arrow_back
காக்கை சிறகினிலே அத்தியாயம் எட்டு
காக்கை சிறகினிலே chevron_right பகுதி 8 / 20

அத்தியாயம் எட்டு

visibility 4
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

பெற்றவர்கள் செய்தவினை பிள்ளைகளை சேருமடி!

முற்பகலின் பாவங்களோ பிற்பகலில் பேசுதடி!

சேர்த்தபெரு பாவமூட்டை காவு ஒன்று கேட்குதடி!

வந்துவிட்ட காலதேவன் வினைமுடிக்காமற் போவானோ?

நடந்த அநியாயத்திற்கு அவளா காரணம்? இல்லையே! அதில் சிறு பங்கு கூட அவளுக்கு இல்லையே! இதுதான் விதி என்பதா? அப்படியே என்றாலும் தன்னை இப்படி அழைத்து வந்தது எப்படி நியாயமாகும்? அதுவும் அன்புக்கு ஏங்கிய தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி… ஆம்… ஏமாற்றி… ஏன் ஏமாற்றினாய் சசி… உன்னை உண்மையாக காதலித்தேனே! என் உயிரே நீ தான் என நினைத்தேனே!… கடவுளே ஏன் எனக்கு மட்டும் இந்த நிலை? நான் உன்னை பொன் கேட்டேனா? இல்லை பொருள் கேட்டேனா? என் மேலும் அன்பு செலுத்தும் ஒரு உறவை கொடு என்று தானே கேட்டேன்! அதற்கு கூட தகுதி இல்லாதவளா நான்? இறைவா! உனக்கு கண் என்பதே இல்லையா? எல்லோரும் சொல்வது போல நீ வெறும் கல்லா? கை விட்டு விட்டாயே!

தலை மிகவும் பாரமாக இருந்தது… மயக்கம் தெளிந்து எழுந்தவளுக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது… திரும்ப படுத்தாள்!… பகலா இரவா? புரியாத நிலை…! முதலில் இது என்ன இடம் என்பதே புரியாமல் எழுந்தவளுக்கு சசி பேசியது நடந்து கொண்ட முறை எல்லாம் நினைவுக்கு வர கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது!

சுற்றிலும் பார்த்தாள்! சிறிய அறை மெலிதான வெளிச்சம் மட்டுமே கண்ணுக்கு பட்டது! தான் இருக்கும் நிலையின் விபரீதம் புரிந்தது! என்ன வேண்டுமானாலும் நடந்திருக்க கூடுமே? அவசரமாக தன்னை ஆராய்ந்தவள் தன்னிடம் ஒரு மாற்றமும் இல்லாததை என்னி பெருமூச்சு விட்டாலும் மனதின் ஓரம் பயம் கவ்வி பிடித்தது! சசியிடம் தான் தவற விட்ட சில கணங்கள் நினைவுக்கு வந்தது! மற்றவர்களுடன் இயல்பாக பழகி இருந்தால் தான் சசியிடம் ஏமாந்து இருக்கமாட்டமோ? காரணங்களை ஆராய தொடங்கியது மனது! சும்மா எவ்வளவு நேரம் இந்த இருட்டறையில் படுத்திருக்க முடியும்? சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்தாள்… இன்னும் தலை சுற்றி கொண்டிருந்தது!

கதவு திறக்கும் ஓசை கேட்டது… வந்தது சசி!

“ஏன் இப்படி பண்ணீங்க சசி?”

உணர்ச்சியை துடைத்த முகம்… ஒன்றும் பதில் கூறாமல் உணவு பொட்டலத்தை குடுத்தான்!

“நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே சசி…”

அதற்கும் ஒன்றும் கூறாமல் கதவை சாத்தி விட்டு வெளியே போக முனைய

“வேணாம் சசி… ஐ ப்ராமிஸ்… தப்பிச்சு போக மாட்டேன்… எனக்கு உங்களை விட்டா போகவும் இடம் கிடையாதுப்பா…” என்று சொல்லி விட்டு கண்கள் கலங்க குரல் கமற

“இன்னமும் உங்க மேல நம்பிக்கை இருக்கு சசி… என் சசி கண்டிப்பா தப்பு பண்ண மாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன்… கண்டிப்பா தப்பு பண்ணி இருக்க மாட்டீங்க…”

அவன் கண்களில் மின்னல்.

ஒன்றுமே பேசாமல் அவளருகே வந்தவன்… மெல்ல கைகளை பிடித்து அவனது கன்னத்தில் வைத்து கொண்டு அவள் கண்களை பார்த்தான்! எத்தகைய மனது! இதற்கு எனக்கு குடுத்து வைக்கவில்லையே… கண்களில் நீர் கோர்க்க அவளை பார்த்தவன்… அடுத்த பிறவியிலாவது எனை கணபதியின் மகளாக இல்லாமல் சந்திப்பாயா என் தேவதை பெண்ணே? என் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறாய்? வேண்டாம் பெண்ணே வேண்டாம்… உனது நம்பிக்கை எனக்கு வேண்டாம்… உனது பாசம் எனக்கு வேண்டாம்… என்னை பலவீனப்படுத்தாதே கண்மணியே… உனது இந்த பூமுகத்தை பார்க்கும் போது நான் பழிவாங்க வந்தவன் என்பது மறந்து விடுகிறதே… வேண்டாம்… வேண்டாம்… மனதை கல்லாக்கு கடவுளே… எனக்கு அந்த சக்தி கொடு!

பெருமூச்சு ஒன்றை விட்டவன் அவள் கையை விட்டுவிட்டு

“சாப்பிடு…” என்று ஒற்றை சொல்லாய் சொல்லி விட்டு வெளியே போக முனைந்தான்!

“சசி… நான் என்ன தப்பு செஞ்சேன்?”

அவளை கண்ணோடு கண்ணாக பார்த்து

“கணபதிக்கு மகளா பிறந்து இருக்கியே… அதான் நீ செஞ்ச ஒரே தப்பு…”

“அது நான் பண்ண தப்பில்லையே சசி…” கண்ணில் வலியோடு நீர் திரள.

“உங்களை ஆசை பட்டது தப்பா? உங்களை உயிரா நினைச்சது தப்பா? யாருமே வேணாம் இந்த உலகத்துல நீங்க மட்டுமே போதும்ன்னு நினைச்சது தப்பா சசி? சொல்லுங்க சசி சொல்லுங்க… வேற எந்த முறையையாச்சும் உபயோகிச்சு என் அப்பாவ பழி வாங்கி இருக்க கூடாதா? அதுக்கு பாவப்பட்ட என்னோட காதல் தானா கிடச்சுது சசி? சொல்லுங்க…” அவனது சட்டையை பிடித்து கொண்டு கதறினாள்!

அவனால் பதில் கூற முடியவில்லை… முனையவில்லை!

“இப்போவும் உங்களை என்னால வெறுக்க முடியலையே சசி… இதெல்லாம் பொய்ன்னு சொல்லிருங்கப்பா… ப்ளீஸ்… இல்ல இதெல்லாம் கனவுல தான் நடக்குதுன்னு சொல்லிருங்க… சசி… ப்ளீஸ்… சொல்லிருங்கப்பா…” அவளது கதறல் நின்றபாடில்லை.

“ஏன் சசி… நீங்க என்னை லவ் பண்ணவே இல்லையா? நீங்க சொன்ன வார்த்தை எல்லாம் பொய்யா? அத்தனையும் நடிப்பா? அதுல ஒரு சதவிதம் கூட உண்மை இல்லையா? ஏன் சசி? ஏன்? நீங்க இங்க கடத்திட்டு தான் வந்திருக்கீங்கங்கறத கூட என்னால புரிஞ்சுக்க முடியுது சசி… ஆனா என்னை லவ் பண்ணவே இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் சசி… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… என்னால தாங்க முடிலப்பா…” ஆற்றவும் முடியாமல் தேற்றவும் முடியாமல் கதறி கொண்டிருந்தவளை பார்க்க பார்க்க நெஞ்சம் வெடித்து விடும் போல இருந்தது!

அவளது கைகளை வலுக்காட்டாயமாக பிரித்து கதவை அறைந்து சாத்திவிட்டு வந்தான்… அறையின் மூலையில் முட்டிகாலிட்டு அமர்ந்தவன் முகத்தை மூடி கொண்டு கண்ணீரில் கரைந்தான்… எங்கே வாய் விட்டு அழுதால் அவளுக்கு கேட்டுவிடுமோ என்று மௌனமாக அவன் அவன் வடித்த கண்ணீர் அவனது நெஞ்சை நனைத்தது! ரயில் விபத்துக்குள்ளான போதே மேகாவின் தவிப்பை பார்த்து உறைந்து நின்றவன்… இப்போது அவளின் கதறலையும் அவள் தன் மேல் கொண்டிருந்த காதலையும் அது அவளுக்கு தந்த நம்பிக்கையும் பார்த்து உடைந்து போனான்! ஏன் இவ்வளவு காதலை என் மேல் வைத்தாய் பெண்ணே? நான் அதற்கு சிறிதும் அருகதையற்றவன்! உன்னை ஏமாற்றி அழைத்து வந்து பலிகுடுக்க வந்தவன்! இந்த காதலை பெரும் பாக்கியம் எனக்கு இருக்க கூடாதா? நான் காதலிக்கவே இல்லையென எப்படி சொல்வேன் மேகா? ஆரம்பத்தில் நடித்த என்னையும் உன் காதலால் வசமாக்கி விட்டாயே… கடவுளே… எனக்கு இந்த ஒரு வாயிப்பை தர கூடாதா? எனக்கு வேறு எதுவும் வேண்டாமே… ஆனால் எப்படி?. அதுதான் முடியாத ஒன்றாயிற்றே… எதிர்காலமே இல்லாத காதல் வந்து தன்னை பலவீனப்படுத்த விட கூடாது… தன்னை நம்பி களம் இறங்கிய தோழர்களை காக்கவாவது தன் மனம் பலவீனமடைய கூடாது… மனம் சிறிது தெளிவாக… முகத்தை அழுந்த துடைத்து விட்டு எழுந்தான்!

அவனது செல்பேசி அழைத்தது!

“சொல்லு விஷால்…”

“இங்க நிலவரம் நமக்கு ரொம்ப திருப்தி சசி… எல்லோரும் ரொம்ப உடைஞ்சு போய் இருக்காங்க… இந்த நேரம் தான் ஆப்பரேஷனுக்கு கரெக்டான நேரம்ப்பா… என்ன சொல்ற நீ?”

“பில்டிங்ல நம்ம ஆளுங்க கிட்ட சொல்லி எமர்ஜென்சி எக்சிட ஓபன் பண்ணி வைக்க சொல்லிட்டியா விஷால்?”

“நம்மாள் தயாரா இருக்கான்…”

“மொத்தம்மா மூணு பில்டிங் இருக்கற காம்ப்ளெக்ஸ் இன்னிக்கு முடிஞ்சிடனும்… நாளைக்கு தலைப்பு செய்தி இதுதான்…”

“டன் சசி… ராகினியும் பத்தரமா வந்துட்டாளாடா?”

“ம்ம்ம்… ஷி இஸ் சேப்! நாளான்னிக்கு அவளோட பேட்டி வெளி வரணும் விஷால்… சிடியோட… சுரேஷ ரெடியா இருக்க சொல்லு…”

“ஓகே சசி… ஓகே டேக் கேர்டா… மத்தத அப்புறம் பேசலாம்…”

“ஓகே விஷால்… பார்த்துக்கோ…”

செல்பேசியை வைத்து விட்டு நிமிர்ந்தான்! மேகா அவன் முன்னர் நின்று கொண்டு அவனையே பார்த்து கொண்டிருந்தாள்! எப்போது வந்தாள் இவள்?

“என்ன பண்றீங்க சசி?”

ஒன்றும் பேசாமல் அவனது வேலையை பார்க்க முயல… வலுக்கட்டாயமாக அவனை தன் புறம் திருப்பி

“சொல்லுங்க சசி…” என்று கத்தவும்

அவளது கைகளை மெதுவாக விடுவித்தவன்… நிதானமாக அவளை பார்த்து தன்னை கல்லாக்கி கொண்டு கூறினான்.

“கணபதியோட தொழில் சாம்ராஜயத்துல இருந்து ஒவ்வொரு செங்கல்லா உருவறோம்… எண்ணி ஒரு வாரத்துல அவன் நடு தெருவுக்கு வர போறான்! ஒவ்வொரு இடத்திலும் அடி வாங்க போறான்… சிகரம் வெச்ச மாதிரி தன் பொண்ணும் நாசமா போய்ட்டாங்கறத அவன் கண்ணால பார்க்கணும்… அந்த அதிர்ச்சி வைத்தியத்த தான் அவனுக்கு நான் குடுக்க போறேன்… போதுமா?”

விக்கித்து நின்றாள் மேகா!

***

“நான் போகிறேன் மேலே மேலே

பூலோகமே காலின் கீழே

விண்மீன்களின் கூட்டம் என் மேலே”

உற்சாகமாய் பாடி கொண்டு அலுவலகம் செல்ல ரெடியாகி கொண்டிருந்தாள் அஞ்சலி. நிஜமாகவே அவளது மனம் பறந்து கொண்டு தான் இருந்தது… காரணம் வேறு யார்? திருவாளர் அர்ஜுன் தான்!

முதல் நாள் அவன் தன்னிடம் வெடித்து விட்டு சென்றது ஏனோ தனக்கு வருத்தத்தை தராமல் சந்தோஷத்தையே அளித்தது! ஏன் அவன் இவ்வளவு கோபப்பட வேண்டும்? தான் ஒட்டாமல் பேசியதால் தானே! மனதில் ஓரத்தில் சிறு பொறியாக ஆரம்பித்த சந்தேகம் செயின் ரியாக்ஷன் ஆகி மனம் முழுக்க வியாபித்து விண்ணில் பறந்த அக்னி ஏவுகணையை காட்டிலும் அதிக உயரத்தில் பறக்க செய்தது… இந்த மாதிரி ஓசியில் பறப்பதில் மல்லையா தோற்று விடுவார் போல இருக்கிறதே!

அவன் குடுத்த செல்பேசியை தொட்டு பார்த்தாள்… அவன் தீண்டியது அல்லவா… அதை தீண்டும் போதே உள்ளுக்குள் சிலிர்ப்பு ஓடியது… அந்த செல்பேசியை தொட்டு தடவி கொண்டே இருந்தாள் அஞ்சலி! கையில் வைத்து அழகு பார்த்து பார்த்தே தேய்த்து விடுவாள் போல இருக்கிறதே… எப்படியடா இந்த அளவு எனக்கு பைத்தியம் பிடிக்க வைத்தாய்?

இன்று அவனும் அலுவலகம் வருவான் அல்லவா… நினைக்கவே தித்திப்பாக இருக்கிறதே! அவனுடன் இணைந்து வேலை செய்வோமா… தினம் அவனது முகம் பார்த்து கொண்டே இருக்க முடியுமா… மனம் இறக்கை கட்டி கொண்டு பறந்தது.

“எப்போதடா பார்ப்பேன் உனது முகத்தை?” என்று துள்ளி திரிந்த மனதை கடிவாளமிட்டு அடக்கினாள்!

“ஹேய்… இங்க பாரு ரொம்ப அலையாத… ஒழுங்கா கொஞ்சமாவது அடக்கமா இருக்கற வழிய பாரு…” என்று ஒரு புறம் மூளை அடக்கினாலும்.

“அதெப்படி அடக்கமா இருக்கறது? எத பத்தியும் கவலை படமாட்டேன்… இன்னிக்கு அர்ஜுன் கிட்ட சாரி கேக்க போறேன்ல… அப்புறம்… அப்புறம்… அப்புறம்…” என்று குதியாட்டம் போட்டது மனது!

“நீ பேசறதெல்லாம் பேசுவ… லூஸ் மாதிரி… அப்புறம் சாரி கேப்பியா? இது உனக்கே ஓவரா இல்லையா அஞ்சலி… இதுக்கு பேசாம ஒழுங்கா முதல்லயே வாய அடக்குறதுக்கு என்ன?” என்று அறிவார்த்தமாக கேட்டது மூளை!

“என்ன செய்றது… அப்படியே பழகிடுச்சு… கண்டிப்பா ஆயிரம் தடவை சாரி கேப்பேன்… ஓகே வா?” என்று மூளையை கேட்டது மனது.

சாரி அர்ஜுன் சாரி அர்ஜுன் சாரி அர்ஜுன் சாரி அர்ஜுன்… என்று ஆயிரம் முறையாவது மனதிற்குள் ஜெபித்திருப்பாள் அஞ்சலி! எப்போதடா மணி ஒன்பதாகும் என்று காத்திருந்து அலுவலகத்திற்கு விரைந்தாள் அஞ்சலி!

கான்பரன்ஸ் ஹால்

ட்ரைனிங் வந்திருந்த அனைவருக்கும் கான்பரன்ஸ் ஹாலில் தான் அறிமுக படலம்! அலுவலகம் பார்த்தே பிரமித்து போயிருந்தாள் அஞ்சலி… நரிமன் பாயிண்டின் மையமான இடத்தில் மிக பெரியதாக இருபது மாடி கட்டிடமாக அழகுற அமைந்து இருந்த அந்த அலுவலகத்தை கண்டு… நான் இங்கே வேலை பார்க்க போகிறேனா? என்று தன்னை கிள்ளி பார்த்து கொண்டாள்! அலுவலகத்தின் பிரமாண்டமும் அழகும் அள்ளி கொண்டு போனது! மிக மிக பெருமையாக தன்னை உணர்ந்தாள்!

மொத்தம் ஐம்பது பேர் அகில இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்! பத்து வெளிநாட்டினர் உட்பட… அனைவருக்கும் இங்கே மும்பை தலைமை அலுவகத்தில் பயிற்சி குடுத்து ஒவ்வொரு கிளைக்கும் பணியமர்த்த திட்டம்… முன்னரே ஓசோன் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாள் அஞ்சலி… அகில இந்திய அளவில் டாப் ட்வென்டியில் இருக்கும் தொழிற்குழுமம் அல்லவா! அவர்களின் தொழில் முறை பற்றியும் வெவ்வேறு தொழில்களில் அவர்களது குடும்பம் ஈடுபட்டு இருப்பது பற்றியும் தெளிவாகவே இருந்தாள்… ஏதாவது கேள்வி எழுந்தால் சமாளிக்க வேண்டுமே… பாவம் அவள் தெரிந்து வைத்து கொள்ளாத ஒன்றும் இருக்கிறது என்று அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை தானே!

மீட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒவ்வொருவரும் தங்களை பற்றி சுய அறிமுகம் செய்து கொண்டிருந்தனர்… அது பார்மலான அறிமுகம் போல் இல்லாமல் சாதாரண கலந்துரையாடலாக அமைந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த கம்பெனியின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு அந்த இளரத்தத்துடன் கலந்துரையாடியது எல்லோருடைய தயக்கத்தையும் போக்கும் விதமாக அமைந்தது. அர்ஜுன் இருக்கிறானா என்று கண்கள் தேடி கொண்டே இருக்க.

பக்கத்தில் அமர்ந்து இருந்த இருந்தவர்களோடு நிமிடத்தில் பழகி விட்ட அஞ்சலிக்கு அந்த இயல்பான சூழ்நிலை மிக பிடித்து போனது! அதுவும் நான்கு பேர் தமிழர்களாக சேர்ந்து அமர்ந்து சுவாரசியமாக விவாதிக்க தொடங்கிய போது ஆர்வமாக பங்கெடுத்துகொண்டாள்! பக்கத்தில் அமர்ந்து இருந்த,

“ஹாய்… ஐம் ப்ரீதிகா… நீங்க?”

“ஹாய் ஐம் ரிஷி… நீங்க?”

“ஐம் அஞ்சலி!”

“நைஸ் டு மீட் யு அஞ்சலி அண்ட் ப்ரீதிகா… வுட் யு மைன்ட் ஜாயினிங் மீ வித் லஞ்ச் யெங் லேடீஸ்?”

“நோ ப்ராப்ளம் ரிஷி…” என்று இருவரும் சொல்ல

“ஓகே வீ ஆர் பிரெண்ட்ஸ்…” என்று கை குடுக்க

“எஸ்… வீ ஆர் பிரெண்ட்ஸ்…” என்று அஞ்சலியும் கை குடுக்க அதே நேரத்தில் அறிவிப்பு வந்தது! பலத்த கைதட்டலுக்கு இடையில்

“ஐ டேக் தி ப்ரிவிலேட்ஜ் ஆப் வெல்கமிங் அவர் பிலவ்ட் ஜேஎம்டி அண்ட் சிஎப்ஓ ஆப் விக்டரி க்ரூப்ஸ், சிஈஓ ஆப் ஓசோன்… மிஸ்டர் அர்ஜுன் வானமாமலை! வெல்கம் சார்…!”

வெகு நேர்த்தியாக அணிந்த உடையோடு ரிம்லஸ் கண்ணாடியில் கம்பீரமாக அனைவரின் முகமன்களை ஏற்று கொண்டு வந்தவன்… வேறு யார்? சாட்சாத் நம்ம அர்ஜுன் தான்!

“அர்ஜுன்ன்னன்…” அவளையறியாமல் உதடுகள் முணுமுணுத்தன!

அஞ்சலியின் காலின் கீழ் இருந்த பூமி நழுவியது!

***

“இந்த இடத்துல கலர் கான்ட்ராஸ்ட் டெப்த் அதிகம் பண்ணுங்க…” கூறி கொண்டிருந்தவன் கௌதம்! எடுத்த விளம்பர படத்தை ரஷ் போட்டு பார்த்து எடிட் செய்து கொண்டிருந்தான்! மிக திருப்தியாக வந்திருந்தது!

“சி ஜி தான் வர்கீஸ் கொஞ்சம் இடிக்குது… ஆனாலும் ரொம்ப அதிகம் இந்த கிஙீலி அனிமேஷன்ல… ஆனா என்ன இவங்க குவாலிட்டிக்காக பொறுத்துக்க வேண்டி இருக்கு…”

“ஆமா கௌதம்… இப்போ முன்னனில இருக்கற கம்பெனி… அவங்க சொல்றதுதான் ரேட்பா…”

மிக தீவிரமாக அவனது விளம்பரபடத்தை பற்றி விவாதித்து கொண்டிருந்தான் கௌதம்!

“ஹேய்… வர்கீஸ்… உனக்கு ஒன்னு தெரியுமா? நமக்கு ஒரு பெரிய ஆர்டர் ஒன்னு கிடைச்சு இருக்கு… யாரு தெரியுமா?”

“ஹேய் யாரு கௌதம்… சீக்கிரம் சொல்லு…”

“கணபதி ஸ்டோர்ஸ்… சென்னைல… மோஸ்ட் ஹப்பெனிங் ஆளுங்க வர்கீஸ்…”

“தெரியும்… தெரியும்… மிஸ்டர் கணபதி தானே… அவர் முதல்ல எந்த நடிகைய போடறதுன்னு டிசைட் பண்ணிட்டு தானே அக்ரிமென்டே போடுவார்… உன் கிட்டயும் கண்டிஷன் போட்டுட்டாரா?”

“ஹஹா… இன்னும் இல்ல… நாளைக்கு சென்னை போறேன் வர்கீஸ்… போனாத்தான் தெரியும்…” என்று சாதாரணமாக கூற

“அந்த ஆள் சரியான வுமனைசெர் கௌதம்… படியாத பொண்ணுங்களை கூட போர்ஸ் பண்ணி காரியத்த முடிக்கற ஆளப்பா… உன்னோட குணத்துக்கு ஒத்து வருமான்னு பார்த்துக்கோ…” வர்கீஸ் அறிவுரை கூறினான்!

“அவர் எப்படியோ போகட்டும்ப்பா… நமக்கு தேவை வியாபாரம்… அவ்ளோதானப்பா… இதெல்லாம் எதிர்பார்க்காம இந்த பீல்டுக்கு வரலியே… பார்க்கலாம்…”

மனம் கொஞ்சம் சுனங்கியது… ம்ம்ம்… என்ன செய்வது… முன்னேறவேண்டும் என்றால் சில விஷயங்களை கண்டுகொள்ளாமல் போக வேண்டியுள்ளதே!

“முதல்ல அந்த ஆள் கிட்ட வேலை செஞ்சவங்க எல்லாம் சொல்லி இருக்காங்க கௌதம்… நடிகைல ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆள பிடிச்சுடாத… கொஞ்சம் தாராளமான ஆளையே செலக்ட் பண்ணு… அந்த ஆள் கிட்ட அந்த விஷயத்துல முறைச்சுகிட்டா கடைசில பணத்த குடுக்காம இழுத்தடிச்சுடுவான் கௌதம்… ஜாக்கிரதை… பேசாம இப்போ இருக்கற பொண்ணையே போட்டுடேன்… செட்டில்மென்ட் ஈசியா கிடைச்சுடும்… அவங்க ரெண்டு பேருக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்பா!” என்று சொல்லிவிட்டு கண்ணடிக்க அவனுக்கு ஒரு அடி வைத்து விட்டு வெளியே வந்தவனின் செல்பேசி அழைத்தது!

அஞ்சலிதான் அழைத்து இருந்தாள்!

“ஏன்ணா… நீயும் மறைச்சுட்ட இல்ல…” எடுத்த எடுப்பிலேயே இப்படி கேட்டபோது அவனுக்கு ஒன்றும் புரியவில்லை!

“என்னடா எலி… ஒன்னும் புரியல…”

“அர்ஜுன் தான் இங்க ஜேஎம்டி ன்னு உனக்கு தெரியுமா?”

“ம்ம்ம்… தெரியுமே… ஏன்டா சின்ன வயசுல இருந்து பழகறோம்… இது தெரியாதா?”

“அப்புறம் ஏன் ட்ரெயின்ல சொல்லல?” குரலில் வலி மிகுந்து இருந்தது!

“சும்மா விளையான்டான்டா… நீ வேற கிண்டல் பண்ணுனியா அத வெச்சு என்னை சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்… ஏன் குட்டி… எதாச்சும் ரொம்ப கிண்டல் பண்றானா?”

“இல்லண்ணா… சரி வைச்சுடறேன்?”

செல்பேசியை வைத்தபோது மனதில் வலி மிகுந்து இருந்தது… கிண்டல் செய்தால் கூட பரவால்லையே… அவள் புறம் திரும்பி கூட பாராமல் அமர்ந்து இருந்தானே… தான் நினைத்து வந்தது என்ன? இங்கே நடப்பது என்ன? அவன் இவ்வளவு பெரிய ஆள் என்பது தெரியாமல்… ச்சே… வேண்டாம்… எதையும் நினைக்க வேண்டாம்… என்னை பொறுத்தவரை அவன் என்னுடன் வந்த சக ரயில்பயணி… அதற்கும் மேல் ஒன்றுமில்லை… இனிமேல் மன்னிப்பு கேட்பதும் காதலை சொல்வதும்… ச்சே… அதற்கும் மேல் ஒரு அசிங்கம் இருக்க கூடுமா? எனது சுயமரியாதையை விட்டுவிட்டு… முடியாது என்னால் முடியவே முடியாது! என்னுள் தோன்றிய காதல் என்னுள்ளே முடியட்டும்… அவனிடம் காட்டி கொள்ளவே கூடாது… பலவாறாக தறிகெட்டு ஓடிய மனதை இழுத்து வந்து சமாதான படுத்தி ஒரு வழியாக தெளிவாய் மறுபடியும் கான்பரன்ஸ் ஹாலில் நுழைய போனவளை பார்த்து புன்னகைத்தவாறே வந்தாள் ப்ரீத்திகா.

“ஹாய்… என்னப்பா தண்ணி குடிக்க வந்தியா?” என்று தண்ணீரை பருகியவாறே கேட்க

“ஆமா ப்ரீத்தி… கொஞ்சம் தலை வலிக்கற மாதிரி இருக்கு வேற…”

“அதெல்லாம் கொஞ்சம் பேர் பண்ணிக்கோ… உள்ள சூப்பரா பேசிட்டு இருக்கார் ஜேஎம்டி… சீக்கிரம் வா அஞ்சலி…”

உள்ளே சென்ற போது அர்ஜுன் தான் பேசிக்கொண்டு இருந்தான்! அழகான ஆங்கிலத்தில் நேர்த்தியாக பேசிக்கொண்டு நடுநடுவே கேள்வியும் கேட்டு பதிலும் குடுத்து கொண்டிருந்தான்.

“சிணீஸீ ணீஸீஹ்தீஷீபீஹ் ழீustவீயீஹ் tலீமீ தீக்ஷீணீஸீபீ வீபீமீஸீtவீtஹ் ‘ளிக்ஷ்ஷீஸீமீ’?” என்று கேட்கவும்

ரிஷி கையை தூக்கி

“ஷிலீணீறீறீ மி sவீக்ஷீ?” என்று கேட்டு விட்டு” sவீக்ஷீ, ஷீக்ஷ்ஷீஸீமீ வீs ணீ ரீணீs tலீணீt நீஷீஸ்மீக்ஷீs ணீஸீபீ sநீக்ஷீமீமீஸீs ஷ்லீஷீறீமீ ஷீயீ tலீமீ மீணீக்ஷீtலீ tஷீ ஜீக்ஷீஷீtமீநீt ணீரீணீவீஸீst ஹிக்ஷி க்ஷீணீஹ்s… மி tலீவீஸீளீ tலீணீt னீணீஹ் தீமீ tலீமீ க்ஷீமீணீsஷீஸீ யீஷீக்ஷீ tலீவீs தீக்ஷீணீஸீபீ ஸீணீனீமீ… tஷீ நீஷீஸ்மீக்ஷீ ணீறீறீ ஷீஸ்மீக்ஷீ மிஸீபீவீணீ…” என்று சொல்லி முடிக்கவும்

“லீணீலீணீ… tலீமீஸீ tலீமீsமீ ஹ்ஷீuஸீரீ றீணீபீவீமீs ஷ்ஷீuறீபீ ணீநீt தீஹ் ரீக்ஷீமீமீஸீ லீஷீusமீ மீயீயீமீநீt விக்ஷீ. ஸிவீsலீவீ… ஷ்வீறீறீ னீணீளீமீ ணீ லீஷீறீமீ வீஸீ ஷீக்ஷ்ஷீஸீமீ…” என்று சொல்லி சிரிக்கவும் அதை பார்த்த அஞ்சலிக்கு உள்ளுக்குள் சுருக்கென்றது…” ஓட்டை ஓசோன்” என்று கிண்டலடித்தது நினைவுக்கு வந்தது… அஞ்சலி கையை உயர்த்தி,

“ஷிலீணீறீறீ மி tக்ஷீஹ் sஷீனீமீtலீவீஸீரீ sவீக்ஷீ?” என்று கேட்கவும்

“ஹ்மீs… ஜீறீமீணீsமீ!” அமர்த்தலாக கூறவே

“sவீக்ஷீ… tலீவீs தீக்ஷீணீஸீபீ வீபீமீஸீtவீtஹ் நீணீஸீ தீமீ sமீமீஸீ ணீs ஷீக்ஷ்ஷீஸீமீ ணீs ஷ்மீறீறீ ணீs ‘ளி’க்ஷ்ஷீஸீமீ வீஸீ னீணீtலீமீனீணீtவீநீs… tலீவீs ளி வீs தீut க்ஷ்மீக்ஷீஷீ, ஷ்வீtலீஷீut tலீவீs ளி ஸீஷீtலீவீஸீரீ லீணீஜீஜீமீஸீs வீஸீ னீணீtலீs ணீஸீபீ tமீநீலீஸீஷீறீஷீரீஹ், வீt வீs tலீமீ னீஷீst வீனீஜீஷீக்ஷீtணீஸீt ஸீuனீதீமீக்ஷீ ணீஸீபீ tலீமீ னீஷீst ஸ்ணீறீuணீதீறீமீ ஸீuனீதீமீக்ஷீ… வீஸீtமீக்ஷீமீstவீஸீரீறீஹ் வீt வீs tலீமீ uஸீவீஹீuமீ வீஸீஸ்மீஸீtவீஷீஸீ ஷீயீ மிஸீபீவீணீஸீs… ‘ஸ்ணீறீuமீ ணீஸீபீ uஸீவீஹீuமீஸீமீss’… tலீணீt னீணீஹ் தீமீ tலீமீ ஷீஸீமீ ஷீயீ tலீமீ க்ஷீமீணீsஷீஸீs… tலீமீ sமீநீஷீஸீபீ tலீவீஸீரீ வீs, ணீநீநீஷீக்ஷீபீவீஸீரீ tஷீ மிஸீபீவீணீஸீ னீஹ்tலீஷீறீஷீரீஹ் றீஷீக்ஷீபீ ஷிலீவீஸ்ணீ வீs sணீவீபீ tஷீ க்ஷீமீsவீபீமீ வீஸீ க்ஷ்மீக்ஷீஷீ… tலீணீt வீs லீமீ லீணீஸ்மீ ஸீஷீ தீவீக்ஷீtலீ ணீஸீபீ பீமீணீtலீ… லீமீ வீs மீtமீக்ஷீஸீணீறீ… tலீவீs வீs பீமீஜீவீநீtமீபீ தீஹ் க்ஷ்மீக்ஷீஷீ ஷ்லீவீநீலீ லீணீஸ்மீ ஸீஷீ மீஸீபீ ஜீஷீவீஸீts… tலீமீ sலீணீஜீமீ ளி வீs uஸீவீஹீuமீ ணீஸீபீ மி tலீவீஸீளீ tலீவீs வீs” ளி” க்ஷ்ஷீஸீமீ… ணீனீ மி க்ஷீவீரீலீt sவீக்ஷீ?”

அர்ஜுனின் கண்கள் வியப்பில் விரிந்தது! தன் மனதின் கருத்தை அப்படியே.

“வாவ்…” என்று நினைத்து கொண்டு

“ம்ம்ம்… ஜீமீக்ஷீயீமீநீt விs. கிஸீழீணீறீவீ!”

“அட பாவி… ட்ரெயின்ல எப்படி கிண்டல் பண்ணிட்டு… ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி இங்க விளக்கம் குடுக்கறா… பரவால்ல நம்ம எலி தலைலையும் கொஞ்சம் சரக்கு இருக்குது… ஆனாலும் இவ பேசுன பேச்சுக்கு ஒரு ரெண்டு நாளாச்சும் இந்த பிசாசு கிட்ட பேசவே கூடாது…” (எங்கடா நீயும் தான் நினைக்கிற… ஆனா பிகர பாத்த உடனே பிரெண்ட கழட்டி விடற மாதிரி உன் வெட்கம் மானம் சூடு சுரனை எல்லாத்தையும் கழட்டி விட்டுடறியே… எனக்கு தான் அசிங்கமா இருக்கு அர்ஜுன் என்று மனசாட்சி போட்டு தாக்க… மனசாட்சி சார் மனசாட்சி சார்… அரசியல்ல இதெல்லாம் சகஜம் மனசாட்சி சார் கண்டுக்காதீங்க மனசாட்சி சார்… )

முகத்தை உர்ர்ர் என்று வைத்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்கும் போது முறைத்து கொண்டு டாம் அண்ட் ஜெர்ரி சண்டையை இங்கேயும் தொடர அனைத்து தகுதிகளையும் உள்ளடக்கி கொண்டிருந்தனர் அர்ஜுனும் அஞ்சலியும்!

***

கௌதம் பிருந்தாவனத்தில் நுழைந்த போது ஆட்கள் பரபரப்பாய் அலைந்து கொண்டிருந்தனர்! அங்கிங்கெனாதபடி எல்லோர் முகத்திலும் பதட்டம்! உள்ளே சென்று போர்டிகோவில் நின்று கொண்டிருந்த மேனேஜரிடம் தான் கணபதியை சந்திக்க வந்திருப்பதாக கூறவே

“சார் இன்னிக்கு முடியாது… உங்க கார்ட் குடுத்துட்டு போங்க இன்னொரு நாள் கூப்பிடறோம்…”

“ஓகே சார்… ஆனா என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாமா? ஏன்னா எல்லாரும் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க… அதான்…”

“சார்… நீங்க டிவி பாக்கலையா? திநகர்ல நம்ம கடை மூணு முழுசா எரிஞ்சுடுச்சு… அதுவும் இல்லாம அந்த தீயில ரெண்டு பசங்க வேற மாட்டி இறந்து போய்ட்டாங்க சார்… அதான் போலீஸ் கேஸ் ஆக பாக்குது… இன்னைக்கு கண்டிப்பா அண்ணாச்சிய பாக்க முடியாது…” என்று விளக்கம் குடுத்தவர்,

“அட கடவுளே… ரெண்டு பேர் இறந்து போய்ட்டாங்களா?” என்று அதிர்ச்சியோடு கேட்டவனது கண்களில் பட்டது வரவேற்பரையில் இருந்த ஆளுயர மேகாவின் புகைப்படம்!

“சார்… மேகா தானே இது… கணபதி சாருக்கு மேகா என்ன ஆகணும்?” என்று குழப்பமாக கேட்க

“சின்ன மேடம் சார்… அண்ணாச்சியோட பொண்ணு…” என்று கூறி கொண்டிருக்கும் போதே வெளிவந்த கணபதி

“தம்பி… உங்களுக்கு மேகாவ தெரியுமா? எப்படி?” என்று பதட்டத்துடன் கேட்க

அவனுக்கு தான் தெரியுமே… அவள் தன் காதலனோடு மும்பை சென்றது! தயக்கத்துடன்

“தெரியும் சார்… மும்பைக்கு எங்களோட தான் வந்தாங்க…”

கேட்ட கணபதிக்கு தலை சுற்றியது.

“மும்பையா… என் பொண்ணா… ஐயோ… மேகா மோசம் போயிட்டியே…” என்று கதறி கொண்டே சரிந்தார்.

சட்டென அவரை தாங்கி பிடித்தவன் மேலாளரை அழைத்து தண்ணீர் கொண்டு வர செய்தான்… அவனை பிடித்து கொண்டே வரவேற்பரைக்கு வந்தவர் முகத்தை துண்டால் மறைத்து வைத்து கதறி அழுதார்! சத்தம் கேட்டு வெளியே வந்த மேகாவின் தாயின் முகத்திலும் தாங்க முடியாத சோகம்… அவரும் முந்தானை தலைப்பால் வாயை மூடி கொண்டு அழ,

தனது பெண் காதலனுடன் சென்று விட்டாள் எனும் போது பெற்றவர் படும் வேதனை சொல்ல முடியாது என்று நினைத்து கொண்டே

“சார்… காதலிச்சதால் தானே போனாங்க… பேசாம நீங்களே கல்யாணம் பண்ணி வெச்சிருக்கலாம்ல…” என்று தனது மனதின் வலியை பொறுத்து கொண்டு கேட்க

“ஐயோ… அதெல்லாம் கிடையாது தம்பி… அந்த படுபாவி ராஸ்கல் என் பொண்ண திட்டம் போட்டு கடத்திட்டு போன் பண்ணி மிரட்டுறான்ப்பா… மிரட்டுறான்…” என்று மீண்டும் கதற

“அதுவும் இல்லாம… என்னென்னெவோ மிரட்டுறான்… என் பொண்ண… பொண்ண… ஐயோ… நான் எப்பிடி என் வாயால சொல்வேன்? என்று முகத்தை அறைந்து கொண்டு அழுதார்!

கௌதமுக்கு தரை இரண்டாக பிளந்து உள்ளே செல்வது போன்ற உணர்வு!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் ஒன்பது

அதிகாலை பறவைகளின் கீச் கீச் சப்தம் கேட்க விழிப்பு தட்டியது அர்ஜுனுக்கு... மணியை பார்த்தான்... சுவற்றில் இருந்த டிஜிட்டல் கடிகாரம் மணி ஐந்தரை என்றது! சோம்பலுடன் எழுந்து உட்கார்ந்தான்! இரவு உறங்க வெகு நேரமாகி விட்டபடியால் இப்போது அந்த சோம்பலை காட்டியது…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்