arrow_back
என்ன தவம் செய்தேன்! 58
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 58 / 85

58

visibility 1
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அதே சமயம், ‘கஜா போர்டில்’ தன் அறையில் அனைத்தையும், உடைத்து கொண்டு இருந்தாள் சோனா.

ஒரு  இரவு  போலீஸ்  ஸ்டேஷனில்  இருந்த அவமானம், அவளை எரித்துக் கொண்டு  இருந்தது. 
எவ்வளவு  பெரிய  பிரெஸ்டிஜ்  இஸ்ஸு.

அவள்  அறையில்  இருந்தது  எல்லாமே,  விலை உயர்ந்த பொருட்கள். அவள்  பார்த்துப், பார்த்துச் சேர்த்தது.

ஆனால், இன்று சூர்யா, மதுரா, ராஜேஸ்வரி  மீது  இருந்த,  கட்டுக்கு  அடங்கா,  கொலை வெறியின் தாக்கம்  அவள்  அறை  பொருட்களின்  மீது  திரும்பி இருந்தது.

அவற்றை  உடைத்தப்  பிறகுக்  கூட,  அவளின்  வெறி, கோபம் அடங்கவில்லை.  நிதானம்  தவறும்  அளவுக்  குடித்தப் பிறகுக் கூடப் பற்றி எரிந்து  கொண்டு  இருந்த,  மனத் தீ  அடங்கவில்லை.

தன்னை  ஒருவர்  உதாசீனபடுத்துவதா என்ற வெறி.
கோபத்தில் கொதித்து கொண்டு இருந்தவள், பல மணி நேரமாகத் தன் மொபைல்  தேடாமல் இருந்தாள்.

ஏதோ  தோன்ற,  தள்ளாட்டத்துடன்  மொபைலைத் தேடி எடுத்தவள், அதன் டிஸ்பிளேயில்  இருந்த  ஐம்பதிற்கும்  மேற்பட்ட அழைப்பினைக் கண்டு, நெற்றி சுருங்கினாள்.

அவள்  இருந்த  நிலையில்,  எழுத்துக்கள்  கண்ணில் சரியாகத் தெரியவில்லை. அதை அவள் தூக்கி போடப் போன சமயம், மீண்டும் அழைப்பு வந்தது.

யார் அழைப்பது என்று பார்க்காமலே, எடுத்தவள், எதிர் முனை என்ன சொல்லியதோ,  போதை  முழுவதும் தெளிந்து விட,  அடுத்த  நொடி  பயத்தில்,  முகம்  வெளிறி  வெளிப்படையாகவே  நடுங்க  ஆரம்பித்தாள்.

“வரேன்… வரேன்…” என்றவள் பேய் துரத்தியது போல், அறையை விட்டு வெளியே வந்து,  தன் காரில் ஏறி,  மீண்டும் அவளின் ECR பங்களாவுக்கு,  வந்து சேர்ந்தாள்.

மதுராவை  முதன்  முதலில்,  வார்த்தைகளால்,  குதறி  எடுத்த  அதே  பங்களா.

வெளியே  ஒரே ஒரு காவலாளி இருக்க, வெகுவேகமாக உள்ளே நுழைந்தவள், தன் முகத்திற்கு நேரே, நீட்டப்பட்ட நான்குத் துப்பாக்கிகளால் அதிர்ந்து நின்றாள்.

வெளியே  எவ்வளவு  அமைதியாக  இருந்ததோ,  அதே  அளவு  வீட்டின்  உள்  பாதுகாப்பு அதிகமாக இருந்தது. இந்த ஏற்பாடுகளால் ஏமாந்து போனது சோனா மட்டும் இல்லை, அவளைப் பின் தொடர்ந்து வந்த இரு வேறு ஆட்களும் தான்.

அதில் ஒருவன், ஆல்வின் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்தவன். மற்றொருவன்,  உத்தம் அனுப்பி வந்தவன்.

இருவரின் வேலையே, சோனாவை பின்  தொடர்வது  தான்.
வழக்கம் போல், ‘சோனா ECR பங்களாவிற்கு, ஆட்டம் போட வந்து இருக்கிறாள்’  என்று தவறாக நினைத்து, ரிப்போர்ட் அனுப்பி விட்டு, அவர்கள்  இருவரும்  மெத்தனமாய்  இருந்து விட்டனர்.

அவர்கள்  அறியாதது  வீட்டின்,  உள்  இருந்த  வில்லங்கம்  பற்றி.
இது தான் விதி என்பதோ!
இல்லை,  மதுராவின் அழிவு என்பதோ!

உள்ளே  நுழைந்த  சோனாவின்  முகத்தின்  முன்,  நீட்டப்பட்ட  துப்பாக்கிகள் விலக, ஆஜானுபாகுவாய் ஒருவன் முன் வந்து சோனாவை மேல்  இருந்து,  கீழ்  வரை  பல முறை செக் செய்தான்.

பின்  எதையும்  பேசாமல்,  அவளைப்  பின்  தொடருமாறு  சைகைச் செய்தவன், அவளின்  மொபைல்  போனை  வாங்கி வைத்துக் கொண்டு, மேல்  இருந்த  ஒரு  அறைக்  கதவின்  முன்  சென்று  நின்று அதைத் தட்டினான் .

உள் இருந்து, முதலில் வெளி வந்தது ஒரு துப்பாக்கி.
அதனை ஏந்தியவன்,  இவர்களைக் கண்டதும் விலகி, வழி விட்டு, சோனா உள் நுழைந்ததும் கதவைச்  சாத்தினான்.

அந்த அறைக்குள் நுழைந்த சோனாவின் இதயமே, ஒரு கணம் பயத்தில் நின்று,  பின் துடித்தது.
அங்குக் கட்டிலில், ஒரு கையில் துப்பாக்கியுடன் சாய்ந்தவாறு படுத்து இருந்தான் சுமன் .

“சுமன்!” என்று கத்தியவாறு,  அவன் அருகே செல்ல முயன்றவளை, தடுத்தனர்  சுமனின்  பாதுகாவலர்கள்.

சுமனைக்   கண்டுச் சோனாவே ஒரு கணம் ஆடித் தான் போனாள். அவன் இருந்த  நிலை  அப்படி  தான்  இருந்தது.

முகம்  வீங்கி,  கன்றி,  கறுத்து,  கைக்கால்களில்  கட்டுப்  போடப்பட்டு, எகிப்து மம்மி  போல் இருந்தான்.

சத்தியமாகச் சுமனை அறிந்தவர்கள், ‘அவன்  தான்  சுமன்  என்று  சத்தியம்  செய்தால்  கூட’  நம்பவே மாட்டார்கள்.
அந்த  அளவு இருந்தது,  ‘விஜய்யின் கவனிப்பு’

முகம் முழுவதும்,  பன் கணக்காக வீங்கி, ஒற்றைக் கண் முழுவதுமாக ரத்தம் கட்டி  மூடியிருக்க,  உதடு  கிழிந்து,  அங்குத்  தையில் போடப்பட்டு இருந்தது.

பார்க்கவே கோராமையாக இருந்தது அவன் நிலை. இவனைப் போன்ற மனித  மிருகங்களுக்கு,  இது  எல்லாம்  மிகச்  சிறிய  தண்டனை  தான்.

“Who?”  என்றான்  குழறலாகச்  சுமன். 

“என்ன  சுமன்!…  என்ன  கேட்கிறே?’ என்றாள் சோனா.

“என் நிலைக்கு யார் காரணம்?” என்றான் சுமன் வாயில் இருந்து எச்சில் ஒழுகியவாறு.

அருகில்  இருந்த  ஒருவன்,  அதனைத்  துணிக்  கொண்டு  துடைத்து  விட்டான்.

“யார்  காரணமா!… அப்போ, இது ஆக்சிடென்ட்  இல்லையா?” என்றாள் சோனா  திகைத்துப்  போனவளாய்.

‘மதுராவை  கடத்த  வந்த  போது,  விபத்தில்  சிக்கி இருக்கிறான்’ என்று இவள் நினைத்துக் கொண்டு இருக்க, ‘இவனை ஒருவன் கைமா செய்து இருக்கிறான்’  என்பதே  அவளுக்கு  மிகப்  பெரிய  ஷாக் .

“ஆக்சிடென்ட்!… இது உனக்கு ஆக்சிடென்ட்டா?
அந்த மிடில் கிளாஸ் மதுராவிற்காக, என்னைத் தூக்கிட்டாங்கடீ!  சுந்தர்பன்  சதுப்புநில காட்டுக்கு.

எப்படித்  தப்பித்தேன்  என்று  பார்க்கிறாயா!…  கடத்திக் கொண்டுப் போனவனின், குரல் வளையைக், கடித்தே துப்பினேன்.

தூக்க மருந்து இஞ்செக்ட்  செய்ய வந்தான். அவனைக் கொன்னுட்டு, அவன் போன் மூலமா,  என்  ஆட்களைக்  கொண்டு  மீண்டு  வந்தேன்.

ஆனா,  இவங்க  வரும்  வரை  இருந்த  இடத்திலேயே பாத்ரூம், டாய்லட் போய்,   அதிலேயே  படுத்துக்  கிடந்தேன்!

என்னை இந்த நிலைமைக்கு ஆள் ஆக்கியவன் யாரு?
அவன் இனி உயிரோடு இருக்கக் கூடாது. அவன் மட்டும் அல்ல, அவன் குடும்பத்தில் ஒருத்தர் கூட மிஞ்சக் கூடாது.

சொல்லு…. சொல்லு… சொல்லுடீ!… யார் அவன்?
யார் மதுராவிற்குக் காவலாய் நிற்பவன்?

அவன்  கண்  முன்னரே,  மதுராவை  நான்  கதற, கதற xxxx xxxx xxxx. அதை அவன் கண்டு, எதையும் செய்யவே முடியாமல், கதறித் துடித்துச் சாகணும்.
யார்  அவன் சொல்லு?” என்று கோணிய வாயால், உச்ச கட்டமாய் அலறியவன், கண்  காட்ட,  அவன் அருகே நின்றவன், சோனாவை,  கன்னம்   கன்னமாய்   அறைந்து  தள்ளினான்.

“சுமன்!…  ப்ளீஸ்!.. என்னை விட்டுட்டு. எனக்கு எதுவும் தெரியாது. மதுராவை  காப்பாற்ற,  எனக்கு  என்ன  பைத்தியமா  பிடித்து  இருக்கு?

அந்தக் கனிகாவை போட்டுத் தள்ளியது போல், இவளையையும் போடத் தான்  நினைத்தேன்!… 

‘போலீஸ்   பிரச்சனை வரும்’  என்று நீயும், தாத்தாவும்  தானே  வேண்டாம்  என்று  சொல்லியது.

அதான்,  ‘அவளை  உன்  பக்கம் தள்ளினேன்!… ஆனா, அவளை யாரும் வந்து  காப்பாற்றுவாங்கன்னு  சத்தியமா  எனக்குத்  தெரியாது  சுமன்.

அவள் இந்தச்   சென்னையை  விட்டு போகக் கூடாது  என்று  தான்  போலி  பத்திரம்  தயார்  செய்தேன்!… இப்போ அது கூட இல்லை.” என்றாள் சோனா.

“வாட்  ஹப்பேனெட்?” என்றான் சுமன்.

“எல்லாம் அந்தப் பாவி, சூர்ய பிரதாப்பால் வந்தது. என்னைக் கடத்தி கொண்டு  போய், ராட்சசி  மாதிரி  இருந்த  ஒருத்தியை  வைத்து,  துவைத்து எடுத்துட்டான்.

அது  மட்டுமில்லாமல்,  அந்த  ACP. ராஜேஸ்வரிக் கிட்டே வேறு மாட்டி விட்டு, நைட் முழுக்க ஜெயிலில் இருந்துட்டு வந்திருக்கேன்.   வலி தாங்க முடியாம, அவன்  கேட்டதைப் போல், எழுதிக்  கொடுத்துட்டேன்..” என்றாள் சோனா.

“அவனுக்கு  என்ன  வந்தது?” என்றான் சுமன்.

“அவன் அந்த நாயை, லவ் செய்யறானாம். அவளைத் தான், அந்த மஹாராணி சம்மதித்தால், அவனின் சாம்ராஜ்ய பட்டத்தரசியாக ஆக்கிக் கொள்வானாம்.

எல்லா  நாயும்,  அவ  கிட்டேயே   போய்  விழுந்துங்க.  அப்படி எண்ணத்தைக் காட்டி மயக்கினாளோ!.
எவனைக் கேட்டாலும், ‘மதுரா!… மதுரா!…’ என்று அவ பெயரை ஜெபிக்கிறானுங்க. விட்டா கோயில் காட்டுவானுங்க  போல்  இருக்கு.

அவ செத்தாலும் சாகணுமே ஒழிய, எவனுக்கும் அவ கிடைக்கக் கூடாது. சாவதற்கு  முன்,   ‘ஏன்   பிறந்தோம்’  என்று அவள் கதறித் துடிக்கணும்.
அதை  வீடியோ  எடுத்து  மீடியாவில்  போடணும். 
அதான்  எவ டிரஸ் எங்கே அவிழும், எவன், எவக் கூட இருக்கான்னு…. இதை  எல்லாம்  பார்ப்பதையும், கமெண்ட் போடுவதையும் வேலையாக வைத்து இருக்கானுகளே!

சூர்யா, மதுராவைக் கல்யாணம் செய்யவே கூடாது. முடிந்தால் இவளையும், மற்றப்  பெண்களைப்  போல், கன்டைனரில்  அடைத்து, வெளி நாட்டு, ‘விபச்சார  மாபியா  கூட்டத்திடம்’  விற்று  விடு. 

நம்மை  எதிர்த்த யாரும் இனி நிம்மதியாகவே  இருக்கக்  கூடாது.” என்றாள்  சோனா  வெறிப் பிடித்தவளாய்.

“செய்யலாம்… செய்கிறேன்… நீ இங்கே இப்போ வா.” என்ற சுமனின், விகார  இளிப்பு,  இவள்  முகத்தில்  பிரதிபலித்தது.

தன்னைச் சுற்றிப் பின்னப்படும், சதி வலை அறியாதவளாய், மதுரா தன் அறையில், யோசனையில் இருக்க, அவளைக் காப்பாற்ற அரணாக நிற்கும் விஜய், சூர்யா இவர்களின் ஆட்களும், சுமன் தப்பித்து மீண்டு வந்து விட்டதையோ,  சுமன்,  சோனா  சேர்ந்து செக் வைத்து இருக்கிறார்கள் என்று   அறியவில்லை.

விஜய்,  மதுராவின்  வார்த்தைகளை  ஏற்க  முடியாதவனாய்,  வழக்கம்  போல்,  இருத்தலைக்  கொல்லியாய்  தவித்துக் கொண்டு இருக்க,  மதுரா வரும் விஷயத்தைக் கேள்விபட்டதிலிருந்து, சூர்யா, சிறகு இல்லாமல், வானத்தில்  பறந்து  கொண்டு  இருந்தான்.

‘கை விட்டுப் போன சுவர்க்கம்’ மீண்டும் கையில் கிடைக்கப் போவதை நினைத்து, நினைத்து, ‘காதலின் பைத்தியக்காரச் சங்கத்தில், விஜய்க்கு துணையாகச்’  சேர்ந்து  கொண்டு  இருந்தான்.

சாம்ராஜ்யங்களையே, ‘மண்ணோடு மண்ணாக்கும்’  சக்திக் கொண்ட  காதல் முன்,  இவர்கள் எம்மாத்திரம்!

காதல்  என்பது கடவுள் அல்லவா!
அது கனவு தேசத்தின், கோயில் அல்லவா!
காதல் என்றால், பொய்கள் அல்லவா!
இரு விழிகள் வாங்கும், வலிகள் அல்லவா!
செல்லப் பொய்களும், சுகங்கள் அல்லவா !
இங்கு விழியின் வலிகளும்  வரங்கள் அல்லவா!
வரங்கள் என்பது அலைகள் அல்லவா !
அது விழுந்து எழுவது துயரம் அல்லவா!

கண்கள் மூடிப் படுத்தால், கனவில் உந்தன் பிம்பம்
காலை நேரம் எழுந்தால், நினைவில் உந்தன் சுகந்தம்
உன்னைப் பார்க்கும் முன்பு நானே,
வெட்ட வெளியிலே திரிந்தேன்
உன் அருகில் வந்து, 
என் வேடந்தாங்கலை உணர்ந்தேன்!
உனக்காகத் தானே உயிர் வாழ்வேன் நானே!
நீ இன்றி நானே வெறும் கூடு தானே!

தாயோடு உணர்கின்ற வெப்பத்தை, நீயே தந்தாய்.

உந்தன் அருகில் நானும் இருந்தால்,
நிமிடம்  நொடிகள் எனக் கரையும்
எனை விலகி, நீயும் பிரிந்தால்,
நேரம் பாரமாய் கணக்கும்.‘ என்று அங்கு இரு ஜீவன்கள்  தங்களின்,  சரி பாதியை நினைத்து உருகிக் கொண்டிருந்தன.

ஆனால்,  இந்த  இரு   ஜீவன்களும்  உருகுவது  ஒருத்திக்காக.

அவர்கள்,  ‘யாரின்  கரம்  பற்றத்  தவம்  இருக்கிறார்களோ, அவள் மனதில் யார்’  என்ற  கேள்விக்கான விடையைத், தன்னுள் வைத்துக் கொண்டு  சிரித்து  கொண்டிருந்தது காலம்.

மற்றொரு புறம் மகளை/சகோதரியைப் பற்றிய கவலையில் பவானி, கார்த்திக், ரகு.

இன்னொரு புறம் மகனின்/பேரனின்/நண்பனின்   வாழ்வுக் குறித்த கவலையில்  சேது,  கனகா , மரகதம்,  ஆல்வின், பாலாஜி.  

அந்த நாளின்  மதிய பொழுது,  ஒரு சிலருக்குச்   சந்தோஷத்தையும்,  ஒரு  சிலருக்கு வெறியையும்,  ஒரு  சிலருக்குத்  துக்கத்தையும்  கொடுத்துக் கொண்டு  இருந்தது.

பவானியின்  நிலையோ  விவரிப்புக்கு  அப்பாற்பட்டதாக  இருந்தது.

மகளின் புத்திசாலித்தனம், எதையும் யோசித்து அலட்டிக்கொள்ளாமல் செய்து முடிக்கும் ஸ்டைல், எதற்கும் கலங்காதக் குணம், அவருக்கு மிகவும் பிடித்த  ஒன்று  என்றாலும்,   மகளினை சூழ்ந்து இருக்கும் ஆபத்தினைக் கண்டு,  அவரால்  அஞ்சாமல் இருக்க  முடியவில்லை.

மகளைக்   காக்க,  இத்தனை   ஆட்கள்  இருந்தாலும்,  அதில்  தலைமை ஏற்று  இருக்கும்  விஜய்,  சூர்யாவைப்  பற்றி  மகளின்  வார்த்தைகளால், எழுந்த   குழப்பம்   வேறு,  அவரைத்  துளைத்து  கொண்டு  இருந்தது.

மதுரா   காரணம்   இல்லாமல்,  எதையும்  பேசவில்லை  என்பதையும்,  ‘விஜய், சூர்யா  இருவரும்  தன்னை  விரும்புகிறார்கள்’  என்பதை நாசுக்காகக்  கோடிட்டுக்  காட்டி  விட்டாள்  என்று  அந்தத் தாய் மனம் உடனே புரிந்து கொண்டது.

ஆனால்,  புரிந்தது  தான் அவருக்கு ஏற்பாக இல்லை .
அந்த இருவரையும், அவர் மனம் மகளுக்கு ஏற்ற மாப்பிள்ளையாக ஏற்கவில்லை.

‘இருவருமே திருமணம் ஆனவர்கள்!…’  என்ற ஒன்றே, அவரை நிலைக் குலைய வைத்தது.

இருவரில்,  யாரை  மகள்  மணந்தாலும்,  அவளுக்குக் கிடைக்க போகும் பெயர்,  ‘இரண்டாம்  தாரம்’  என்பதே!

ஆண்கள்  எத்தனை  திருமணம் செய்தாலும், சமுதாயத்தில் இது போன்றப் பட்டப்  பெயர்கள்  எல்லாம்  அவர்களுக்குக்  கிடைப்பது  இல்லை.

ஆனால், ஏற்கனவே திருமணமாகிய ஒருவனை, அதுவரை  திருமணமே ஆகாமல், ஒரு பெண் கரம் பற்றினாலும், அவளுக்குச் சமுதாயத்தில் கொடுக்கப்படும் பெயர்  இது   தான்.

அதற்காக  ரெண்டாம்  திருமணத்தை  எல்லாம்,  பவானி  எதிர்க்கிறார்  என்று இல்லை.

தன் மகளுக்கு, ‘விஜய், சூர்யா’ ரெண்டு பேரில் ஒருவன் கணவனாக  வருவதை,  ஏனோ, அந்தத் தாய் உள்ளத்தால் ஏற்க முடியவில்லை.   

மகள்  சொல்லியது  போல்,  ‘Beggars  can’t  be  choosers’  என்ற  நிலைத் தான்  அவருக்கு.

மகளைக் காப்பாற்ற, ‘யார் முன் வந்தாலும் இருக் கைக் கொண்டு,  அவர்  வரவேற்க  தயாராக  இருக்க  வேண்டிய  நிலையில்’  தான் இருந்தார் .

ஆனால், அதில், ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்பதைத் தான் அவரால் ஏற்க முடியவில்லை.

பெண்ணின்  மானத்தை,  ‘இந்த  இருவரின் துணை இல்லாமல் காப்பாற்ற முடியாது’ என்ற நிதர்சனமும் அவருக்குப் புரிந்தே இருந்தது.

எத்தனையோ பெண்களின் பெற்றோருக்கு, இப்படித் தங்கள் பெண்ணின் மானத்தைக்  காப்பாற்ற வாய்ப்பு கிடைக்காமல் போனதையும், அதனால் உயிர் பலிகள் ஏற்பட்டு, ஒட்டுமொத்தக் குடும்பமே சிதறி உருக்குலைந்து இருப்பதை,  நினைத்துப்  பார்த்த  அவருக்கு, இதயமே ஒரு முறை, நின்று தான்  துடித்தது.

இந்த  இருவரை  தவிர்த்து,  ‘மகளுக்காகக்  கடைசி வரை போராடும் வல்லமை,  பணம்,  ஆள் பலம்  வேறு யாருக்காவதுண்டு என்றால், அவருக்குத் தெரிந்து இல்லை’ என்று தான் சொல்வார்.

ஏன் கார்த்திக், மதுராவை  மணந்தாலும்  கூட,  இவர்களின்  உதவி  இல்லாமல்,  காப்பாற்ற முடியாது.
அதற்காக  எல்லாம்,  திருமணம் ஆன  இவர்களை  எல்லாம், மாப்பிள்ளையாக  ஏற்க  முடியுமா  என்ன?

அவருக்குச்  சாதகமாக  இருந்த  ஒரே  விஷயம், இருவரும் மதுராவின் சம்மதம் இல்லாமல், அவளைக் கரம் பிடிக்க முயலமாட்டார்கள் என்பதே!

‘பெண்ணைக் காப்பாற்றுகிறார்கள்’ என்பதற்காக எல்லாம், திருமணம் ஆனவர்களுக்குப் பெண்ணைக் கட்டி கொடுக்க, இது என்ன சினிமாவா, இல்லை  காதல்  கதையா?

மகளுமே இதைப் பைத்தியக்காரத்தனம் என்று தான் சொல்வாள். ‘காப்பாற்றினால்  நன்றிச்  சொல்ல  முடியும்.  அதற்காக  எல்லாம்  பெண்ணைத்  தூக்கிக்  கொடுத்து  விட முடியுமா’  என்ன?

‘மகளையும்  காப்பாற்ற  வேண்டும்,  இந்த  இருவருக்கும்  மகள்  கிடைக்கவும் கூடாது. ஆனால், சோனா அண்ட் கோ எதிர்க்கும் ஆற்றலும்’ இருக்க வேண்டும்.
இப்படி, ‘தசாவதானியாக  ஒருவனுக்கு’ அவர் எங்கே போவார்?

இன்ஸ்டன்ட் காபி போல், ‘இன்ஸ்டன்ட் ஆக்ஷன் ஹீரோவை’ பிளிப்கார்ட், swiggyயிலா  ஆர்டர்  செய்ய  முடியும்?

வெளியே  இருந்து,  ‘சோனாவால்  பிரச்சனை’  என்று  பார்த்தால், வீட்டினுள், ‘ஒரு சகுனி ஒருவர்  இருக்கிறாரே கணவன்’ என்ற பெயரில். 

அவர்  பாட்டுக்குத்,  ‘தான்  தோன்றியாய்’ முடிவு எடுத்து விட்டு, மற்றவர்களின்  மேல், அதைத் திணிப்பதே, வேலையாகக் கொண்டு இருப்பவர்.

இருபது  வருடங்களுக்கு  முன்,  சேதுவோடு  சண்டை  வந்த  போதும் இப்படி தான்.
‘குன்னூரில் வேலை கிடைத்து இருக்கு. கிளம்பணும்.’  என்று டெம்போ லாரியுடன்   வந்து   நின்றவர்,  இன்னும்  அந்தப்  பழக்கம்  மாறவில்லை.

‘குடும்பம்  என்ற  கூட்டில்  கணவன், மனைவி இருவரும் சமம்’ என்பதே இவர்  அறிந்து  இருக்கவில்லை. 
இவர்களைப் பொறுத்த வரை, வீட்டில் உள்ள பொருட்கள், ‘பத்தோடு பதினொன்று   மனைவி’  என்பவள்.

கையில்  உள்ள  ஒரு விரல் போகும் வரை, அதற்கு எப்படி நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ, அப்படியே மனைவி என்பவளுக்கு அங்கீகாரம்   நிறைய   வீட்டில்   இருப்பதில்லை.

எடுக்கும் ஆடையிலிருந்து, வாங்கி வரும் மளிகை சமான் வரை, குழந்தைகளின்  படிப்பு  முதல்,  தாய்  வீடு  செல்வது  வரை,  சமைத்து வைத்த  உணவிற்கு  பாராட்டு முதல்,  நோய்  என்றால்  டாக்டரிடம் செல்வது  வரை,  பல   இல்லத்தரசிகளுக்கு  சுதந்திரம்  என்பதில்லை.

எவ்வளவுத் தான் படித்து இருந்தாலும், எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும், சில வீட்டு இல்லத்தரசிகளுக்கு, கரண்டி பிடிக்கும் வேலை மட்டும்,  உடல்   நலமில்லாத  போது   கூட  விடுவதில்லை.

ஒரு   சிறு  பாராட்டு,  சிறு  ஆறுதலான  வார்த்தை,  உடல்  நலமில்லாத போது ஒரு  கனிவு, அக்கறை  என்று எதிர்ப்பார்த்தே, ‘பல இல்லறங்கள், துறவற மேடைகள்’ ஆகின்றன.

இவை எதுவும் கிடைக்காமல், மற்றவர்களுக்கு வெளியே எதுவும் தெரியவிடாமல், போலிப் புன்னகையுடன், அரிதாரம் பூசாமல் நடித்துக் கொண்டு, ‘இல்லறத்திலிருந்து கொண்டே, துறவறம் பெற்று விட்ட மனைவிமார்கள்’  தான்  ஏராளம்.

பவானியும்  அவ்வாறு, ‘ மனதளவில்  துறவறம்’  பெற்றவர்  தான்.

‘எங்கு, அவர் மனைவியாய் தோற்றார்?  எங்குக் கணவனிடம், தன்னை விளக்க, தன் விருப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்புகளைச் சொல்லிப் புரிய வைக்கத்  தவறினார்’  என்று  எப்படி  யோசித்தும், அவருக்கு விளங்கவில்லை.

ஒருவேளை இவர் பேசும் முன்னே, இவருக்காகச் சங்கரன் எல்லா முடிவுகளையும் எடுத்து விட்டுப் பின் கூறுவதால், ஒரு நிலைக்கு மேல் இவரிடம்  எதையும்  கேட்பதும்,  ஏன் கணவன், மனைவியின், ‘பர்சனல் டைம்’  என்பதே  பேசுவதற்கு  கூட,  இல்லாமல்  போய்  விட்டது  தான் .

‘குடும்பத்தோடு வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும்,  நமக்கு ஒரு விதத்தில் பலம் மற்றும் இன்பம் சேர்க்கிறார்கள்.

அவ்வை  பாட்டி,  எவ்வளவு  அழகாய்  இதை  விளக்கிச்  சொல்லிவிட்டார்.

‘தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்.’
எளிமையான பாடல் தான்.
‘தாயோடு அறுசுவை போம்’…

குழந்தை பிறந்தது முதல், அது தன் தாய் செய்யும் உணவைத்தான் உண்கிறது. தாயின் கைப்பக்குவம் தான் ஒரு குழந்தையின்  அடிப்படைச்  சுவை.

உலகில்  எவ்வளவு  பெரிய  சுவையான  உணவு  செய்தாலும்,  ‘எங்க அம்மா செய்தது போல வருமா?’ என்று சொல்லுவது எல்லோருக்கும் வழக்கம். காரணம்,  சுவை  என்ற  ஒன்றை  அறிவதேத்  தாயின்  உணவில் இருந்து தான். 

‘தந்தையோடு கல்வி போம்’… ஏன்?  பள்ளி மற்றும் கல்லூரிக்குப் பணம் கட்டத் தந்தை வேண்டும்,  தந்தை இல்லாவிட்டால் பிள்ளைகள் சீக்கிரம் வேலைக்குப் போக  வேண்டி இருக்கும், அதனால், கல்வி தடைப்படும் என்பதாலா?
இல்லை.

எவ்வளவோ வீட்டில், தந்தை இருப்பார். அதிகமாகச் சம்பாதிக்க முடியாமல்  இருப்பார். ஏழை குடும்பமாக இருக்கும். தந்தை இருந்தும்,  படிக்க  வசதி  இருக்காது.  அந்த  மாதிரி  இடத்தில்,   தந்தை இருந்தும்  கல்வி  போய்  விடுகிறதே!

அவ்வை  சொன்னது, பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அல்ல. தந்தை, மகனுக்கு  வேண்டியதைச்  சொல்லித்  தருவான்.
அனுபவ பாடங்கள்.

‘தந்தை சொல்  மிக்க  மந்திரம்  இல்லை.’ என்று  சொன்னது  அதனால்  தான்.

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

60

தன்னறையில் அவ்வைச் சொன்ன, 'வாழ்க்கைத் தத்துவங்களை' நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் பவானி.'ஒரு  மகனின்  அல்லது  மகளின்   முன்னேற்றத்தில்,  அவர்களின்  தந்தையை விட  அதிக  அக்கறை  கொண்டவர்கள்  யார்  இருப்பார்கள்?தந்தை,  தான் கற்றவற்றை, தான் செய்தத் தவறுகளை, அவற்றைத் திருத்திய விதத்தை எல்லாம்  …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்