You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Sugi's Oru Adangaapidaari Mela Asaipatten - Episode 24

#1
என்னடா Monday next அப்டேட்னு சொல்லிவிட்டு ஆடி அசைந்து Tuesday வரேன்னு கோபப்படாதீங்க பிரண்ட்ஸ்.......கமிட் பண்ணுன பிறகு தான் அதிகப்படியான வேலை எல்லாம் வரும்.....சத்தமில்லாமல் சாதிக்கணும்னு இதைத்தான் சொல்லறாங்களோ??

இந்த அப்டேட் கொஞ்சம் சென்ஸிட்டிவ்வான தகவல்களை கொண்டது....இதன் மூலமாக சாதியை பற்றிய விழிப்புணர்வை கொடுக்கணும் என நினைத்தேன்....

ஒருமுறை நீயா? நானா? நிகழ்ச்சியில், ஒருபுறம் பெற்றோர்களும் மறுபுறம் குழந்தைகளும் அமர்ந்து தங்கள் சந்தேகங்களை தொடுத்தனர்...அப்பொழுது ஒரு குழந்தை சாதி (Caste) என்றால் என்ன எனக் கேட்டது....ஒரே ஒருவரைத் தவிர, யாராலுமே அக்குழந்தைக்கு சரியான பதிலை தர முடியவில்லை....சாதி தோன்றிய வரலாறு பற்றி நாம் தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை...அதைப் பற்றிய புரிதல் இல்லாமல், தன் சமூகமே உயர்ந்தது மற்றவர்கள் எல்லாம் கீழே என ஒவ்வொரு சமூகத்தினரும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கி தன் வலிமையை பொருளாதர நிலையை உயர்த்தினர்... அதிகாரமுள்ள, வலிமையுள்ள, பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ள மனிதனின் சமூகமே உயர்ந்தது எனக் காட்டுகின்றனர் ........

நிறைய தகவலை சேகரிக்க வேண்டி இருந்தது.....அதுதான் தாமதத்திற்கான காரணம் மக்களே......

அத்தியாயம் 24:-

1545140000110.png

பிரியாவின் மூலம் மேரேஜ் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்த அரவிந்த், தாம் தூம் எனக் குதித்தான்....

"ஏய், விளையாடுறியா, மேரேஜ் என்ன நீ போட்டிருக்கிற டிரஸ் போலவா, உனக்கு fit ஆகலைனா, நீ fit ஆனதும் போட்டுக்கலாம்னு வார்ட்ரோப் மூலைல தூக்கி போட....சொந்தபந்தம் எல்லாருக்கும் என்னனு பதில் சொல்ல....ஏன் நிறுத்துனீங்கன்னு கேட்டா என்ன சொல்லி சமாளிக்க.......உங்க தாத்தா எப்ப ஓகே சொல்லி நம்ம மேரேஜ் எப்ப நடக்கும்னே தெரியாது.......இந்த சூனியக்காரி ஜக்கம்மா என் தலைல பெரிய பாறாங்கல்லா தூக்கி போட்டுட்டாளே ...பாவி...பாவி...அவ விருந்து சாப்பிட நான் ஊறுகாயா....அப்பவே யோசிச்சு இருக்கணும்.... நீ அந்த குட்டிச்சாத்தான், சதிகாரி அராத்து கூடவே சுத்தறியே... ஓகே சொல்லலாமானு....நம்ம ஆளு தங்கமாச்சேனு நினைச்சது தப்பா போச்சு..." என கோபமாக பொறியத் தொடங்கி புலம்பலில் முடித்தான்....

"ஸ்டாப் இட் அர்வி, தேவையில்லாமல் பாலாவை பத்தி பேசாதே....உனக்கு எந்த உரிமையும் இல்ல அவளைப்பற்றி பேசுறதுக்கு........அவ நிம்மதியில்லாமல் இருக்கும்போது நான் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்..........அவளைப்பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாது, எனக்கு எல்லாமே அவதான்....எங்க எல்லாருடைய சந்தோஷமும் அவதான்... சோ, நீ இப்பவே மேரேஜ் பண்ணி ஆகணும்னா வேற நல்ல பொண்ணா பார்த்துக்கோ....அராத்து கூட சுத்தற நான் உனக்கு வேண்டாம்..." என கோபத்துடன் அழுதுகொண்டே போனை கட் பண்ணினாள்............

பிரீ மற்றும் பாலாவின் பெற்றோர்கள் நிலைமையை எடுத்துச்சொல்லி அரவிந்தின் குடும்பத்தை சமாதானப்படுத்தியிருந்தனர்.............

அரவிந்தோ, படாத பாடு பட்டு கெஞ்சி, கொஞ்சி...கடைசியில் பாலாவிடமே சென்று பிரீயை சமாதானப்படுத்த உதவுமாறு பஞ்சாயத்து வைத்து பத்தாவது நாள் வெற்றிகரமாக பிரீயை பேசவைத்தான்....

இப்படியே சில வாரங்கள் சென்றிருக்க, தோழிகள் இருவரும் வெற்றிகரமாக பைனல் இயர் ப்ராஜெக்ட்டை முடித்து தங்கள் கல்லூரிப்பயணத்தை இனிதே நிறைவு செய்தனர்..........இருவரும் மேலும் 2 வருடம் ஆரனிடம் இருந்து தொழில்நுட்பத்தை நன்கு கற்றபின் தங்கள் குடும்ப தொழிலான காமாட்சி டெக்ஸ்டைல் நிறுவனத்தை பொறுப்பேற்க முடிவு செய்தனர்.......

காலம் எதற்காகவும் யாருக்காகவும் நிற்காமல் நகர, செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவிற்காக மொத்த குடும்பமும் திருப்பூருக்கு சென்றனர்.....

இதற்கிடையில், அனைவருமே மாற்றி மாற்றி தாத்தாவிடம் தூது போய் பேசியும், சிறிதும் அசையவில்லை அக்கிழவர்....(ரொம்பத்தான் பண்ணறாரு தாத்தா...எனக்கும் கோபம் வருதுல)

ஆரனின் குடும்பத்தினரும், திருப்பூர் வீட்டிற்கே சென்று தாத்தாவிடம் பேசி பார்த்தனர்.....தாத்தா ஒரே முடிவாக ஒத்து வராது என சொல்லி அனுப்பிவிட்டார்....ஆரனின் குடும்பத்தினரும், இதற்குமேல் நாமாக கீழே இறங்கி போகமுடியாது...அவர்களே வரட்டும் என விட்டு விட்டனர்.....ஆரனின் அழகுக்கும், தொழில் திறமைக்கும், வெளிநாட்டு படிப்பிற்கும், கணக்கேயில்லாத சொத்துக்கும்....ஏகப்பட்ட வரன்கள் போட்டி போட...ஆரனின் விருப்பத்தை அறிந்து ஏதும் பேசாமல் இருந்தனர்...........

வீடே உறவினர்களால் களை கட்டியிருக்க, தாத்தா அனைவரிடமும் நன்றாக பேசினாலும் பாலாவிடம் அவர் காட்டும் ஒதுக்கம் வெளிப்படையாகவே தெரிந்தது......

காலையில் பூஜைக்கு அதிகாலையில் செல்ல வேண்டும் என்பதால் அனைவரும் உறங்க சென்றிருக்க....பாலா AV யுடன் பேசி முடித்து, தூக்கம் வராமல் தோட்டத்தில் உள்ள சேரில் அமர்ந்து பலதையும் யோசித்து கொண்டிருந்தாள்........

நினைவு தெரிந்த நாள் முதலாய், தாத்தா அவளை ஒதுக்கியதில்லை.....பாலாவின் மேல் அலாதியான பிரியம் கொண்டவர்....அப்படிப்பட்டவர், இன்று நடந்து கொண்டதை பாலாவால் சிறிதும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை......

என்ன காரணம் நான் வேறு மதத்தை சேர்ந்தவனை நேசித்ததா.....இதே தாத்தா தானே அன்பே சிவம் என்றும் சொல்லி கொடுத்தவர்....எதனால் இப்படி தன் சாதியே/ குலமே உயர்ந்தது போல் நடந்து கொள்கிறார்.....இவ்வுலகில் பிறந்த அனைவருக்குமே பஞ்ச பூதம் என சொல்லப்படும் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மற்றும் பூமி சொந்தமானது....நாம் சுவாசிக்கும் காற்றைத்தான் அனைவரும் சுவாசிக்கின்றனர்...எந்த விதத்தில் தாத்தா, நீங்கள் உயர்ந்தவர்கள் என மனதுள் வாதிட்டு கொண்டிருந்தாள்......

ஆன்மீக கதைகளை பேசும் நீங்கள், அவ்வைப் பாட்டி சொன்னதை மறந்து விட்டீர்களா?

''சாதி இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமுறையின் -
மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்
இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி'

பிறருக்கு கொடுத்து உதவுபவர் உயர்ந்த சாதியாவார், பிறருக்கு கொடாதார் தாழ்ந்த சாதியாவார். இவை இரண்டன்றி வேறு சாதிகள் இல்லை.

தன் குலம் / இனம் / மதம் / சமூகமே பெரிதென பேசும் தாத்தாவிற்கு இந்த சாதி எப்படி தோன்றியது என்ற வரலாறாவது தெரியுமா என சிந்தித்தவள்..........

தன் இளம்பிரயாயத்தில் ஸ்கூலில் சாதி சாற்றிதழ் வாங்கிவர சொன்னபொழுது, தன் தந்தையிடம் சாதி என்றால் என்ன என்று கேட்ட கேள்வியும் அதற்கு கிருஷ்(தந்தை) அளித்த பதிலையும் நினைவு கூர்ந்தாள் பாலா....

"கிருஷ், சாதி என்றால் என்ன?...நாம் இந்த சாதிதான் என எதை வைத்து தீர்மானிக்கிறோம்"

"அடடே, என் பொண்ணு வளர்ந்துட்டாங்களே அவங்க பெரிய பெரிய கேள்வி எல்லாம் கேட்குறாங்களே...." என்றவர் தனக்கு தெரிந்த தகவல்களை கூற ஆரம்பித்தார்....

"வேதகாலத்தில் வர்ணம் முறையில் பிரிக்கப்பட்டது....வர்ணப்பகுப்பு இயற்கையின் இயல்பு, மனித இயல்பு பற்றிய ஒரு கொள்கையின் விரிவாக்கம். இயற்கையானது நேர்சக்தி, எதிர்சக்தி, சமநிலைசக்தி என்ற மூன்று விசைகளால் ஆனது என புரிந்துகொண்டதிலிருந்து உருவானது அந்தக்கொள்கை. நேர்சக்தி என்பது மனிதர்களின் இயற்கையில் வெளிப்படுவதை ரஜோகுணம் என்றார்கள். எதிர்சக்தி தமோகுணம். சமநிலைசக்தி சத்வகுணம். இப்படி மனிதர்களில் வெளிப்படும் மூன்றுகுணங்களின் அடிப்படையில் நால்வர்ணம் வகுக்கப்பட்டது. தமோகுணம் கொண்டவர்கள் சூத்திரர்கள். ரஜோகுணம் கொண்டவர்கள் சத்ரியர்கள். தமோகுணமும் ரஜோகுணமும் கலந்தவர்கள் வைசியர். சத்வகுணம் கொண்டவர்கள் பிராமணர்கள் என்று பிரிக்கப்பட்டது.
  • பிராமணர்-புலமை வாயந்த சமூகத்தவர்- அர்ச்சகர், புலவர், சட்ட ஆலோசர், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் இவர்களை உள்ளடக்கியது. சத்வ குணம் மிக்கவர்கள்.
  • சத்ரியர்- உயர்வான குறை பண்புடையோர்-அரசர், மரியாதைக்குரியவர், வீரர்கள் மற்றும் ஆளுமையுடையோர்களை உள்ளடக்கியது. ரஜோகுணம் மிக்கவர்கள்.
  • வைசியர்- வணிகர் மற்றும் தொழில் முனைவோர் சமூகத்தார்-வணிகர், சிறு வியாபாரிகள், தொழிலதிபர் மற்றும் பண்ணையார் இவர்களை உள்ளடக்கியது. ரஜோகுணம் மற்றும் தமோகுணம் மிக்கவர்கள்.
  • சூத்திரர்- சேவகப் புரியும் சமூகத்தார்-கடின உழைப்பாளர், கூலித் தொழிலாளர்களை உள்ளடக்கியது. தமோகுணம் குணம் உடையவர்கள்.
வர்ணம் என்பது “வ்ரு” என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. “வ்ரு” என்றால் “தேர்ந்தெடு” என்று பொருள். ஒவ்வொருவரும் சில தொழில்களைத் தேர்ந்தெடுக்கலாம். அந்தத் தொழிலின் அடிப்படையில் அவர்கள் வர்ணம் நியமிக்கப்பட்டது. ஆனால் போதிய பயிற்சி இல்லாததால் அவர்களால் அத்தொழிலை / வேலையை சரிவர செய்ய இயலவில்லை.....பின்னர் குருகுலப் பயிற்சி மூலமாக திறமை அடிப்படையில் குருகுலப் பெரியோர்களால் தொழில் பிரித்து தரப்பட்டது.

ஆனால் இந்தக் காலத்தில் நடிகர் மகள் நடிகையாவது போலும், அரசியல்வாதி மகன் அரசியல் தலைவர் ஆவது போலவும் அந்தக் காலத்திலும் இயற்கையாக, இயல்பாக அவரவர் குடும்பத் தொழில்களைப் பின்பற்றினர்.

பிற்காலத்தில் செய்யும் தொழில் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன....உதாரணமாக
 
Last edited:
#2
குயவன்(மண்பாண்டம் செய்வோர்)
கொத்தன்(வீடு கட்டுவோர்)
கொல்லன்(இரும்பு வேலை செய்வோர்)
தட்டான்(பொன் வேலை செய்வோர்)
தச்சன்(மரவேலை செய்வோர்)
கற்றச்சன்(கல் வேலை செய்வோர்)
செக்கன்(எண்ணெய் ஆட்டுவோர்)
கைக்கோளன்(நெசவுத் தொழிலாளி)
பூக்காரன்(பூ வேலை செய்வோர்)
பாணன்(பாடுநர்)

பல்வேறு படையெடுப்புக்காலும், ஆக்ரமிப்பாலும், புதியவர்களின் கலாச்சாரப் பிரிவுகளினாலும், கலப்பினத்தாலும், நிலப்பிரபுத்துவ அடுக்குகள் காரணமாகவும் பல்லாயிரக்கான சாதிகள் உருவாகின. நிலத்தைவென்று அதிகாரத்தை அடைந்த குலங்கள் மேல்சாதியாகவும் அவர்களால் ஆதிக்கம் செய்யப்பட்டவை கீழ்சாதிகளாகவும் உருவாயின. பொதுவாக, அதிகாரமும் வலிமையும் உள்ளவன் உயர்ந்த சாதிக்காரன் ஆனான்...மற்றவன் தாழ்ந்த சாதிக்காரன் ஆனான்....

தற்காலத்தில், அரசியலில் தன் வலிமையை உயர்த்த சாதி சங்கங்களை உருவாக்கி அதன்மூலம் சாதி ஓட்டினை அதிகரித்து தங்கள் அரசியல் கட்சியின் வலிமையை உயர்த்துகின்றனர். சங்கத்திற்கு தலைவனாய் இருப்பவர்கள் மட்டும் சாதுர்யமாக வாழ கற்றுக் கொண்டுவிடுகிறார்கள். இதனை அறியாத அப்பாவி மக்கள் சாதிவெறி பிடித்து தங்களுக்குள் அடித்துக் கொள்கின்றனர்....கடல்போல் பரந்து கிடந்த மனித சமுதாயம், அலைகளைப் போல் உருமாறி தனக்குத்தானே அழிவைத்தேடி கொண்டுவிடுகிறார்கள். இந்த மனிதர்களின் செயலை பார்த்தால், "சிங்கமும், எருதும்" கதைதான் நினைவுக்கு வரும். கூட்டமாக மேய்கின்ற எருதுகளை, சிங்கம் ஒன்று பசியாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கும். ஆனால் அந்த சிங்கம் பொறுமையாக அந்த எருது கூட்டங்களையே பார்த்துக் கொண்டிருக்கும். எருதுகளுக்குள் பேதைமை வரும் வரை தன் பசியை அடக்கிக் கொண்டிருக்கும். ஒருநாள் எருதுகளுக்குள் சண்டை வந்து தனித்தனியாக மேய ஆரம்பித்தன. தனியாக மேய வந்த எருதுவினை சிங்கம் பாய்ந்து தன் பசியினை ஆற்றிக்கொண்டதை போல், சாதி சங்கங்கள் என்ற சிங்கம், மனித எருதுகளை அவ்வப்போது சாதிப்பேதைமையில் பிரித்து தங்கள் ஆதாயத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.....

இந்திய சமூகவியல் துறையின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.என்.ஸ்ரீனிவாஸ் எழுதிய புகழ்பெற்ற வாசகம் இது

‘இண்டியன்ஸ் டோண்ட் காஸ்ட் தேய்ர் வோட், தே வோட் தேய்ர் காஸ்ட்'(இந்தியர்கள் வேட்பாளர்களில் யாருக்கு என்று வாக்களிப்பதில்லை; தங்கள் சாதியில் யாருக்கு என்றே தேர்வுசெய்கிறார்கள்.) ஒரு தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வாக்காளரின் பின்னணி என்ன, எந்தக் கட்சி, என்ன கொள்கை, இதுவரை என்ன செய்திருக்கிறார்கள், இனி என்ன செய்வார்கள் என்றெல்லாம் விலாவாரியாக அலசி ஆராய்ந்து, நிறை குறைகளின்படி வாக்களிப்பவர்களைவிட, சாதி பார்த்து வாக்களிப்பவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். சாதியமைப்பு அழுத்தமாக வேரூன்றியிருக்கும் கிராமப்புறங்களில் இதுவே வழக்கமாக இருந்துவருகிறது.

சாதியில் அரசியலும் அரசியலில் சாதியும் கலந்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. அது ஒரு தடைக்கல். அதனை அகற்றாமல் நாம் ஓரடிகூட முன்னோக்கி எடுத்து வைக்க முடியாது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படை மனித லட்சியங்களுக்கு எதிரானது சாதியமைப்பு என்கிறார் அம்பேத்கர்.

சாதியைப்பற்றி பேசாமலிருப்பதன் விளைவு என்னவென்றால் பெரும்பாலானவர்கள் தங்கள் சாதியின் உண்மையான வரலாறோ, தொடர்ச்சியோ தெரியாமல் செவிவழியாக வரும் பெருமிதக்கற்பனைகளை மட்டுமே அகத்தே கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதே. அவர்கள் அதை எங்கும் விவாதிப்பதில்லை. ஆகவே எங்கும் அது மறுபரிசீலனைக்கு ஆளாவதுமில்லை. இது ‘உயர்’சாதி முதல் ‘தாழ்ந்த’ சாதி வரை எல்லாருக்கும் பொருந்தும்.

சாதி குறித்த தன்னுணர்வின் எழுச்சியே சாதியை இன்று வரையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரே காரணி, சாதி குறித்த தன்னுணர்வு இச்சமூகத்தின் எல்லா இடங்களிலும் நீக்கமுற நிறைந்திருக்கிறது...
ஆக மனிதர்களிடையே இன்னொருவரை ஒரு படி கீழாக காட்டும் மனநிலை இருந்துகொண்டேதான் இருக்கும். அதன் வழியாகவே அவர்கள் மேலே செல்லமுடியும். அதற்காக அவர்களுக்கு தான் உயர்ந்த சாதியினன் என்ற பட்டம் வேண்டும்...." என தனக்கு தெரிந்ததையும் அறிந்ததையும் எடுத்துரைத்திருந்தார் கிருஷ்......

ஹ்ம்ம்ம், என்னதான் தாத்தா படித்திருந்தாலும், தொழிலை திறம்பட நடத்தினாலும்...தன் சாதிக்காரனுக்கே முன்னுரிமை கொடுப்பார் என்பது பாலாவுக்கு நன்றாகவே தெரியும். காலம் காலமாக, அவர் ரத்தத்தில் ஊறிய சாதி என்கிற தீயை அணைப்பது அவ்வளவு சுலபமில்லை என்பது பாலாவுக்கு திண்ணம்....

பெரும்பாலான மக்களைப்போல, மற்ற விஷயத்தில் எல்லாம் சாதி பார்க்காதவர்கள் திருமணம் என்று வருகின்றபோது, அங்கு சாதியே முதலிடம் பிடிக்கின்றது.......

திருடனாய் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...அதுபோல தாத்தாவே, சாதியை விட அன்பே நிலையானது என புரிந்தால் மட்டுமே பாலாவின் மேரேஜிற்கு சம்மதம் கிடைக்கும்...........

"க்கும், அப்படியே புரிந்தாலும் அந்த பெருசு அவ்வளவு சீக்கிரத்தில் தன் கௌரவத்தை விட்டு இறங்கி வருமா...தாயே செல்லாண்டி ஆத்தா நீ தான் அந்த பெருசுக்கு நல்ல புத்தி புகட்டணும்.....பியா மேரேஜ் வேற பாதியில நிற்கிறது...நான் வேற, பெரிய இவ மாதிரி உங்க சம்மதத்தோட தான் என் மேரேஜ் நடக்கும்னு சொல்லிட்டேன்.....பியா சொன்ன மாதிரி, கொஞ்சம் யோசிச்சு பேசியிருக்கலாமோ....." என மனக்குழப்பத்தில் தீவிர சிந்தனையுடன் இருந்தாள்....

பாலா தெளிவுடன் மீண்டும் வருவாள்.............
 
Last edited:
#7
சாதி பற்றிய விவரங்கள் அருமை
ஆனால் இன்னும் கூட பள்ளிகளில்
சாதி சான்றிதழ் கேட்பது
பழக்கத்தில் இருக்கு
என்றும் தீராத பிரச்சனை தான் சாதி
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top