arrow_back
என்ன தவம் செய்தேன்! 42
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 42 / 85

42

visibility 14
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

“குட்… மதுரா கிட்டே அக்ரீமெண்ட் கொடுக்கப் போகும் போது, ருத்ரா கிட்டே  இந்த  ஷேர்  கொடுத்துடு.
‘எதிரிக்கு  எதிரி நண்பன்’.
சின்னத் தடயம் கஜா,  சுமன்  மேல்         கிடைக்கட்டும்.  என்  கையால் தான், அவர்களுக்குச் சாவு. அந்தச்  சீனா  டீல்  என்ன  ஆச்சு?”  என்றான் சூர்யா, கண்கள் சிவக்க.

“எல்லாமே ஹைஎண்டு உடைகள். இதை வைத்துத் தான், போட்டதைப் பிடிக்கலாம்  என்று  அந்த  ஆள்  இருக்கிறான்.
கருணா  சாரை  ஓரம்  கட்டிட்டு, எல்லா வேலையையும் அவரே செய்ய போவதாகக் கேள்வி.
எல்லாமே கருணாவின் உழைப்பு. அவரின் படைப்பு. கருணாவின்  டிசைன்  எல்லாமே  டாப்  குவாலிட்டி என்று தான் உங்களுக்கே தெரியுமே!…
கருணாவின் அறிவைத் திருடப் பார்க்கிறார். அறிவுத்  திருட்டு  இந்த  முறை.

நிச்சயம்  கடன்  வாங்கித்  தான்  செய்ய  முடியும்.  லீகல் ரூட் போகணும் என்று பேங்க்  லோன்   அப்ளை செய்வார். ஷேர் விற்கலாம்..” என்றான் உத்தம்.

“வெற்றி குரூப்ஸ், இந்தத் தடவை  இறங்கலையா உத்தம்!… இவ்வளவு பெரிய டீல்… எப்படி விட்டுக் கொடுத்தாங்க!..” என்றான் சூர்யா யோசனையோடு.

“தெரியலை  சார்….  bidding  மூலம்  தான்,  அந்தச்  சீனா  கம்பெனி இந்த டீல்  ஏற்பாடு  செய்தது. ஆனா, இந்தத் தடவை, கஜாவின் quote தான் ரொம்ப கம்மியா இருந்தது. வெற்றி குரூப்ஸ் quote ரொம்ப அதிகம். கஜா, இதை  எப்படி   செய்தார்   என்று  புரியவில்லை.

இந்தர் இண்டஸ்ட்ரீஸ் எதில்,  நுழைந்தாலும், அடுத்தக் கணம் அங்கே இருக்கும் வெற்றி குரூப்ஸ், இந்த முறைபின் வாங்குவது போல் தான் இருக்கிறது. எல்லாமே மூடு மந்திரமாய் இருக்கு, இந்தச் சீனா டீல் பொறுத்தவரை.
என்ன நடக்குது, ஏது நடக்குதுன்னு யாருக்குமே தெரியலை. சிவகாமி அம்மா சும்மா இருக்க மாட்டாங்க. ஆனால், அவங்களே  அமைதியா  இருப்பது  போல்  தான்  தெரிகிறது.”        என்றான்  உத்தம்.

“நாம,  உள்ளே போக வேண்டி இருந்தா, அதற்குத் தயாராக இரு உத்தம். அந்த  ஷிப்மென்ட் சீனா  ரீச்  ஆகக்  கூடாது. seize  செய்ய முடியலைன்னா  ஹோமம்  வளரத்துடு. அந்த  ஆள்  ஜெயிக்க  கூடாது.” என்றான் சூர்யா.

“இன்னொரு விஷயம்… நேத்து நைட் நாம ட்ராப் செய்தபிறகு சோனா, ஹெவி ட்ரக்ஸ் எடுத்துட்டு, patrol இருந்த ஏ.சி.பி ராஜேஸ்வரிக் கிட்டே ஆட்டம்  காட்டி  இருக்கா.
கையில் வேறு, தடைச் செய்யப்பட்ட போதைப் பொருட்கள், லீகல் லிமிட் தாண்டி  வைச்சு  இருக்கா.  பெயில்  கூடக்  கிடைக்காதச் சட்டத்தில் எப்.ஐ.ஆர் போட்டுருக்காங்க.

இப்போ ஹாஸ்பிடலில்  இருப்பதாகக்  கேள்வி.  விஷயம்  கேள்விப்பட்டுக்  கஜா போய்  இருக்கார்.” என்றான் உத்தம்.

“மதியத்திற்குள்  வெளியே  வந்துடுவா.”  என்றான்  சூர்யா, எதிர்காலத்தைக்  கணிப்பவன் போல்.

“வர முடியாது சார்!…. unbailable section…” என்றான் உத்தம் அதிர்ந்தவனாய்.

“வெயிட்  அண்ட் சீ… நான்  சொல்வது,  நடக்குதா  இல்லையா என்று பாரு…”  என்றான்  சூர்யா.

அதே  சமயம்,  சென்னை  கமிஷனர்  அலுவலகத்தில்,  கமிஷனர்  அறைக்கு  ஏ.சி.பி ராஜேஸ்வரி, பரபரப்பாக அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார்.

உள்ளே  நுழைந்தவர்,  அங்கு  இருந்தவர்களைக்  கண்டு,  ஒரு  நொடி  அதிர்ந்து  போனார்.

அந்த  அறையில்,  மத்திய  அமைச்சர்,  நாட்டின்  மோஸ்ட்  பேமஸ்  கிரிமினல்  லாயர் ஆதிசேஷன், சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகளில் ஒருவர்,  ஹியூமன்  ரைட்ஸ்  கமிஷன்  ஆணையர், கஜேந்திரன், சோனா, கால் மேல் கால் போட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருக்க, பக்கா அயோக்கியன்  மாதிரி  இருந்த  ஒருவன்,  இவர்கள் பின்னால் நின்றிருந்தான்.

உள்ளே வந்ததும், ஒரே பார்வையில், இவர்கள் அனைவரின் முகத்தையும் அளவெடுத்து, அவர்கள் நினைப்பதை கணித்தவள், அடுத்து வரப் போவதற்கு  தன்னைத் தயார் செய்து கொண்டு, தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து  நின்றாள்.

“சார்!…”  கமிசினருக்கும்,  மற்றவர்களுக்கு  ஒரு  சலூட்  வைத்தார்.

“மிஸ்.ராஜேஸ்வரி!… உங்களைப்  பத்து  நாள், சஸ்பெண்ட் செய்து இருக்கேன். உங்க  மேல,  ஹியூமன் ரைட்ஸ் கமிஷன் வழக்குப் பதிவுச் செய்து  இருக்கு. அந்த  விசாரணை  முடிந்த  பிறகே,  நீங்க டூட்டியில் ஜாயின்  செய்ய  முடியும்.” என்றார் கமிஷனர்.

“சார்!… ரீசன்  தெரிஞ்சுக்கலாமா?” என்றாள் ராஜேஸ்வரி.

“சொசைட்டியில் நல்ல நிலையில் இருக்கும், லீடிங் இண்டஸ்ட்ரியலிஸ்ட் கஜேந்திரன் சார்,  பேத்தி மீது முன் பகை காரணமாக, நீங்க கஞ்சா வழக்குப்  பதிவு  செய்து  இருப்பது.” என்றார் லாயர் ஆதிசேஷன்.

“ஆதாரத்தோடு தான், மிஸஸ். சோனாவை கைது செய்தேன். எல்லாத்துக்கும் வீடியோ ஆதாரம் இருக்கு.”  என்றார்  ராஜேஸ்வரி.

“எங்கே  அந்த  ஆதாரம்?” என்றார் லாயர்.

“இதோ சார்…” என்றார் ராஜேஸ்வரி, கமிஷ்னரிடம்  ஒரு c.dயைக் கொடுத்து.
அதை  ஓட  விட்டால்,  அதில்  ராஜேஸ்வரி,  சோனாவை  அடிப்பது  மட்டுமே பதிவு ஆகி இருந்தது.
அதுவும் மறுபடியும், மறுபடியும்…
வேறு எதுவுமே  இல்லை.
திகைத்துப்   போய்  நின்றார்  ராஜேஸ்வரி.

“பாருங்க  சார்… எப்படி   மிருகத்தனமாய்  ஒரு  அப்பாவி பெண்ணை, அடித்து இருகாங்க… யூனிபோர்ம் போட்டா எப்படி வேண்டும் என்றாலும், அடிக்கலாம்   என்று   சட்டம்  இருக்கா  என்ன?” என்றார் லாயர்.

“கையும் களவுமாகத் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் தான் இவர்களைக்  கைது  செய்தேன்  சார்…” என்றார் ராஜேஸ்வரி.

“அந்தப் பையே சோனா மேடத்தினுடையது கிடையாது. கீழே கிடந்தப் பையை, உங்கக் கிட்டே கொடுக்க வந்தவர்களைத் தான், நீங்க இப்படி அடித்தது. நீங்க அடிச்ச அடியில் தான், அவங்க மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க.  மெடிக்கல்  ரிப்போர்ட்  இது.

அந்தப்  பைக்குச்  சொந்தக்காரன்,  இதோ  இங்கே  நிற்கிறானே,  இந்தக் கேடி முனியன் தான். அவன் தான், ‘வெற்றி குரூப்ஸ்’ சொல்லிச் சோனா மேடம் பையை மாற்றிக் கொடுத்தது.

சோ,  நீங்க  விசாரித்து,  ஸ்டேஷனில் வைத்து  அடித்து  இருக்க  வேண்டியது  அந்த  வெற்றி  குரூப்ஸ் வெற்றியையும், ருத்ராவையும்… இவன்,  அவங்கக்  கிட்டே  வேலை  செய்பவன்.” என்றார் லாயர்.

“சார்!…  நீங்கச் சோனா மேடத்தை கூட்டிட்டு கிளம்பலாம். உங்களை மாதிரி நல்லவர்கள்  எல்லாம், போலீஸ் அலுவலகம் பக்கம் வரலாமா! கிளம்புங்க சார். அதான் ஜட்ஜ் சார் வழக்கே ஜோடிக்கப்பட்டது என்று சொல்லி  விட்டார்களே!…”  என்றார் மத்திய அமைச்சர்.

அவர்கள்  அனைவரும்  கிளம்ப, நக்கல், தெனாவட்டு, ‘நீ என்னை என்னை செய்ய முடியும்!…’ என்ற ஒரு பார்வைப் பார்த்த வாரே வெளியேறினாள் சோனா.

அவர்கள் கிளம்பியதும், கமிஷனர் எதிரில் உள்ள நாற்காலியில், பொத்தென்று அமர்ந்தாள் ராஜேஸ்வரி. தண்ணீர் பாட்டிலை, அவள்  புறம்  நகர்த்தி வைத்தார், கமிஷனர்.

பாதி பாட்டில் குடித்தவள், அவரை  நிமிர்ந்து   பார்த்தாள்.

இண்டர்காம் ஆன் செய்தவர், “வெளியே மிஸ்டர். ஆல்வின் இருப்பார். அவரை   என்   அறைக்கு   வரச்   சொல்லுங்க.” என்றார்.

சற்று  நேரத்தில்  உள்ளே  வந்தான்  ஆல்வின்.
“என்ன சார், நான் சொன்னது மாதிரி நடந்துடுச்சா?” என்றான் அவர் காட்டிய  நாற்காலியில்,  அமர்ந்தபடி.

“இதோ மேடம், முகத்தைப் பார்த்தாலே தெரியலையா ஆல்வின்!… நீ சொன்னது தான் நடந்தது என்று. ராஜேஸ்வரி, ஆல்வின் தெரியுமா?” என்றார்  கமிஷனர்  சுதர்சன்.

“மீட் செய்து இருக்கேன் சார் டெல்லியில்.:அந்த  டெல்லி பெண்கள் கடத்தல் வழக்கு… ஆல்வின் சார் தான், ரொம்ப ஹெல்ப் செய்ததாய், என் பிரண்ட்  சொல்லி  இருந்தார்.” என்றார் ராஜேஸ்வரி.

“இவர் தான்,  நேத்து நீங்கச் சோனவை அர்ரெஸ்ட் செய்தவுடன், ‘இந்த வழக்கு,  எப்படி  எல்லாம் மாற்றப்படும்’ என்று வார்ன் செய்து விட்டார். அவர்   சொன்னபடியே  தான்  நடந்து  இருக்கு.

ஒரு  பக்கம், உங்க சஸ்பெண்ட். இன்னொரு பக்கம், ‘வெற்றிக் குரூப்ஸ்’ ஆளுங்களை, போதை மருந்து  கடத்தல்  வழக்கில்,  சிக்க வைத்தாகி விட்டது.”  என்றார் சுதர்சன்.

“ஒரே  நாள்  இரவில்,  எப்படி  சார்! மத்திய  அமைச்சர்,  பேமஸ்  கிரிமினல் லாயர்! ஹை கோர்ட் ஜட்ஜ்!… அந்த அளவு, அந்தச் சோனா என்ன பெரிய ஆளா?”  என்றார் ராஜேஸ்வரி.

“சோனா  இல்லை, மேடம், கஜேந்திரன். இந்தச்  சென்னையில்  இரண்டு குரூப் உண்டு.

ஒரு பக்கம் கஜா, அவருடன் இது மாதிரி பெரிய இடத்து ஆட்கள். அதிகமாய், இவர் பின்னால் இருப்பவர்கள் வெளியே தெரிந்து ஐந்து  பேர் தான். தெரியாமல்,.  எத்தனை என்று தெரியவில்லை.

இன்னொரு  பக்கம்  மூன்று  தனி டீம். மூன்றாவது, சூர்யபிரதாப் ரத்தன் சிங்க். ஜெய்ப்பூர் இளவரசக் குடும்பம். தப்புனா, தலையை எவிடென்ஸ் இல்லாம சீவிட்டு போயிட்டே இருப்பார். இவர் மனைவி தான், கஜா ரிசார்டில்   இறந்தது .

ரெண்டாவது, வெற்றிக் குரூப்ஸ். அவங்க சி.ஈ.ஓ. சிவகாமி, கஜாவின் முதல் மனைவி.  சோ,  கஜாவை  அடியோடு  அழிக்கப்  போராடிட்டு  இருகாங்க.

முதல் ஆள், விஜய கருணாகரன். சோனாவின் கணவர். கஜேந்திரனின் மருமகன். இப்போ, கஜா இண்டஸ்ட்ரீஸ், இவர் கண்ட்ரோலில் தான் இருக்கு. 

இந்த மூன்று டீமில், அதிகமாக, ஆனால், வெளியே தெரியாமல், இந்த இல்லீகல்  ஆக்ட்டிவிட்டிக்கு,  போலீஸ்  உடன்  சேர்ந்து எதிர்த்துக் கொண்டு  இருப்பது  கருணா  தான். 

சோ,  இந்த  மூன்று  டீம்  தனியாகவும்,  ஒருத்தருக்கு  ஒருத்தர்  உதவிட்டும்,  கஜாவை  எதிர்த்துக் கொண்டு இருகாங்க.
இது கஜாவைப் பற்றி, நாங்கச் சேகரித்த  விஷயங்கள்.” என்றான் ஆல்வின், ஒரு  பைலை  ராஜேஸ்வரி  இடம் கொடுத்து .

அதைப்  படித்துப்  பார்த்த  ராஜேஸ்வரி,  யோசனையுடன், “உங்க  நியூஸ் படி பார்த்தா, கஜா இன்னும் நிறைய, நிழல் உலக வேலைகளில் ஈடுபட்டு இருக்கார்  போலே  இருக்கே!…” என்றார்.

“கரெக்ட் மேடம். சென்னையில்  புழங்கும்  பாதி,  ‘ட்ரக்ஸ் சப்ளை’ இவர் தான் செய்வது. அது தவிர, ‘டெல்லி பெண்கள் கடத்தல்’ வழக்கிற்கும், இவருக்கும் கூட, லிங்க் இருக்கலாம்னு தோணுது. இவர் சொகுசு பங்களாக்கள், ரிசார்ட்கள் எல்லாம் இது மாதிரி வேலைக்குத் தான் பயன்படுது.

ஆனா, எல்லாம் மூன்றாம் கட்ட, ஆறாம் கட்ட பினாமி பேரில் இருக்கும். ஓனர் என்பவர், வெளிநாட்டில் இருப்பார். இந்தியாவிற்கே வரமாட்டார். இங்கு  நடப்பதற்கும்,  அவருக்கும்  சம்பந்தமே இருக்காது.

போன வருடம், ரிசார்ட் ஒன்றில் இருபது பெண்களைப் போலீஸ் மீட்டார்களே, அது இவர் ரிசார்ட்ல இருந்து தான். பின்னால் இருந்து காப்பாற்றியது,  ‘விஜய கருணாகரன்’ என்பது  எனக்கும், கமிஷனர் சாருக்கும்  மட்டுமே தெரியும்.

இங்கே நிறைய காலேஜ் பெண்கள், பள்ளிக் குழந்தைகள் காணாமல் போயிட்டே இருக்காங்க.

‘ஆள் கடத்தல்/Human trafficking, ஆர்கன் திருடுதல்/organ smuggling, பாலியல் தொழிலுக்காக/prostitution’ என்று பல பிரிவு இருக்கு. அது மட்டுமில்லாமல், பெரிய ஆட்கள் சபலத்தைப் பயன்படுத்தி, அவர்களை வீடியோ எடுத்துப் பிளாக் மெயில் செய்வது, ‘பணக்காரர்களுக்குப் பினாமியாக இருப்பது’ என்று எல்லாத்திலும்  இவர்  இருக்கார்.

ஆனா,  ஒரு  தடயம்  கூட  இல்லை.  சாட்சி  என்று  எதுவும்  இல்லை.  ஆனா,  ‘இவர்  தான்  என்று  நாங்க  சந்தேகப்படக்  காரணம்’  கருணா தான். அவனால் தான், இவர் பினாமி என்று வைத்து இருக்கும் இடங்களில் சோதனை  போடும்  போது  பெண்களை  மீட்டோம்.

‘வெற்றிக் குரூப்ஸ்’ இவரை அடித்துப் பாதாளத்திற்குத் தள்ளினாலும், இவர் மீண்டும்  மீண்டும்  எழுவது,  பின்னால்  வேறு  ஏதோ  பெரிய வேலை செய்து அதில் வருமானம், வருவதால் தான். இல்லையென்றால்,  அவர்கள் அடித்த அடிக்கு, இவர் பிச்சைக்காரனாக மாறி இருக்க வேண்டும்.” என்றான் ஆல்வின்.

“சார்!…  அடுத்து  என்ன  செய்வது?”  என்றார் ராஜேஸ்வரி.

“சஸ்பெண்டில் இருப்பதை யூஸ் செய்துக்கோ. நான் நேரிடையாக எந்த உதவியும் செய்ய முடியாது. பார்த்தே இல்ல!… எப்படி எல்லாம் பிரஷர் கொடுக்கறாங்க என்று.

பணத்திற்கு விலை போகாத, சில உண்மையான நம்ம டிபார்ட்மென்ட் ஆட்கள் இருகாங்க. அவங்களை யூஸ் செய்துக்கோ. ஆல்வின் கூட இருப்பார்.

இது  சீரியஸ்  மேட்டர்  ராஜேஸ்வரி.  ஒரு  பக்கம்  பெண்கள்,  குழந்தைகள் கடத்தல்,  இன்னொரு  பக்கம்  போதை  மருந்து… இப்படி நடப்பதற்கு சீக்கிரம்  முற்றுப்  புள்ளி  வைக்கணும்.  அடுத்து  என்ன  ஆல்வின்?”  என்றார் சுதர்சன்.

“வெற்றிக் குரூப்ஸ்க்கு இன்போர்ம் செய்துட்டேன். அவங்களும் ரெடியா இருகாங்க.

அந்த முனி, பாக்டரியில் பெண்களிடம் தவறாக நடந்தவன். அவனை  எப்பொழுதோ  வேலையை  விட்டுத்  தூக்கி விட்டார்கள்.
இந்நேரம் அவர்கள் பேட்டி ஒளிபரப்பாகி இருக்கும்.

நீங்க அவங்களை விசாரிக்க, போலீஸ் நியமிக்கும் முன்பே, தாங்கள் நிரபராதி என்பதை உலகம்  அறிய  நிரூபித்து  விட்டார்கள்.” என்றான் ஆல்வின்.

கமிஷனர் டிவி ஆன் செய்ய, அதில் எல்லா நியூஸ் சேனல் சிவகாமியின் பேட்டியை   ஒளிபரப்பிக்  கொண்டு  இருந்தது.

“அனைவர்க்கும் வணக்கம்.
என் பெயர் சிவகாமி.
‘வெற்றி குரூப்ஸ்’ நிறுவனர்.

நேற்று  இரவு,  ‘இந்தர்  இண்டஸ்ட்ரீஸ்’ கஜேந்திரனின் பேத்தி, சோனா அவர்கள் போதை மருந்து எடுத்துக் கொண்டு, ஏ.சி.பி ராஜேஸ்வரியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதால், அவரைக் கைது செய்தனர்.

தடை  செய்யப்பட்டப்  போதை மருந்துகளை வைத்து இருந்ததாகவும்  வழக்குப்  பதிவு  செய்யப்பட்டது.  அது  நான்  பெயிலபில்  செக்ஷன்.
கோர்ட்டில்,  ஆஜர் படுத்தியப் பிறகு, போலீஸ் விசாரணைக்குக் கஸ்டடி எடுத்து  விசாரிப்பார்கள்.  செய்த  குற்றம் உறுதியானால்,   30 வருடம் சிறைத் தண்டனை உண்டு.

அப்படி  இருக்கும்  போது,  கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படாமல், சோனாவுக்கு எப்படி பெயில் கிடைத்தது?… 
அதுவும் பெயில்லே  கிடைக்காத  குற்றத்திற்கு!… 
ஆனால்,  இன்று  காலைச்  சோனா அவர்கள்  விடுதலை   செய்யப்பட்டு  விட்டார்.

‘ஏழைக்கு   ஒரு  விசாரணை முறை,  பணக்காரனுக்கு  ஒரு  விசாரணை  முறை  பின்பற்றலாம்’  என்று  நமது  சட்டத்தில் இருப்பது, இதுவரை எனக்குத்  தெரியாமல் போனது.

இதே வழக்கில், சாதாரண மனிதன் ஒருவன் கைது செய்யப்பட்டால்,   இப்படித்   தான்,  காவல் துறையும்,  நீதி  துறையும் நடக்குமா?

சோனாவிடமிருந்து  கைப்பற்றப்பட்ட போதை வஸ்துக்கள், ‘முனியன் என்பவருக்குச் சொந்தம் என்றும், அவர் எங்களிடம் வேலை செய்பவர் என்றும், தொழில் முறை போட்டியில், நாங்கள் சொல்லித் தான், அந்த முனியன் போதை மருந்தைச் சோனாவின் பையில் வைத்ததாகவும்’, திரு கஜேந்திரன்  எங்கள்  மேல்  குற்றம்  சாட்டி  உள்ளார்.

ஒரு  பெண்ணிடம், போதை மருந்தை வைத்துத் தான் தொழிலில், வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், ‘வெற்றி குரூப்ஸ்’ இல்லை.
எங்களின் ஆண்டு டர்ன்  ஓவர்,  அந்நிய  செலவாணி  எவ்வளவு என்று தெரியாமல், திரு. கஜேந்திரன்  இப்படி  பேசுகிறார்.

போதை  மருந்து  விற்றால் தான், அடுத்த வேலை உணவு கிடைக்கும் என்னும் நிலையில் நாங்க இல்லை. திரு. கஜேந்திரன் தான், தொழில் எல்லாவற்றில்  நலிந்து கடனாளியாக இருக்கிறார். பணத் தேவை அவருக்குத் தான் இருக்கிறது. தொழிலில் நேரிடையாக, நேர்மையாக எங்களுடன்  மோத  முடியாமல்,  இப்படி  எல்லாம் அவதூறு பரப்பி வருகிறார்.

‘தகுந்த   ஆதாரம்’   என்று  ஒன்று கூட  இல்லாமல்,  எங்கள்  பெயரை  கலங்கபடுத்த  என்றே,  இப்படி பொய் பரப்பி வரும், அவரின் மேல் ஒரு கோடி  ரூபாய்க்கு,  மானநஷ்ட   வழக்கு   தொடர்ந்து  இருக்கிறோம்.

எந்த  வித  ஆதாரமும் இல்லாமல், உயர்திரு. கஜேந்திரனின் குற்றசாட்டை மட்டும் நம்பி,  விசாரணை என்ற பெயரில்  வந்தால், ஒட்டு மொத்த தமிழகக் காவல் துறையின் மீது, தேசிய ஹியூமன் ரைட்ஸ் கமிஷனிடம் புகார் அளிக்கப்படும்.  மான  நஷ்ட  வழக்கும்  போடப்படும்.

முனியன்  ஒரு  காலத்தில்  எங்களிடம்  தான்  வேலை செய்தார். ‘பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்’ என்று அவரை வேலையை  விட்டு  அனுப்பி  விட்டோம்.
போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து,  அவருக்கு,  ஏழு  வருடம்  சிறை  தண்டனை  கொடுக்கப்பட்டது.

எங்களின் மேல் பகை கொண்டு இருந்தவர் முனியன். பல முறை அலுவலகத்தில், எங்களைக் கொன்று விடுவதாக மிரட்டியும் இருக்கிறார். கடந்த  வாரம்  கூட,  இப்படி  நடந்த உடன் வீடியோ ஆதாரத்துடன் போலீஸ்   கம்பளைண்ட்  பைல்  செய்து  விட்டோம்.

சில பல வருடங்களாக இ.சி.ஆர் ரோட்டில் உள்ள, பல பினாமி ரிசார்ட் ரெய்டு போது, கடத்தபட்ட பெண்களும், குழந்தைகளும் மீட்கப்பட்டு, பல கிலோ  போதை  மருந்துகளும்  பிடிபட்டு கொண்டே இருக்கிறது.

இந்தப்  பினாமிக்கு,  பின்னால்  இருப்பது  யார்?.
இதற்குப் பின்னால் பல பெரிய  புள்ளிகளும்,  அரசியல்வாதிகளும், பெரிய பதவியில் இருப்பவர்களும்  இருக்கின்றனர்.

இவர்களைப்  பிளாக்  மெயில் செய்து உண்மையானக் குற்றவாளிகள் தப்பித்து கொள்கின்றனர்.  இதை  விசாரிக்க,  ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஹை கோர்ட்டில் PIL- பப்ளிக் இன்டெரெஸ்ட் LITIGATION/ பொது நலன் வழக்கு எங்களுடைய லாயர் பதிவு செய்து இருக்கிறார்.

இதை பற்றிச் சோசியல் மீடியா, தகுந்தச் சாட்சியத்துடன் நிரூபிக்க வேண்டுகிறேன். இந்த விஷயமாக எந்த வித விசாரணைக்கும், வெற்றிக் குரூப்ஸ் முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.
நன்றி” என்றார் சிவகாமி, மிகக் கம்பீரமாக.

“யப்பா!… என்ன தோரணை!… வெளுத்துக் கட்டிட்டாங்க… பினாமி ஆங்கில், ஹியூமன் ட்ராபிக், போதை மருந்து, vip பிளாக்மெயில், ரிசார்ட்  எதையும் விடலை.

இன்னும்  பல  வாரங்களுக்கு, மீடியாகாரங்களுக்கு செமத் தீனி கிடைக்கும். முழு  மீடியா,  மக்கள் சப்போர்ட் இவங்களுக்கு உண்டு. விசாரிக்கப் போனா  எல்லாம்  கரெக்ட்டா  இருக்க  போகுது.”  என்றார் சுதர்சன்.

“கஜேந்திரன், தனக்குத் தானே ஆப்பு வைச்சுகிட்டார். உயர் நீதி மன்ற CHIEF ஜஸ்டிஸ், சூர்யாவின் தூரத்து உறவினர். நல்லதுக்காக மட்டுமே போராடுபவர். நிச்சயம் இதை, விசாரிக்கத் தனி ஆணையம் அமைத்து விடுவார்.

ஏற்கனவே  ‘ஆநாமாதேயே  ரிப்போர்ட்’,  மத்திய  போதை  தடுப்பு,   ஹியூமன் ட்ராபிக்கிங் SQUAD, இன்கம் டாக்ஸ்,  CVC- சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன், அரசாங்கத்தில் வேலை செய்து கொண்டே, கஜாவிற்கு துணை போகும் அரசு ஊழியர்களைப் பற்றிய கம்பளைண்ட் கருணா செய்து இருக்கான். எந்நேரம் வேண்டும் என்றாலும், சட்டப்படி நடவடிக்கை  எடுக்கப்படலாம்.”  என்றான்  ஆல்வின்.

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

43

"குட்... மதுரா கிட்டே அக்ரீமெண்ட் கொடுக்கப் போகும் போது, ருத்ரா கிட்டே  இந்த  ஷேர்  கொடுத்துடு.'எதிரிக்கு  எதிரி நண்பன்'.சின்னத் தடயம் கஜா,  சுமன்  மேல்         கிடைக்கட்டும்.  என்  கையால் தான், அவர்களுக்குச் சாவு. அந்தச்  சீனா  டீல்  என்ன  ஆச்சு?”  என்றான்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்