அத்தியாயம் – 3
அத்தியாயம் – 3
மருத்துவமனையில் இருந்து பேத்தியை, இன்று வீட்டிற்கு அழைத்து செல்ல எல்லா ஏற்பாடுகளையும் பார்த்துக் கொண்டு இருந்தனர் நடராஜன் – செண்பகம் தம்பதியினர்.
அதன்படி வீடு வந்து சேர்ந்தவர்கள், பேத்தியிடம் இனி தாங்கள் உனக்கு உறுதுணையாக இருப்போம் என்று வாக்குறுதி கொடுத்தனர்.
ஒரு வார மருத்துவமனை வாசம், மேலும் அகனிதாவை பலமிழக்க செய்தது. என்ன மாதிரி நிலைமை தன்னுடையது, தனக்கு யார் இனி இருக்கிறார்கள் என்ற கழிவிரக்கம் அவளின் மனநிலையையும், உடல்நிலையையும் மீண்டும் பாதிக்க தொடங்க மீண்டும் மருத்துவமனை வாசம்.
இது சரிபடாது என்று நினைத்த பாட்டி, அவளுக்கு அவரே எல்லாமாக இருந்து அவளுக்கு படிப்பு முதல், எல்லா விஷயங்களிலும் உறுதுணையாக நின்றதோடு அல்லாமல், சில உண்மைகளையும் கூறி அவளை தயார்படுத்த தொடங்கினார்.
உண்மைகள் சில நேரங்கள் கசக்கவும் செய்யும் என்பதை, அவர் கூறியதை வைத்து புரிந்து கொண்டாள். மேலும் படிப்பு தான் இனி தன்னுடைய பலம் என்பதை புரிந்து கொண்டு, மேலும் யாருக்கும் இனி தன்னால் எந்த ஒரு சிரமமும் இருக்க கூடாது என்று முடிவுக்கு வந்தாள்.
“பாட்டி! எனக்கு கொஞ்ச நாள் வேற ஒரு ஊருக்கு போகணும்” என்று மெலிதாக கூற, அவருக்கு முதலில் அதிர்ச்சி என்றாலும், அவரும் அதன் பின் ஒத்துக் கொண்டார்.
ஆனால் இதைக் கேட்ட தாத்தாவிற்கு தான் மனம் பாரமாகியது. பேத்திக்கு என்ன பிரச்சனை, இங்கே இருப்பதற்கு என்று புரியவில்லை அவருக்கு.
ஆனால் பாட்டிக்கு புரிந்தது, அதில் மகள் மேல் கோபம் எழுந்தாலும், இப்பொழுது பேத்தியின் மனநிலை தான் ரொம்ப முக்கியம் என்று புரிந்து கொண்டார். ஆகையால் பேத்திக்கு சற்று அருகில் உள்ள குன்று மலை கிராமமான பூங்கதிர் ஊருக்கு அழைத்து சென்றார்.
பேத்தியின் மனநிலை புரிந்து, அவளுக்கு பிடித்த இயற்கை அன்னை வாழும் அழகிய இடத்தை தேர்வு செய்து, அங்கே ஒரு வீட்டையும் அமைத்து கொடுத்து விட்டார்.
பேத்தி சோர்ந்து போகும் பொழுது, அவள் இங்கே மக்களின் வாழ்வையும், இயற்கை அன்னையுடன் அவள் ஒன்றி போனாளே அவளின் மனநிலை சற்று அமைதியாகும் என்று எண்ணி, ஒவ்வொன்றையும் அவர் பார்த்து பார்த்து செய்தார்.
இதற்கிடையில் அங்கே சென்னையில், வக்கீல் சம்மன் பார்த்து கொதித்து போனார் வாணி. அவரை விட கொதித்து போனது என்னவோ, இந்துமதி தான்.
“நான் நினைச்சது என்ன? இங்க நடந்துகிட்டு இருக்கிறது என்ன?” என்று கொதிப்புடன் எண்ணினார்.
“அண்ணே! என்னது இது? இது பத்தி உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று கேட்டார் வாணி.
“தெரியும்! அம்மா ஏற்கனவே இது பத்தி கேட்டாங்க, நானும் உங்க இஷ்டம் சொல்லிட்டேன்” என்று கூறினார் ராஜசேகர்.
“என்ன!! இது பத்தி என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா நீ?” என்று கொதித்து போய் கேட்டார்.
“என் சுயசாம்பத்திய சொத்து, இதை நான் என் பொண்ணு அகனிதா பேரில் எழுதி வைக்க, நான் ஏன் உன் கிட்ட கேட்கணும் வாணி?” என்று அழுத்தமாக கேட்டவரை விக்கித்து போய் பார்த்தது இப்பொழுது இந்துமதி.
“ஏன் கேட்கணுமா? சரி என்கிட்டே சொல்ல வேண்டாம், ஆனா இதோ அண்ணிகிட்ட சொல்லி இருக்கலாமே”.
“நியாயமா அந்த பணம், இதோ ஐஸ்வர்யா, திலக்க்கு தானே நீ கொடுக்கணும்” என்றவரை பார்த்து இப்பொழுது கோபம் கொண்டார்.
“யாருக்கு என்ன கொடுக்கணும்னு எனக்கு தெரியும், இதுல நீ தலையிடாத வாணி” என்றவர் இந்துவை ஒரு பார்வை பார்த்தார்.
அதில் ஒரு நிமிடம் இந்து திகைத்து போனார், காரணம் அவர் ஒன்று நினைக்க இங்கு நடப்பதோ வேறு அல்லவா.
ஆனால் மனதை திடபடுத்திக் கொண்டு அடுத்து செய்ய வேண்டியதை எல்லாம், சிறப்பாக அவரின் அண்ணி வாணி மூலம் செய்து இருந்தார்.
ஆம்! அதிகன் அம்மா, அத்தை செல்லம் சிறு வயதில் இருந்தே. பாசத்திற்கு கட்டுபட்டவன், அந்த பதினைந்து வயதில் அவனுக்கு தெரிந்ததெல்லாம், தன் அத்தைக்கு மாமா என்றால் மிகவும் பிடிக்கும் என்பதே.
ஆனால் அந்த வயதில் அவன் அறியாதது, அவனின் அத்தையின் சுயநல குணமும், பணத்தாசையும். அது அவரை பல வேலைகளை பார்க்க வைத்தது, அவரின் மற்றொரு பரிமாணத்தை ராஜசேகர் தவிர்த்து யாருக்கும் தெரியாது.
ராஜசேகர் நினைத்தால், அவரை மாட்டி விட்டு இருக்கலாம். ஆனால், அவருக்கு அவர் மகள் அகனிதா மிகவும் முக்கியம். அந்த ஒரு காரணத்திற்காக தான் பொறுத்துக் கொள்கிறார், அது மட்டுமில்லாமல் அவரின் மீது வேறு சில சந்தேகங்கள் கூட இருக்கிறது, ஆகையால் தான் இந்த அமைதியும் கூட.
வாணிக்கு, எப்பொழுதும் தன் தாய், தந்தை, அண்ணன் என்று அவருக்கு நெருக்கமானவர்களை மட்டும் எண்ணுபவர். கற்பகத்தை அண்ணன் திருமணம் செய்தது, அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
காரணம், அவரின் ஏழ்மையான நிலை அவரை அண்ணி என்று கூட அழைக்க விரும்பவில்லை. தன் தோழிகளிடமோ, தன் வீட்டினரிடமோ, அவரை அறிமுகப்படுத்த கூட விருப்பப்டவில்லை.
எல்லாவற்றிற்கும் மேல், அவரின் அழகு ஆர்ப்பாட்டமில்லாத ஒரு அமரிக்கையான அழகு. அது அவரின் மனதிற்கு சற்று பொறாமையை, ஏற்படுத்தி இருந்தது தான் உண்மை .
ஆகையால், அவர் எப்பொழுதும் அவரை குறை கூறிக் கொண்டே இருப்பார் தாயிடம். ஆனால், மகளின் குணத்தை அறிந்த சென்பகமோ, அதை எப்பொழுதும் கண்டு கொள்ளவே மாட்டார்.
அதுவே, அவருக்கு மேலும் கோபத்தை கொடுத்தது. தாய் தன்னை கண்டுகொள்ளவில்லை என்பது புரிய, அடுத்து அவர் இந்த பக்கம் வருவதை நிறுத்தி விட்டார்.
“அண்ணிக்கு என் மேல என்ன கோபம் அத்தை?” என்று வாணி பற்றி தெரியாமல், அவர் ஏன் தன்னுடன் பேசுவதில்லை என்ற கவலை அவரை அப்படி கேட்க வைத்தது.
“உன் மேல கோபம் இல்லை மா, அவளுக்கு என் மேல கோபம் அதான் இப்படி நடந்துக்கிறா” என்று சமாளித்து வைத்தார்.
கற்பகம் ஒரு அப்பாவி, யார் என்ன கூறினாலும் அதை அப்படியே நம்பிடும் ஜீவன். ஆகையால் தான் அவரிடம், ராஜசேகரோ, சென்பகமோ யாரையும் அவரிடம் நெருங்க விட்டதில்லை.
“என் அம்மா வீட்டுலையும் நான் தான் ராணியா இருக்கணும், அதுக்கு இந்த கற்பகத்தை முதல விரட்டனும்” என்று அவர் சிந்தனை அப்பொழுதே கோணல் மாணலாக தான் இருந்தது.
இப்பொழுது, அவருக்கு அண்ணனின் நடவடிக்கையில் பலத்த எரிச்சல். எவ்வளவு பாடுபட்டு, தன் நாத்தனாரை அண்ணன் மனைவியாக கொண்டு வந்தார் என்று அவருக்கு தானே தெரியும்.
அங்கேயும், இங்கேயும் தன் ஆட்சி இருந்தால் அதன் பிறகு அந்த இடத்தில் தன் மகனை உட்கார வைக்கலாம் என்பது அவரின் கனவு.
ஆம்! கனவு தான்! மகன் நில் என்றால் நிற்கவும், உட்கார் என்றால் உட்காரவும் அவன் இரண்டு இடத்திலும் ராஜாவாக வலம் வர வேண்டும் என்பது தான் அவரின் கனவு என்பதை விட ஆசை என்று தான் சொல்ல வேண்டும்.
இப்பொழுது அண்ணன் அவரின் சொத்தை அங்கே, கற்பகம் மகளிற்கு மாற்றியது சுத்தமாக பிடிக்கவில்லை. ஏற்கனவே தாய் எப்படியும், அவரின் சேமிப்பை அவளுக்கு தான் என்று வைத்து இருப்பார்.
இப்பொழுது அண்ணனும், அவரின் சொத்தை அங்கு அவளிற்கு கொடுத்தால் அங்கே அவள் தானே ராணியாக வலம் வருவாள் என்று அந்த சிறு பெண்ணின் மீது ஒரு வித பொறாமை அவருக்கு.
இப்படி யோசித்து அமர்ந்து இருந்தவரின் அருகே வந்த இந்து தான், தன் அண்ணியை வைத்து அடுத்த காய் நகற்றினார்.
“அண்ணி! நீங்க வருத்தப்படாதீங்க, உங்க ஆதங்கம் சரி தான் அண்ணி” என்று அவர் கை பிடித்து அவரை தனக்கு ஏற்றது போல் வளைக்க தொடங்கினார்.
“எங்க வீட்டில் நான் தான் அண்ணி, எப்போவும் ராணியா இருப்பேன். இங்க கூட நீங்களும், அத்தையும் என்னை அப்படி தானே பார்த்துகிட்டு இருக்கீங்க”.
“இப்போ என்னடானா அந்த கற்பகத்து மகளுக்கு, ஆள் ஆளுக்கு சொத்து சேர்த்து வச்சுக்கிட்டு இருக்காங்க. அங்க இப்போ என் சொல் ஏறல, அவ மக தான் இப்போ அங்க எல்லாம் போல” என்று கருவினார்.
“வாணி அண்ணி! இதுக்கு ஏன் இவ்வளவு கோபம், வருத்தம்?” என்று அவரை முதலில் சமாதானப்படுத்தினார்.
“அண்ணி! கொஞ்ச நாளைக்கு இதை ஆற போடுவோம். நமக்கு இப்போ பிள்ளைங்க தான் முக்கியம், அவங்களை கொஞ்ச நாளைக்கு நல்ல ஹாஸ்டல் வசதியோட இருக்கிற ஸ்கூல் போகட்டும்”.
“வீட்டுல நடக்கிற சில விஷயங்கள் எல்லாம், இப்போ இந்த சின்ன பசங்க காதுக்கு போக வேண்டாம் அண்ணி. நல்லா படிச்சு வரட்டும், அப்புறம் அங்க உங்க அம்மா ஊரில் வச்சு ஊர் கூடி அதி- ஐசு நிச்சயம் வச்சுக்கலாம்” என்று அவர் மெதுவாக கூறினார்.
“அப்புறம் எப்படி அவ அங்க இருக்க முடியும்? நாம பண்ணுற டார்ச்சர்ல அவளே போய்டுவா, சரிதானே அண்ணி” என்று இந்து கூறவும், வாணி மகிழ்ந்து விட்டார்.
“அண்ணி! நீங்க சொல்லுறது சரிதான் அண்ணி. எனக்கு நீங்க தான் எப்போவும் பக்கபலமா இருக்கீங்க, கொஞ்சம் காத்து இருப்போம் நீங்க சொன்ன மாதிரி” என்று கூறினார் வாணி.
சிறியவர்களை ஹாஸ்டல் சேர்த்தது கூட, வீட்டின் சூழல் தெரியவிடாமல் செய்யவே தான். இதோ கோர்ட் சம்மன் முதல் முதலில், அதுவும் அகனிதாவிற்காக வாணியின் தாய் எடுத்த முதல் அடி.
இன்னும் இது போல் அடுத்து அடுத்து நடந்தால்?!! அதுவும் இந்துவை பொறுத்தவரை எதுவும் பிள்ளைகளுக்கு, தாங்கள் சொல்லுவது மட்டுமே வேதவாக்காக இருக்க வேண்டும், அப்பொழுது தான் அவர் நினைத்ததை நடத்த முடியும்.
இப்படியே நாட்கள் செல்ல, இதோ இப்பொழுது மீண்டும் எந்த ஊரில் இருந்து மன வேதனையுடன் வந்தனரோ, இப்பொழுது பல கனவுகளுடனும், சந்தோஷத்துடனும் வந்து சேர்ந்து இருந்தனர்.
அதிகனுக்கு, அகனிதா என்றால் வேப்பங்காயாக கசந்தது, இதோ இப்படி அன்னையும், அத்தையும் ஏற்படுத்தி இருந்த பிம்பத்தினால் மட்டுமே.
“அவளை சொன்னா, இந்த பாட்டிக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது தெரியல” என்று கோபமாகவும், சற்று சலிப்பாகவும் உணர்ந்தான்.
நாளை நிச்சயம் என்கிற நிலையில், அவனுக்கு ஐஸ்வர்யா எண்ணம் சிறிதும் இல்லை. வீட்டினர் விருப்பத்துக்காக மட்டுமே, அவளை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டான்.
அவனுக்கு எப்பொழுதும், முதல் காதல் எல்லாம் அவனின் பிசினஸ் மட்டும் தான். தொழில் ஒன்றே அவனின் உயிர் மூச்சு, அங்கே அவன் தான் ராஜா.
வாணியின் ஒரு கனவு நிறைவேறி இருக்கிறது என்றால், அது அவர் மகன் தொழில் கூடத்தில் அவன் இப்பொழுது ராஜா. அவன் பார்வையிலே, எல்லோரையும் அடக்கி வேலை வாங்குவதில் கெட்டி என்பதை கண்கூடாக பார்த்து விட்டார்.
இப்பொழுது, இவனை வைத்து இன்னும் பல திட்டங்கள் இங்கே அரங்கேற்றம் செய்ய நினைக்கிறார். ஆனால், மகனோ அகனிதா பற்றி அறிய வேண்டும் என்று துடியாய், துடிக்கிறான் என்பதை அவர் அறிவாரா?!!
அங்கே பூங்கதிர் கிராமத்தில், அகனிதா மாத்திரை எடுப்பதற்காக, பேருக்கு கொஞ்சம் உண்டுவிட்டு, மாத்திரை போட்டுவிட்டு கட்டிலில் விட்டதை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவள் கடந்து வந்த பாதையை தான் யோசித்துக் கொண்டு இருக்கிறாள். ஊர் திருவிழா ஆசை எல்லாம் அவளின் பத்து வயதோடு முடிந்து விட்டது. திருவிழா சமயம் தானே, அன்று அவளுக்கு பெருந்துயர் நடந்தது.
அங்கே நீ விருந்தாளி தான், என்று அழுத்தமாக சொன்ன குரல் இன்னும் காதில் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறது. அதை அவள் எப்படி மறப்பாள்? மறக்கும்படியாகவா அன்றைய தினம் இருந்தது!!
அதை எல்லாம் கடந்து வந்தாலும், செண்பகம் பாட்டி சொன்ன சில விஷயங்களுக்க்காகவே, அவள் வேறு எங்கும் செல்லாமல் இங்கே இருக்கிறாள்.
இல்லை என்றால், அவள் எப்படி இதை எல்லாம் கடந்து இருப்பாள் என்று தெரியவில்லை. இன்றும், அவள் தைரியம் அவள் பாட்டி தான், அவர் சொல்லிய அந்த ஒற்றை வார்த்தைக்காக போராட தயாராகி கொண்டு இருக்கிறாள்.
இது எதுவும் தெரியாமல், அங்கே அவளை பற்றி அறிய ஒருவன், அவளை விரட்டி விட ஒரு மனம், வேறொன்று அவளை தீர்த்து கட்ட என்று பல மனங்கள் இங்கே உலாவ, அவளை காக்க இரண்டு ஜீவன்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறது.
தொடரும்…






இந்துவின் கைக்குள்ள தான் வாணி இருக்காங்க அது கூட தெரியல அந்தம்மாக்கு ஒருநாள் வாணிக்கு ஆப்பு அடிக்கத்தான் போறாங்க இந்து .
மிக்க நன்றி பா ..
கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம் பா ..
Nice