arrow_back
கலாப காதலா அத்தியாயம் 5
கலாப காதலா chevron_right பகுதி 5 / 24

அத்தியாயம் 5

visibility 569
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (5 மதிப்பீடுகள்)
பகிர்

உறக்கம் வாய்க்காத இரவுகளில்

கை படரும் இடமெங்கும் மிஞ்சுகிறது

தலையணையும் நீயில்லா மெத்தையும்

கண்ணாடி வழியே முகம்பார்த்து

தேநீர் வேண்டுமாவென வேண்டியதை

வேடிக்கைப்பார்க்கிறது தனிமை!

உன் நேசத்தின் வெளிப்பாடாய்

வீடு நிறைந்திருக்கிறது

எனக்கு பிடித்தவைகள் நீ இல்லாது!

உனக்கும் எனக்குமான நீள்பார்வையின்

குறுக்கே சுவர் வருகையில் பார்த்திட்ட

கடைசிப்பார்வையும் துளி நீரும்!

திசையெங்கும் பூத்திருக்க நினைவால்

தினம் ஒரு சூடு வாங்கிக்கொள்கிறேன்

அடுக்களையில் நான்!

அறிமுகப்படுத்திவிட்டு இருவரின் முகத்தையும் பார்த்த கோபாலகிருஷ்ணன் குழம்பினார்… இருவருமே அதிர்ந்த நிலையில் இருந்ததை உணர்ந்து கொண்டவருக்கு காரணம் தெரியவில்லை… ஒருவேளை என்று நினைக்க தோன்றிய மனதை அர்ஜுன் மேல் இருந்த மரியாதையால் அழித்தார்.

“சர்…” சற்று அழுத்தமாக அழைத்த கோபாலகிருஷ்ணனின் அழைப்பில் மீண்ட அர்ஜுன்.

“ப்ளீஸ் டேக் யுவர் சீட் மி… மிசஸ் ஸ்ரீநிதி…” வாக்கியத்தை முடிக்கும் முன்பே குரல் தடுமாறியதோ? என்று நினைக்கும் முன்பே தன்னுள் எழுந்த உணர்வுகளை மொத்தமாக துடைத்திருந்தான்.

அவனை பொறுத்தவரை உணர்வுகளை காட்ட உறவுமுறை அவசியம்… உரிமை அவசியம்!அதை இழந்த நிலையில் அதை பற்றி நினைக்கவும் அவனுக்கு பிரியமில்லை.

அலுவலக குரலில் உரையாட ஆரம்பித்தான்.

ஆனால் அவன் முன் அமர்ந்திருந்த ஸ்ரீநிதியால் அந்த நேரத்தின் கனத்தை சற்றும் தாளமுடியவில்லை… சற்று நேரத்திற்கு முன் மேலாளர் மூலமாக கேள்விப்பட்ட அவனது குடும்ப வாழ்க்கையும் அவனது மனைவி என்ற பிம்பமும் அந்த பிம்பத்தின் மேல் அவன் கொண்ட பிரியமும் அவளை உயிரோடு எரிக்க போதுமானதாக இருந்தது.

எப்படி இருந்தாலும் இழந்தவை இழந்தவை தானே… இனி என்ன இருக்கிறது இந்த வாழ்வில்? அவளையும் அறியாமல் பச்சாதாபம் சூழ… கண்களில் நீர் சூழ பார்த்தது.

“மிசஸ் ஸ்ரீநிதி… ஆர் யூ ஓகே…” தடுமாறிய அவளது நிலையை பார்த்து ராமநாதன் கேட்க… அவரை பார்த்து.

“ஜஸ்ட் எக்ஸ்கியுஸ் மீ சர்… இங்க ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு?” கமறிய குரலில் கேட்ட ஸ்ரீநிதியை வித்தியாசமாக பார்த்தார் கோபாலகிருஷ்ணன்… இந்நேரம் வரை அதிகம் பேசவில்லை என்றாலும் அழகான புன்னகையோடு பேசிக்கொண்டிருந்த பெண்ணா இவள் என்று நினைக்க தோன்றியது!

அவளின் கேள்விக்கு அர்ஜுன் அவனது ரெஸ்ட் ரூமை காட்ட… அந்த நேரத்தில் தனிமை அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது… யார் முன்னிலையிலும் அவளது முகத்தை காட்ட விரும்பவில்லை.

அவளது நிலை அவனுக்கும் புரிந்து தானிருந்தது… அவளது வெளரிய முகமும் ஓய்ந்த தோற்றமும் அவனது மனதை குடைந்தது.

ரெஸ்ட் ரூமினுள் சென்ற ஸ்ரீநிதியின் நிலையோ படு மோசமாக இருந்தது… அவளால் சப்தமாக கூட அழ முடியவில்லை… வெளியே கேட்டுவிடுமோ என்கிற பயம்.

வாயை இரு கைகளாலும் மூடி கொண்டவளுக்கு கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் கொட்டியது… மறந்து விட்டதாக வெளியில் காட்டி கொண்டவனை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் வழியில்லாமல் செய்த விதியின் சதியை எண்ணி கண்ணீர் விடத்தான் அப்போது முடிந்தது அவளால்.

மனதில் பூத்த முதல் பூ.

உதித்த முதல் நிலவு!

அவளுடைய முதல் கனவு!

ஒரே நொடியில் உதறிவிட்டு போயாக வேண்டிய கட்டாயம் வந்ததை விதி என்பதா? சதி என்பதா?

கண்ணீர் வற்றுமட்டும் அழுதவளுக்கு அப்போதுதான் அது அவனது அலுவலகம் என்பதே கவனத்திற்கு வந்தது… அவள் தான் அனைத்தையும் மறந்திருந்தாளே!

கையை திருப்பி கடிகாரத்தை பார்த்தவள்… முகத்தை தண்ணீர் கொண்டு அறைந்தாள்… சில்லென்ற நீர் பட மனம் மெதுவாக வசத்திற்கு வந்தது.

கவனமாக தன்னை ஆராய்ந்து விட்டு மெளனமாக வந்தமர்ந்தாள்… முகம் தெளிவாக இருக்க… தான் கண்டதெல்லாம் கனவோ என்று எண்ண தோன்றியது அர்ஜுனுக்கு!

“சாரி ஜென்டில்மேன்… லேட் ஆகிடுச்சா?” கோபாலகிருஷ்ணனை பார்த்து கேட்டவாறே வந்தமர்ந்தவளை நுணுக்கமாக ஆராய்ந்தான் அர்ஜுன்.

“நோ ம்மா… ஜஸ்ட் வேற டிஸ்கஷன்ல இருந்தோம்…” என்று வசதியாக அவள் புறம் திரும்பி அமர்ந்து கொண்டு பதிலை கூற… அர்ஜூனால் அவ்வளவு எளிதாக அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியவில்லை.

அவளிடம் பேச விடாமல் எதுவோ தடுத்தது… அவனையும் அறியாமல் கோபம் வந்தது.

நினைத்ததெல்லாம் நடந்திருந்தால்.

நினைவே சுகமாக இருந்தது… ஆனால் உண்மை அவனை சுட்டது.

“ஆக்சுவலா இப்ப உங்க வேலை பற்றி கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணுங்கம்மா… அப்போதான் நாங்க கேட்ச் பண்ண முடியும்…” கோபாலகிருஷ்ணன் கேட்க தெளிவாக நிமிர்ந்து அமர்ந்தவள் அவளது வேலையை விளக்க ஆரம்பித்தாள்.

“சர்… இப்போ உங்க தேவை என்னன்னு நாங்க முதல்ல தெரிஞ்சுக்கணும்… அதுக்கப்புறம் டீட்டைல்ஸ் எல்லாம் கலெக்ட் செய்யணும்… அதை அப்புறம் manupulate செய்து தான் உங்க வேலைய ஒர்க் அவுட் பண்ண ஆரம்பிப்பாங்க டீம்ல…” என்றவள் சிறு இடைவெளி விட்டு.

“அதுக்கப்புறம் சார்ட்டிங் செக்கிங் எல்லாம் முடிஞ்சு ப்ராடக்ட் டெமோக்கு உங்களை கூப்பிடுவாங்க… நீங்க நினைச்ச மாதிரி ப்ராடக்ட் வந்திருக்கா இல்லையான்னு நீங்க சொல்லணும்… அதுக்கப்புறம் பைனல் டச் அப் லாம் முடிஞ்சு உங்க ப்ராடக்ட்ட உங்க கிட்ட டெலிவரி பண்ணிடுவோம்…” என்று இடைவெளி விட்டவள்.

“இங்க நான் ப்ராடக்ட்ன்னு சொன்னது உங்க சாப்ட்வேர்…” தெளிவாக எடுத்துரைக்க.

“ம்ம்ம்… ஓகே…” தலையாட்டினான் அர்ஜுன்… உடன் கோபாலகிருஷ்ணனும்!

“முதல்ல உங்க தேவை என்னன்னு சொல்லுங்க சர்…” நோட்ஸ் எடுத்து கொள்ள வாகாக அமர்ந்து கொண்டு அர்ஜுனையும் அவரையும் பார்க்க… ஒரு கணம் அவனது கண்ணில் குறும்பு மின்னி மறைந்தது.

“நீங்க தான் ஸ்ரீநிதி…” குறும்பாக அர்ஜுன் கூற… அதிர்ந்து பின் நிமிர்ந்து அவனை பார்த்தாள்… கோபாலகிருஷ்ணனனோ அர்ஜுனின் குறும்பை எண்ணி சிரிப்பை அடக்கி கொள்ள.

“ஏன் இந்த ஷாக் மிசஸ் ஸ்ரீநிதி… உங்க சர்விஸ் வேண்டும் என்றுதானே சொன்னேன்…” ஆங்கிலத்தில் அவன் சிரித்து கொண்டே கூற… இழுத்து பிடித்த மூச்சை வெளியே விட்டாள்.

இவனது குறும்பு மாறவே மாறாது!

அதை நினைத்தவளுக்கு உதட்டோரம் மெல்லிய புன்னகை மலர்ந்தது! அதை கண்டுகொண்டவன் மனதில் சாரல்… ஆனால் அந்த சாரல் இப்போது அவனுக்கு சொந்தமா என்று எண்ணிப்பார்த்தவனுக்கு பதில் அவ்வளவு உவப்பாக இல்லாததில் கோபமும் வந்தது.

அவனது இயல்பான குணத்தை விட்டு கொடுக்க முடியாமலும் அவள் மேல் கொண்ட கோபத்தை தீர்த்து கொள்ள முடியாமலும் இருதலை கொள்ளி எறும்பாக தவித்தான்!

“அப்கோர்ஸ்… வி ஆர் அட் யுவர் சர்விஸ்…” என்று சட்டென்று கூறிவிட்டவள் நாக்கை கடித்து கொண்டாள்… பழகிய காலத்தில் இரட்டை அர்த்தத்தில் கலாய்ப்பதில் அர்ஜுனுக்கு நிகர் அவனே.

கன்னங்கள் கூசும் அளவுக்கு கலாய்த்து சிவக்க செய்து விடுபவனுக்கு இது போன்ற வார்த்தைகள் என்றால் அல்வா துண்டல்லவா… அவள் நினைத்தது போலவே அவனது முகத்தில் மின்னிய குறும்பு அதையையே கூற.

“ஆண்டவா… இனிமே பார்த்து பேசு ஸ்ரீநிதி… இல்லைன்னா இங்கயும் மௌனவிரதம் இருந்துடு… அவன் பார்வையே சரியில்லையே…” மனதுக்குள் புலம்ப ஆரம்பித்து இருந்தாள்.

இருவரின் பூடகமான பேச்சை பற்றி அறியாத கோபாலகிருஷ்ணன் அவரது கருத்துக்களை கூறி கொண்டிருக்க… ராமநாதன் அவரது தரப்பு கருத்துக்களை தெரிவித்து கொண்டிருந்தார்.

“நம்ம மேக்சிமஸ் அதிகமான எப்எம்சிஜி பொருட்களுக்கு சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டா இருக்கோம்மா… பொருட்களை உற்பத்தி செய்றவங்க கிட்ட இருந்து வாங்கி அதை நம்ம இன்வெண்டரில வைத்து… அதை ரீடெயில் கடைங்களுக்கும் ஸ்டாக்கிஸ்ட்களுக்கும் சப்ளை பண்ற வரைக்கும் நம்ம கண்காணிப்பு இருக்கும்… இப்போ சர் என்ன நினைக்கறாங்கன்னா எல்லா ஊர்கள்ல இருக்க ரீட்டெயில் கடைங்களோட சேர்ந்து நாமே ஆன்லைன்ல சில்லறை வணிகம் செய்யலாம்ன்னு நினைக்கறாங்க… அதோட இந்த ப்ராசஸ்சை எளிமைப்படுத்தற மாதிரி சாப்ட்வேர் வேணும்…”

அவர் தெளிவாக எடுத்துரைத்ததை கவனமாக குறித்து கொண்டாள் ஸ்ரீநிதி… உள்ளுக்குள் மிகவும் பெருமையாக இருந்தது… இவ்வளவு பெரிய வெற்றியை இவன் சாதித்து இருக்கிறான் என்ற தகவல் அவளை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

“நமக்குள் உறவு என்பது முடிந்து போன கதையாக இருந்தால் என்ன அர்ஜுன்?… உன்னுடைய வெற்றியை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்…” மனதில் கூறிக்கொண்டவளுக்கு அனைத்து துயரங்களும் மறைந்து மனம் லேசானது… அவனது ஆரம்பகால சிரமங்களை எல்லாம் உடனிருந்து பார்த்தவள் அல்லவா…

“வேற ஏதாவது டீட்டைல்ஸ் வேண்டுமா ஸ்ரீநிதி?” அவர் கேட்க.

“எஸ் சர்… கம்ப்ளீட் கம்பெனி ப்ரோபைல் வேண்டும்… எனக்கு யாராவது தனிப்பட்ட உதவியாளர் வேண்டும் நான் விவரங்களை கேட்டு பெறுவதற்கு…” என்று அவள் கூற.

“இந்த கம்பெனியை பற்றி முழு விவரம் வேண்டுமென்றால் அது என்னிடம் தான் கிடைக்கும்… முடிக்கும் வரை என்னுடைய கேபினில் அமர்ந்து கொள்ளுங்கள்… தோன்றும் சந்தேகங்களை அப்போதே தீர்த்து கொள்ள முடியும் மிசஸ் ஸ்ரீநிதி…” என்று இயல்பாக கூற… கோபாலகிருஷ்ணனின் முகம் யோசனையாக சுருங்கியது!

அவ்வளவு எளிதாக இவரை அணுகவே முடியாதே… அதுவும் பெண்கள்… வாய்ப்பே இல்லையே என்ற எண்ணம் அவருக்குள் ஓடி கொண்டிருந்தது.

“ராமநாதன் சர்… பைலை கொடுங்க…” ராமநாதனிடமிருந்து வாங்கியவன் அவசரமாக கையெழுத்திட.

“சர்… மேடமோட ஷேர் ப்ராபிட் அவங்க அக்கௌன்ட்ல அப்டேட் செய்தாச்சு…” அவனிடம் கூற வேண்டிய தகவலை அவர் கூற… கையெழுத்திட்டு கொண்டிருந்த அர்ஜுன் சட்டென்று நிறுத்திவிட்டு… சிறு யோசனைக்கு பின் தொடர்ந்தான்.

ஓரக்கண்ணில் ஸ்ரீநிதியை பார்க்க… அவள் அதிர்ந்து அமர்ந்திருப்பது தெரிய… அவனது மனம் வலித்தது! வேறு வழியில்லை… எப்படி இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆயிற்றே!

“ஓகே சர்…” என்று கூறி அவரை அனுப்பிவிட்டு… கோபாலகிருஷ்ணனிடம் திரும்பியவன்.

“கிருஷ்ணன் சர்… நீங்க போய் உங்க ஒர்க் கண்டினியு பண்ணுங்க… ஐ ல் டேக் கேர் ஆப் ஹெர்…” என்று நேரடியாக பேசி அவரையும் அனுப்பினான்.அவர்கள் வெளியே கிளம்பும் வரை எதை பற்றியும் நினைக்காமல் இருந்த ஸ்ரீநிதிக்கு அந்த அறையில் அவனும் அவளும் மட்டுமே என்ற நிலை பெரும் நடுக்கத்தை தந்தது.

அதற்கேற்றார் போல… அவன் கனைத்து கொண்டு அவளை பார்க்க… ஸ்ரீநிதி முகத்தை நிமிர்த்தவே இல்லை… கையில் இருந்த பேனாவை சுற்றி கொண்டே கைக்கு வந்ததை அந்த பேப்பரில் கிறுக்கி கொண்டிருந்தாள்.

மனம் தடுமாறுவதையும் தவிர்க்க முடியவில்லை… அந்த இடத்தை விட்டு போக முடியவில்லை… தவித்து கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்து.

“ம்ம்ம் அப்புறம் டெடி… ஹவ் ஆர் யூ?”

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 6

நிலவோடு பனி பொழிந்தமொட்டைமாடி இரவில்காதுவழிகுளிர் இறங்குகிறதென்றேன்!இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சமெனநெருங்கிமூச்சுக்காற்றில் அனல்மூட்டினாய்இல்லையில்லை இல்லையில்லைஅறைக்குச்செல்லலாமென வினவஉன் காலகற்றி நடுவிலிருத்தினாய்அலைபேசியில் பேசிப் பேசிகாதுமடல் சூடேறுகிறதென்பதன்அர்த்தம் புரிகிறதா உனக்கு?மிகவும் இயல்பாக அவளை அவன் செல்லமாக அழைத்த பெயரை கொண்டு அழைக்க... ரத்த ஓட்டம் தலைகீழானது போன்ற…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்