arrow_back
என் வீட்டு தோட்டத்தில் என் வீட்டு தோட்டத்தில் 4

என் வீட்டு தோட்டத்தில் 4

visibility 3
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.4/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

4

“பாவா…‌ ஏன்டிதி?” 

“ஏன்ட்டி?” அசிரத்தையாய் கேட்க,

“இன்னும் சின்னப்பிள்ளையா? இப்படித்தான் எல்லாமே பெட்ல போட்டு வைப்பீங்களா? யார் இதெல்லாம் ஒதுங்க வைக்கிறது?” உள்ளே வந்தவள் அறை இருந்த கோலம் பார்த்து எரிச்சலாக சிடுசிடுத்தாள்.

“அதுக்கு தான் நீ இருக்கியே?” 

“எல்லாமே நான்தான் செய்யணுமா? டர்ட்டி பாவா!” 

“அதுக்கு தானே‌ உன்னை எனக்கு பெல்லி சேசாறு. அதைவிட உனக்கென்ன வேலை?” கண்ணாடியில் முகம் பார்த்து தலை சீவிக் கொண்டே கேட்க, 

“அப்போ நீங்க என்னதான் பண்ணுவீங்க?” 

“எனக்கு முக்கியமான வேற வேலையெல்லாம் இருக்கே!”

“அப்படியென்ன எனக்குத் தெரியாம உங்களுக்கு முக்கியமான வேலை?” 

“ஹோ… என்னோட வேலை என்னன்னு எல்லாமே உனக்குத் தெரியுமா?” என்றான் திரும்பி நின்று. 

“ஏன் தெரியாம?” உதட்டை சுழித்து கேட்க,

“செப்பு…சூஸ்த்தாம்?” திரும்பி நின்றவன் முகத்தில் கீற்றாய் வசீகரப் புன்னகை.

“காலையில எந்திரிக்க வேண்டியது… ஜாகிங் போக வேண்டியது. வந்து குளிச்சு டிப்டாப்பா ஹீரோலாக ரெடியாக வேண்டியது. டிஃபன் சேசி… பைக் எடுத்துட்டு ஃப்ரென்ட்ஸ் கூட ஊர் சுத்த வேண்டியது.”

“ம்ம்ம்… நெக்ஸ்ட்?”

“ஈவ்னிங் வரவேண்டியது. மல்லி ஃபோன்ல ஃப்ரென்ட்ஸ்கூட அரட்டை, ஆன் லைன்ல கேம் விளையாட வேண்டியது! நைட் போன்சேசி (சாப்பிட்டு) படுக்க வேண்டியது!”

“ம்ம்ம்.‌. தறவாத்த?” சாவகாசமாக ட்ரெஸ்ஸிங் டேபிளில் சாய்ந்து கொண்டு கைகளைக் கட்டியவாறு‌ கேட்க,

“ஏன்ட்டி தறவாத்த?” படுக்கையில் அவன் குளித்து வந்து அப்படியே அவிழ்த்து வீசிய ஈரத்துண்டு, பேக்கிங் செய்கிறேன் எனும் பெயரில் கபோர்டிலிருந்து உருவிப் போட்ட பேன்ட், சர்ட், பெல்ட் எல்லாம் ஒதுங்க வைத்துக் கொண்டே கேட்க, 

“தறவாத்த…” 

“மல்லி மல்லி ஏன்ட்டி தறவாத்த?” சற்று பேச்சில் எரிச்சல் மேலிட, 

“த…ற…வா…த்த…” என ஒரு மார்க்கமாய் இழுத்தான். அப்பொழுதுதான் அவன் குரலிலிருந்த மாற்றமும், அதிலிருந்த சரசமும் தெரிந்தது. 

திரும்பி பார்த்தவள் இடக்கையை இடுப்பில் ஊன்றி விழியைச் சுருக்கி முறைத்தாள். அவளது முறைப்பை புறம்தள்ளி புருவம் தூக்கி வினவ, அந்தப் பார்வையில் விழுந்தவள், 

“பாவ்வ்வ்வா!” என்றாள் அதட்டலும் சிணுங்கலுமாய்.

“நா சிலக்கா… ப்ரென்ட்ஸ் கூட ஆன்லைன் கேம் விளையாடறதை மட்டும் செப்பாவே? நைட் உங்கூட…  லைட் ஆஃப் பண்ணிட்டு விளையாடறதை மட்டும் செப்பல” இறுதி வாக்கியத்தை, கண்சிமிட்டி ரகசியமாய் அவள் காதோரம் குனிந்து கேட்க, 

“ச்ச்சீ… பாவா… நீக்கு சிக்கு லேது” என்றவளை அள்ளிக் கொண்டவன் அப்படியே அவளோடு சேர்ந்து படுக்கையில் விழ, 

“பாவா… ஏன்ட்டிதி?” என்றாள் கண்களில் கலவரத்தோடு.

“நீதானே இப்ப கேம் பத்தி ஞாபகப்படுத்தின?”

“ப்ரென்ட்ஸ் கூட நீங்க ஃபோன்ல விளையாடுற கேம் பத்தி செப்பானு!”

“எனக்கு இந்த கேம்தான் ஞாபகமிருக்கு! நம்ம மட்டுமே விளையாடற கேம். கொஞ்ச நேரம் முன்ன என்ன சொன்ன?” 

“ஏஞ்செப்பேனு?”

“டர்ட்டி பாவாவா?” 

“அவ்வ்வ்னு…” என்றவள் உதட்டைச் சுழிக்க, சுழித்த இதழை இரு விரலால் இழுத்துப் பிடித்தவன், 

“டர்ட்டி பாவா… என்ன பண்ணுவான்னு சூப்பிஸ்தானு!” என்றவன் இடக்கை இடையை வளைத்துப் பிடிக்க, வலக்கை வரம்பு மீற, இதழ் முற்றுகை எல்லை கடந்தது. 

“ஐயோ… பாவா. ஒதிலன்ட்டி! கீழ அத்த, மாமா அந்தரும் உண்ட்டாரு” அவனை மார்பில் கை வைத்து தள்ள முயற்சிக்க, நடக்குற காரியமா அது. அவனையும் அவனது அணைப்பையும் அசைக்கக் கூட முடியவில்லை. 

“பாவா…” சிணுங்கியவளை நிமிர்ந்து பார்த்தான். அந்த பொன் நிற விழிகளின் வீச்சில் என்ன கண்டாளோ… அவனது இறுக்கிய பிடிக்குள் சிக்கியவள் மெல்ல வலுவிழக்க, அவளை தனக்குள் வாரி சுருட்டிக் கொண்டான். 

“ஒரு வாரம் சிலக்கா… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்!

“போங்க … போங்க… உங்களுக்கு உங்க ஃப்ரென்ட்ஸூம், ட்ரிப்பும் தானே முக்கியம்!” வீம்பாய் முறுக்கிக் கொள்ள,

“இது என்னோட ப்ரீஷியஸ் டைம். திரும்ப கிடைக்காது. அதை யாருக்காகவும் எதுக்காவும் மிஸ் பண்ண மாட்டேன். இப்போதானே ஃப்ரென்ட்ஸ்கூட எல்லாம் சுத்தமுடியும். அப்பறம் யார் யார் எந்தப் பக்கமோ. என் லைஃப் முழுக்க நமக்கான டைமிருக்கு. பெல்லி அப்புடே செப்பேனு காதா?” என்றவன் இதழ்கள் வஞ்சியை செப்பனிடும் பணிகளை செவ்வனே செய்தது. 

அப்பொழுது தெரியவில்லை அவனுக்கான நேரம் அவளிடம் குறைவு என. தெரிந்திருந்தால் முழு நேரமும் அவளை விட்டு இம்மியும் விலகாமல் இருந்திருப்பானோ. 

மீண்டும் ஒருமுறை இருவரும் குளித்து கீழே வந்தனர். அவள் அடுப்படி செல்ல, அங்கே ஜமுனா உப்புமா கிண்டிக் கொண்டிருந்தார். இவளைப் பார்த்ததும், “உன்னை எதுக்கு அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சது. இப்படி அவனை ஊர் சுத்த விடவா? என்னையும் கூட்டிப் போன்னு சொல்ல வேண்டியதுதானே?” ஜமுனா மருமகளுக்கு தூபம் போட,

“க்க்கும்… அதை மீரே செப்பண்டி. நாதக்கிற எந்துக்கு சொல்றீங்க?”

“இங்க பாரு. ஒன்னு தமிழ்ல பேசு. இல்ல தெலுங்குல பேசு. ரெண்டையும் கொல பண்ணாதே!” 

“உங்களுக்கும் அர்த்தம் புரியால காதா. அந்துக்கே!” அவள் கழுத்தைச் சாய்த்து சிறுபிள்ளை பாவம் காட்ட, 

“காது… லேதுன்னுட்டு!” நொடித்தார் ஜமுனா.

“அய்யோ அத்தை காது, லேது ரெண்டுக்கும் ஒக்கே அர்த்தம்தான். தமிழும் தெலுங்கும் கலந்தா இப்படித்தான். நீங்க அதுக்கு எங்க மாமாவைக் கல்யாணம் பண்ணாம இருந்திருக்கணும். நீங்க கலப்படம் பண்ணிட்டு என்னைய குறை செப்ப வேண்டியது!” பேசிக் கொண்டே தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றினாள்‌. அவனுக்கு பெசரட்டு உப்புமா (பச்சைப்பயறு தோசை வித் உப்புமா) சுடச்சுட இருக்க வேண்டும். ஏற்கனவே பச்சைப்பயறை ஊறவைத்து அறைத்து, இஞ்சி, பச்சைமிளகாயோடு தயாராக எடுத்து வைத்திருந்தார். இவள் தோசை ஊற்ற ஆரம்பிக்க,

“ரெண்டு மூனு தலைமுறையா சென்னைல இருக்குற உங்க மாமாவே தமிழை குதறித்தான் வைக்கிறாரு. நீ என்ன பண்ணுவ? நான் என்ன பேச வந்தேன். நீ பேச்சை மாத்திவிட்ட. நீயும் இவன் கூட போக வேண்டியதுதானே? உனக்கும் ஆசை இருக்காதா?” இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காய வாசனையோடு சுடச்சுட தோசையும், அதன் மீது உப்புமாவும் வைத்து, காரசாரமான இனிப்பும் புளிப்பும் கலந்த இஞ்சிச் சட்டினியும் அவன் முன் கொண்டு வந்து வைத்தாள். 

சாப்பிட்டபடியே இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவன், “ம்மா… நான் போறது ட்ரக்கிங். மலையெல்லாம் ஏறணும்! அதுக்கு முதல்லயே ப்ராக்டீஸ் இருக்கணும்மா! இவளை எல்லாம் கூட்டிப் போக முடியாது!”

“ஏன் உங்கூட பொம்பளப் பிள்ளைக வர்றதில்லயா?”

“அவங்க எல்லாம் ஏற்கனவே ட்ரக்கிங் போனவங்கம்மா! உங்க மருமகளைப் பாருங்க. சாப்பிட்டு சாப்பிட்டு நல்லா பங்கனபள்ளி மாம்பழமாட்டம் உருண்டு திரண்டு இருக்கா.. மாடி ஏறி இறங்கினாளே மூச்சு வாங்குறா. இதுல ட்ரக்கிங்கா…” கேலி பேசிக் கொண்டே சுடச்சுட எத்தனை பெசரட்டு உள்ளே தள்ளினான் என அவனுக்கே கணக்கு தெரியாது. 

சாப்பிட்டு முடித்தவன் கை கழுவி மீண்டும் மாடி ஏறினான். அறைக்குள் வந்தவன் ட்ரெக்கிங் பேக்கின் முன் மண்டியிட்டு அமர்ந்து, வைத்த ஒவ்வொரு பொருளையும் மீண்டும் ஒருமுறை எடுத்துப் பார்த்து, மீண்டும் அதன் இடத்தில் வைத்தான். இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில், முதலுதவி பெட்டி, ஹெட்லாம்ப், மல்டி-டூல் கத்தி, பவர் பேங்க், ரெயின் ஜாக்கெட், கூடுதலாக ஒரு டி-ஷர்ட், எனர்ஜி பார்கள், மற்றும் உலர் பழங்கள் என. 

“பாவா!” அவன் பின்னாலே ஏறி வந்தவள் குரல் சுரத்தையின்றி ஒலிக்க,

“மல்லி ஏன்ட்டி பாவாவுக்கு!”

“நேனு அந்த்த லாவுகா உண்டானா?” குரல் சுரத்தையின்றி ஒலிக்க, அவளைத் திரும்பிப் பார்த்தான். சுவற்றில் சாய்ந்து நின்றவள் பார்வை விரல் நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தது. முகம் தொங்கிப் போயிற்று. அவளை அப்படிப் பார்க்க மீண்டும் சீண்டிப் பார்க்கும் எண்ணம் வர, 

நமட்டுச் சிரிப்போடு, “இல்லையா பின்ன?”

“அந்துக்கே என்னைய எங்கேயும் கூட்டிப் போக மாட்டீங்கறீங்களா? மீரு மாத்திரம் ஃபிட்டுகா உண்டாரு காதா. நானும் ஏதாவது டயட் ஃபாலோ சேஸ்த்தானுலே” என்றவளைப் பார்த்து இப்பொழுது வாய்விட்டு சிரித்தான். அவன் சிரித்ததும் அவள் முகம் சிறுபிள்ளை போல் உம்மென ஆக, அச்சோ என ஆனது அவனுக்கு. 

“அய்யோ நா சிலக்கா… இங்க வா!” என்றவளை கை பிடித்து இழுத்து கண்ணாடி முன் நிறுத்தினான். இடையோடு வளைத்துப் பிடித்து தோளில் தாவாயைப் பதித்தவன், “இப்பப் பாரு… நீ குண்டாவா இருக்க. கொஞ்சம் புஸு புஸுன்னு இருக்க. கன்னம் கொஞ்சம் சப்பியா இருக்கு. அப்படியே பஞ்சு மிட்டாய் மாதிரி. பிச்சித் திங்கலாம்போல” சொல்லியபடியே செல்லமாய் கிள்ளி முத்தம் வைத்தவன், 

“அப்பறம்…” என‌ நிறுத்தி, மேலிருந்து கீழாகப் பார்வையை ஓட்டியவன் பார்வையில் கண்ணியம் கடுகளவும் இல்லை. உடமைப் பட்டவள் மீதான உரிமைப்பட்டவனின் அத்து மீறலான பார்வையே. அங்குலம் அங்குலமாய் மேய்ந்தது. அவனது மேய்ச்சல் பார்வையில் கன்னக்கதுப்பு சூடேற, மெதுவாக நெளிந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயல, இன்னும் பிடி இறுகியது. முயற்சியைக் கை விட்டுவிட்டாள். முரண்டு பிடித்தால் என்ன நடக்கும் எனத்தான் அவளுக்குத் தெரியுமே.

குரலை வெகுவாகத் தணித்து கிசுப்பான குரலில், “வாட்டர் பெட் மாதிரி… எந்த மெத்தகா உண்டாவு தெளுசா? இந்த பாவாவ டர்ட்டி பாவாவா ஆக்குறதே இந்த வாட்டர் பெட்தான். டயட் அது இதுன்னு ஏதாவது இருந்து என்னை மோசம் பண்ணிறாதே!” என்றவனை முறைத்துப் பார்த்தவள், சிறு மயக்கத்தில் அவனது பிடி சற்றே தளர்ந்திருக்கு, சட்டென உதறி, அடிக்க ஏதாவது கிடைக்குமா என சுற்றும் முற்றும் பார்வையை ஓட்ட, அவனது ஷட்டில் பேட் தான் சுவரில் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்தது‌. அதை எடுக்க அவள் கையை எக்கி நீட்ட, ஆணியில் சிக்கிக் கொண்டு அதை எடுக்க முடியாமல் போக, 

“நான் எஸ்கேப்… நான் வர்ற வரைக்கும் இதை வச்சுக்கோ” அழுத்தி ஒரு முத்தத்தை அவள் இதழில் பதித்துவிட்டு, அவசரமாக ட்ரக்கிங் பேக்கை ஜிப் போட்டு மூடி இழுத்துச் செல்பவனையே கண்களில் காதலோடு பார்த்திருந்தாள். 

“டர்ட்டி பாவா!” செல்லமாய் முணங்கினாள். 

*****

“பாவா!”

….

“பாவா!”

“…”

“உரே… குருப்ரசாத்காரு!” 

“என்னடீ…”

“இட்ட சூடு பாவா!”

“என்ன?” கண்ணைத் திறக்காமல் அரைத் தூக்கத்தில் சலிப்பாய் கேட்க,

“பாத்தா தானே தெரியும்!” என்றதும் அரைக்கண்ணைத் திறந்து பார்த்தான். தன் கண் முன் அவள் காட்டிய வஸ்த்துவை புரியாமல் பார்த்தான். ஏதோ நீள் செவ்வக வடிவில் அட்டைபோல் இருக்க, 

“என்னதிது?”

“நல்லா கண்ணத் திறந்து சூடு பாவா!” என்றதும் கண்களை நன்றாகத் திறந்து பார்த்தவன் மீண்டும் புருவம் சுருக்கினான். அடுத்த நொடி விழிகள் அதிர்ச்சியில் தெரித்து விழும் அளவிற்கு விரிய, தூக்கம் போன இடம் தெரியவில்லை. சட்டென போர்வை உதறி எழுந்து அமர்ந்தான். அவன் எழுந்த வேகத்தில் மிரண்டு இவளே பின்னால் சாய்ந்தாள். அடுத்த நொடி அவன் முகம் போன போக்கைப் பார்த்து வாய் விட்டு சிரித்தாள்.

“என்னடியிது?” பாவமாய்க் கேட்க,

“நாம விளையாண்ட கேமோட ரிசல்ட். அப்டேட் ஆகியிருக்கு.”

“சிலக்கா…” என்றவன் குரலில் தெரிந்த மாற்றத்தில் அவளுக்கு மீண்டும் சிரிப்பு வர மலர்ந்து சிரித்தாள்.

“உசே… நவ்வக்கே…” அவன் அழும் தோரணையில் சொல்லச் சொல்ல அவளுக்கும் இன்னும் சிரிப்பு பீரிட்டது.

“வெளியே தெரிஞ்சா சிரிப்பாங்க!” 

“எந்துக்கு பாவா?” கண்களில் குறும்பு மின்ன கேட்டவளிடம், 

“எதுக்குனு உனக்குத் தெரியாதா?!” 

“தெரியாதே!” அவனை மீண்டும் சீண்ட, 

“என் ஃப்ரெண்ட்செல்லாம் கிண்டல் பண்ணுவாங்க!”

“அது கேம் விளையாடும் போது தெரியலையா. வாட்டர் பெட்டா கேக்குது?” மீண்டும் அவனை‌ நக்கல் செய்ய, 

“உசே… நான் இன்னும் காலேஜே முடிக்கலடீ! என் ஃப்ரென்ட்ஸ்க்கெல்லாம் தெரிஞ்சா மானம் ‌கப்பலேறிறும்!” அழாத குறையாக தலையில் கைவைத்து அங்கலாய்த்தவனை, நமட்டுச் சிரிப்போடு பார்த்திருந்தாள்‌. 

“ஏன் பாவா… உங்களுக்கு ஹேப்பியா இல்லையா?” அவள் கேட்ட பாவணையில், ஒரு வேளை இவன் இப்போதைக்கி குழந்தை வேண்டாம் என நினைக்கிறானோ எனத் தோன்றியது. இருவர் வயதும் அப்படி. இவன்‌ புலம்புவது போல் இன்னும் இவன் கல்லூரியே முடிக்கவில்லை. ஒரு வேளை இன்னும் சிறிது நாள் தள்ளிப்போட எண்ணியிருக்கலாம். படித்து முடித்து, பேருக்காகவேணும் ஒரு வேளையில் அமர்ந்த பிறகு குழந்தையென திட்டமிட்டிருக்கலாம் என அவள் நினைக்க, 

அவள் அப்படி கேட்டதும் சட்டென,

“ச்சே… ச்சே.. அப்படி எதுவும் இல்ல. எனக்கு குழந்தைகள்னா எவ்வளவு இஷ்ட்டம்னு தெரியும் தானே?” அவன் அப்படி கேட்டதும் தான் சற்றே ஆசுவாசமானாள். அக்கா பிள்ளைகள் மீதே எந்தளவிற்கு பாசம் வைத்துள்ளான் எனத் தெரியும். என்ன… இன்னும் கல்லூரியே முடிக்கவில்லையே என்ற சங்கோஜம் தானே தவிர வேறெதுமில்லை. 

சாதகத்தில் கிரகநிலை திசை மாறுகிறது, இப்பொழுது விட்டால் அடுத்து முப்பது வயதிற்கு மேல்தான் கல்யாண யோகம் என்று ஜோஸியர் சொல்லிவிட, படித்து, வேலைக்கு சென்று, சம்பாதித்து காலூன்றிய பிறகுதான் திருமணம் என்ற அப்பர், மிடில், லோயர் வகையறாக்குள் வராமல் அப்பரிலேயே நின்றுவிட்டதில், சொந்தத்தில் பெண்ணிருக்க தேடவேண்டிய அவசியமே இல்லாமல் போக, இருபத்தியிரண்டு முடிந்து இருபத்தி மூன்று தொடங்கும் வயதிலேயே திருமணம் சித்தூர் அருகே அவர்களது பூர்வீக கிராமத்தில் வைத்து சிறப்பாக நடந்தேறியது. 

ஆம்… இப்பொழுது குருப்பிரசாத்காரு எம்.பி.ஏ இறுதி வருடம் படிக்கும் கல்லூரி மாணவன். பிள்ளையை பள்ளிக்கு அனுப்புவதற்குப் பதிலாத கணவனை கல்லூரிக்கு தயார் செய்து அனுப்புகிறாள் அவனது சிலக்கா. அதனால் தான் நண்பர்களுடன் இருக்கும் நேரங்களை அவன் இழக்க விரும்பவில்லை. ஏற்கனவே குடும்பஸ்த்தன் ஆயாச்சு. இறுதி வருடம் என்பதால் நண்பர்களுடனிருக்கும் எந்தவோரு சந்தர்ப்பத்தையும் தவிர்க்க மாட்டான். 

“டேய்! குரு! குரு! சீக்கிரம் வாடா! இவளைப் பாருடா!“ ஜமுனா பதட்டமாக அழைக்கும் குரல் எங்கோ தூரத்தில் ஒலிப்பது போலிருக்க, அடித்துப் பிடித்து எழுந்தான். 

ஏசி அறையிலும் கழுத்து, நெற்றியெல்லாம் வியர்த்திருந்து. நெஞ்சு அடித்துக் கொண்டது. தூக்கமில்லாமல் கண்ணில் மணல் கொட்டியது போல் உறுத்தியது. 

மகனைத் திரும்பி பார்க்க, பிரணவ் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். மகனை வாஞ்சையாகத் தழுவி மீண்டன விழிகள். மகனது கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். காய்ச்சல் மாதிரி எதுவும் இல்லை. எழுந்து குளியலறை சென்று முகம் கழுவி வந்தவன், மகனைத் தொட்டு இலேசாக உலுக்கி எழுப்பினான்.

அசையாமல் தூங்க, “சின்னா… எந்திரிடா!” மீண்டும் உலுக்க,

“ம்ம்… இன்னும் ஃபைவ் மினிட்ஸ் டாட்!” என்றான் தூக்கக் கலக்கத்தில். 

“டேய்… இன்னைக்கி ஸ்கூல் போணும்டா. ஒரு வாரம் லீவு போட்டாச்சு!” என்றதும் உடம்பை முறுக்கி சோம்பலாக எழுந்து அமர்ந்தான். 

தன் முன் நிற்பவனைப் பார்த்தவன், “டாட்.. நீங்களும் இப்பதான் எந்திரிச்சீங்களா?” எப்பொழுதும் ஜாகிங் சென்று வந்து, குளித்த பிறகுதான் மகனை எழுப்புவான். இன்று அவன் நின்றிருந்த தோற்றமே அவனும் இப்பொழுது தான் எழுந்தான் என்பதை காட்டிக் கொடுத்தது. இன்று ஏதேதோ பழைய எண்ணங்கள். தூக்கமும், கனவுமாக நித்திரை கெட்டதில், அதிகாலையில் அவனையும் மீறி அசந்துவிட்டான். எல்லாம் அவளது எண்ணங்கள் அவனுக்குள் ஏற்படுத்திய தாகத்தின் தாக்கம்.  

“டைமாச்சு.. அதனால போல… நீ குளிச்சிட்டு கிளம்பி வா! ஸ்கூல்ல விட்டு போறேன்” என்றவன் பள்ளி சீருடை, பேக் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு கீழே வந்தான். 

“ம்மா… காஃபி” குரல் கொடுத்துவிட்டு சோஃபாவில் அமர்ந்தான். 

ஜமுனா அடுத்த ஐந்தாவது நிமிடம் காஃபியோடு வந்தார். 

“இன்னைக்கு ஸ்கூலுக்கு போரானாடா?”

“ஆமாம்மா… லன்ஞ்ச் பேக் பண்ணுங்க. நானும் குளிச்சிட்டு வர்றேன்!” என்றவன் காஃபி குடித்து முடித்து எழுந்து கொண்டான். 

மகனைக் கிளப்பி, தானும் கிளம்பி காரில் இருவரும் கிளம்பினர். சென்னை போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து பிரபலமான பள்ளியை அடைந்தது கார். 

பள்ளியின் உள்ளே சென்று ஒரு U டர்ன்‌ போட்டுதான் கார் வெளியேற வேண்டும். அவனும் அதுபோல் மகனை இறக்கிவிட்டு காரைத் திருப்ப முயல, அவசரமாக குறுக்கே வந்தது அந்த இருசக்கர வாகனம்‌. சடக்கென பிரேக்கை அழுத்தி காரை நிறுத்தினான். மகன் உள்ளே செல்வதைப் பார்த்துக் கொண்டே காரைத் திருப்ப அவனும் வலப்புறமாக ஏறிவந்த வண்டியைக் கவனிக்கவில்லை. 

அவளும் அவசரத்தில் வேகத்தைக் குறைக்கக் கூட இல்லை. சரட்டென கடந்துவிட்டாள். 

“இடியட்…” என பல்லைக் கடித்தான். 

வேகமாக வண்டி காரைக் கடக்கும் முன் பின்னால் அமர்ந்திருந்தவன், “சாரி” என வாயசைத்து கண்ணைச் சுருக்கி, கையை உயர்த்தி காட்டி மன்னிப்பை யாசித்தது தெரிந்தது. இவன்‌ சட்டென ப்ரேக் போட்டு காரை நிறுத்தியதில் பின்னால் வந்த கார்‌ மற்றும் இருச்கர வாகனங்கள் தேங்க, பள்ளி வளாகத்திலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட, செக்யூரிட்டி விசில் ஊதி அவசரமாக கை காட்ட, வேகமாக காரைக் கிளப்பி சென்றுவிட்டான். மன்னிப்பைக் கேட்ட சிறுவனைக்கூட சரியாகக் கவனிக்கவில்லை. 

“ம்மா… ஜஸ்ட் மிஸ். அந்த கார்ல இடிச்சிறுப்போம். சடென் ப்ரேக் போட்டதால தப்பிச்சோம்‌.” நேரமானதில் அவசரமாக இறங்கிக் கொண்டே சக்தி சொல்ல, அவளும் திரும்பிப் பார்க்க, கார் கேட்டைக் கடந்து இடபுறமாகத் திரும்பி வெளியேறிவிட்டது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அடுத்த அத்தியாயம்

என் வீட்டு தோட்டத்தில் 5

5“ஹேஏஏஏ…மாமா! க்யூட்டா‌ இருக்கு மாமா! சூப்பர் மாமா! தாங்க் யூ மாமா! லவ் யூ மாமா!” மூச்சுக்கு முன்னூறு மாமா போட்டான் சக்திபாலன். அவன் முகத்தில் பூத்த என்று கூட உவமை சொல்லமுடியாது. வெடித்த சந்தோஷத்தைக் கண்ட மாமன்காரனுக்கும் தாராளமாய் புன்னகை…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 11 கருத்துகள் உள்ளன

  1. Ena china update pola iruku ..dei yar ah guru , nala kana thirandu parda…anda payan yarnu….ila ipdiye oru 10 episodes ah otiduvanga inda writer.. interesting

    1. அது கேப் விழுந்துற கூடாதுலம்மா அதான் சின்னதா ஒரு அப்டேட்🫣
      பத்து எபி என்ன இதை வச்சே கதையை ஓட்டலாம்னு இருக்கேன் நீங்க வேற😏

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

உங்கள் கருத்தைப் பகிருங்கள்