arrow_back
என்ன தவம் செய்தேன்! 51
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 51 / 85

51

visibility 27
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

மதுரா  எங்கேயோ பார்த்துக் கொண்டு இருக்க, அவளுக்கேத் தெரியாமல் எடுக்கப்பட்டு இருந்தது அந்தப் போட்டோ.

அதை அறை உயரத்திற்குப் பெரிதுப்படுத்தி, மாட்டி  வைக்கப்பட்டு  இருந்தது.

எப்பொழுது, எந்த இடத்தில், அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது!’ என்று எவ்வளவு யோசித்தும், மதுராவிற்கு நினைவுக்கு வரவில்லை.

“இது சீகிரட் ரூம் ஏஞ்சல்!… அங்கிள்,  இங்கே,  யாரையும் விடமாட்டாங்க. கிளீன்  கூட,  அவங்களே தான் செய்வாங்க.
மம்மிக் கூடச் சொல்லி இருகாங்க,   ‘எங்கே  வேண்டுமானாலும்,  நான்  விளையாடலாமாம்.  ஆனா,  இங்கே  வரக்  கூடாதாம்.  அங்கிள்க்கு  பிடிக்காதாம்.’
 
இதோ  பாரு இந்த ரூம். இது முழுக்க, அங்கிள் நெறைய கிப்ட்  உனக்குத் தான் வாங்கி  வைத்து  இருக்காங்க.
ஏஞ்சல்க்கு  கிப்ட் கொடுத்தாத் தான் நம்ம கூட ,  பிரெண்ட்டா  இருக்குமாம்.  திறந்து பாரு.” என்றாள் ஜான்சி.

திறந்து  பார்த்த  மதுரா,  ஸ்தம்பித்து  தான்  போனாள்.

‘சிவாஜி’ படத்தில் ரஜினி, ஸ்ரேயாவை அறைக்குக் கூட்டிச் சென்று வார்டரோப், வார்டரோபாத் திறந்து காட்டுவாரே, அதை மிஞ்சியது அந்த வார்டரோபில் இருந்த பொருட்கள்.

கிப்ட்ஸ்,  கிரீட்டிங் கார்ட்ஸ்,  புடவை, சுடிதார், ஜீன்ஸ் பாண்ட்ஸ், பாவாடைத்  தாவணி, அனார்கலி, பட்டுப் புடவை, டிசைனர் சாரீஸ்  என்று பெண்களுக்குத்   தேவையான  அனைத்து  உடைகளும்  நிரம்பி  இருந்தன.

அந்த அறையில் இருந்த இன்னொரு அறையில், கைப்பைகள், காலணிகள், நெற்றியில் வைக்கும் பொட்டிலிருந்து, தலைக்கு போடும் ஹேர் கிளிப், ஹேர் பேண்ட் என ஒரு கடையே, அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தது என்று சொன்னால் மிகையல்ல.
 
“என் அங்கிள்… சூப்பரா  டிரஸ்  டிசைன்  செய்வாரே!…  என்  டிரஸ்  எல்லாம் கூட,  அங்கிள் தான் செஞ்சிக் கொடுத்தார். இதோ, நான் போட்டு இருக்கேனே,  இந்த  டிரஸ்  கூட, அவர் தான் செஞ்சார்.
நல்லா  இருக்கில்ல!…. 
இதோ,  உனக்கான  இந்த டிரஸ் எல்லாம்  கூட அங்கிள்,  ட்ரா செய்து, அவரேத் தான் செஞ்சி வச்சிருக்கார்.” என்றாள் ஜான்சி  வார்டரோப்பில்   இருந்த   உடைகளைச்  சுட்டிக்  காட்டி.

ஆடைகளை  அடுத்து  இன்னொரு  வார்ட்ரோப்பில்,   ஒரு  புறம்  ஆல்பம் மேல்   ஆல்பமாக   இவளின்  படங்கள்.

ஆல்பங்களைப் பார்த்துத் திகைத்துக் கொண்டு இருந்தவள், தனக்கு பின்னால்,  சட்டென்று  விஜய்யின் குரல்  வெகு  அருகில்  கேட்டு,  உடல் தூக்கிவாரிப் போடப் பதைபதைத்து திரும்பியவள்,  பார்த்துக் கொண்டு இருந்த  ஆல்பத்தை  நழுவ  விட்டாள்.

“ஐ ஆம் இன் லவ்… நான் காதலிக்கிறேன். என் இதயத் தேவதை இந்தக் கூட்டத்தில் தான் இருக்கா. எனக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றியவள் அவள். அப்படியொரு தேவதைக்கு, என் இதயத்தைக் காணிக்கையாக்கி விட்டேன்.
ஏஞ்சல்!… 
ஐ  லவ் யு!
என்னுடன்,  என்  கடைசி  மூச்சு  உள்ள  வரை,  நீ இருக்க வேண்டும். இருப்பாயா!…
இந்தத்  தேவதை,  என் வாழ்வில் வர என்ன  தவம்  செய்தேன் நான்!…

இனி  என்  மூச்சு,  இதயத்  துடிப்பு,  நான் பாடும்   பாடல்   எல்லாம்   உனக்கே   காணிக்கை.”  என்று சொல்லிக் கொண்டிருந்தான் விஜய், வீடியோவில் இருந்து.

டிவி ஆன் செய்து, பென்டிரைவ் இணைத்து, விடியோவை ஓட விட்டுக் கட்டிலில்   அமர்ந்து   பார்த்துக்   கொண்டு  இருந்தாள்  ஜான்சி.

‘அதானே பார்த்தேன்!… இவனாவது நேரா வந்து லவ் சொல்றததாவது! வீடியோவில்  லவ்  சொல்லிட்டு  இருக்கான்!… 
ஒஹ்!…  பிளாஷ் பாக்.
மதுரா சட்டென்று  பிடிச்சுக்கோ!’ என்று  மனம்  உஷாராகியது.

ஏதோ  கல்லூரி   கலை  நிகழ்ச்சி அது .
ஸ்டேஜ்ஜில்  நின்று  பாடிக்  கொண்டு   சாட்சாத் விஜய்யே தான்.

இனிய தென்றலே!…
இரு கைகள் வீசி வா…
இளைய தேவதை!
இவள் பேரைப் பாடிவா

கவி கம்பன் காவியம்!
ரவி வர்மன் ஓவியம்!
இரண்டும் இவளோ?
இனிக்கும் தமிழோ!
கதையில் வந்த சொர்க்கம்,
எனத் தடுமாறும் நெஞ்சம்,
தழுவும், அது நழுவும்
அது அழகின் ஆலயம்.
பவழம் போலும் தேகம்,
அதில் பசியாறும் மோகம்,
இதழ்கள் இவை இரண்டும்
நல்ல அமுத பாத்திரம்!…
இளமை என்னும் நாவல்,
அவள்தான்… அவள்தான்…
கனவில் அவை நாளும்,
படித்தேன்! படித்தேன்!

கருமையான கூந்தல், நல்ல
மலர் தூங்கும் ஊஞ்சல்!..
அசைந்து, மெல்ல அசைந்து
என்னை அழைக்க வந்தது.
நதியில் ஆடும் நாணல்
இவள் இடைக்காட்டும் சாயல்
வளைந்து, கொஞ்சம் நெளிந்து
என்னை அணைக்கச்சொன்னது.
நடந்தால் வண்ணப்பாதம்
சிவக்கும், சிவக்கும்
நினைத்தால் என் நெஞ்சம் ஹ
தவிக்கும், தவிக்கும்
இதை  நான் என்று சொல்வது?…’ என்று கேட்பவர் மதி மயங்க,  உருகப் பாடிக் கொண்டிருந்தான் விஜய்.
குரலா அது!
வசீகரிக்கும் குரல்!
மனதை மயக்கும் குரல்

சினிமாவில் பாடியிருந்தான், அடுத்த எஸ்.பி.பி, ஏசுதாஸ், மனோ வரிசையில் மக்கள் மனதில், நீங்கா இடம் பிடித்திருப்பான்.
கல்லும், அவன் குரலைக் கேட்டு நிச்சயம் உருகிவிடும்.

“ஏஞ்சல்!… என் அங்கிள் சூப்பராப் பாடுவாங்க. ஆனா, இப்போ எல்லாம் பாடுறதே இல்லை!.. என் கூட விளையாடுறதும் இல்லை. இங்கேயும் அதிகமா வரது  இல்லை…
இங்கே பார்த்தியா!

இது  எல்லாம் எங்க அங்கிள் வாங்கின மெடல்ஸ், cups. மம்மி கூடச் சொல்வாங்க… ‘நானும் அங்கிள் மாதிரி நல்ல படிக்கணும், விளையாட்டு போட்டியில்  கலந்துக்கணும்’  என்று.

இது  மாதிரி  எல்லாம், ‘நானும் வாங்கணும்ன்னு’ சொல்லி இருகாங்க. அங்கிள்  மாதிரி,  நானும் பாட, கிளாஸ் போறேன் ஏஞ்சல். நீ அங்கிள் கிட்டேச்  சொல்றியா  ஏஞ்சல்…  நான்  குட்  கேர்ள்  தானே!

என் கூட வந்து விளையாடச் சொல்றியா?
அவங்க இப்போ எல்லாம் சிரிக்கறதே   இல்லைன்னு   டாடிக்  கூட, ரொம்ப அழுதாங்க.  நீ  தான்  ஏஞ்சல்  ஆச்சே!..  என்  அங்கிலை  காப்பாத்துறியா?…

ப்ளீஸ்  ஏஞ்சல். என் அங்கிள்   எனக்கு   வேணும்.” என்ற  ஜான்சி  அழ  ஆரம்பித்தாள்.

மதுராவின்  கண்களும்  கலங்கி  விட, குழந்தையை  இழுத்து  அனைத்தவள், “ஜான்சி!… குட் கேர்ள் ஆச்சே!… குட் கேர்ள் அழமாட்டாங்களே!…
ஏஞ்சல்  கிட்டே சொல்லிட்டே இல்லை… உன்  அங்கிள்லை  நான்  பார்த்துக்குறேன் செல்லம்.
‘என்  ஜான்சி  டார்லிங்  கிட்டே,  வந்து  விளையாடாம  என்ன  செய்யறாருன்னு’  திட்டிடறேன்.  என் கிட்டேத் தான் மாஜிக் இருக்குல. ஆனா  ஒரு  விஷயம்  ஜான்சி.” என்றாள் மதுரா ரகசியமாக .

“என்ன  விஷயம்  ஏஞ்சல்?.” என்றாள்  ஜான்சி  ரகசியம்  கேட்கும்  குரலில்.

“இந்த  ஏஞ்சல்   கிட்டே,  இது  எல்லாம்  காட்டியதை,  என்னுடன்  பேசியதை,  நீ யார்  கிட்டேயும்  சொல்லக்  கூடாது ஜான்சி.  மத்தவங்களுக்கு  நம்ம,  ‘சூப்பர்  கேர்ள்  பிளான்’  தெரிஞ்சா, பேட் நரியால, அங்கிள்க்கு தான்  டேன்ஜர்.

உங்க அங்கிள், இந்த ஏஞ்சல் கூடச் சேர்ந்து பேட் பீபள் இருக்காங்க இல்லை… அவங்களை எல்லாம் எதிர்த்துப் பைட் செய்துட்டு இருக்காங்க செல்லம்.  அவங்க  எல்லாம்  ரொம்ப  ரொம்ப  பேட்.

இந்த ஏஞ்சல் கிப்ட் கொடுத்து, உங்க அங்கிள், ஏஞ்சல் பிரெண்ட்டா இருப்பது தெரிந்தால், பேட் பீபள் ஜெயிச்சுடுவாங்க.

நீங்க, ‘என் சீக்ரட் பிரெண்ட்’  என்பதை  யார்  கிட்டேயும்  சொல்லக்  கூடாது  ஓகேயா?
அப்போ தான், உங்க அங்கிள் முன்னே மாதிரி சிரிப்பாங்க. உங்கக் கூட விளையாடுவாங்க. நீங்கக் கேட்க நிறைய பாடல் எல்லாம் பாடுவாங்க. ஜான்சி  குட்டிக்கு  ஏஞ்சல்  சொல்றது  புரியுதா?           

ஓகேவா.  உன்   ஏஞ்சல்  இருக்கேன்  தானே!..  நான்  பார்த்துக்குறேன்.  இனி  அங்கிள்   கூடிய  சீக்கிரம்,  உன்  கூட விளையாடுவார்,  உனக்காகப் பாடுவார்.
உன்னுடன்  நிறைய  நேரம் இருப்பார்.

அது  நடக்கணும்னா,  ‘இது  சூப்பர்  ஹீரோ  சீக்கீரட்.  வெளியே  அம்மா,  அப்பா  கிட்டேக்  கூடச் சொல்லக் கூடாது’.  டீல்?”  என்றாள் மதுரா.

“ஓகே  ஏஞ்சல்…  டீல்…  டோரா ப்ரோமிஸ். நான் யார் கிட்டேயும் சொல்லவே மாட்டேன். ஆனா,  நீ  அங்கிளை அடிச்சுடு.  ஏன்  ஜான்சிக் கூட  விளையாடவே  இல்லைன்னு  சண்டை  போடணும்… .ஓகேவா?.

சரி  வா  ஏஞ்சல்,  நாம  போகலாம்.  பாட்டி  எழுந்து  என்னைத்  தேடுவாங்க.” இன்று ஜான்சி வெளியே அழைத்து சென்றாள்.

மீண்டும் ஒருமுறை அந்த வீட்டை திரும்பிப் பார்த்த மதுராவிடமிருந்து பெருமூச்சு எழுந்தது.

ஜான்சியோடு, இருவரும் அந்த வீட்டை விட்டு வெளியேறி,  ஹாஸ்பிடலுக்கும்  வீட்டுக்கும்  நடுவே  இருந்த  பார்க்கில் சற்று  நேரம்  விளையாடிக்   கொண்டு   இருந்தனர்.

அதற்குள்  மதுராவை   காணாமல்,  அந்த  ஹாஸ்பிடலையே,  ஒரு வழிச் செய்து கொண்டு இருந்தான் விஜய்.

விஜய்  கோபத்தை, ருத்ரத் தாண்டவத்தைக் கண்டு, செக்யூரிட்டி முதல், நர்ஸ், டாக்டர்ஸ் மிரண்டு கொண்டு இருந்தனர்.

மிருதுளாவும், ஆல்வின்னும் கையைப்  பிசைந்து  கொண்டு  நின்று  இருந்தனர்.

“என்ன  ஹாஸ்பிடல்  நடத்தறே  மிருது!…  இது தான், நீ ஹாஸ்பிடல் நடத்தும் லட்சணமா?.
உடம்பு  சரி  இல்லாதவ,  எங்கே போனா என்று கூடக்  கவனிக்க  முடியாத  நர்ஸ்,  செக்யூரிட்டி… ச்சே!

எல்லாரையும்  டிஸ்மிஸ்  செய்.  ‘என்  மதுராவுக்கு’,  ஏதாவது  ஆச்சு உங்களை எல்லாம் உயிரோடு விடமாட்டேன். ஆல்வின்! என்னைப் பத்தி தெரியும் தானே!

நான்  எந்த  அளவுக்கு  நல்லவனோ,  அதை விட மதுராவிற்கு ஏதாவது ஒன்று  என்றால்  ரொம்ப  கெட்டவன்.  எனக்கு,  நீ  என்ன  செய்வாயோ,  ஏது  செய்வாயோ,  தெரியாது.  இன்னும்  ஐந்து  நிமிடத்தில் மதுரா, என் கண்  முன்னால் இல்லை என்றால், ‘என்ன செய்வேன், ஏது செய்வேன்’ என்று  எனக்கே  தெரியாது.

போ,  உன் செக்யூரிட்டி ஆட்களை, ஒரு இன்ச் விடாமல் இந்த இடத்தில தேடச் சொல்லு… மூவ்.” என்று  கர்ஜித்து  கொண்டு  இருந்தான்.

“தேவை இல்லை.” என்ற மதுராவின் குரல், பின்னால் இருந்து கேட்கத் திகைத்துத்  திரும்பினான்.

ஜான்சியும்,  மதுராவும்  விளையாடியப் பார்க்,  விஜய்  நின்று  கத்திக்  கொண்டு இருந்த   இடத்திற்கு, அருகில்  தான்  இருந்தது.

வெகுநேரமாக  அவன்  கத்திக் கொண்டு  இருப்பதை,  ‘மற்றவர்களைக்  கடித்து  கொண்டு  இருப்பதை’ என்று சொல்ல வேண்டுமோ, கேட்டுக் கொண்டே  தான், இன்னும் டென்ஷன் ஆகிக் கத்தட்டும் என்றே  ஜான்சியோடு  விளையாடிக்  கொண்டு இருந்தாள்.

சற்று  நேரத்தில்  ஜான்சியின்  பாட்டியும்  வந்து, அவளை அழைத்துச் சென்று விட, ‘அப்படியே  அவனை விட்டு விட்டுக் கால் டாக்ஸி, பிடித்து வீட்டுக்குச்  செல்ல  வேண்டும்’  என்ற  தான்  முடிவில்  இருந்தாள்.

ஆனால், அவனிடம் மாட்டி விழி பிதுங்கிக் கிடக்கும், மற்ற அப்பாவி ஜீவன்களை  நினைத்து,  அவன்  பின் சென்று தான் அங்குத் தான் இருப்பதை  வெளிபடுத்தினாள்.

“மதுரா!..  ஆர் யு ஆல்ரைட்?  உங்களுக்கு  எதுவும் இல்லையே!…  மறுபடியும் மயக்கம்  ஏதாவது?” என்றாள் மிருதுளா.

“ஐ  ஆம்  பெர்பெக்டிலி  ஆல்  ரைட்.  எனக்கு  எதுவும் இல்லை. என்ன கொஞ்ச நேரம் முன்பு, ‘ஹார்ட் அட்டாக்’ தான் வந்தது.
ஹே!.. காமன்.
இட்ஸ் ஜஸ்ட் ஜோக்.
டென்ஷன் ஆகாதீங்க. சாரி, நீங்க எல்லாம் போய் உங்க  வேலையைப்  பாருங்க. 
எக்ஸ்ட்ரீமிலி  சாரி பார் தி ட்ரபிள்.” என்றவள்   மற்றவர்களை  அனுப்பி  வைத்தாள்.

“எங்கேம்மா  போன!…  உன்னைக் காணாமல்… உயிர் போய்டுச்சு.” என்றான் ஆல்வின், அதுவரை  பிடித்து  வைத்து  இருந்த,  மூச்சை  வெளியிட்டவாறு.

“ரொம்ப  நேரமா, ஒரே  ரூமில்  இருந்தது  ரொம்ப  போர்  அடித்தது  அண்ணா.  அதான்,  பின்னால் இருந்த பார்க்கில் அமர்ந்து இருந்தேன். அங்கே ஒரு குட்டி பிரெண்ட் கிடைத்தா. அவளோடு விளையாடிட்டு இருந்ததுல நேரம் போனதே, அஹ்!… அம்மா!” என்று அலறியவள் கன்னத்தைப்  பிடித்துக்   கொண்டு  கீழே  விழுந்தாள்,  விஜய்யின் அடித் தாங்க  முடியாதவளாய்.

“லூசாடீ நீ!… மனுஷனை சாவடிச்சுட்டு, விளையாடப் போனாளாம். அவனவன்  எந்த  நிலையில், இருக்கான்னு புரிஞ்சுக்காம…
ச்சே!…
ஏன்டீ! என்னை  இப்படி  உயிரோடு  சாக  அடிக்கறே  ராட்சசி!…  உன்னை…” என்று  அவளை,  மீண்டும் அடிக்கப் போனவனை, ஆல்வின் பிடித்துத் தடுத்து  நிறுத்தினான்.

மிருதுளா  தனக்குப் பின்னால் மதுராவை இழுத்து மறைத்து, “அண்ணா! என்ன  அண்ணா இது!..  ஒரு  பெண்ணை  யார்  அடித்தாலும்,  சண்டைக்குப் போகும்   நீங்களா  இவங்களை  அடிசீங்க?

மறந்து போச்சா அண்ணா, ஒரு முறை கோபத்தில் ஆல்வின் என்னை அடித்தபோது, ‘கட்டிய மனைவியாய் இருந்தாக் கூட, அவளை அடிக்கும் உரிமை  உனக்கு  யார் கொடுத்தது?…

ஒரு  அடி  மேல் விழுந்தால் கூட அது, ‘உன்  மனைவியின்  தன்மானம்,  கெளரவம்,  தனி  தன்மைக்கு’ நீ கொடுக்கும்  அடி.

கையை  ஓங்கி  விடுவதால்  மட்டும்,  நீ  ஆண் ஆகி விட முடியாது. உன்னை நம்பி  தன் குடும்பத்தை, உற்றம், சுற்றம் எல்லாம் விட்டு வரும் பெண்ணின்  கண்ணில்,  ஒரு  சொட்டுக் கண்ணீர், உன்னால் வந்தாலும், நீ ஆண் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லிக் கொள்ளவேத் தகுதி இல்லாதவன்.

‘ஆண்மை’  என்பது  பெண்மையை  போற்றிப்  பாதுகாப்பதில் இருக்கிறது. உன்  உடல்  பலத்தைக் காட்டுவதில் இல்லை.
மிருது கையை ஒங்க எவ்வளவு   நேரம்  ஆகும்?…  அப்படி  ஓங்கினால், அது  உனக்குக்  கேவலம்.

இன்னொரு  முறை உன் கை ஓங்கியது, கையை உடைத்து விடுவேன்.’ என்று  அன்று  சொன்ன  நீங்களா  அண்ணா, இன்று அண்ணியை அடித்தது?    

என்ன அண்ணா இது!.. அவங்களே இப்போ தான் கண் விழித்து இருக்காங்க. உடம்பு சரி இல்லாதவங்களை போய்….” என்று கடிந்து கொள்ள,  தான்  செய்தத்  தவறு  உணர்ந்து,  கண் மூடித் தலைக் கோதி நின்றான்  விஜய்.

மதுரா     மயங்கியது,  அவளுக்கு  என்னவோ ஏதோ என்று பயந்தது, கொஞ்ச நேரம் வெளியே போய் வருவதற்குள், அவளைக் காணாமல் தவித்தது  என்று  அன்று முழுவதும் ஏற்பட்ட மன உளைச்சல், குழப்பம், பயம்,  டென்ஷன்  எல்லாம்  சேர்ந்து  அவனை  மிருகமாக்கி  இருந்தது.

மதுராவை காணாமல், உயிர் போகும், மரண வலியில் நின்று துடித்துக் கொண்டு இருந்தவன்,  இவள்  சாவகாசமாக  வந்து, ‘ பார்க்கில்  விளையாடப் போனேன்.’  என்றதும்  ஒட்டுமொத்தக்  கோபம், அவன் கண்ணை   மறைக்க,   அவளை  அடித்து  இருந்தான்.

உரிமையுள்ள   இடத்தில்   தானே   கோபத்தைக்  காட்ட  முடியும் .

“சாரி!… வெரி சாரி மதுரா!…. உன்னைக் காணோம் என்றதும்….” என்றான் பெருமூச்சு  எடுத்துத்  தன்னைச்  சமாளித்து  கொண்டு.

“உங்க  சாரி,  பிளவுஸ்  எல்லாம்  குப்பை  தொட்டியில்  போடுங்க  விஜய்.  ஐ டோன்ட் வாண்ட் இட்.
எந்த உரிமையில் என்னை அடிச்சீங்க? ‘என் உடம்பு  தான்  முக்கியம்  என்று  தகாத  முறையில்’  என்னிடம் நடந்தவருக்கு,  நான்  காணாமல்  போனா  என்ன,  செத்தே  போனால்  தான்  என்ன?
என்னை  அடிக்க,  நீங்க யாரு விஜய்? என்ன உரிமையில், என்னை அடிச்சீங்க?  உங்கக்  கிட்டே, ‘எங்கே  போறேன், எங்கே வரேன்’ என்று எல்லாம் ரிப்போர்ட் செய்துட்டு இருக்க முடியாது. நீங்க யாரோ. நான் யாரோ.”  என்றாள்  மதுரா  நக்கலாக .

“ஏய்!…” என்று அடக்கப்பட்ட கோபத்துடன், மீண்டும் கையை ஓங்கி கொண்டு  மதுராவை,  அடிக்கப்  போனவனை  பிடித்து  இழுத்தான் ஆல்வின்.

“அடிச்சே கொன்னுடுவேன். என்ன பேச்சுடீ பேசுறே!
நீ சாகத் தான் இத்தனையும் செய்துட்டு இருக்கேனா!
என்ன கேட்டே!
எனக்கு என்ன உரிமை  இருக்குன்னா?  உன்னை…  விடுடா  ஆல்வின். இவளை… மனுஷனை மிருகமாகிட்டே போறா. விடுன்னு சொல்றேன்ல. விடுடா.” என்றான்  விஜய்  கோபத்துடன்.

“திரும்பவும் அதையேத் தான் கேட்கிறேன் விஜய். நீங்க யாரு எனக்கு? என் பெரியப்பா,  மக கணவன் நீங்க. உங்களுக்கும், எனக்கும் இருக்கும் உறவு, அது மட்டும் தான். அப்படி  இருக்க,  எந்த  உரிமையில்,  எந்தச்  சொந்தத்தில் என்னை   அடிக்கறீங்க?

நீங்கத்  தான்  சுமன்  மாதிரி,  ‘பெண்களைப் படுக்கைக்கு மட்டும் யூஸ் செய்யும், ‘தேர்ட் கிரேடு பொம்பளை பொறுக்கி’ ஆச்சே! என்னவோ என்னைக் காதலித்து போலவும், தொட்டுத் தாலிக் கட்டி விட்ட கணவன் போலவும்,  இப்படி குதிக்கறீங்க!

ஏன்  செத்து போனா… போலீஸ் உங்களைப் பிடிக்கும்ன்னு பயமா?
ஒரு பெண்ணைக்  கிஸ் செய்ய,  ஒன்று நீங்க அவ காதலனா இருக்கணும், இல்லை  கணவனா  இருக்கணும்.  நீங்க  இது  ரெண்டுமே  இல்லை  என்னும்  போது,  அடிக்க  மட்டும்  எங்கிருந்து  உங்களுக்கு  உரிமை  வந்தது  விஜய்?

திரும்பவும்  கேட்கறேன். 
Who are you to me?…
நோ  ஒன்.

நான் எங்கே வேண்டுமானாலும் போவேன், எங்கே வேண்டுமானாலும் வருவேன். யார் கூட வேண்டுமானாலும் அதைச் செய்வேன்.
ஸோ, மிஸ்டர். விஜய கருணாகரன்,  டோன்ட்  ஆக்ட்,  அஸ்  தோ  யு  ஹாவ்  ரைட்ஸ். ஸ்டே ஆன் யுவர் லிமிட்ஸ்.” என்று  கண்கள் கோவத்தில் சிவக்க, கர்ஜித்தவள்,

“ஆல்வின்  அண்ணா!…  நான்   வீட்டுக்குப்  போகணும். கார் அரேன்ஜ் செய்து  தரீங்களா?…  இல்லை  நானே, கால் டாக்ஸி பிடிச்சு போகவா?…” என்றவள்  மற்ற  மூவரும்  திக்பிரமை   பிடித்து  அதிர்ந்து  போய்ச்  சிலையாய்  நிற்க,  தன்   தோளைக்  குலுக்கி   விட்டு   மதுரா,  அங்கிருந்து  நடக்க  ஆரம்பித்தாள்.

தவமாய் தவமிருப்போம்…

அடுத்த அத்தியாயம்

52

“அடப்பாவி விஜய்!... சும்மா இருக்கும் எரிமலையை அவசரபட்டுச் சொறிஞ்சு  விட்டுட்டியே!. உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்னு,  தீ மிதிச்சி,  அலகு குத்தி,  காவடி  எடுத்தாலும்,  வேலைக்கு ஆகாது  போல்  இருக்கே! மதுரா  சும்மாவே  ஆடுவா!. சோனாவுக்கு, அடி கொடுத்த  போதே  தெரியலையா?இப்போ,  நீ …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்