46
அதே நேரம், சென்னையில் ஏதோ ஒரு கிளைச் சாலையில் , காரின் உள்ளே,
“எங்கே கூட்டிட்டுப் போறே?” என்றான் விஜய், சிறிது நேரம் கழித்து.
“எ கரெக்ஷன் மாம்ஸ்!… கூட்டிட்டுப் போலை… கடத்திட்டுப் போறேன்!…” என்றாள் மதுரா, ‘மனோகரா’, பட ஸ்டைலில்.
“என்ன, வாய் ரொம்ப நீளுது?” என்றான் விஜய்.
“சாரி மாம்ஸ்!… இன்ச் டேப் இல்லை. சோ, எவ்வளவு நீளம் என்று தெரியலை.” என்றாள் மதுரா அலட்டிக் கொள்ளாமல்.
விஜய் பக்கம் தலையைத் திருப்பிக் கண் அடித்தாள். அதைக் கண்ட விஜய் ஒரு நொடி ஜெர்க் ஆனான்.
“வெட்கம், மானம் எதுவுமே இல்லையா!.. அக்காப் புருஷன் கிட்டே, இப்படிப் பேச?… வண்டியை நிறுத்துடீ…” என்றான் விஜய்.
விஜய் பக்கம் ஒரு லுக் விட்ட மதுரா, ‘ஓஹ் சார்!… அப்படி வாரீங்களா!’ என்று நினைத்துக் கொண்டவள்,
“நீங்கச் சொன்ன வெட்கம், மானம் எல்லாம் டன் கணக்குல நம்ம கிட்டே இருக்கு. உங்களுக்கு வேணுமா? இல்லாதவங்க தான் கேட்பாங்க. நீங்கக் கேட்குறத்தை பார்த்தா, urgent தேவைப் போல இருக்கு.” என்றவளைக் கண்டு, விஜய் பற்களை நற நறவென கடித்தான். அவனால் அப்போதைக்கு முடிந்தது அது மட்டும் தான்
“ஆமாம் மாம்ஸ்… இன்னொரு விஷயம். அன்னைக்கு ஆஃபிஸில் என் எருமை அக்கா!… நல்லா ட்ரக் எடுத்துட்டு,
‘நீங்கத் தாலியேக் கட்டலை.
கழுத்தின் அருகேக் கூடத் தாலியைக் கொண்டே வரல.
சொர்ணா மம்மித் தான், தாலியை கட்டுச்சு’ என்று போதையில் உண்மையை புட்டுப் புட்டு வைத்தாளே!…
நீங்க என்னவோ, ‘அக்கா புருஷன், சொக்கா புருஷன்னு’ டயலாக் விட்டுட்டு இருக்கீங்க!
தாலிக் கட்டினாத் தான், மாம்ஸ் புருஷன் ஆக முடியும்.
நீங்க, எந்த வகையில், ‘சோனாவுக்கு புருஷன்’ சொல்லுங்க. இல்ல எதுக்கு கேக்குறன்னா… ஒரு ஜென்ரல் நாலெட்ஜ் வளத்துக்கலாம்னு தான்.
என் அக்காவும் விடாம, ‘விக்கிரமாதித்தன் வேதாளத்தைப்’ பிடிக்கப் போன, கதைக் கணக்கா, நாலு வருசமா சிம்ரன் மாதிரி,
‘நிலவைக் கொண்டு வா!..
கட்டிலில் கட்டி வை!..’ என்று மதுரா, ‘அனுராதா ஸ்ரீராம்’ ரேஞ்சுக்கு, ஹை பிட்சில், காரில் பாடியே காண்பிக்க, விஜய் பேய்விழி விழித்தான்.
“என்று விடாம பாடிட்டு இருக்கா. சார்வாள் ரூம், ‘இரும்புக் கோட்டையாய் திறக்கவே’ இல்லையாமே!… நான் சொல்லைப்பா நீங்க… தொட்டு, சாரி தொடாம, தாலிக் கட்டிய… சாரி தாலிக் கட்டாத மனைவி!….
வெயிட்!… வெயி!ட்… தாலிக் கட்டினா தான்பா எங்க ஊரில், எல்லாம் மனைவி!… இது எந்த விதம்?
இந்த லட்சணத்தல, நீங்க அக்கா புருஷன்!… உங்களை நாங்க, வலை வீசிப் பிடிக்கறோம்!… சும்மா வாங்க பாஸ்!… காமெடி பண்ணாம.” என்றவளைக் கண்டு விழித்தான் விஜய்.
“அப்புறம் ஏதோ…. ஹ்ம்ம்!… நியாபகம் வந்துடுச்சு. அவ என் அக்கா!… வாயில் ஏதாவது வந்துட போகுது விஜய். அவ மேல, ‘கொலை வெறியில்’ இருக்கேன்.
இப்படி லூசுதனமா ஏதாவது பேசி, என் கிட்டே வாங்கிக் கட்டிக்காதீங்க.
ஆண்டவன் படைக்கும் போது, மூளைன்னு ஒரு பொருளை, மண்டைக்குள்ள வச்சு படைச்சான்ல, அதை வச்சு வேற ஏதாவது பெட்டரா யோசிங்க. வந்துட்டாரு, அக்கா புருஷன் சொக்கா புருஷன்னு கடுப்பேத்துறதுக்கு!…” என்றவள் ரேடியோவை ஆன் செய்தாள்.
“போடாப்.. போடாப்…
புண்ணாக்கு!
போடாதே!… தப்பு கணக்கு.
பல கிறுக்கு, உனக்கு இருக்கு
இப்போ என்னா,
உன் மனக் கணக்கு?’ என்ற பாடல் ஒளிபரப்பாக, மௌன சிரிப்பில், மதுராவின் கண்களில் நீர் வர, விஜய் கொதி நிலைக்குச் சென்றான்.
சிரிப்பை அடக்கி, வேறு சேனல் வைக்க, அது,
‘காளை! காளை!
முரட்டுக் காளை நீதானா?
போக்கிரி ராஜா நீ தானா?
பாயும் புலியும் நீதானா?
பயந்து போவது சரிதானா?’ என்று வெறுப்பேத்தியது.
முகத்தை வேறு புறம் திருப்பி, சிரிப்பைச் சமாளித்தாள் மதுரா.
மீண்டும் ஸ்டேஷன் மாற்றப்பட்டது.
‘மச்சானா பாரடீ!
மச்சமுள்ள ஆளுடீ!
ஆளு ரொம்ப ஆழம்,
வாலு ரொம்ப நீளம்,
ஒட்டவே வெட்டணும் வாங்கடீ
அடக்கடி நாக்கை
அது ஒரு பேக்கு.
என்கிட்ட மோதினா
உடைப் படும் மூக்கு.’ என்று தத்துவ பாடல் ஒலிக்க, வண்டியை ஓரம் கட்டி நிறுத்திய மதுரா, அதற்கு மேல் முடியாமல் வயிற்றை பிடித்துக் கொண்டுச் சிரிக்க ஆரம்பித்தாள்.
கண்களில் நீர் வரும் அளவு அவளின் சிரிப்பு இருந்தது.
“மாம்ஸ்!… அப்படி பார்க்காதீங்க. சத்தியமா இதுக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லை!..
ரேடியோகாரங்களுக்கு போன் செய்து இப்படி, ‘சிட்சுவேஷன் சாங்’ போடச் சொல்லி நான் சொல்லவே இல்லை.
இப்படி முறைக்காதீங்க!… ஆனா, பாட்டைக் கேட்டு உங்க ரியாக்ஷன் சான்ஸ்சே இல்லை!… நீங்கப் பண்ற வேலைத் தாங்க முடியாம, கடவுளே இப்படி எல்லாம் பிளான் செய்யறார். மீ நோ இன்வோல்வ்மென்ட்.” என்று பொங்கிப் பொங்கிச் சிரித்தவளை கண்டு, வெகு நேரம் அவனால் கோபத்தைப் பிடித்து வைக்க முடியவில்லை.
ஆரம்பத்திலிருந்து கோபம் இருந்தால் தானே!…
கிண்டல் செய்வது அழகான பெண். அதுவும், ‘காதலி’ என்னும் போது கோபம் உள்ளே தைரியத்தோடு வர முடியுமா என்ன!
‘அழகான காதலி!…’ அங்குத் தான் விஜய்யின் சோதனை ஆரம்பானது மறுபடியும்.
‘இளையராஜா இசை போல்,
தபு சங்கரின் கவிதை போல்,
ரமணிச்சந்திரன் கதைகளின் ஒட்டுமொத்தக் காதல் போல்…’ உருவெடுத்துக் கிண்கிணியாய் சிரித்து கொண்டு இருந்தவளை அருகில் வைத்துக் கொண்டு, அவன் கட்டுப்பாடுகள் மெல்ல தகர ஆரம்பித்தது.
வீட்டுக்கு சென்றவள், உடைக் கூட மாற்றாமல், புடவையிலே காரை ஒட்டி கொண்டு இருக்க, அது விஜய்யை கொல்லாமல் கொன்று கொண்டு இருந்தது.
இரு கைகளாலும், ஸ்டேரிங் வீல் பிடித்து கொண்டு இருந்தவளின் புடவை விலகி, அழகான, வழுவழுப்பான இடை, அவன் கண்களுக்கு விருந்தாகிக் கொண்டு இருந்தது.
அந்த திருடனின் கண்கள், காண கிடைத்தவற்றைக் கடைக்கண்ணால் நன்றாகத் திருடிக் கொண்டு இருந்தான்.
அவனை மேலும் சோதிப்பது போல் ரேடியோ,
‘அன்பே! அன்பே!
கொல்லாதே!
கண்ணே,
கண்ணை கிள்ளாதே!
பெண்ணே! புன்னைகையில்
இதயத்தை வெடிக்காதே!
அய்யோ! உன் அசைவினில்
உயிரை குடிக்காதே!
பெண்ணே!… உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா! பிரம்மன் கஞ்சனடீ
சற்றே நிமிர்ந்தேன்,
தலை சுற்றி போனேன்
அடடா! அவனே வள்ளல்லடீ
மின்னலை பிடித்து, தூரிகை சமைத்து,
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடி பளிங்கை, ஆறடியாக்கி
சிற்பிகள் செதுக்கிய உருவமடி.
இது வரை மண்ணில்,
பிறந்த பெண்ணில்
நீ தான்… நீ தான்.. அழகியடி
இத்தனை அழகும். மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி’ என்று ரேடியோவில் பாடல் பாட, பாடலோடு உருகிக் கொண்டு இருந்தான் விஜய்.
அவனின் நிலை புரியாமல், காரை ஓரமாக நிறுத்தினாள் மதுரா.
ஏதோ ஒரு கிராமம் முடிந்து, கண்ணுக்கு எட்டிய வரை ஆள் நடமாட்டம் இல்லாத இடம்.
காரின் இன்ஜினை ஆப் செய்து விட்டு, விஜய் பக்கம் முழுமையாக திரும்பி அமர்ந்தாள்.
“சாரி விஜய்… உங்களை இப்படி, கூட்டி வரும் நிலை ஆகிடுச்சு. உங்க கிட்டே பேசனும். யாரோட இடைஞ்சலும் இல்லாமல், சில விஷயங்களை பேசி, க்ளியர் செய்யனும். கூப்பிட்டா நீங்க வரமாடீங்க. அதான் இப்படி.” என்றாள் மதுரா.
“உன் கிட்டே, பேச எனக்கு எதுவுமே இல்லை மதுராக்ஷி!… திரும்ப வீட்டுக்கு போ… வண்டியை எடு. இப்படி நாம, தனியா இருப்பதாய் யாராவது பார்த்தாங்கனா எனக்கு ஒன்றும் இல்லை.
நாளை திருமணம் ஆக போகும் பெண், உனக்குத் தான் கெட்டப் பெயர் வரும். கிளம்பு மதுராக்ஷி.” என்றான் விஜய், எங்கேயோ பார்த்தபடி .
“முடியாது விஜய். ஒரு வருஷம் எல்லோரும் சேர்ந்து என்னை நல்லா ஏமாற்றி இருக்கீங்க. யெஸ், நான் உங்க எல்லோர் பேச்சையும் கேட்காம வந்தது, என் stupidity தான். இல்லைன்னு சொல்லலை.
நான் நல்லது நினைக்க போய் நடந்தது என்னவோ வேறு. ஆனா, இதில் என் தப்பு என்ன இருக்கு?” என்றாள் மதுரா.
“உன் மேல, எந்த தப்பும் இல்லை தான். உனக்கு தெரியாம இருக்கட்டும் என்று நினைத்தோம்.
‘ignorance is bliss’ன்னு ஒரு பழமொழி உண்டு மதுரா.
சில விஷயங்கள் ஏன், எதற்கு, எப்படி நடந்தது, நடக்கிறது என்று தெரியாமல் இருப்பது தான் சில சமயங்களில் நல்லது. உனக்கு தெரியாமலே, எல்லா சால்வ் செய்து விடலாம் என்று நினைத்தோம்.
சுமன் உள்ளே வந்து விட்டதால், ‘உனக்கு தெரிந்து இருப்பது தான் பாதுகாப்பு’ என்று உன்னிடம் எல்லாம் சொல்ல வேண்டியதாகி விட்டது.
‘இப்படி ஒரு ஆபத்து இருக்கிறது’ என்று தெரிந்தால் நீயும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பாய் அல்லவா? உன்னை ஏமாற்றும் எண்ணம் எல்லாம் இல்லை…” என்றான் விஜய், பெருமூச்சை விட்டபடி.
“உங்களுக்கு நான் கேட்பது புரியவில்லையா?… இல்லை புரியாத மாதிரி நடிக்கீறீங்களா விஜய்!… தூங்கறவங்களை எழுப்பிடலாம். தூங்கறா மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது தான்…” என்றவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், கதவை திறந்து இறங்கப் பார்த்தான் விஜய்.
“சென்ட்ரல் லாக் போட்டு இருக்கேன் விஜய். வழக்கமா கதைகளில், ஹீரோ தான், ஹீரோயின் கிட்டே, இந்த டயலாக் சொல்வாங்க. இங்கேத் தான் எல்லாம் உல்ட்டாவா இருக்கே!…
சொல்லுங்க விஜய்.
உங்களுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்?
எதுக்காக என்னை பாதுகாக்கறீங்க? சோனா எதற்கு, என்னை டார்கெட் செய்யறா?
இதுக்கு முன்னாடியே, என்னை உங்களுக்கு தெரியும் அப்படி தானே!
உங்க பென்டிரைவ்வில் உள்ள பாட்டு, நான் என் காலேஜ் டேஸ் போது, சாரிடி வேலைக்காக, பாடியது.
ஒரே ஒரு முறை தான் அதை பாடினேன். என் வாய்ஸ் உங்க கிட்டே எப்படி?
நான் வெளியே பிரண்ட்ஸ் கூட சாப்பிட போனால், அவங்க பர்ஸ் காலி ஆகும் வரை, சாப்பிடுவேன் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?
நான், ‘பேய் மாதிரி ஓடுவேன்னு’ கூட சொன்னீங்க தானே!…
நான் ஓடி, எப்போ நீங்கப் பார்த்திருக்கீங்க?
ஆபீஸ்ல நிறையத் தடவை லஞ்ச் எடுத்து வராத போது, எனக்கு பிடித்த லஞ்ச் எப்படி வந்தது?” என்றாள் மதுரா, தவிப்புடன்.
“கண்டதை நினைத்து உளறாதே மதுரா!… அது உன் வாய்ஸ்ன்னு தெரியாது. கோ-இன்சிடென்ஸ். தேவை இல்லாம, நடந்ததிற்கு எல்லாம் வேறு சாயம் பூசாதே!… காரை எடு.” என்றான் விஜய்.
“எது உளறல் விஜய்? நான் கேட்பதா? இல்லை நீங்க, இப்போ சொல்லும் ரிப்ளையா?
எது உளறல்?
சரி இதை எல்லாம் விடுங்க. மேற்சொன்ன எல்லாம் கோ -இன்சிடென்ஸ் என்றே எடுத்து கொள்வோம்.
ஆபீஸ்யில், இப்போ மொட்டை மாடியில் நடந்தது என்ன விஜய்? அதற்கு என்ன பெயர் வைக்க போறீங்க?
நான் கிட்டே வந்தா, நீங்க ரெஸ்ட்லெஸ் ஆகி, ‘ ஒரு மாதிரி முள்ளின் மேல் நிற்பது போலே’ தவிக்கறீங்க.
ஒரு பெண்ணாய், என்னால் உங்க தவிப்பு புரிஞ்சுக்க முடியுது விஜய். ஐ ஆம் மேக்கிங் யு ரெஸ்ட்லெஸ். ஆனா, எப்போ, எப்படின்னு தான் புரியலை.
உங்கக் கிட்டே, நான் எந்த விதத்திலேயும், உங்களை அட்டராக்ட் செய்யணும் என்று என்றுமே நடந்தது இல்லையே!…. பிறகு எப்படி!
சோனா சொல்லியது போலே, நமக்குள் இருப்பது affair இல்லை தான். ஆனா, attraction இருக்கு. அதை, இத்தனை மாதமாய் மறைத்தும் இருக்கீங்க விஜய்.
சுபா எல்லா விஷயத்தையும் சொல்லிய பிறகு, யோசித்து பார்த்தேன். பிறகுத் தான், உங்க நடவடிக்கையில் உள்ள பல்வேறு முரண் தெரியுது.” என்றாள் மதுரா.
“லுக் மதுரா!… நானும் மனிதன் தான். உணர்ச்சிகள் உள்ளவன் தான். ஒரு அழகான பெண், அருகே நிற்கும் போது, அந்த அளவு, அணைத்து நிற்கும் போது எல்லா ஆண்களும் எப்படி உணர்ச்சி வசப்படுவாங்களோ, அப்படித் தான் ரியாக்ட் செய்தேன்.
இட்ஸ், ஜஸ்ட் எ லஸ்ட்!….
காமம்!…
ப்ரீயா ஒரு பெண்ணை அணைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால், தடவிப் பார்க்க தோன்றியது. செய்தேன். இது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.” என்றான் விஜய், தோளைக் குலுக்கி விட்டெறியாக .
“ஏன் விஜய், உண்மையை சொல்வது அவ்வளவு கடினமா உங்களுக்கு?…. எதற்கு, உங்கக் கேரக்டர்ரை இப்படி நீங்களே, ‘Character assasination’ செய்யறீங்க?
காதுல பூச் சுத்திட்டு, எவளாவது இருப்பா, அவக் கிட்டே இந்த மாதிரி லூசுத்தனமனா விளக்கங்களை சொல்லுங்க.
இந்த வேலையை, ‘சுமன் செய்யறான்னு சொல்லுங்க’ யாராய் இருந்தாலும் நம்புவாங்க. ஆனா, யார் சத்தியம் செய்தாலும், நம்ப முடியாது விஜய்.
ஊர் உலகத்துக்கு, உங்க மனைவி சோனா… அவ மேல விழுந்து பழகியே நீங்க அவளைத் தொடலை… இதுல என்னையத் தான் அப்படி நினைச்சு தொட்டு விடப் போறீங்களா என்ன!…
சுமனிற்கு, என் மேல் இருப்பதற்கு பெயர் தான் காமம். உங்களுக்கு என் மேல் இருப்பதற்கு பெயர் காதல். யு ஆர் இன் லவ் வித் மீ விஜய். அது உங்களை சுற்றி இருக்க எல்லோருக்கும் தெரிந்து இருக்கு. சோனா உட்பட…” என்றவளைத் தடுத்த விஜய்,
“வாட்!…. லவ்வா!… அதுவும் உன் மேலா?… பெஸ்ட் ஜோக் ஆப் தி சென்சுரி.
இட்ஸ் ஜஸ்ட் லஸ்ட். பிளைன், சிம்பிள் லஸ்ட். இந்த, ‘தெய்வீகமான, ஹாப்பிலி எவர் ஆப்டர், தேவதாஸ் ரேஞ்சுன்னு’ நீயே கற்பனை வளர்த்துக்காதே!….” என்றான் விஜய், நக்கலாக.
“எனப் விஜய்… இப்படி பேசாதீங்க. நாராசமா இருக்கு கேட்க. பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும், உண்மை ஆகிடாது.” என்றாள் மதுரா கடுப்பாக.
“இது என்னடா வம்பா போச்சு!… என் உணர்ச்சிகள் பற்றி, எனக்குத் தெரியும். அதற்கு லவ்ன்னு வர்ணம் பூச, நீ ட்ரை செய்யரீனா, அது உன் தலைவலி.
ஆமாம், அது என்ன நான் என்னவோ, ‘பெரிய உத்தமன் மாதிரியும், ஹரிச்சந்திரன், ஸ்ரீராமன் xerox copy போலவும்’ build up கொடுக்கறே டார்லிங்!
மாமா, அந்த அளவு எல்லாம் நல்லவன் இல்லை கண்ணு. ‘பொண்ணு மேட்டர்ன்னு’ வரும் போது, எல்லோரும் துச்சாதனன் தான். நான் முக்கியமா, உன் விஷயத்தில் ரொம்பவே.
ஏதோ ரிலேட்டிவ் மகள் ஆகிட்டியேன்னு, அமைதியா டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்றேன் செல்லகுட்டி. இல்லைன்னா எப்பவோ தூக்கிப் போய் மேட்டர் முடிச்சு இருப்பேன். என்னமா அப்படி ஒரு ஷாக் லுக் தரே!.
அதான்மா ரேப்… ரேப்… சினிமாவில் வில்லன் செய்வானே!… அது… வண்டியை எடு. தேவை இல்லாத விஷயம் எல்லாம் பேசி, என்னை மிருகமாக்கி விடாதே!….” என்ற விஜய் அதிர்ந்தான்.
மதுராவின் கை, அவன் கன்னத்தைப் பதம் பார்த்து இருந்தது.
விஜய்யின் சட்டையை, இரு கைகளாலும் கொத்தாய் பற்றியவள் அவனை உலுக்கியவாறு, “ஏன்டா!… இப்படி பேசி என்னை கொல்றே!… நீ நல்லவன்ன்னு தெரியும். எனக்காக உன் கேரக்டர்ரை ஸ்பாயில் செய்ய நினைக்காதே! என்னால தாங்க முடியல.
ரேப் செய்ய நினைக்கிறவன் தான், ஒரு வருசமாய் காப்பாற்றுவானா?
எத்தனை நாள் ஆபீஸ் மீட்டிங், ரவுண்ட்ஸ், சைட் விசிட்ன்னு உன் கூடத் தனியா வந்து இருக்கேன் இந்த ஒரு வருஷத்தில்!… அப்போ எல்லாம் ஏன்டா அமைதியா இருந்தே!
என்னை கெடுக்க நினைப்பவன், சுமன் என்னை ஏதாவது செய்யட்டும்ன்னு, விட்டுத் தொலைக்க வேண்டியது தானே!…
உன் பார்வை காமுகன் பார்வை இல்லை. இந்தக் கண்ணில் இருப்பது காதல் விஜய்.
இதோ, இப்போ என் கண்ணைப் பார்க்க முடியாமல், தலையைத் திருப்பிக் கொள்கிறாய் பார்… ஏன், நீ சொல்வது பொய்ன்னு உனக்கே நல்லா தெரியும் விஜய்.
அந்த ஆபீஸ் அறை சவுண்ட் ப்ரூப், கடினமான சுவர், கதவு… உள்ளே இருந்து, நான் கத்தினாலும், வெளியே இருந்து யாரவது பார்த்தாலும் எதுவும் தெரியாது, கேட்காது.
அப்போ கெடுத்திருக்க வேண்டியது தானே!… என்னை ஏன் சுபாவோடு கராத்தேக் கிளாஸ் சேர்த்தே?
நைட், ஏன் பாடிகார்ட் மாதிரி பின்னால் வந்தே?….
இது எல்லாம் எந்த வில்லன் செய்வான்?
பெரியப்பா, பெரியம்மா சொன்னாங்களே, சோனாவால் ரெண்டு பெண், வாழ்க்கைப் போச்சுன்னு. அப்படி என்னையும் விட வேண்டியது தானே!.
இனி இப்படி பேசினீங்க, என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது.
சொல்லித் தொலை விஜய். உன் மனசில் உள்ள எல்லாத்தையும் சொல்லித் தொலை.
உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்?
சொல்லு…
சொல்லுடா!…
சொல்லு… சொல்லுன்னு கேட்கிறேன் இல்லை… சொல்லித் தொலை..” என்றவளின் கண்களில் கண்ணீர் வழிய, விஜய் அந்தக் கணத்தில் முடிவு எடுத்தான்.
“என்னடீ!… என்னவோ காதலி போலவும், சோனா மாதிரி, என் மனைவி போலவும், ரொம்ப தான் built up கொடுக்கற!… ஒரு தடவைச் சொன்னால் புரியாது உனக்கு?. எனக்குத் தேவை, உன் உடம்புத் தான்.
வாயால் சொன்னால் புரியாது என்றால், ஆக்ஷன் தான் சரி வரும் போல…” என்றவன் மதுரா அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரியாமல் அதிர்ந்து நோக்கும் போதே, இழுத்து அணைத்தான்.
அதிர்ந்து அவன் முகம் பார்த்து கொண்டு இருந்தவளை அணைத்தவன், அழுந்த முத்தமிட ஆரம்பித்தான்.
கைகள், அவள் உடம்பில் தாராளமான ஆராய்ச்சியில் ஈடுபட, இருவருக்கும் உலகம் மறந்து போனது.
எண்ணம், சுற்றி இருந்த உலகம், இருவருக்கும் மறந்து போக அவன் கைகளில், அவள் மலருடல், ‘நெருப்புத் தீண்டிய வெண்ணையாக உருக’ நெருப்பாய் மாறி, அவளை உருக்கிக் கொண்டு இருந்தான்.
ஆடையைத் தாண்டிய அவள் இடையில், அவன் கரங்கள் ஆராய்ச்சியில் ஈடுப்பட, இதழ்களோ, ‘அவள் இதழ் என்னும் தேனை பருகும் வண்டாகி’ இருந்தது.
அவள் மூச்சுக்குத் திணற, சற்று விலகியவன், இதழ் சிவந்து, ஆடை நெகிழ்ந்து விலகி, கண்கள் மயக்கத்தில் இருந்தவளைக் கண்டவன், மீண்டும் இழுத்து அணைத்து தன் ஆராய்ச்சியில் ஈடுபட்டான்.
அவன் வேகத்தைத் தாங்க முடியாதவளாய், துவண்டவளின் கரங்கள், அவனை விலக்க முயல, அதனைத் தடுத்த அவன் கரங்கள் அவளின் கரத்தினை சிறை செய்தது.
இருவரின் கைகள் பட்டு, ரேடியோ மீண்டும் விட உயிர்த்தெழ, மறுபடியும் இளையராஜாவின் இசை, அவர்களின் நிலைக்குத் தூபமிட்டது.
‘ஓம் நமஹ!
உருகும் உயிருக்கு
ஓம் நமஹ!
உயிரின் உணர்வுக்கு ஓம்
வான் வழங்கும் அமுதக் கலசம்
வாய் வழியே ததும்பி, ததும்பி வழியிதோ ஓ
தேன் பொங்கும் தெய்வ வடிவம்
தோள் தழுவித் தலைவன் மடியில் விழுந்ததோ!
மூங்கிலில் காற்று,
நுழைந்து மோகனம் பாடுதா!
நால்வகை நாணம்,
மறந்து நாடகம் ஆடுதா!
ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா!
ஆதியும், அந்தமும் வேர்வைகள் ஊறுதா!
நூலாடை விலகி… விலகி
நீரோடை பெருகி வழியும் வேளை
முத்தங்கள் வைத்ததும்
மூன்று உலகை மறந்த
நெஞ்சுக்கு ஓம்
செவ்விதழ் சேரும் போது
ஜீவன்கள் சிலிர்த்தது…’
‘காதல் இல்லா காமமும், காமம் இல்லா காதலும்’ என்றுமே வாழ்க்கைக்கு வண்ணம் சேர்க்காது. ஒரு நாணயத்தின் இரு பக்கமாய், இணைப் பிரியா மெல்லியக் கோடே இரண்டும்.
அதை விஜய் உணர்ந்தானா என்பது கேள்விக்குறியே!…
ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல், அவளை நெருங்கவோ, தொடவோ ஒரு ஆணால் முடியாது.
மதிப்பு, நம்பிக்கை, காதல் இல்லாமல், எந்தப் பெண்ணும், ஒரு ஆணை நெருங்குவதும் இல்லை, நெருங்க விடுவதும் இல்லை.
அது புரியாமல், அவனின் தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி, ‘மதுராவை விலக்க வேண்டிய கட்டாயம்’ என்று அவனுக்கு அவனாகவே போட்டுக் கொண்ட வட்டத்தில் நின்று, ‘காதலுக்கு அவன் காமத்தின் முகமூடி அணிவிக்க’ முயன்று கொண்டு இருந்தான்.
பல வருடக் காதல், பல வருடமாய், அவன் புதைத்து வைத்து இருந்த காதல், மதுராவின் அருகாமையில், அவன் தடைகளை உடைத்து வெளிவர, அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் தோற்றவன், கடைசி ஆயுதமாய், அந்த காதலையே பணயம் வைத்து, அதனை கொண்டே மதுராவை, தன்னிடம் இருந்து விலக்க, தான் அவளை அணைத்தது, முத்தம் இடுவது எல்லாம்.
ஆனால், அவன் மறந்து போனது எல்லை மீறுவதும், கட்டுப்பாடு அவன் இழப்பதும், மதுரா ஒருத்தியிடம் மட்டுமே என்பதை.
சில விஷயங்கள் ஏன் நடக்கிறது என்பது என்றுமே நம் அறிவுக்கு எட்டுவது இல்லை.
இருவர் வாழ்க்கை பயணத்தில் ஒன்று சேர வேண்டும் என்ற விதி இருந்தால், எந்தத் தடைகள் வந்த போதும், எத்தனை இழப்புகள் வந்த போதும், அவர்கள் சேருவது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று.
மதுராவின் வாழ்வுக்காகத் தான், ‘விஜய் வில்லன் வேஷம்’ போட துணிந்தது.
‘தன் மானத்தோடு விளையாடும், எந்த ஆண்மகனையும், பெண் ஏற்க மாட்டாள்’ என்ற குருட்டு நம்பிக்கையில், அவன் காய் நகர்த்தியது.
அந்தோ பரிதாபம்!
அவன் செயலே, அவனுக்கு எதிரியாக, மாறிக் கொண்டு இருந்தது. விதியும், அவன் எதிர்காலத்தில், மிகப் பரிதாபமாக, இருவரிடம் தோற்கப் போவதை, அதற்கான ஆயுத்தங்களை, அவன் செய்வதைக் கண்டுப் புன்னகைத்து கொண்டு இருந்தது.
எவ்வளவு நேரம் கழிந்ததோ, அவனுக்கே தெரியாது.
தன்னைச் சமாளித்து கொண்டு, அவன் அவளை விட்டு விலகிய போது, விதியின் ஆட்டம் ஆரம்பமாகி இருந்தது .
அவன் கைகளில், அவன் அணைப்பில் அதிர்ந்து, திகைத்து, குழம்பி, பதறி, உடல் நடுங்கிக் கொண்டு இருந்தவளைக் கண்டு, தன் மனதினை கல்லாகிக் கொண்டு விலகிய விஜய்,
“இப்போவது புரிந்ததா!.. இது லஸ்ட். எனக்கு உன் மேல் இருப்பது காதல், கத்திரிக்காய் எல்லாம் இல்லை. நான் ரசித்தது உன் மனதை அல்ல. எனக்கு தேவைப்பட்டது உன் மனது இல்லை.
இப்பவும் நம்ப மாட்டேன் என்று டயலாக் விடாதே!..
ஏதோ தெரிந்தக் குடும்பப் பெண் ஆச்சேன்னு இத்தோடு விடறேன். இனி என்னை நெருங்காதே!
மீறி நெருங்கினால், சேதாரம் உனக்கும், உன் பெண்மைக்கும் தான்.
புரிந்ததா?
இனி இது போல லூசுதனமா சீண்டி பார்க்காதே! இப்போவது ஜஸ்ட் கிஸ் தான். அப்புறம், ‘மொத்தமா போச்சேன்னு புலம்ப’ வேண்டியதாகி விடும். understand?” என்று வெளிபுறம் பார்த்தவாறு பேசிக் கொண்டு இருந்தவன், வெகு நேரம் அவளிடம் இருந்து பதில் வராது போகவே, அவளைத் திரும்பிப் பார்த்தவன், ஒரு கணம், ‘தன் கண் முன்னே காண்பது என்ன’ என்று புரியாமல், ஸ்தம்பித்து போனான்.
அவன் இதயம், ஒரு கணம் துடிப்பதையே நிறுத்தி விட்டது.
மதுரா, அவள் இருக்கையில் மயங்கிக் கிடக்க, அவள் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.
தவமிருப்போம்…





