arrow_back
என்ன தவம் செய்தேன்! 48
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 48 / 85

48

visibility 18
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

“அண்ணா!…
அண்ணா!…. ரிலாக்ஸ்…
அண்ணா!… என்னைப் பேச விடுங்க அண்ணா!…”என்று பலமுறை கெஞ்சிய பிறகே, விஜய், தன் புலம்பலை நிறுத்தினான்.

“அண்ணா!… அண்ணிக்கு ஒன்றும் இல்லை. அவங்க நல்லாத் தான் இருகாங்க.” முடிக்க விடவில்லை விஜய்.

“பொய்  சொல்லாதே!..  என்  மது,  என்னை  விட்டுப்  போய்ட்டா…. அவளை  நானே  கொன்னுட்டேன். என்னைச் சமாதானம் செய்யப், பொய் சொல்லாதே!…
அவ என்னை விட்டு, ஐயோ!… என் மதுவை நானே கொன்னுட்டேனே!
மூக்கிலிருந்து  ரத்தம் வந்தது.

தண்ணீர் தெளிச்சும் மயக்கம் தெளியலை… ஏன் இப்படி  பொய் சொல்றே!…. நீ படிச்சு டாக்டர் ஆகியது மாதிரி தெரியலை… காசு கொடுத்தா!… சொல்லு…” என்று மிருதுளாவை, ஒரு வழி செய்தான்.

“அண்ணா!… நான் சொல்வதை…” என்று மிருதுளா முடிக்கவில்லை.

“அவளுக்கு  என்ன…  பிரைன் டுமெர், பிளட் கான்செர்,  இதய வால்வு பழுது, கிட்னி டிசீஸ்,  platelet குறைவு,  ரத்தம் உறைவது குறைவு,  ரத்த நாளம் ஒழுங்கா  இல்லாம இருக்கிறது,  ஹீமோபிலியா… இதில் எது காரணம்?

நெட்ல, இவளோ ரீசன் போட்டு இருக்காங்க… ஒன்றும் இல்லைன்னு சொல்றே!
அவளை  எங்கேக்  கூட்டிப் போகணும். அமெரிக்கா?… ஆஸ்திரேலியா?…. எத்தனை கோடி  செலவு ஆகும்?… உண்மையைச் சொல்லு…

எனக்கு அவ பிழைக்கணும்.  வேறு  எதைப்  பற்றியும்  எனக்குக் கவலை இல்லை. இல்லை  வேர்ல்ட்  பெஸ்ட்  டாக்டர்  வரவழைக்கணுமா?

ஏற்பாடு  செய்யறேன்  சொல்லு.  உன்  அண்ணா  பிச்சைக்காரன் இல்ல. என்  தலையை  அடமானம்  வைத்தாவது,  என்னால்  பணம்  புரட்ட  முடியும். என் மதுராவின் உயிரைக் காப்பாற்று மிருது….” என்றவனை கன்ட்ரோல்  செய்வதற்குள்,  மத்த  இருவருக்கும்  உயிர்  போய், உயிர் வந்தது  என்றால்  மிகையல்ல.

எதையும்  பேசாத  மிருதுளா,  விஜய்யின்  கையைப்  பிடித்து  இழுத்து சென்று   மதுரா   இருந்த   அறைக்குள்,  அவனைக் கொண்டு சென்றாள்.

அவசர சிகிச்சை பிரிவிலிருந்து,  சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு இருந்தாள் மதுரா.

தலை  முதல்  கால் வரை, தன்னவளை வெகுவேகமாகக் கண்களால் ஆராய்ந்த விஜய், அதற்கு  மேல்  முடியாமல்  குனிந்து  அவளை  அணைத்து கொண்டான்.

“சாரிடீ!…

ஐ லவ் யு!…

நீ  இல்லாமல்  இன்னொரு  முறை என்னால் வாழ முடியாதுடீ… உன்னைப்  பிரிந்து,  உன்னை  இழந்து,  நான்  பட்ட  வேதனை  போதும்டீ…

நீ   தாண்டீ   எனக்கு   எல்லாமே!… என் கிட்டே வந்துடுடீ… என்னை விட்டுப் போகாதே!.. காரில் நான் சொன்னது எல்லாம், பொய் தான்டீ. உன்னைத்  தவிர,  வேறு  எவளையையும்  நான் விரும்பியது இல்லை.
வேறு  ஒருத்தியின் நிழலைத்  தொட்டது  இல்லை.

மனசு  முழுக்க,  உன்  மேல்  உள்ள   காதல்  தாண்டீ,  என்னை இன்னும் வாழ வைச்சுட்டு இருக்கு. உன்   உயிர்  பிரியும் முன்,  என்  உயிர் போய்டும். என்னை விட்டுப் போகாதே!….” என்று கதறியவனை, எப்படித் தடுப்பது  என்று  புரியாமல்,   கண்   கலங்கி   நின்றார்கள்   மற்ற   இருவரும்.

“அண்ணா!… அண்ணா!… அண்ணிக்கு எதுவுமே இல்லை அண்ணா. அவங்க மேல ப்ரோமிஸ். அவங்க நல்லாத் தான் அண்ணா இருக்காங்க. என்னை நம்புங்க அண்ணா…
இப்போ தூங்கிட்டுத் தான் இருக்காங்க…. ரிலாக்ஸ் அண்ணா…” என்றாள் மிருதுளா,  அவன்  தோளில்  கை  வைத்து.

கண்ணீர் வழிய நிமிர்ந்தவன், “ப்ரோமிஸ்?… சத்தியமா சொல்றியா மிருது?
மதுக்கு  எதுவும்  இல்லையே!… 
ஆனா,  மயக்கம், மூக்கிலிருந்து ரத்தம், நெட்ல என்னலாமோ போட்டு இருந்தார்களே!.
நீ எதுவுமே இல்ல என்கிறாய்…  பொய் சொல்லாதேமா!…” என்றான் விஜய், அவள்  கைகளைப்  பிடித்துக் கொண்டு.

“அண்ணா!…  நல்லா கவனிங்க. நீங்கச் சொன்னது எல்லாம், மத்தவங்களுக்கு  இருக்கலாம்.  அண்ணிக்கு இல்லை. அந்தக் காரணங்களால்  மட்டும்  மயக்கம்,  மூக்கில்  ரத்தம்  வருவதில்லை.

அது  எல்லாம் கிரிட்டிக்கல் ஸ்டேஜ். அண்ணிக்கு அது இல்லை. ரொம்ப நாளா, ஸ்ட்ரெஸ், கவலை, மன அழுத்தம்  அதிகமாக இருந்து இருக்கு.
‘anxiety’ என்று சொல்வோம். நிறைய டென்ஷன், மன அழுத்தம், சரியா தூங்காம இருக்கிறது.

இது   எல்லாம்  சேர்ந்து,  இதயத்திற்கு,   அதிக ஸ்ட்ரெஸ் தரும். இதயத் துடிப்பு  அதிகமாகி,  ரத்த  நாளங்களில்  அதிக   அழுத்தம்  சேரும்.
‘ஹைப்பர் டென்ஷன்’  என்பார்கள்.  மூக்கில்   இருக்கும்  ரத்த  நாளங்கள்,  ரொம்ப  மெல்லியதாய்  இருக்கும்.

அவைகளால்  இந்த  அழுத்தத்தைத்  தாங்க முடியாது. இன்று அந்த ஸ்ட்ரெஸ்,  anxiety,  ஹைப்பர் டென்ஷன், அதிர்ச்சி தாங்க முடியாத அளவைக்  கடந்து இருக்கு.

மூளையால் அதைத் தாங்க முடியவில்லை. தன்னைத்  தானே  பாதுகாத்துக்  கொள்ள,  உடல்  எடுக்கும்  நடவடிக்கை   தான் இந்த  மயக்கம்.
‘ஏதோ சரி இல்லை’ என்று எச்சரிக்கை கொடுக்கும் விதமாகத் தான் மூக்கிலிருந்து  ரத்தம்  வருவது.

நல்லா தூங்கி  எழட்டும்.எல்லா டெஸ்டும் செய்துட்டோம். வேறு எந்த நோயும் இல்லை. அவங்க உயிருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

ஷி  இஸ்  perfectly  ஆல்ரைட்  அண்ணா.  இந்த  அளவுக்கு,  நீங்கப் பயந்து நடுங்கும்  அளவு,  எல்லாம் எதுவுமே இல்லை. தூங்கி எழுந்தா சரி ஆகிவிடும்.”  என்றாள் மிருதுளா.

“அப்போ இவ இந்த நிலையில் இருப்பதற்கு, நான் தான் காரணமா? என்னால் தான், என் மது இப்படி பேச்சு மூச்சு இல்லாம இருக்காளா?” என்றான்  விஜய்.

“இல்லை அண்ணா… ரொம்ப நாளாகவே அவங்க anxiety, ஹைப்பர் டென்ஷன்,  கவலை, மன  அழுத்தத்திலிருந்து  இருக்காங்க. 
சரியா தூங்கறது  இல்லை  போல்   இருக்கு!… 
இன்று வழக்கத்தை விட மிக அதிகம்.  அவ்வளவுத்  தான்.

இது  நோய்  எல்லாம்  இல்லை.  lifestyle  மாற்றம் தான்.  அவங்க  சந்தோசமா,  நிம்மதியா  இருந்தாலே  போதும். வேற  எந்த   ட்ரீட்மென்ட்  தேவை   இல்லை.”  என்றாள் மிருதுளா.

உறங்கிக்  கொண்டு  இருக்கும்  மதுராவை,  சற்று  நேரம்  பார்த்துக் கொண்டு இருந்தவன், “நீ சொல்வது சரி தான்மா. இவ சந்தோசமா இருக்க வேண்டியவ தான்… ஆல்வின்!…
உடனே  மதுராவிற்கு  ஏற்ற  நல்ல மாப்பிளையைப்  பார்த்து, விசாரித்துச் சொல்லு…
இவளைச் சந்தோசமா, ராணி மாதிரி பார்த்துக்கணும்… உள்ளங்கையில்  வைத்துத்  தங்குபவனாக  இருக்க   வேண்டும்…
இவளைக் கஷ்டப்படுத்தினால், He will be answering to me.

இவளுக்குக்  கூடவே  இருந்து  பாதுகாப்புக்  கொடுக்க,  இவளைத்  திருமணம் செய்பவனால் மட்டுமே முடியும். நாம தூர இருந்து, வழக்கம் போல் பார்த்துக் கொள்வோம். பார்த்துக்கோ மிருது… தேங்க்ஸ்…” என்றவன் அறை  வாயில்  வரை  சென்று,

“மிருது!… இனி அவளை, ‘அண்ணி’ என்று கூப்பிடாதே!… நமக்கு ஆயிரம் ஆசை  இருக்கலாம். ஆனா, அவ  வேறு  வீட்டில்  சென்று  வாழ வேண்டியவ. நீ இப்படிக் கூப்பிடுவது, யார் காதிலாவது விழுந்துச்சுன்னா அவளுக்குத் தான் பாதிப்பு.
இன்னொருவனின்  மனைவி  ஆக  வேண்டியவளை  என்னுடன் இணைத்துப் பேசாதேமா…” என்றவன் திரும்பிப்  பார்க்காமல்   வெளியேறி  விட்டான்.

திகைத்து  நின்று இருந்தார்கள் அவர்கள் இருவரும்.

தன் கணவனின் தோளில்  கை   வைத்து   அழுத்தினாள்  மிருதுளா.

“என்ன ஆல்!..  அண்ணா,  இப்படி  பேசிட்டுப் போவது நமக்குப் புதுசா என்ன? 
இதற்கு  எல்லாம்  டென்ஷன்  ஆனா எப்படிம்மா?….
மனசு அளவுல, அண்ணா,  ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கார்…
உனக்குத் தெரியாதா என்ன?…

மதுராவை  இழந்தது, ரூபிணி மேட்டர், சோனா, கஜா என்று ஒரே ஆள் எத்தனை விதமான பிரச்சனைகளைத் தான் சமாளிப்பார்?…
இது சினிமாவோ,  கதையோ இல்லையே!…
வாழ்க்கை.
அவரும் சாதாரண மனிதர்  தானே!
குற்ற  உணர்ச்சி!…

அண்ணியை  விட்டுச், சோனாவை  மணந்து  விட்டதால், ஏற்பட்ட  மரண வலி.
அவள்  கொடுக்கும்  டார்ச்சர்.  அண்ணியைக் காப்பாற்ற வேண்டிய  கட்டாயம்.  தன் காதலை மறைக்க வேண்டிய கட்டாயம்.

ஒரு வருஷம், மனதில் காதலை வச்சிட்டு, அருகே காதலியை வச்சிட்டு, அவளை வெறுப்பது, அவளிடம் தேவையில்லாமல் கோபப்படுவது போல் நடித்துக்  கொண்டே  இருப்பது  எல்லாம்  மனசை  எந்த அளவிற்கு பாதிக்கும்  என்று  தெரியாதா?

தன்  இயல்புக்கு  முரணாய்  அண்ணி  கிட்டே   இருக்க  வேண்டிய  கட்டாயம் என்ற நிலையில் இருப்பவர்.
இது மனசு ஆல்வின்.
அவரிடம் உள்ள  குழப்பம்,  தடுமாற்றம் எல்லாம் சகஜம். அண்ணியைக்  காப்பாற்ற, எந்த எக்ஸ்ட்ரீம் எல்லைக்கும் போகத் துணிகிறார்…

‘எதைத் தின்னால் பித்தம் தெளியும்’ என்ற நிலையில் இருப்பவர் அவர். விடுடா  பார்த்துக்கலாம்.  அண்ணி உடம்புத் தேறட்டும். அவங்கக்   கிட்டே   பேசிப்    புரிய  வைப்போம்.”  என்றாள்  மிருதுளா.

“என்னத்தை பேச முடியும்?… அதான் சத்தியம் வாங்கித் தொலைத்து இருக்கானே,  என்  உயிர்  நண்பன்   எங்க எல்லாரிடமும்…
‘மதுராவிற்கு, இந்த லவ் மேட்டர் தெரியவேக் கூடாது என்று’… மீறிச் சொன்னால், தற்கொலை  செய்துப்பானாம்…
லூசு,  மெண்டல்,  கிராக்… இவனும் இவன் லாஜிக்கும்.

இவங்களை கையில் வைத்து, இவனை விட வேறு எவன் தாங்குவான்?
காதலித்தப் பெண் கிடைக்கவில்லை என்றால், ஆசிட் ஊற்றுவது, கொலை செய்வது,  இன்னொரு  பெண்ணிற்கு ரூட் விடுவது, வேறு திருமணம் செய்வது  என்று  இருப்பவர்களின்  மத்தியில்  இப்படி ஒருவன்!

நாம  தான்  சொல்ல  முடியாது….  ஏதோ  கடவுள்  புண்ணியத்தில், சிஸ்டேரே  கண்டுபிடித்து  இவனிடம்,  ‘நீ  என்னை  லவ் செய்யறீயா?’ என்று  கேட்டு  வைத்தால்…  அவங்களை  பயமுறுத்தி  இருக்கான்  இந்த  முட்டாள்.

கேட்டா, ‘அவனைப் பெண் பித்தன்’ என்று நினைத்து, இவங்க விலகிப் போகணுமாம்.
சுமன்  கூட  எல்லாம்,  தன்னை  கம்பேர்  செய்து பேசறாண்டீ…. கொடுமையா  இருக்கு. 
இவனும்,  அந்தச்  சுமன்  பொறுக்கியும்  ஒன்றாடீ?
வர  ஆத்திரத்திற்கு,  ‘அந்தச்  சோனாவையும்,  கஜாவையும், சொர்ணாவையும்’ போட்டுத்  தள்ளி  விடலாமா?  என்று  கூட  வெறியா வருதுடீ.
இவங்க  மட்டும்   இன்னேரம்  சேர்ந்து  வாழ்ந்து இருந்தால்!… நீ,  அப்போ  எங்க  கூட இல்லையில்லை.

உனக்குத் தெரியாது, எப்படிப்பட்டக் காதல் இவனுடையது என்று… அதை அருகே இருந்து பார்த்து, பிரமிச்சு, காதல் என்றால், ‘எத்தனை உயர்வானது, பெண்மை என்பது  எப்படிப்  போற்றி பாதுகாக்க’ வேண்டிய ஒன்று என்று  எனக்கும், பாலாஜிக்கு  சொல்லிக்  கொடுத்ததே   விஜய்  காதலும், இவன் வாழ்க்கையும்  தாண்டீ…

பத்து வருடம்… ஏறக்குறைய  பத்து  வருடம்  சிஸ்டரை,  உயிராய்  நினைத்து, அவர்களுக்காகவேத்  தன்னைச்  செதுக்கிக் கொண்டு, அவங்களுக்காகவே  வாழ்ந்தவன்  விஜய்.

எல்லாம்  ஏன்டீ  இப்படி ஆச்சு!… அந்தச்  சோனாத்  திருமணத்திற்க்கு,  இவங்க  வந்திருந்தா  கூடப்  போதுமே!….  அப்பவே  சோனாவையும், அந்தத் திவாகரையும் தூக்கிப் போட்டு மிதிச்சி இருப்பானே!…  
ச்சூ!..  ஏண்டீ!….  இப்படி   எல்லாம்  நடக்குது?

முதல் முறை சிஸ்ட்டரை இழந்த போதே, அவனைத் தேற்றி மீட்டு வருவதற்கு  எவ்வளவு  போராடினோம்!…
இப்போ,  இவனே  இவங்களை இழக்க வேண்டும் என்கிறான்.
முடியுமா அவனால்?…

இவங்களை, ‘இன்னொருவனின் மனைவியாகப்’ பார்க்க முடியுமா இவனால்?
பைத்தியக்காரன்!….”  என்று  பொருமித்  தள்ளினான்  ஆல்வின்.

“ஆல்!.. அண்ணிக் கொஞ்சம் மனதளவில் தேறட்டும். ‘அவங்க கிட்டே பேசமாட்டேன்’  என்று  நீங்க  எல்லோரும்  தான்  ப்ரோமிஸ் செய்தீங்க. நான்  இல்லையே!…

அப்படியே ப்ரோமிஸ் செய்து இருந்தாலும்,  இவங்களை,  வேறு  ஒருவனுக்கு  விட்டுக்  கொடுத்து,   அண்ணாத்  துடிப்பதைப் பார்த்து வேதனைப்படுவதற்கு பதில், உண்மையைச் சொல்லி விடலாம்.

நீ கவலைப் படாதே ஆல். வழக்கம் போல், வேறு மாப்பிளை பார்ப்பது  போல்,  ஆக்ட்  செய்துட்டே  இரு.
அண்ணாவும்,  நீ  கொண்டு வரும் மாப்பிள்ளையை எல்லாம், ‘இது நொள்ளை, இது நொட்டு’  என்று ரிஜெக்ட் செய்துட்டேத் தான் இருக்க போறார்.

விட்டுப்  பிடி ஆல்…  இது  மனசு  சம்பந்தபட்ட  விஷயம்.  மதுரா  நம்மைத் தாண்டித் தானே, யாரையும் மணக்க முடியும். பார்த்துக்கலாம் வா…. ஏதாவது சாப்பிட்டாயா இல்லையா?…” என்று பேசியவாறு அவர்கள் அறையை   விட்டு   வெளியேறக்,  கண்களைத்  திறந்தாள்  மதுரா.

தவமிருப்போம்

அடுத்த அத்தியாயம்

49

"அண்ணா!...அண்ணா!.... ரிலாக்ஸ்...அண்ணா!... என்னைப் பேச விடுங்க அண்ணா!…”என்று பலமுறை கெஞ்சிய பிறகே, விஜய், தன் புலம்பலை நிறுத்தினான்.“அண்ணா!... அண்ணிக்கு ஒன்றும் இல்லை. அவங்க நல்லாத் தான் இருகாங்க.” முடிக்க விடவில்லை விஜய்.“பொய்  சொல்லாதே!..  என்  மது,  என்னை  விட்டுப்  போய்ட்டா…. அவளை …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்