Kandam Thandiya Paravaigal

Maha

Author
Author
SM Exclusive Author
சிறு புன்னகையுடன் ஆரம்பித்தேன்,"ஹலோ, நீங்க தமிழா"? ஆமாங்க "ஸ்டேட் தாண்டினா நீங்க தமிழா? கண்டம் தாண்டினால் நீங்க இந்தியரா?" இது தாங்க நம்ம கேட்கற முதல் வார்த்தையா இருக்கும்.. அவ்வளவு காஞ்சு போயிருப்போம் உறவுகளுக்காக...

எனக்கு அருகில் இருந்த அவர் ஒரு மருத்துவர். ஆமாம் டாக்டர் ராம், ஆப்தமாலஜிஸ்ட்.. கண்மருத்துவர்.. அருகில் அவர் மனைவி டாக்டர் ராணி பொதுநல மருத்துவர்...

நல்ல நாளுலயே கேள்வியா கேட்டு துளைக்கற எனக்கு , டாக்டர்ஸ் அதுவும் நான் விரும்பும் துறையை சார்ந்தவர்கள் என்றால் கசக்குமா என்ன ??

நாம் அனைவரும் படித்திருப்போம், நாம சந்திகிறவங்க சும்மா நம்ம வாழ்க்கையில் நுழைய மாட்டாங்க ஏதாவது ஒரு காரணம் இருக்கும்னு .. எனக்கு அப்போ சத்தியமா தெரியல அந்த பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமா இருக்க போகுதுன்னு...

பரஸ்பர வார்த்தை பரிமாற்றங்கள்.. ஒரு கான்பரன்ஸ் காக சிக்காகோ செல்கிறார்கள் அவர்கள்..

சில நொடி மவுனம் அதை கலைப்பது போல், அந்த விமான பெண், " உட் யூ லைக் டு ஹாவ் சம் டிரிங்க் மேம்" என்றாள்... ஹலோ பாஸ் இருங்க இருங்க, "ஒகே ஒகே" படத்துல வர மாதிரி ஃப்ளைட் னா டிரிங்க்ஸ் தருவாங்க நீங்க என்ன னா தண்ணி தரீங்கனு சந்தானம் கேட்பாரு பாருங்க அந்த ரெஞ்சில தான் இந்த டிரிங்க்ஸும்..என்ன கொஞ்சம் எக்ஸ்டிராவா ஆப்பிள், ஆரஞ்சு, தக்காளி ஜுஸ் இருக்கும்... எப்படி நையிட் பஸ்ஸுல எல்லாம் ஊர் எல்லைய தாண்டின பின்னாடி புதுபடம் போடுவானோ அது மாதிரி தான் இங்கேயும் ஐய்ரோப்பா கண்டம் கண்ணுல பட்டத்துக்கு அப்புறம் தான் ரெட் வயன் எக்ஸ்டிரா எக்ஸட்ராலாம்..

சில ஆரஞ்சு ஜுஸ்களை உள்ளே தள்ளிய பிறகு, அவருடன் பேச ஆரம்பித்தேன்.. அவர் துறை சார்ந்த பல கேள்விகளுடன்...

கண்ணை பத்தி அவ்வளவு சொன்னார்.. குழந்தைகளுக்கு சாப்பிட்டா போதும்னும் நாம் டேப், ஸ்மார்ட் போன் தரோம் அது எவ்வளவு பெரிய தப்பு என்று அவர் ஆதாரத்தை அடுக்க.. என் முன்னே நிழலாடினர் "பெப்பா பிக்" உம் ,"கண்மணி பாப்பா வும்'.. அடடா சாதம் சாப்பிடணும், நம்ம வேல செய்யணும் னு நாம நம்ம குழந்தைகளுக்கு , நம் கண்மணிகளின் ,கண்மணிகளுக்கு வில்லியாக விட்டோமே என்று ஒரு குற்றவுணர்வு தாக்கியதில் வாயடைத்தேன்.

தொடர்ந்து பேசியவர், உங்க ஜெனரேஷன் பசங்க எல்லாம் இப்படி தான் சாப்பிட்டீங்களா என்ன? என்றார்...

அப்பறம் கேட்டாரே ஒரு கேள்வி... "ஏம்மா அந்த காலத்துல நிலாவ பார்த்து சோறு ஊட்டினாங்க?"னு
பெப்பர பே னு முளிச்சேன்.. என்னமோ சாப்பாட்டை பிசஞ்சோமா உள்ள தள்ளினோமானு தானே நாம இருக்கோம், இப்படி கேட்டுப்புட்டீங்களே ராசா னு. மண்டைய இடவலமாக ஆட்டினேன்..நமக்கு தெரியாத விஷயத்தை தெரியல னு சொல்லறது தப்பில்லை, ஆன் தெரியுமே னு சீன் போட்டு பல்பு வாங்கறத்துக்கு இது சால சிறந்தது..

சிரித்துக் கொண்டே அவர் விளக்க ஆரம்பித்தார்

"நிலவை காட்டி சோறு ஊட்டுவது…?

நம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டி இருக்கிறோம்?
முதல்ல இப்ப இருக்குற வத்திப்பெட்டி போன்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் நிலவை பார்க்க முடியுதா? ஜன்னலையோ, பால்கனி கதவ திறந்தா எதிர்த்த வீட்டு அடுப்பங்கரை, பக்கத்து வீட்டு பள்ளியறை தான் தெரியுது.. இதுல எங்க நிலாவ பாக்க

சரி நாம் விஷயத்துக்கு வருவோம்

நிலவை காட்டி சோறு ஊட்டும் போது, குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது தொண்டைக்குழல், உணவுக்குழல் விரிகிறது. உணவு இலகுவாக உள்ளே இறங்கும் சின்ன உணவு குழலில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும்.

குழந்தை கருவில் உருவாகும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது.தொப்புள் கொடி உடலில் இருந்து பிரிந்த பின்பு தான் உணவு குழலின் விட்டம் விரிய தொடங்குகிறது இது முழுமையடைய ஐந்து வருடம் ஆகிறது.

ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு உணவை அவசர அவசரமாக திணிப்பது உடல் வளர்ச்சிக்கான கால அவகாசத்தை மறுப்பதும் குழந்தைகள் மீது நாம் செலுத்தும் ஒரு வித மறைமுக வன்முறையே ஆகும்

குழந்தை பிறப்பிலிருந்து பால்குடி மறக்கும் ஐந்து வயது வரை தாயானவள் குழந்தையின் பொருட்டும் குழந்தைக்கு சுரக்க வேண்டிய பாலின் பொருட்டும் கவனமாக உண்ண வேண்டியது ஒரு தாய்மைக்கு மிகவும் மரியாதையளிக்கும் .

நிலவை காட்டி சோறு ஊட்டுவது பண்பாடு மட்டுமல்ல அறம் சார்ந்த அறிவியல் ." அவர் சொல்லுவதை கேட்டு கேட்டு ஆ வேன திறந்த வாயை நான் மூடல..

தினமும் சாப்பிடறோம், நிலாவ பாக்கறோம் ஆனா இவ்வளவு பெரிய விஷயம் இருக்குனு தெரியாம போச்சே , நம்ம உடல் பத்தி படிக்க டாக்டர் ஆகணுமா என்ன, அந்த காலத்தில் இருந்த நம் முன்னோர்கள் என்ன எல்லாரும் டாக்டர் ஆ?

"கண் தானே னு இருக்கோம் மா ஆனா அந்த கண் இல்லனா எவ்வளவு கஷ்டம் தெரியுமா?.. கொஞ்சறது கூட என் கண்ணே, கண்மணியே னு கொஞ்சறோம் . என் மூக்கே, நாக்கே,மூளையே, இதயமேனா கொஞ்சறோம்?" அவர் கூறிய விதம் சிரிப்பை வரவழைத்தாலும் ,சிந்திக்க தூண்டுவதாக இருந்தது.. அட ஆமாம் ல, அவர் சொல்லறது ரையிட் தான்..

கண்ண பத்தி இன்னும் சொல்லுகிறேன் கேளுங்கள் என்றார். கண்ணா லட்டு தின்ன ஆசையா அதுவும் கண்ண பத்தி அத கண்டவரிடமிருந்தே.. என் கண்கள் மின்ன சரி என்றேன்..

"
கண்களை சுற்றி மொத்தம் 12 தசைகள் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண் நோய் வருகிறது. இக்காரணத்தினால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது. அதிக அழுத்தம் காரணமாக கண்கள் பெரிதும் பாதிக்கும். அதிலும் கண்ணாடி போட்டுக் கொண்டே கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால், கண்ணாடியில் உள்ள பவரின் அளவு அதிகரிக்கும். படுத்துக்கொண்டு படிக்கக்கூடாது. ஏனெனில் படுத்துக்கொண்டு படிப்பதால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கண்களில் சில சமயங்களில் வலி கூட ஏற்படும்.

பயணத்தின் போது படித்தால் கண்கள் மிகவும் பாதிக்கப்படும். அந்த நேரம் நம் பார்வை ஒரே சீரான பார்வையில் இருக்காது, ஒருவித அசைவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அப்போது கண்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். வெளியே அதிகமான சூரிய வெளிச்சம் இருக்கும்போது, கண்களை சரியாக திறக்காமல், லேசாக திறந்து கொண்டு செல்வோம். ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள், கண்களை பாதிப்பதோடு, வறட்சியை ஏற்படுத்தி, பார்வை கோளாறை உண்டாக்கும். ஆகவே வெளியே வெயிலில் செல்லும்போது, கூலிங் க்ளாஸ் அணிந்து செல்லலாம்.

இரவு நேரத்தில் வாகனத்தில் நீண்ட தூரப்பயணம் மேற்கொண்டால், மறுநாள் காலையில் கண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஏனென்றால், இரவில் வண்டியை ஓட்டும்போது, எதிரில் வரும் வாகனத்திலிருந்து வரும் ஒளியானது, கண்களில் நேராக படுவதால் இவ்வாறு இருக்கும். டிவியும், கம்ப்யூட்டரை போன்றுதான் கண்களுக்கு பிரச்சனையை தரும். எப்போதும் டிவியை மிகவும் அருகில் உட்கார்ந்து பார்த்தால், கண்கள் களைப்படைந்து விடும். இதனால் தலைவலியும் ஏற்படும்.

தையல் இயந்திரத்தில் தைக்கும்போது, ஊசியில் நூலை கோர்ப்பதற்கு முழு கவனத்துடன் அந்த ஊசியில் உள்ள ஓட்டையை உற்று பார்க்க வேண்டியுள்ளது. இது கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தரும். இதனால் கண்களில் வலி ஏற்படும்.பைக்கில் செல்லும்போது கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கணினி திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல் மூலம் கண்நோய் மற்றும் கண்ணில் நீர்வடியும்.

இதில் இரண்டு வகை உண்டு.

அவை: கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு.

மற்றொரு வகை: எபிபோரா. இவை கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் ஏற்படும்.

ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். இதன் மூலம் கண்கள் சோர்வடையும்.தொற்று நோய்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் கூட கண் பாதிப்பை ஏற்படுத்தும். கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். கண் நோய் ஏற்பட்டால் தலைவலி உண்டாகும். இவை ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
அருமை டா??நானும் உங்க கூடtravel panna feeling appu ma Avaga peisurathu na ennavo avanga pakkathula iruthu keikura pola iruku evalavo impt info superb???????
 

Maha

Author
Author
SM Exclusive Author
காய்கறிகள்

கண்களைப் பாதுகாக்க ஊட்டச்சத்து மிகவும் அவசியம். காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, இ, இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் உள்ள உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும். இவை கண்களை பாதுகாக்கும். வைட்டமின் ‘ஏ‘ யில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கியச்சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ‘ஏ‘ சத்து பற்றாக்குறையால் தோன்றும் அறிகுறியே மாலைக்கண் நோய். கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளதால் உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ளலாம்.

வைட்டமின் ‘ஏ‘வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் உள்ளது. அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் அடங் கியிருப்பதால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை சேர்த்துக்கொள்வதன் மூலம் பார்வையை கூர்மையாக்கவும் உதவும். அலுவலகம் செல்லும்போது கேரட், பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி எடுத்துச் சென்று இடைவேளை நேரங்களில் சாப்பிட கண்களுக்கு குளுமை பரவும். புத்துணர்ச்சி பெறலாம்.

கண்களை பாதுகாக்க

கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று பார்க்கக்கூடாது. கண்ணில் நீர் வடிந்தால், கண்களை கசக்கக் கூடாது. கண் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். தலையணை உறையை தினமும் மாற்றவும்.

தூரத்தில் இருக்கும் பொருட்களை அதிக நேரம் உற்றுப்பார்க்க கூடாது. அடிக்கடி கண் சிமிட்டுவது நல்லது. அதிகமாக வேலை செய்யும்போது கண்ணில் அழர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ செய்யும் வேலையை நிறுத்தி விட வேண்டும்.

தூசி, புகை, அதிக சூரிய வெளிச்சம், அடர் காற்று ஆகியவற்றிலிருந்து கண்ணைப் பாதுகாப்பது அவசியம். நாளொன்றுக்கு 10 முறை கண்ணை மேல், கீழ், பக்கவாட்டுகளில் அசைத்து, பயிற்சி செய்து வர கண் தெளிவாக இருக்கும்.

குடல் சுத்தமாக இருந்தால், கண் பார்வையும் தெளிவாக இருக்கும். படபடப்பு, மன உளைச்சல், சோகம், கோபம், கவலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் கண்களை பாதுகாக்கலாம்."

அவர் சொல்ல சொல்ல விழி விரித்து பார்த்தேன்..
" அது மட்டுமில்ல மா உன் கண்கள் பேசும், கண் பொய் சொல்லாது.. அதனால் தான் என் கண்ண பார்த்து சொல்லுனு சொல்லறது கேள்வி பட்டிருக்கோம், உளவியல் ரீதியாக கண்களைஸ வைத்து நிறைய தகவல்கள் உண்டு என்றார்"..

கண்தானம் ரொம்ப பெரிய விஷயம் மா , ஒருவருக்கு உலகை காட்டறது கண்தான்.. இருட்டு எங்க இருந்தாலும் கஷ்டம் மா, அது மனசிலயும் சரி , வெளியிலும் சரி.. நம்ம இருந்தோம் போனோம்னு சொல்லிக்கொண்டே இந்த இடைப்பட்ட காலத்தில், நம்ம பிரஸன்ஸ காட்ட நாம போராட்டம் பண்ணணும், புரட்சி பண்ணும், பிரபலமாகணும் னு அவசியமில்ல மா, நாம் ஒருத்தருக்கு ஒரு மெழுகுவர்த்தி யா இருந்து ஒளியேத்தலாம்ல கண்ணதானம் பண்ணி? கண் தானமும் விளையாட்டு இல்ல,தானம் பண்றவருக்கு ஸூகர்,ப்ரஷர்மாதிரி இருக்க கூடாது.. இறந்து இரண்டு மணி நேரத்திற்குள் தானம் பண்ணணும் னு நிறைய இருக்கு... மக்கள் கண் தானம் பண்ண முன் வரணும்னு , இப்படி கூட கூறபட்டதை கேட்டிருப்பியே.."உங்களுக்கு நீங்கள் இறந்த பின்னும் சைட் அடிக்கணுமா? கண்தானம் செய்து பிறர் வழியா பாருங்க என்றார்".

அசதியில் அனைவரும் தூங்க ஆரம்பிக்க எங்கள் உரையாடல் பிறர்க்கு தொல்லையாக இருக்கும் என்று நிறுத்தினோம்..

கண் இமைகள் அணைத்து என் கண்களுக்கே என் மனதை கொண்டு சென்றேன்.. ஆமாம் நேற்று இன்னாரின் மகள், இன்று இன்னாரின் மனைவி, நாளை இன்னாரின் தாய்.. என்று நான் ஆவேன் இன்னாராகிய நான்..????? இறந்த பின் என்ன என் கண்களுக்கு அஞ்சனம் தீட்ட போகிறார்களா? மஸ்காரா, ஐ லயனர் லொட்டு லொசுக்கு இட போகிறார்களா? கை , கால்களை கட்டி விழி மூடப்போகிறார்கள்..மூடிய விழிகளில் கண்மணி தெரிய போகிறதா என்ன??

"வேண்டும் பாசமாக பெற்றோரை பார்த்த விழிகள்!!

வேண்டும் நட்புடன் சிரித்து சிரித்து நீர் கோர்த்த விழிகள்!!!

வேண்டும் காதலாயும் கிரக்கத்துடன் என்னவனை பார்த்த விழிகள்!!!

வேண்டும் அன்பையும், அணைப்பையும் என் குழந்தைக்கு ஊட்டிய விழிகள்!!!

வேண்டும் பிறர் வலி கண்டு தவிக்கும் என் கருணை விழிகள்!!!!!"

மனதால் கூறிக்கொண்டே உறங்கி போனேன்.. லேண்டிங் கான அறிவிப்பில் உணர்வு பெற்று விழித்தேன்..

டாக்டர் ராம் மற்றும் அவர் மனைவிக்கும் நன்றி கூறி அடுத்த ஃப்ளைட் டெர்மினலை நோக்கி நடக்க தொடங்கினேன்...

வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமான விஷயங்களை உள்ளடக்கியது..நம்மால் பிறர்க்கு உதவ முடிந்தால் எவ்வளவு பெரிய விஷயம். அதுவும் நாம் இறந்த பிறகு? பிடித்தமானதை பார்க்கலாம், படிக்கலாம்.. பழகலாம், எல்லாம்...

ஊருக்கு போய் டிரைவிங் லைசன்ஸ்ல டோனர் என்று சேர்க்க சொல்லணும்னு எண்ணியபடி "கண்"டம் தாண்டி வந்தேன்..

கண்டம் தாண்டிய பறவைக்கும் ஜெட் லேக் வந்தது.. கண்ணான என் கண்கள் உறங்க அணைத்து அழைகின்றது..

ஒரு நிமிடம்!. நீங்களும் யோசிச்சு பாருங்களேன் கண்தானம் பத்தி !!!??

வேண்டும் பாசமாக பெற்றோரை பார்த்த விழிகள்!!

வேண்டும் நட்புடன் சிரித்து சிரித்து நீர் கோர்த்த விழிகள்!!!

வேண்டும் காதலாயும் கிரக்கத்துடன் என்னவனை பார்த்த விழிகள்!!!

வேண்டும் அன்பையும், அணைப்பையும் என் குழந்தைக்கு ஊட்டிய விழிகள்!!!

வேண்டும் பிறர் வலி கண்டு தவிக்கும் என் கருணை விழிகள்!!!!!"
Beautiful words nice msg???????
வரும் போது என்ன கொண்டு வந்தோம்
போகும் போது என்ன கொண்டு செல்வோம்

இருக்கும் வரை கண்களை பேணி காப்போம்
இறப்பதற்க்கு முன் கண்களை தானம் செய்து சொல்வோம்??
 

Advertisements

Advertisements

Top