arrow_back
என்ன தவம் செய்தேன்! 32
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 32 / 85

32

visibility 16
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

‘மதுராவும், கார்திக்கும் வருவார்களா!…’ என்று எதிர்பார்த்து காத்திருந்தாள் ஊர்வசி.
கார்,  ஊர்வசியின் வீட்டின் போர்டிகோவில் நிற்க, ஓடி வந்த ஊர்வசி  இவர்களை வரவேற்றாள்.

மதுராவின்   கைகளைப்   பிடித்துக்  கொண்ட,  ஊர்வசியின்  கண்கள் கலங்கி  இருந்தது என்று  தான்  சொல்ல  வேண்டும். 
‘இனி  தன்  தோழி வாழ்ந்து   விடுவாள்’  என்ற   நம்பிக்கை   துளிர்  விட்டது. 

“ரொம்ப  சந்தோசம்  அண்ணா   நீங்க  வந்தது… நேற்றில் இருந்தே, அவ முகம்   சரியாய்   இல்லை… அவ  பேசுற  விதம், நடந்துக்குற  முறை  எதுவுமே  நல்லதா படலை.
ஒரு   அளவுக்கு  மேல்,  என்னாலும்  எதையும்  செய்ய  முடியலை… வீடு  பூரா உறவு  குவிஞ்சு  இருகாங்க.  ப்ளீஸ்,  மதுரா!…  அவ  உயிரைக்  காப்பாற்றுங்க.

அவ  ரொம்ப  நல்லவ. அவ  அக்கா,  சோனா  மாதிரி இல்லை.
அதிர்ந்து  கூட,  பேச  மாட்டா.  ரொம்ப பயந்தச் சுபாவம். எல்லோரும் இருந்து  அனாதைப்  போல,  ஹாஸ்டலில்  வளர்ந்தவ.
அண்ணா!… ப்ளீஸ்…” என்றாள்  ஊர்வசி, கண்களில் நீர் வழிய.

“ஊர்வசி!.. ச்சே!… ச்சே!… இதற்கு  எல்லாம் அழலாமா?… நீ கவலைப் படாதே!…  பூரணி,  இனி  எங்க  வீட்டுப்  பொண்ணு.  இவன்,  அவ  கழுத்தில் தாலிக்  கட்டுவான்.
நாத்தனார் முடிச்சு, நான்  போடத் தான் போறேன். அதை   நீ   முதல்  வரிசையிலிருந்து  பார்க்கத் தான் போறே!…
எங்கே இருக்கா,  இந்தக்  கண்ணனின்  ராதை?” என்றாள்  மதுரா.

“மதுரா!… இந்த பின் வழியா போனீங்க என்றால், படிக்கட்டுகள் வரும். ரெண்டாவது  மாடியில்,  தூண்  விழுந்திடப் போகுதுன்னு, அதைத் தாங்கிப் பிடிச்சி வெளியே வெறிச்சுட்டு இருக்கு அந்த லூசு!… போய் நல்லா வேப்பிலை  அடிங்க…” என்றாள் ஊர்வசி .

“என்னப்பா!… இவனை  எல்லாம்,  லவ் பண்ற ஒரே காரணத்திற்காக எல்லாம்,  ‘பூரணியை  லூசுன்னு  சொல்லுவியா  நீ?.. 
நியாயமே  இல்லை… பாரு  கார்த்தி, பூரணி லூசுன்னு அவ தோழியே சொல்லிட்டா!….” என்ற மதுராவை,  முறைத்தான்  கார்த்திக்.

“ஐயோ!… மதுரா!…  நான்,  அந்த  அர்த்தத்தில்  சொல்லலை. உண்மையிலே அவ,  லூஸாகித்  தான்  போயிட்டா… என்ன  வேலை  செய்து வைத்து இருக்கா பாருங்க….” என்ற  ஊர்வசி, பூரணி  எழுதி  இருந்த  மரண வாக்குமூலத்தை  அவர்களிடம்  காட்ட,  மற்ற இருவரும் திகைத்துப் போயினர்.

“உங்க ரெண்டு பேருக்கும் திருமணம் என்று கேள்விபட்டதிலிருந்து வாழ்க்கையே  வெறுத்து போய்த் தான் இருக்கிறா… நல்லவேளை உங்களிடம்  பேசி  விட்டேன் … ப்ளீஸ்  போங்க. இனியும், அவளைத் தவிக்க  விடாதீங்க!…” என்றாள் ஊர்வசி.

அவர்கள்  மேலும்  பேசுவதற்குள்,  ஊர்வசியை  வீட்டின்  உள்ளே  அழைக்க, இவர்கள்  இருவரும்,  வீட்டின் பின் பக்கம் இருந்த, மாடி படியேற சென்றனர்.

மாடியேற  கால்  வைத்த  கார்த்திக்  போன்  அழைக்க,  அழைப்பவர்  பெயர், “ஹிட்லர்” என்று டிஸ்பிலே ஆக, “ஆரம்பிச்சுட்டாங்கயா இன்வெஸ்டிகேசனை!… கேள்விக் கேட்டுக் கொல்லப் போறாங்க…” என்று நொந்து  கொண்ட  கார்த்திக்,  முதல்   தளத்தில்   இருந்த,  பால்கனி  பக்கம்  பேச  நகர்ந்தான்.

பவானி  பேச  ஆரம்பித்தார்  என்றால்,  குறைந்தது  பதினைந்து நிமிடமாவது,  தோண்டித்  துருவாமல்  விடமாட்டார் என்பதால், முதல் தளத்தில்  இருந்த,  படிக்கட்டில் அமர்ந்தாள் மதுரா.

இவ்வளவு  நேரம்,  இவர்கள்  பேசுவதை,  முதல்  மாடியிலிருந்து  பார்த்துக் கொண்டு  இருந்தான்  விஜய்.

பெண்களின்  நிகழ்ச்சி  என்பதால்,  ஜூஸ்சை அருந்தியவாரே  பால்கனியில்  நின்று வெளியே வேடிக்கைப் பார்த்து கொண்டு   இருந்தவனின்  கண்களில்,  கார்த்திக்கோடு  பேசிச் சிரித்தவாறே  இறங்கிய  மதுராவை, கண்டதும்  அவன்  இதயம்  ஒரு  நொடி நின்று  தான்  போனது.

கார்த்திக்  கார்,  ஊர்வசி  வீட்டிற்குள்  நுழையும்  போதே,  வீட்டின்  முன்  பக்க பால்கனியில்  கையில்  ஜூஸும்,  முகத்தில்  டன்  கணக்கனாய் கவலை  இருக்க,  சோகச்  சித்திரமாய்  வானத்தை  வெறித்துக்  கொண்டிருந்த விஜய்யைக்  கண்டு  விட்டாள்  மதுரா.

‘ஓஹ்!… தலைவர் இங்கே என்ன செய்யறார்!… செம்ம பீலிங்ஸ் அருவியா பிழிஞ்சித்   தள்ளிட்டு  இருக்கார்!…  இருக்கு  பாஸ்  உனக்கு!…. ஒரு  வருஷமாய்,  ஒளிஞ்சி  மறைஞ்சி  ஆட்டமா எல்லோரும் ஆடிட்டு இருக்கீங்க!…
பூரணி மேட்டர் முடியட்டும்… வரேன்.’ என்று மனதிற்குள் சொல்லிக்  கொண்டு,  ஒரு  கண்  விஜய்  மேல்,  வைத்துக்  கொண்டே  தான் ஊர்வசியிடம்   பேசிக்   கொண்டு   இருந்தாள்   மதுரா.

இருவரும் பேசுவது கேட்கவில்லை என்றாலும், மதுரா ஏதோ சொல்ல அதற்குக் கார்த்திக் அவள் காதைப் பிடித்துத் திருகுவதையும், அவள் கன்னத்தைக்   கிள்ளுவதையும்  கண்டு  அதிர்ந்து  நின்றான்  விஜய்.

அந்த  நொடி, அவன் தான், ‘மதுராவிற்கு கார்த்திக் ஜோடி!’ என்று தரகர் வேலை  பார்த்தது  எல்லாம்  மறந்து  போனது.

தான்  பேசிய  வீர  வசனங்கள்  எல்லாம்  காற்றில்  கரைந்து  போனது.
‘தனக்குச்  சொந்தமான  பொம்மையை,  யாராவது  திருடி  விடுவார்களா!…’ என்று பதறும் குழந்தையின்’ மனநிலையில் தான், அவன் அப்பொழுது இருந்தான்.

இவர்கள்   பேசிச்   சிரிக்கச் சிரிக்க  அவன்  காதில்  புகை  வராதக்  குறை.
அவன் முகத்தையே கவனித்து கொண்டிருந்த மதுரா, அவன் முக மாற்றத்தைக்  கண்டு  விட்டாள்.

‘ஸப்பா!… என்ன இப்படி ஓவர்ரா அனல் அடிக்குது!…. விட்டா கண் பார்வையாலே,  ‘கண்ணகி  மதுரையை  எரித்தது  போல்’  கார்திக்கை எரித்து  விடுவார்  போலிருக்கே!… 
எதுக்கு, இப்போ இங்கே ரொம்ப கருகுது!.
‘தனக்குச்  சொந்தமான  பொம்மையை,  யாராவது  களவாடி  விடுவார்களோ’ என்று  குழந்தைப் பதறுவதை  போல்,  எதுக்குத்  தலைவர்  பதறி, நின்னுட்டு இருக்கார்?…  சரியில்லையே!… 

என்னமோ இடிக்குதே!….’ என்று  மனதில் ஒரு   பக்கம்   விஜய்,  பற்றிய  எண்ணம்  ஓடிட்டு  இருந்தது.       

அந்த வீட்டுப் பெண் ஊர்வசி வந்து விட, அவளுடன் வெகுநேரம் பேசிக் கொண்டு  இருக்க , விஜய்க்கு  தான்  பி .பி  எகிறி கொண்டு இருந்தது.

அதற்குள்  சேது,  உள்ளிருந்து   அழைக்க,  ஒரு  கணம்  உள்ளே  பார்த்து விட்டு, இவன் திரும்புவதற்குள் அவர்கள் இருவரையும் காணவில்லை என்றதும்  பதட்டமாகி,  மேல்  இருந்து  கீழ்  இறங்கி  ஓடி வந்தான் .

ஹால்,  முதல்  மாடி  என்று எங்குமே அவர்களைக் காணாமல் பித்துப் பிடித்தது  போல  ஆனான். அங்கும்,  இங்கும்  தேடிக் கொண்டு  இருந்தவனை  நிறுத்தினார்  சேது.

தூர  இருந்து  பார்ப்பவர்களுக்கு, இவர்கள் அணைத்துக் கொண்டு கேசுவலாகப்  பேசுவது  போன்று தோன்றும். ஆனால், உண்மையில், ‘பைத்தியக்காரன்  ஓடுவதை  போல்,  இங்கும்  அங்கும்  ஓடிக்   கொண்டிருந்த    விஜய்யை’  அவர்  தடுத்து  நிறுத்திக்  கொண்டு இருந்தார்.

விஜய்யை, தடுத்து  நிறுத்தி,  அவன்  தோள்மேல் கைப்போட்டவாறு, வீட்டின் வெளியே அழைத்து வந்தவர் நின்றது பின்புறம் இருந்தப் படிக்கட்டின்  அருகே.
மதுரா அமர்ந்திருந்த அதே படிக்கட்டு!

சேதுவும், கருணாவும் நின்றிருந்த இடத்திலிருந்து பார்க்கும் போது, மதுரா அங்கே அமர்ந்திருப்பது வெளியே தெரியவில்லை. ஆனால், மதுரா அமர்ந்திருந்த இடத்திலிருந்து, அவர்கள் இருவரையும் நன்றாக பார்க்க முடிந்தது.

மதுரா அங்கே அமர்ந்திருப்பதை அறியாமல், அவர்கள் இருவரின் உரையாடல்  ஆரம்பமானது.
 
“என்ன  கருணா!…  என்ன ஆச்சு?… எதற்கு  இப்படிப்  பதட்டமா இருக்கே!… பார், எல்லாரும் உன்னையே பார்க்கறாங்க… கண்ட்ரோல்!… என்ன ஆச்சு?…”  என்றார்   அவனை,  அணைத்தபடி.

“மது!… மது!… வந்து இருக்காப்பா. இங்கே, அந்தக் கார்திக்கோடு…” என்றான்   பெருமூச்சை  வெளியிட்டவாறே.

மகனின்  நிலை  புரிந்து  விட்டது  அந்தத்  தந்தைக்கு.  கார்த்திக் உடன் வந்ததிற்கே,  ‘பதறும்   இவன்  தான்,  மதுராவைக்  கார்த்திக்குத்  தாரை  வார்த்து தரப் போவதாக அறைகூவல் விடுகிறான்’ என்று மனதிற்குள் சிரித்து  கொண்டார்.

“சரிபா…  அதற்கு  என்ன!…  அவங்க   ரெண்டு   பேருக்கும்   திருமணம்  நடக்கப்  போகுது… ஒன்றாக  ஊர்  சுத்தறாங்க…  இதில்  நீ  பதற,  என்ன  இருக்கு?… 
‘மதுராவிற்கு  கார்த்திக்  உடன்  திருமணம்’  என்று  நீ  தானேப்பா சொன்னே!…  இப்போ  என்ன!…”  என்று வாழைப் பழத்தில் ஊசி ஏற்றினார்.

சேதுவின்  பேச்சில்,  அதிகம்  அதிர்ந்தது  மதுராவா,  இல்லை விஜய்யா என்று   சொல்வது  கடினமே.

‘என்னது!…  தலைவர் எனக்கும், கார்திக்குக்கும் திருமணம் நடந்தே ஆகணும்  என்று  சொல்லிட்டு  இருந்தாரா!…  எதுக்கு  இவருக்கு,  ‘இந்தக் கல்யாண   மாலை   வேலை!’   எல்லாம்!….
இவர்  சொன்னதற்கும்,  இவர்  இப்போ பதறுவதற்கும் பெரியப்பா சொல்வது போல் சம்மந்தமே இல்லையே!…
நான்   கார்த்திக்  உடன்  இருப்பதால்,  விஜய்க்கு   ஏன்   இப்படி    பதட்டம்   வருகிறது?…’ மதுராவின் மனம் குழம்பித் தான் போனது.

விஜயின் அந்தப் பதட்டம், தவிப்பு, முக பாவனை, அதில் தெரிந்த வலி, வேதனை, பரிதவிப்பு, இத்தனை வருடத்தில், மதுரா ஒருமுறைக் கூட கண்டதில்லை.

இதுவரை அவள் கண்டிருந்த விஜய்க்கும், இன்று, அங்கு நின்று பேசிக் கொண்டிருக்கும் விஜய்க்கும் ஒன்றல்ல, ஆயிரம் வித்தியாசம் அவளால் காண முடிந்தது.

சேதுவின்  பேச்சில் அதிர்ந்த விஜய்,  ‘திருவிழாவில் தொலைந்து போனக் குழந்தைக்’   கணக்காய்  விழித்து பரிதவித்துக் கொண்டு இருந்தான்.

மகன்   மனம் புரிந்தாலும், ‘ இப்படி  ரண  வைத்தியம்  அவனுக்குத்  தேவை’ என்று  புரிய,  மனதைக்  கல்லாக்கி கொண்டார் .

“கருணா!… இது உனக்கு நீயே போட்டுக் கொண்ட விலங்கு…. நாங்க யாருமே,  உன்னைச்  சோனாவின் கணவனாய் பார்க்கவில்லை.

சோனாவை  மணந்த,  ஒரே  காரணத்திற்காக,  மதுராவிற்கு,  ‘நீ   இணை  இல்லை’  என்று  நீயாகப்   புலம்பிக்   கொண்டிருக்கிறாய்.  அதனால், ‘மதுரா,  கார்திக்கை   தான்  மணக்க  வேண்டும்’   என்று   சொல்வதும்  நீ  தான்.
‘உன்   மனதை, மதுராவின் மேல் உனக்குள்ள காதலை சொல்லவே மாட்டேன்… சோனாவை மணந்ததால், களங்கப்பட்டு விட்டேன்’ என்பது எல்லாம்  லூசுத்தனமாய்   உனக்கே  தோன்றவில்லை?

என்ன  விதமான லாஜிக்  இது!… நீ சோனா கழுத்தில், தாலியே கட்டவில்லை.  திருமாங்கல்ய  கயிற்றைக்  கூடச்  சோனா,  கழுத்தின்  அருகே  கூட,  நீ   கொண்டே செல்லவில்லை.

இல்லை என்று சொல்லாதே!… மணமேடையில் நின்று அதைப் பார்த்தது நான்…. உன் கையிலிருந்து  பிடுங்காதக்   குறையாய்   கட்டியது  சொர்ணா.    

நான்கு  வருடமாய்,  ப்ரஹ்மச்சாரி வேறு!… ‘சோனாவின்  புருஷன்’ என்று ஊர்,  உலகம் சொல்வதால் மட்டும், நீ கலங்கப்பட்டு விட்டாய் என்பது எல்லாம் ரொம்பவே ஓவர்.

உன்னையும் குழப்பி, உன்னைச் சுற்றி உள்ளவர்களையும்  ஏனப்பா  இப்படி  குழப்பறே!
‘மதுரா   வேணாம்’  என்றும்  சொல்ல  மாட்டேங்கற!…. வேணும் என்றும் முடிவு எடுக்கமாட்டேன்  என்கிறே!…
குஷ்டம்,    ச்சே!… நானே, குழம்பிட்டேன். கஷ்டம், உன் கூட.” என்றார்  சேது  கடுப்புடன்.

இவனின்  இந்த   ஓட்டை   உடைசல்   லாஜிக்,   கண்டுத்   தான்   மதுரா   டீம் 1 தலையைப்  பிய்த்து  கொள்வதே!…

சோனா,  செய்து  வைத்து  இருக்கும் பல வேலைகளால்,  இவன்  மனதில் தாழ்வு  மனப்பான்மை,  மதுரா விஷயத்தில்  அளவுக்கு  அதிகமாகவே  ஏற்பட்டு  இருக்க, ஒரு பக்கம் மனதில் காதல் இருந்தாலும், மறு பக்கம், ‘தான் அவளுக்குப் பொருத்தமானவன்  இல்லை’  என்ற  எண்ணமும்  அதிகமாவே  இருந்தது .

அந்தத்   தாழ்வு   மனப்பான்மை, காதல்  கொண்ட  மனதை,  புதைத்து  விட்டு,  ‘கார்த்திக்குக்கு  மதுராவைத்  தாரை  வார்க்க’  அப்போ, அப்போ துள்ளிக்  கொண்டு  இருந்தது . 
மதுராவிற்கு  நல்லது  செய்யறாராம்!

“அவனவன்  காதலுக்காக, எது எதையோ செய்யறான்!… இவன் காதலிக்காகக்  காதலையே  துறந்து  தேவதாஸ்  ஆகப் போகிறாராம்!…
மதுராவிற்கு, இந்த மேட்டர் தெரிய வரும் வரைத் தான் நீ சேப் கண்ணா. தெரிஞ்சுது, ‘எப்படி  பத்ரகாளியா  மாறுவான்னு’  இப்பவே  வயிறு  கலங்குது  எனக்கு.” என்றார்  சேது  கடுப்புடன்.

“இல்லைப்பா!… இந்த  விஷயம்  மதுராவிற்கு,  தெரியக்  கூடாது… சோனாவின்  கணவனாய்,  அப்படியே  நான்  விலகிக்  கொள்வது  தான் சரி. கார்த்திக் தான் மதுராவிற்கு சரி.” என்றான் விஜய், எங்கோ வெறித்துக்  கொண்டு.

அப்படியே இழுத்து வைத்து, ‘நாலு அப்பு அப்பிடலாமா?…’ என்று கூடச் சேதுவின் கைத்துறுதுறுத்தது.

‘மகனாய் போய் விட்டானே!… இவனை இப்படியே  விடக்  கூடாதே!…’ என்று  மனதிற்குள்  நினைத்தவர்,
“ஆமாம்  கருணா,  நீ  சொல்வது  தான்  சரி…. மதுராவிற்கு ஏற்றவன் கார்த்திக்  தான்…. “ என்று  சொல்ல,  மதுராவும்,  விஜய்யும்  ஒருங்கே  மீண்டும்   திகைத்தார்கள்.     

“அதான் திருமணம் ஏற்பாடு செய்ய,  பவானி, குன்னூரிலிருந்து வந்துட்டாங்க இல்லை…. திருமணம் சீக்கிரம் ஆகப் போகுது….    சின்னச் சிறுசுங்க…. அப்படி,  இப்படி  தான்  இருப்பாங்க.

திருமணம்  செய்யப்  போறவங்க,  ‘ஒரு  கிஸ், ஒரு  ஹக்ன்னு’ தனிமையைத் தேடித்  தான்  போவாங்க.  இதுக்கு  நீ ஏன்பா டென்ஷன் ஆகுறே!… ஒருத்தரை  ஒருத்தர்  புரிஞ்சுக்கணும்.
திருமணம்!… முதல் இரவு, வளைகாப்பு,  குழந்தைக் குட்டி   என்று  எவ்வளவோ மதுரா,  கார்த்திக்  வாழ்வில் வரும்.

கார்த்திக்குடன் தான் மதுராவின் இல்லறம் தொடங்கும். புரிந்து கொண்டு உள்ளதால் நெருங்கியவர்கள் இல்லறத்தில், உடலால்  இணைவார்கள். அவன் குழந்தையை,  அவங்க   வீட்டு  வாரிசைப்  பெற்று  எடுப்பா.

இது  என்ன  ஒரு  நாள்  கூத்தா!..  லைப்  லாங்  வரும்  பந்தம்  இல்லையா!… ஒருத்தரை  ஒருத்தர்   புரிஞ்சுக்கணும்,  லவ்  செய்யணும்…  நீ  இதை  எல்லாம்  கண்டுக்காதே!….

ஆமாம்,  நீ  ஏனப்பா,  ‘அந்தக்  கிரண் தம்பி’ ஒரு படத்துல காரில் அமர்ந்துட்டு , ஹீரோ, ஹீரோயின் ரொமான்ஸ் செய்வதை நினைத்து என்னவோ, 

ஹே!…
அசைந்தாடும்  காற்றுக்கும்,
அழகான பூவுக்கும் காதலா?…
காதலா?…’   என்ற  பாட்டுக்கு   ரியாக்ஷன்  தருவானே,  அதுபோல்  இருக்கே!….”  என்றவர், தன் மொபைல் எடுத்து, யூ டியூபில் அந்தப்  பாடலை  எடுத்தவர்,  விஜய்   முன்னிருந்த  டேபிளில் வைத்து விட்டு,    

“பார்த்துப்பா!… அந்தப் படத்துல கடைசியில், அந்தத் தம்பி மெண்டல் ஹாஸ்பிடலில்  அட்மிட்  செய்து  இருப்பாங்க.  உனக்கும்,  அந்த  நிலைமை வந்துடப்  போகுது…” என்றவர்  அந்தப்  பாடலை,   ஓட விட்டு உள்ளே செல்ல,    அவரின்   பேச்சைக்   கேட்டே,  சப்த நாடியும் அடங்கியிருந்த விஜய், அந்தப் பாடல் ஓட, நெஞ்சை பிடித்துக் கொண்டு  அங்கிருந்த  நாற்காலியில்  பொத்தென்று அமர்ந்தான்.

பாடல்  வேறு, அவனின் யோசனைத் திறனை முற்றிலும் அழித்து விட்டது என்று  தான்  சொல்ல  வேண்டுமோ!.  
  
‘சேது அப்பா!… சான்ஸ்சே  இல்லை போங்க… என்னமா ரிவேர்ஸ் சைகாலஜி டிரீட்மென்ட் தறீங்க!…
சிச்சுவேஷன் சாங் வேற!…
பிச்சி உதறீங்க. 
விஜய்   பார்த்துப்பா!… 

கடைசியில், 

எங்கே  செல்லும், 
இந்தப் பாதைன்னு!….’  என்று  சாங்  போட  வைத்துடாதே!…’

விஜய்  திணறலை,  தவிப்பை,  அவன் முக மாற்றத்தை, சேது  செய்து  வைத்த  வேலையை,  மாடிபடியிலிருந்து  பார்த்துக்  கொண்டு  இருந்த  மதுராவுக்கு,  அந்தச் சூழ்நிலைக்கு, எப்படி ரியாக்ட் ஆவது என்று கூடப் புரியவில்லை  என்று  தான்   சொல்ல   வேண்டும்.

மொபைல் பாடலைப் பாடிக் கொண்டிருக்க, விஜய், மதுரா தங்கள் எண்ணங்களில் முழுகியிருக்க, நலங்கு முடிந்து பதற்றத்துடன் வந்த மரகதத்தையும்,  கனகாவையும்  முதலில்  பார்த்தது  மதுரா தான்.

விஜய்  இருக்கும்  நிலை  கண்டு,  திகைத்தவர்களாய்  அவன்  அருகே  செல்ல  முயல,  அவர்களைத்  தடுத்தார்  சேது .

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

33

"என்னங்க!... கண்ணா, இப்படி  இருக்கான்!... நீங்க  அமைதியா  இருக்கீங்க!...” என்றார்  கனகா, அதிர்ந்தவராய் .“ரண   வைத்தியம்   செய்து   இருக்கேன்  உன்   மகனுக்கு!... பைத்தியம் முத்திப், ‘போய்த் தேவதாஸாக அலைந்தான்’ இல்லை, அதான் வேப்பிலை அடித்தேன்!...உன் மகனுக்குப் பிடித்து இருக்கும் பைத்தியத்திற்கு,  வேப்பிலை  …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்