arrow_back
என்ன தவம் செய்தேன்! 65
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 65 / 85

65

visibility 6
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

நள்ளிரவில், தன் அறையில் அமர்ந்து, விஜய் எழுதிய டைரிக் குறிப்புகளை படித்துக் கொண்டு இருந்தாள் மதுரா.

குன்னூரில், சாலை விபத்தில் அடிப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான் விஜய்.

‘அழகி!
பேரழகி!
பிரபஞ்ச அழகி அவள்.  அந்தப்  பெண்  பார்ப்பதற்கு, ‘ ஸ்கூல்  கேர்ள்’  போல் இருந்தாள். ரொம்ப சின்ன வயதோ!… நினைவுத் தப்பிக் கொண்டிருந்ததால், என்னால் சரியாக அவளை பார்க்க முடியவில்லை.

விஜய், ‘யார்  என்று  குறிப்பிடாமலேயே’  ‘அந்த   ஸ்கூல்  கேர்ள் தான், தான் என்று’   மதுராவிற்குப்  புரிந்துப்  போனது. 

மதுராவிற்கு,  ‘பத்து  வருடங்களுக்கு  முன்,  குன்னூரில் நடந்த  சம்பவம்’  கண்  முன்னே  விரிந்தது.

அடிபட்டு  உயிர்க்குப்  போராடிய  ஒருவனைத்  தான்  காப்பாற்றி, ஹாஸ்பிடலில்  சேர்த்தது,  அவளுக்கு நினைவுக்கு வந்தது.

ரத்த வெள்ளத்தில் இருந்த, ‘அவன் முகம்’ அன்று அவளுக்கு சரியாகத் தெரியவில்லை.  அன்று  தான்  காப்பாற்றிய  நபர்,  ‘விஜய் தான்’ என்று   அவன்   எழுதியதை   படித்த  பின்  தான், அவளுக்குத் தெரிய வந்தது .

‘அட பாவி!… பதறித்  துடித்து ஓடி வந்தால், அந்தக் ரணகளத்துலேயும் உனக்குச் சைட்…  அப்படியே  விட்டுப்  போய்  இருக்கனும்.’
மதுராவின் மனம், பொய் கோபத்துடன், அன்று விஜய் நடந்து கொண்டதற்கு, இன்று புலம்பிக் கொண்டிருந்தது.

“அங்கு இருந்தவர்களை சரமாரியாக திட்டித் தீர்த்தவள், அவள் தாவணி  கிழித்து கட்டி, என் ரத்த பெருக்கை நிறுத்தியவள், என்னை மடித் தாங்கிக் கொண்டாள்.

“சார்!… சார்!.. உங்களுக்கு ஒன்றும் ஆகாது. சீக்கரம் ஹாஸ்பிடல் போய்டலாம்.”

‘ஒஹ்!… குயில் கூவியதோ!..
அவள் தான், என் கன்னத்தைத் தட்டி பேசிக் கொண்டு  இருந்தாள்.’

‘உயிர்  இருக்கான்னு  நான்  பயந்துட்டு  இருந்தா, குயிலாம் குயில்!’

“அவள்  மடியில்  சொகுசாகப்  படுத்து  கொண்டு, அவளையே சைட் அடித்துக் கொண்டு இருந்தேன். அவளோ, என் உயிரைக் காக்கப் போராடிக் கொண்டு  இருந்தாள்.

“ஏஞ்சல்!”  அவள்  பெயர் தெரியாது. ஆனால், அவள் தான், ‘என் ஏஞ்சல்.’   என்னைக்  காப்பாற்ற  வந்த, தேவதைப்  பெண். எனக்காகவே கடவுள்  படைத்த, எண்ணின்  மறுபாதி.
என்னவள்.
‘தவம்’  செய்யாமலே,  எனக்குக்  கிடைத்தத்  தேவதை!….

ஆட்டோ மூலம்,  என்னை  ஹாஸ்பிடல்  கொண்டு  சென்றாள். அன்னையாய்  என்  மடி  தாங்கி  இருந்தாள்.

‘இப்படியே  என்  உயிர்  போனாலும், எனக்குக்  கவலை  இருந்து  இருக்காது.  அத்தனை  அமைதி   அவள்  அருகே  இருக்கும் போது.”

‘அடப்பாவி!… நீ நிம்மதியா உயிர் விட்டு இருப்பே!… நான் அல்லவா, ‘ஒரு உயிரைக்  காப்பாற்ற  முடியவில்லையே!’  என்று  வாழ்க்கை  முழுதும்  அழுது   இருப்பேன்!…. 
தத்துப்  பித்துன்னு  உளறுது  எருமை.’

“அவள்  தொடுகை, அவள்  வாசம்,  அவளின்  எனக்கானத்  தவிப்பு, துடிப்பு, அழுகை  எனக்குப் பிடித்து  இருந்தது.  ‘எனக்கே,   எனக்காக ஒரு  உயிர் துடிக்கிறது’ அது எனக்கு  அடிபட்டதால்  தான்  என்றாலும்,  காதல்  கொண்ட  மனம்,  அதற்குப்  பிடித்த  வர்ணம்  பூசிக் கொண்டது .

காதல்!…
அவனவனுக்கு,  எப்படி எப்படியோ காதல் வரும்.
எனக்கு நடு ரோட்டில்,  ரத்த  வெள்ளத்தில்,  உயிருக்குப்  போராடும்  சமயத்தில், காதல் வந்தது.
அதுவும்  நல்லதிற்கு  தான். 

அவளைக்,  ‘கரம்  பிடிக்க  வேண்டும்’  என்ற வெறியே,  ‘பூட்டக் கேஸ்’  என்ற  நிலையில்  இருந்த  என்னை,  மீட்டு  வந்தது என்பது  தான்  நிஜம்.

நான்  உயிர்  பிழைத்தது அந்தத்  தேவதையால்  தான்.  அந்தத் தேவதைக்காக மட்டும் தான். அவளோடு வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே, ‘என் உயிர் பிழைத்ததோ’ என்று இன்று தோன்றுகிறது .

ஹோச்பிடலில் icu கொண்டு செல்லும் வரை, என் கையை அவள் விடவில்லை. அவள்  கையை  நானும்  விடவில்லை.

“ஏஞ்சல்!” அதைத் தவிர, என்னால் வேறு ஒன்றையும் பேசமுடியவில்லை தான் என்றாலும், அவளைக் கை விட்டால், ‘மறைந்து விடுவாளோ’ என்று பயமாக  இருந்தது.

ஒருவேளை, ‘அவள் அடிபட்ட என் மூளையின் உருவகம் என்றால்,  கண்ணை மூடி,  நான்  மயங்கி  எழும் போது,  அவள்  இல்லை  என்றால் நான்  என்ன  ஆவேன்!….

“பயப்படாதீங்க!… உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நான் இருக்கேன். உங்களுக்காக  நான்,  pray  பண்றேன்.  நீங்கச்  சீக்கிரம்  நன்றாகி விடுவீங்க. மனதைரியத்தை விட்டுடாதீங்க. உங்களுக்கு நல்லதாவே நடக்கும்.” என் தேவதையின் அந்த வார்த்தைகள் தான், ‘எனக்குச் சஞ்சீவி வரத்தைக்’ கொடுத்ததோ!

ஏதோதோ  பார்ம்களில்  சைன்  வாங்கினார்கள்.

“அழாதேமா!.. உன் மாமாவுக்கு எதுவும் ஆகாது.”

அங்கு இருந்த நர்ஸ் என்ன, எல்லாம் தெரிந்த முனிவரா?
எனக்கும், என் தேவதைக்கும் உள்ள சொந்தத்தை, அசரீரியாகச் சொல்லி விட்டாரே!…
என்னை,  என் தேவதை பெண் ஏற்பாளா?
அந்த நர்ஸ் வாக்கு பலிக்குமா?

‘ஏன்டா டேய்!… அது எனக்குத் தெரிந்த ஹாஸ்பிடல். என் அண்ணனை அவர்களுக்குத் தெரியும். உன்னையும், ‘எப்படி அண்ணன்’ என்று சொல்வது என்று குழம்பி, பயத்தில், ‘என் மாமா’ என்று உளறி வைத்தால், அதற்கு இப்படியொரு வில்லங்கமா?’

“ மீண்டும்  நான்  கண் விழித்தப் பிறகு, பயத்துடன் கண் விழித்தேன். எங்கே, ‘என் தேவதைக் காணாமல் போய் விடுவாளோ!’ என்று நான் பதறித் தவித்தது இன்றும்  கூட,  நினைத்தால் நெஞ்சம்  பதறுகிறது.

எனக்கு  விழிப்பு  வந்தவுடன்,  டாக்டர்  அவளை  அழைத்து  வந்தார்.  அந்தக் கண்களில்  கண்ட  பயம்,  நான்  கண்விழித்ததைக் கண்டதும் நிம்மதி, அவளின் அழகான புன்னகை.
அது ஹாஸ்ப்பிட்டல் என்பதே மறந்து போனது.

“உங்களுக்கு ஒன்றும் இல்லை. யூ ஆர் அல்ரைட்.  உங்க  பிரெண்ட்  ஆல்வின் என்பவருக்கு விவரம் சொல்லிட்டேன். வந்துட்டே இருக்கார். கவலைப் படாதீங்க…” என்றவளின்  குரல்,  எனக்குள்  தேனாய்  பாய்ந்தது .

மீண்டும்  அவளோடு,  ‘டூயட்’  பாடியவாறு   மயங்கிப்  போனேன்.  மறுமுறை விழிப்பு வந்த போது,  அந்த அறையில் இருந்த சோபாவில் குறுக்கிப் படுத்து  இருந்த  தேவதையைக்  கண்டேன்.

அப்பா!…
என்ன அழகு!…
கனவில் என்னக் கண்டாளோ,  புன்னகைத்து கொண்டு  இருந்தாள்.

அப்படியே,  ‘அவளை  அள்ளி  எடுத்துக்  கட்டிப்பிடித்து தூங்க வேண்டும்’ என்று எண்ண மட்டும் தான் என்னால் முடிந்தது.

கை, கால் உடைந்து,  உடல்  முழுவதும், ‘எகிப்து மம்மி’ மாதிரிக் கட்டுப் போட்டு, முகத்தை மறைத்துப் பிளாஸ்டர் போட்டு  படுத்து கிடப்பவனால், இதை  எப்படி  செய்ய  முடியும்  என்று  கூடத்  தோன்றவில்லை.

காலம்  எல்லாம்,  ‘தூங்கும்  முன்  கடைசியாக  பார்க்க  விரும்பும் முகம் அவள்  ஒருத்தியின் முகம் தான்.  காலைக்  கண்  விழிக்கும்  போதும், காண விரும்பும்  முகம்  அவள்  ஒருத்தியுடையதாகத்’ தான் இருக்கும்.

இரவு முழுவதும், ‘எனக்காக இங்கேயே இருந்து இருக்கிறாள்’ என்ற எண்ணமே இனித்தாலும், ‘வீட்டில் இவளைத் தேட மாட்டார்களா!…’ என்ற பயமும்,  ஒரு  பெண்ணின்  அண்ணனாய்,  எனக்கு  வந்தது.

வீட்டில், ‘தேட மாட்டார்களா  என்று  தோன்றினாலும், அவளைத் தேடவே கூடாது’  என்று சுயநல எண்ணமும் எழாமல் இல்லை.

எனக்காக, யார் என்றே தெரியாத  எனக்காக,  இரவு  முழுவதும்  ஹாஸ்பிடலில் தங்கிய அந்த   தைரியம்,  கனிவு,  கருணை  என்னை  புரட்டிப்  போட்டது .

அவள்  தூங்கிக்  கொண்டு  இருந்தாள். தூங்கும் அவளைக் கண்களால் நிரப்பிக் கொண்டு, நான் தூங்காமல் விடிய விடிய, அந்தத் தேவதையை மனதில் நிரப்பிக் கொண்டு இருந்தேன்.

‘இன்னும்  எவ்வளவு  நேரம், இவள்  என்னுடன்  இருக்கப்  போகிறாள்?’ என்று  பதைப்பதைத்து போனேன்.  என்னையும்  அறியாமல்,  தூங்கி எழுந்தால்,  நான் நினைத்தது போல், ‘என் தேவதை காணாமல் தான் போனாள்’  என்னை  என்  நண்பனிடம்  ஒப்படைத்து விட்டு .

என் உயிரைக் காப்பாற்றி என் இதயத்தை, உயிரை அவள் எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

நான் வெறும் கூடாக, அந்த ஹாஸ்பிடலில் கிடந்தேன் என்பதை, என் தேவதை அறிவாளா?
அவளைத் தேடிக் கண்டுப் பிடித்து, அவள் காப்பாற்றிய இந்த உயிரை, அவளுக்கே  காணிக்கையாக்க  வேண்டும்.

அதற்காகவாது, ‘நான் விரைவில் குணமடைய  வேண்டும்’  என்ற  வெறியே  எழுந்தது. 

மருந்துகளின்  உபயத்தால்  நான்  உறங்கிக்  கொண்டு  இருக்கும்  பொழுது எல்லாம்,  அவள்  வந்து சென்று இருக்கிறாள்.

ஆல்வினுக்குக் உணவுக் கொண்டு  வந்து தந்து,  ஹாஸ்பிடல்  பில்லுக்கு  அவளின் வளையல், செயின் அடகு வைக்க வேறு தந்து இருக்கிறாள்.

எனக்குத்  தேவைபட்ட ரத்தத்தையும் கொடுத்தது அவள் தான்  என்று பின்னர்  ஆல்வின்  சொல்லித்  தான் தெரிந்து கொண்டேன்.

மடையன்!…  நான்கு நாட்கள் வரை ஓசியில் தின்றவன், அவள் பெயரை கூடக்  கேட்காமல்  விட்டு  இருக்கிறான்.
தேவதைகளுக்குப்  பெயர்  தேவையா  என்ன!

அதன் பிறகு ஹாஸ்பிடல் விட்டுக் கிளம்பும் வரை அவள் வரவில்லை. உயிரை அவளிடம் விட்டுவிட்டு, வெறும் கூடாக, நான் சென்னை திரும்பினேன். வாழ்க்கையும்,  அதன்  போக்கில்  சென்றது.

ஆனால்,  ஒரு  வித்தியாசம் இப்பொழுது வண்ணமயமாகி இருந்தது.
அவளின் ரத்தம், என் உடலில் இருப்பது, அவளே என்னுடன் இருக்கும் உணர்வைத்   தான்   எனக்குக் கொடுத்தது.

‘தேவதையைக் கரம் பிடிக்க வேண்டும் என்றால்’ அதற்கு ஏற்றவனாக என்னை மாற்ற வேண்டுமே!…

அவளுக்காகவே உழைக்க ஆரம்பித்தேன்.

‘காதல்  என்ற  நெருப்பில்,  என்  தேவதை  என்ற  உளியால்’  என்னை நானே  செதுக்கிக்  கொண்டேன்.

ஒரு பெண்ணைக் காதலிப்பது பெரிய விஷயம் அல்ல.
ஒரு பெண்ணிடம் காதலை சொல்வதற்கு முன், அதைச் சொல்லும் தகுதி, எனக்கு இருக்க வேண்டும் அல்லவா!

‘இளவரசி  மாதிரி,  வீட்டில்  வளர்க்கப்படும்  பெண்ணை  நான்  ராணியாகத் தாங்காவிட்டால், காதலித்து என்ன பயன்!
ஆண்’ என்று சொல்லிக் கொள்வதற்கு  தான், என்ன  அர்த்தம்  இருந்து  விட  முடியும்!

இளவரசியாக வளர்க்கபடுபவளை, பணிப்பெண்ணாக மாற்றுவதா காதல்! அவள் தந்தையை விட மனதாலும், செயலாலும் அவளை நான் தாங்க வேண்டுமே!

அது  என்ன  மனைவி  மட்டும்,  ‘தாயாய்  மடி  தாங்க  வேண்டும், தோழியாய் தோள்  கொடுக்க  வேண்டும்,  அமைச்சராய்  வழி  காட்ட  வேண்டும் என்பது!

அதே  போல்  கட்டிய  மனைவிக்கு,  காதலிக்கு  ஒருவனால் இருக்க முடியாதா என்ன?
நான் இருக்கிறேன்.
கடைசி மூச்சு வரை இருப்பேன் என்று  வாய்  வார்த்தையாய்  சொல்வதை விடச், செயலில் செய்து காட்டுவது  மேல்  இல்லையா!.. 
அதற்காகத்   தான்   இந்தச்  செதுக்கல்கள்.

‘காதலுக்கு மரியாதை, அலைகள் ஓய்வதில்லை’ போன்ற படங்கள் இப்பொழுது புது  அர்த்தம் கொடுக்கிறது.
அதில், காதல் வெற்றி பெரும் வரை, தான்  காட்டி  இருப்பார்கள்.

காதலித்தவளை  கைப்  பிடிப்பது  மட்டுமே  வெற்றியாகக்  காட்டப்படும்.
வெற்றி என்பதன் தொடக்கம் மட்டுமே அது.  உண்மையான வெற்றி, கடைசி வரை,  காதலித்தவளுக்காக  வாழ்வது, மடி  தாங்குவது  மட்டும்  தான்.

காதலால் நான், அவளாகி போனேன். பெற்ற வெற்றிகள் எல்லாம் அவளுக்கான  என்  காணிக்கை.  தேவதைகள்  வரங்கள் மட்டுமே தருவார்கள்  என்பது  உண்மை  தானோ!…

மீண்டும் அவளைச் சந்திப்பேனோ?
என் காத்திருப்புக்கும்,  தவத்திற்கும் வரமாக அவள் வருவாளா?

என் தேவதையே!…
உன்னை மடி தாங்கி, என் கடைசி மூச்சு வரை உன் ஒருத்திக்காகவே,  என் இதயம் துடிக்கும்…
என் கைச்சேர வருவாயா?

உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே.

O did I not think of you?
and thinking of you,
did I not think and think again of you?
was I not baffled
by the world’s demands
that held me to my work?
O love, did I not think of you,
and think of you till I wished
I were here to sate my passion
till this flood of desire
that once wet the branch of the tall tree
would think
till I can bend and scoop a drink of water
with my hands?” என்று முடித்து இருந்தான்.

கண்களில் கண்ணீர் வழிய, திக்கற்று வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் மதுரா.

விஜய்யின்  இந்தக்  கேள்விகளுக்கு அவன், எதிர்பார்ப்பிற்கான பதில் தான், அப்பொழுது  அவளிடம் இல்லை.

சொல்லவும் முடியாது.
சொல்லவும் கூடாது.
அர்த்தம், அநர்த்தமாகி விடும் .

காதல்,  அவன்  சொன்னது  போல், ‘யார் வேண்டும் என்றாலும் செய்து விடலாம்’  தான்.
அதில்,  வெற்றி  பெறுவது  ஒரு  சிலரால்  மட்டுமே  முடியும்.

அப்படி காதலில் வெற்றி பெற்றவர்கள் எத்தனை சதவீதம், சிறுச் சிறு விஷயங்களை   ஊதிப்   பெருசாக்கப்பட்டு,   டைவோர்ஸ்   வரை போகிறார்கள்?

இல்லை,  எத்தனை  சதவீதம்,  உயிர்  பிரியும் அந்தக் கடைசி நொடிவரை, தன்   இணையை,  காதலித்தே வாழ்கிறார்கள்?

ஆனால்,  இங்கு  இந்தக்  கேள்விகளுக்கு  அர்த்தமே  இல்லையே!
சோனா  என்ற,  ‘மாபெரும்  சீன  பெருஞ்சுவர்’  நடுவே  இருக்கிறதே!

இந்தக், ‘காதலுக்கு மரியாதைத்’ தான் செலுத்த முயன்றால், அதற்கான அர்த்தமே மாறிவிடும்.

ஊர் உலகத்தில், கதைகளில், டிவி தொடர்களில் வேண்டும் என்றால் இவற்றை ஆதரிக்கலாம்.

நிஜ வாழ்க்கை என்று வரும்போது இதற்கு வேறு வர்ணம் அல்லவா பூசப்படும்!

சமூகம்,  கலாச்சாரம், பண்பாடு  என்ற  ஒன்று உண்டு.
சோனா, விஜய் திருமணத்திற்கு  வந்தவர்களின் எண்ணிக்கை  ஒன்றை லட்சம்  தாண்டியதாம்.

அந்த  ஒன்றை லட்சம்  பேருக்கு மட்டும் அல்ல, இவன் காதலைத் தான் எந்த விதத்தில் அங்கீகரித்தாலும், மீடியா முன் செல்லும் சோனாவிற்கு  தான், அனைவரின்  சப்போர்ட்  இருக்கும்.

யோசித்து  பார்க்கப்,  பார்க்க  மதுராவிற்கு  தலை  வலித்தது.

தலையை இரு கைகளாலும், தாங்கிக் கொண்டு, அப்படியே அமர்ந்து விட்டாள்  மதுரா.

அதே  சமயம்  நகரின்  வேறொரு  பக்கம்,  தன்  வீட்டில்  தலையைப் பிடித்துக்  கொண்டு  அமர்ந்து  இருந்தாள்  ACP ராஜேஸ்வரி.

ஆல்வின், விஜய் கொடுத்தத் தகவல்களை ஆராய்ந்து கொண்டு இருந்தாள்.

பல்வேறு  இடங்களுக்கு  ஆட்களை அனுப்பியும், பல அழைப்புகள் விடுத்தும், உடன் இருந்த ஆதாரங்களைக் குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்தாள்.

அதே சமயம் வந்த அழைப்பினை ஏற்றவளின் நெற்றிச் சுருங்கி, கண்களில் தீவிரம் குடி ஏறியது .

“மேடம்!… கோட் ஆபரேஷன் ஜாக்கெல்/code operation jackel). சக்திச் சார்       உங்களை கான்டக்ட் செய்ய சொல்லியிருந்தார் ஏதாவது எமெர்ஜென்சி என்றால்…. நீங்க உடனே வரது நல்லது.” என்றது எதிர்முனை (விஜய்யின் பெயர்  வெளியே  தெரியக்  கூடாது  என்று, ‘ சக்தி சார்’  இந்தச் சங்கேதப் பெயர் )

“என்ன  விஷயம்?” என்றாள் ராஜேஸ்வரி.

“சார் எதிர்பார்த்தது தான், நடந்துட்டு இருக்கு. அட்ரஸ் அனுப்பறேன்.” என்றது  எதிர் முனை.

அட்ரஸ்  வந்தவுடன்,  கமிஷ்னரை  தொடர்புக் கொண்ட,  ராஜேஸ்வரி, “சார்!… ஒரு அட்ரஸ் ரெய்டு போறேன். ஹ்ம்ம்!… ‘ஆபரேஷன் ஜாக்கெல்’ தான்  சார்.” என்றாள்.

“கோ அஹெட். உன் சஸ்பென்ஷன் கான்செல் செய்துட்டேன்.” என்றார் கமிஷனர்.

“சார்!… ரெண்டு நாள் கூட ஆகலையே!… அதற்குள் எப்படி?” என்றாள் ராஜேஸ்வரி.

“மிஸஸ்.சிவகாமி மேடம் பேட்டிப் பார்த்தப் பிறகு, CM  நேரிடையாகவே கூப்பிட்டுக் கேட்டார்.
நடந்ததை சொன்னேன். உன் சஸ்பென்ஷன், கான்செல்  செய்துட்டார்.

அவருக்கும் நிறைய பெண்கள் காணாமல் போவதாக இன்டெலிஜென்ஸ், தகவல்  வந்து  இருக்கு.

சோ, இதில் இறங்க முழுப் பவர் தந்து இருக்கார். எந்தத்  தலையீடும்  இருக்காதாம். யூ கேர்ரி ஆன்.” என்றார்.

தமிழ்நாட்டில்  பெண்கள்,  குழந்தைகள் காணாமல் போவதைக் கண்டுபிடித்துக்  குற்றவாளிகளை  ஒழிக்க அமைக்கப்பட்ட,  பிளான் அண்ட் குழுவிற்கு  பெயர்  தான்,  ‘ஆபரேஷன் ஜாக்கெல்.’

இதற்கு  வெளியே  இருந்து  உதவுவது  விஜய்யும், ஆல்வினும்.

விஜய் ஏற்பாட்டின் பெயரில், பல இடத்தைக் கண்காணிக்க ஆட்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். அதில் ஒருவன் தான், ராஜேஸ்வரிக்கு தகவல் சொன்னது.

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

66

அந்தத் தகவலைக் கொண்டு, அடுத்த பதினைந்து நிமிடத்தில், அந்த அபார்ட்மெண்ட்  சுற்றி  வளைக்கப்பட்டது.ராஜேஸ்வரி  உள்ளே நுழையவும், ஒருவன் வெகுவேகமாக வந்து, “ஐந்தாவது மாடி.  ஒட்டுமொத்த பிளோர், அவங்கத் தான் வாடகைகக்கு எடுத்து  இருக்காங்க.” என்றான்.அடுத்த  சில வினாடிகளில், சில பல அடிதடி, தூப்பாக்கிச்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்