arrow_back
என் வீட்டு தோட்டத்தில் என் வீட்டு தோட்டத்தில் 15

என் வீட்டு தோட்டத்தில் 15

visibility 631
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

15

“எனக்கு மனசே ஆறல விஷா… அப்படியே நம்ம குருவ அச்சுல வாத்த மாதிரி இருக்கான். இந்த பாழப்போன கடவுள் அவனை நமக்குக் கொடுத்திருந்தா என்ன? இப்படி நம்மல அல்லாட விடுறானே?”

வாங்கி வந்த மீனை கழுவிக் கொண்டே மகளிடம் தன் வழமையைத் தொடர்ந்திருந்தார் ஜமுனா. மனதில் உள்ளதை உடனே யாரிடமாவது கொட்ட வேண்டும் அவருக்கு. உள்ளுக்குள் அவ்வளவு ஆதங்கம் சக்தியைப் பார்த்ததிலிருந்து. 

இவர்கள் இருந்த வரையுமே ஒரு இடத்தில் உட்காரவில்லை அவன். துறுதுறுவென பூனையைத் துறத்துவதும், அதை பிடித்து கொஞ்சுவதும், கண்ணையனுக்கு செடிகளை வண்டியில் எடுத்து வைப்பதும், இரவு உள்ளே எடுத்து வைத்த செடிகளை வெளியே ஏணி போன்ற அமைப்பில் பார்வைக்கு (showpiece) எடுத்து அடுக்குவதுமென ஏதாவதொரு வேலை செய்து கொண்டேயிருந்தான். 

“ஏம்மா… என்ன சொல்ல வர்றீங்க… குரு காதுல விழுந்தா என்ன நினைப்பான். பிரணவும் உங்க பேரன் தாம்மா!” சத்தமில்லாமல் வாய்க்குள் அதட்டினாள். 

“அய்யோ நான் அதச் சொல்ல வரல விஷா!” எனப் பதறியவர், “விடு, நான் எதைச் சொன்னாலும் இப்போதைக்கி தப்பாத்தான் தெரியும்!” என அங்கலாய்த்தார்.

அவருக்கு பிரணவ் ஏன் இங்கு வந்து பிறந்தான் என்பதல்ல கேள்வி. சக்தி இங்கு பிறந்திருக்கக் கூடாதா என்ற ஆதங்கம். விஷாலிக்கும் புரிகிறது. ஆனால் தம்பி காதில் விழுந்தால் அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ? ஒரு விஷயத்தை சொல்பவர் மனப்பான்மையும், கேட்பவர் மனப்பான்மையும்‌ ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லையே. கேட்பவன் மனநிலையைப் பொறுத்து சொன்னதன் அர்த்தம் மாறலாம். ஏன்… இப்பொழுது விஷாலிக்கே கூட சக்தி இங்கு பிறந்திருக்க கூடாதா என ஜமுனா கேட்டதில், பிரணவ் ஏன் இங்கு பிறந்தான் என்ற கேள்வியும் தானே மறைமுகமாகத் தொக்கி நிற்பதாக் தோன்றுகிறது. குருவுக்கும் அப்படித்தானே தோன்றும். 

விஷாலிக்குமே தம்பியின் பிம்பமாக சக்தியைப் பார்த்ததும் ஆச்சர்யம் கலந்த பிரமிப்பு. திருவேங்கடம் சொன்ன பொழுது கூட நம்பவில்லை. பார்த்த பிறகு நம்பாமல் இருக்க முடியவில்லை. இயற்கை இயற்கைதான். விஞ்ஞானம் எந்தளவிற்கு வளர்ந்தால் என்ன? இயற்கையை மிஞ்ச அதைப் படைத்தவனாலும் முடியாது எனும் போது மனிதன் மட்டும் எம்மாத்திரம்.

அதுவும் அந்தக் கண்ணும், தலை கொள்ளா முடியும் சின்ன வயது குருவேதான். நெற்றியில் புரளும் முடியை ஒதுக்கும் உடல் மொழி கூட அவளுக்கு தம்பியை கண்முன் நிறுத்தியது. பெற்றவர்கள் போல பிள்ளைகள் பிறப்பது இயல்புதானே என நினைத்தவளுக்கு, சக்தியை விட்டுவர மனமேயில்லாமல் தான் நர்சரி விட்டு வந்தனர். 

 “நீங்க சக்தியப் பாத்த பார்வையில அவ உங்க காலடி மண்ணெடுத்து சுத்திப் போட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லம்மா!” என்றாள் சிரிப்போடு. 

“என்ன விஷா பண்ணச்சொன்ன… அவனவிட்டு கண்ண எடுக்க முடியல. அவன் நடக்கறது, பேசறதெல்லாம் பாத்தயில்ல… குருவேதான்.” பெருமை பிடிபடவில்லை ஜமுனாவுக்கு. விட்டால் நாள் முழுவதும் சக்தி புராணம் படிப்பார்‌ போல. 

நர்சரி வந்தவர்கள், செடியைப் பார்க்காமல்… ஜமுனா, பூனைக்குட்டியோடு விளையாடும் சக்தியையே பார்க்க, அபிராமி அவரை யோசனையாகப் பார்த்தாள். 

தன்னைப் பார்ப்பதை உணர்ந்த ஜமுனா, “பூனைக்குட்டி அழகா இருக்கு!” என்று ஒரு அசட்டு சிரிப்பை உதிர்க்க, விஷாலி அம்மாவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். 

“ஆமாம்மா… பூனைக்குட்டி அழகா இருக்கு. அதுவும் அந்தக் கண்ணு சூப்பரா இருக்குல்ல?” கேலி போல் அம்மாவைப் பார்க்க, அவர் பார்வையாலே மகளை முறைத்தார். என்னோட தவிப்பு உனக்கு கேலியா என்பது போல். 

மாடித்தோட்டம் என்றால் இடம் எவ்வளவு என அபிராமி வந்த வேலையைப் பார்க்க, “நீ நேர்ல வந்து பாரும்மா. எனக்கு அளவெல்லாம் சொல்லத் தெரியாது. வீட்டச் சுத்தியும் கூட நிறைய இடம் கெடக்கு. கொரானா காலத்துலருந்து நாங்க இங்க இல்ல. இப்போதான் சென்னை வந்து ரெண்டு வருஷமாகுது. தரையெல்லாம் கொத்திவிட்டு செடி வைக்கணும்‌. ஆளிருந்தா அனுப்பி வைம்மா” என்றவர் வீட்டு விலாசமும், ஃபோன் நம்பரும் கொடுத்தார். எதுக்கு இவ்வளவு விளக்கம் என்பது போல் பார்த்தாள். 

அவருக்கு பேரன் இருக்கும் இருப்பில் வீட்டுத் தோட்டம் என்பதிலெல்லாம் நாட்டமில்லை. ஆள் வைத்து வீட்டைச் சுற்றி புதர் மண்டாமல் தானாக வளரும் செடி கொடிகளை வெட்டி சுத்தம் மட்டும் செய்து கொள்வார். வீட்டுக்கு பின்புறம் மாமரம் ஒன்றும், தென்னை மரம் நான்கு, தலா ஒரு சப்போட்டா மற்றும் கொய்யா மரமும் இருக்கிறது. இவர்கள் இங்கு குடியில்லாத காலகட்டத்தில் அவை மட்டுமே தாக்குப் பிடித்து நிற்கின்றன.

ஷைலஜா இருந்தவரை அதிலெல்லாம் ஆர்வம் காட்டினாள். ரோஜா, மல்லி, செம்பருத்தியென செடி வாங்கி வந்து வைப்பாள். முட்டை ஓடு, வடிகட்டிய டீத்தூள், காய்கறி மீதமென அவளே எதையாவது உரததைப் போட்டு வளர்ப்பாள். சிறிது நாட்களில் அவளும் பிள்ளை ஏக்கத்தில் அதை கண்டு கொள்வதில்லை. உடம்பும் அவளுக்கு ஒத்துழைக்கவில்லை. இப்பொழுது வெறும் கட்டாந்தரையாகக் கிடக்கிறது. 

அவர் கொடுத்த நம்பரை கண்ணையனுக்கு அனுப்பினாள். “ஃப்ரீயா இருக்கப்ப போய் பாத்துட்டு வந்துருங்கண்ணே” என்று சொல்ல,

ஜமுனா, “ஏம்மா… நீ வரமாட்டியா?” என்றார்.

“கண்ணையன் அண்ணே பாத்து வந்து சொல்லுவாங்க. அவருதான் ஆள் கூட்டி வரணும். அவர் பாத்தா தானே எத்தனை பேர் வேணும்னு தெரியும்?” 

“சரிம்மா… சீக்கிரம் அனுப்பி வை!” என்றவர் பார்வை மீண்டும் சக்தியிடமே நிலைத்தது. 

அதற்குள் வேறொரு வாடிக்கையாளர்‌ மொத்தமாக செடி வாங்க வந்தார். இவர்களை செடி பார்க்கச் சொல்லிவிட்டு அவர்களிடம் பேச போய்விட்டாள். திருமணத்திற்கு ரிட்டர்ன்‌ கிஃப்ட் கொடுக்க என பேசவந்தார். ஏற்கனவே ஃபோனில் பேசி விபரம் தெரிந்து கொண்டுதான் வந்தார். அதனால் வந்ததும் என்னென்ன செடிகள் வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொண்டாள். மல்லி மற்றும்‌ செம்பருத்தி செடிகள் கேட்டார். எத்தனை என கேட்டுக் கொண்டு, பிரியாவிடம் கணக்குப் போட்டு சொல்லச் சொன்னாள். அவர் கேட்டது ஆயிரத்து சொச்சம். 

“சார்…‌ முதல் நாளே மண்டபத்துக்கு நேரடியா கொண்டு வந்து இறக்கிறலாம். இங்கு ஒருதடவை மறுபடியும் மண்டபத்துக்கு ஒருதடவைன்னு ஏத்தி இறக்கினா டேமேஜ் அதிகமாகும்” என்று சொல்ல சரியென்றார்.‌ 

பிரியாவிடம் திரும்பி, “டென் பெர்சென்ட் பஃபர் (buffer) போட்டுறு பிரியா. ஆயிரத்துக்கு மேலங்கும் போது டேமேஜாக சான்சஸ் இருக்கு!” என்றாள் அனுபவம் வாய்ந்தவளாக. எப்படியும் அவர்கள் கேட்டதைவிட அதிகமாகத்தான் ஆர்டர் போட வேண்டும். அப்பொழுது தான் உடைந்த செடிகள் இருந்தால் ஈடுகட்ட முடியும். 

பிரியா மொத்தமாக கணக்குப் போட்டு சொல்ல, 

அவள் கூறிய கணக்கிற்கு பாதி தொகை முன் தொகையாக வேண்டும் என்றாள். அதன்படி அவரும் வங்கிப் பரிவர்த்தனையை கைபேசியில் முடித்தார்.

திருமணப் பத்திரிகையை அவளிடம் கொடுத்தவர், “இதுல மண்டபம் அட்ரஸும் எங்க ஃபேன் நம்பரும் இருக்குமா! நீங்களும் வந்துருங்க.” சும்மா எப்படி பத்திரிகையை கொடுப்பதென சம்பிரதாயமாக அவளையும் அழைத்தார். அவர் வந்து அரைமணி நேரம் கூட ஆகவில்லை. ஒரு வியாபாரம்‌ முடிந்தது. கண்ணையன் இவர்களைப் பார்த்தார். 

அவருக்கு முன் வந்தவர்கள் இவர்கள். காலையில் நர்சரி திறந்ததும் முதல் ஆளாக வந்தவர்கள். போனி பண்ணாமல் வெறும் கையோடு போனால் எப்படி. வந்ததுக்கு ஏதாவது வாங்க வேண்டுமே. கண்ணையன் வேறு இவர்களையே பார்க்க, ஜமுனா நர்சரியை சுற்றி கண்களால் அலசினார். 

கண்ணையன் பார்வைக்குப் பயந்தே துளசிச் செடியும், மருதாணிச் செடியும் வாங்கிக் கொண்டனர். காகிதப் பையில் போட்டுக் கொடுத்தாள். 

சக்தியைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்ததிலிருந்து ஜமுனாவுக்கு இதே புலம்பல் தான். என் வீட்டு வாரிசு. ஆனால் பேரன் என உரிமை கொண்டாட முடியாத ஆதங்கம்‌. என்ன சட்டதிட்டமோ. சட்டத்திற்கு உரிமை இல்லை என்று மட்டும்தான் சொல்ல முடியும். பேரன் இல்லை என்று சொல்ல முடியாதே. படைத்த கடவுளாலே சொல்ல முடியாது. மனிதன் படைத்த சட்டத்தினால் முடியுமா? குருவின் உயிரணுவில் ஜனித்தவன் எனும்பொழுது அங்கு அவன் மட்டுமல்லவே. அவனது பரம்பரை மரபணுவும் தானே சேர்த்து பரிமாற்றப்படுகிறது. அதில் திருவேங்கடமும், ஜமுனாவும் அடக்கம் தானே. 

தானமளிக்கப்பட்ட பொருள் மீது உரிமையில்லைதான். அது அஃறினையாக இருக்கும் பட்சத்தில். இது உயிரோடும் உணர்வோடும் உள்ள ஜீவனாயிற்றே‌. உண்மை தெரிந்த பிறகு எப்படி விட முடியும். 

“அதென்னமோ உண்மைதான் விஷா! விதை கொடுத்தவனுக்கா வெளைச்சல் சொந்தம். நிலத்துக்கு சொந்தக்காரனுக்குதானே விளைச்சல் சொந்தம்!” என்று தனக்கு தானே ஆறுதலும் சொல்லி மனதை ஆற்றிக் கொண்டார். 

“சரியாப் புரிஞ்சுக்கிட்டம்மா!” என்ற மகளை பார்த்தவர், 

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “விஷா… நிலத்த சொந்தமாக்கிக்கிட்டா வெளச்சலும் நமக்கு சொந்தமாகுமில்ல?” தங்கள் பக்கத்தில் யாரும் இல்லையென்றாலும் கூட வெகுவாக குரலை தணித்து ரகசியம்போல் கூறினார். 

“எப்படிம்மா சொல்ற?” என்றாள் புரிந்தாலும் புரியாதது போல். 

“அவ கழுத்துல, காலுல ஒன்னுமே  இல்லையே? கழுத்துல சின்னதா செயின் மட்டும் தான் போட்டிருந்தா!”

“ம்மா… அடுத்தவன் பொண்டாட்டிய வேவு பாத்துருக்க. இந்தக் காலத்துல யாரும்மா அதெல்லாம் போடுறா? தங்கம் விக்கிற விலைக்கி தைரியமா வெளியே போட்டு போக முடியுமா? நீ தேவையில்லாத வம்ப விலைக்கி வாங்காதே.‌ குருவுக்கு தெரிஞ்சது அவ்ளோதான்! ஒரு வேளை கிறிஸ்டியனா இருந்தா?” 

“எது… இந்த அபிராமி, சக்திபாலன், குறிஞ்சி க்ரீன்ஸ்னு பெயரைப் பாத்துமா உனக்கு சந்தேகம்?” 

“பார்றா… எல்லத்தையும் நோட் பண்ணிருக்கீங்க!” மெச்சுதலாகக் கூற, 

“போடீ… பிரணவ் மட்டும் நல்லா இருந்தா நான் ஏன் இதப்பத்தி பேசப்போறேன்‌. அவளக் கட்டினதுலருந்து உன் தம்பியும் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரின்னே இருந்துட்டான். என்னத்த பெருசா வாழ்ந்துட்டான் சொல்லு. இப்ப மகன்கூட. இன்னும் அவனுக்குத் தீரல!” மகனை‌ நினைத்தும் பெற்ற மனம் வெம்பியது.

ஜமுனா சொல்வதும் உண்மைதானே எனப் பட்டது விஷாலிக்கு‌ம். முதல் ஒரு வருடம் தான் அவர்களது சந்தோஷம், குதூகலம், கும்மாளமெல்லாம். 

அடுத்தடுத்து மருத்துவமனை, சிகிச்சை என்றேதான் இவனது வாழ்க்கை சென்றது. ஆனாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நேசம் அளப்பறியது. அதை யாராலும் மறுக்குமுடியாது. சிறுவயதிலிருந்தே பார்த்தவள். 

அவள் மீது கொண்ட நேசத்தினால் தான் அவள் என்ன சொன்னாலும், செய்தாலும் சரியென தலையாட்டினான். அவளுக்காக… அவள் பிள்ளை ஏக்கத்திற்காக… பிடிவாதத்திற்காக… 

மீன் வாங்கவென்று போனவர்கள் துளசிச் செடியோடும், மருதாணிச் செடியோடும் வந்தவர்களை சந்தேகமாகப் பார்த்தான் குரு. 

“என்னம்மா மீன் மார்க்கெட்ல எப்போ செடியெல்லாம் விக்க ஆரம்பிச்சாங்க?”

“தள்ளு வண்டில கொண்டு வந்தாங்கடா‌. மருதாணி செடி பாத்ததும் உங்க அக்காளுக்கு ஆசை வந்துருச்சு. அவளுக்காக வாங்குவோமேன்னு வாங்குனேன்! வீட்ல எல்லாரும் ஆம்பளப் பையலுகளா போயிட்டீங்க. யாருக்கு வச்சு அழகு பாக்க?” என்று மலுப்பினாலும் குருவின் பார்வை அம்மாவை துளைத்தது. 

என்றுமில்லா திருநாளாக இன்று‌ மீன் வாங்க இவர்கள் போக வேண்டிய அவசியம் என்ன வந்தது. அதுவும் அக்காவும் சேர்ந்து போவதென்றால். காலையில் கிளம்பும் பொழுதே கேட்டான். ஜமுனா தான் உனக்கு அக்கா பிள்ளைகளோட விளையாடவே சரியாப் போகும்‌. நானும் அக்காவும் போய்ட்டு வர்றோம் என்றுதான் இருவரும் கிளம்பிச் சென்றனர். 

எப்பொழுதும் திருவேங்கடம் தான் ஞாயிறு என்றால் கறிக்கடைக்கோ, மீன் மார்க்கெட்டிற்கோ சென்று வருவார். காய்கறி வாங்க மட்டுமே ஜமுனா போவார். 

இன்று இருவரும் சென்று வந்தது குருவுக்கு சந்தேகத்தை தூண்டியது. அதுவும் கையில் செடி. செடி இருந்த காகிதப்பையில் குறிஞ்சி கீரீன்ஸ் லோகோ. 

தன்னிடம் கேட்டுப் பார்த்துவிட்டு, தான் மறுத்ததால் அக்காவை அழைத்துச் சென்று வந்திருப்பதை கண்டு கொண்டான். குரு எதையும் காட்டிக் கொள்ளவில்லை. இவர்கள் கள்ளத்தனம் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டான். செய்யறத தெரியாம செய்யத்தெரியல. 

“அம்மம்மா… எங்களுக்கு மருதாணி வச்சு விடுங்க. வேண்டாம்னா‌ சொன்னோம்?” என்றபடி வந்தனர் விஷாலியின் உத்தம புத்திரர்கள். 

“ எவனாவது பொம்பளப் புள்ளையா இருந்தா இந்நேரம் வயசுக்கு வந்திருப்பானுக. நானும் பட்டு, நகைன்னு சீர் செஞ்சு மருதாணியும் வச்சு அழகு பாத்திருப்பேன்‌” என்று சலித்துக் கொள்ள, 

“அம்மம்மா… நாங்களும் வயசுக்கு வந்துட்டோம். எங்களுக்கும் சீர் செய்யலாம். வாங்க இப்பவே நகைக்கடைக்குப் போவோம்!” ரோஹித் ஜமுனாவை அழைக்க குரு வாய்விட்டு சிரித்தான். 

“ஏம்மா… இவனுககிட்ட வாயக் கொடுத்துட்டு. வெவஸ்த்தையில்லாம பேசுவானுங்க!” விஷாலி தலையில் அடித்துக் கொள்ள, 

“அதென்ன கேர்ள்ஸ்க்கு மட்டும் ஊரைக் கூட்டி விசேஷம் வைக்கறீங்க. நாங்க வயசுக்கு வந்தத வெளில சொல்லக்கூட மாட்டேங்கறீங்க. இதெல்லாம் ஆண் அடிமைத்தனம். என்ன மாமா நான் சொல்றது கரெக்ட் தானே?” 

“சரிதான்டா… இப்ப என்ன உங்களுக்கு சீர் செய்யணும். அவ்வளவு தானடா. வாங்கடா போலாம்!”

“எங்க மாமா?” 

“குடிசு கட்டணும். ஒரு வாரம் வெளியே எங்கேயும் போகாம வீட்டுக்குள்ளாறயே  இருக்கணும். மேடையில வச்சு மாலை போடணும். இந்த வேலையெல்லாம் இருக்குல்ல?”

“அய்யோ மாமா ஆளை விடுங்க. ஒரு வாரம் யாரு வீட்டுக்குள்ளயே இருக்கறது. நான் இன்ஸ்டால ஸ்டோரி போட்டு வயசுக்கு வந்தத அறிவுச்சுக்கறேன்!” என்றான்‌ பெரியவன்.

பிரணவ், “நானா… வயசுக்கு வர்றதுன்னா?” என கேள்வியாகப் பார்க்க, 

“ம்ம்ம்… மீசை முளைக்கிறது!” என்றான் சாய்கிரண். 

“நீ வா விஷா… இவனுக பேச்சே சரியில்ல!” இத்தோடு பேச்சு மாறியதே என ஜமுனா மகளை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார். 

****

“ம்மா… இன்னைக்கி பிரணவ் பாக்கல?”

“இல்லடா… வீட்டுக்கு போலாம்!” என்றவளுக்கும் அவனை ஒரு வாரமாகப் பார்க்காதது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது‌.

அவனோட எமோஷனல் அட்டாச்மென்ட் வேண்டாம் என அரவிந்த் சொன்னதும் ஒரு வகையில் சரியெனப்பட்டது அவளுக்கு. அவன் சொன்னதிலிருந்தே அம்மா இல்லை எனப் புரிந்தது. தாயில்லா பிள்ளையென நினைக்கையிலேயே அப்ப நான் யார் என்ற கேள்வி உள்ளுக்குள் உதிக்காமல் இல்லை. அந்த எண்ணத்தை வளறவிடாமல் புறம் தள்ளினாள். ஒட்ட நறுக்கியிருக்க வேண்டியது. இப்போதைக்கி புறம்‌ மட்டுமே தள்ள முடிந்தது. 

சக்தியையும் யோசித்துப் பார்த்தாள். பிரணவோடு பழகுவது பிடிக்கவில்லை எனும்‌ பொழுது அவன் மனதிலும் தேவையில்லாத சஞ்சலத்தை ஏன் உருவாக்குவானேன். 

எப்படியும் கூடிய சீக்கிரம் இந்த கேள்வி வரத்தான் போகிறது. அவனுக்குத் தெரியாமல் எதுவும் பண்ணமுடியாது. அதற்கு முன்பே ஏன் அவனை குழப்புவானேன். இதையெல்லாம் யோசித்துதான் ஒரு வாரமாகப் பிரணவைப்‌ பார்க்காமலே மகனை அழைத்துச் சென்றாள். இன்று வெள்ளிக்கிழமை. அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை. இன்று ஒரு நாள் பிரணவைப் பார்த்துச் செல்லலாம் என மனம் உந்தியது. 

சக்தியும் இவள்‌ வந்ததும் பிரணவைப் பார்க்கத்தான்‌ செல்வாள்‌ என எதிர்பார்க்க, தன் அம்மா அவனைப்பார்க்க போகவில்லை என்றதும் சிறு சந்தோஷம் என்றாலும் ஏன் போகவில்லை என்ற கேள்விகூட. 

“உனக்குதான் நான் அவனப் பாக்குறது பிடிக்கலையே. எனக்கு என் மகன்தான் முக்கியம்!” தோளோடு அணைத்து எனக்கு நீ மட்டும் தான் முக்கியம் என்பது போல் சொல்ல, உள்ளுக்குள் சந்தோஷம் ஊற்றெடுத்தது சிறுவனுக்கு. தன் அம்மா இன்னொரு பையன் மீது பிரியம் காட்டுவது பிடிக்கவில்லை தான். ஆனால் எனக்கு நீதான் முக்கியம் என்றதில் சிறுபிள்ளை பொறாமை‌ சட்டென தூரப்போயிற்று. 

“அவன் இன்னைக்கி மதியமே வீட்டுக்கு போய்ட்டான். அவங்க அப்பா வந்து கூட்டிப் போனாங்க!” அவன் பள்ளியில் இல்லை என்ற தகவலை தெரியப் படுத்தினான். 

“உனக்கெப்படி தெரியும்?” என்றவளுக்குள் அவளையும் மீறி‌ பதட்டம் ஆட்கொண்டது. எதற்கு என்றே தெரியாமல்.

காலையில் பள்ளி வந்தவனை‌ மதியம் வந்து அழைத்துச் செல்வதென்றால். யாரிடம் கேட்பது? உடம்புக்கு எதுவும் பிரச்சினையோ. வகுப்பில் வைத்திருக்க முடியாமல் வீட்டிற்கு அனுப்பி விட்டார்களோ? மருத்துவனையில் சேர்த்திருப்பார்களோ? பலவித எண்ணங்கள் அவளை அலைக்கழிக்க,

சட்டென குருவின் கைபேசி எண் தன்னிடம் இருப்பது நினைவிற்கு வந்தது. அன்றொரு‌ நாள் பிரணவ் ஆசிரியை இவளது ஃபோனிலிருந்து அவனுக்கு அழைத்தார் தானே. கால் ஹிஸ்டரி எடுத்துப் பார்த்தால் தெரியப் போகிறது. அதுவும் விபத்து நடந்த அந்த நாள்தான். தேடிக் கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமில்லைதான். 

ஆனால் என்னவென்று கேட்பது. அன்று நர்சரி வந்து பிரணவின் நிலமையை அவ்வளவு தூரம் விளக்கிச் சொல்லியும் இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறாளே. 

பலவித யோசனைகளோடு வீடு திரும்பியவள் பார்வையில், வழியிலிருந்த மாலுக்குள் குருவின் கார் திரும்புவது தெரிந்தது. 

உடனே இவளும் பைக்கை மாலுக்குள் திருப்பினாள். 

“ஷாப்பிங்காம்மா?” பின்னாலிருந்தபடி கேட்க, 

“ஆமாடா!” என்றவளுக்கு எதுக்கு இப்போ உள்ளே போகணும் என்ற கேள்வி.

குரு, மாலுக்கு வருவதென்றால் பிரணவுக்கு பிரச்சினை இல்லை என்றுதானே அர்த்தம். அப்படியே வீட்டுக்கு திரும்பியிருக்கலாம். ஏனோ அவனை ஒரு முறை கண்ணால் பார்த்து விட்டால் நிம்மதியாக இருக்குமே என்ற எண்ணம். காரைப் பார்த்ததும் உள்ளே வந்துவிட்டாளே ஒழிய வந்தபிறகுதான் யோசனை வந்தது. காரில் மகனை அழைத்து வந்திருப்பான் என என்ன நிச்சயம். அவன் மட்டும் வந்திருந்தால். பின் சீட்டில் சிறுவர்களைப் பார்த்த மாதிரிதான் இருந்தது. 

வண்டியைப் பார்க்கிங்கில் விட்டுவிட்டு வர, அதற்குள் குருவோடு பிரணவ் மற்றும் அவனது அக்கா மகன்களும் உள்ளே சென்றிருந்தனர். 

இவ்வளவு பெரிய‌ மாலில் அவர்களை எங்கே என்று தேடுவது. யோசித்துக் கொண்டே நின்றாள். வந்ததற்கு ஏதாவது மகனுக்கு சாப்பிட வாங்கிக் கொடுத்தாவது அழைத்து செல்லலாம் என நினைத்தாள். அவனும் பசியோடு இருப்பான். 

அங்கிருந்த பீசாஹட்டிற்கு இருவரும் போக, அங்குதான் இவர்கள் நால்வரும் இருந்தனர். 

பிரணவ் தான் இவர்களை முதலில் பார்த்தது.

“சக்தீஈ” என்று வெகு ஆர்வமாக அழைத்தான். 

இவனும் அவனைப் பார்க்க, அங்கே வருமாறு கையசைத்தான். 

அவன் அம்மாவைப் பார்த்தான். அவள் போகலாம் என்பது தலையசைக்க, இருவரும் அங்கே சென்றனர். 

பிரணவ், “சக்தி… என்னோட ஸ்கூல் மேட்.” அத்தை மகன்களுக்கு இவனை அறிமுகம் செய்து வைத்தான். இருவரும் ஓவரி மேட் (ovary mate) என்பது தெரியாமல். 

அபிராமி கண்கள் பிரணவை ஆராய்ந்தது. நன்றாக இருப்பதாகத்தான் பட்டது. 

“சக்தி… இது ரோஹித் அன்ட் சாய்கிரண். என்னோட மச்சான்ஸ்” என்றதும் எல்லார் முகத்திலும் சிரிப்பு. 

“இவங்க வயசுக்கு வந்துட்டாங்க. அதுக்கு தான் ட்ரீட்” என்று‌ சொல்ல அபிராமி விழி விரித்துப் பார்த்தாள் என்றால்,

‘மானத்தை வாங்குறானே’ என்றுதான் குருவின்‌ மைன்ட் வாய்ஸ்.

சாய்கிரண் குரல் கட்டு உடைந்ததை வைத்து அக்கா மகனை மாமன்காரன் வயசுக்கு வந்துவிட்டதாக கிண்டல் செய்ய, விளக்கம் கேட்ட மகனுக்கு இவன் பிறந்த நாளை வயசுக்கு வந்த நாளாக கூற, அதையே பிடித்துக் கொண்டான். போன வாரம் மாமனிடம் சீர் கேட்டார்கள் தானே‌.  

“அதொன்னுமில்லீங்க… இன்னைக்கி சாயோட புட்டின் ரோஜு. ஓ… சாரி. இவனுக்கு பெர்த் டே. கிண்டலா வயசுக்கு வந்துட்டான்னு சொன்னேன். அதையே புடிச்சுக்கிட்டான்.” என்று விளக்கம் சொல்ல, 

“அப்போ ஃபிஃப்ட்டீன்த் ஏஜ்ல நானும் வயசுக்கு வந்துறுவேனா நானா?” என்று விளக்கம் வேறு கேட்க, குரு சங்கோஜமாக நெழிவதைப் பார்த்து அபிராமி வாய்விட்டே சிரித்தாள். 

“சாப்பிட என்ன வேணும்” எனக்கேட்டு பேச்சை மாற்றினான். 

சக்தி, “ம்மா… பீட்சா” என்றான் அவளிடம் குனிந்து. 

என்ன என்பது போல் குரு பார்க்க, “அவனுக்கு பீட்சாவாம்!” என்றாள். 

“ஓகே… உங்களுக்கு?” என‌ மற்றவர்களை கேட்க, அவரவர் விருப்பத்தை சொல்ல, 

“உங்களுக்கு” என்றான் அபிராமியைப்‌ பார்த்து. எதுவும் வேண்டாம் என்றாலும் நல்லா இருக்காதே என நினைத்தவள் மரியாதைக்காக, “காஃபி” என்றாள்.

“இன்னைக்கி சாயோட பெர்த் டே ட்ரீட். காஃபி மட்டும் போதும்கறீங்க. வேற ஏதாவது சொல்லுங்க!” என்றான். 

“பரவாயில்லைங்க… சக்தி ஃபுல்லா சாப்பிட மாட்டான். நான் அதுலயே எடுத்துக்கறேன்” என்று மறுக்க, அவனும் வற்புறுத்தவில்லை. 

“சாய்… வாடா” என அவனை உடன் அழைத்துச் சென்றான் எடுத்துவர. ஆர்டர் கொடுத்து பில்லை வாங்கிக் கொண்டு காத்திருந்தனர்‌. 

பிரணவை வெளியே அழைத்து வருவது அரிது. இன்றுதான் அதுவும் பிறந்தநாள் கொண்டாட்டம் என அழைத்து வாந்தான். 

ஆளுக்கொரு தட்டாக எடுத்து வந்தனர். காஃபி எடுத்துவர மீண்டும் குரு செல்ல, மாமா நான் எடுத்து வர்றேன் என எழுந்த ரோஹித் எடுத்து வந்து இவளிடம் கொடுத்தான். அங்கு செல்ஃப் சர்வீஸ் தான். 

“ம்மா… எடுத்துக்கோங்க!” பீட்சாவை அவள் பக்கம் தள்ளி வைக்க, மரியாதைக்கு ஒரு துண்டு மட்டும் எடுத்துக் கொண்டாள். 

“இன்னைக்கி பிரணவுக்கு ஹாஃப் டேவா” என்றதும் அவளை யோசனையாகப் பார்த்தான். 

“இல்ல… சாய்க்கு பெர்த் டே னால லீவு போட்டாச்சு. எக்ஸாம் இருந்ததாலதான் வந்தான்‌. இல்லைனா ஃபுல் டே லீவு போட்டிருக்கலாம்” என்றதும் தான் இப்பொழுது தேர்வு நடப்பதே நினைவுக்கு வந்தது.

“மதியமே வந்து அழச்சுட்டு போனதா சக்தி சொன்னானா. அதான்‌ உடம்புக்கு ஏதும் பிரச்சனையோன்னு பயந்துட்டேன்!” பிரணவ் தவிர, மற்ற மூவரும் தங்களுக்குள் பங்கிட்டு சாப்பிடுவதில் கவனமாக இருந்ததால் இவர்கள் பேச்சில் கவனமில்லை. சக்தி அவர்களோடு ஐக்கியமாகிவிட்டான். தன்னுடைய அம்மா தனிப்பட்ட முறையில் ஒருவன் மீது பாசம் காட்டுவதுதான் பிடிக்கவில்லையே ஒழிய நட்பு பாராட்ட எந்த தயக்கமும் இல்லை அவனுக்கு. 

குரு அவளை யோசனையாகப் பார்க்க, “அதனாலதான் உங்க காரப் பாத்ததும் உள்ளே வந்துட்டேன். சாப்பிடற மூட் இல்ல” என்றாள் காஃபியை கையில் எடுத்துக் கொண்டு. 

பிரணவை நினைத்து இவளும் பதட்டப்படுவது புரிந்தது. 

பிரணவைப் பார்த்தபடி, “எப்போ ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ணனும்னு சொன்னாங்க?” என்றாள் தெரிந்து கொள்ள வேண்டி.

 “உங்க பதில்லதான் அது இருக்கு” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள். 

“சக்திய நெனச்சாத்தான் பயமாருக்கு” என்றதும் அவனது பார்வையும் சக்தியிடம் பதிந்தது. 

 

 

 

 

 

 

 

 

அடுத்த அத்தியாயம்

என் வீட்டு தோட்டத்தில் 16

16“பொண்ணுங்க வயசுக்கு வந்ததை ஊருக்கே சொல்ற மாதிரி ஆண்களுக்கும் சொன்னா நல்லா இருக்கும்ல!” இதுதான் குருவின் மண்டைக்குள் இப்பொழுது வண்டாய் குடைந்து கொண்டிருந்தது. அவனது கையிலிருந்த கைபேசி வழியாக இன்று மாலில் எடுத்த புகைப்படத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தான். இந்தக் கேள்வியை அவள் கேட்கும் பொழுது…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 15

  1. Sindhu Sivaபொதுக் கருத்துSindhu Siva

    Next எபி ல என்ன மாதிரி டிரீட்மென்ட் பண்ணப்போறாங்க சொல்லிருங்க sis😍. குரு அம்மா நினைச்சது நடந்துரும் போலயே

    1. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      கதைக்கேத்த மாதிரி மேலோட்டமா சொல்லிறலாம். ஏற்கனவே மறைமுகமா சொல்லியாச்சுமா....
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

    1. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      ❤️❤️❤️❤️❤️
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

  2. Manju Mohanபொதுக் கருத்துManju Mohan

    Ipa than nimadhi..ipa thana login aguthu.idhuke pakam pakama ezhudanum pola..nan separate ah login pana en agala...seri ,kadaiku varavum...dei guru nithan edavathu velai pananum pola...ila nama jamu amma va vita super ah ellam mudichir vanga ...epdi... author kaga ellam onum wait pana venam...epdi nama idea.

    1. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      Jammu ve paththukkattu. Enakkum velak easy ayidum.😜
      Romba Wait panni nonthor sangam pola 😄🫣
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

  3. Manju Mohanபொதுக் கருத்துManju Mohan

    Evalo padivu venam podalam polaye..once vela vandhal...thirumba inda opportunity kedaikumanu theriyala.

    1. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      கிடைக்கும்... கிடைக்கும்... கவலைப் படாதீங்க...
      அதெல்லாம் சோம்பேறி ஆத்தரை வச்சு செய்யலாம் 🫣😄

  4. Manju Mohanபொதுக் கருத்துManju Mohan

    Vanathule irundu vanda boomi ku than sondama enna.appo onu epdi vanathuku matum sondama achi....vanam pozhinjathunale thane boomiye neranjuchi...

    1. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      அப்பப்பா‌ஆஆ... வானம் பூமி மழைன்னு பின்றீங்க...
      🫣🫣🫣😉😉😉

    1. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      கூடிய சீக்கிரம் மா 🥰
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

உங்கள் கருத்தைப் பகிருங்கள்