arrow_back
என்ன தவம் செய்தேன்! 56
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 57 / 85

56

visibility 15
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

மதுராவிற்கு அவள் கல்லூரி நாட்களில்  அறிமுகமாகி, நடுவில் காணாமல் போயிருந்த, ‘தன் உத்தம் அண்ணனை’ கண்டதும், வானத்துக்கும், பூமிக்கும் குதிக்காதக் குறை.

அவளுக்கு உத்தமை பார்த்தது சந்தோஷமாக இருக்கலாம். ஆனால், எல்லோரும், அதே மனநிலையில் அங்கு இல்லையே!

“மதுரா!..”  என்று  இடை  இட்ட  சேது, 
“சார்!… எப்படி உனக்குப் பழக்கம் என்று  சொல்லவே  இல்லையே!…” என்றார்  மகனின்,  முகம்  போகும்  போக்கு   விரும்பாதவராக.

விஜய் முகம் பார்த்தே, வீட்டிற்குள் வந்திருப்பவன், ‘மகன் மனதிற்கு உகந்தவன்   இல்லை’  என்பதை  அந்தத்  தந்தை  மனம்  புரிந்து  கொண்டது.

இவரே, ‘மதுராவுடன்  எப்படி  விஜய்யை  சேர்த்து வைப்பது’ என்று தலையில் உள்ள, எல்லாம் முடியையும் பிய்த்துக் கொண்டிருக்க, இதில் புதிதாய், ‘ஒரு இளவரசன், உள்ளே நுழைந்து ஆட்டத்தைக் கலைக்கிறானே’  என்று கடுப்பாகிப் போனார்.

மதுரா வருவதற்கு முன்னே, ‘உள்ளே வந்த இவன் தோரணையே இப்படி இருக்கிறது  என்றால்,  அப்போ  இவன்  வேலை செய்யும் அந்த இளவரசன்!…’ மனம்  புரிந்து  கொள்வது எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. 

இப்போத்  தான்  மகனுக்குப்  பிடித்து  இருந்த,  ‘கார்த்திக்’  பைத்தியம்  மதுரா அடிச்ச, ‘பூரணி  என்ற வேப்பிலையில் விட்டு இருக்கு’ என்று அவர் சந்தோஷபடுவதற்குள், ‘ஜெய்ப்பூரிலிருந்து இளவரசன் ஒருவன் இறங்கவில்லை  என்று  யார்  அழுதது  இங்கே?’  என்று  மனதிற்குள் புலம்பிக் கொண்டுத்  தான்  இருந்தார்  சேது.

அவர்  மகனுக்கு  மட்டும்,  வித  விதமாய்,  ரக  ரகமாய்  அழகான வில்லன்கள்  எங்கிருந்து  தான்  கிடைப்பார்களோ!….    

மகன், தேவையில்லாமல்,’ யானைத் தன்  தலையில், தானே மண்ணை வாரி கொட்டிக் கொள்வது’ போல்,  ஏடாக் கூட வேலை செய்து, ‘ஹீரோ என்ற நிலையில் இருந்து இறங்கி, ‘அவனே வில்லன் ஆகி நிற்கிறான்’ என்ற உண்மை, அந்த தந்தை அறியவில்லை.
     
“இவங்க என் பெரியப்பா, தன்வீர் அண்ணா!… அப்பாவோட அண்ணன். பெரியப்பா  தன்வீர்  அண்ணா,  குன்னூரில்  என்  சீனியர். என் காலேஜ் தான் படிச்சாங்க.

ரகுவை  விடத்,  தன்வீர்  அண்ணா என் பெஸ்ட் பிரெண்ட்… ஆக்ஷன் ஹீரோ ரேன்ஜ்க்கு சண்டை போட்டு,   இவங்க தான், சில ரவுடிக் கிட்டே இருந்து  என்னைக்  காப்பாத்தினாங்க.

கொட்டும்  மழை  என்று  கூடப்  பார்க்காம,  இவரும்  இன்னொருத்தரும்  தான் வீடு  வரை  துணைக்கு வந்தாங்க. சோ, அப்போ இருந்து இவர், ‘பவானியின் தத்துப் பிள்ளை’ ஆகிட்டார்.
அம்மாவின் கைப்பக்குவத்திற்கு, பரம விசிறி  இந்த  அண்ணா.

அம்மாவும்,  பிள்ளையும்  சேர்ந்து,  என்னைப்  போர்ட்டர் ஆக்கி இருக்காங்க.  இவ்வளவுப்  பெரிய குண்டானில்,  தன்வீருக்கு சாப்பாடு சுமந்து சுமந்து  என்  கை  ஒடிந்தது  தான்  மிச்சம்.” என்றாள்  மதுரா  புன்னகையுடன்.

“இப்போ இங்கே,  என்ன வேலையாய்  வந்து  இருக்கார்  உங்க  அண்ணன்?” என்றார்  சேது  ஒரு  விதக் குரலில், ‘ஏன் வந்தாய்?’ என்ற மறைமுக   எச்சரிக்கை   விடுத்து   கொண்டு  இருந்தார்.

சேது, அப்படி சட்டென்று கேட்பார் என்று எதிர் பார்க்காதப் பவானி திகைத்துப்  போனார்.

தன்வீர்  வந்ததிலிருந்து, அங்கு நிலவும், ‘ஒரு வித கோல்ட் வார்’ பவானி உணர்ந்தே இருந்தார். அவன் வரவை அவர்கள் யாருமே விரும்பவில்லை என்று அவருக்குப் புரிந்து தான் இருந்தது.

‘அவன்  யார்’  என்று  மகள்  சொல்லும்  வரை,  அவரும்  அதே  மனநிலையில்   தான்   இருந்தார்.

ஆனால், ‘அவன்  மகளின்  மானத்தை  காப்பாற்றியவன்,  மகள் அண்ணனாக  ஏற்று கொண்டு இருந்த ஒருவன், தனக்கு மூன்றாவது பிள்ளை’ என்று உணர்ந்த பவானியால், சேதுவின் இந்த மறைமுக கேள்வியை   ஜீரணிக்க   முடியவில்லை.

வீட்டு   பெரியவரை  எதிர்த்தும்,  அவரால்  எதுவும்  பேசவும்  முடியவில்லை.

மதுராவிற்கு,  அந்த   மாதிரித்   தயக்கம்  எல்லாம்  எதுவும்  இல்லை
“என்ன  பெரியப்பா  கேள்வி  இது!… தங்கையைப் பார்க்க, அண்ணன் வராம, வேறு யார் வருவா?” என்றாள் சேதுவின் எச்சரிக்கையை உணர்ந்தும்,  அதைக்  கண்டும்  காணாத  மாதிரி  இருந்தாள்.

“உன்  அண்ணன்,  உனக்கு  அண்ணனாக  மட்டும்  வந்து  இருந்தால்,  நான் ஏன்  கேள்விக்  கேட்கப்  போகிறேன் மதுரா? 
உன் அண்ணன்,  இப்போ வந்து இருப்பது,  ‘ஜெய்ப்பூர்  ராஜவம்ச பிரதிநிதியாக. இளவரசர் சூர்ய பிரதாப்பின்  பி.ஏவாக…’  அதன்  காரணத்தைத்  தான்  கேட்கிறேன்.” என்றார்  சேது  கடுமையான  குரலில்.

மதுரா  பதில்  சொல்வதற்குள்,  “சாரி  பெஹன்.  உன் பெரியப்பா சொல்வது சரி தான். நான் இங்கு, உன் அண்ணனாக வரவில்லை தான்.

இளவரசரின்  பி.ஏவாக,  அவர்  கொடுத்த  வேலையைச் செய்யத் தான் வந்து இருக்கிறேன்.
இளவரசர் அனுப்பியக் காரணத்தை, இத்தனை பேர் மத்தியில் சொல்ல எனக்கு  அனுமதி  இல்லை… தனியாகப்  பேச  வேண்டும்  சிஸ்டர். கொஞ்சம் வருகிறாயா?”  என்றான்  உத்தம்  சற்றும் அசராமல்.

விஜய்யின் கோபம் எல்லை மீற, அவனைப் பிடித்து நிறுத்த ஆல்வினும், பாலாஜியும்  திணறித்  தான்  போனார்கள்.

மதுரா, அங்கு மௌன பாஷையில் நடந்தப் போரினையும், அனைவரின் எண்ணத்தையும் புரிந்து கொண்டவள், “அம்மா!… அண்ணாவுக்குப் பிடித்த பிஸிபேளாபாத்  செய்மா.  நாங்க  போய்ப்  பேசிட்டு  வரோம். வாங்க தன்வீர் அண்ணா.”  என்றவள்  மற்றவர்கள் எதையும் சொல்வதற்கு முன், தன்வீரோடுத்  தோட்டத்திற்கு  சென்று விட்டாள் .

மதுராவின்  இந்த  செயல்,   யாருக்கும்  உகந்ததாக  இல்லை. மற்றவர்களுக்கு, ‘பிடித்து இருக்கிறதா, இல்லையா’ என்பதைப் பற்றி, மதுரா சிறிதும் கவலைப்படவும் இல்லை.

மதுராவின்  இந்த உதாசீனத்தைத், தாங்க முடியாத விஜய், சட்டென்று வெளியே சென்று விட, அவன் பின்னால் ஆல்வின், பாலாஜி, சேது, கார்த்திக், ரகு சென்றனர்.

தோட்டத்தில்  இருந்த கல்மேடையில் அமர்ந்த மதுரா, தன்வீர் அமர நாற்காலி  கொண்டு  வந்து  கொடுத்து,  அவன்  அமர்ந்ததும்,  “சாரி அண்ணா… பெரியப்பா  இப்படி  பேசுவாங்க  என்று  நினைக்கலை… சாரி..” என்றாள் .

உறவு  என்றால்,  இப்படி தான் இருக்க வேண்டும் பெஹன்… அப்படி அப்பா, அம்மா என்று இரு பக்க உறவுகளுடன், தாத்தா, பாட்டிகளுடன், உற்றம், சுற்றம் என்று எல்லோரையும் அரவணைத்துச் செல்பவன் தான் உண்மையில்  செல்வந்தன்.

அந்த விதத்தில் நீ கொடுத்து வைத்தவள்… உன்னை உள்ளங்கையில் வைத்துத்  தாங்க,  உனக்கு  ஒன்று  என்றால்  பதறித்  துடித்து,  உலகத்தையே  எதிர்க்க உன் அம்மா, அப்பா ரெண்டு பக்கமும், இத்தனை பேர்  இருக்கிறார்களே! 

பணத்தை  சேர்த்து  வைப்பதால் ஒரு  யூஸ் இல்லை… ஒரு நிலநடுக்கம், சுனாமி  வந்தால் போதும்… பணக்காரன் கூடத் தெருவில் தான்… ஆனால், உன்  பெற்றோர்,  உனக்குச்  சொந்தத்தைச்  சேர்த்து  வைத்திருக்கிறார்கள். அது  தான்  அவர்களின்  உண்மையான  பரிசு  உனக்கு.   
    
அவர்,  உன்  பெரியப்பாவாக  மட்டும்  இல்லையே  பெஹன்…. விஜய் சாரின், அப்பாவாகத் தானே பேசுகிறார். இது எல்லாம் unavoidable.
நீ கவலைப் படாதே,  என்  மனம்  சங்கடப்படும்  என்று.

உன்  உறவு, எனக்கும் உறவு  தான். அவர் எனக்கும், அப்பா மாதிரியான மனிதர்  தான். நாம  எல்லோருக்கும்,  எல்லா  சமயமும்,  நல்லவங்களா இருக்க முடியாது  தானே!…

சொல்லு… நீ எப்படி இருக்கே!… உன்னை ரொம்பவே   மிஸ்   செய்தோம்   தெரியுமா?” என்றான் தன்வீர்.    
 
“ரொம்ப  நல்லா,  ஷேமமா இருக்கேன் அண்ணா. எந்தக் குறையும் இதுவரை கடவுள்  கொடுக்கவில்லை… அப்படியே  கொடுத்தாலும், அதைச் சமாளித்து மீண்டும் வர மனத்துணிவையும் சேர்த்தேத் தான் கொடுத்து உள்ளார்.  நீங்க  எப்படி  இருக்கீங்க?” என்றாள் மதுரா.

“சபாஷ்!… அந்த ஸ்பிரிட்… அந்த  நெருப்பு,  இன்னும் கிட்டே அப்படியே தான்  இருக்கு… இந்த liveliness உன்னிடம் மட்டுமே இருக்கும் மதுரா…” என்றான்  தன்வீர், மதுரா  கையைப்  பிடித்துக்  கொண்டு.

“உங்களை எல்லாம் ரொம்பவே மிஸ் செய்தேன் அண்ணா… எவ்வளவு இனிமையான நாட்கள் இல்லை அவை…. மீண்டும் அதே காலத்திற்கு, உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு, உலகத்தைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், சிட்டுக் குருவி மாதிரி சிறகடித்த, அந்த நாட்கள் திரும்பவும்  வராதா  என்று  இருக்கு  அண்ணா.

முதல்வன் படத்தில் அர்ஜுன் சொல்வது போல், ‘ரீவைண்ட் பட்டன்’ வாழ்க்கையில்  இருந்திருந்தால்  மிக  நன்றாக  இருந்திருக்கும்.” என்றாள் மதுரா.

ஒருவர்  கையை  இன்னொருவர்  பிடித்த  படி,  சற்று நேரம் அந்த அமைதியை,  இருவரின்  அருகாமையை  ரசித்தவண்ணம் அமர்ந்து இருந்தனர்  அந்த  அண்ணன்,  தங்கை.  

“பாரு உன்னைப் பார்த்ததும், ஜி அனுப்பிய வேலையையே மறந்துட்டு உன்னுடன் பேசிட்டே இருக்கேன் பாரு. இந்தா பிடி.” என்றவன் சோனாவின்,  அக்ரீமெண்ட்  பேப்பர்  எடுத்துக்  கொடுத்தான்.

அதைப்  படித்துப்  பார்த்த  மதுரா,  அதிர்ந்து  போனவளாய்  நிமிர்ந்து,
“என்ன  அண்ணா  இது!..  இப்போ எதற்கு, உங்க பாஸ் இந்த வேலை செய்து  இருக்கார்?. 
அவர்  ஏன்,  நாலு  கோடி,  எனக்காக  அந்தப் பிசாசிற்கு  கொடுக்க  வேண்டும்!…  இது  தேவையே இல்லையே!” என்றாள் குழப்பதுடன்.

“பாஸ், நாலு கோடி, சோனாவிற்கு கொடுத்தார் என்று யார் சொன்னது?” என்றான்  உத்தம்  புன்முறுவலுடன்.

“அண்ணா!…”  என்றாள்  மதுரா,  அவன்  சொல்வது  விளங்காமல் .

“நாலு கோடி இல்லை… நாலு அரைத் தான் கொடுத்தார் பாஸ்.” என்றான் உத்தம்,  மௌனச் சிரிப்பில் உடல் குலுங்க.

புரிந்து கொண்டதற்கு அடையாளமாய் மதுராவின் முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது.

“அதைக் கூட,  உங்கப் பாஸ் எனக்காக எதற்குச் செய்யணும்  என்று  தான்  கேட்கிறேன் அண்ணா?” என்றாள் மதுரா.

“சாரி  பெஹன். அது  தெரியணும்  என்றால்,  நாளைக் காலைப் பாஸை வந்து மீட் செஞ்சு, அவர் கிட்டேயே கேட்டுக்கோ. சொல்ல எனக்கு அனுமதி இல்லை.  இதையும்  பிடி. 
என்ன  பார்க்றே!  ஆஃப்பாயிண்ட்மென்ட்  ஆர்டர் தான்.

பாஸ், உங்களுக்கு, அவர் பி.ஏ வேலை கொடுத்து இருக்கார். சோனா, அக்ரீமெண்ட், இந்த வேலை லிங்க் எதுவும் இல்லை. இஷ்டம் இருந்தா வேலையில்  ஜோயின்  செய். நோ கம்பல்சன்

பாஸ்  நாளைக்கு  மீட் செஞ்சுட்டு, எந்த முடிவாக இருந்தாலும் decide செய்மா.  நான்  கிளம்பறேன்.  வர  விருப்பம்  இருந்தா,  இது தான் என் கார்டு. இது என் பர்சனல் நம்பர். கால் செய்து சொல்லு. நானே வந்து கூட்டிட்டுப்  போறேன்.  ஓகே  நான்  கிளம்பறேன்..” என்றான் உத்தம்.

“இருங்க அண்ணா.  நீங்கப் பாட்டுக்கு வந்தீங்க… போறீங்க… இந்த அணுகுண்டை வேற  சத்தம்  இல்லாம,  வெடிக்க வச்சுட்டுக் கூலா போய்ட்டு வரேன்னு கிளம்பறீங்க.
அம்மா கிட்டே, உங்களுக்குச் சாப்பாடு செய்யச் சொல்லி இருக்கேன். இருந்து சாப்பிடாமல் கிளம்பினால் எப்படி அண்ணா .” என்றாள் மதுரா.

“இல்லை பெஹன். இன்றைக்கு  வேண்டாம். நிறைய பேருக்கு மனக்கஷ்டம் வரும்.  இன்னொரு  நாள்  வந்து  சாப்பிடுறேன்.” என்றான் உத்தம்.

“என்ன உங்க பாஸ்க்கும், விஜய்க்கும், ‘அக்னி நட்சத்திரம்’ பட அசோக், கெளதம்’ என்று நினைப்போ?
சூடு ரொம்ப அதிகமா இருக்கு. உடம்புக்கு ஆகாது  ப்ரோ.” என்றாள் மதுரா.

“மதுரா!…” என்றான் உத்தம் அதிர்ந்து .

“விசுவாசத்திற்கு  மறுபெயர்  உண்டு  என்றால்,  அது  நீ தான்  தன்வீர் உத்தம் சிங்.” என்று, ‘பாஹுபலி  பட  டயலாக்’ விட்டுக் கலாய்த்த மதுராவின்,   தலையில்   நங்கு   என்று   கொட்டினான்  உத்தம் .

“நீ  இன்னும்  மாறவேயில்லை  பெஹன்!…  இன்னும்  அதே  வால்  இல்லா, monkey  வேலை,  செய்துட்டு  தான்  இருக்கே!…” என்றான் உத்தம்.

“நாங்க எல்லாம் மாறிட்டா, உலகம் தாங்காது தம்பி!… சரி… சரி பொழச்சிப்போ. 
பவானி  செய்யும்  சமையலையும், ‘விரும்பி, நல்லா இருக்குன்னு’  சாப்பிடும்  ஒரே  ஜீவன்  நீ  மட்டும் தான். போ… போ எஸ்கேப்  ஆகிக்கோ.  நாளைக்  காலைப்  பிக் அப்  செய்துக்கோ.” என்றாள் மதுரா.

“என்ன நீ பாட்டுக்கு வரேன்னு சொல்றே! வீட்டில் கேட்க வேண்டாமா?” என்றான்  உத்தம் .

“என்னப்பா பண்றது!… முன்னே, பின்னே நான், ‘இளவரசனை’ எல்லாம் பார்த்ததே  இல்லை…  சினிமாவில்  பார்த்து,  கதையில்  படிச்சதோடு  சரி.
‘நிஜ  இளவரசன்’  என்று  ஒரு  லூசு,  எனக்காகவும், ஒரு பாடிகார்ட் வேலை செய்ய முன் வந்திருக்கே!…
அதான்பா உன் பாஸ்… ‘அந்த அப்பாடக்கர்’ யாருன்னு பார்க்கணுமே!… அதான்  வரேன்.” என்ற  மதுரா ஓட ஆரம்பிக்க, உத்தம் வாய்  விட்டுச்   சிரித்து  விட்டுக்  கிளம்பினான்.

மதுராவும், தன்வீரும்  தோட்டத்தில் பேசிக் கொண்டு இருக்க, வீட்டின் முன்புறம், மற்றொரு மீட்டிங், ‘விஜய் அண்ட் கோ’ போட்டுக் கொண்டு  இருந்தார்கள்.

“அவன்,  ஏன்  இங்கே  வந்தான்  ஆல்வின்?” என்றான்  விஜய், கோபமாக.

“அதைச் சொல்லத் தான் மார்னிங் வந்தேன். அதற்குள் நீ செய்தக் கூத்தில் எல்லாம், மறந்து போச்சு. சோனாவை, சூர்யா ஆட்கள் பேக் செய்துட்டாங்கன்னு கேள்வி.

என்ன   ட்ரான்ஸாக்ட் ஆச்சுன்னு தெரியலை. அது  விஷயமாத் தான்,  இப்போ உத்தம், மதுராவை பார்க்க வந்து இருக்கான்னு தோணுது.” என்றான் ஆல்வின்.

“அவன்  ஏன்,  மதுரா   விஷயத்தில்  வீணா  தலை  இடுறான்?” என்றார் சேது.

“ஏனென்றால் சூர்யா, மதுராவை லவ் செய்யறான் அப்பா. காலேஜ் அப்போவே இவக் கூடத் தான், ‘பெவிகால் இல்லாதக் குறையாய், ஓட்டிட்டு அலைவான்.  இப்போ  கேட்கவா  வேண்டும்!…” என்றான் விஜய் விரக்தியாக.

“நாங்க  இருக்கும்  வரை,   நீ  எதற்கும்  கவலைப்படாதே கருணா!..  எங்களை  மீறித் தான்,  எவனாய்  இருந்தாலும்  மதுராவை நெருங்க முடியும்.”  என்றார் சேது.

“சூர்யா ஒன்று  நினைத்தால்,  அதை நடத்தி முடித்து விட்டுத் தான் மறுவேலை  பார்ப்பான்.” என்றான்  விஜய், பெருமூச்சு விட்டு.

“அது  என்னவோ  சரி  தான்.  அவன்  போடும் பிளான் என்றுமே மிஸ் ஆனது இல்லை!. அதனால்  தான்  சோனா,  ACP ராஜேஸ்வரி கிட்டே மாட்டி வைத்து இருக்கான்.” என்ற ஆல்வின் நடந்தது அனைத்தையும் சொல்ல,  மற்றவர்கள்  அதிர்ந்து  போனார்கள் .

“யார் எப்படி, எங்கு ஆப்பு வைத்தாலும், இவங்க மட்டும் மாட்டவே மாட்டேன்  என்கிறாங்க.” என்றான்  விஜய்  கடுப்புடன்.

“ராஜேஸ்வரி மேடம், உன்னிடம் பேச வேண்டும் என்றார்கள். நம்பர் கொடுத்து இருக்கேன். எப்போ வேண்டும் என்றாலும் கால் செய்வாங்க.” என்றான்  ஆல்வின் .

“நான் கேட்ட மத்த டீடெயில்ஸ் உடன், இந்த ஜட்ஜ், மத்திய அமைச்சர், வக்கீல் பற்றியும் விவரம் வேண்டும். அப்படி மொத்தம் எத்தனை பேர் தான் கஜாவிடம் சிக்கி இருக்காங்க? ஒவ்வொரு முறை வெவேறு ஆட்களை உள்ளே கொண்டு  வரார்!….” என்றான் விஜய், நெற்றியைத் தேய்த்தவாறு .

“விஜய் ரிலாக்ஸ் மேன்!… இப்போ எதுக்கு, இப்படி தேவை இல்லாம டென்ஷன்  ஆகுறே?”  என்றான்  ஆல்வின்,  நண்பனின்  மனம் புரிந்தவனாக.

கூடவே ரகு, கார்த்திக் இருந்ததால், அவர்களால் மேற்கொண்டு  எதையும்  பேசவும்  முடியவில்லை.

சேது,  ஏதோ  சொல்லப்  போன  சமயம்,  உத்தம்,  மதுராவிடம்  பேசி  முடித்து விட்டுக்  கிளம்பி  வெளியே வந்தான்.

வெளியே வந்தவன் காரில் ஏறாமல்,  எதையோ  யோசித்தவன்,  விஜய்  அருகே  மீண்டும்  வந்தான் .

“oppourtunity knocks the door once’ விஜய் சார். அதை விடாமல் கெட்டியாகப்  பிடித்துக் கொள்பவன்  தான்  புத்திசாலி. 
ஒரு சில சமயங்களில் சந்தர்ப்பம்  நம்மைத்  தேடி,  மற்றவர்களால்  வந்த  போதும், அதை  ஏற்காமல், தேவை அற்றத் தடைகளை ஏற்படுத்துவது பைத்தியக்காரத்தனம்.

போன  முறை,  என்  பாஸ் மிஸ் செய்துட்டார்.  இந்தத்  தடவை மதுரா மேடம், சம்மதித்தால், அவங்க  கைப்பிடிக்க,  எந்தத்  தடை  வந்தாலும் தகர்க்க   தயாராக உள்ளார்.

ஏனென்றால், அ’வர் தியாகச் செம்மல்’ இல்லை. ரொம்ப நல்லவரா இருக்க போறதுனாலயே அவருக்கு யாரும் சிலை வைக்கப் போவதும் இல்லை.

மத்தவங்களுக்காகப் பார்த்துப் பார்த்து, வாழ்ந்து, வாழ்ந்து அவர் கிடைக்கவே  முடியாத, விலை மதிப்பு இல்லாத தேவதை போன்ற பெண்ணை, இழக்க தயாராக இல்லை.” என்றவன் மற்றவர்கள் திகைத்து நிற்கும்  போதே  கிளம்பி  விட்டான்.

அவன், ‘பைத்தியக்காரன்’ என்று சொல்லியது, ‘வந்த வாய்ப்பை நழுவ விட்டவன், மீண்டும் மற்றவர்களால் வரும் வாய்ப்பை நழுவ விடுகிறவன், தியாகச் செம்மல்’ என்று தன்வீர் கிண்டல் அடித்தது எல்லாம் விஜய்யை என்று  ஆல்வின்,  பாலாஜி,  சேதுவிற்கு  புரிந்து  தான் இருந்தது.

கண்கள்  கனலைக்  கக்க, எரிமலையாய்  நின்று  கொண்டு  இருந்த விஜய்க்கும் அது  புரிந்து தான் இருந்தது.

புரிந்தது அது மட்டும் அல்ல, ‘மதுராவை  கரம்  பிடிக்க, மதுராவிற்காக எதையும் செய்யச் சூர்யா தயார் ஆகி விட்டான்’ என்பதும் தான்.
ஆனால்,  புரிந்தது தான் அவனுக்கு உவப்பாய்   இல்லை   என்பதே   நிதர்சனம்.

போலிக்  கொள்கை,  வறட்டுக்  கெளரவம்,  தேவை அற்றத் தாழ்வு மனப்பான்மை,  சில  சமயங்களில் நம் கைக்குக் கிடைக்கும் உயர்ந்த வாழ்வைத் தட்டிப் பறிக்கிறது .

கை  விட்டு  வாழ்கை  நழுவிய  பிறகு,  அழுது, புரண்டு மட்டும் என்ன பயன்?

காதல்  என்பது  உன்னதமானது.  ஒருத்தியை  காதலித்தப் பிறகு, கை விடுவதும்  தவறு.
கை நழுவ விடுவதும் தவறு.

அது விஜய்க்கும் புரிந்தே தான்  இருந்தது  என்றாலும்,  அவன்  கைகள்  கட்டப்பட்டு  இருந்தது. ‘சோனா  அண்ட்  கோ’  என்ற  மாபெரும்,  ‘நெருப்புச் சங்கிலியால்.

அதை மீற முயன்றால், முதல் சேதாரம் மதுராவிற்கே, என்னும் போது அவனால்  துணிந்து  எந்த  நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

மதுராவின் மானம், எதிர்காலம், அவள் குடும்பம் மட்டுமில்லாமல், ரூபிணி வாழ்வும்  அல்லவா  இதில்  இருக்கிறது.

‘விவாகரத்து’  என்பது  சோனாவாகக்  கொடுத்தால் தான் உண்டு. அப்படியே கொடுத்தாலும், ‘மதுராவை, விஜய் மணக்க அவள் விடுவாளா’ என்பது  மிகப்  பெரிய  கேள்விக்குறியே!

ஒருவேளை, ‘காதலித்து இருப்பாளோ!’ என்ற சந்தேகம் வந்ததற்கே, ஒரு பெண்ணைக் கொன்று, ஒரு பெண் மனநலக் காப்பகத்திற்கு சேர்க்கும் அளவுக்குக்  கொண்டு  போய்,  மதுராவிற்கு,  சுமன் போன்ற அயோக்கியனைக் கொண்டு   வந்து   நிறுத்தியிருக்கும் சோனா, திருமணம் நடக்க  விடுவாளா?

ஆனால், இது  போன்ற  எந்தத்  தடைகளும்,  சூர்யாவின் பாதையில் இல்லை. 
அவன்  பாதை, ‘முட்கள் அற்ற ரோஜா’ படுக்கை.
அவன் நினைத்தை  நடத்திக்  கொடுக்கப்  பண பலம், ஆள்  பலம் கொண்டவன்.

‘பாசம், பந்தம், குடும்பம்’ என்ற என்ற எந்தச் சங்கிலியாலும் பிணைக்க படாதவன்.  அவன்  செயல்படச்  சுதந்திரம்  ரொம்பவே   உண்டு. 

விஜய்யின்   தயக்கம்,  குழப்பம், மற்றவர்களுக்காகப்  பார்க்கும்  குணம் என்று எதுவும்   இல்லாதவன். 
தனக்கு  மிஞ்சியே  தானமும், தர்மமும் என்பவன் .

‘தடைகளால் கைதியாக இருப்பவன், தனக்குத் தானே விலங்கு மாட்டிக் கொண்டு வெளி வர முடியாதவனுக்கும்’, எல்லா வசதிகளும், சந்தர்ப்பங்களும்  அமைய பெற்றவனுக்கும்’ இடையே நடக்க இருக்கும் காதல்   யுத்தத்திற்கான   பரிசு  மதுரா.

ஆனால்  அவள்  மனதில்,  இருவரில்  யார்!

விதி, யாரை யாரோடு சேர்க்கப் போகிறது!.
வாழ்க்கை   என்னும்   நதியில்,   எந்த   ஓடம்,   எந்தப்   பாதையில்  செல்லும்?

தவமாய் தவமிருப்போம்…

அடுத்த அத்தியாயம்

58

அதே சமயம், ‘கஜா போர்டில்’ தன் அறையில் அனைத்தையும், உடைத்து கொண்டு இருந்தாள் சோனா.ஒரு  இரவு  போலீஸ்  ஸ்டேஷனில்  இருந்த அவமானம், அவளை எரித்துக் கொண்டு  இருந்தது. எவ்வளவு  பெரிய  பிரெஸ்டிஜ்  இஸ்ஸு.அவள்  அறையில்  இருந்தது  எல்லாமே,  விலை உயர்ந்த பொருட்கள். அவள் …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்