arrow_back
ஆதிக்க நேசம் அத்தியாயம் – 4
ஆதிக்க நேசம் chevron_right பகுதி 4 / 6

அத்தியாயம் – 4

visibility 18
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.3/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் – 4  

அன்று நிச்சயம் கோவிலில் உள்ள மண்டபத்தில்ஏற்பாடு செய்து இருந்தனர் 

ஊரே திருவிழாவுக்காகஅங்கே தானே கூடுவர் அந்த ஒன்றுக்காக தானேஇந்த தேதியை முன்கூட்டியே வாணியும்இந்துவும் முடிவு செய்து இருந்தனர் 

ஏற்பாடுகள் எல்லாம் ஜரூராக நடந்து கொண்டு இருந்ததுஅதிலும் வாணியின் அன்னை செண்பகம்அங்கே ஒவ்வொன்றையும் பார்த்துபார்த்து செய்வதை பார்த்து இந்து குழம்பினார் 

அண்ணிஅத்தை திடீர்னு எப்படி இந்த ஏற்பாடுக்கு ஒத்துகிட்டாங்க?” என்று தன் அதிமுக்கிய சந்தேகத்தை கேட்டார் இந்து 

அண்ணி!! எங்க அம்மாவுக்கு எப்போவும் அவங்க பேரன் அதிகன்னா ரொம்ப பிடிக்கும்”.  

அவன் பிறந்த சமயம்எங்க அம்மா தான் அவனை நல்லா பார்த்துகிட்டாங்க”.  

அப்போ இருந்தே அவங்களுக்குஅவன் அப்படின்னா ஒரு தனி பிரியம் உண்டு அண்ணி”.  

அவன் மேல கோபம் கொஞ்சம் இருந்தாலும்அவன்னு வந்துட்டா அவனுக்காக அவங்க எல்லாம் செய்வாங்க” என்று கூறி பெருமை கொண்டார் 

ஆனாஅதியை விட அவங்களுக்கு அந்த நொண்டி தானே பிடிக்கும்”.  

அவளுக்காகஅவங்க நம்மளை எப்படி எல்லாம் ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு அலைக்கழிசாங்க” என்று கூறியதோடு அல்லாமல்அவளை பற்றி அங்கே எதுவும் பேசவும் அனுமதிக்கவில்லையே என்று எடுத்துக் கூறினார் இந்து 

அண்ணி!! முதல நிச்சய வேலையை பார்ப்போம்அப்புறமா இதை பார்க்கலாம்”.  

நானுமேநிச்சயம் முடிஞ்ச உடனே சில விஷயம் அம்மா கிட்ட பேச யோசிச்சு வச்சு இருக்கேன்”.  

அதனாலவேற எந்த விஷயத்தையும் இப்போ மண்டையில்  ஏத்தாதீங்கவாங்க தட்டு எல்லாம் சரியா இருக்கான்னு பார்ப்போம்” என்று அங்கே நிச்சயம் நடைபெற இருக்கும் கோவில் மண்டபத்திற்கு அழைத்து சென்றார் 

இங்கே மண்டப அறை ஒன்றில் ஐஸ்வர்யாஅழகு நிபுணரின் கை வண்ணத்தில் அழகு தேவதையாக ஜொலித்தாள் 

அறையில்அவளும் அவள் நெருங்கிய தோழியும் மட்டுமே இருந்தனர் 

ஏய் ஐஸ்!! உன்னை பத்தி உங்க வீட்டுல தெரியுமாடி” என்று கேட்டாள் அவள் தோழி நர்மதா 

வாயை மூடுடி என்று அழுத்ததுடன்அவளை பார்த்து கத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் 

அங்கே யாருமில்லை எனவும் தான்அவளுக்கு நிம்மதியாக இருந்தது 

இதை பத்தி இப்போ பேசாதேஎதுனாலும் இப்போ நல்லபடியா நிச்சயம் நடந்து முடியனும்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் மெதுகுரலில் கூறினாள் 

நர்மதாவும்பெருமூச்சு விட்டபடி அவளுக்கு துணையாக இருந்து கொண்டாள் 

வீட்டில் இருந்த அதிகன்காலையில் இருந்து அலைபேசியில் யாருடனாவது பேசிக் கொண்டே இருந்தான் 

அவனின் முதல் காதலியான தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான் 

எதற்காக இங்கே வந்தோம் என்று மறந்தவனாகஅவனின் முழு கவனமும் தொழிலில் இருந்தது 

சிறிது நேரத்திற்கு பிறகுஅவனின் தாய் அவனுக்கு போனில் அழைத்தார்சீக்கிரம் கோவில் மண்டபத்திற்கு வர கூறினார் 

அவனுக்கு அப்பொழுது தான்இங்கு எதற்காக வந்தோம் என்ற நினைவே வந்ததுதலையை அழுந்தக் கோதியவாறுகோவிலுக்கு கிளம்ப தொடங்கினான் 

மெரூன் ஷர்ட்கிரே ஜீன்கையில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட இரண்டு லட்ச ரோலக்ஸ் வாட்ச் என்று மாப்பிள்ளை தோரணையில் கிளம்பி,  அவனுக்காக காத்துக் கொண்டு இருந்த உறவினர்களுடன் கிளம்பி கோவிலுக்கு சென்றான் 

கோவிலின் உள்ளே வந்தவனைதாயின் மொத்த உறவினர்களும் சேர்ந்து அவனை வரவேற்றனர் 

நிச்சயத்திற்கு இவ்வளவு பேர் தேவையா என்று அன்னையிடம் கூட கேட்டுவிட்டான்அவரோ ஊரில் சொந்தங்கள் முன்னால்நிச்சயம் செய்ய வேண்டும் என்பது அவரின் ஆசை என்று கூறிஅதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் 

அன்னையின் ஆசையை நிறைவேற்றஅவனும் சம்மதித்து இதோ இப்பொழுது இவ்வளவு பேரையும் எதிர்கொள்ள சற்று திணறி தான் போனான் 

அவர்கள் உறவுமுறை வைத்துவாணி தான் அனைவரையும் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்தாயின் மகிழ்ச்சிக்காகஅவனும் அனைவரையும் பார்த்து ஒரு சிரிப்புடன் கடந்து விட்டான் 

முதலில் கோவில் பூஜை முடிய தான் நிச்சய விழா என்று கூறி இருந்தார் செண்பகம்ஆதலால்பேரன் வந்த உடனே எல்லோரையும் அழைத்துக் கொண்டு கோவில் உள்ளே சென்றார் 

அங்கே சாமி சந்நிதானத்தின் முன்சாமி பூஜை எல்லாம் முடிந்து நடராஜன் தாத்தாவிற்கு தான் எப்பொழுதும் போல் பரிவட்டம் கட்டினர் 

அடுத்து தன் இரண்டு மகனுக்கும்அண்ணன் மகனுக்கும் கட்டுவர் என்று எதிர்பார்த்த வாணிக்கு அது எல்லாம் நடக்கவே இல்லை எனவும்ஒரு மாதிரி துணுக்குறார் 

எல்லாம் முடிந்துநேராக மண்டபத்திற்கு வந்து நிச்சய வேலையை பார்க்க தொடங்கமனதில் இருந்த நெருடலில் தன் தாயை தனியாக அழைத்து கேட்டு விட்டார் 

என்ன பேசுற வாணி?!! சம்பிரதாயம் எல்லாம்வேற இடம் மாறவும் மறந்து போச்சோ” என்று கோபப்பட்டார் 

அவருக்கு அப்பொழுதும் தாயின் கோபம் புரியவில்லைதான் எதுவும் தவறாக கேட்கவில்லையே என்ற எண்ணம் மட்டும் தான் 

நீ முழிக்கிற முழியில் தெரிஞ்சிடுச்சுஊர் சம்பிரதாயமும் தெரியலநம்ம வீட்டு சம்பிரதாயமும் தெரியல” என்று இப்பொழுது ஆதங்கப்படவே செய்தார் 

நம்ம வீட்டு சம்பிரதாயப்படிஅந்த வீட்டு தலைவருக்கு தான் பரிவட்டம் கட்டுவாங்கஇது வழி வழியா நாம பின்பற்றுவதுநீ வேற வீட்டுக்கு போயிட்ட அப்போ உங்க குல தெய்வ கோவில் வழக்குபடி தான் அங்கே உன் மகனுக்கு பரிவட்டம் கட்டுவாங்க”.  

ஊர் சம்பிரதாயம் கூட கிட்டத்தட்ட இது தான்ஆனா இங்க உங்க அப்பா தான் தலைவர் பதவியில் இருக்கிறார் அதனால அவருக்கு தான் எப்பொழுதும் கட்டுவாங்க”.  

எப்போ தான் நீ வளர்வியோ தெரியலஇதுல நீ என்ன குடும்பம் நடத்தின தெரியல” என்று கூறிவிட்டு செல்ல பார்க்கவாணி அவரை தடுத்தார் 

அதற்குள் நடராஜன்நல்ல நேரத்தில் நிச்சயம் நடக்க வேண்டும் என்று கூறி செண்பகத்தை ஒரு வேலையாக அழைத்து சென்றுவிட்டார் 

அண்ணி!! இங்க என்ன பண்ணுறீங்க?! நேரமாகுதுஅங்கே பொன்னை அழைக்க சொல்லிட்டாங்க”.  

நான் போய் ஐஸ்வர்யாவை கூப்பிடுறேன்நீங்க அதியை கூப்பிட்டு மேடைக்கு வாங்க” என்று பரபரப்பாக கூறிவிட்டு சென்றார் இந்துமதி 

வாணியும் அப்போதைக்கு கேட்க வேண்டிய விஷயத்தைஎல்லாம் ஒத்தி வைத்துவிட்டு மகனின் நிச்சய வேலைகளில் கவனம் வைத்தார். 

மேடையில் அழகு மங்கையாக ஐஸ்வர்யா வந்துஅனைவரையும் நமஸ்கரித்து அங்கே இருந்த இருக்கையில் அமரஅவள் அருகே அதிகனை அமர வைக்க முயன்ற வாணியை தடுத்தார் செண்பகம் 

நிச்சய சேலை மாத்தின பின்னாடி தான்அவன் மேடைக்கு வரணும்வர வர எல்லாம் மறக்குது உனக்குவீட்டுக்கு வா பாடம் எடுக்கிறேன்” என்று கடிந்த தாயை பார்த்து அரண்டு விட்டார் 

அதிகனுக்குபாட்டியின் இந்த கடினம் சற்று அதிகபடியாகவே தோன்றியது 

பாட்டிஎப்போ பாரு எங்க அம்மாவை திட்டிகிட்டே இருக்கீங்க” என்று எரிச்சலுற்றான் 

எனக்கு வேண்டுதல் பார்நியாயமா அவ அங்க உங்க ஊரில் தான் நிச்சயம் வச்சு இருக்கணும்”.  

இங்க தான் வைப்பேன் சொன்னாஅப்போ அதுக்கான சம்பிரதாயம் எல்லாம் சரியா செய்யணுமா இல்லையா?!!”.  

இங்க நிச்சயம் சொன்னதில் இருந்தேஎல்லாம் சொல்லிகிட்டு தான் இருக்கேன்ஆனா உன் அம்மா அவ இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணா கோவம் வருமா வராதா?!!” என்று அப்பொழுதும் எகிறினார் 

இதை எல்லாம் பார்த்த இந்துமதிக்குதிக் திக்கென்று இருந்ததுஅவர் நினைத்த செண்பகம் இல்லைஇவர் வேறு என்பதை இந்த இரண்டு நாளில் புரிய வைத்து இருந்தார் 

நிச்சயம் நல்லபடியா முடிஞ்சா போதும்னு இருக்கு இப்போமிச்சத்தை எல்லாம் அப்புறம் பார்க்கலாம்” என்று எண்ணிக் கொண்டார் இந்து 

ஆனால்அவர் நினைத்து கூட பார்க்காத அனைத்தும்இன்னும் சற்று நேரத்தில் அங்கே அரங்கேற இருக்கிறது. 

வா வா!! என்ன இவ்வளவு லேட்உனக்காக தான் காத்துகிட்டு இருக்கேன்” என்று கூறிய ராஜசேகர் அங்கே வந்த ஒருவரை வரவேற்றுஅவரின் வீட்டினரையும் அழைத்து மேடையேறினார் 

அங்கே வந்தவர்களை பார்த்துஇந்து அதிர்ந்து விட்டார்அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லைஅதுவும் அவரை அழைத்து வந்தது ராஜசேகர் எனவும்இன்னும் திகைப்புற்றார் 

தம்பி நிச்சயம் ஆரம்பிக்கலாம்மாப்பிள்ளை பேரனுக்காக அந்த பக்கம் அமரட்டும்பொண்ணோட அப்பா இங்க அமரட்டும்” என்று நடராஜன் சொல்லவந்தவரை பொண்ணோட அப்பா என்று கூறி அமர வைத்த ராஜசேகரை அனைவரும் திகைப்புடன் பார்த்தனர் 

ராஜா!! பொண்ணோட அப்பா?!!” என்று இழுத்த செண்பகத்திற்குராஜசேகர் அதற்கு விடையாக அங்கே அமர்ந்து இருந்த வினீத்தை கை காட்டினார் 

பெண்ணோட அம்மாவாகஇந்துவை கை காட்டினார் 

அம்மா!! இதை எல்லாம் அப்புறம் பேசலாம்முதல வாணி ஆசைப்பட்ட மாதிரி அவ பையன் நிச்சயம் நடக்கட்டும்” என்றார் ராஜசேகர் 

அதைக் கேட்ட வாணிதிடுக்கிட்டார்அருகே மகனை பார்க்கஅவன் இறுகி போய் நின்று இருந்தான் 

நிச்சயமா?!! முதல இவர் யார்?!! என்ன நடக்குது இங்க?!!” என்று அந்த மண்டபம் அதிர கத்தினான் அதிகன் 

பொண்ணோட அப்பாமிஸ்டர் வினீத் இந்து லவ்வர் அண்ட் ஹெர் ஹஸ்பன்ட்” என்றவரை அதிர்ந்து பார்த்தார் இந்து 

அண்ணி!! என்ன இதெல்லாம்?!!” என்று கோபமாக கேட்டார் வாணி 

உங்க அண்ணா பொய் சொல்லுறார்உங்க எல்லோரோட கண்ணு முன்னாடி தானே என் கழுத்தில் தாலி கட்டினார்” என்று இந்து கூற இப்பொழுது அனைவரும் ராஜசேகரை பார்க்கஅவர் வினீத்தை பார்த்தார் 

நானும் இந்துவும் காலேஜ் படிக்கும் பொழுதேஒருத்தருக்கு ஒருத்தர் விரும்பினோம்”.  

அப்போ என் கிட்ட சொல்லிக்குற மாதிரி வசதி கிடையாது அப்போஅவளுக்காக கொஞ்ச நாள் வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்கணும் முடிவு பண்ணேன்”.  

இங்க நான் அவளுக்காக யோசிக்கஅவ அவளை பத்தி மட்டுமே யோசிச்சா” என்று வருந்தினார் 

அது எல்லாம் அப்புறம் வருத்தப்பட்டுக்கலாம்இப்போ நல்ல நேரம் போகுதுநிச்சயம் பண்ணிடலாம் முதலில்” என்றார் அங்கு இருந்த பெரியவர் ஒருவர் 

முதல இந்த நிச்சயம் நடக்காதுஎல்லோரும் வீட்டுக்கு வந்து சேருங்கஅங்க பேசிக்கலாம்” என்று அங்கு இருந்து முதல் ஆளாக வெளியே சென்றான் அதிகன் 

நடப்பதை எல்லாம் பார்த்த இந்துவுக்குஅவர் கட்டிய கனவு கோட்டை எல்லாம் சிதைந்து கொண்டு இருக்கும் அபாயம் அப்பட்டமாக தெரிந்தது. 

வாணியோதன் கணவரை பார்க்க அங்கே கிருஷ்ணன் இடிந்து போய் அமர்ந்து இருந்தார்அவரின் அந்த தோற்றம்வாணியை திடுக்கிட செய்தது 

என்னங்கஎன்ன செய்து உங்களுக்கு?” என்று பதறி போய் கேட்டார் 

அவரோதங்கை இந்துவை தான் வெறித்து பார்த்து கொண்டு இருந்தார் 

ஏற்கனவேஇரண்டாம் தாரம் என்று அவர் நினைக்கஇப்பொழுது அது அப்படி இல்லைஇது வேறு எனவும் அவரால் அங்கே நிற்க கூட முடியவில்லை 

தங்கை உன் பொறுப்பு என்றுஅன்னையின் இறுதி நிமிடத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்ற அவர் தங்கைக்காக சில விஷயங்கள் செய்யஇங்கே தங்கை என்ன செய்து வைத்து இருக்கிறாள் என்று அவர் மீது ஒரு ஆற்றாமைவெறுப்பு எல்லாம் சேர்ந்து வந்து விட்டது 

இன்னும் என்ன எல்லாம் செய்து வச்சு இருக்கியோஎல்லாத்தையும் மொத்தமா சொல்லிடு”.  

அப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்காமமொத்தமா போக முடியும்” என்று விரக்தி கலந்த வெறுப்பில் கூறிவிட்டு விறுவிறுவென்று வீட்டிற்கு சென்றார் 

செண்பகமும்நடராஜனும் கோவில் வேலைகளை எல்லாம் அவர்களின் நெருங்கிய உறவுக்காரார் பொறுப்பில் விட்டுவிட்டு இவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர் 

ஐசு அக்காஇவர் தான் நம்ம அப்பாவாஇல்லை உனக்கு மட்டும் அப்பாவா?” என்று அவன் பக்கத்தில்  நின்ற ஐஸ்வர்யாவிடம் கிசுகிசுக்கஅது அவர்களுக்கு அருகே இருந்த ராஜசேகர் காதில் விழுந்தது 

உங்க ரெண்டு பேருக்கும் அப்பா அவன் தான்கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” என்று அதட்டினார் திலக்கிடம். 

அங்கே இருந்த அந்த அமைதியை கிழித்துக் கொண்டுவெளி வந்தது அதிகனின் குரல் 

இன்னும் என்ன எல்லாம் ஏமாத்தி வச்சு இருக்கீங்க அத்தைஎல்லாத்தையும் இப்போ இந்த நிமிஷம் சொல்லிடுங்கஎன் அப்பா தாங்க மாட்டார்” என்று அந்த வீடே அதிர கத்தினான் 

அவ வாயை திறக்க மாட்டாநான் சொல்லுறேன்” என்றார் வினீத் 

நீ சொல்லுநான் என் பொன்னை பார்க்க போறேன்” என்றார் ராஜசேகர் 

இத்தனை வருடங்கள்அவர் காத்து இருந்தது இந்த நாளுக்காக தான் அல்லவா 

நில்லுங்க!! எனக்கு ஒரு நியாயம் சொல்லாமநீங்க அவளை பார்க்க போக கூடாது” என்று கத்தினார் இந்து 

இவ்வளவு நடந்தும்இந்துவுக்கு அவர் நினைத்தது நடக்காமல் போன ஆத்திரம் எல்லாம்இப்பொழுது ராஜசேகர் அவர் மகளை பார்க்க செல்கிறேன் எனும் பொழுதுகோபம் வந்தது 

அவர் எதுக்கு உங்களுக்கு நியாயம் சொல்லணும்?? நீங்க தான் என் அப்பாவுக்கு ஒரு நியாயத்தை சொல்லணும்” என்றான் தீனா 

தந்தையின் முகத்தை பார்த்த தமையன்கள் இருவருக்கும்இந்துவின் மேல் கோபம் அதிகமாக வந்தது 

என்ன வேலை எல்லாம் பார்த்து வைத்து இருக்கிறார் இவர் என்றுஅவர்களுக்கு வெறுப்பு தான் அதிகமாக வந்தது 

தந்தை என்று அவர் பிள்ளைகளுக்குகாட்டியது அவர்களின் தாய் மாமாவை அல்லவா 

இத்தனை வருடங்கள்ஒரு பொய்யான வாழ்க்கையை தானே பிள்ளைகளுக்கு கொடுத்து இருக்கிறார் என்று மேலும் ஆற்றாமையாக இருந்தது 

மாமா!! நீங்க உங்க பொண்ணு கிட்ட போங்கஇங்க இனி நான் பார்த்துக்கிறேன்” என்று அதிகன் முதல் முறையாகஅத்தனை வருடங்கள் கழித்து தன் தாய் மாமனுக்கு ஆதரவாக பேசினான் 

அவன் கூறிய பின்அன்னைதந்தையிடம் விடை பெற்றுக் கொண்டு தன் ஆசை மகள் அகனிதாவை காண சென்றார் 

தொடரும்..  

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 5

அத்தியாயம் – 5 அந்த இரவு யாருக்கும் ஒரு பொட்டு தூக்கம் இல்லை, அந்த வீட்டில்.   இந்து என்ற ஒரு பெண்ணால் எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடிந்தது என்று அவர் மேல் கோபமும், வருத்தமும் சேர்ந்தே வந்தது. வாணிக்கு, முதல்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 2 கருத்துகள் உள்ளன

  1. இப்படியும் ஒரு பொண்ணு இருப்பாங்க என்பதற்கு இந்து தான் சாட்சி,
    இனி மேலாவது அப்பாவும் பொண்ணும் ஒண்ணா இருக்கட்டும் .
    ஹீரோ சாரே..! இனிமேலாவது பொறுமையா பேசுங்க நீங்க வார்த்தையால வதைத்தவங்ககிட்ட மன்னிப்பு கேளுங்க .
    சூப்பர் ஆத்தர் ஜி❤️
    எப்போ எப்போ எபிசொட் வரும் ஜி..?

உங்கள் கருத்தைப் பகிருங்கள்