என் வீட்டு தோட்டத்தில் 8
8
“நீங்க குருப்ரசாத்தானே?” என்று சிரித்தபடி கேட்க புரியாத பாவணை அவனிடம்.
“என்ன சார் தமிழ்ல தானே கேட்டேன். ஓ… தெலுங்குல கேக்கணுமா?” என்றவளை ஆச்சர்யமாகப் பார்க்க,
“ஹவ் இஸ் யுவர் சன் டூயிங்?” எனக் கேட்டு மேலும் அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாள்.
“விட்டா சாதகமே சொல்வீங்க போல?” என்று விளையாட்டாகத்தான் கேட்டான். ஆனால் அவளுக்கு இவன் சாதகம் தெரிகிறதோ இல்லையோ மகன் சாதகம் தெரியும் என்பது அப்பொழுது தெரியவில்லை.
விஷாலியை இரண்டு, மூன்று முறை குருதான் அம்மாவோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். முதல் இரண்டு முறை அவர்களை மருத்துவரிடம் அனுப்பிவிட்டு வெளியே தான் காத்திருந்தான். மூன்றாம் முறை ரிப்போர்ட் விபரங்களைப் பேச இவனே அவர்களோடு சென்றான்.
விபரங்களை இவனிடம் கூறினாலும், மருத்துவரது கண்கள் இவனைத்தான் ஆராய்ந்தது. அவளுக்கும் வயது முப்பதுகளின் தொடக்கம் தான். பெயர் நந்தினி. மகப்பேறு மருத்துவர். மருத்துவப் படிப்பும் பதவியும் கொடுத்த தேஜஸ் அவள் முகத்தில். அவள் அப்படிப் பார்க்க இவனுக்கே ஒரு மாதிரியாக, இலேசாக புருவம் சுழித்தான். இவனது முகமாற்றம் புரிந்ததும் சிரிப்பு வந்தது.
“உங்க சன் பிறந்த ஹாஸ்பிடல்லதான் நான் இன்டெர்னா இருந்தேன்” என்றதும்.
“ஹோஓ!” என சற்று சகஜமானான்.
“அதனால அவன் கேஸ் ஹிஸ்டரி தெரியும். ஹைனகாலஜிஸ்ட் விஜயலட்சுமி மேடம்தானே. அவங்க கீழதான் நான் இருந்தேன்! டென் இயர்ஸ் இருக்குமா? உங்க கண்ண பாத்ததும் கண்டுபிடிச்சுட்டேன். இருந்தாலும் ஒரு டவுட். அதான் நேம் கேட்டேன்” என்று சிரிக்க,
“மொதல்ல இவன் கண்ணுக்கு ஒரு கருப்புக் கண்ணாடிய மாட்டணும் விஷா… உன்னைவிட இவனை வெளியே அனுப்பதான் ரொம்ப பயந்தேன்” ஜமுனா மகளிடம் காதை கடித்தார்.
“நீங்க உங்க ஒய்ஃபோட வந்தாலும் இன்டர்ன்ஸ் எல்லாம் உங்களை சைட் அடிச்சிருக்கோம்! உங்க ஒய்ஃப் கிட்ட தெலுங்குலயே பேசுவீங்கதானே!” என்று சிரித்தபடியே சொல்ல, நான் சொல்லல என்பது போல் மகளைப் பார்த்தார் ஜமுனா. விஷாலி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். அம்மா, அக்கா முன்பு இவனுக்குதான் ஒரு மாதிரியாக இருந்தது.
“ப்ரீ மெச்சூர்ட் சைல்ட் இல்ல” என்று கேட்க மூவரிடமே அமைதி.
“ஹி இஸ் ஃபைன் நவ்! அக்கா ரிப்போர்ட் என்னாச்சு?” வந்த வேலையைப் பார்ப்போம் என்பது போல் அவன் கேட்க,
“சாரி… இவங்க கேஸ் பத்தி பேசாம வேற ஏதோ பேசிட்டிருக்கேன்” என்றவள் விஷாலி ரிப்போர்ட் விபரங்களைப் பற்றி விளக்கி கூற பேச்சு மாறியது.
அதற்கு மேல் பிரணவைப் பற்றிய பேச்சிற்கு அவசியமில்லாமல் போயிற்று.
அதே வாரத்தில் மகனுக்கான மாதாந்திர சோதனையிருக்க, அக்காவோடு மகனையும் அழைத்துச் சென்றிருந்தான்.
இவன் வரிசையில் காத்திருந்தான். குழந்தை மருத்துவரை அடுத்து தான் இவளுக்கான அறை. அப்பொழுதுதான் உள்ளே வந்த நந்தினி இவர்களை கடந்து செல்ல, நின்று விசாரித்தாள். பக்கத்திலிருந்த பிரணவைப் பார்த்தாள். பத்து வயது இருக்குமா?
ஆனால் அவன் வளர்ச்சியும், தோற்றமும் அப்படியில்லை என்றது. மருத்துவராக அவனுக்கு ஏதோ பிரச்சினை என கணிக்க முடிந்தது. ப்ரீ மெச்சூர்ட் சைல்ட் என்றாலும் இந்தளவிற்கா. அந்த மாதிரி எத்தனை குழந்தைகளைப் பார்த்திருக்கிறாள். ஏன், ஆறு மாதக் குழந்தையைக் கூட இன்குபேட்டரில் வைத்துக் காப்பாற்றி, இப்பொழுது நல்ல ஆரேக்கியமாக இருப்பதைப் பார்த்திருக்கிறாள். அதற்குள் மருத்துவர் அழைத்துவிட அவளிடம் சொல்லிக்கொண்டு குருப்பிரசாத்தும், பிரணவும் உள்ளே சென்றுவிட்டனர்.
விஷாலிக்கு லேப்ரஸ்கோபி சிகிச்சையின் போது, இவனும் மாமாவுக்குத் துணையாக வெளியே காத்திருக்க, இவனை அழைத்துப் பேசினாள். பிரணவைப் பற்றி விசாரித்திருக்கிறாள் எனத் தெரிந்தது. மருத்துவராக ஒரு நோயாளியைப் பற்றித் தெரிந்து கொள்வது அவளுக்கொன்றும் கடினமாக இருந்திருக்காது.
“நான் இன்டெர்னா இருந்த ஹாஸ்பிடல்ல தான் தொடர்ந்து வேலை பார்த்தேன் மிஸ்ட்டர் பிரசாத். அங்க நடக்குறது எனக்குப் பிடிக்கல. வெளியே வந்துட்டேன். ஹையர் ஸ்டடி முடிச்சு இங்க வந்துட்டேன்” என்று சொல்ல இதெல்லாம் எதற்கு என்னிடம் சொல்கிறாள் என்றுதான் தோன்றியது குருப்பிரசாத்திற்கு.
அவனது எண்ணம் புரிந்தவளாக, “உங்க மகனைக் காப்பாத்த இன்னொரு சாய்ஸ் இருக்கு பிரசாத்.” என்றவள் அடுத்து அவள் கூறியதைக் கேட்டு உண்மையில் அதிர்ந்துதான் போனான்.
“வாட் யூ சே?” விசுக்கென எழுந்தே நின்றுவிட்டான். அவன் எழுந்த வேகத்தில் இவளுக்கே ஒரு கணம் திடுக்கிட்டது. இன்னும் அவனால் நம்ப முடியவில்லை. என் ஒப்புதலின்றி எப்படி என்ற கோபம் தான் உள்ளுக்குள் கனன்றது. கோபத்தில் கைகளில் கூட சிறு நடுக்கம். சற்று முன் தெரிந்து கொண்ட ஜீரணிக்க முடியாத உண்மை கொடுத்த அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம்.
“காம் டவுன் பிரசாத்” என்றவள் டேபிள் மீதிருந்த தண்ணீர் டம்ப்ளரை எடுத்துக் கொடுத்தாள். அதை வாங்கும் போது கூட விரல்களில் மெல்லிய நடுக்கம். கொடுத்ததற்காகவே வாங்கி ஒரு மிடறு குடித்துவிட்டு வைத்தான்.
“ஒரு டாக்டரா பேஷன்டோட ஹிஸ்டரி சொல்லக் கூடாதுதான். ஆனா உங்க சன் இருக்கிற நிலமைக்கு உங்களுக்கு இன்னொரு சான்ஸ் இருக்குன்னு சொல்றேன்” என்றவளிடம் கோபத்தைக் காட்டி பயனில்லை.
நடந்தவற்றிற்கும் இவளுக்கும் சம்பந்தமில்லாத போழுது இவளை நோவானேன். ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவள் சொல்வதற்கு செவியுற்றான். இருந்தாலும் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டுதானிருந்தது.
“பிரசாத்… அங்க வேலை பாக்குறவங்க கான்டாக்ட் தர்றேன். நேரடியா போனா அவங்ககிட்ட வேலை நடக்காது. ரூல்ஸ் பேசுவாங்க. இவங்கள காண்டாக்ட் பண்ணுங்க. உங்களுக்குத் தேவையான டீடெய்ல்ஸ் கிடைக்கும்.” என்று அவள் ஒரு தொலைபேசி எண் கொடுக்க,
இதோ இப்பொழுது அவனது பயணம் விழுப்புரத்தை நோக்கி. இன்று காலையே மகனை பள்ளியில் விட்டு அங்கிருந்தபடியே கிளம்பி விட்டான். மாலை பள்ளியிலிருந்து மகனை அப்பாவிடம் அழைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறான். அதற்கே ஆயிரத்தெட்டு முன்னெச்சரிக்கை அப்பாவிற்கு.
திருவேங்கடம், “தெலுசுலேரா!” (தெரியும்டா) என்றார் மகனிடம் அலுக்காத குறையாக. அப்பாவாக இருந்தாலுமே நம்பி விடமாட்டான். எப்பொழுதும் மகன் அவனது நேரடி கண்காணிப்பில்தான். மகனுக்காகவா இல்லை இது அவளுக்கான பிராயச்சித்தமா என்பது அவனுக்கே வெளிச்சம்.
ஆனால், இன்று பள்ளி அரை நாளோடு விடுமுறை என்பதை சொல்ல மறந்தான். நிகழவிருக்கும் சுதந்திரதின விழா முன்னேற்பாட்டிற்காக, அதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தவிர மற்றவர்களுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
கார் சென்னை டூ திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தது. ஆயிரம் குழப்பங்கள் அவனுக்குள். யாரை எப்படி அணுகுவதென்ற ஆயிரத்தெட்டு யோசனைகளோடு.
“பாவா… இட்ட சூடு பாவா!”
“மொதல பெட்டேசேவா?” (ஆரம்பிச்சுட்டியா?)
“பாவாஆஆ!”
“உசே… ப்ராஜெக்ட் செய்ய விடுடீ… ஃபைனல் இயர்டீ!” படுக்கையில்தான் லேப்டாப்பை மடியில் வைத்து அதில் புராஜக்ட் சம்பந்தமான வேலைகளைப் பார்த்துக் கொண்டே கால்நீட்டி அமர்ந்திருந்தான். பக்கத்தில் படுத்திருந்தாள் அவனது சிலக்க.
“நீ பண்ண ப்ராஜெக்ட் தான் என் வயித்துல ஃபுட்பால் ஆடுதே. இட்ட சூடு பாவா! நீக்கு கொடுக்கு காவாலா? கூத்துரு காவாலா?” அவனை ஒட்டி உரசிக் கொண்டு கேட்டவளிடம், புராஜக்டில் கவனமாக இருந்தவன், இவளது இடையூறு சற்றே எரிச்சலை ஏற்படுத்த,
“உன்கிட்டருந்து நாக்கு ஃப்ரீடம் காவாலி!” (உன்கிட்டருந்து சுதந்திரம் வேணும்) என்றான் சற்று கடினத் தொணியில் மடிக்கணினியில் பார்வையைப் பதித்தவாறே.
“ஓகே… டன் பாவா?” சொல்லிவிட்டு சட்டென எழுந்தவள், கீழே இறங்கிச் சென்றுவிட்டாள். அவள் தரையில் பாதம் பதித்து நடந்த விதமே அவளது கோபத்தைச் சொன்னது. சென்றவள் முதுகையே பார்த்தவன் தலை இடவலமாக அசைந்து இதழ் புன்னகைத்தது. இப்பொழுது ஏழாவது மாதம் அவனது சிலக்கிக்கு.
நொடிக்கொரு தடவை பிள்ளையின் அசைவை அவனுக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். இறுதி ஆண்டு என்பதால் பாதி நேரம் அவனுக்கு வீட்டில் தான்.
படியில் தடதடவென இறங்கி வந்தவளை, “மெதுவா வா! இன்னும் சின்னப்பிள்ளைனு நெனப்பு” ஜமுனா கடிய,
“அவ சின்னப்பிள்ளைதாம்மா” என்றாள் விஷாலி.
“அலா செப்பண்டி ஒதினா!” (அப்படி சொலலுங்கண்ணி) என்று அவளருகில் இடித்தவாக்கில் அமர்ந்தாள்.
நாத்தானார் முறைக்கு, ஏழாம் மாதம் தம்பி மனைவிக்கு சீர் செய்ய மகன்களோடு வந்திருக்கிறாள். இன்று தான் இவளை அழைத்துக் கொண்டு புடவை, வளையல் எல்லாம் வாங்கி வந்தாள். நாளை மறுநாள் வீட்டளவிற்கு ஐந்து வகை சாதம் செய்து எளிமையான வளைகாப்பு.
“அக்கா… பாவா ஏட?” என்றான் ஐந்து வயது ரோஹித். சாய்கிரணுக்கு மூன்று வயது.
“பாவா… சதுவுத்துன்னார்லே. டிஸ்டர்ப் செய்யொத்து. மனம் ஆடுத்தாம்லே!” (பாவா படிக்கிறாங்க. டிஸ்டர்ப் பண்ணவேண்டாம். நாம விளையாடுவோம்)
இவர்கள் மேலே செல்ல முயல, அவர்களை போகவிடாமல் அவர்களோடு கேரம் விளையாட திசை திருப்பினாள். இவ்வளவு நேரமாக இவள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பது மறந்து போயிற்று போல. போர்டை எடுத்து வந்து டேபிள் மீது வைக்க, வைத்தவுடனே மூன்று வயது சாய், காய்களை நேரடியாக எடுத்து பாக்கெட்டில் போட்டான்.
“டேய்… தொங்கா!” என செல்லமாக கன்னத்தைக் கிள்ள, வலித்தது போல் கன்னத்தை தடவிக் கொண்டே அம்மாவிடம் ஓடினான்.
“ம்ஹும்… பிள்ளையப் பெத்துட்டும் இவனுகளோட சேந்து விளையாடப் போறா. நான்தான் அதுகூடவும் மல்லுக்கட்டப்போறேன்” அலுத்துக் கொண்ட அம்மாவைப் பார்த்து விஷாலி சிரிக்க,
“அத்தை மீரும் ரண்டி. ஆடுத்தாம்” என அழைக்க,
“எனக்கு வேலையிருக்கு. இப்ப உன் புருஷன் பசிக்குதுன்னு இறங்கி வருவான். நீ சின்ன பிள்ளைகூட விளையாட உக்காந்துட்ட!”
“விடுங்கம்மா… நான் வர்றேன். அவள எதுக்கு இழுக்குறீங்க?” விஷாலி அம்மாவை அழைத்துக் கொண்டு அடுக்களை செல்ல, இவளோ ரோஹித்தோடு கேரம் விளையாடிக் கொண்டிருந்தாள். கர்ப்பமாக இருப்பதால் தான் கேரம். இல்லையெனில் இவர்களோடு ஓடிப்பிடித்துதான் விளையாடுவாள்.
விஷாலி, மகனுகளுக்குத் தோசையை ஊற்றி இட்லி பொடியோடு இவளிடம் வந்து கொடுத்தாள் ஊட்டச் சொல்லி. விட்டால் இருவரும் சாப்பிடாமலே தூங்கி விடுவார்கள். இவள் ஊட்ட, சமத்தாக அத்தையிடம் சாப்பிட்டனர்.
“என்னையத்தான் ஏய்க்கிறானுங்க!” செல்லமாக மகன்களை வசைபாடிக்கொண்டே, அடுக்களை வந்தவள், “எப்பம்மா வளைகாப்பு பண்றதா இருக்கீங்க?” என,
“ஒன்பதாம் மாசம் பண்ணுவோம் விஷா. அதுவரைக்கும் இங்கேயே அவ இருக்கட்டும். சின்ன வயசு வேற. ஒன்னுமண்ணா இருந்தா தானே பிள்ள பொறக்க எடம் கொடுக்கும்” மகளிடம் சன்னக்குரலில் கூற,
“எனக்கும் கேட்டுச்சு. மீ கொடுக்கு காலேஜ் புராஜக்ட்லோ பிசியா இருக்காரு. அவர்கிட்டயும் சொல்லுங்க!” தண்ணீர் எடுத்துச் செல்ல வந்தவள், பதில் கொடுக்க,
“ஏம்மா… இவ முன்னாடி போயி?” ஜமுனா இவளது சிறுபிள்ளைத் தனத்தில் சிரிக்க,
“சின்னப்பிள்ளைங்கறது சரியாயிருக்கு போ! உன் தம்பி எப்படித்தான் இவள வச்சு சமாளிக்கிறானோ?” தலையிலடிக்காத குறையாக அலுத்துக் கொண்டிருக்க,
“ம்மா.. என்ன சாப்பிட இருக்கு” கேட்டுக் கொண்டே இறங்கிவந்தான்.
இவளை வெளியே போகச் சொல்லிவிட்டு இவனாலும் ப்ராஜக்டில் கவனம் செலுத்த முடியவில்லை.
என்னைத் தனியே விடு என்றாலும் போக மாட்டாள். இன்று ஏனோ சட்டென அவள் இறங்கி வந்ததும், மனது கேட்காமல் அவனும் லேப்பை மூடி வைத்துவிட்டு பின்னாலே இறங்கி வந்தான்.
“உங்கம்மா ஏதோ சொல்றாங்க. என்னானு கேளுங்கு” என்றவள் ரோஹித்துக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல,
“ஏன்ட்டம்மா?” என்றான்.
“இவள…” என்று பல்லைக் கடித்தவர்,
“நாளைக்கி ஸ்கேன் பண்ண போகணும்னு சொல்ல வந்தேன்டா!”
“நீங்களே போய்ட்டு வாங்கம்மா. அக்காவும் வந்துருக்குல்ல. கூட்டிட்டுப் போய்ட்டு வாங்க. நாளைக்குதான் பிராஜெக்ட் சப்மிட் பண்ண லாஸ்ட் டேட்” என்றவன், இன்னும் இரவு சமையல் செய்யப்படாமலிருக்க ஃப்ரிட்ஜைத் திறந்து ஒரு ஆப்பிளை எடுத்துக் கொண்டு இவர்களோடு வந்து அமர்ந்து கொண்டான்.
ஆப்பிளை ஒரு கடி கடிக்க அவனிடம் பிடிங்கி இவள் கடித்துவிட்டு மீண்டும் அவன் கையில் கொடுத்தாள்.
“ச்சீ… எச்சில்” என்றான் சாய்கிரண்.
“டேய்… அவங்க ஹஸ்பன்ட் அன்ட ஓய்ஃப். அப்படித்தான் சாப்பிடுவாங்க. சினிமால பாத்ததில்ல.” சின்னவனுக்கு விளக்கம் சொன்னான் பெரியவன் ரோஹித்.
சின்ன பிள்ளைக முன்னாடி என்னதிது என்பது போல். பக்கத்தில் இருந்தவளை முறைத்தான்.
உடனே அவன் கையிலிருந்ததை பிடிங்கிக் கொண்டு, “நீங்க போய் வேற எடுத்துக்கோங்க” என்று மீதியையும் கடித்து சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் தலையில் இலேசாகத் தட்டிவிட்டு எழுந்து சென்றவன், இப்பொழுது ஒரு தட்டில் ஆப்பிளை துண்டுகளாக நறுக்கிப் போட்டு எல்லாருக்குமாக எடுத்து வந்தான்.
இவர்களுக்கு ஊட்டி முடிக்க, அடுத்து அரை மணி நேரத்தில் உணவு தயாராக ஜமுனா அனைவரையும் அழைத்தார்.
உணவு வேளை முடித்து சிறிது நேரம் வெளியே அவளை நடப்பதற்காக அழைத்து வந்தான்.
“பாவா!” என்றாள் வதங்கிய குரலில்.
“ம்ம்ம்!” என்றான் அவளோடு நடந்து கொண்டிருந்தாலும், கைபேசியில் கவனம் வைத்தபடி.
“ரேப்பு நுவ்வு ராலேதா?” (நாளைக்கி நீ வரலியா)
“ஃபைனல் புராஜக்ட் டீ. அம்மாவும், அக்காவும் வர்றாங்கல்ல.”
“போ… எப்புடும் இதே செப்புத்தாவ். ஒக்கசாரி கூட ஹாஸ்பிடல் ராலேது.” (எப்பவும் இதே சொல்ற. ஒருதடவை கூட வரல) அவள் கோபமாகச் சிணுங்க, பேசியை பேன்ட் பாக்கெட்டில் போட்டவன்,
“சாரி சிலக்க… இது ஃபைனல் இயர் காதா? நெக்ஸ்ட் அன்னி டெஸ்ட்டுக்கு நேனே ஒஸ்த்தான்லே.” (இது கடைசி வருஷமில்லையா. அடுத்து எல்லா டெஸ்ட்டுக்கும் நான் வர்றேனே) என்றவனுக்கு அப்பொழுது தெரியவில்லை. இனி எத்தனை சோதனைகளுக்கு அவளுடனே இருக்குப் போகிறான் என.
நடைப்பயிற்சி முடித்து வந்தவள் படியேற, இவன் அடுக்களை சென்று பெரிய டம்ப்ளரில் பாலை சூடுபண்ணி எடுத்துக் கொண்டு மேலே ஏறினான்.
மாத்திரைகளையும் பாலையும் கொடுத்தான். முகத்தை சுழித்துக் கொண்டே போட்டாள்.
படுத்தவள் மீண்டும் சூடு பாவா என ஆரம்பிக்க, கையை இடையோடு அணைத்துப் போட்டவன் விடியும் வரை விலக்கவில்லை.
“டேய்… பிரசாத்… எங்க இருக்க?”
“காலேஜ்லம்மா… இன்னும் நீங்க ஹாஸ்பிடல் போலியா?”
“அங்க தான்டா இருக்கோம். இங்க என்னென்னமோ சொல்றாங்கடா. பயமாயிருக்கு. சீக்கிரம் வாடா!” ஜமுனா கைபேசியில் அழைப்பு விடுக்க, ஃபைனல் புராஜெக்டைக் கூட சமர்ப்பிக்காமல் வேகமாக பைக்கில் பறந்து வந்திருந்தான்.
மருத்துவமனையில் இருந்த மூன்று பெண்கள் முகத்திலும் கலவரம் அப்பிக் கிடந்தது. பெரியவர்கள் இருவரது கண்களிலும் கண்ணீர் என்றால் சிறியவள் பார்வையோ வெறித்திருந்தது.
சேரில் அமர்ந்திருந்தவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவளது கைகளைப் பிடிக்கப் போக, அவளே சட்டென அவனது கைகளை இழுத்து தன் வயிற்றில் அழுத்தி பதித்தாள்.
“சூடு பாவா! பாப்பா தன்னுத்துந்தி காதா?” (பாரு பாவா.. பாப்பா உதைக்குது தானே) என்று கலங்கிய கண்களோடா கேட்க, இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“அவ்வுனு” என்றவன் பார்வை அக்காவையும், அம்மாவையும் கேள்வியாகப் பார்த்தது. ஜமுனாவிற்கு தம்பி முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. இதை எப்படி இவனிடம் சொல்வது என்ற கலக்கம் உள்ளுக்குள். திருவேங்கடமும் தகவலறிந்து அவசரமாக வந்து சேர்ந்தார்.
அவரிடம் விஷாலி, மருத்துவர் கூறிய தகவலை தெலுங்கிலேயே கூற, “தமிழ்ல சொல்லுடீ” என்று கடிந்தார் ஜமுனா.
சாதாரண நேரமாக இருந்தால் இவர்கள் பேசுவது புரியும். இப்பொழுது அதிர்ச்சியிலிருக்க, இவர்கள் பேசிக் கொள்வது அவருக்கு சுத்தமாக மூளை கிரகிக்கவில்லை. மருத்துவர் விஷாலியிடம் தான் விளக்கமாகக் கூறியிருந்தார். ஜமுனாவிற்கு மருத்துவர் பாதி சொல்லும் பொழுதே படபடத்துவிட்டது. நர்ஸை அழைத்து இவரை வெளியே அனுப்பிவிட்டார்.
அப்பாவையும், தம்பியையும் பொதுப்படையாக பார்த்தாள் விஷாலி. ஏதோ பெரிய பூகம்பம் என்பது மட்டும் இவன் மூளைக்கு உரைத்தது. இருவருக்கும் சொல்வது போல், “நைனா… பாப்பா மூளை வளர்ச்சியில்லாம இருக்காம். பிறந்தாலும் பொழைக்கறது கஷ்ட்டமாம். அதனால…” என்று தம்பி முகத்தைப் பார்த்தாள்.
ஏற்தனவே அவனது சிலக்க அவனது கரங்களை இறுக்கி சிறைப்படுத்தியிருக்க, விஷாலியும் தம்பி கரங்களை ஆதுரமாகப் பற்றினாள். இருவரையும் பார்க்க மனது அடித்துக் கொண்டது.
“அபார்ட் பண்ணனும்னு சொல்றாங்கடா…” என்று முடிக்கக் கூட இல்லை…
“ஒத்து பாவா! பாப்பா தன்னுத்துந்தி பாவா. நார்மல்கா மூவ் சேஸ்த்துந்தி பாவா. ஸ்பெஷல் சைல்ட் அன்டே கூட ஓ.கே பாவா. மேமு சூஸ்க்குண்டாம். அபார்ட் செய்யொத்து பாவா! செப்பு பாவா!” (வேணாம் பாவா. பாப்பா உதைக்குது. நார்மலா மூவ் பண்ணுது. ஸ்பெஷல் சைல்டுனா கூடப் பரவாயில்லை. நாம பாத்துக்கலாம். அபார்ட் செய்ய வேணாம் பாவா) என்று கண்ணீர் வழிய பரிதவித்தவளை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. இவளைப் பார்த்த பெரியவர்களுக்குதான் நெஞ்சை இறுக்கிப் பிழிந்தது. அவளது நிலமைதான் அப்படி என்றால் இவன் நிலமை அவளுக்கு மேல் இருந்தது.
‘குழந்தை நன்றாக இயங்குகிறது. இப்பொழுது கூட அவன் கைகள் அதை உணர்கிறதே. ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேலாவது சூடு பாவா சூடு பாவா என இவளது கைகளை எடுத்து வயிற்றில் வைத்து அழுத்தி காண்பிப்பாளே? ஐந்தாம் மாதம் ஸ்கேனில் கூட வளர்ச்சி நன்றாக இருப்பதாகத்தானே இருந்தது. இது எப்படி? திடீரென மூளை வளர்ச்சியில்லாமல் போகும்?’
அவனும், திருவேங்கடமும் மட்டும் இப்பொழுது மருத்துவர் முன். இருவர் முகமும் அருளற்று இருந்தது.
“பாருங்க பிரசாத். நான் தெளிவா சொல்லிட்டேன். இன்னும் கூட ஃபெட்டல் MRI எடுத்துப் பார்க்கலாம். மூளையில CSF திரவம் அதிகமா சேந்திருக்கு. இதை severe ventriculomegalyன்னு சொல்வோம். இது தொடர்ந்து அதிகரிச்சுக்கிட்டே இருந்தா, அந்தத் திரவத்தோட அழுத்தம் காரணமா மூளைத் திசு மெல்லியதாகி, மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படலாம். குழந்தை பிறந்தாலும் உயிர்பிழைக்கிற வாய்ப்பு குறைவு. அப்படியே இருந்தாலும் எத்தனை நாள் உயிரோடிருக்கும், எந்தளவுக்கு மூளை வளர்ச்சி இருக்கும்னு சொல்ல முடியாது” என்று மேலும் பல புரியாத மருத்துவ பாஷை பேச இவனுக்குதான் அணைத்தும் ஸ்தம்பித்த உணர்வு. திருவேங்கடம் மகனின் கைகளை ஆறுதலாக பிடித்துக் கொண்டார். கல்லூரி கூட முடிக்காத மகனுக்கு சாதகத்தை நம்பி திருமணம் செய்து வைத்தது எவ்வளவு பெரிய தவறு என காலம் கடந்த ஞானம் பிறந்தது.
மேலும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி அனைத்து சோதனைகளும் எடுத்த பிறகு, குழந்தையை அபார்ட் பண்ணுவது என்ற முடிவிற்கு மருத்துவ குழுவும், குடும்பமும் ஒருமித்த கருத்திற்கு வந்தனர்.
“ஒத்து பாவா… எப்படியிருந்தாலும் மனம் சூஸ்க்குந்தாம்லே” என கைகளைப் பிடித்துக் கொண்டு இறைஞ்சுபவளை என்ன சொல்லி சமாளிப்பதென யாருக்கும் தெரியவில்லை.
“மனகி இன்னா ஏஜ் உந்திகாதா… ஹெல்திகா சாலா மந்தி பிள்ளல்னி கன்னொச்சு.” (நமக்கு இன்னும் வயசிருக்குல்ல. ஹெல்த்தியா நிறைய குழந்தைகள் பெத்துக்கலாம்) என்றவனுக்கும் கண்ணீர் நிற்கவில்லை.
“மனம் ஃப்ர்ஸ்ட் புராஜெக்ட் காதா. ஃபெயிலியர் ஆவொத்து பாவா!” என்றாள் மீண்டும். (நம்ம ஃபர்ஸ்ட் புராஜெக்ட் இல்லையா. ஃபெயிலியர் ஆகவேண்டாம்.)
“ப்ளீஸ்… அர்த்தம் சேஸ்க்கோவே” (புரிஞ்சுக்கோடீ) என்றவனுக்கும் அதற்கு மேல் பேச வரவில்லை. அவனுக்கும் அவள் நிலைதானே. அவனது உதிரம் உருக்குலைவதை பார்க்கும் தைரியம் அவனுக்கு மட்டுமீ இஉக்கிறதா என்ன? ஆனால் குழந்தை அரைகுறையாகப் பிறந்து எத்தனை நாள் உயிரோடு இருக்கும் என்ற எண்ணத்தில் கண்முன் வைத்துக் கொண்டு உயிர்வதை படுவதற்கு இது மேல் என தன்னைத்தானே தேற்றிக் கொண்டான். இப்பொழுது அவளைத் தேற்றும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவன் வயதிற்கு இந்த அனுபவம் அதிகப்படி.
பெரியவர்களும் சேர்ந்து ஏதேதோ பேசி அரைமனதாக அவளை சம்மதிக்க வைத்தனர். அடுத்த பெரிய சோதனை குழந்தையை பிரசவிப்பது. பழுத்த பழம் உதிர்வது மரத்துக்கே தெரியாது. ஆனால் காயை தடியால் அடித்துக் கனிய வைப்பதென்பது சாமானியப்பட்ட வேலையல்லவே.
ஒரு வழியாக செயற்கையாக வலி வரவழைக்கப்பெற்று, சுகப் பிரசவமாகவே குழந்தையை எடுத்தனர். உயிர்வேதனை இருவருக்கும். விளையாட்டாக என்றாலும் மருத்துவ பழமொழிதான் சாலப் பொருந்தும். ஆப்ரேஷன் சக்சஸ். பேஷன்ட் டெத்.
ஒரு ட்ரேயில் குழந்தையைப் போட்டு இவர்களிடம் காண்பித்தனர். கருவரையில் இருப்பதுபோலவே குறுகிப் பக்கவாட்டில் கிடந்தது. இப்பொழுதும் அவனது உள்ளங்கை பிள்ளையின் அசைவை உணர்ந்தது மானசீகமாக.
“என்ன பேபி” என்றவனுக்கு தொண்டைவிட்டு வார்த்தை வரவில்லை.
“பெண் குழந்தை சார்!”
தொடர்ந்து ஒலித்த ஹாரன் சத்ததத்தில் சட்டென சுயத்திற்கு வந்தான். விக்கிரவாண்டி டோல் கேட்டில் டோல் பேரியர் கம்பி மேலே தூக்கியும் கார் நகராமலிருக்க பின்னால் நின்ற வாகனங்கள் அழுத்திய ஹாரன் சத்ததத்தில் தான் சுயம் பெற்று காரைச் செலுத்தினான் குருப்ரசாத்.
*****
டீசர்…
“குரு இன்னும் எவ்வளவு நேரமாகும்டா?”
“ஏம்ப்பா… வஸ்த்துன்னான்லே!” (வந்துட்டிருக்கேன்)
“***** ஹாஸ்பிடலுக்கு ஒச்சேய்ரா!” (ஹாஸ்பிடல் வாடா!)என்று திருவேங்கடம் அழைக்க, காரின் வேகத்தைக் கூட்டினான். அவர் கூறியது பிரணவை வழக்கமாக அழைத்துச் செல்லும் மருத்துவமனை.
அவசரமாக வந்தவன், அப்பாவை ஃபோனில் அழைக்க, அவர் ஐசியூ வருமாறு கூற அப்பொழுதே இவனுக்கு கால்கள் துவண்டது. இதயத்துடிப்பு எகிறியது.
லிஃப்ட்டில் ஏறி வேகமாக அங்கு வந்தான். காரிடரில் பிரணவ், முகக்கவசத்தோடு அமர்ந்திருப்பதைப் பார்க்க புருவம் சுழித்தது. பிரணவிற்குதான் ஏதோ உடம்புக்கு போல என்று பரிதவிப்பாக வந்தவன்,
அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளை கேள்வியாகப் பார்த்தான்.
ஏதேச்சையாக திரும்பிப் பார்த்தவள் பார்வை மெதுவாக கூர்மை பெற்றது. வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்திருந்தாள். இதயம் துடிப்பது அவளுக்கே கேட்டது.
“ச்சிலக்க” பிரசவ வார்டின் முன்பு மயங்கியபடி ஸ்ட்ரெட்சரில் படுத்திருந்தவள் கை பிடித்தபடி, கண்கள் கலங்க அவன் அழைத்தது இப்பொழுதும் இவள் காதில் ஒலித்தது.





கொஞ்சம் குழப்பமாக இருக்கு. எனக்கு சரியாக புரியவில்லை
எந்த இடம்னு சொல்லுங்கம்மா… லாஜிக் மிஸ்டேக்கானு பாக்கலாம்…
ஒரு வேளை ஃப்ளாஷ் பேக் முழுசா வந்ததும் புரியலாம்.
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
மீண்டும் முதலில் இருந்து படித்தேன். இப்போது புரிகிறது மா.
ஈஸ்வரி மேடம் உங்கள் கதை நீங்கள் அருகில் இருந்து ஒரு
குடும்பத்தை பார்த்து
எழுதுவது போல
அவ்வளவு உயிரோட்டமாக
உள்ளது.உங்கள்
எழுத்து பணி மேலும்
சிறக்கட்டும்.
Hi
Hi ma ❣️
❤️❤️❤️❤️❤️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
வணக்கம் Author அவர்களே,
அபிராமியும் சில்க்கவும் ஒருவர் தானா? இல்ல வேற வேறயா?🤔😅
🤣🤣🤣கதையின் போக்கில் புரியும்மா
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Rendu perum vera veraya….ore confusion ah iruku..eagerly waiting for next epy
எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுதா.. இல்ல ரெண்டும் ஒன்னா தெரியுதா…
விடிஞ்சதும் தெளிஞ்சுறும் 🫣
நான் குழப்பத்தை சொன்னேன் மா 😉
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Nakkalu….ungakita idha edhirpathathu than…
Inda kankati vithai ellam ungaluku than nala varume..nadathunga…
இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பு ரணகளமாக்குறதே வேலையாப் போச்சு…
😴😴😴
எனக்குமே ரொம்ப குழப்பமா தான் இருக்கு,அடுத்த எபியில் பாப்போம்.
🤣🤣🤣🤣🤣என்னம்மா அந்தளவுக்கா குழப்பது. இந்நேரம் எல்லாரும் கதையை கெஸ் பண்ணிருப்பீங்கன்ல நெனச்சேன்..🫣😉
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫