arrow_back
என்ன தவம் செய்தேன்! 50
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 50 / 85

50

visibility 20
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

பேசிக்  கொண்டே  போகும்  அவர்களைப்  பார்த்தவளின் நெற்றி சுருங்கியது. 

விஜய்யின்  உயிர் தோழன் ஆல்வின், அவன் மனைவி மிருதுளா  தான்  அவர்கள்  என்பது  மதுராவிற்கு  புரிந்தது.

‘நடிகர் பிரசன்னா, சினேகா’ சாயலில் இருக்கும் இவர்களை மதுராவிற்கு மிகவும் பிடிக்கும்.

அலுவலகம் வரும் போதெல்லாம், இவளிடம் பேசாமல் சென்றது  இல்லை  ஆல்வின்.

பாலாஜி மாதிரியே, மனதால் வந்த இன்னொரு   அண்ணன்,   விஜய்யின்  மற்றொரு  நண்பனான  இவன்.  

காரில்  மதுரா  மயங்கியது  என்னவோ  உண்மை தான். 

ஆனால்,  ரெண்டு மணி  நேரத்தில்,  அவர்கள் மூவரும் அந்த அறைக்குள் வரும் முன்பே மயக்கம்  தெளிந்து   விட,  ‘தான்  எங்கு  இருக்கிறோம்,  என்ன ஆனது’ என்று  புரியாமல்,  கண்   மூடி   யோசித்து   கொண்டு   இருந்தாள்   அவள்.

தன் யோசனையில், உழன்று கொண்டு இருந்தவள், இவர்கள் வந்ததை கவனிக்கவில்லை.

சட்டென்று,  விஜய்  தன்னை அணைக்க,  அதிர்ந்து போனாள்.

விஜய்யும் மனகுழப்பத்தில், இவளை இழந்து விட்டதாகத் துடித்துக் கொண்டு இருந்ததால்,  இவளின்  உடலில்  ஏற்பட்ட  நடுக்கத்தை,  சிலிர்ப்பை  உணரத் தவறி  விட்டான்.

அவன்  பேசியது  முதல்,  ஆல்வினும் மிருதுளாவும் கடைசியாகப் பேசியவாறு  வெளியேறும்  வரை  அனைத்தையும், மதுரா, கண் மூடிக் கேட்டுக்   கொண்டு   தான்   இருந்தாள்.

விஜய்யின்  சட்டையைப்   பிடித்து  உலுக்கி,  ‘பைத்தியமாடா  நீயி?…’  என்று  உலுக்கும்   வெறியே  வந்தது  மதுராவிற்கு.

ஆனால்,  அவள்  எதையும் கேட்காமல், கண்ணைக் கூடத் திறக்காமல் படுத்து இருந்தாள்.

எல்லோரும் வெளியேறி விடக், கண்ணைத் திறந்தவளின்   நெற்றி  யோசனையில்  சுருங்க,  முகம்  யோசனையைத்  தத்து  எடுத்தது.

விஜய்  தன்னை  விரும்புவது  தெரிந்தாலும்,  விடை  தெரியா  பல கேள்விகள்  அணிவகுத்து  நிற்க,  அனைத்தையும்  வழக்கம்  போல் யோசித்து,  விடைக்  கண்டுப்  பிடிக்கும்  வரை,  அவள்  வாயைத்  திறக்கத் தயாராக  இல்லை.

‘நான்   நினைத்தது  போல்  இது  லவ்  தான்.  இந்த  லூசு,  என்னை லவ் தான் செய்து இருக்கு.
ஆனா, எப்போ, எப்படி என்னைப் பார்த்தான்?
காதலிக்க   ஆரம்பித்தான்? 
ஆனா,  ப்ரொபோஸ்  செய்யலை.

காதலை  உள்ளுக்குள் வைத்து, வெளியே சொல்லமால் இருக்கும் ரகமாகவோ,  பயந்து  நடுங்குபவனாகவோ  இவன்  இல்லை.  பின்  ஏன், லவ்   சொல்லவில்லை.
எது,  யார் தடுத்தது?

நான்  சேரிட்டி  விழாவில்,  பாடியதை  இவன் வைத்து இருக்கிறான் என்றால், என் காலேஜ் நாட்களில் இவன் என்னை, எங்கேயோ பார்த்து இருக்கிறான். பார்த்துக் காதலித்து, காதலை என்னிடம் சொல்லாமல் தேவதாஸ்  ஆகி  இருக்கான்.

ரூபிணி இவன் தங்கை. அவளை வைத்து இவனைச் சோனா கார்னெர்   செய்து  இருக்கா. 
இல்லை  இதுக்கும்  மேல் ஏதோ இருக்கு.
என்ன நடந்தது? 
இவன்   துடிப்பு   பொய்   இல்லை.  இவன்   காதல்,   இன கவர்ச்சி  வகை  இல்லை.

ஆல்வின்  சொல்வதை  வைத்துப்  பார்த்தால்,  எனக்காகவேத்  தன்னைத்  தானே, செதுக்கிக் கொண்டு காதலோடு, எனக்காகவே இவன் வாழ்ந்திருக்கிறான்!…
என்ன மாதிரியான காதல் இது!… 

‘இப்படியும் முழுச் சரணாகதி!…’  என்று   தன்னைத்   தொலைத்து,  இன்னொரு  உயிருக்காக  வாழ முடியுமா?

பத்து  வருடம்!…
நீண்ட நெடிய பத்து வருடம்!…
சோனா கூடச் சொன்னா தானே,  ‘பத்து  வருடத்  தேவதை’ என்று!…   

‘த்ரிஷா  இல்லைன்னா  நயன்தாரா’  என்று   ஆப்சன்   வைத்துக்   கொண்டு, ரெண்டாம்  லைன்  ஒட்டிக்  கொண்டு,  எப்போ  பிரேக்  அப்  ஆகும்,  எப்போ இன்னொன்று செட் செய்யலாம்,  எங்க அப்பாவுக்குப் பிடிக்கலை, ஆட்டுக்  குட்டிக்குப்  பிடிக்கலை  என்று  ‘உடலை   அடைய காமத்திற்கு காதல்  என்ற  முகமூடி  அணிவிக்கும்’,  காதல்  என்பது,  ‘ஜஸ்ட்  லைக் தட் ஒரு  ஹாபி’   என்று   இருப்பவர்களின்   மத்தியில்   இப்படியும்   ஒருவனா?

புரிந்து   இருக்க  வேண்டிய  ஏதோ  ஒன்று,  புரியாமல்  போக்கு  காட்டுகிறது. 
சம்திங் மிஸ்ஸிங்.
யார் காரணம்?
ரூபிணி வாழ்வில் என்ன நடந்தது?…” என்று கண் மூடித் தனக்குத் தானே அலசலில் ஈடுப் பட்டுக் கொண்டு  இருந்தவள்,

“காமன்  மதுரா!..  யோசி… யோசி. இது puzzle மாதிரி தான்… விடை உனக்கு முன்  தான் இருக்கு.. கண்டுப் பிடி.” என்று சத்தமாகப் பேசிக் கொண்டு  இருந்தாள்.

சட்டென்று, ‘கிளுக்’ என்ற சிரிப்பு ஒலியும், “இப்படித் தனியா பேசிட்டு இருந்தா  லூசுன்னு  சொல்வாங்க.  நீங்க  என்ன லூசா?” என்றக்  குழந்தையின்,  குரல்  கேட்டுக்  கண்  திறந்து  பார்த்தாள்  மதுரா.

அறை  வாயிலில்,  ஒரு நான்கு வயது  பெண் பொம்மை நின்று மாதிரி இருந்தது.

“ஹாய் செல்லம்!… வாங்க… வாங்க… யாரு நீங்க!… இங்கே என்ன செய்யறீங்க?.” என்றாள்  மதுரா, புன்னைகையுடன்  கை  நீட்டி .

“ஹ்ம்ம்!… வரமாட்டேன். நீ லூசு… தனியா பேசிட்டு இருக்கே!.. அம்மா, அட்சி. இங்கே  எல்லாம் வரக் கூடாதுன்னு சொல்லியிருக்கா.” என்றாள்  அந்தப்  பார்பி  பொம்மை .

“ஹேய்!… நான் தனியா பேசலை. என் இமாஜினேரி பிரெண்ட், ‘டோரா புஜ்ஜி !….’ கிட்டேப்  பேசிட்டு  இருந்தேன்.  அவ, என்னை மாதிரி, ‘குட் கேர்ள்’ கிட்டே  வந்து,   மத்தவங்கக்  கண்ணுக்குத்  தெரியாம  பேசிட்டு போவாளே!…” என்றாள் மதுரா.

“ஒ!…  உனக்கும்  டோரா  பிரெண்ட்டா?…  எனக்கும்  அவ பெஸ்ட் பிரெண்ட்.  நானும்,  அவக்  கூடப்  பேசுவேனே!…”  என்றாள்  குழந்தை.

“ஹை!… ஜாலி. உங்க பேரு என்ன பாப்பா?” என்றாள் மதுரா.

“என்  பெயர்  ஜான்சி. உன் பெயர் என்ன?.” என்றாள் ஜான்சி.

“என்  பெயர்  மதுராக்ஷி!…  மதுரான்னு  கூப்பிடுவாங்க…  பாப்பா!…  இப்படி எல்லாம்  தனியா   வரலாமா!… அம்மா எங்கே?” என்றாள் மதுரா.

‘காலம்  கெட்டுக் கிடக்கிறது… யார் இப்படி, பொறுப்பு இல்லாம குழந்தையைத்  தனியாக  விட்டது?

ஒருவேளை குழந்தையின் அம்மாவும், ட்ரீட்மென்டுக்கு  வந்து  இருக்காங்களோ!’ 

“அம்மா!..  இப்போ  தான்,  ‘சூப்பர்  கேர்ள்’  ரூமுக்கு  போனா.  உனக்கு  ஒன்னு சொல்லட்டுமா!.. என் மம்மி தான் சூப்பர் கேர்ள். அவங்க யாருக்காவது  உடம்பு  சரி  இல்லைனா,  காப்பாத்துவாங்க.  இது  தான் எங்க  சூப்பர்  கேர்ள்  கோட்டை.”  என்றாள்  ஜான்சி .

ஏதோ புரிவது போல் இருக்க,  “அம்மா பெயர் என்ன ஜான்சி?” என்றாள் மதுரா.

“அம்மா  டாக்டர்  மிருதுளா!…..  அப்பா ஆல்வின்!… போலீஸ்க்கு  friend  அவர்.” என்றாள்  ஜான்சி .

சற்று  நேரம்  தலை  சாய்த்து  மதுராவை,  உற்றுப்  பார்த்த ஜான்சி,  சட்டென்று,  “உன் கண்ணை, உம்மாச்சி சாமி, குத்தப் போகுது.” என்றாள் ஜான்சி.

“என்  கண்ணைச்  சாமிக்  குத்தப்  போகுதா!.. ஏன் ஜான்சி?” என்றாள் மதுரா, அந்தக்  குழந்தையின்  வார்த்தைகளைக்  கேட்டு  அதிர்ந்து .

“நீ பொய் சொல்றியே!.. அம்மா சொன்னாங்க. பொய் சொல்லக் கூடாது. பொய் சொன்னா, அம்மாச்சி கண்ணைக் குத்தும்.”  என்றாள் ஜான்சி, கண்ணை  உருட்டி .

“நான் பொய் சொல்லையே!… நான், என்ன கண்ணா பொய் சொன்னேன்? டோரா புஜ்ஜி  பிரெண்ட் எல்லாம் பொய் சொல்ல மாட்டார்களே!… உனக்கே தெரியும் தானே!..” என்றாள் மதுரா .

கொஞ்ச  நேரம்  யோசித்த  ஜான்சி, “ஆமா… டோரா குட் கேர்ள். பொய் சொல்ல மாட்டா!… அந்த நரித் தான் பேட். குட் கேர்ள் பொய் சொல்லமாட்டாங்க. ஆனா, நீ சொன்னியே!…”என்றாள் ஜான்சி, அவளை நோக்கிக்  கைக்காட்டி .

“நான் என்ன பொய் சொன்னேன் ஜான்சி குட்டி?… எனக்குத் தெரியவேயில்லையே!… நீங்கச் சொல்றீங்களா?…” என்றாள் மதுரா, குழந்தை  உயரத்திற்கு  கீழ் அமர்ந்து .

“நான்  குட்டி  இல்லை.  நான் பிக் கேர்ள். நீ,  நேம்  கேட்டா  ஏதோ  ஒரு  பேர் சொன்னியே!… ஆனா உன்னை, ‘என் அங்கிள் ‘ஏஞ்சல்ன்னு’ தானே கூப்பிடுவாங்க. 
என்  அங்கிள்  சீக்ரட்  ரூம்  இருக்கு.  உனக்குத் தெரியுமா?
அங்கே,  உன்  போட்டோ  பார்த்தேன்.  அங்கிள்  கிட்டே கேட்டேன், அவங்கத்  தான்  சொன்னாங்க, ‘நீ ஏஞ்சல்’ன்னு… ஆனா, நீ பெயரை வேறு ஏதோ சொன்னே!….

உனக்கு விங்ஸ் இல்லை… ஏஞ்சல்னா விங்ஸ் இருக்குமே!” என்ற  ஜான்சி,  மதுராவை  சுற்றிச் சுற்றி  வந்து பார்த்து, அவளுக்குச் ‘சிறகுகள் இருக்கிறதா, இல்லையா’ என்ற ஆராய்ச்சி செய்யும் முக பாவத்துடன். 

‘என்னது!… அங்கிள் கிட்டே என் போட்டோ இருக்கா!..
யாருப்பா இந்தப் புது அங்கிள்?…

இருக்கும் குழப்பம் பத்தாதுன்னு, இது யாரு புது அங்கிள்?
அவன்,  எதற்கு என்னை, ‘ஏஞ்சல்’ன்னு,  குழந்தைக் கிட்டே சொல்லி இருக்கான்!’ என்று மதுரா யோசித்து கொண்டு இருக்க, ஜான்சி அவள் தோளைத்  தட்டினாள்.

“ஆனா, நீ டிங்கிர் பெல் மாதிரி, ஜாஸ்மின், சிண்ட்ரெல்லா மாதிரி ரொம்ப அழகா இருக்கே!… உன்னை என் அங்கிள்க்கு பிடித்து இருக்கு. அவங்க என் பெஸ்ட் பிரெண்ட் தெரியுமா உனக்கு?. நீயும் இனி என் பிரெண்ட்.” என்றவள்  மதுராவின்  காது  அருகே  வந்து,
“உன்னை  என் அங்கிள் சீகிரெட் ரூமுக்குக் கூட்டிப் போறேன். வரியா?… ஆனா,  உன்  விங்ஸ்  எங்கே!.. சொல்றியா?” என்றாள்.

என்ன பதில் சொல்வது என்று யோசித்த மதுரா, “ஜான்சி!… உன் மம்மி சூப்பர் கேர்ள் இல்ல… உடம்பு சரி இல்லாதவங்களுக்கு ஹெல்ப் செய்வாங்களே!. அதே போல், இங்கே நானும் ஹெல்ப் செய்ய வந்து இருக்கேன்.

இங்கே  உடம்பு  சரி  இல்லாதவங்களுக்கு, ஹெல்ப் செய்ய என் விங்ஸ் போய் இருக்கு. ஏதாவது பேட் வந்தா… அது சண்டை போட்டுத் தொறத்தி விடும். உனக்கு ஒரு மாஜிக் காட்டட்டா?.” என்றவள் ஒரு காயின் எடுத்து அதைக்  கையில்  மறைய  வைத்தாள்.

“அச்சச்சோ!… காசு காணோம். உங்க மம்மி திட்டப் போறாங்க.” என்றாள் ஜான்சி.

“திட்டமாட்டார்களே!… எனக்குத் தான் மாஜிக் தெரியுமே!… ஜான்சி குட் கேர்ள் தானே!.. சோ, ஜான்சி தலையிலிருந்து காயின் வரும், ஜான்சி குட் கேர்ள்லா  இருந்தா… பார்க்கலாமா நீ குட் கேர்ள் என்று?” என்றாள் மதுரா.

“நான்  குட்  கேர்ள்  தான் ஏஞ்சல்.” என்று சிணுங்கினாள் ஜான்சி.

“ஜான்சி குட் கேர்ள். ஏஞ்சல் தலைவி! சோ, காயின் திரும்ப வர வைங்க.” என்ற மதுரா,  ஜான்சியின் தலையில் கை வைத்து,
உட்டாலக்கடி கிரி, கிரி…
சைதாப்பேட்டை வடகறி….
ஜாம்பஜார் ஜஃக்கு…
நான் சைதாப்பேட்டை கொக்கு….

ஆப்ரகா டாப்ரா!….
வந்துடு சீசே!…” என்று சொல்லிக்   காயின்   வரவழைக்க,  ஜான்சி  குஷியாகி  குதித்தாள்.

“ஏஞ்சல்!… எனக்கும்,  நீ சொன்ன மந்திரம் சொல்லித் தாரியா?” என்றாள் ஜான்சி.

‘மதுரா உன் லொள்ளுக்கு அளவே இல்லையா!… நீ சொன்னதை எல்லாம் பாவம்,  குழந்தை  மந்திரம்னு  நெனைச்சு  இருக்கு… உன்னை…’ என்று மனசாட்சித் துப்பி  சென்றது.

ஒரு  கணம்  முழித்த மதுரா, “அது ஜான்சி..  ஏஞ்சல் மந்திரம். ஏஞ்சல் மட்டுமே  சொல்லணும்.” என்றாள் சமாளிப்பாக.

“சரி  ஏஞ்சல்…  என் கூட வரியா?… என் அங்கிள் ரூம் காட்டறேன்?” என்றாள்  ஜான்சி.

“இல்லை வேண்டாம் ஜான்சி. ரொம்ப தூரம் போனா உன் வீட்டில் தேடுவாங்க.  பிறகு   ஒரு   நாள்  பார்க்கிறேன்.” என்றாள் மதுரா .

“ஐயோ  ஏஞ்சல்!…. என்  வீடு  தூரமா  இல்லை. இது  தான் எங்க வீடு. சூப்பர்  கேர்ள் ரூம் இது தான். ஆனா, சூப்பர் கேர்ள் வீடு அதோ!…
வா  ஏஞ்சல். பாட்டி தூங்கறாங்க.
மம்மி இங்கே இருகாங்க…
வா… வா… என்  பொம்மை  எல்லாம்  காட்டறேன்.”  என்று  கைப்பிடித்து  இழுக்க, ‘அந்த  அங்கிள்  யார்’  என்று தெரிந்து கொள்ள மதுரா, ஜான்சியின் வீட்டுக்கு  அவளுடன்   சென்றாள்.

முன்புறம்  ஹாஸ்பிடல்  இருக்க,  நூறடி  ஹாஸ்பிடல்  பின் புறம்  சென்றதும் மிருதுளா,  ஆல்வின்  வீடு  இரண்டு  அடுக்கில்  உயர்ந்து  நின்றது.

கீழ் புறம் செல்லாமல்,  பக்கவாட்டில் இருந்த மாடிப்படிகளில் ஏறிச் சென்றாள் ஜான்சி.

ரெண்டாம் மாடிக்குச் சென்ற ஜான்சி, அங்கு இருந்த பூத்தொட்டியில்  மறைத்து  வைக்கப்பட்டு  இருந்த  சாவி  எடுத்துக்  கதவைத் திறந்து,   மதுராவை   கைப்பிடித்து  உள் இழுத்து சென்றாள்.

“வா ஏஞ்சல்!… வா… இது தான் என் அங்கிள் வீடு. வா. இது தான் அங்கிள் ரூம்!… வா…” என்று ஒரு பெட்ரூமிற்குள் கதவைத் திறந்து அழைத்துச் சென்றாள்.

அந்த  அறைக்குள்  நுழைந்த  மதுரா,  முதலில்  கண்டது, ‘அவளின் ஆள் உயர ப்ளோ அப்  படத்தைத்’ தான்.

தவமிருப்போம்…

அடுத்த அத்தியாயம்

51

மதுரா  எங்கேயோ பார்த்துக் கொண்டு இருக்க, அவளுக்கேத் தெரியாமல் எடுக்கப்பட்டு இருந்தது அந்தப் போட்டோ.அதை அறை உயரத்திற்குப் பெரிதுப்படுத்தி, மாட்டி  வைக்கப்பட்டு  இருந்தது.எப்பொழுது, எந்த இடத்தில், அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது!' என்று எவ்வளவு யோசித்தும், மதுராவிற்கு நினைவுக்கு வரவில்லை.“இது சீகிரட் ரூம்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்