arrow_back
என்ன தவம் செய்தேன்! 52
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 52 / 85

52

visibility 13
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

“அடப்பாவி விஜய்!… சும்மா இருக்கும் எரிமலையை அவசரபட்டுச் சொறிஞ்சு  விட்டுட்டியே!. 
உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்னு,  தீ மிதிச்சி,  அலகு குத்தி,  காவடி  எடுத்தாலும்,  வேலைக்கு ஆகாது  போல்  இருக்கே! 

மதுரா  சும்மாவே  ஆடுவா!. சோனாவுக்கு, அடி கொடுத்த  போதே  தெரியலையா?
இப்போ,  நீ  நிஜ  வில்லன்  ஆகிட்டேயே!

போய்ச்   சூர்யாவுக்கும்,  மதுரவுக்கும்  திருமணம்  நடக்கும்.  அட்சதைத்  தூவி ஆசீர்வாதம்  செய்து  மொழி எழுதிட்டு, ‘எங்கு இருந்தாலும் வாழ்க!….
உன் இதயம் அமைதியில் வாழ்க!… மஞ்சள் வளத்துடன்
வாழ்கன்னு!…’ பாடிட்டு சுத்து.

தேவையடா உனக்கு இது?… பெரிய இவனாட்டம்….” என்று பொரிந்து   தள்ளினான்   ஆல்வின்  கடுப்புடன்.

விஜய்யை  ஒரு காய்ச்சு காய்ச்சி விட்டு, வேகமாகச் சென்று கொண்டு இருந்த   மதுராவின்   பின்   ஓடினான்.

“மதுரா!..  சிஸ்டர்!… நில்லுங்க. சாரி… ரொம்ப சாரி… அவன் ஏதோ தெரியாம… அவன் ரொம்ப ரொம்ப நல்லவன். உங்களுக்கு நல்லது செய்வதாய் நினைத்து… அவன் உங்களைக் காதலித்து…” என்று மேலும் ஏதோ  சொல்லப்  போனவனை,  ஒரு கைக்காட்டித் தடுத்து நிறுத்தினாள் மதுரா.

“உங்க நண்பர், ‘நல்லவர், வல்லவர் நாற்பது கூட தெரிஞ்சவராகவே’ இருக்கட்டும்.  எனக்கு  அது  தேவை  இல்லாதது.

நீங்கத் தான் அவர் என்னை   விரும்புவதாகச்  சொல்றீங்க.
ஆனா, அவர் என் கிட்டே நடந்த முறை, அவர் பேசிய வார்த்தைகள், ‘ஒண்ணாம்  நம்பர்  பொம்பளை பொறுக்கி:  செய்யும் வேலை.

அவர் லவ் செய்தால்   மட்டும்,  இப்போ   என்னை  என்ன  செய்யச்  சொல்றீங்க?
அவர்  திருமணம் ஆனவர் அண்ணா. கூப்பிட்டு வைத்து நாலு பேருக்கு முன்,  ‘உனக்கும், என்   புருஷனுக்கும் affairரா, நீ என்ன சின்ன வீடா?… வைப்பா…? மானத்தை வாங்கினாலே, என் சகோதரி…. அதை உண்மை என்று நிரூபிக்கச் சொல்றீங்களா?

யார்  வேண்டும் என்றாலும்,  யாரை  வேண்டும்  என்றாலும் லவ் செய்யலாம். ஆனால்,  உங்க நண்பர், இப்போ ஊர் உலகத்தின் முன் சோனாவின்   கணவன்.

நான்  இன்னொருத்தியின்  புருஷனை  மடக்கினதாக, வலை வீசிப் பிடித்ததாகத் தான் எல்லாரும் சொல்வார்கள்.

இந்த, ‘இன்னொருத்தியின் புருஷனோடு,  அமரக் காதல், தெய்வீக காதல், கத்திரிக்காய், புண்ணாக்கு’ எல்லாம்  கதையில்,  டிவி  தொடரில்  வேண்டும் படிக்கப் பார்க்கவே, குமட்டிக் கொண்டு வரும்.

நிஜ வாழ்க்கையில், பச்சைப் பச்சையாய் பெயர் வைப்பாங்க. சோ, உங்களுக்கும்  கோடி  வணக்கம். உங்க  நண்பருக்கும்  கோடி  வணக்கம்.

இனி, ‘அசின்  பின்னாடி,  ‘பாதுகாவலன் வேலைப் பார்த்த, ‘ஆக்டர் விஜய்’ போல்,  இந்த விஜய் அலைய வேண்டாம்.

ஒரு பெண்ணின் மானத்தோடு, விளையாடிவரின்  பாதுகாப்பு  எனக்கு  வேண்டாம்.
இவருக்கு,  அந்தச் சுமன் எவ்வளவோ மேல். அவன் இவரைப் போல் தன் செயல்களை மூடி மறைத்து,  வேஷம் போடவில்லை.

இந்தப் பக்கம் காப்பாத்துவாராம், அந்தப் பக்கம், ‘உன் உடம்புத் தான் வேண்டும்’ என்று நடப்பாராம். உலக, மகா மெகா குழப்பிஸ்ட். ஆளை விடுங்க சாமி. நீங்க இருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு.” என்று பொரிந்தவள் மீண்டும் திரும்பி நடக்க   ஆரம்பித்தாள்.

“மதுரா!… இல்லங்க நீங்கத் தப்பாப் புரிஞ்சுட்டுப் பேசறீங்க. நீங்க அண்ணாவோட… உயிர்… அவரின்….” என்ற மிருதுளாவை  மதுராவின் கோபப் பார்வைத் தடை செய்தது.

“நான் புரிந்து கொண்டது, தப்பாவே இருக்கட்டும். உங்க நொனன், ‘உத்தமராவே’ இருக்கட்டும். எனக்கும், அவருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
அவர் யாரோ!…
நான் யாரோ!….

ஹி  ஹாஸ், நோ ரைட்ஸ் ஓவர் மீ. அது அப்படியே இருந்தால் தான், எல்லோருக்கும் நல்லது. நான் கால் டாக்ஸிப் பிடிச்சு கிளம்பறேன். என் ஹாண்ட்பாக், உங்க அண்ணன் காரில் இருக்கு.

கொஞ்சம் எடுத்துக் கொடுத்தால் கிளம்பிட்டே இருப்பேன். அந்த ஆள், இருக்கும் இடத்தில நிற்கக்  கூட  அருவெறுப்பா இருக்கு.” என்றவளின் பேச்சைக்  கேட்டு  மூவரும், மீண்டும்  ஸ்தம்பித்து  போனார்கள்.

விஜய்  மனதளவில்  உடைந்து  போனான்.
அவன் எதிர்பார்த்த ரியாக்ஷன் இது  தான்  என்றாலும்,  இப்படி  அவள்  தன்னை  ஒதுக்க  வேண்டும்  என்று தான், அவன் வில்லன் வேஷம் ஏற்றது என்றாலும்,  அவளின் ஒதுக்கம், பாராமுகம், கோபம் கண்டு, தன்னை அவள் முழுவதுமாக ஒதுக்கியதை கண்டுப்  பித்து  பிடித்தது  போல் ஆனான்.

‘என்ன  தான்பா நடக்குது இங்கே!.. அதான்  அவ்வளவு  எவிடென்ஸ்,  விஜய்  உன்னை  லவ் செய்வதாகக் கிடைத்ததே!…
ஹீரோவை, வில்லன்  ஆக்கி  விட்டு  நிக்கறே!… 
டோட்டலா  விஜய்  கேரக்டர்,  கிளோஸ்  பண்ணிட்டியே ஆத்தா!…
விஜய்  முகத்தைப்  பார்க்கவே  முடியலை… பாரு பிள்ளை  முகம் எப்படி வாடிப் போச்சுன்னு…’  என்று  மனசாட்சி  அவளை  வறுத்து  எடுக்க,  ரகசிய புன்முறுவல்  முகத்தில்  படர, அதை மற்ற மூவரும் பார்க்கும் முன் மறைத்தாள்  மதுரா.     

“மதுரா!… இரு மா. தனியா போக வேண்டாம். நானே கூட்டிப் போகிறேன்.” என்றவன்  செக்யூரிட்டிக்கு  அழைக்க,  விஜய்  கார், ஹாஸ்பிடல் வாயிலுக்குக்  கொண்டு  வரப்பட்டது.

“ஒரு நிமிஷம் அண்ணா!… மிருதுளா! .
நீங்க ரெண்டும் பேரும் செய்வது உன்னத வேலை… உயிரைக் காப்பாற்றுவது, பிரச்சனையிலிருந்து மற்றவர்களைக்  காப்பாற்றுவதைச் சொல்கிறேன்.

டாக்டர்,  ‘கடவுளுக்குச்  சமம்’. ஆனா,  உங்க, ‘டாப் priority’ உங்க மக ஜான்சியா  தான் இருக்கணும். உங்க அம்மா வயசானவங்க. அவங்க தூங்கும்  நேரம்  பார்த்து,  ஜான்சி  தன்  இஷ்டத்திற்கு இங்கே, அங்கே என்று  சுற்றிக்  கொண்டு  இருக்கிறாள்.

பக்கத்துக்கு வீட்டுக்கு விளையாடப் போன ஒரு பெண் குழந்தையின் நிலைமை… இதே  சென்னையில்  தானே நடந்தது.
அது ஒரு அபார்ட்மெண்ட்  அங்கேயே  அப்படி!
பள்ளியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த, 10 வயது சின்னப் பெண்ணைக்  காரில் கடத்தி, காமுகர்கள் வேட்டையாடியதும், இதே சென்னையில்தான் அரங்கேறியது.

இப்படி தொடைக்கு மட்டுமே சிந்திக்கும் நாய்களுக்கு, அரசியல் கட்சி பின்பலம், அரசியல்வாதிகள் ஆதரவு, போலீஸ் பாதுகாப்பு, ஆட்சியர்கள்  ஆதரவான பேச்சு என்று பல கன்றாவிச் சாக்கடைகளும், இங்கே ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

ஆனா,  இது  பெரிய ஹாஸ்பிடல். தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிங்க, அவங்க உறவினர், நண்பர்கள் வந்து போற இடம். நூறு ஸ்டாப் வேலை செய்யும் இடம். யார் எப்படி என்று தெரிந்து கொள்ள முடியாது. 

இவங்க  நடுவில்,  மகளைக்  கண்காணிப்பு  இல்லாம  விடறீங்க.
சோ, அவ கிட்டேப் பேசுங்க. அவ பாதுகாப்பிற்கு ஏதாவது, alternate வழி செய்யுங்க.

பெற்றோர்  இருவரும்,  வேலைக்குச்  செல்வது  தவிர்க்க முடியாது தான். ஆனால்,  உங்க மகளை விட வேறு எதுவும் முக்கியம் இல்லை.

இங்குச்,  ‘சுமன்,  சோனாவை  போல மனவிகாரம் பிடித்த ஆண்கள், பெண்கள்’  உண்டு.  நாம   தான்  பாதுகாப்பா  இருக்கணும்.. சாரி, உங்களைக்  குறைச் சொல்லணும்  என்பதில்லை.  தனியா  இங்கே, என் அறை  வரை  வந்து  ஜான்சி  பேசிட்டு  இருந்தா.

அவளைப்  பெரியவங்க  யாரும்  இல்லாம,  தனியா  விடப்  பயமா  இருந்தது.  அதான்  பார்க்கில்,  அவ  பாட்டி வரும் வரை, கூட விளையாடிட்டு இருந்தேன்.  சாரி…” என்றவள் காரில் ஏறி அமர்ந்து விட்டாள் .

மீண்டும்  மூவரும்  அதிர்ந்து  போய்  நின்றனர்.
அடுத்த  நொடி  மூவரும்,  பின்னால்  இருந்த  வீட்டை  நோக்கி,  ஏறக்குறைய  ஓடினார்கள்.

ஜான்சி அங்குப் பத்திரமாக இருப்பதை, கண் கூடாகக்  கண்டப்  பிறகே,  மூவருக்கும்  ஒழுங்காய்  மூச்சு  விட  முடிந்தது.
அவர்கள் ஓடுவதைக் கண்ட, மதுராவின் இதழில் மெல்லிய புன்முறுவல் எழுந்தது.

கடவுள் நேரில் வந்து அனைவரையும் காப்பாற்ற முடியாது தான். சில சமயங்களில்,  இது போல்  எச்சரிக்கை  பல பெற்றோர்களுக்குக் கிடைப்பதும்  இல்லை.

மற்றவரின் மேல் நம்பிக்கை வைத்துத் தான் பெற்றோர்கள் வேலைக்குச் செல்வது. அந்த   நம்பிக்கை  தகர்க்கப்படும் போது, எதற்காக,  யாருக்காக  ஓடி, ஓடி வேலை செய்தார்களோ, அவர்களே இல்லாத போது, குற்ற உணர்ச்சி  என்னும்  கொடிய  அரக்கனின்  பிடியில்,  மாட்டித்  திக்கித் திணறி, ‘அழகான  குயில் கூடு பல சூறாவளியில் சிக்கிச் சின்னாபின்னமாகி விடுவதும்’ நடப்பதுண்டு.

ஜான்சி  போன்ற  சிறு  பிள்ளைகள்,  ஆணோ,  பெண்ணோ  கண்காணிப்பில் வைத்து இருப்பது அவசியம்.
மனித வக்கிரத்தின் அளவுக் கோல்  யார்  அறிவார்!…

அதிர்ந்து பேசத் தயங்குபவன் கூடக், கூட்டத்தோடு இருக்கும் போது, வெடிகுண்டைத் தூக்கி வீசித் தயங்க மாட்டான்  என்பதே நிதர்சனம்.

ஒருவன்  மனிதன் ஆவதும், மிருகம் ஆவதும் ஒரு சூழ்நிலையில் அவன் எப்படி   ரியாக்ட்   ஆகிறான்   என்பதை  பொறுத்தே!

அதை  முன்  கூட்டியே யாரால்,  தான்  உணர்ந்து  அறிய  முடியும்!… 
நம்மால்   முடிந்தது   தற்காப்பு  மட்டும்  தான் .
ஜான்சி போன்ற சிறு பிள்ளைகளின் நிலை இது என்றால், பருவப் பெண்களை,  வாலிப  ஆண்களைத்  தவறான  வழிக்குக்  கொண்டு செல்லும், நிறைய  ஊக்குவிப்பான்கள்  நாட்டில்  உண்டு. அதில் நட்பு, காதல், சோசியல்   மீடியா,  சொசைட்டி  பெரும்  பங்கு  வகிக்கிறது.

‘உன் நண்பனைப் பற்றிச் சொல், உன்னைப் பற்றி நான் சொல்கிறேன்’ என்பது  இது  தான்.

விஜய், ஆல்வின், பாலாஜி போன்ற நண்பர்கள் வாழ வைப்பவர்கள். சோனாவின்   நண்பர்  கூட்டம்,  ‘அழிவுக்கு’ வழி வகுப்பவர்கள்.

தடம்  மாறிப்  போன  இந்த வயது பிள்ளைகள் தான், பின் நாளில் தற்கொலைப்  படைத்  தாக்குதல்,  நடத்தும் தீவிரவாதிகளாகவோ,  இன்னொரு உயிர் போகக் காரணமாகவோ ஆகி விடுகிறார்கள்.

இந்தக்  கூட்டத்திற்கு,  ‘காதல்’  என்பது  பொழுதுப் போக்கு.

தீவிரவாதிகளின்  தற்பொழுதைய  ஆயுதம்,  ‘காதல்’  தானாம்.  காதல்  என்ற பெயரில், காதலுக்காக எதை வேண்டும் என்றாலும் செய்யத் தயாராய் இருக்கும்  ஆண் /பெண்களைத்  தீவிரவாதிகளாக மாற்றுவது தான்.

அதனால்  தான், எழுபத்தியாறு   வழுக்குகள், ‘Love jihad’ RAW /NIA (RESEARCH அனாலிசிஸ் விங் /நேஷனல் இன்வெஸ்டிகஷன் AGENCY) பதிவு செய்து உள்ளது.’  என்று  நிதர்சனத்தை   நினைத்துப்  பார்த்த  மதுராவின்  உள்ளம்  குமுறியது.

தன்னார்வலராக,  வேலையாகத் தொண்டு நிறுவனங்களுக்குச் செல்லும் இடங்களில்,  இவ்வாறு பாதிக்கப்பட்டப் பெண்கள்,  கை  விடப்பட்ட அனாதை  குழந்தைகளைப்  பார்த்து விட்டு,  ஷாப்பிங் மால், சினிமா, பீச், பார்க் போன்ற  இடங்களில்,  சுற்றும்  ஜோடிகளைப்  பார்க்கும்  போதும் மதுராவின்   மனம்   வேதனை  அடையாமல்  இருந்தது  இல்லை.

இவர்கள் யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள்!…
தங்களையேவா இல்லை, பெற்றோர்களையா?…
இதில் எத்தனை காதல் உண்மையானது?
எத்தனை காதல்,  திருமணத்தில்  முடிகிறது?

இவ்வாறு நடந்த திருமணங்கள், கடைசி நொடி, உயிர் போகும் வரை எத்தனை நிலைத்து இருக்கிறது!

இதில் எத்தனை டைம் பாஸ் காதல்?

இவர்களின் பெற்றோர் இதை எல்லாம் கவனிக்காமல், என்ன செய்கிறார்கள்?

பெற்றோரின்  கண்ணில், மண்ணை தூவி விட்டு, இவ்வாறு செல்லும் தைரியம் எங்கிருந்து வருகிறது?
எங்குப் பெற்றோர் தோல்வி அடைகிறார்கள்?

ஒவ்வொரு  பள்ளி,  கல்லுரியின்  அருகே,  ‘காதல்  என்ற  பெயரில்  காமத்தைத் தீர்த்துக் கொள்ள  நிற்பவர்களை  நம்பி’,  ‘இது  தெய்வீகக்  காதல்’  என்று நம்பி  ஏமாறும்  விட்டில்  பூச்சிகள்  எத்தனை?

போர்சன்  முடிக்க,  தேர்வுகள்  நடத்த  துடிக்கும்  பள்ளிகள்,  ‘வகுப்பில்  முதல்  வந்தால்  போதும்’,   என்று  நினைக்கும்  பெற்றோர்கள்,  இந்தப் பள்ளி, கல்லூரி அருகே இருக்கும், ‘ரோடு சைட் ரோமியோக்களை’ ஏன் கண்டுக் கொள்வதில்லை?

இந்த  வல்லூறுகளின்  பலி,  தங்கள்  வீட்டுப்  பெண்ணாய்  கூட  இருக்கலாமே!…’ என்று ஏன் நல்லதை  செய்ய,  காவல்துறை  உதவியை  எதுவும்  கெடுதல்  நடப்பதற்கு  முன்’  ஏன்  நாடுவதில்லை?        
    
5, 10  வயதெல்லாம்  லவ்  சொல்லும் வயது, லெட்டர் பரிமாறிக்  கொள்ளும்  வயதாகிப்  போனது,  முன்  பின் பார்க்காதவனை  நம்பி,  ரயில்   ஏறி  விடுவதும்,  சமுதாய  சீர்கேட்டை  அல்லவா  காட்டுகிறது.

காதல்  என்றால், ‘அது  காதலுக்கு மரியாதை, அலைகள் ஓய்வதில்லை’ போல் அங்கு முடிவதில்லை.

அதன்  பிறகு,  நிஜ வாழ்க்கையில் ஜெயிப்பதில் இருக்கிறது என்பதை இவர்களுக்கு யார் சொல்வது?’     மதுரவால்,   இவ்வாறு  எண்ணாமல் இருக்க முடியவில்லை .

‘எல்லாமே  ஒன்றுடன்  ஒன்று’,  இணைந்தவை  என்று  நினைக்கும் போது பெருமூச்சு  எழுவதையும்  அவளால்  தடுக்க  முடியவில்லை.

நல்ல திருமணமே… நல்ல தாம்பத்தியம் (இல்லறம் )
நல்ல தாம்பத்யமே!… நல்ல சந்தானம் (பிள்ளைகள் ).
நல்ல பிள்ளைகளே!… நல்ல சமூகம்
நல்ல சமூகமே!… நல்ல உலகம்.’

இதைத் தானே எல்லா மத திருமணங்களும் வலியுறுத்துகின்றன! திருமணத்திற்கு அதனால் தானே, இவ்வளவோ முக்கியத்துவம், சிறப்பு கொடுக்கப்படுகிறது.

உணர்வாலும்,  மனதாலும் ஒத்த கருத்துக்களை உடையவர்கள் சேர்வது தான் நல்ல திருமணம்.
அது  இல்லாத போது  வாழ்க்கை  நரகம்.
அதற்கு  உதாரணம்  கஜா –மரகதம், சிவகாமி  ,சோனா -விஜய் ,ரூபிணி -திவாகர்.

நல்ல துணை கிடைத்தாலும், அதைப் போற்றிப் பாதுகாக்க தெரியாமல், வாழக்கையைத் தொலைப்பவர்கள்  நிறைய உண்டு.
உதாரணம் –சொர்ணா, சோனா, திவாகர்.

நல்ல இல்லறம் இருந்தாலும், பெற்றோர்களையும் மீறும் பிள்ளைகள் கிடைப்பது நரகம்.
உதாரணம் மாசிலாமணியும் சுமனும், சேது, கனகா, சோனா, சொர்ணா.

நல்ல பிள்ளைகள் இல்லை என்றால்,  சமூகம் இல்லை.
சுமன், சோனாவால் பாதிக்கப்பட்டது  மற்ற  வீட்டு  பிள்ளைகளே, ஒட்டு மொத்தச் சமூகமே.

இப்படி சமூகம் முழுவதும் அழிந்து போனால், உலகம் மட்டும் எப்படி அழியாமல்  இருக்கும்?

இதில்  ஒன்று  தவறினாலும்,  உலகத்தில் உள்ள அனைவர்க்கும் இழப்பு தான். பெரியவர்களின்  இந்தத் தத்துவம், ‘இந்த ஷாப்பிங் மால், சினிமா, பார்க்,  பீச்  காதலில்’  காணாமல் போகிறது.

நம்பி  ஏமாறுவதும்  தப்பு, நம்பியவர்களை ஏமாற்றுவதும் தப்பு .
இது எதுவுமே, ‘ இந்த  டைம்  பாஸ்  காதலில்’ இருப்பதில்லை.
விட்டில் பூச்சிகளாய் வாழ்க்கை அழிந்து, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பயன்?’

தன்  எண்ணப் போக்கில்,  உழன்று  கொண்டு  இருந்தவள், பின் பக்கக் கார் கதவுத் திறந்ததைக்  கண்டு, கவனம் சிதறினாள்.

கதவைத் திறந்து கொண்டு வந்த மிருதுளா, மதுராவை அணைத்து கண் கலங்கி விட்டாள் .

தவமாய் தவமிருப்போம்…

அடுத்த அத்தியாயம்

53

"தேங்க்ஸ் மதுரா!... ரொம்ப தேங்க்ஸ்மா. நீ சுட்டிக் காட்டும் வரை, எங்களுக்குப் புரியவேயில்லை.நானும் அவரும் ஓடி, ஓடிச் சம்பாதிப்பது ஜான்சிக்காகத்  தான்.  தினமும்  எங்கள்  இருவரின்  தொழிலில், இது போன்ற  வக்கிரங்களை  பார்த்துக்  கொண்டு தானே இருக்கிறோம்!ஆனால்,  நீ  சொல்லும்  வரை, …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்