arrow_back
கலாப காதலா அத்தியாயம் 20
கலாப காதலா chevron_right பகுதி 20 / 24

அத்தியாயம் 20

visibility 565
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.7/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

நினைத்துக் கொள்வதற்கும்

நினைத்துக் கொள்வதை

நினைவு படுத்துவதற்கும்

நித்தமும் ஒன்று

நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது

உனக்கான கூடு

இடம் மாறியிருக்கிறது

அல்லது தடம் மாறிவிட்டது

எதன் பொருட்டும்

விரல் நீட்டுவதாய் இல்லை

அததது அதனதன் போக்கில்

நதிக்குள் உருளும்

கூழாங்கல் போல

இன்னமும் என்னிடம்

சொல்வதற்கு சொற்கள்

இருந்து கொண்டுதானிருக்கிறது…

“இந்த மாதிரி யாருமே லவ் பண்ணிருக்க மாட்டங்கடி… கோவில் கோவிலா மட்டும் அலைய வைக்கற…”

மைலாப்பூர் கற்பகாம்பாள் கோவிலில் கண்களை மூடி மிக தீவிரமாக அம்பாளிடம் கோரிக்கை மனுக்களை சமர்பித்து கொண்டிருந்த ஸ்ரீநிதியின் காதில் கிசுகிசுத்து கொண்டிருந்தான் அர்ஜுன்.

ஒற்றை கண்ணை மட்டும் திறந்து அவனை பார்த்தவள்… முறைத்து எச்சரிக்க… உதட்டில் உறைந்த புன்னகையோடு கண்களை மூடிகொண்டான்.

கற்பூர ஆரத்தியை எடுத்து கொண்டவர்கள் பிரகாரத்தை சுற்றி விட்டு வெளியே வந்தனர்.

“அடுத்தது என்ன? நேரா கும்பகோணம் டிகிரி காபி கடைக்கு தானே?”

தெற்கு மாட வீதியில் இருக்கும் அந்த கடையை நோக்கி அவன் நடக்க துவங்க… அவனுக்கு பக்கத்தில் அவனது கையை பிடித்தவாறு அவள்!

கசகசவென மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது… ட்ராபிக் வேறு கோவில் முன்பு எப்போதும் போல!

இது போதாதென இரவு நேர நடைபாதை கடைகளின் ஆக்கரமிப்பு வேறு!

ஆனாலும் இருவருக்குமே மனம் தளும்பி கொண்டிருந்தது.

இருவருக்கும் அடுத்தவரின் அருகாமை ஒன்றே போதுமானதாக இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இருவரும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்க… தோழியோடு கற்பகாம்பாள் கோவிலுக்கு போவதாக கூறிவிட்டு வந்திருந்தாள் ஸ்ரீநிதி.

இந்த ஒரு மாதத்தில் அவளுக்கும் பரிட்சைகளும் செய்முறை தேர்வுகளும் இருக்க… அவனும் அவனது தொழிலில் ஆழ்ந்து போயிருந்தான்.

இப்போதுதான் வளர்ந்து கொண்டிருந்தது அவனது வியாபாரம்.

இருவருக்குமே இது ப்ரேக் போல!

“இன்னும் வேறென்ன கோவில் சென்னைல இருக்கு தாயே? சொல்லிடு…” கிண்டலாக கூறிவிட்டு காபியை ஆர்டர் செய்துவிட்டு அங்கிருந்த சேரில் அமர்ந்தவனை பத்திரம் காட்டி விட்டு அமர்ந்தாள் ஸ்ரீநிதி.

பித்தளை டபரா செட்டில் காபி வந்தது.

அதன் வாசத்தை இழுத்து பிடித்தாள்… என்ன வேலையாக இருந்தாலும் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் ப்ரெஷ் டிகாக்ஷனில் காபியை நல்ல சூட்டில் கலக்கும் போது வரும் அந்த வாசத்தை அவள் மிஸ் செய்வதே இல்லை.

“வாவ்… டிவைன்…” ரசித்து அவள் கூறிய அழகை விழுங்கி விடுவது போல ரசித்து பார்த்தான் அர்ஜுன்.

ஒவ்வொன்றையும் ரசித்து ருசித்து செய்பவள் அவனது காதலி! நிற்காமல் ஓடி கொண்டிருக்கும் அவனை நிற்க செய்து இதையெல்லாம் மிஸ் பண்ணாதே என்று கூறாமல் கூறுபவள்!

இளம் காலை பொழுதுகள் இப்போதெல்லாம் ஸ்ரீநிதியின் காலை வணக்கத்தோடும் மென்சூரிய தரிசனத்தோடும் அழகாக விடிகின்றது அவனுக்கு… அந்த அழகில் முந்தைய நாளின் சோர்வுகள் அனைத்தும் பனியாக கரைந்து விடுவதை ஆழமாக உணர்ந்திருந்தான்.

மெல்லிய சாரலுக்கு இப்போதெல்லாம் அவன் குடை பிடிப்பதே இல்லை… அனுபவிக்க சொன்னது அவனது காதலி… அதையும் ஆசையாக அனுபவித்தான்.

குடைகளை கண்டுபிடித்தவன் ரசனை இல்லாதவன் என்று கத்த தோன்றியது!

தூரத்து மலைமுகடு, சலசலவென ஓடும் காவிரி, இருபுறமும் பச்சை குடைவிரித்த சாலைகள், பனி படர்ந்த புல்வெளி, மனதோடு நெருங்கிய கடம்பேஸ்வரர் கோவில் மணியோசை என குளித்தலையில் ஒவ்வொன்றையும் ரசித்து கொண்டிருந்தான்.

சென்னை வரும் போது அந்த வெயிலையும் கூட ரசிக்க ஆரம்பித்த போதுதான் அவனுக்கு தோன்றியது.

ஆஹா! நமக்கு ரொம்பத்தான் முத்தி போச்சு!

ரசனைகளை சொல்லி தந்தவளையும் ரசிக்காமல் இருக்க முடியுமா என்ன? அவன் மெளனமாக அவளை விழுங்கி கொண்டிருக்க… அது புரியாத அவளோ.

“ஏன் அர்ஜுன் ரொம்ப போரடிக்கறேனா?” அவன் புறம் குனிந்து பாவமாக கேட்டவளை குறும்பாக பார்த்தான் அவன்!

“பின்ன… ஒரு ஹக்… ஒரு கிஸ்..இப்படி ஒண்ணுமே இல்லாம ஒரே ட்ரையா இருக்கே ரசகுல்லா… ஒரு மாதம் கழிச்சு பார்த்த எபெக்டே இல்லையேடி…” காதோரமாக ரகசியமாக அவன் கூற.

“நான் கண்டிப்பா யுனிவர்சிட்டி ரேன்க் வாங்குவேன்னு எல்லாரும் நம்பிட்டு இருக்காங்க…” பாவம் போல முகத்தை வைத்து கொண்டு அப்பாவியாக கூறியவளை பார்த்தவனுக்கு சிரிப்பாக இருந்தது.

“சோ வாட் ரசகுல்லா?” கண்ணடித்து அவன் கேட்க.

காபியை ஒரு வாய் குடித்து விட்டு.

“நீ இப்படியெல்லாம் பேசி என் மனசை கெடுக்காதே அர்ஜுன்… நான் ரொம்ப கன்ட்ரோல் பண்ணிட்டு படிச்சுட்டு இருக்கேன்…” மிகவும் தீவிரமாக கூறுவது போல கூறியவளை பார்த்தவனுக்கு அதற்கும் மேல் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“இப்ப என்ன கெட்டு போச்சுன்னு இப்படி குதிக்கற?” சிரிப்பினூடே அவன் கேட்க..

“நீ இப்படி இப்படியெல்லாம் பேசினா அப்படி அப்படி கெட்டு தான் போகும்…” சிறுபிள்ளையாக அவள் சிணுங்க… வாய் விட்டு சிரித்தவன்.

“ஏய் ரசகுல்லா… என் காபி ரொம்ப கசக்குது… உனக்காச்சும் சுகர் போட்டு இருக்காங்களா?” சம்பந்தமே இல்லாமல் கேட்க… அவளும் வேகமாக தலையாட்டினாள்.

“ம்ம்ம்… போட்டு இருக்காங்களே…”

“எங்க பார்க்கலாம்… குடு…” அவனது காபியை அவளிடம் கொடுத்து விட்டு… அவளுடையதை வாங்கி ஒரு மடக்கு பருகினான்.

“ம்ம்ம்… ஆமா இருக்கு…” யோசனையாக கூறியவன்…”வேணும்னா என்னோடதை ஒரு வாய் குடிச்சு பார் ரசகுல்லா… அதில் சுகரே இல்லை…” தீவிரமாக கூற… அவளும் நம்பிக்கொண்டு அதை குடித்து பார்க்க.

அவனது முகம் குறும்பு சிரிப்பில் மிளிர்ந்தது!

“படவா… சுகர் இருக்கே…” முறைத்தாலும் அவனது அந்த தொனியில் வெட்க சிவப்பை பூசிக்கொண்டது அவளது முகம்!

“ஓகே… அதை நீ குடிச்சுக்கோ… நான் இதை குடிச்சுக்கறேன்…” கண்ணடித்து கூறியவன் அந்த காபியில் ஆழ்ந்து விட… அவளும் மெல்லிய வெட்க புன்னகையோடு அவனது காபியை குடித்தாள்!

“ரசகுல்லா… கோவில்ல சாமி கிட்ட பயங்கரமா டிஸ்கஷன் செய்துட்டு இருந்தியே… என்ன அப்படி வேண்டிகிட்ட அவ்வளவு தீவிரமா?” ஒன்றும் அறியாதவனை போல அவன் கேட்க.

“ஏதோ பெரிய ஆர்டர் கிடைக்க போகுதுன்னு சொன்ன தானே அர்ஜுன்…” என்று இடைவெளி விட்டு அவனை பார்க்க.

“ஆமாம்…” என்று கூறி தலையாட்டினான்..

“அது நல்லபடியா கிடைக்கனும்ன்னு வேண்டிகிட்டேன்…”

“வேறெதுவும் இல்லையா?”

“ம்ம்ம்… தோணலை…” என்று கூறியவளை ஆழ்ந்து பார்த்தான்.

“நான் என்ன வேண்டிகிட்டேன் தெரியுமா?” என்று நிறுத்தி விட்டு அவளை பார்க்க… என்னவென்பதை போல பார்த்தாள்.

“இந்த ரசகுல்லா எப்பவுமே லவ் மூட்லையே இருக்கா… அவளோட எக்ஸாம் எல்லாத்துக்கும் நீயே ப்ராக்சி கொடுத்துடுன்னு வேண்டிகிட்டேன்…” என்று சற்றும் சிரிப்பே இல்லாத குரலில் அவன் கூற… ஸ்ரீநிதியின் முகம் போலியான கோபத்தில் சிவந்தது.

“அடப்பாவி பழிகாரா! நான் லவ் மூட்ல இருக்கேனா?”

“ம்ம் ஆமா… இப்போ தானே சொன்ன… ரொம்ப கன்ட்ரோல் செய்துட்டு இருக்கேன்னு…” குறும்பாக அவன் கூறியதில் அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை… சுற்றிலும் பார்த்து விட்டு.

“டேய் மங்கூஸ் மண்டையா… என்கிட்டே அடி வாங்காதே… லவ் மூடாம்… அதும் இவனை பார்த்தாம்…”

“என்ன ரசகுல்லா இது அநியாயமா இருக்கு? லவ் பண்ற பொண்ணு அன்பே ஆருயிரே என் அத்தானே, என் ஆசை பொத்தானே… இப்படி ஏதாவது ஒன்றை சொல்றதை விட்டுட்டு மங்கூஸ் மண்டையன், ஸ்ப்ரிங் முடி மண்டையன்னு கவுண்டமணி செந்திலை கூப்பிடறது மாதிரி கூப்பிடற… ரெம்ம்ம்ப டேமேஜ் பண்ற நீ…”

“உன் வாய் கொழுப்புக்கு இப்படியெல்லாம் வேற கூப்பிடனுமா? போடா போடா போடா…” என்று கூறி சிரிக்க.

“பப்ளிக் பிளேஸ்ங்கற தைரியம்…” ஒரு மாதிரியாக அவளை பார்த்து கொண்டு அவன் கூற… அவள் அழகு காட்ட.

“ஜோக்ஸ் அப்பார்ட் ரசகுல்லா… நீ எப்படி எனக்காகன்னு ப்ரே பண்றயோ அதே மாதிரிதான் நானும்… நீ நல்லபடியா படிப்பை முடிக்கணும்… அதுக்கப்புறம் தான் நம்ம விஷயம்… உன்னுடைய முன்னேற்றத்துக்கு நான் எந்த விதத்திலும் நான் தடையா இருக்க மாட்டேன்டா… கண்டிப்பா…”

அவளுடைய கைகளை தன்னுடைய கைகளுக்குள் வைத்து கொண்டு அவன் கூற… அவளுக்கு மனம் நெகிழ்ந்தது.

இப்போதும் அதே நினைவு இருவருக்குள்ளும்.

தங்கள் முன் இருந்த அந்த டிகிரி பில்டர் காபி அவர்களை பார்த்து சிரித்தது.

நிமர்ந்து அர்ஜுனை பார்த்தவளின் கண்களில் மெல்லிய நீர்படலம்.

கடந்து போன காலங்களின் எச்சங்களை தேடிய அவனது குற்றம் சாட்டும் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.

அவளது கண்களை ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தான்… அந்த பார்வை அவளை சுட்டது… கேள்வி கேட்டது… அவனுக்கான நியாயங்கள் ஏதும் அவளிடம் மிச்சமிருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தது!

கண்களிலிருந்து கண்ணீர் தெறித்து விழ… விவேக்கையும் பார்க்காமல் அர்ஜுனையும் பார்க்காமல் எழுந்து விரைந்தாள்.

அவளது இப்போதைய தேவை தனிமை!

அனல் மேலே மேலிட்ட பனித்துளியாக அவள் உள்ளுக்குளே துக்கத்தில் கரைந்து கொண்டிருப்பதை உணர்ந்தாலும் அர்ஜுன் எதையும் பேசிவிட மாட்டான்… அவளாக வெளியே வருவது ஒன்றே அவனை பொறுத்தவரை தீர்வாக இருந்தது!

“அக்கா…” முகம் சிவந்து கண்கள் கலங்கி அவர்களிடம் எதையும் கூறாமல் சென்ற தமக்கையை விவேக் அழைக்க முயல.

“விடு விவேக்…” உணர்வே இல்லாத குரலில் அர்ஜுன் கூற… அவனை குழப்பமாக பார்த்தான் விவேக்!

“என்ன பாஸ் சொல்றீங்க? அக்கா ஏன் அழுதுட்டு போறா? என்ன விஷயம்?”

“அழட்டும்… நல்லா அழட்டும்…”

“பாஸ்..” அதிர்ந்து அவனை பார்க்க.

“அவ அழுதுட்டா மட்டும் அஞ்சு வருஷமா தொலைச்சது திரும்ப கிடைக்கவா போகுது?” தாடையில் கைகளை ஊன்றி சற்றும் உணர்வே இல்லாமல் அர்ஜுன் கூற.

விவேக் பதில் பேச முடியாமல் அவனை பார்த்தான்.

“லவ் பண்ணினா பிரச்சனை வரும் தான்… எந்த பேரண்ட்ஸ் உடனே சரின்னு சொல்லிடறாங்க? எவ்வளவு பிரச்சனைன்னாலும் ஸ்டெடியா நிற்கணும் விவேக்… அந்த கட்ஸ் இல்லாதவ எதுக்கு லவ் பண்ணனும்? கல்யாணத்துக்கு எதுக்கு ஒத்துக்கணும்? அம்மா அழுதவுடனே வேண்டாம்ன்னு போனவ இப்போ எதுக்கு அழனும்? இருக்கறவனை கேனையன் ஆக்கவா?”

அடக்கப்பட்ட கோபத்தில் யாரும் அறியாத வண்ணம் விவேக்கிடம் வெடித்து கொண்டிருந்தான் அர்ஜுன்.

“அக்காவுக்கு இப்படி ஒரு பாஸ்ட் இருந்ததே எனக்கு நேற்று தான் தெரியும்… என்கிட்டே யாருமே ஒன்றும் சொன்னதில்லை பாஸ்… நீங்களாச்சும் சொல்லுங்க ப்ளீஸ்… அவ இப்படி இருக்கறதை நினைச்சு எவ்வளவோ நாள் புழுங்கி இருக்கேன்… நீங்க அவளுக்கு…” விவேக் தயங்கி நிறுத்த.

அர்ஜுன் விவேக்கை ஆழ்ந்து பார்த்தான்… ஆழமாக!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 21

நீ கைப்பிடித்துபள்ளிக் குழந்தையைசாலை கடத்திவிடும்நிமிடங்களில் பெறும்அந்தக்கதகதப்பில்கன்னம் பதிக்க வேண்டும்ஓரிரவுதாய் கைப்பற்றிவீதி நடக்கும் குழந்தையின்தலையலசி உதிர்க்கும்உந்தன் புன்னகையைகோர்க்கவேண்டும்பட்டாம்பூச்சி இறகில்.ஸ்ரீமதியோடு அருண் அந்த மருத்துவர் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான்.அவர் நிர்மலா... அர்ஜுனின் நண்பனின் மனைவி!அவர் முன் இருந்த பைலை கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தார்... அது…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்