆரம்பிச்சேன்...

விமான பணிப்பெண்கள் அவங்க வழக்கமா சொல்லற டையலாக்ஸ் எல்லாம் சொன்னாங்க..

ரன் வே ல மெது மெதுவாக போன விமானம் வேகத்தை கூட்ட , " கோபால் என் வாழ்வே உன் கையில் தான் கோபால்" என்று திஸ் யூர் கேப்டன் ஃபார் திஸ் ஃபிளையிட்னு சொன்ன பையலட்டிடம் மானசீகமாக கூறி கொண்டு , சீட் பெல்ட்டை என்னுடன் வாரி அணைத்தேன்...
என்ன தான் பல முறை விமான டேக் ஆஃப், லேன்டிங் ஃபில் பண்ணிருந்தாலும் , நம்மில் பலருக்கு வடிவேல் சொன்ன மாதிரி " பில்டிங் ஸ்டிராங்கு , பேஸ்மன்ட் வீக்" தாங்க..

விமான பயணம் என்றுமே ஒரு சுகானுபவம் தான்.. வாங்களேன் ஜன்னல் வழியா காட்டறேன் அந்த பௌர்ணமி வானத்தை.. என்ன பண்ண சின்ன புள்ளயில இருந்து பஸ்,டிரையின்ல ஜன்னல் ஸிட்டுக்கு சண்டை போடும் சங்கத்தில் நானும் ஒருவள் தான் ஹிஹிஹி ..

கீழே பார்த்தால்..மின்விளக்குகளால் பூமியவள் தங்க, வைரமென மின்னி என்னை பார் என் அழகை பார் னு நம்மள வாய் பொழக்க வைப்பாள், அவள் இரவு உடை இப்படி என்றால் பகலில் சிறிது சிறிதாக கிழித்து போட்ட காகிதம் போல இருக்கும்..

பௌர்ணமி வானம், அழகு ச ச அதுக்கும் மேல.. ஜன்னல் வழியே அந்த நிலவு நம்மை பார்த்து இன்னும் அழகாக சிரித்து தன் மேக புடவைக்குள் புகுந்து புகுந்து விளையாடினாள்.. அவள் புடவையில கற்கள் போல நட்சத்திரம் ஜோலிப்பில் அவ்வளவு அழகா இருந்தது.. அதுவும் நிலவு அவளின் தங்க நிறம் அவள் புடவையிலும் பிரதிபலித்து பித்தம் கொள்ள வைத்தது...

நகரும் அந்த வெண்ணெய் மேக கூட்டங்களை பார்க்கும் போது.. "டேய் கண்ணா ஏன்டா கோபியர் வீட்டில்ல போய் திருடி வெண்ணெய் தின்ன இங்க பாரு எவ்வளவு இருக்கு, யாரும் உன்ன ஒண்ணும் சொல்ல மாட்டாங்க"னு சொல்ல தோணும் அப்படி இருக்கும் அவ்வானம்..

போகும் இடம் எவ்வளவு மையில்கள் என முன் இருக்கை பின்புறம் இருக்கும் திரையில் பார்த்த படி

இடப்பக்கம் திரும்பினேன்.. அங்கே மத்திய வயது தம்பதியர்... "ஆடின காலும், ஸர்வே எடுத்த வாயும் அடங்குமா என்ன ?" ஹிஹிஹி ஷாக் ஆகாதீங்க இது மாடிஃவட் பழமொழிங்க.. ஆமாம் நான் புள்ளியியல் மாணவி பேசாமயா இருப்பேன்???...

பேச பழகுங்கள்.. பேச பேச அடுத்தவரை உணரலாம், பேச பேச பல அறியா தகவல்களை கற்றுக்கொள்ளலாம்.. பேச பேச தான் உலகறிவு வரும்.. அதனால் தான் திண்ணை இருந்தது நம் வீடுகளில்.. பேசுவது நம் உணர்வுகளுக்கு வடிகால்.. பேசுவதால் இரண்டு நாடுகளுக்குள்ளே பிரச்சினை ஸால்வ் ஆகுதுனா பார்த்துக்கோங்க பேச்சோட அருமைய..ஆனா பேசறது இவங்க இன்னும் பேசமாட்டாங்களான்னு இருக்கணும். ஏன்டா பேசராங்கன்னு இருக்க கூடாது..
நகைசுவையோடு வரும் உன் கருத்து நிறைந்த பேச்சுக்கு என் மனம் மயங்குது செல்லமே ??????????
 

Advertisements

Advertisements

Top