45
அதே நேரம், ‘கஜா போர்ட்’ ரணகளம் ஆகிக் கொண்டு இருந்தது.
டிவி, டேபிள் எல்லாவற்றையும் போட்டு உடைத்து கொண்டு இருந்தார் கஜா. சிவகாமியின் பேட்டி பார்த்ததிலிருந்து வந்த கோபம், வெறி. அதற்கு வீட்டின் பொருட்கள் பலியாகிக் கொண்டு இருந்தது.
“எல்லாம் உன்னால் தாண்டி!… எத்தனை கெஸ்ட் ஹவுஸ் வாங்கி வச்சு இருக்கேன்!… அங்கே, எங்கேயாவது ட்ரக்ஸ் எடுத்துட்டு, மயங்கிக் கிடந்து இருக்க வேண்டியது தானே!…
போயும், போயும் அந்த, ACP கிட்டே ஏண்டீ மாட்டினே!…. உன்னைக் காப்பாத்த போய், எனக்கே ஜெயில் கிடைத்ததும் போல இருக்கு.” என்று கத்தினார் கஜா.
“இட்ஸ் நாட் மை பால்ட்… எல்லாம் அந்த சூர்யபிரதாப் செய்த வேலை.” என்றாள் சோனா, கோபமாக.
“சூர்ய பிரதாப்!… அவன் நெருப்பு ஆச்சே!…. நீ எல்லாம், அவன் கிட்டே கூடப் போக முடியாதே!…” என்றார் கஜா.
“ஹ்ம்ம்!… நான் எங்கே போனேன்?… அவன் ஆட்கள் தான், என்னைக் கடத்திட்டங்க. யு நோ, தே பீட் மீ… அடிச்சு, அந்த மதுரா நாயை மாட்டி வச்சு இருந்த நாலு கோடி கடனை, ஒன்னும் இல்லாம ஆகிட்டான்… தேவி xxx.” என்றாள் சோனா வெறிக் கொண்டு.
“கருணாவின் வேலையா இது!.. இல்லையே, அவன் மதுரா விஷயத்தில், எந்த விதத்திலும் இன்வோல்வ் ஆனதே இல்லையே!…
ஒரு வருசமா, அவனை நம்ம ஆட்கள் கவனிச்சுட்டேத் தானே இருக்காங்க.
நீ தான் வீணாகச் சந்தேகப்பட்டு மதுராவை, இங்கே கூட்டிட்டு வந்து இருக்கே என்று தான் தோணுது.” என்றார் சொர்ணா.
“ஐ ஆல்சோ திங்க் சோ… ஏன்னா சூர்யா, மதுராவை லவ் செய்யறான். ஊர் உலகத்திலே, இவனுங்க கண்ணுக்கு, அந்த மதுராவை தவிர, வேறு பெண்களே தெரிய மாட்டாங்க போல் இருக்கு.
எவனைக் கேட்டாலும், ‘மதுராவை லவ் செய்யறேன். அவ கிடைத்தா அது வரம்!..’ என்று ஒருத்தன் விடாம, எல்லோரும், இதே டைலாக் விடறாங்க. நான் கூட, அந்தச் சூர்யா, மதுராவிடம் மேட்டர் முடிச்சுட்டான் போல கேட்டேன்.
ஆளை விட்டு அடிச்சுட்டான். அவ, அவன் இதயராணியாம்!… அவ கேட்டா, மொத்தச் சாம்ராஜ்யத்தையும், அவ காலடியில் வைப்பானாம். அந்த மதுரா முகத்துல, ஆசிட் வீசணும் போல வெறியா வருது.
அந்தச் சனியன், இவ்வளவு அழகாய், இருக்க போய்த் தானே, எல்லோரும் அவ பின்னாடியே, நாக்கைத் தொங்க போட்டுட்டு அலையறானுங்க” என்றாள் சோனா.
பெண்ணிற்கு, ‘உண்மையான அழகு’ என்பது முகத்தில் இல்லை, அழகு நிலைய மேக் அப்களிலும், பூச்சுகளிலும், இல்லை.
அகத்தில் இருப்பது, எண்ணங்களில் இருப்பது, மற்றவர்களுக்காக நாம் பார்த்துப் பார்த்துச் செய்யும் ஒவ்வொன்றிலும் இருக்கும் நம் அன்பு, பாசத்தில் இருப்பது என்பதை இந்தச் சோனாவிற்கு யார் சொல்வது?
பெண்மையின் அழகு, நிமிர்வில், துணிவில், கருணையில், அன்பில், கனிவான பேச்சில் இருப்பது.
முக பூசலும், பெயிண்ட் டப்பாக்களிலும் தேடும் சோனாவிற்கு, இந்த அழகு பற்றித் தெரிய வாய்ப்பில்லை தான்.
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.’ என்று பெரியவர்கள் சொல்லி வைத்த பொன்மொழிகள், பற்றி அறியாத சோனா, மதுராவின் புற அழகு தான், எல்லோரையும் கவர்வதாக வெந்து கொண்டிருந்தாள்.
“ஏன் அவளை அப்போ விட்டு வைச்சு இருக்கே!… ஜஸ்ட் கில் ஹேர்.” என்றார் சொர்ணா .
“அவ்வளவு சீக்கிரம் கொன்னுட்டா எனக்கு, எப்படி மகிழ்ச்சி கிடைக்கும்? சுமன் கிட்டே, அவளைக் காட்டி விட்டு இருக்கேன். ஒரு நாளாவது அவளை… என்று லிஸ்டே வைத்து இருக்கான்.
அன்னைக்கு நைட் கூட, அவன் கிட்டே தான் மாட்டி விட்டேன். இவ எஸ்கேப் ஆகிட்டா. அவன் எங்கே போய்த் தொலைஞ்சானே தெரியலை. ச்சே!… எப்படி பிளான் போட்டாலும் எஸ்கேப் ஆகிடறா.” என்றாள் சோனா.
“இங்கே பார் இனி, இது மாதிரி என்ஜோய் செய்ய வேண்டும் என்றால், நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு போ… டோன்ட் வாண்ட் அனதர் எபிசொட் ஆப் திஸ்.” என்ற கஜா கோபத்தோடு, உள்ளே சென்று விட்டார் .
“இந்த ஆள் எல்லாம் சமூகத்தில் பெரிய மனிதன். தவறு செய்யும் இளைய தலைமுறையைத் திருத்தி நல்வழிபடுத்துவது தான் பெரியவர்களின் கடமை.
ஆனால், ஊர் உலகத்தில் சில ஜென்மங்கள் இவரைப் போல அலைவதால் தான், தவறு செய்பவனுக்கு, வக்காலத்து வாங்கி கொண்டு நாலு கேடு கெட்ட ஜென்மங்கள் வெளியே வருகிறது.
பொண்ணை நாலு காட்டுக் காட்டி, அடக்கறதை விடுத்து, பெரிய அட்வைஸ் செய்யறார்… அதுவும் எப்படி!… ‘கெஸ்ட் ஹவுஸ்ல ஆட்டம் போடுன்னு’… கர்மம்…” என்று தலையில் அடித்துக் கொண்டார்கள் அந்த வீட்டின் வேலையாட்கள்.
அதே சமயம் சூர்யா, சிவகாமியின் பேட்டியைப் பார்த்து விட்டு ஒரு நம்பருக்கு கால் செய்தான் .
“ஹலோ!… ருத்ரா ஹியர்!…” என்றது எதிர்முனை.
“ஹாய் ருத்ரா!… திஸ் இஸ் சூர்யா!… கேன் ஐ டாக் டு யு இன் பெர்சென்?” என்றான் சூர்யா.
“ஹாய் சூர்யா!… ஆக்சுவலி, ஐ அம் நியர், யுவர் ஹவுஸ்… வில் பி தேர் என் டென் மினிட்ஸ்… சி யு…” என்ற ருத்ரா, அடுத்த பத்தாவது நிமிடம் சூர்யாவின் முன் அமர்ந்து இருந்தான்.
“வாட் டூ யு லைக் டு ஹாவ்?” என்றான் சூர்யா.
“எனிதிங் வில் பி ஒகே…” என்றவனுக்கு சுடச் சுட சமோசா, புதினா சட்னி, தயிர் வடை பரிமாறப்பட்டது .
“சா யுவர் கிராண்ட்மா இன்டெர்வியூ. எல்லா ஆங்கிளையும் கவர் செய்துட்டாங்க. மார்வெலஸ். பென்டஸ்டிக் ஸ்பீச். லைக் டு மீட் ஹிர் சம்டைம்.” என்றான் சூர்யா.
“ஆல்வேஸ் வெல்கம் சூர்யா… உன்னை மீட் செய்யணும்ன்னு சொல்லிட்டே இருந்தாங்க. தென் என்ன விஷயமா பேசணும் என் கிட்டே?” என்றான் ருத்ரா.
சில பத்திரங்களை ருத்ராவிடம் கொடுத்த சூர்யா, “ இந்தர் இண்டஸ்ட்ரீஸ் என் பங்குகள் ருத்ரா இது.;வாண்ட் டு கிவ் இட்டு யு…” என்றான் சூர்யா.
“ஒரு கண்டிஷன். வில் pay போர் திஸ்..” என்றான் ருத்ரா.
“நாட் நெஸ்ஸ்ஸரி… இது என் கிப்ட். எங்க வீட்டுக்கு, மாப்பிள்ளையா வரப் போறவருக்கு…” என்றான் சூர்யா, புன்னகையுடன்.
“வாட்… கம் அகைன்…. இப்போ என்ன சொன்னீங்க சூர்யா?” என்றான் ருத்ரா, திகைப்புடன்
“டோன்ட் ஆக்ட் ருத்ரா!…. ஐ நோ, நீயும், சந்திராவும் லவ் செய்வது. அன்னைக்கு உன் கூட இருந்ததினால் தான், அவ கடத்தப்படலை. உன்னுடன் இல்லாமல் இருந்து இருந்தால், இந்நேரம்… ஐ காண்ட் இமாஜின்.
சொல்லு, எப்போ வந்து உங்க வீட்டில், முறைப்படி பேசட்டும்?” என்றான் சூர்யா.
“சாரி… சூர்யா!… ஐ திங்க் யு ஆர் மிஸ்டேக்கேன். சந்திராவும், நானும் குட் பிரண்ட்ஸ். பள்ளியிலிருந்து சந்திராவை தெரியும். இன்னும் சொல்லப் போனால், குட் தோழி அவ மட்டும் தான். எங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே சூர்யா.
நாம எல்லாம் ஒன்றாய் வளர்ந்தவங்க தானே!… அவ மேல் இருப்பது பாசம் தான்.
அன்றைக்கு நான் சந்திராவோடு இருந்தேன். ஆன, அவ என் கூட இல்லை. ஷி இஸ் இன் லவ்… பட் அவ, லவ் செய்வது என்னை இல்லை.
இன்னும் சொல்லப் போனா இவ, தான் தொறத்தித் தொறத்தி லவ் செய்துட்டு இருக்கா. அவன் சைடு நோ ரெஸ்பான்ஸ். உன் சிஸ்டர் பத்தி தெரியாதா!…
பிடிச்சா உடும்பு புடி ஆச்சே!…” என்றான் ருத்ரா.
“அவ, உன்னை லவ் செய்யறான்னு தான், நான் நினைச்சேன். எப்பவுமே அவ கூட, நீ தானே இருக்கே!…” என்றான் சூர்யா.
“அந்தக் கொடுமையை ஏன்பா கேட்குறே!… உன் தங்கைக்கும், அவ லவர்ருக்கும் இடையே, தரகர் வேலை, டிரைவர் வேலை பார்த்துட்டு இருக்கேன். சும்மா சொல்லக் கூடாது கிடைச்சான், ‘ஒரு மாங்கா மடையன்னு’ படுத்தி எடுக்குறா.
என்னை அதுங்க, ரெண்டு கிட்டே இருந்தும் காப்பாத்திடு சூர்யா. உனக்குக் கோடிப் புண்ணியமா இருக்கும். வடிவேலு சொல்றா மாதிரி, ‘முடியலை!” என்றான் ருத்ரா.
“யாரை லவ் செய்யறா?” என்றான் ருத்ரா.
“அவன் என் பேட்ச் மேட்… ரொம்ப நல்லவன். இப்போ என் கிட்டேத் தான் வேலை பார்க்கிறான்…
சேதுபதி சார் தெரியும்ல!… கருணா மாமனார்? சேது சாரின், தம்பி மகன் ரகு…” என்றான் ருத்ரா .
“மதுரா, அண்ணன் ரகுவா?” என்றான் சூர்யா, அதிர்ந்து போய்.
“மதுராவை உங்களுக்குத் தெரியுமா சூர்யா?” என்றான் ருத்ரா.
“ஏன் தெரியாம!… இன்னேரம் இந்த வீட்டின் ராணியாகி இருக்க வேண்டியவ… என் பெஸ்ட் பிரண்ட்…” என்றான் சூர்யா.
“நீங்க, மதுராவை லவ் செஞ்சிங்களா சூர்யா?” என்றான் ருத்ரா திகைப்புடன்.
“அதை ஏன், கடந்தக் காலத்தில் கேட்கறீங்க?… ஸ்டில் ஐ லவ் ஹெர்… ஐ வாண்ட் டு மாரி ஹெர்…” என்றான் சூர்யா.
“தட்ஸ் சோ குட் நியூஸ். அண்ணன், தங்கை ரெண்டு பேரும் ஒரே வீட்டில் ஆள் பார்த்தாச்சு. பட், ஐ வாண்ட் டு டெல் யு சம்திங்..” என்றவன் சோனா, சுமன், கருணா ஆங்கில் சொல்லி முடித்து, அவர்கள் நாலு கோடி கொடுத்து, மதுராவை மீட்க போவதையும் சொன்னான்.
“டூ லேட் ருத்ரா… ஆல்ரெடி அந்த ப்ரோப்லம் எல்லாம் நான் சால்வ் செய்துட்டேன். சோனாவைத் தூக்கி வந்து, நாலு காட்டுக் காட்டி சைன் வாங்கியாச்சு.
இவளுக்கெல்லாம் நாலு கோடி கொடுப்பதற்கு, பதில் ரெண்டு கிராமத்தை அந்தக் காசில் வாழ வைக்கலாம்.” என்றான் சூர்யா.
“உங்க அதிரடி, சரவெடி எல்லாம் நமக்கு வராது. அதற்குக் கருணா தான் லாயக்கு. ரொம்ப நாளா கேட்கணும்னு இருந்தேன். நீங்களும் கருணாவும் எந்த வகையிலாவது ரிலேட்டடா?
ஏன் கேட்கிறேன் என்றால், உங்க ரெண்டு பேர் திங்கிங், ஆக்ஷன், பிஹேவியர், குணம் கூட ஒரே மாதிரி தான் இருக்கு. அதான்.” என்றான் ருத்ரா.
“யா… நிறைய பேர் இதே கேள்விக் கேட்டு இருக்காங்க…. பட், நோ என் பாரண்ட்ஸ்க்கு நான் பையன் ஒருவன் தான். நாங்க ரெண்டு பேரும் திக் பிரெண்ட்ஸ். காலேஜில் அவனுக்கு நான் சீனியர்.
நாங்க அடிச்ச லூட்டிக்கு அளவே இல்லை…” என்றான் சூர்யா.
“ஒன் மோர் திங்… ரகு, சந்திரா லவ் ஏற்க மறுத்துட்டே இருக்கான். ஸ்கூல் டேஸ்ல இருந்தே, இப்படித் தான் இருக்கான். பணக்காரங்களை பார்த்தா ஒரு அவெர்ஸன்.
இன்னும் சோனா, மதுரா லைப்க்கு வந்தப் பிறகு ரொம்ப அதிகமாகவே போச்சு. சோ, நீங்க நேரா சங்கரனை பிடிங்க. அவருக்குப் பயந்தவன் இவன். பாரண்ட்ஸ் பார்க்கும் பெண்ணைத் தான் கட்டுவனாம். அதுவும் கண்ணை மூடிட்டு.
சோ, சங்கரனை பர்ஸ்ட் கார்னெர் செய்யுங்க. அவன் தானா சிக்கிடுவான்.” என்றான் ருத்ரா.
“சரி, சந்திரா தான் பிரண்ட். வேறு பெண் பார்த்து முடிக்கட்டுமா?” என்றான் சூர்யா.
“ஜெயில் களித் தின்ன எல்லாம் ஆசை இல்லை சூர்யா…” என்றான் ருத்ரா.
“வாட்!…. why?..” என்றான் சூர்யா.
“நம்ம வருங்கால வீட்டுக்காரம்மா, வேறு எந்தப் பெண்ணையாவது பார்த்தேன் என்று தெரிஞ்சா டின் கட்டிடுவாங்க. போலீஸ் வேற. சோ, ஜெயில் களி கன்போர்ம்.
உங்களுக்குத் தெரியும், ACP. ராஜேஸ்வரி, ஒரு விதத்தில் என் முறைப்பெண். சோ மேடம், கையில் நான் ஆல்ரெடி சரண்டர்.
அவ எங்களுக்கும், கஜாவிற்கும் நடுவே வரது பாட்டிக்குப் பிடிக்கலை.
அந்த ஆள் கிட்டே நீதி, நேர்மை, நியாயம் எல்லாம் பார்க்க முடியாது. இவ ரொம்ப ஸ்ட்ரிக்ட். நாங்க செயல்படும் முறை, அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை. அதான் போஸ்டிங் இதுவரை நார்த்தில் இருந்தது.
அவ பாரண்ட்ஸ்க்கு, இப்போ உடல் நலம் இல்லை. அதான் ட்ரான்ஸபெர் வாங்கிட்டு வந்து இருக்கா. வந்த ரெண்டே மாதத்தில் சோனாவால், மீண்டும் இந்தச் சண்டையில் இன்வோல்வ் ஆகிட்டா.
பாட்டியும், இந்த வருஷமே எங்களுக்கு மேரேஜ் செய்யணும்ன்னு குறியா இருக்காங்க. பார்ப்போம்.” என்றான் ருத்ரா, புன்னகையுடன் .
“ஒகே… ஒகே ஆல் தி பெஸ்ட்…” என்றவனோடு மேலும் சற்று நேரம் பேசி விட்டு ருத்ரா கிளம்பினான்.
தவம் தொடரும்…





