arrow_back
என் வீட்டு தோட்டத்தில் என் வீட்டு தோட்டத்தில் 10

என் வீட்டு தோட்டத்தில் 10

visibility 2
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

10

“இப்பக்கூட நீங்க பேரனைப் பாக்க வரல. கேஸ் வாபஸ் வாங்கச் சொல்லித்தான் வந்திருக்கீங்க!”

“ஏன் அபி, இப்படி நெஞ்சுல ஈரமில்லாம பேசுற. எனக்கு அவன் தலச்சன் பேரன்டீ. ஆக்சிடன்ட் ஆனதக் கூட நீ சொல்லல. நானா தெரிஞ்சுக்கிட்டு உயிரக் கையில புடிச்சுட்டு ஓடியாறேன். கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாம பேசுறீயே?” 

“எங்க ஓடியாந்தீங்க. உங்க கொழுந்தனுக கார்ல சொகுசாத்தானே வந்தீங்க?” கோபத்திலும் நக்கல் துளிர்த்தது அபிராமி பேச்சில்.

“ஆமா… அவங்கதான் உடனே கார எடுத்துட்டு போகச் சொன்னாங்க. செலவுக்கு பணம் கூட கொடுத்து விட்டாங்க அபி.”

“இந்த பணத்துக்கும் கணக்கு எழுதி வச்சுருப்பாங்கம்மா. யாருக்கு வேணும் அவங்க காசு?”

“ஏன் அபி, ஆக்சிடன்ட் பண்ணவங்களே செலவு எல்லாம் பாத்துக்கறாங்களா?” என்று மெதுவாகக் கேட்க, 

“ம்மாஆஆ!” என்று பல்லைக் கடித்தாள். 

மகள் ஊரைவிட்டு தனித்து வந்து ஆறு வருடங்களுக்கு மேலாகிறது. தம்பி துணைக்கிருக்கிறான் என்ற நம்பிக்கை பெற்றவளுக்கு. ஆனால், சம்பாத்தியத்திற்கு என்ன செய்கிறாள் எனத் தெரியாது. ஏதோ செடி, கொடி விக்கிறாளாம் என்றளவில் தான் தெரியும். அதுல எவ்வளவு சம்பாத்தியம் வரப்போகிறது. அரவிந்தனும் தனியே பெட் கிளினிக் வைத்திருக்கிறான் தான். பேரனுக்கு விபத்து என்று கேள்விப்பட்டதும், அபியின் சித்தப்பாக்கள் தான் காசும் கொடுத்து, இந்துமதியை காரிலும் அனுப்பி வைத்தது. 

“இந்தக் கோபமும், வீணாப்போன வீம்பும் தான் அபி உங்கிட்ட ஆகாதது. சொந்த பந்தமில்லையா, சொத்துபத்து இல்லையா? இப்படி எதுக்குத் தனியா வந்து பிள்ளைய வச்சுட்டு கஷ்ட்டப்படணும்?”

“ஏன் என்னையும் அந்த வீட்டுக்கு இந்துமதி நம்பர்‌ டூன்னு ஆகச்சொல்றீங்களா? நான் கஷ்ட்டப்படுறேன்னு உங்கிட்ட சொன்னேனா? சுயமரியாதையோட இருக்கறதுக்கு பேர் வீம்புனா நான் அப்படியே இருந்துட்டுப் போறேன். பேரனப் பாத்தாச்சுல்ல… நீங்க கெளம்புங்க.” 

“ஏன்டி இப்படி மூஞ்சிலடுச்ச மாதிரி பேசுற. பெத்தவகிட்ட எப்படி இருக்க? என்னா ஏதுன்னு ஒரு வார்த்தை கேட்டியா?”

“அதெல்லாம் உங்க கொழுந்தனுக ராணி மாதிரி தான் உங்களை வச்சுருப்பாங்க. அப்பதானே நீங்க சொத்து பத்தி மூச்சுவிட மாட்டீங்க?” 

“இப்பக்கூட உனக்கு சொத்து தானா அபி? நீ வக்கீல் நோட்டீஸ் விட்டும் இன்னும் ஒரு வார்த்தை அதைப்பத்தி என்கிட்ட கேக்கல தெரியுமா? உங்க சித்திக தான் சாடைமாடையா பேசுறாளுங்க! அவளுக்கு கேஸு, கோர்ட்டு, வக்கீலெல்லாம் என்ன புதுசா. நமக்குதான் மானம் போகுதுன்னு பேசுறாங்க.‌”

“எங்க சித்தப்பா எல்லாம் காரியக்காரவுங்கம்மா. எங்கே உங்ககிட்ட கோபப்பட்டு வெளியே போகச் சொன்னா சொத்து பிரிச்சு கொடுக்கணுமே. இத்தனை வருஷமா அங்க இருக்கீங்களே. சொத்து டாக்குமென்ட்ஸ் எல்லாம் கண்ணாலையாவது பாத்திருக்கீங்களா? இல்ல எங்ககிட்டதான் காமிச்சுருப்பாங்களா? எதெது யார் பேர்ல இருக்குனே தெரியாது. அதுல அப்பா சுயசம்பாத்தியமும் இருக்கும்மா.” 

“உங்க அப்பாவுக்குப் பிறகு அவங்கதான அபி எல்லாமே பாக்குறாங்க. அவங்ககிட்டதான் இருக்கும். ஏதோ விவசாய லோன் வாங்க பேங்க்ல வச்சிருக்கறதா சொன்னாங்க.” 

“அறுபது ஏக்கர் நிலப் பத்திரத்தையுமா? ம்ஹும்…. இப்படியே அவங்க சொல்றதெல்லாம் நம்பிட்டிருங்க. எனக்கு செலவழிச்ச ஹாஸ்பிடல் செலவைக்கூட கணக்கு எழுதி வச்சவங்கதானே அவங்க. கேட்டா பொதுச்சொத்து. உனக்கு செஞ்ச மாதிரி ஒவ்வொரு பிள்ளைக்கும் செய்யணுமில்லைனு சொன்னாங்க. அப்ப பொதுச் சொத்த பிரிக்க வேண்டியதுதானே?” 

“ஊருக்குள்ள பேரு பெத்த குடும்பம் அபி. கோர்ட்டு வாசல மிதிச்சா நல்லாவா இருக்கும்? உங்க அப்பா இருந்தவரைக்கும் அவர்தான் ஊருக்குள்ள நாலுபேருக்கு யோசனை சொல்லுவாரு. ஆனா உன்னாலதான் குடும்பம் கோர்ட்டு, கேஸுன்னு…” இவர்கள் பேச்சு வளற, 

அதற்குள், “ம்மா” என சக்தி அழைக்க இவர்கள் பேச்சு தடைபட்டது. வேகமாக அவனிடம் வந்தாள். 

தூங்கி எழுந்தவன், “ரெஸ்ட் ரூம்” என்றான். 

மெதுவாக கைபிடித்து, “வா!” என படுக்கை விட்டு இறக்கினாள். 

“எப்பம்மா வீட்டுக்கு போவோம். எனக்கு இங்க பிடிக்கல” என்றான் அழுவது போல் முகத்தை வைத்து. துருதுருவென இருந்தவனுக்கு, இரண்டு நாட்களாக படுக்கையிலே இருக்கவும் எப்படா வீட்டுக்குப் போவோம் என்றிருந்தது. 

அவளுக்கும் அதுதான் கேள்வியாக இருந்தது. தலையில் சிறு காயம்தான். தையல் போட்டிருக்கிறது. குதிக்கும் பொழுது கை ஊன்றியதால் இடது கை அசைத்தால் வலிக்கிறது என்பதற்காக ஆர்ம் ஸ்லிங் (arm sling) போட்டுள்ளனர். மற்றபடி எந்தப் பிரச்சினையும் இல்லை. அங்கங்கு காலில் சிறு சிராய்ப்புதான்‌. ஆனால் இன்னும் ஏன் டிஸ்சார்ஜ் பண்ணவில்லை என்றுதான் தெரியவில்லை. 

கேட்டால் சார் தான் இன்னும் இரண்டு நாட்கள் வைத்திருந்து முழு சோதனையும் செய்யச் சொல்லியதாக நர்ஸ் ஒருவர் கூறிச்சென்றார். அட்மிட் ஆன மறுநாள் இவளிடமும் இரத்தம் எடுத்தனர். கேட்டதற்கு எமர்ஜென்சிக்கு என்றனர். சக்தி ஒன்றும் இரத்தம் ஏற்றும் கன்டிஷனில் இல்லையே. அப்படியே என்றாலும் இவளுக்கும், சக்திக்கும் வேறு வேறு இரத்த வகை. அதை இவளிடம் இரத்த மாதிரி எடுக்கும் பொழுதே சொல்லிவிட்டாள். 

ஏற்கனவே சுதந்திரதின விழாவில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற கோபத்தில் இருக்கிறான் சக்தி. மறுநாள் காலையே திருவேங்கடம் பார்த்துப் போக வந்தார். அவரிடமே பெரிய மனிதன் தோரணையில் முகத்தை திருப்பினான். இவரால் தானே தன்னால் பள்ளி விழாவில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற கோபம்‌. 

அவரும் சிறுபிள்ளை போல், “சாரி நைனா!” என்று இவனிடம் மன்னிப்பு கேட்டார்.‌ பேச்சை வளர்க்க வேண்டி உன் பேரென்ன நைனா என்று கூட வலிய பேசினார்.

“ம்மா… இவர வெளியே போகச் சொல்லுங்க. இவராலதான் என்னால பார்ட்டிசிபேட் பண்ண முடியல” என்று பெரிய மனிதன் போல் கோபமாக ஆரம்பித்தவன் முடிக்கையில் சிறுவனாக அழுதான். அவனது அழுகை அவளையும் அசைத்தது. இருந்தாலும் மகன் முன் உடைந்து விடாமல், 

“என்னடா பெரியவங்ககிட்ட மரியாதையில்லாம” என்றுதான் அதட்டினாள். 

“உரே நைனா… சாரிடா…” என்று இவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்தான் கெஞ்சிக் கொண்டிருந்தார். 

எவ்வளவு ஆர்வமாக இருந்தான் என்று இவளுக்குதான் தெரியுமே‌. இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தான். அடிப்பட்ட அன்று இரவு மட்டும்தான் அமைதியாக இருந்தான். மறுநாளே நான் பள்ளிக்கு போயே தீருவேன் என அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினான். 

அபிதான் அடுத்து ஸ்போர்ட்ஸ் டேல பாத்துக்கலாம்டா என ஏதேதோ சொல்லி சமாதானப் படுத்தினாள். அன்று முழுவதும் சாப்பிடக்கூட முரண்டு பண்ணினான். ஒரு நாள்தான் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தது. மறுநாள் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டான். டீலக்ஸ் ரூமே எடுத்திருந்தான். இரண்டு நாட்களில் வீட்டிற்கு சென்று விடலாம் என்று நினைத்திருக்க மூன்று நாட்ளாகியது. இன்றும் டிஸ்சார்ஜ் பண்ணுவதற்கான அறிகுறி தெரியவில்லை. 

இன்னும் எம்.ஆர்.ஐ, ஈசிஜி என்று ஏதாவது ஒரு டெஸ்ட் எடுத்துக் கொண்டு தான் இருந்தனர். இவளுக்கே எதற்கு இத்தனை டெஸ்ட் என்ற சந்தேகம் வந்தது. மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் என்றாலே இதுதான் பிரச்சினை. இவர்கள் மெஷின் வாங்கி போட்டிருப்பதற்காக நாம் சோதனை எலி ஆகவேண்டுமா என்னு தோன்றினாலும், ஒரு வேளை வெளியே தெரியாமல் வேறு எதுவும் அடி பட்டிருக்கிறதோ என்று கூட உள்ளூர பயம் வந்தது.

அடிபட்ட அன்று, மருத்துவர் வெளியே வந்து சக்தியின் உடல் நிலையைப் பற்றி சொல்லும் வரை குருப்ரசாத் கூடவேதான்‌ இருந்தான். அன்று இரவு கூட வீட்டிற்கு செல்லவில்லை. 

பிரணவுக்கு விபரம் தெரிந்து அவனை விடுத்து தனித்து இருந்தான் என்றால் அது அந்த இரவு மட்டும்தான். 

அபிராமிக்குதான் இவனைப் பார்க்க பார்க்க என்னவென்று புரியதொரு அவஸ்த்தை. நெருப்பில் நிற்பது போல் இருந்தது. எப்பொழுது இங்கிருந்து கிளம்புவான் என்று தவித்துப் போனாள். 

அதற்கு தம்பி கூறிய செய்தியும் ஒரு அதிமுக்கிய காரணம். இவனிடம் எப்படி எனது புகைப்படம் என்று யோசித்தே தலை வலித்தது . 

விபத்து நடந்த அன்று, குருப்பிரசாத்திற்கு பின்னாலே தானே அரவிந்தனும் அவசரமாக வந்தான். அவனைக் கடந்து அக்காவிடம் வரும்பொழுது ஏதேச்சையாக அவனது கையிலிருந்த கைபேசியில் இவனது பார்வை பட்டது. அதில் அபிராமி புகைப்படம். அத்தனை அவசரத்திலும், பார்த்ததும் ஒரு கணம் அரவிந்தனது நடை தேங்கியது. அதுவும் சமீபத்திய படமோ, சென்னை‌ வந்தபிறகு எடுத்ததோ இல்லை. ஊரில் இருக்கும் போது எடுத்தது. இவரிடம் எப்படி அக்காவின் நிழல்படம் என்ற கேள்வியை முந்தியது எதற்கு என்ற கேள்வி. இவன் பார்க்கிறான் எனத் தெரிந்ததும் இயல்பு போல் தொடுதிரையை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். 

அக்காவின் பக்கத்தில் அமர்ந்து ஆறுதலாக கை பற்றியவன், அவளிடமும் இதை மறைக்கவில்லை. உடனே சொல்லிவிட்டான். குரு, எந்தளவிற்கு இவர்களை ஆராய்ந்தானோ, அதற்கு சளைக்கவில்லை அரவிந்தனும் அவனை ஆராய்ந்தது. இவர்கள் ஐசியூ அறைக்கு எதிரே வரிசை சேரில் அமர்ந்திருக்க, குரு அமராமல் சுவரில் சாய்ந்து நின்றிருந்தான். 

அந்த கண்கள். அதே கண்கள். இப்படியும் இருக்க முடியுமா என ஆச்சர்யம் அவனுக்குள்‌. அக்கா வாழ்க்கையை காவு வாங்கிய அதே கண்கள். எப்படி மறக்க முடியும்? 

“உனக்கு ஏதாவது தெரியுமாக்கா?” என்றான்‌ சன்னக் குரலில். 

“இல்லடா… என் ஃபோட்டோ எப்படி அவர்கிட்டனு எனக்கே மண்ட காயுது…”

“ஒரு வேளை இவர்தான்…” என்று யோசனையாக இழுத்தவன் அக்கா முகத்தைப் பார்க்க, அவள் பார்த்த பார்வையில்,

“சாரிக்கா… அதைப் பத்தி பேசல!” என்றான். அவனுக்கும் சரி, அவளுக்கும் சரி இதைப்பற்றிப் பேச விருப்பமில்லை. 

சற்று நேரத்தில் குருவும், அரவிந்தும் அடுத்தடுத்து பெஞ்சில் தான் அமர்ந்திருந்தனர். இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. 

அனுப்பிரியாவும், பூங்காவனமும் வந்து பார்த்துவிட்டு கண்ணையனோடு மூவரும் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். 

தலையில் தையல், கைக்கு மட்டும் ஆர்ம் ஸ்லிங் போட்டிருக்க மற்றபடி எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு நாள் க்ளோஸ் மானிட்டரில் இருக்கட்டும் என்று மருத்துவர் வெளிவந்து சொன்ன பிறகுதான் அபிராமிக்கு ஆசுவாசமானது. 

அதன் பிறகுதான் அக்காவை வலுக்கட்டாயமாக கேண்டீன் அழைத்துச் சென்று டீ கூட வாங்கிக் கொடுத்தான்.

ஆனால் குரு அது கூட குடிக்கவில்லை என்று இவர்களுக்குத் தெரியாது. 

உறவு இருக்கு. ஆனால் உரிமை கோரமுடியாத, வெளியே சொல்லமுடியாத விந்தையான உறவு. இப்பவும் இதை எங்கு தொடங்கி எங்கு முடிப்பதென்ற கேள்விதான் உள்ளுக்குள். ஆதியும் புரியாமல் அந்தியும் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். பசி கூட மறத்துப் போயிற்று. 

இவளைத் தேடி விழுப்புரம் சென்றவன் மதியமும் சரியாக சாப்பிடவில்லை. 

ஜமுனாவிற்கு அழைத்து மகன் சாப்பிட்டானா என்று மட்டும் விசாரித்தான்‌. ஜமுனா பதிலுக்கு அவர் மகனை விசாரிக்க சாப்பிட்டேன் என பொய் சொன்னான். 

இவர்கள் கேண்டீன் சென்றுவிட்டு வர, நர்ஸ் குருவிடம் ஏதோ விபரம் சொல்லிக் கொண்டிருந்தார். இவர்கள் வேகமாக அங்கு வர, “சக்தியோட அப்பாட்ட விபரம் சொல்லியிருக்கு. கேட்டுக்கோங்க” என்று சொல்லிச் சென்றார். ஜாடை அப்படி சொல்ல வைத்தது. 

இருவர் பார்வையும் மோதிக் கொண்டன. இவள் பார்வை அறிந்து இவளிடம் மருந்து சீட்டை காட்டி, வாங்க வேண்டும் என்றான். 

இவள் தம்பியைப் பார்க்க, “கொடுங்க சார்!” என்றான்.

“இல்ல… நானே வாங்கி வர்றேன்” என்றவனிடம்,

“வேண்டாம் சார்‌. நாங்க பாத்துக்கறோம். நீங்க கிளம்புங்க!” என்றவன், பிடுங்காத குறையாக அவன் கையிலிருந்த சீட்டை வாங்கினான். என்னவோ இவன் இங்கிருந்து சென்றால் போதும் என்றிருந்தது இருவருக்கும். 

அன்று இரவு ஒருவர் மட்டுமே தங்க முடியும் என்று கூற, அரவிந்தன் அக்காவை வீட்டுக்குப் போகச் சொன்னான். பிடிவாதமாக மறுத்துவிட்டாள். தம்பியை கிளம்பச் சொன்னாள்‌. இவளை கிளப்ப முடியாது என்று தெரியும். 

“சரிக்கா… எதுனாலும் ஃபோன் பண்ணு!” என்றுவிட்டு தனது கார்டை அவளிடம் கொடுத்தான். 

“அக்கவுன்ட்ல இருக்குடா… வேண்டா…” என்று மறுக்க எத்தனித்தவள், இவன் பார்த்த பார்வையில் பேசாமல் வாங்கிக் கொண்டாள். எல்லாமே லோன் தான் என இவனுக்குத் தெரியும். எதற்கும் தம்பியிடமோ, அம்மாவிடமோ உதவி கேட்டதில்லை. அவளே சமாளிப்பாள். பேங்கில் பெண்கள் தொழில் முனைவோர் திட்டத்தில் தான் கடன் வாங்கியிருக்கிறாள். சொத்துக்கு மட்டும் தான் உரிமை கோருகிறாள். அதுவும் அவர்களது சித்தப்பாக்களின் ஓரவஞ்சனை குணம் தெரிந்த பிறகுதான். 

மீண்டும் சிறிது நேரம் அக்காவுடன் இருந்துவிட்டு, மறுபடியும் அவளை கேண்டீன் அழைத்துச் சென்று வம்படியாக சாப்பிட வைத்தே விட்டுச் சென்றான். 

அரவிந்தன் கிளம்பவும், குருவும் இரவுப் பணி நர்சிடம் எதுவோ சொல்லிவிட்டு அவனும் கிளம்பினான். பதிவேட்டில் இவள் எண் தானே இருக்கும். அவசரமெனில் அழைக்குமாறு இவன் எண்ணையும் கொடுத்துச் சென்றான். 

“அட்டென்டர்ஸ் ரூம் அங்க இருக்கு மேம். நீங்க அங்க தங்கிக்கோ. எதுனாலும் கூப்பிடுவோம்” என்று‌ நர்ஸ் சொல்ல,

கேட்கலாமா வேண்டாமா என ஒரு கணம் தயங்கியவள், “அவங்க என்ன சொன்னாங்க?” என்றாள்‌. 

“யாரு… சக்தியோட அப்பாவா?” என்று‌ கேட்க, இல்லை என்று சொல்ல வந்தவள், அதற்குள் இரவு மருத்துவர் ரவுன்ட்ஸ் வர, பேஷன்ட் டீடெய்ல்ஸ் கொடுக்க நர்ஸ் அவரோட சென்றுவிட்டார். 

காலை ஐந்து மணிக்கெல்லாம் குரு அங்கு ஆஜரானான். அப்பொழுதுதான் கவனித்தாள். அவன் நேற்று உடையிலேயே இருந்தான்‌. முகம் மட்டும் கழுவி வந்திருப்பான் போல. முன் தலை ஈரமாயிருந்தது‌. 

இப்பொழுதும் நர்சிடம் ஏதோ சொல்லிச் சென்றான். 

இவள் இப்பொழுது தயங்கவெல்லாம் இல்லை. என்னவென்று கேட்க, “குளிச்சிட்டு வர்றேன்னு போறார் மேடம். நைட்டு மூனு தடவை வந்து பாத்துட்டு போனாரு. நீங்களாவது ஒரு தடவைதான் வந்தீங்க!” என்றார்.‌

வலி மருந்து கொடுத்திருந்ததால் இவள் வந்து பார்க்கும் பொழுது சக்தி, நன்கு தூக்கத்தில் இருந்தான். இப்பொழுதுதான் அவனும் வீட்டிற்கு போகவில்லை என்பதே தெரிந்தது. மருத்துவமனைக்கு வெளியே மரத்தடியில் போட்டிருந்த கல் பென்ஞ்சில் படுத்திருந்தான். ஆனால் ஒரு பொட்டுத் தூக்கமில்லை‌. கண்கள் இரத்தவரி கண்டிருந்தது. முன்தினம் பகல் முழுவதும் கார் பயணம். மன உலைச்சவோடு உடல் அலைச்சலும். இரவும் தூங்காதது கண்ணில் மணலைக் கொட்டியது போல் உறுத்திற்று. 

இதை அவளால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவனது அப்பாதான் விபத்துக்கு காரணம் எனினும் தவறு இரண்டு பக்கமும்தான். சக்தி எதிர்பாராமல் குதித்ததும்தான் காரணம்.‌ யார் பக்கம் சரி தவறு என்பதைவிட, பிரச்சினையும் சீரியசாக இல்லை. இரவே சக்தி தெளிவாகத்தான் இருந்தான். இருந்தாலும் தலையில் அடிபட்டிருக்கிறதா என இவர்கள் திருப்திக்கு ஸ்கேன் பண்ணி பார்க்கவே இந்த அப்சர்வேஷன். 

அதற்காக இவர், இரவு வீட்டிற்கு கூடப் போகாமல் இவ்வளவு மெனக்கெடுவானேன் என்ற கேள்விதான் அவளுக்குள். ஒரு வேளை பெரியவர் மீது கேஸ் கொடுத்துவிடுவோம் என பயந்துவிட்டாரா என்று கூட நினைத்தாள். 

குளித்து உடைமாற்றி வந்தவனுடன் திருவேங்கடமும் வந்தார். நார்மல் வார்டுக்கு மாற்றும் வரை உடனிருந்து, சிறுபிள்ளை போல் அவனிடம் மன்னிப்பு கேட்டு இறைஞ்ச…

சக்தி, பெரிய மனிதன் தோரணையில் முகம் திருப்ப குருவின் முகத்தில் புன்னகை இழையோடியது. அப்படியே பிரணவிற்கு எதிர்ப்பதம் என்றுதான் நினைத்தான். 

இவர்கள் வந்த சிறிது நேரத்தில் அரவிந்தனும் வந்துவிட்டான். 

“அக்கா, நீ போய் குளிச்சிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வா. நான் பாத்துக்கறேன்” என்று பைக் சாவியை நீட்டினான்.‌

“மார்னிங் டாக்டர் வரட்டும்டா. பாத்துட்டு போறேன்!” என்றவளிடம், 

“அவங்க வர எப்படியும் ஒன்பது மணிக்கு மேலாகும். நீ அதுக்குள்ள போய் குளிச்சிட்டு வந்துறுக்கா. நானும் டாக்டர்தான். பாத்துக்க மாட்டேனா?” என்று கேட்க, 

“டேய்…‌நீ‌ நாலுகால் ஜீவன் டாக்டர்டா” என்றவள் முகத்தில் இறுக்கம் தளர்ந்து இப்போதுதான் சிறு மலர்ச்சி‌. 

“இன்னும் டீ கூட குடிச்சிருக்க மாட்டீயே?” என்று கேட்க அவள் அமைதியே அமோதித்தது. 

“மொதல்ல நீ வா! டீயாவது குடி” என்று இப்பொழுதும் இவன்தான் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று டீ குடிக்க வைத்து அழைத்து வந்தான். 

அதற்குள் மருத்துவர் வந்திருக்க, குருவிடம் பேசிச் சென்றார்.

இப்ப நான் டீ கேட்டேனா என்பது போல் தம்பியை முறைத்தாள்.

இவர்கள் வந்ததும் இன்றே நார்மல் வார்டுக்கு மாற்றவிருப்பதை சொன்னான். அதற்கு எப்படியும் ஒன்பது மணிக்கு மேல் ஆகும். பகல் நேர நர்ஸ், வார்டுபாய் எல்லாம் வரவேண்டும். அவர்கள் வேலையை பொறுப்பெடுத்துக் கொண்ட பிறகுதான் நார்மல் வார்டுக்கு மாற்றுவார்கள். அதற்குள் குளித்து வந்துவிடலாம் என அபிராமியும் பைக்கில் கிளம்பிவிட்டாள். 

இவள் வீட்டுக்கு வருவதை அனுப்பிரியாவிற்கு ஃபோனில் தெரிவித்தான். இங்கு மகனுக்காக தைரியமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்பவள் தனிமை கிடைத்ததும் உடைந்து விடுவாள் எனத் தெரியும்‌. அதனால் தான் அனுப்பிரியாவை வீட்டிற்குப் போகச் சொன்னான். 

இவள் போவதற்குள் அங்கு அவள் காத்திருந்தாள். கையில் டிஃபன் கேரியர். தம்பியின் வேலை எனப் புரிந்தது. 

இருவரும் மேலே சென்றனர். 

அபிராமி குளித்து உடை மாற்றி வருவதற்குள் பிரியா, கொண்டு வந்த டிஃபனை தட்டில் எடுத்து வைத்தாள். 

மறுத்தாலும் விடப்போவதில்லை எனத் தெரியும். பேருக்கு உண்டு எழுந்தாள்‌. கதவைப் பூட்டி வெளியேற, தானும் உடன் வருவதாக பிரியாவும் வண்டியில் ஏறிக் கொண்டாள்.

இவர்கள் வரும்பொழுது குருவும், திருவேங்கடமும் இன்னும் அங்குதான்‌ இருந்தனர். பிரியா, குருவையே தான் பார்த்தாள். இவனுக்கும் பார்த்ததும் அவளை அடையாளம் தெரிந்தது. வண்டியைத் தள்ள முடியாமல் தள்ளியவளாயிற்றே. “அக்கா… அன்னைக்கு சொன்னேன்ல, சக்தி மாதிரியே கண்ணுன்னு இவர்தான்” மெல்ல கிசுகிசுத்தாள். 

“பிரியா” அடிக்குரலில் அதட்டினாள். 

பத்து மணிக்கு மேலாகியது நார்மல் வார்டுக்கு மாற்ற.‌ வார்டு பாய் சக்தியிடம் அவனை படுக்கை விட்டு இறக்கச் செல்ல, வேண்டாம் என்றுவிட்டு குருவே முன்னுக்கு சென்றான். 

இவன் கை நீட்ட, “நோ அங்கிள். ஐ வில் மேனேஜ்” என்றவன்,

“ம்மா” என அபிராமியை அழைத்தான். 

அபிராமி மகனிடம் சென்றாள். அவள் கை பிடித்து இறக்கிவிட, கால் ஊன்ற முடியாமல் சற்றே தள்ளாடினான். எங்கோ சுளுக்கியிருக்கும் போல. 

சட்டென குரு அவனைப் பிடித்துக் கொண்டு, 

“ஓகே?” என்றான்.

“யெஸ் அங்கிள். ஐஆம் ஆல்ரைட்!” என்று சொல்ல, குருவுக்கு தான் ஏதோ ஒன்று உள்ளுக்குள் இடறியது.

எப்பவும் பிரணவ் சொல்லும் வாக்கியம்‌. எது எப்படியோ மன உறுதியில் இரண்டு பேரும் ஒரே மாதிரி. இல்லையென்றால் இத்தனை வருடங்களாக பிரணவ் நோயோடு போராட முடியுமா? இந்த மன உறுதி நிச்சயமாக என்னிடமிருந்து வந்ததில்லை என்று குருவுக்கே தோன்றியது.  

அவன் அபிராமி பற்றி அறிந்து கொண்டதை வைத்துப் பார்த்தால் இந்த உறுதியும், மனவலிமையும் கண்டிப்பாக இவளிடமிருந்துதான் பிள்ளைகளுக்கு வந்திருக்க வேண்டும். 

வலப்பக்கம் சக்தியைப் பிடித்திருந்தவன்‌ பார்வை, மறுபக்கம் மகனது கையைப் பிடித்திருந்தவள் மீதே இருந்தது‌. உள்ளுணர்வு உந்த திரும்பிப் பார்த்தாள்‌. அவனது பார்வை நெஞ்சுக்குள் ‌ஊடுறுவியது. அச்சம் ஆட்கொண்டது. சட்டென பார்வையை மாற்றினாள். 

நார்மல் வார்டுக்கு வந்ததும், அவனும் திருவேங்கடமும் கிளம்பி விட்டனர். அவர்கள் கிளம்பவும் தான் இவளுக்கு அப்பாடா என இருந்தது‌. அவளது முகம் ஆசுவாசப்பட்டது அப்பட்டமாகத் தெரிந்தது அவனுக்கும். ஏனோ அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் இனம் புரியா பயம் உள்ளுக்குள். ஏனென்று தான் புரியவில்லை. 

மதியத்திற்கு மேல் இந்துமதி மகனுக்கு ஃபோன் செய்தார். எப்பொழுதும் ‌பண்ணுவதுதான்‌. இவளுக்கு கால் பண்ணிவிட்டு, எடுக்கவில்லை என்றதும் மகனுக்கு அழைத்தார். அப்பொழுதுதான் பேரனுக்கு விபத்து நடந்து, மருத்துவமனையில் இருப்பதே அவருக்குத் தெரிய வந்தது. 

மறுநாள் காலையே கிளம்பி வந்துவிட்டார். அன்று அரவிந்தனுக்கு ஒரு‌ செமினார் என அன்று முழுவதும் அவன் வரவில்லை. 

இன்று அனுப்பிவிடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்க, மறுநாளும் அனுப்பும் முகாந்திரம் இருப்பதாகத் தெரியவில்லை. இவள் நர்சிடம் கேட்டால் சீஃப் டாக்டர் தான் சொல்ல வேண்டும் என்றார். 

அன்று இரவு தான் மருத்துவமனைக்கு அரவிந்தன் வந்தான். ஏன் இன்னும் வீட்டிற்கு அனுப்பவில்லை என அவனுக்கும் புரியவில்லை. 

நேற்றுவரை இவனைப் பார்த்த மருத்துவர் வேறு‌ இப்பொழுது சக்தியை பரிசோதிக்கும் மருத்துவர் வேறு. 

அவர் நர்சிடம் மருத்துவ பாஷையில் ஏதோ கூற, HLA typing டெஸ்ட் இவனுக்கு எதற்கு என்ற யோசனைதான் அவனுக்குள் ஓடியது. அபிக்கு அதுவும் கூட புரியவில்லை. 

இன்று காலைதான் ஊரிலிருந்து அரவிந்தனுக்கு ஃபோன் வந்தது. எமர்ஜென்சி என ஒருவர் அபிராமியைத் தேடி வந்ததாகவும், அவனுக்கு அபிராமியின் ஃபோட்டோ, அட்ரஸ் அனுப்பியதாகவும். 

“எங்கிட்ட விபரம் கேக்காம எதுக்கு யார் எவர்னு தெரியதவங்களுக்கு எல்லாம் அட்ரஸ் அனுப்புனீங்க?” எனக்கேட்டு ஃபோனிலேயே அவனைக் காய்ச்சி எடுத்துவிட்டான். 

“இல்ல அரவிந்தா… அவரப் பாக்க அப்படியே நம்ம சக்தி மாதிரியே இருந்துச்சுடா. அதான் அபிக்கு ஏதாவது நல்லது நடக்குமோன்னு அனுப்பிவச்சேன்.”

“கிழிச்சீங்க… மாமான்னு கூடப் பாக்காம ஏதாவது சொல்லிறப் போறேன். உங்க குடும்பம் அவளுக்குப் பண்ணது பத்தாதா? அந்த வாட்சப் நம்பர அனுப்பு. யார்னு பாக்கலாம்!” என்றவன் பேச்சில் இன்னதென கணக்கிட முடியாதளவு கோபம். முன்ன பின்ன தெரியாத ஒருத்தனிடம், யாராவது ஃபோட்டோவும் விலாசமும் கொடுப்பாங்களா. அரவிந்தன் தலையில் அடித்துக் கொண்டான். 

அதன் பிறகு வேலை பிசியில் அதை மறந்தே விட்டான். 

இப்பொழுது தான் ஃபோன் நம்பர் வாங்கியது நினைவிற்கு வர, அந்த எண்ணிற்கு அழைத்தான். 

வெளியே மரத்தடியில் தலை மீது கை மடக்கி வைத்து, கல் பென்ஞ்சில் வெறுமனே கண்களை மூடி மல்லாக்கப் படுத்திருந்த குருப்பிரசாத்தின் கைபேசி உயிர் பெற்றது.

 

டீசர்…

“யார் சார் நீங்க? எதுக்கு சக்திக்கு இந்த டெஸ்ட்டெல்லாம் எடுக்க சொல்லியிருக்கீங்க?” தன் முன் கோபமாக வந்து நின்று கேள்வி கேட்பவளை ஆழ்ந்து பார்த்தான். எதுவும் பதில் பேசவில்லை.‌

அவனது அமைதி அபிராமிக்கு மேலும் கோபத்தை உண்டு பண்ணியது. கோபத்தில் முகம் ஜிவுஜிவுத்தது. கோபத்நை அடக்குவது அவள் நெஞ்சு ஏறி இறங்குவதிலேயே தெரிந்தது. 

“பேசுங்க சார். ஆக்சிடென்ட பண்ணதுக்கு உங்க அப்பா மேல கேஸ் போடல. ஆனா, இப்ப எங்க அனுமதி இல்லாம என் பையன்கிட்ட இந்த டெஸ்ட்டெல்லாம் எடுத்ததுக்கு கேஸ் போடுவோம்!‌ என்‌ பையன டோனரா நீங்களே‌ எப்படி முடிவு பண்ணீங்க?” 

அவளையே கைகளைக் கட்டிக் கொண்டு அமைதியாகப் பார்த்தவன், “அப்ப நானும் உங்க மேல ஒரு கேஸ் ஃபைல் பண்ணலாமா?” இயல்பாகக் கேட்டவனை புருவம் சுருக்கிப் பார்த்தாள். 

“யூ‌ யூஸ்டு மை ஸ்பெர்ம் வித்அவுட் மை கன்சென்ட். ஐ’ஆம் நாட் சம் ஸ்பெர்ம் டோனர்.” ( you used my sperm without my concent. I’m not some sperm donor.) தோள்களைக் குலுக்கி அலுங்காமல் கூற அவளது காலுக்கடியில் பூமி‌ மெல்ல நழுவியது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

அடுத்த அத்தியாயம்

என் வீட்டு தோட்டத்தில் 11

11“டேய்! அசையாம நில்லு!” “விடும்மா… எப்ப பார்த்தாலும் புள்ளைய அதட்டிக்கினு!”“அப்படி இருந்துமே இப்படி காருக்கு குறுக்க போய் விழுந்துருக்கான் க்கா.”“அந்த மனுஷ கண்ணுத் தெரியாம ஓட்டி வந்ததுக்கு புள்ள என்ன பண்ணும். புள்ள இந்த நாலு நாளும் எப்படித்தான் ஆஸ்பத்திரில ஒரே எடத்துல…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 19 கருத்துகள் உள்ளன

    1. அதுவே இப்பதான் கண்டுபிடிச்சீங்களா…. 🤣🤣🫣🫣

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

      1. குரு hospital உள்ளே நுழையும் போதே சிலுக்க என்று சக்தியை பார்த்து நினைப்பதாக புன பதிவில் வந்ததே மா

        1. அது குருப்பிரசாத்தைப் பார்த்ததும் அபியுடைய நினைவில் வந்ததாக சொல்லியிருக்குமா…

          1. Sorry ma. ஆம். மீண்டும் படித்த போது புரிந்தது

  1. ஹாய் sis. After many months i m here. எப்படி இருக்கீங்க. நானும் இனிமே ரெகுலரா வந்துருவேன். நீங்களும் வாரம் 2எபி உடன் வரவும்

    1. Welcome dear🥰
      ரொம்ப ரொம்ப சந்தோஷம் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில்😘😘
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

உங்கள் கருத்தைப் பகிருங்கள்