arrow_back
கலாப காதலா அத்தியாயம் 23
கலாப காதலா chevron_right பகுதி 23 / 24

அத்தியாயம் 23

visibility 569
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

நீண்ட இரவில் நெடிய தனிமை

வேண்டுகிறேன் – அதில்

நீயற்ற நானும் நானற்ற நீயும்

உரையாட வேண்டும்

என் முன்னே!

இன்றோடு மேக்சிமஸில் ஸ்ரீநிதியின் வேலைகள் முடிந்திருந்தன… அவ்வப்போது அவளது ஆபீசில் இருந்து பிரசாத் அழைத்து கேட்டுகொண்டிருந்தாலும், ஸ்ரீநிதியும் ஒவ்வொரு நிலையையும் அவரிடம் தெரிவித்து கொண்டிருந்தாலும் பைனல் ரிப்போர்ட்டை அவருக்கு மெயில் செய்தபோது மனதை பிசைந்தது.

இனி அவளுக்கு கிடைத்து கொண்டிருந்த சிறு சந்தோஷமும் அவ்வளவுதானா?

அர்ஜுன் அவளை திட்டினாலும் ஏமாற்றி விட்டாயே சண்டையிட்டாலும் ஒரே அறையில் உடன் அமர்ந்து அவனை பார்த்து கொண்டே வேலை செய்யும் பொழுதுகள் இனி வாய்க்குமா?

இனி மீண்டும் அதே இருண்ட காலத்திற்குள் செல்ல வேண்டியதுதானா?

அடர்ந்த பாலையை கடக்கையில் கிடைக்க பெற்ற சிறு சோலையில் அவள் தங்கி செல்லும் காலம் இவ்வளவு விரைவில் முடிவு பெற்றதை எண்ணி அவளால் வெளிப்படையாக கண்ணீர் கூட விட முடியவில்லை.

அவனை விட்டு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்த மனதை எப்படி சமாதானப்படுத்துவது என்று அவளுக்கு புரியவில்லை… அவளது மனதை அறிந்தவனோ மௌனத்தை மட்டுமே தாங்கி கொண்டிருக்க… எதையாவது கூறுவானா என்று அவனது முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.

அன்று அவனிடம் உண்மையை ஒப்புக்கொண்டு அழுத பிறகும் கூட மனம் இரங்காமல் இருக்கின்றானே… இது அவனது இயல்பே இல்லையே என்ற ஆற்றாமை அவளுக்குள் நெருஞ்சி முள்ளாய் குத்தி கொண்டிருந்தது.

வீட்டிலும் எப்போதும் கனமான மௌனம்… ஸ்ரீமதியை அடுத்த நாளே அழைக்க வந்த அருணோ,

“சாரிங்க…” என்று அவளது முகத்தை பார்க்காமல் கூறிவிட்டு செல்ல… அவளுக்கு இனிய அதிர்வு! அருணை இப்படி பார்ப்பதும் நன்றாகத்தானே இருக்கிறது என்று நினைத்து கொண்டாள்.

அடுத்து ஸ்ரீமதி சொன்ன வார்த்தைகளில் மேலும் அதிர்ந்தாள்.

“அக்கா… நான் மீதி இருக்க அரியரை முடிக்க போறேன்…” வெகு இயல்பாக கூறிவிட்டு அவளது முகத்தை பார்க்க… ஸ்ரீநிதி தான் இனிதாக உறைந்தாள்.

“ஹே மதி… எப்படி இப்படி?” பெரிய புன்னகையோடு அவள் கேட்க… வாய்விட்டு சிரித்தவள்,

“க்கா… தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல நெறி கட்டுதுக்கா…” பழமொழியை கூறிவிட்டு மீண்டும் சிரிக்க.

“ஏய்… என்னடி சொல்ற?” பழைய ஸ்ரீநிதியாக சிரித்தவளை பார்த்து.

“அதுவும் இல்லாம என்னை கம்பியுட்டர் கோர்ஸ் சேர்த்து விடறாங்களாம்… முடிச்சுட்டு வீட்ல இருந்தே வேலை பார்க்க போறேன் க்கா…” என்று கூறி கிளுகிளுத்தவளை வியந்து பார்த்தாள்.

“ஏய் மதி… உன் ஹஸ்பன்ட்டுக்கு என்னடி ஆச்சு?” ரகசியமாக அவள் கேட்க.

“உனக்கு தெரியாதா?” அவளையே திருப்பி கேட்க.

“அப்ப விவேக் கிட்ட கேளு…” என்று தம்பியை மாட்டி விட்டு அவள் பறந்து விட… அவளது ஆருயிர் சகோதரனோ அவளிடம் சிக்கவே இல்லையே.

பிசியாகவே அர்ஜுனுடன் சேர்ந்து சுற்றி கொண்டிருந்தவனை ஒருவாறாக பிடித்தாள்! ஆனால் அவள் பேசும் முன்னரே அவன் பொரிய துவங்கி இருந்தான்.

“அக்கா… காதல் சொல்லிட்டு வர்றதில்லை… ஆனா வந்துட்டா அதுக்கு நாம உண்மையா இருக்கணும்… பிரச்சனைய பேஸ் பண்ண தைரியம் வேண்டும்… எதிர்த்து நிற்கனும்… அவங்க நம்ம பேரன்ட்ஸ் தான் அவங்களுக்கு மரியாதை தரனும் ஆனா நம்மை நம்பி வந்தவங்களை அது ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் கைவிட்டுட கூடாது…”

“உண்மை புரியாம பேசாதே விவேக்…” ஹீனமான குரலில் அவள் கூற.

“என்னக்கா உண்மை… உடனே அம்மா அப்பா ஆட்டு குட்டின்னு ஆரம்பிக்காதே… உன்னுடைய காதலை காப்பாற்றி கொள்வது உன் கையில் தானே இருந்தது… அம்மா அழுதா என்ன? வருஷமெல்லாம் அழுதுடுவாங்களா? அந்த இனிஷியல் அதிர்ச்சியை அவங்க தாண்டி வர மாட்டாங்களா? கொஞ்சம் நீ ஸ்டாராங்கா இருந்திருந்தா பாஸ் எல்லாத்தையும் பார்த்துட்டு இருந்தது இருக்க மாட்டாங்களா? நீ தான் க்கா உன்னுடைய லைப்பை வேஸ்ட் செய்துட்ட…” கோபத்தில் கொதித்தவனை உணர்வற்ற பார்வை பார்த்தாள் ஸ்ரீநிதி.

“விவேக்… முதலில் நீ ஒரு பெண்ணாக அதிலும் வீட்டில் மூத்த பெண்ணாக, நடுத்தர வர்கத்தில் பிறந்த வீட்டின் மூத்த பெண்ணாக உணர்ந்து பார்… அவர்கள் காரணம் காட்டியதே உங்கள் இருவரையும் தான்… ஆனால் இப்போது நீ எனக்கு அட்வைஸ் செய்கிறாய்…” கண்களில் கண்ணீர் கோர்த்து கொள்ள.

“அக்கா… நான் அப்படி நினைக்கலை…” அவளது கண்ணீரை பார்த்த பதட்டத்தில் அவன் மறுத்து கூற முயல… அவள் கையை காட்டி தடுத்தாள்.

“வேண்டாம் விவேக்… என்னுடைய பார்வையை மற்றவர்களின் கண்களுக்காக இருளாக்கி கொண்டேன்… நான் முட்டாள் தான்…” என்றவளுக்கு அழுகை வரும் போல தோன்றியது… சுருண்டு வந்த துக்க பந்தை வாய்மூடி தடுத்தாள்.

“அக்கா… என்னுடைய ஆதங்கத்தை தான் நான் சொன்னேன்… நீ நல்லா இருந்திருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா?” பரிதாபமாக அவன் கேட்க.

“தவறே இல்லை விவேக்… ஆனால் கேள்வியின் நேரம் தான் தவறு… எனக்கான வாய்ப்புகள் எதுவும் மீதமில்லையே…” அழுகையை விழுங்கி கொண்டு கூறியவளின் வார்த்தைகளின் ஏக்கம் விவேக்கின் மனதை பிசைந்தது.

“அக்கா… பாஸ் கிட்ட பேசுக்கா…”

பரிதவிப்போடு கூறியவனை ஆழ்ந்து நோக்கினாள்.

“வேண்டாம் விவேக்… இறந்த குழந்தைக்கு நீ பெயர் சூட்ட நினைக்காதே…” என்று கூறியவள் விடுவிடுவென்று போக முயல… அவளை துரத்தி கொண்டு வந்தான் விவேக்.

“அக்கா இப்படியெல்லாம் பேசாதே… பாஸிடம் உட்கார்ந்து பேசினால் அனைத்தும் சரியாகிவிடும்…” மூச்சிரைத்து கொண்டே அவன் கூற… அவனை வெறுமையாக பார்த்தாள் ஸ்ரீநிதி.

அந்த பார்வை வலியோடு வேதனையையும் ஏக்கத்தையும் இயலாமையையும் ஆற்றாமையையும் ஒரு சேர சுமக்க… இவ்வளவு வேதனை இவளுக்கு தேவையா என்று தோன்றியது.

ஆனாலும் இவர்களுடைய காதல் விவேக்கை வசீகரித்தது… இதை போலவே தானும் வலிக்க வலிக்க காதலித்தால் தவறில்லை என்று தோன்றியது.

அர்ஜுன் கூறிய அந்த அதீத காதலின் வலி விட்டு சென்ற மௌனத்தின் அர்த்தத்தை மொழிபெயர்த்து கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி.

அவன் தொடர்பாக ஸ்ரீநிதியிடம் எதையும் பேச கூடாது என்று அனைவருக்கும் அர்ஜுன் தடையுத்தரவை பிறப்பித்ததை அவள் அறியவில்லை… விவேக்கோ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தான்.

முடிவாக இருவருமாய் எதையோ பேசி எப்படியோ முடிவுக்கு வந்து கொள்ளட்டும் என்று நினைத்து கொண்டு ஒன்றும் பேசாமல் போய்விட… ஸ்ரீநிதி மேலும் சோர்ந்து போனாள்.

முன்னாள் காதலிதான்… அதற்காக வீட்டிற்கு கூடவா அழைக்க கூடாது என்ற கோபம் வேறு!

மேக்சிமஸில் ஒரு மாத வேலைகளை முடித்து கொண்டு அவள் விடைபெறுவதற்காக அவன் முன் வந்து நின்றாள்.

மனதில் தவிப்பு… என்னை விட்டு போகாதே என்று சொல்லிவிட மாட்டானா என்ற தவிப்பு!

அர்ஜுனும் அதே நிலையில் இருந்தான்.

உன்னை விட்டு போக மாட்டேன் என்று அவள் கூற மாட்டாளா என்ற ஏக்கம்… ஆனால் அவளை தடுத்து வைத்திருப்பதே தனது வார்த்தைகள் தான் என்பதும் புரியாமலில்லை… ஆனால் மிக நீண்ட பிரிவு அவனுக்கு உணர்த்தி சென்றதெல்லாம் ஒன்று தான்.

பொறுமை!

தானாக கனியாததை இவ்வளவு தூரம் இழுத்து வந்து விட்டான்.

இனி கொஞ்ச தூரம் தானே!

முதலில் விவேக்கை ப்ராஜக்ட் என்று மேக்சிமஸுக்கு இழுத்து… அதன் பின் சீயஸ்ஸில் இருந்து சாப்ட்வேர் உருவாக்கம் என்று கூறி ஸ்ரீநிதி தான் வேண்டும் என்று பிடிவாதமாக அவளையும் அழைத்து வந்து, அவளுடைய நிலையை உணர வைத்து, அவனை அவள் தொலைத்ததை போல அவனும் வேறு திருமணம் செய்திருந்தால் என்னவாகி இருக்குமென்று புரிய வைப்பதற்குள் அவன் பாடு திண்டாட்டமாகி இருந்தது.

இதை விவேக்கிடம் கூற… அவனால் சிரிப்பை கட்டுபடுத்தவே முடியவில்லை… தமக்கை குறித்த அழுத்தங்கள் எல்லாம் மறைய வாய்விட்டு சிரித்தவன்.

“பாஸ்… நீங்க இம்புட்டு வில்லத்தனம் செய்வீங்கன்னு இப்பதான் எனக்கு தெரியுது…”

“என்ன மாப்பு பண்றது? லவ்வுக்கு வில்லியே உங்கக்காவா போயிட்டாளே…” என்று அவனுமே சிரித்தாலும் அவனது பிரிவாற்றாமை அவனது முகத்தில் தெளிவாக தெரிய.

“பாஸ்… பசலை நோய் பசலை நோய்ன்னு சொல்வாங்க… அது கண்டா உங்களை மாதிரிதான் இருப்பாங்களா?” வேண்டுமென்றே அவனை கலாய்த்து விட்டு போனவனை பார்த்து சிரித்தான் அர்ஜுன்.

இப்போதும் அதே புன்னகை அவனது முகத்தில் படர… அதை கண்ட ஸ்ரீநிதிக்கு ஒருவாறாக துணிச்சல் வந்திருந்தது.

“நான் கிளம்பறேன்… உனக்கு கொஞ்சம் கூட பீலிங்க்ஸ் இல்லையா?” கோபமாக அவள் கேட்க.

“நீ என்னை விட்டு போய் அஞ்சு வருஷமாகுது… புதுசா என்னமோ போற மாதிரி ஒரு சீனை காட்டற…” புன்னகை மன்னனாக அவன் கூறியது அவளது தன்மானத்தை சீண்டி விட

“சரி… நான் கிளம்பறேன்…” என்று அவளது ஹேன்ட் பேகை எடுத்து கொண்டு மணியை பார்த்தாள்… மாலை மணி ஆறு என கடிகாரம் காட்ட… நாளை முதல் இவனை எப்படி காண்பது என்ற தவிப்பு அவளை தடுத்தது.

மீண்டும் அவன் புறம் திரும்பி.

“அட்லீஸ்ட் உன் வீட்டுக்கு கூடவா இன்வைட் பண்ண மாட்ட?” ஏக்கமாக அவள் கேட்க.

“வீட்டுக்கு கூட்டிட்டு போன்னு நீ கேட்டா அழைச்சுட்டு போவேன்…” சற்றும் அலட்டி கொள்ளாமல் அவன் கூற… அவள் கொலைவெறியோடு பார்த்தாள்.

எல்லாவற்றையும் மறந்து விட்டு அவனது தோளில் சாய்ந்து கதற வேண்டும் போல தோன்றியது… நீ எனக்கு மட்டுமே சொந்தம் என்று கூறி! ஆனால் அதற்கு அவனது தோளை கொடுக்க வேண்டுமே.

“நீ ரொம்ப மாறிட்ட அர்ஜுன்…” மெல்லிய குரலில் வேதனையுடன் அவள் கூற.

“நீ என்னை மாத்திட்டடி…” அவனது இருக்கையிலிருந்து மெதுவாக எழுந்து அவளருகில்… மிக அருகில் வந்து.

“இப்ப உன் முன்னாடி இருக்கறது ஸ்ரீநிதியோட புருஷன் இல்லைல்ல…” கிசுகிசுப்பாக ஆனால் அழுத்தமாக அவன் கூற… அதிர்ந்து பார்த்தாள்!

உண்மைதானே!

ஆனால் எப்படி அது உண்மையாக இருக்கலாம்… இவன் எனக்கு மட்டுமே… அர்ஜுன் என்னுடையவன் என்று மனம் கிடந்து துடித்தது.

“இல்ல அர்ஜுன்… என்னோட ஹஸ்பன்ட் நீ தான்… நீ மட்டும் தான்… அது என்றைக்குமே மாறாது…”

உடையாமல் இருக்க வேண்டும் என்று அவள் லட்சம் முறை மனனம் செய்ததெல்லாம் மறந்து போனது அவளுக்கு.

அவளையும் அறியாமல் கண்கள் உடைப்பெடுத்தது… கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது… முயன்று தன்னை தேற்றி கொண்டவள் நிமிர்ந்து அவனை பாராமல்.

“கிளம்பறேன்…” என்று கூறி போக முயல… அவளது கையை பிடித்து தடுத்தான்.

என்னவென்பதை போல அவள் திரும்பி பார்க்க.

“வா… வீட்டுக்கு போலாம்…” என்று அவன் அழைக்க… அவளது முகம் ஒரு கணம் ஒளிர்ந்தது.

“நிஜமாவா?” அவள் நம்பாமல் கேட்க.

“ம்ம்ம்… ஆமா…” என்று அவன் புன்னகையோடு கூறினான்.

அவளை முன்னே விட்டு செல்பேசியை எடுத்தவன்.

“மாமா… ஸ்ரீநிதியை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்…” அனுமதியை கேட்காமல் தகவலாக கூற… ஒரு கணம் மௌனமானார் புருஷோத்தமன்.

“சரிங்க மாப்பிள்ளை… நாளைக்கு நாங்க வர்றோம்…” என்று கூறியவரின் குரலில் சத்தியமாக கசப்புக்கள் எதுவும் மீதமிருக்கவில்லை.

நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே!

*****

காரில் கனத்த மௌனம் நிலவியது… இதமான ஏசியின் குளிரிலும் அவளுக்கு உள்ளுக்குள் வெப்பமாக இருந்தது… நகர்ந்து கொண்டிருந்த காட்சிகளோ மெலிதாக ஒலித்து கொண்டிருந்த பாடலோ அவளை சற்றும் பாதிக்கவில்லை.

எங்கோ பார்த்து கொண்டிருந்த பார்வையில் வெறுமை… இயலாமை… ஆற்றாமை!

யாரை குற்றம் சாட்டி என்ன பயன்? அர்ஜுனுடனான தனது வாழ்க்கை அல்லவா தொலைந்து விட்டது… எவ்வளவு அழகான வாழக்கையை… புரிந்தலான துணையை இழந்திருக்கிறாள்.

நினைக்கும் போது நெஞ்சம் வலித்தது!

அதை அவனிடம் வெளிப்படையாக கூற முடியாது… அவனுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது… மனைவி இருக்கிறாள்… அதிலிருந்து அவனால் வெளிவர முடியாது.

தான் இழந்தது இழந்தவை தான் என்று நினைக்கும் போதே கண்கள் மழையை பொழிய ஆரம்பித்தது… முகத்தை மூடி கொண்டு அழ ஆரம்பித்து இருந்தாள்.

அவனும் அவளை தேற்றவில்லை… அவளும் அதை எதிர்பார்க்கவில்லை… எதிர்பார்க்கும் உரிமை இருந்தால் அல்லவா அதை நினைக்க முடியும் என்ற எண்ணம் வந்து அவளை கொன்றது.

தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று எண்ணி கண்ணீரை கொட்டி கொண்டிருந்தாள் அவள்.

அனைத்தையும் விட… தான் காதலித்த… தன்னை தீண்டிய கைகளுக்கு சொந்தமானவனுக்கு வேறொருத்தி சொந்தமாக இருக்கிறாள் என்பதை முற்றிலுமாக ஜீரணிக்க முடியவில்லை.

காணாமலே இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதோ?

அவனை நினைத்து கொண்டே வாழ்கையை கழித்திருப்பேனோ?

கண்களை துடைத்து கொண்டு அவள் நிமிரவும் பாடி கொண்டிருந்த பாடல் மாறவும் நேரம் சரியாக இருக்க.

‘நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை… ’ என்று நேரம் காலம் தெரியாமல் வாலி பட பாடலை பாடி வைத்த ப்ளேயரை கொலைவெறியாக முறைத்தாள்… அதே முறைப்போடு அவனை பார்த்தவள், சட்டென்று நிறுத்தினாள்.

“இப்ப எதுக்கு ஆப் செய்த?” உதட்டின் ஓரமாக வழிந்த குறுகுறுப்பான புன்னகையோடு அவன் கேட்டு விட்டு மீண்டும் ஆன் செய்ய… பாடல் தொடர.

‘இன்று முதல் இரவு… ’ என்று தொடர… கோபத்தில் முகம் சிவந்து, வேகமாக அடுத்த பாடலை மாற்றினாள்.

“நல்லாத்தானே இருக்கு…” என்று குறைபட்டவனை திரிபுரம் எரித்த சிவனை போல வெப்ப பார்வை பார்த்தாள்… அவள் இருக்கும் மனநிலையில் அந்த பாடல் மிகுந்த கடுப்பை ஏற்படுத்தியது.

‘மயிலு மயிலு மயிலம்மா மல்லுகட்டலாமா… ’ என்று அடுத்த விஐபி பாடல் ஆரம்பிக்க.

“ரொம்ம்ம்ம்ப நல்ல கலெக்ஷனா தேடி தேடி எடுத்து வெச்சு இருக்க… உன் டேஸ்ட் மாறவே மாறாதா?” கடுப்பாக ஆரம்பித்தவள் ஆதங்கமாக முடிக்க.

ஒரு நிமிடம் அவளை கூர்ந்து பார்த்தவன்… வாய்விட்டு சிரித்தான்.

“தேங்க்ஸ் ரசகுல்லா…” என்று இடைவெளி விட்டவன்.

“என்னோட டேஸ்ட் இப்படித்தான்னு மறக்காம இருக்க பார்த்தியா… அங்க நிற்கற நீ…” என்று கட்டை விரலை தூக்கி காட்ட.

அவளுக்கு உள்ளுக்குள் பிசைந்தது… இருக்கின்ற மனநிலையில் இன்னும் இவனது மனைவியை வேறு பார்க்க வேண்டுமா? தன்னால் அது முடியுமா? ஏதோ ஒரு வேகத்தில் அவனிடம் அழைத்து போக கூறியிருந்தாலும் இப்போது சத்தியமாக அது முடியுமென்று தோன்றவில்லை.

“நான் உன் வீட்டுக்கு வரலை அர்ஜுன்… என்னை இறக்கி விட்டுடு…” கலங்கிய கண்களுடன் அவள் கூற… அவளை கூர்ந்து பார்த்தான்.

கார் நீலாங்கரையை தொட்டிருந்தது… கடற்கரை சாலையில் போக்குவரத்து குறைவாக இருக்க,வேகமெடுத்து இருந்தது அந்த மேபெக்!

“அர்ஜுன்… ப்ளீஸ்… என்னை இறக்கி விடு…” கண்களில் நீர் வழிய அவனை வற்புறுத்தியவளை உணர்வற்ற பார்வை பார்த்தான்.

“பாதியிலேயே இறக்கி விட்டுட்டு போக நானொன்றும் ஸ்ரீநிதி கிடையாது… அர்ஜுன்… !” என்று இடைவெளி விட… அவளது முகம் அதிர்ச்சியை சுமந்து கொண்டு அவனை இயலாமையுடன் பார்த்தது.

“இந்த அர்ஜுன் ஒன்றை நினைத்து விட்டால் அதில் இறுதி வரை நிலைத்திருப்பான் என்பதை நீ புரிந்து கொள்ளவே இல்லை ஸ்ரீநிதி…”

அழுத்தமான குரலில் கூறியவனை அவனது மனைவியை காரணம் காட்டி பேச முயன்றவளை கையை நீட்டி தடுத்தான்.

“அதற்கு உனக்கு உரிமை கிடையாது ஸ்ரீநிதி…” மிகவும் உறுதியாக முடித்து விட்டவனை இன்னதென்று கூற முடியாத உணர்வோடு பார்த்தாள்.

“சரி… எனக்கு எந்த உரிமையும் கிடையாது உறவும் கிடையாது… ஒப்புகொள்கிறேன்!… நான் எந்த உறவையும் ஸ்தாபிக்க வர மாட்டேன் அர்ஜுன்… அவையெல்லாம் முடிந்து விட்ட பக்கங்கள் என்று எனக்கும் தெரியும்…” என்று வலியோடு கூறியவள்.

“என்னை இறக்கி விடு… என்னால் உன்னுடைய வீட்டிற்கு வர முடியாது…” உறுதியான குரலில் அவள் கூறினாலும் நடுங்கியது அவளுக்கு!

“ஏன்?” அவனது ஒற்றை சொல் கேள்வி அவளை நிமிர்ந்து பார்க்க வைத்தது… அவளது முகத்தில் தாண்டவமாடியது கோபமா? எரிச்சலா? இயலாமையா? கூற முடியவில்லை.

“என்னால் உன்னுடைய மனைவியை இயல்பாக பார்க்க முடியுமென்று தோன்றவில்லை…” வெறுமையான பார்வையுடன் அவள் கூற.

“அதுதான் ஏன்?”

“டேய் அறிவுகெட்டவனே… எப்படிடா அவளை நான் பார்க்க முடியும்? உன்னை யாருக்கோ தாரை வார்த்து கொடுத்ததும் போதாமல் அவளை வேறு பார்க்க வேண்டுமா? எப்படி அது என்னால் முடியும்?” கோபத்தில் கொதித்து வார்த்தைகளை கொட்ட ஆரம்பித்தவள் முடிக்க முடியாமல் அழுகையில் வெடித்தாள்.

எதுவுமே பேசாமல் எந்த உணர்வையும் காட்டாமல் அவளை பார்த்தான் அர்ஜுன்… அவனுக்கு தேவையானதும் இதுதானே!

அவளது அழுகை அவனை வலிக்க செய்தாலும் அவள் இவ்விதமாக வெளிப்படையாக வெளிவர வேண்டுமென்றுதானே அவன் விரும்பியதும்!

அழுது கொண்டிருந்தவளை அவனது குரல் இடையிட்டது.

“இறங்கு டெடி…” அவன் அழைக்க… கார் நின்றிருந்தது ஒரு பங்களாவின் முன்!

கண்களை துடைத்து கொண்டவள், டேஷ்போர்டில் இருந்த வெட் டிஸ்யூவை எடுத்து அழுத்தமாக முகத்தை துடைத்தாள்… மூச்சை இழுத்து விட்டவளுக்கு சற்று ஆசுவாசப்பட்டது.

“இந்த ஏழையின் சிறிய குடிலுக்கு இந்த தேவதையை வரவேற்கிறேன்…” என்று ஆங்கிலத்தில் கூறியவன்… சற்று தாமதித்து.

“நம்ம வீடு…” என்று புன்னகைக்க.

“நம்ம வீடில்லை..உன் வீடுன்னு சொல்லு…” பழைய நினைவில் அவள் கூறும் போது இதழோரம் மெல்லிய சிரிப்பு… அதுவரையில் அழுது கரைந்ததை மறந்து… !

“நீ நான் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது… நாமென்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்…” என்ற கலைஞரின் கவிதையை மீண்டும் படிக்க… பழைய நினைவுகளின் தாக்கத்தில் இருவர் முகத்திலும் புன்னகை!

நீலாங்கரையில் கடற்காற்றுடன் கூடிய பெரிய பங்களா… மிகவும் நவீனமாக காட்சியளித்த அந்த பங்களாவை பார்த்து பெருமையாக கூட இருந்தது.

இது முழுக்க முழுக்க அர்ஜுனின் உழைப்பல்லவா!

அவளது பார்வையில் தெரிந்த அந்த பெருமிதத்தை பார்தவனுக்குள் மகிழ்ச்சி ஊற்று!

இது அவளுக்கு சொந்தமா என்பதை கூட அறியாமல் அவனுக்காக மட்டுமேயான அவளது பெருமிதம் அது என்பதை உணர்ந்தவனுக்குள் அலையடித்தது!

“லான் ரொம்ப அழகா இருக்குப்பா…” சிலுசிலுவென வீசிய காற்றை அனுபவித்தபடியே அவள் கூற.

“இந்த இடத்திலேயே இருந்துடலாம்ன்னு உனக்கு தோன்றவில்லையா டெடி?” அவளை ஆழ்ந்து பார்த்தவாறு அவன் கேட்ட கேள்வியில் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் தாள முடியாத வலி.

“என்னுடையது கடைசி வரை காதலாகவே இருக்க வேண்டும் அர்ஜுன்… அது கள்ளகாதலாக அறியப்பட வேண்டாம்… முடிந்து போனவை போனவை தான்… இதற்கு மேல் இதை பற்றி பேசாதே…” வெகு அழுத்தம்திருத்தமாக கூறிவிட்டு வீட்டை நோக்கி போனாள்.

பூட்டியிருந்த வீட்டை திறந்த அர்ஜுனை பார்த்து.

“எங்கே உன் ஒய்ப்? அவங்களை கண்ல காட்டவே மாட்டேங்கற…” என்று சுற்றிலும் பார்க்க… அங்கு வேறு யாரும் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை… தேடிக்கொண்டிருக்கும் போதே பின்னால் ஏதோ குறுகுறுவென இருக்க… திரும்பியவள் அதிர்ந்தாள்.

வெகு நெருக்கமாக அர்ஜுன்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 24

பெரிதாய் ஒன்றுமில்லைஈரகூந்தலை – உன்விரலால் சிக்கெடுத்து விடுநான் நனைய நனைய!“அர்ஜுன்... என்ன செய்யற?” கலவரமாக ஒலித்ததோ அவளது குரல்!“ம்ம்ம்... சொல்லனுமா? உனக்கே தெரியாதா?” அழுத்தமான குரலில் கூற... மின்சாரம் தாக்கியது போல உணர்ந்து நிமிர்ந்தாள் ஸ்ரீநிதி.“வேணாம் அர்ஜுன்... இது சரியில்லை...” எச்சரிக்கையான…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்