அத்தியாயம் 1
என்ன தவம் செய்தேன் – அறிமுகம்
என்ன தவம் செய்தேன்!
உன்னைக் காவலனாக பெற?
என்ன பாவம் செய்தேன்!
ராட்சசியிடம் சசிக்கி தவிக்க?
பாவம் தீர்ந்து, தவத்தின் வரம் கைசேரும் நாளில்
என் வாழ்வும்,
உன் வாழ்வும் மாறுமோ?
என்னில் சிறு மாற்றத்தை,
விதைத்த என் ரட்சகனே!
பகை கொண்டவர்களின்
கதை முடிக்கும் வல்லவனே!
என்ன தவம் செய்தேன் நானறியேன்
நடக்க போவதை
விதி அன்றி வேறு யார் அறிவர்?
– நன்றி,
எழுத்தாளர் சத்யவாணி.
( இந்த நாவலுக்கு எழுத்தாளர் சத்தியவாணி அவர்கள் வரைந்த கவிதை இது)
என்ன தவம் செய்தேன்!
என்ன தவம் செய்தேன் – கதைக்களம்
கதையின் கவர் உங்களுக்குச் சொல்லிவிடும், இந்தக் கதையின் அடித்தளம்.
ஒரு பக்கம் மனம் நிறைந்த வாழ்வை வாழும் பெண்கள். நம்மை போல்…. காதல், குடும்பம், குழந்தை என்று தீயது நெருங்காத குடும்பம்.
இன்னொரு பக்கம், ‘பார் code’ பதிக்கப்பட்டு, மனிதம் என்பது இல்லாமல், பொருளை போல் விற்கப்படும் பெண்கள்.
இவர்களை பாலியல் தொழிலுக்கும், பாலியல் அடிமைகளாகவும், உறுப்பு திருட்டிற்காகவும் கடத்தி, சில சமயம் கொல்லவும் படுகிறார்கள் என்பது நிதர்சனம்.
2012 ஆம் ஆண்டில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு, 20.9 மில்லியன் மக்கள், கட்டாய உழைப்புக்கு, உட்படுத்தப்பட்டதாகவும், 22% (4.5 மில்லியன்) கட்டாய பாலியல் சுரண்டலுக்கு பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பில்லியன் டாலர் புழங்கும் தொழில் இது. எங்கோ நடக்கிறது என்று இருக்க முடியாமல், நம்மை சுற்றியே இருக்கும் இது.
முன்பெல்லாம், “low ரிஸ்க் victims” என்ற யாரும் அற்றவர்கள் தான் கடத்தபட்டார்கள்.
இன்றோ இல்லத்தரசிகள், கல்லூரி பெண்கள், இளம் குழந்தைகள் எல்லாம் இவர்களின் குறி.
மசாஜ் பார்லர், ரிசார்ட், ஹோட்டல் என்று மீட்சி இல்லாமல் இருக்கும் இந்த பெண்கள், குழந்தைகள், ஆண்களை தேடி தேடி அன்னை, தந்தை, சகோதரன் எங்காவது அலைந்து கொண்டு இருக்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை.
‘மகாநதி’ என்ற கமல் நடித்த படம், ‘மர்தானி என்ற ராணி முக்கர்ஜி நடித்த படம்’ நிஜத்தில் நடக்க கூடாத ஒன்று…
ஆனால், மனிதனின் பணத்தாசை, சதை வெறி இவற்றைத் தினமும் எங்கோ, யாருக்கோ இந்தக் கொடூரத்தை, நடத்தி கொண்டு தான் இருக்கிறது.
‘அடுத்த வீட்டில் பிடித்த தீ தானே!’ என்று இன்று நாம் இருந்து விட்டால், நாளை நம் வீட்டிலும் பரவ வாய்ப்புகள் மிக அதிகம்.
‘காதல்’ என்ற பெயரால் ஏமாற்றி விற்கப்படும் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
‘காமத்திற்கு காதல் என்ற முகமூடி அணிவித்து’ இளம் பெண்களை குறி வைப்பவர்கள் இங்கு அதிகம்.
காதல் மூலம் எப்படியெல்லாம் பிளான் போட்டு ஒரு பெண் ஏமாற்றப்படுகிறாள் என்பதை விவரித்துச் சொல்லியிருக்கும் ‘திரௌபதி படம்.’
இவையெல்லாம், ‘எங்கோ, யாருக்கோ’ தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
‘நமக்கு என்ன?’ என்று நாம் போகும் வரை தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும்.
என் எல்லா கதைகளிலும் பெண்களுக்கே முன்னுரிமை கொடுத்து இருப்பேன்.
இவர்கள், ‘பிரின்ஸ் சார்மிங் வந்து காப்பாற்றுவான்.’ என்று இருக்கும், ‘damsel in distress’ வகை கிடையாது.
அநீதியை சாதாரண வாழ்வில் இருந்து கொண்டே எதிர்த்தவர்கள்.
இவர்கள் யாரும் சூப்பர் பவர் கொண்டவர்கள் கிடையாது. ஆனால், எந்த சூழ்நிலை வந்தாலும், மனத்துணிவை கொண்டு போராடும் போராளிகள்.
வீட்டில் உள்ள மிளகாய் பொடி, மிளகு தூள், கால் ஹீல்ஸ், அணிந்து கொள்ளும் வாசனை திரவியம், ஹேர் கிளிப், குண்டூசி, வண்டி சாவி, அணிந்து இருக்கும் கண்ணாடி, ஹெல்மெட், பற்கள், நகங்கள், தரையில் கிடக்கும் மண் கூட ஆயுதம் தான்.
இதனால், எங்காவது ஒரு உயிர் காப்பாற்றப்பட்டால், அதுவே இந்த எழுத்தின் வெற்றியாகும்.
இது, நிஜ மனிதர்களின் வாழ்வின், நகலே.
**********************************
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”
-மகாகவி பாரதியார்.
தாயாய்!…. சகோதரியாய்!… தோழியாய்!… தாரமாய்!… மகளாய்!… மிளிரும், உலகின் அனைத்து பெண்மணிகளுக்கும், அவர்களின் எண்ணத்தை, கனவை, ஆசைகளை உலகம் அறிய செய்யும், ‘கலங்கரை விளக்கமாய்’ இருக்கும் அனைத்து தந்தை, சகோதரன், தோழன், கணவன், மகன்களுக்கும்..
இந்த, ‘தவம்’ சமர்ப்பணம்.
*******************************
ஹாய் மக்களே,
நலம்.
நலம் அறிய ஆவல்.
உங்கள் அன்பும், ஆதரவும் வழக்கம் போல் வேண்டி நிற்கும் உங்கள் ஹனி.
உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நீங்கள் விரும்பி படித்த என் முதல் நாவல், ‘ என்ன தவம் செய்தேன் – முதல் பாகம்’, புது பொலிவோடு, சில பல மாற்றங்களுடன், இதோ, உங்கள் கண்களுக்கு விருந்தாய் பதிவேற்றபட்டு உள்ளது.
என்னையும் உங்கள் வீட்டில் ஒருத்தியாக, உங்கள் மகளாய், தோழியாய், சகோதரியாய் நீங்கள் ஏற்று கொள்ள காரணமாய் இருந்த, ‘என் முதல் குழந்தை’ மீண்டும் உங்களை நாடி…
மூன்று வருடங்கள் கடந்த பின்னும், ‘ஸ்டில் ட்ரெண்டிங்கில் உள்ளது’, உங்கள் அன்பால் மட்டுமே சாத்தியம் ஆன ஒன்று.
“எழுதின கைக்கு தங்க வளையல்”
“ஒரு முழுமையான படம் பார்த்த பீல்”
“ஒரு மாஜிக். திரும்ப திரும்ப படித்து கொண்டு இருக்கிறேன்.”
“என் வேலையின் பயணத்தின் போது, துணை உங்கள் எழுத்தே!” என்று நீங்கள், கொடுத்த ஊக்கம், அன்பு தொடர்ந்து என்னை எழுத தூண்டுவது.
அந்த அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
படித்தவர்கள் உங்கள் கருத்தை, ரேட்டிங் கொடுங்கள். மற்றவர்கள் படிக்க, அது தூண்டுகோலாய் இருக்கும்.
அன்புடன்,
உங்கள்
அனிதா ராஜ்குமார்.
இனி!….
தவம் ஆரம்பம்!…






Supper
thanks