arrow_back
என்ன தவம் செய்தேன்! 35
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 35 / 85

35

visibility 21
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

“இரு!…  இரு! … பிரேக்கை போடு. இப்போ,  எதுக்கு  இந்த  டயலாக்  நீ விட்டே?….”  என்று   ஒரு  கையால்,  தன்  தலைத்  தட்டி,  யோசித்த  மதுரா, அவள்  ஏன்  அப்படி  பேசினால்  என்று  புரிந்து  விட,
“அடியேய்!…  நான்   ஹீரோயின்டீ. என்னை   வில்லியாக்கப்  பார்க்கிறாயே!….

ஹே!…  லூசு பூரணி!… கார்த்திக்கோடு எனக்குத் திருமண  ஏற்பாடுச்  செய்தது  எங்க  வீட்டுப்  பெருசுங்கத்  தான். அதுவும்  எங்க  ரெண்டு  பேரின்  சம்மதம்  கேட்காமலேயே!…

என்றுமே, இவன்  எனக்கு  ஒரு  சகோதரன்  தான். என் அண்ணா, ரகு மாதிரியே தான் இவனும்.
என்  மேல்  இவன்  வைத்து இருப்பது  பாசம். அது காதல் இல்லை.
உன்  மேல், இவன் வைத்து இருப்பது காதல்.
எனக்கும், அவனுக்கும் திருமணம் நடக்கக் கூடாதுன்னு என்னென்ன கோல்மால் வேலை எல்லாம் செய்திருக்கான் என்று தெரியுமா!… சொல்றேன் கேளு.

முதல் முறை, இவன் பெற்றோர்,   திருமணம்  பேச வரும் போது அதைத் தடுக்க, கையை உடைத்து  கொண்டவன்  இவன்.

உன்னையும், உன் காதலையும், உன் பீலிங்க்சு எல்லாம் ஹர்ட் பண்ண நான்  வரலை.
உன்னை  இவன்  காதலிக்கிறான். உன்னைத்  தான்  திருமணம் செய்யப்  போகிறான்  என்று  சொல்ல  வந்தேன்.

எப்பா!…   கார்த்திகேயா!…  உனக்குப்   புண்ணியமாப்  போகட்டும். என்னை   இவ,   இன்னும்  டேமேஜ்  செய்யறதுக்கு  முன்னாடி,   உன்  லவ்ஸ்  சொல்லு.
மீதம், நீயே விளக்கிக்கோ!… மீ எஸ்கேப். பூரணி ஆல் தி பெஸ்ட் டார்லி. உனக்கு   ரூட்  கிளீயர்  பேபி…” என்ற  மதுரா,  பூரணி எதிர்ப்பார்க்காதப் போது,   அவளை   இழுத்து,  கன்னத்தில்  ஒரு  முத்தம்   கொடுத்து,  திகைத்து  நின்ற  அவள்   கன்னத்தைத்,   ஒரு   தாயின்  வாஞ்சையுடன்  தட்டி  விட்டு,   பக்கத்துக்கு   அறைக்குள்  சென்று  கதவைத்  தாளிட்டுக்  கொண்டாள்.

மதுரா  பேசியதை   நம்பவும்   முடியாமல்,  நம்பாமல்   இருக்கவும்  முடியாமல்  திணறிப்  போனாள்  பூரணி.

அவளின்  அருகே அமர்ந்த கார்த்திக்,  அவள்  கையை  எடுத்துத்  தன்  கைக்குள்  வைத்துக்  கொண்டான்.

“அன்னம்!… டவ் !…  ஏதாவது  பேசுடீ…”  என்றான்  கார்த்திக்.

“அவங்க…  மதுரா,  அவங்க  சொன்னது…  எல்லாம்…”  என்றாள்  பூரணி.

‘கனவு ஏதும் தான் கண்டுக் கொண்டு இருக்கிறோமா!…’ என்று குழப்பத்திலிருந்தாள் பூரணி.

“உண்மை  தான்…  எங்க  வீட்டுப்   பெரியவங்களுக்கு  எனக்கும், மதுராவிற்கும்   திருமணம்  செய்யும்   எண்ணம்  இருக்கிறது  தான்.   ஆனால், அவளைப்  பொறுத்தவரை  நானும்,   அவ அண்ணா ரகுவும், அவளுக்கு ஒன்று  தான்.
அவளுடன் தான் வளர்ந்தேன். ஆனா, அவளை ஒரு காதலியாகவோ, மனைவியாகவோ  நினைக்க கூட முடியலை. நான் தூக்கி வளர்த்தப் பொண்ணுடி. மக மாதிரி.

அவளின்  பெஸ்ட்  தோழன் நான்  தான்.
என்   முதல்,   கடைசி   தோழியும்  அவள்   தான். இந்தக்   கையால்  தான்டீ,   மதுராச்  சின்னக்  குழந்தையாய்  இருக்கும்  போது தூக்கினேன். எனக்கு   இப்பவும்,  எப்பவும்  மதுராத்  தங்கை  தான்.
நான் தூக்கி வளர்த்தவளை, வேறு மாதிரி நினைக்க என்னால் முடியவில்லை.

என்   ஸ்பெஷல்  தோழி,  என் கைட், மதுரா தான் இப்பவும்,  எப்பவும்.     
அவ  சொல்லும்  வரை,   நீ   என்னை நாலு வருசமா, லவ் செய்யறது எனக்குத்   தெரியாது.

நீ, ‘சோனாவின் தங்கை’,   என்றதும்  நான்  தயங்கியது உண்மை தான். அந்த சனியனால் தான்,  மதுராவிற்கு, அவ ப்ரெண்ட்ஸுக்கு பிரச்சனை.
பட்,  என்னை  இங்குக்  கூட்டி  வந்ததே  அவ  தான். நாலு வருசமாய் எனக்காக   வாழ்ந்த,  உனக்காக,  காலம்  முழுதும்   உன்னோடு  வாழ, இந்தத்   தேவதை   எனக்கு   வரம்   தருமா?

உன் ஓவியங்களைப்  பார்த்தேன்   அன்னம். உன்   ஓவியங்களில்,  உள்ள  நிழல்,  நிஜமாக்க,  என்னோடு  உன்  வாழ்வைப்  பகிர்ந்து  கொள்ளத்   தயாரா?” என்றவனை   கட்டிப்   பிடித்துக்   கதறி  அழுதாள்  பூரணி.
சந்தோசக்  கண்ணீர் .

கதறி அழுத்தவளை அணைத்து கொண்டவனின் கண்களும் கலங்க, பூரணியின் தலையில், தன் தலையைச் சாய்த்தவன், முன் நெற்றில் முத்தமிட்டான்.  அவனின்  கண்களும்  கலங்கி  இருந்தன.
காதலிப்பதும்,  காதலிக்கப்படுவது  சுகம்  தான் .

அதே   நேரம்  கீழே,   பந்தி  முடிந்து,   விஜய்யும்   அவன்  குடும்பத்தினரும் கிளம்ப  முயல,  எங்கு  இருந்தோ  ஓடி  வந்த ஊர்வசி,  “அங்கிள்!… அப்பா உங்க,  எல்லார்  கூடவும் பேசணும்  என்றார். மேலே ரெண்டாவது மாடியில்,  வலது  பக்கம் இருக்கும் அறையில் வெயிட் செய்யறார். அழைத்து   வரச்   சொன்னார்.” என்றாள்.

ஊர்வசியின்  தகப்பனார்,  சேதுவின் கல்லூரி தோழர். நெருங்கிய நட்பு இருவருக்குள்ளும்.

நண்பன்  பேச  அழைக்கக்  குடும்பத்துடன், ரெண்டாவது மாடிக்குச் சென்றவர், ஊர்வசிச் சொன்ன அறைக்குள் செல்ல, அங்கு அவரின் நண்பருக்குப் பதிலாக, வளைகாப்பு  விருந்தை, ரவுண்டுக்  கட்டி  அடித்துக் கொண்டு   இருந்த  மதுராவை   கண்டனர்.

உள்ளே  வந்தவர்களைக்  கண்ட  மதுரா, “ஹாய் பெரியப்பா!…  ஹாய் பெரியம்மா!…. ஹாய் பாட்டி செல்லம்!… ஹலோ ரோபோட்!…” என்றாள் வரவேற்கும்  விதமாக.

“நீ,  இங்கே  என்ன  செய்யுறே?”  என்றான்  விஜய்,  ஆரம்பத்  திகைப்பு  நீங்கி,
“பார்த்தா  தெரியலை!…. சாப்பிடுறேன்.” என்றாள் மதுரா, நக்கலாக.

“அது இல்லைமா…. உனக்குப் பொண்ணு தோழியா?… இல்லை மாப்பிள்ளையா?….  இல்லன்னா   கார்த்திக்   நண்பர்களா?….
கார்த்திக்  கூடத்   துணையாய்   வந்தாயா   மதுராமா!…”  என்றார்  கனகா.

“யாரு!… அந்த ஜில்லாக் கேடி கார்த்திக் எருமைக்கு, நான் துணையா வரதாவது…. அது  மூஞ்சித்  தான்,  அமுல்  பேபி  மாதிரி  இருக்கும். ஊரையே  வித்திட்டு  வந்துடும். அதுக்கெல்லாம்  என்னத்  துணை  வேண்டிக்  கிடக்கு…”  என்றாள் மதுரா.

‘செத்தான்  கார்த்திக்….  மரியாதை  டன் கணக்கில் வருது…’  என்று  சேதுவும்,  கனகாவும்  பார்வைப் பரிமாறிக் கொண்டனர்.  

“அப்போ, உங்க அம்மா, அப்பாவுக்குத் தெரிஞ்சவங்களா கண்ணா…?” என்றார்  கனகா.  

“பெரியம்மா!…   நீங்க,  ‘நண்பன்’  படம்  பார்த்து  இருக்கீங்களா?…” என்றாள்.

“பார்த்திருக்கேன்.” என்றார் கனகா குழப்பத்துடன்,  எதற்கு அந்தக் கேள்வி என்று புரியாமல்.
 
“அதில் விஜய்,  ஒரு  கவர்  வாங்கி  நண்பர்களுடன்,  சத்யராஜ்  பெரிய  பொண்ணு திருமணத்திற்கு  போவாங்க… சாப்பிட… நான் இங்கே வளைகாப்பிற்கு வந்து  இருக்கிறேன்.  இங்கு  யாரையும் தெரியாது.” என்றவளின் பேச்சைக்   கேட்டு   அவர்கள்   திகைத்தனர் .

“பாட்டி!… எனக்குப் பெரிய டவுட் பாட்டி. ரொம்ப நாளா யோசித்து, யோசித்து,  மண்டையே  வெடிச்சுடும்  போல  இருக்கு.” என்றாள் மதுரா.

“என்னமா!…” என்றார் மரகதம் பதட்டத்துடன்.

மற்றவர்களும்,  என்னவோ, ஏதோ என்று கவலையில் இருந்தனர்.

“அது  ஒன்றும் இல்லை பாட்டி!… இந்தப் பெருமாள் கோயில் புளியாவரையும், இது போன்ற விசேஷங்களில் செய்யும் புளியாவரையும் மட்டும்   எப்படி,  டேஸ்ட்  செமையா  இருக்கு!
அங்கு ஹிட்லர் செய்யும். நல்லாவே இருக்காது.
பேஸ்!… பேஸ்!… புளியாவரை   என்றால்,  அது  பெருமாள்  கோயில்  புளியாவரை  தான். ரொம்ப  நன்னாயிருக்கு….” என்று சப்புக் கொட்டிச் சாப்பிட்டவளை, என்ன செய்வது,  என்று   புரியாமல்   ஒருவரை   ஒருவர்   பார்த்துக்  கொண்டனர் .

“ஏய்!… விளையாடுறீயா என்ன!… உன்னைக் காப்பாற்ற, ராத்திரி பகல் அவனவன்,  சோறுத்   தண்ணி  இல்லாமல்  சுத்திட்டு  இருக்கோம்.  ‘யாரு, என்ன, என்று தெரியாதவங்க வீட்டுக்கு’ வந்துட்டு, நக்கலா பண்ணிட்டு  இருக்கே!…. எழுந்திருடீ. எதுக்கு இங்கே, வந்தே!… ஒழுங்கு, மரியாதையாச் சொல்லு.” என்றான்  விஜய்,  கண்களில்  கோபம்  மின்ன.

அவன் கோபத்திற்கு காரணம் சேது உருவாக்கி விட்டுப் போன, ‘அசைந்தாடும்   காற்றுக்கும், 
அழகான  பூவுக்கும்’  சிச்சுவேஷன் பாடல்  தான்.

உள்ளே   குமுறும்  எரிமலையின்    சீற்றம்,  வெளியே  வந்து  இருந்தது .

‘உன்  கோவம்,  என்னை  என்ன  செய்யும்!’  என்று  வெகுநக்கலாக,  ஒரு  லுக்  விட்டு,  சாப்பிடும்  தன்  வேலையைப்  பார்க்க  ஆரம்பித்தாள்.
இடியே  விழுந்தாலும்,  எங்களுக்கு சாப்பாடு  முக்கியமுங்கோ.

“ஏய்!…  திமிரா!…  கேட்கறேன்  இல்லை…”  என்றான் விஜய், அவள் கையைப்  பிடித்து  எழுப்பி.

“ஆமாம்ன்னு  வச்சுக்கோங்க…   நீங்க ஆக்கி, ஆக்கிப் போட்டுச் சாப்பிட்டதில் திமிர், கொழுப்பு எல்லாம் ஏறிடுச்சு…” என்றவளின் மனக்கண்ணில்,   விஜய்  கிச்சன்னில்  தோசைக்  கரண்டியுடன்  நிற்பது  போல்   தோன்ற,  எழுந்த   சிரிப்பைக்   கட்டுபடுத்த   மிகவும்  போராடினாள்.

அவள்   சிரிப்பைக்   கண்டவன்,  அவள் ‘என்ன கற்பனை செய்கிறாள்’ என்பது  புரிந்து  விட,  விஜய்யின்  முகத்தில்  எள்ளும்  கொள்ளும்  வெடித்தது.

‘என்ன ஆச்சு இவளுக்கு?… இப்படியெல்லாம் நக்கல் அடித்துப் பேசமாட்டாளே!…. நான் கிட்ட வந்தாலே பத்து காதத் தூரம் ஓடுவாளே!… பேசவே கணக்குப் பார்ப்பா. இப்போ என்ன ஆச்சு இவளுக்கு!…’ என்று விஜய், தலையைப்  பிய்த்துக்  கொள்ளாதக்  குறை.

அவன்   குழப்பத்தை,   அவன்  முகமே  காட்டிக்  கொடுக்க, மனதிற்குள் சிரித்து   கொண்ட  மதுரா,  ‘மாம்ஸ்!…  உங்க   பாஸ்போர்ட்  என்   கையில். ஒரு வருஷம் கடிச்சா வைச்சே!… இரு, உன்னை வச்சி செய்யறேன்!…’ என்று மனதிற்குள் சொல்லியவள், உணவை, மீண்டும் அமர்ந்து  ஒரு கைப் பார்த்தாள்.   

“மதுரமா!…  நேத்து,  அவ்வளவு   நடந்த   பிறகும்…  என்னமா  இது!…  யார், எவர்ன்னு  தெரியாதுன்னு   நீயே  சொல்றே!…  பின்,  உனக்கு  இங்கு  என்ன  வேலை?…   இங்கே  என்ன செய்யுறே!…”   என்றார் சேது.

விஜய்யிடம்,  நக்கல் அடித்தது போல் அவரிடம் எதையும் பேசி வைக்காதவள்,  “பொண்ணு  பார்க்க,  வந்தேன்  அப்பா…” என்றாள் பவ்யமாக .

“பொண்ணா!… யாருக்கு?”  என்றார்  கனகா.

“என்  அண்ணனுக்கு….” என்றாள்  மதுரா.

“யார் ரகுவிற்கா!… அவனுக்குப் பொண்ணு பார்க்கும் அளவுக்கு, நீ பெரியமனுஷி  ஆகி  விட்டாயா  என்ன?”  என்றார்  மரகதம்.

“என்ன   பாட்டிப்  பண்றது?…   அந்தப்   பொண்ணு,  ‘என்  அண்ணனை’,  நாலு  வருசமா  லவ்  பண்ணுது. ‘அவன்  தான்  புருஷன்’  என்று  மனசளவில்,  அவனோடு  வாழ்ந்துட்டு  இருக்கு.
இது  தெரியாத,  எங்க  வீட்டுப்  பெருசுங்க,   ‘என்  அண்ணன்னுக்கு’  இன்னொரு   பெண்ணோடு,  திருமணம்  ஏற்பாடு  செய்து இருக்காங்க. 

இது தெரிய  வந்த, அந்தப்   பொண்ணு, ‘தற்கொலை’  வரை  போய்  இருக்கு. அது வாய் இல்லா பூச்சி. எல்லோரும் இருந்தும், ‘அனாதை மாதிரி’ ஹாஸ்டலில் வளர்ந்தவ. கோடீஸ்வரியா இருந்தாலும், அன்புக்கு ஏங்குறவ. அவளின் உயிர்,  ‘என்   அண்ணனிடம்’ தான்   இருக்கு.

அந்தப்  பெண்ணை,  இங்குக்  கூட்டி  வருவதாக  ஊர்வசி  சொன்னாள்.  அதான்,  ‘மதுரா  லவ்  சப்போர்ட்  சங்கம்’  உருவாக்கி,   அந்தப்  பெண்ணை என்   அண்ணனோடு   சேர்த்து   வைத்து   இருக்கிறேன்.

பெரியப்பா!…  பெரியம்மா!… பாட்டி!… நீங்க  எல்லோரும்,  தான்  முன்  நின்று,  இந்தத்   திருமணத்தை  நடத்தி   வைக்கணும். உங்களை  எல்லாம் நம்பி தான்,  களத்தில் இறங்கி இருக்கேன்!….”  என்றவளை அணைத்து கொண்டார்  மரகதம்.

“நிச்சயம் செய்கிறோம் மதுரா. அவங்க  வீட்டில், நாங்களே வந்து பேசுறோம். பவானி, சங்கரன் எங்கப் பேச்சை மீறவே மாட்டாங்க. அந்தப் பெண்ணின் வீட்டில்,  ஒத்துக்  கொள்ளவில்லை   என்றால், ‘அப்பா ஸ்தானத்தில்’ நானே இருந்து, அந்தப் பெண்ணைத் தாரை வார்த்து தருகிறேன்.  அவளுக்குக் குழந்தைப் பிறந்தாலும் கூடத் தாய் வீட்டுச் சீர்ப் போகும்.”  என்றார் சேது .

‘வாக்குக்  கொடுத்து  மாட்டிக் கொண்டீர்களே!…’ என்று மனதுக்குள் சொல்லிச் சிரித்துக் கொண்டாள் மதுரா.

“அப்பா!…   அப்புறம்  பேச்சு  மாறக்  கூடாது… ப்ராமிஸ்  பண்ணுங்க. ‘என் அண்ணனை’  விரும்பும்  பெண்ணுக்கு, ‘என் அண்ணனோடு’ திருமணம் செய்து  வைப்பேன்  என்று …”  என்றாள்  மதுரா விடாமல்.

“எதுக்குமா,  இதற்கெல்லாம் ப்ராமிஸ்!… வாக்குக் கொடுத்து இருக்கோம். மீற மாட்டோம்… இந்தத்  திருமணத்தை, முன் நின்று நடத்தி வைப்போம்.” என்றார்  மரகதம்.

“ஓகே…  ஓகே…  பெண்ணிடமும்,   மாப்பிளையிடமும், ஒரு வார்த்தை நீங்களே   சொல்லிடுங்க.  அதாவது,  ‘இந்தத் திருமணத்தை, நீங்க எல்லோரும்  முன்   நின்று   நடத்தி   வைப்பீங்க’ என்று.

பெரியவங்க    வாயால்  கேட்டா,    ரொம்பச் சந்தோசப்படுவாங்க ரெண்டு பேரும்.
இப்போ   தான்  பேச  ஆரம்பித்து  இருப்பாங்க.  சோ, இப்போதைக்கு,  ரெண்டு  பேரையும்,  ஜஸ்ட்  தூர  இருந்து  பார்த்துடுங்க. பிறகு   கூப்பிட்டுப்   பேசலாம்….”  என்றவள்   பால்கனியை,  மறைத்து  இருந்த    திரையை   விலக்கவும்,  அங்குக்  கார்த்திக்,   பூரணியை  அணைத்து,  நெற்றியில்   முத்தமிடவும்  சரியாக   இருந்தது.

 

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

36

மதுராவைத்  தவிர,  மற்ற  அனைவரும்  திகைப்பின்  உச்சத்தில்  இருந்தனர்.உடனே சமாளித்து கொண்ட விஜய், வெகுவேகமாகக் கோபத்துடன் பால்கனிக்கு  செல்ல  முயல,  அவனைக்  கைப்பிடித்து, இழுத்து  நிறுத்தினாள்  மதுரா.கோபத்தோடு, மதுராவை ஏறிட்டவனின் கோபம், அவள் பார்வையின் தீட்சண்யத்தில்  குறைந்தது .“அங்கு  இருப்பது  கார்த்திக், …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்