அத்தியாயம் ஒன்பது
அதிகாலை பறவைகளின் கீச் கீச் சப்தம் கேட்க விழிப்பு தட்டியது அர்ஜுனுக்கு… மணியை பார்த்தான்… சுவற்றில் இருந்த டிஜிட்டல் கடிகாரம் மணி ஐந்தரை என்றது! சோம்பலுடன் எழுந்து உட்கார்ந்தான்! இரவு உறங்க வெகு நேரமாகி விட்டபடியால் இப்போது அந்த சோம்பலை காட்டியது உடல்… ஆனால் பிடிவாதமாக எழுந்து விடும் தன்மையை விட்டு விட மனமில்லை!
எழுந்து ஜன்னல் அருகே வந்து நின்று திரையை விலக்கினான்! காற்று முகத்தில் வந்து அறைந்தது சிலீரென்று… காலை நேர காற்றை சுவாசிப்பது போன்ற சுவாரசியம் வேறு இல்லை… அதிலும் மொட்டை மாடியில் ஆசனங்களை செய்து விட்டு அந்த நேரத்தில் மூச்சு பயிற்சி செய்வது என்பது அவன் மிகவும் விரும்புகிற ஒன்று!
அன்று முழுவதும் சக்தியை வாரி வழங்கும் அற்புத ஆற்றல் அந்த நேரத்திற்கு இருப்பதால் அதை இழக்கமாட்டான்… அதிலும் மும்பை வந்தால் கண்டிப்பாக ஆசனங்களை செய்தே தீருவான், ஜனநெருக்கடி மிகுந்த ஊர் என்பதால் சுத்தமான காற்று கிடைக்கும் அவ்வேளையில்.
நேற்று இரவு முதல் அந்த சுறுசுறுப்பு மறைந்து செல்பேசியும் கையுமாகவே இருந்தான்! எடுப்பான்… அஞ்சலியின் நம்பரை அழுத்துவான்… ரிங் போகும் முன்னர் அணைத்து விடுவான்… அவனும் தான் அந்த செல்பேசியை பார்த்தான்… பார்க்கிறான்… பார்ப்பான்… பார்த்து கொண்டே இருப்பான் என்பது போல செயல்பட்டவனை யாராவது பார்த்து இருந்தால் சொல்லும் முதல் வார்த்தை என்னவாக இருக்கும் தெரியுமா?
“அட ச்சே லூசே…”
ஏன்? எதற்கு? எப்படி? என்று விதம் விதமாக கேள்வி கேட்போருக்கான ஒரே விடை” அஞ்சலி”
இந்த தன்மான சிங்கம் தான் அறிமுக கூட்டம் நடந்த பிறகும் கூட அவளை கண்டுகொள்ளாமல் வந்துவிட்டதே… என்ன செய்வது… பிறகெப்படி அவளிடம் பேசுவது? முகத்தை திருப்பி கொண்டு வந்தாலும் கைகள் என்னவோ பரபரவென்று இருக்க இரவு ஆரம்பித்த அந்த விளையாட்டை காலை வரை தொடர்ந்து கொண்டிருந்தான் அர்ஜுன்… அதுவும் கனகாரியமாக யோகாவில் பொழுதை ஆரம்பிப்பவன் இன்று அதை மறந்து தனது செல்பேசியை பார்த்து பார்த்தே அதை தேய்த்து கொண்டிருந்தான்! எத்தனை முறை தான் பார்த்தாலும் அஞ்சலி அழைத்தால் மட்டும் தான் அதில் அவளது நம்பர் டிஸ்ப்ளே ஆகும் அர்ஜுன்… அதை முதல்ல புரிஞ்சுக்கோ என்று மனசாட்சி எடுத்துரைப்பதையும் அண்ணல் கேட்பதாக இல்லையே.
பேசவே கூடாது என்று தீர்மானம் எடுத்து… பின்னர் அதையே அவன் திரும்பவும் வாங்கி கொண்டால் என்ன தவறு? என்று யோசித்து… ஒரு வழியாக குழம்பி… சின்ன பொண்ணு தெரியாம பேசினாலும் நாம் தானே அனுசரித்து போக வேண்டும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை மீண்டும் வெற்றிகரமாக நிறைவேற்றி ஒரு வழியாக ஏழு மணிக்கு செல்பேசியில் அவளது எண்ணை தடவினான்.
ரிங் போனது… போனது… போனது… போய் கொண்டே இருந்தது… எடுக்கத்தான் ஆளில்லை… சரி பயணகளைப்பு போல தூங்கி கொண்டிருப்பாள்… என்று மனது எண்ணினாலும்.
“அட பிசாசு… இன்னும் எவ்ளோ நேரம் தூங்குவா கும்பகர்ணி… இப்போவே மணி ஏழு… இன்னிக்கு எழுப்பி விட்டே தீரனும்” என்று கொலைவெறியோடு இன்னொரு முறை இன்னொரு முறை என்று மூன்று முறை போன் செய்தான்… மூன்றாவது முறை ரிங் பாதியிலேயே கட் ஆகி tலீமீ suதீsநீக்ஷீவீதீமீக்ஷீ ஹ்ஷீu லீணீஸ்மீ நீணீறீறீமீபீ வீs தீusஹ், ஜீறீமீணீsமீ tக்ஷீஹ் ணீயீtமீக்ஷீ sஷீனீமீ tவீனீமீ என்று அவனுக்கே ரிவீட் அடிக்க… அர்ஜுனின் கோபம் குபுக்கென்று தலைக்கு ஏறியது.
“என்ன நினைச்சுட்டு இருக்கா? திமிர் பிடிச்சவ? எவ்வளவு கொழுப்பு இருக்கும்? போன கட் பண்றா? உடம்பு முழுக்க திமிர் தான்… எருமை… எருமை… இப்போ அவளுக்கு விடற டோஸ்ல… மகளே… நீ காலிடி… இன்னைக்கு இவள விடவே கூடாது…” என்று மனதுக்குள் வித விதமாக திட்டியபடி அடுத்த முறை கால் செய்ய… ஐயோ அந்த போனுக்கு வாயிருந்தா அழுதுரும் ராசா.
முழு ரிங் போய் கட் ஆகும் முன்னர் பேசியை எடுத்தவள்
“என்ன?” என்றாள் எடுத்த எடுப்பில் கடுப்பாக… காதில் வந்து விழுந்தன அனலான வார்த்தைகள்!
“ஏய்… என்னன்னு நினைச்சுட்டு இருக்க? போன அட்டென்ட் பண்ண மாட்டேங்கற… கால கட் பண்ற… இப்போ நான் கத்த வேண்டியத நீ செய்யறியா?” என்று அவனது முறைக்கு எகிற
“ஆமா அப்படித்தான் பண்ணுவேன்… என் கிட்ட பொய் பொய்யா சொல்லிட்டு இப்போ எதுக்கு போன் பண்றீங்க?”
இப்படி சொல்பவளிடம் உன்னோடு பேசாமல் இருக்கமுடியவில்லை என்று கூறுவதா? நோ… நெவர்… முடியாது… அது நடக்காது.
“ஆமாம்… நீ பெரிய மைசூர் மகாராஜா பேத்தி… உன் கூட பேசத்தான் அலையறாங்க?”
“தெரியுதில்ல… அப்புறம் எதுக்கு போன் பண்றீங்க?” என்றாள் விடாமல்
“இங்க பார் எலிக்குட்டி… இப்போ செவுனிலையே ரெண்டு வாங்க போற… ஒழுங்கா பேச தெரியாதா உனக்கு?”
“நீ… நீங்க அடிச்சா என் கை என்ன பூவா பறிக்கும்… இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் உங்க ஆபீசோட வெச்சுகோங்க…”
“இப்போ நீ என் முன்னாடி இருந்து பேசி இருக்கணும்… உன் கை என்ன பண்ணும்ன்னு நானும் தான் பார்த்து இருப்பேன்” என்று அவன் சொல்லவும் அன்றைய நினைவில் முகம் சிவக்க அந்த பேச்சை மேலும் வளர்க்க விரும்பாதவளாய்
“சரி என்ன விஷயம்… சொல்லிட்டு வைங்க…”
“தாயே அது என் போன்… என்னோட நம்பர்… பர்சனல் ப்ரைவேட் நம்பர்… அதனால யாருக்கும் தெரியாது… எதாச்சும் கால் வந்தா எடுக்காத… அத தான் சொல்ல வந்தேன்… இப்போ போய் குப்புற அடிச்சு குறட்டை விடு… பிசாசு…”
“ம்ம்ம்… நான் குறட்டை விடுறேன்னு நீங்களா முடிவு பண்ணிட்டா நான் அதுக்கு பொறுப்பில்ல… அதோட யாரோட பொருளும் எனக்கு வேணாம்… ஆபீஸ் வரும் போது உங்க கிட்ட தந்துடறேன்…”
ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆசை வச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்க தானே மீசை வெச்சேன்.
பெரும் புயலும் அடங்கும் பேயும் அடங்கும்
இந்த பெண்ணை அடக்க ஒரு வழி ஒன்னு காமி
“எலி… நீ ஆபீஸ் தானே வருவ… அங்க இருக்குது உனக்கு…” என்று எண்ணி கொண்டு பதில் கூறாமல் வைத்தான் போனை.
அர்ஜுன் வைத்தவுடன் கண்களில் கண்ணீர் திரள போனையே பார்த்து கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் தாள முடியாமல் உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்.
***
இரவின் இருள் மேகாவை திகில் கொள்ள செய்தது… தன்னுடைய விதியை எண்ணி நொந்து கொள்வதை தவிர அவளால் வேறு ஒன்றும் நினைக்க முடியவில்லை… ஏன் என்னை படைத்தாய் ஆண்டவா? என்ற கேள்வியே கேட்டு கொண்டிருந்தாள்! தன்னுடைய முட்டாள்தனம் புரியாமல் இல்லை… ஆனால் சசியை அவளால் தவறாக நினைக்கவே மனம் மறுத்தது!… அவன் கண்களில் தெரியும் வெறுமையை தாண்டிய ஏதோ ஒரு உணர்வு மேகாவை அலைக்கழித்தது… அதிகாலையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த மேகாவுக்கு பேச்சு குரல் கேட்கவும் விரைத்தாள்!
“ரொம்ப சந்தோசம் விஷால்… உன்னோட வேலைய பக்காவா முடிச்சிட்டிட்ட… சுரேஷ் எப்படி ரெடியா?”
“…”
“காலைல பத்து மணிக்குள்ள பிளாஷ் ஆகிடனும்… அதோட அந்த சிடிய கமிஷனர் ஆபீஸ், பத்திரிக்கைகாரங்கன்னு ஒருத்தர விடாம கொண்டு போய் சேர்க்கணும்…”
“…”
“இல்ல விஷால்… ராகினியோட ஹைட் அவுட் யாருக்கும் தெரிய கூடாது… இது முடிஞ்சதுக்கு அப்புறம் அடுத்தத பத்தி சொல்றேன்… அதுவும் நானே போன் பண்றேன்…”
“…”
“ஓகே… டேக் கேர் டா… பை…”
இவர்கள் என்ன பேசி கொள்கிறார்கள்? யார் அந்த ராகினி? என்ன வேலை முடிந்தது? இப்போது என்ன வேலை நடக்க போகிறது? என்ன என்ன என்ன என்றே கேள்விகள் பல எழுந்தன… எதற்காக தன் தந்தையை குறி வைத்து செயல்படுகிறார்கள்? அவளது சத்தம் கேட்டு அவள் பக்கம் திரும்பினான் சசி…
“குட் மார்னிங் மேகி…” என்று சந்தோஷமான முகத்தோடு சொல்லவே… பார்த்த அவளுக்கு வியப்பாக இருந்தது!
“குட் மார்னிங்…”
“ஏன் இது குட் மார்னிங்ன்னு கேக்க மாட்டியா மேகி?”
அவனை ஒரு மார்கமாக பார்த்து விட்டு அவளது பிரஷ் எடுத்து பற்பசை தடவி வாயில் வைத்து கொண்டே
“ம்ம்ம்… சொல்லுங்க!”
“முதல் வெற்றி எங்களுக்கு…” என்று சொல்லி விட்டு சிரிக்க… அவள் புரியாமல் நின்றாள்!
“என்ன புரியலியா? உங்க அப்பா கடை… திநகர்லியே பெரிய்ய்ய்ய்ய்ய்ய கடை… கணபதி ஸ்டோர்ஸ் இப்போ இருக்கற இடம்… ஹஹஹா… சுவாஹா… அதான் இவ்வளவு சந்தோசம்…”
அவளது முகம் அதிர்ச்சியில் சொல்லமுடியாத துயரத்தையும் வேதனையும் வெளிபடுத்த
“என்ன உங்க கடை காலின்னு கவலையா இருக்கா?” ஏளனமாக அவன் கேட்க
“ஏன் சசி… அந்த கடை எங்க அப்பாவோட உழைப்பு மட்டும் இல்ல… எத்தனையோ பேரோட வாழ்க்கை… இப்படி எல்லாரோட வாழ்க்கைல ஒரே நாள்ல மண்ணை அள்ளி போட்டுட்டீங்களே… இது சரியா சசி?”
“உழைப்பா? ஹா… அது எத்தனை பேரோட ரத்தம்னு தெரியுமா? ரத்தத்த உறிஞ்சு குடிக்கற உன் அப்பன் மாதிரி ஆளுங்கள நினைக்கும் போது இதை பத்தி இப்போ நான் கேர் பண்ண முடியாது மேகா… அந்த ஆளை அழிக்கிற வேலைல இதெல்லாம் சகஜம்… அப்படீன்னு பார்த்தா மூணு பேர் இறந்து போய்ட்டாங்க அந்த விபத்துல… அத பத்தி கவலை படமுடியுமா?”
மிகுந்த அதிர்ச்சியோடு கண்களில் நீர் கோர்க்க விறைத்து நின்றாள்!
“உங்க மனசுல ஈரமே இல்லையா சசி? இப்போ நீங்க சொல்றது விபத்து இல்லை… திட்டமிட்ட படுகொலை… இறந்து போன அந்த மூணு பேருக்கு குடும்பம் இருக்கும் குழந்தை இருக்கும்… அதை பத்தி எல்லாம் நினைக்க மாட்டீங்களா? அப்படி ஈரமே இல்லாத இதயமா உங்க இதயம்?” என்று கண்களில் நீர் வழிய அவள் கேட்ட கேள்வி அவனை குதறியது… உள்ளே மனசாட்சி குத்தியது… உண்மைதானே!
“ஈரமே கிடையாதுன்னு கிடையாது மேகா… எமெர்ஜென்சி எக்சிட் ஓபன் பண்ணி வைக்கறதுக்கு ஆள் இருந்தாங்க உள்ள… ஆனா இந்த பசங்க… ப்ச்… எனக்கும் கஷ்டமா தான் இருக்கு… என்ன பண்றது? ஆனா உன் அப்பன் பண்ணத நினைக்கும் போது இதெல்லாம் எனக்கு பெருசா தெரியல…” உணர்ந்தே கூறினான்!
“ஆஹா… உங்களுக்கு கூட பீலிங்க்ஸ் இருக்கா சசி… மூணு அப்பாவி பசங்கள கொலை பண்ணிட்டு… என்ன பீலிங்க்ஸ்… என்ன பீலிங்க்ஸ்… சிவாஜி தோத்துடுவார் போங்க… இந்த நடிப்பை தானே நானும் நம்பினேன்…” என்று அவள் கோபத்தோடு ஏளனமாக கூறவும் அவளை அவன் பார்த்த பார்வையில் இருந்த வெறுமை மேகாவிடம் எதையோ யாசித்தது!
அவன் பேசாமல் அவனது வேலையை பார்க்க
“ஏன் சசி பேசமாட்டேங்றீங்க… அந்த மூணு பசங்களோட குடும்பத்துக்கு என்ன பதில் சொல்ல போறீங்க… எங்க அப்பா என்ன செய்தார்னு எனக்கு தெரியல… ஆனா இப்போ நீங்க அந்த பசங்களுக்கு பண்ண அநியாயத்த விடவா அதிகமா பண்ணி இருப்பார்?”
இப்பொழுதும் அவனது இந்த முகத்தை நம்ப முடியாமல் அவன் செய்வதை ஜீரணம் செய்யவும் முடியாமல் அரற்றி கொண்டிருந்தாள் மேகா… அவளது தவிப்பை பார்த்த சசிக்கோ வார்த்தைகள் வெகு தூரமாய்!
கண்களில் நீருடன் அருகில் வந்த மேகா,
“என்னால இன்னமும் உன்னை வெறுக்க முடியலை… உன்னை என்னோட உயிரா தானடா நினச்சேன்… ஏன்டா இப்படி பண்ண? ஏன் இப்படி பண்ணின?” அவனை பிடித்து உலுக்கி கொண்டிருக்கும் போதே செல்பேசி அழைக்க அவளது கைகளை விடுவித்து கொண்டு
“சொல்லு சுரேஷ்…”
“சசி… நீ காரியத்த முடிச்சிட்டியா?”
அவனால் பதில் பேச முடியவில்லை.
“என்ன சசி… ஒன்னும் சொல்ல மாட்டேங்ற?”
“சுரேஷ்… இது தேவையா?”
“என்ன சொல்ற நீ… அவன முழுசா அடிச்சு வீழ்த்த போற ஆயுதமே இந்த விஷயம் தான்னு நீ தானடா சொன்ன… இப்போ என்ன புதுசா பேசற… உன்னோட இந்த நிலைமைக்கான காரணத்த மறந்துட்டியா?”
“இல்லடா…” என்று தயங்க
“சசி… நீ முடிச்சிட்டு எனக்கு அதை என்க்ரிப்ட் செஞ்சு அனுப்பி விடு… நமக்கு நிறைய நேரம் கிடையாது… கரணம் தப்பினா மரணம்ன்னு தான் நாம இந்த வேலைல இறங்கி இருக்கோம்… அதை மறந்துட்டியா… இப்போ பிள்ளை பாசத்துல அழற ஆள் கொஞ்சம் சுதாரிச்சு நம்மள ஸ்மெல் பண்ணா அவ்வளவுதான் சசி… அதுக்குள்ளே வேலைய முடிக்கனும்ன்னு நீ தானே சொன்ன… இப்போ என்னடா இப்படி தயங்கற?”
“ஓகே டா… முடிச்சுடறேன்…” என்று மேகாவை பார்த்தவாறே கூறிமுடித்து வைத்தான்!
அப்போது அவனது முகம் அதீத குழப்பத்தை சுமந்து நின்றது! தன்னால் சுரேஷ் கூறியதை செய்ய முடியுமா? அதுவும் தன் மேல் இன்னமும் வெறுப்பை கொண்டு வர முடியவில்லை என்று கதறும் தன் இதயத்தை காயப்படுத்த தன்னால் இயலுமா? தன்னுயிரை பற்றி கவலை படாமல் தீயில் எனை தேடிய என் தேவதையே… உன் காதலை பெற எனக்கு தகுதி இல்லையே என்னுயிரே!
ஏன் மேகா என் மேல இவ்வளவு காதல வெச்ச? நீயும் மத்த பெரிய வீட்டு பொண்ணுங்க மாதிரி இருந்திருந்தா எனக்கு எவ்வளவோ நல்லா இருக்குமே… நீ வச்ச காதல் தானடி என்னை கொல்லுது… என்னை பழி முடிக்க விடாம தடுக்குது… ஆண்டவா எனக்கு மனசு திடத்த குடு.
அவன் ஒன்றும் பேசாமல் யோசித்து கொண்டிருப்பதை பார்த்த மேகா
“என்ன சசி? அடுத்து எத்தன பேர கொல்றதுக்கு யோசிக்கிறீங்க?”
ஒரு பெருமூச்சை பதிலாக குடுத்த சசி.
“ம்ம்ம்… கொலை இல்ல… ரேப்…”
அவன் கூறியதை கேட்ட மேகா உறைந்து விக்கித்து நின்றாள்!
***
ஓசோன் டவர்ஸ்
அனைவரும் தேனீ போல சுறுசுறுப்பாக வேலை தொடங்கிய காலை நேரம்! அனைவரின் காலை வாழ்த்தை ஏற்று கொண்டே வந்த அர்ஜுனின் கண்கள் அஞ்சலியை தேடியது… பயிற்சி பெறுபவர்களின் பகுதியில் அவளை காணாததை குறித்து கொண்டது மனது! டிஜிட்டல் அட்டன்டன்ஸ் ரிப்போர்டை திறத்து பார்த்தவன் அஞ்சலி இன்னும் வராததை உறுதி செய்து கொண்டான்! அருகில் இருந்த தன் உதவியாளர் கௌஷிக்கிடம்.
“கௌஷிக்… இனிமே வரவங்கள என்னை வந்து பார்த்துட்டு சீட்டுக்கு போக சொல்லுங்க…”
“ஓகே சார்…”
அவன் சொல்லி கொண்டிருந்த நேரம் அஞ்சலி உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள்!
அவசரமாக அட்டண்டர் வந்து ஜேஎம்டி அழைத்ததை கூறி அழைக்கவும்
அர்ஜுன் கேபினை அடைந்து
“மே ஐ கம் இன் சர்…”
“எஸ் கம்இன்…” கம்பீரமாக ஒலித்தது அர்ஜுன் குரல்!
உள்ளே சென்றவள் அங்கே அமர்ந்து இருந்த அர்ஜுனை நேராக பார்த்து
“சர்… நீங்க கூப்பிடீங்களாம்…”
நிமிர்ந்து பார்த்தவன் அஞ்சலியை பார்த்து அசந்தான்! தான் தேர்ந்தெடுத்த இளம்பச்சையும் பிங்க் நிறமும் சேர்த்த சல்வாரை அணிந்து புதிதாக பூத்த பூவாக வென்பளிங்கு மேனியில் எந்தவித ஒப்பனையும் இல்லாமல் வெறும் பொட்டு மட்டுமே வைத்து, இடையை தாண்டிய முடியை அலட்சியமாக பின்னல் பொட்டு, துப்பட்டாவை கூட ஏனோதானோவென்று போட்டிருந்தாலும் அழகோவியமாக வந்து நின்றவளை பார்க்கும் போதே அள்ளி அணைக்க கைகள் துடித்தது! நெற்றியில் விளையாடிய கற்றை குழலை ஒதுக்கி விட பரபரத்த மனதினை அடக்கி
“என்ன மேடம்… வந்த ரெண்டாவது நாளே லேட்? என்ன விஷயம்?” என்று நக்கலாக கேட்டான்!
“ஒரு லூசு நைட் முழுக்க மிஸ்ட் கால் விட்டுட்டே இருந்தது சர்… என்னால தூங்கவே முடில… காலைல வேற போன் பண்ணி பண்ணி என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்துச்சா… அதான் கொஞ்சம் லேட்…” அப்பாவித்தனமாக முகத்தை வைத்து கொண்டு சொல்ல
அடிப்பாவி நான் உனக்கு லூசா… இவ வாய அடக்கவே முடியாது போல இருக்கே… ஆனா நைட் போன் ரிங் போகறதுக்குள்ள கட் பண்ணிட்டேனே… அப்புறம் எப்படி? என்று நினைத்து கொண்டே
“ஏய் பிசாசு… நான் தான் நைட் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு கட் பண்ணிட்டேனே…”
“என்ன… நாற்பத்தி மூணு தடவையுமா சர்…” மனதில் இருந்த வலியை மறைத்து எப்போதும் பேசுவது போல் காட்டிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டாள்!
அடபாவி இப்படி எண்ணி வெச்சு மானத்த வாங்குறாளே என்று நினைத்து கொண்டே
“ஆஹா… எனக்கு இவ்வளவு மரியாதையா… ஹய்யோ சந்தோஷமா இருக்கு… இதையே மெய்ன்டைன் பண்ணு?”
அவள் ஒன்றும் பேசாமல் அவனது செல்பேசியை அவன் முன் வைக்க… அதை பார்த்தவன் உணர்வுகளை நேரடியாக முகத்தில் காட்டாமல்
“சரி என்ன சாப்பிட்ட?” என்று கேட்டான்! எதற்காக இப்படி கேட்கிறான் என்று புரியாமல் குழப்பத்துடன் பார்த்து
“இது தான் அபீசியலா சர்…”
“ஒழுங்கா ஒன்ன கேளு அஞ்சு… அபீசியலோ இல்ல அன்பீசியலோ… கேக்கற கேள்விக்கு பதில் வரணும்… தெரியுதா?”
“நானும் ஒன்னு சொல்றேன் சர்… அபீசியலா இருந்தா மட்டும் தான் பதில் சொல்வேன்… வேற கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது…”
“அப்படியா… சொல்லாம கேபின விட்டு நீ போகவும் முடியாது…” என்று இலகுவாக சொல்லிவிட்டு அவன் வேலையை கவனிக்க அஞ்சலியால் ஒன்றும் பேச முடியாமல் போனது! அவன் அவளை கடிப்பது பதில் சொல்லாததிற்காக இல்லை என்பது அவளுக்கும் புரியாமல் இல்லை… ஆனாலும் அவளை பொறுத்தவரை
இது வேண்டாம்… ஒரு நிமிடம் அவனையே பார்த்து கொண்டிருந்தவள்,
“சர் எனக்கு வேலை இருக்கு…” என்றாள் கடுப்பான குரலில்
“சொல்லிட்டு போ…” ஒரே வார்த்தையில் முடித்து விட
“இதுக்கு தான் வர சொன்னீங்களா?” என்று கோபத்தோடு கேட்க
“சரி… வேற எதுக்கெல்லாம் உன்னை கூப்பிடனும்னு நினைக்கிற எலிக்குட்டி…” என்று சோம்பல் முறித்து கொண்டே அவன் அப்படி அழைத்த விதத்தில் மயங்கிய அஞ்சலியின் மனதில் துக்கம் பொங்கியது… அர்ஜுன் சாமானிய ஆளாக இருக்க கூடாதா? மனம் ஏங்கியது!
இன்டர்காம் அடிக்க… கௌஷிக், ரைனா சௌத்ரி வந்திருப்பதாக அறிவிக்கவே அஞ்சலி வெளியே செல்ல எத்தனித்தாள்!
“நீ எங்க போற… சொல்லிட்டு போன்னு சொன்னேன்… நான் சொல்ற வரை என் கேபின்ல தான் இருந்தாகணும் அஞ்சலி…” என்று கறாராக அவன் கூறவும் ஒன்றுமே செய்ய தோன்றாமல் அமர்ந்தாள்! ச்சே ஏன் தான் இப்படி படுத்தறானோ?
ரைனா சௌத்ரி ஒரு பிசினெஸ் கோஆர்டினேட்டர்… பல்வேறு தொழில்களில் இருப்பவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் பாலமாக இருப்பவர்… தொழில்களுக்கு இடையில் தூது செல்வதற்கும் அரசின் முக்கியமான ஆட்களிடம் பேசுவதற்கும் நடுவில் மத்தியஸ்தராக இருப்பவர்… இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால்” ஹைடெக் மாமி” அனைத்து வேலைகளையும் செய்து காரியங்களை சாதித்து கொடுப்பவர்… இவரால் தமக்கு அரசாங்க தரப்பு காரியங்கள் பல ஆயின என்று அவர் வருவதற்குள் ஐந்து நிமிடங்களில் அர்ஜுன் அஞ்சலியிடம் கூறினான்.
ரைனா தனியே வராமல் இன்னொரு அழகான இளம்பெண்னுடன் வந்தார்!
“ஹாய் அர்ஜுன்… எப்படி இருக்க?
“நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி… நீங்க எப்படி இருக்கீங்க… உங்க வேலை எப்படி போகுது…”
“நான் நல்லா தான் இருக்கேன் அர்ஜுன்… நீயும் சரி உங்க அப்பாவும் சரி… பணம் எவ்வளவு வேணும்னாலும் குடுப்பீங்க… ஆனா வீட்டு பக்கம் வரவே மாட்டேங்கிறீங்களே… பாரு இப்போ நேஹா உன்னை பார்த்தே ஆகணும்னு என் கூடவே வந்துட்டா…”
அப்போதுதான் உடன் வந்த பெண்ணை பார்த்த அர்ஜுன்.
“நேஹா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்காங்க ஆன்ட்டி…” என்று ஓரக்கண்ணில் அஞ்சலியை பார்த்து கொண்டே அவன் கூறியவுடன் அந்த நேஹாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போன்ற பிரகாசம்! அஞ்சலியின் முகமோ கடுகடுத்தது!
“தேங்க்ஸ் அர்ஜுன்…” என்று இல்லாத வெட்கத்தை இருப்பதாக காட்டி கொண்டு அவள் கூற
“அர்ஜுன்… நீ இன்னைக்கு கண்டிப்பா பார்ட்டிக்கு வரணும்… சந்தோஷ் ராய் கிட்ட பேச்சு வார்த்தை நடத்தனும்… அப்புறம் டெலிகாம் மினிஸ்டர் கமலேஷுக்கு தாங்க் பண்ணனும்…”
“ஓகே ஆன்ட்டி… ஓகே… ஆனா சந்தோஷ் கிட்ட சொல்லிடுங்க… ரெண்டு பெர்சென்டேஜ் சேர்த்து குடுக்க அப்பா ஓகே சொல்லிட்டாங்க…”
“வாவ்… அப்படியா… அப்படீன்னா நம்ம பெர்சென்டேஜ் மறந்துடாத அர்ஜுன்… ஓகே வா… கண்டிப்பா பார்ட்டிக்கு வா…” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்ப உள்ளே வந்த கௌஷிக்கிடம் ரகசியமாக யாரையும் உள்ளே அனுப்ப வேண்டாம் என்று கூறி விட்டு கடுப்பில் அமர்ந்து இருந்த அஞ்சலியிடம்
“என்ன எலி… சீக்கிரம் சொல்லு…”
“ஏன் அந்த நேஹா மாதிரி எத்தன பேர் வர போறாங்க? என்னை சீக்கிரம் சொல்லுன்னு சொல்றீங்க…” கடுகாக பொறிந்தாள்!
“சரி சொல்லாத… இங்கயே உக்கார்ந்து என்னை சைட் அடிக்கனும்ன்னு ஆசை படுற… உன் ஆசைய நான் எதுக்கு தடுக்க போறேன்…” மீண்டும் அவளை வாரிவிட்டு அவன் வேலையை பார்க்க, அப்போதும் அவள் பதில் ஒன்றும் பேசாமல் அமர்ந்து இருக்கவே
“அஞ்சு… இப்போ அந்த அம்மா வந்தது எதுக்கு தெரியுமா?” என்று மெதுவாக ஆரம்பித்தான்
“ம்ம்ம்ம்… சொல்லுங்க தெரிஞ்சுக்கறேன்…” என்றாள் கடுப்பாக… அந்த நேஹாவை நினைக்கும் போதே அவளுக்கு பற்றி கொண்டு வந்தது!
“ஆஹா மேடம் ரொம்ப சூடா இருக்காங்க” என்று நினைத்து கொண்டு
“முதல் விஷயம் அந்த நேஹாவுக்கு என் மேல ஒரு கண்…” என்று அவன் கூறி முடிப்பதற்குள்
“சர்… எனக்கு ரொம்ப முக்கியமா இது?” என்று கொந்தளித்து விட்டு வெளியேற எத்தனிக்க
“ஹேய்… உக்காரு… உக்காரு… கூல் மேன்… எதுக்கு இவ்வளவு டென்ஷன்… ரெண்டாவது நமக்கு அவங்க ஸ்பான்சர் பண்றது சம்பந்தமா… அதுல அந்த சந்தோஷ் ராய்க்கு ரெண்டு பெர்சென்ட் அதிகம் வேணுமாம். ”
“அவங்க உங்களுக்கு ஸ்பான்சர் பண்றாங்களா? எப்படி?” புரியாமல் கேட்டாள் அஞ்சலி
“புரியலியா… இது தலைய சுத்தி மூக்க தொடர விளையாட்டு அஞ்சலி… ஒரு சின்ன எக்ஸாம்பில் சொல்றேன் கேளு… இப்போ எல்லா சேனல்ஸ்லையும் எஸ்எம்எஸ் போட்டி வைக்கறாங்க இல்லையா… அது எதுக்கு?”
“எதுக்கு… எதாச்சும் கேள்வி கேப்பாங்க… சப்போஸ் நமக்கு பதில் தெரிஞ்சா நாம எஸ்எம்எஸ் அனுப்புவோம்… நமக்கு லக் இருந்தா ப்ரைஸ் விழும்… நானும் நிறைய அனுப்பி இருக்கேன்…” சிறுபிள்ளையாய் பதில் கூறிய அழகை ரசித்தவாறே,
“கிழிஞ்சுது… சரி ரிஙிசி எடுத்துக்கோ… அந்த மாதிரி எஸ்எம்எஸ் போட்டில ப்ரைஸ் தொகை எவ்வளவு?”
“ம்ம்ம்… ரெண்டு லட்சம்… நானும் ஷாஷுவும் மிக்கியும் அதுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி அனுப்பி கடுப்பாகிட்டோம்… ஒரு தடவ கூட கிளிக் ஆகல…” என்று மிக வருத்தத்துடன் கூற அவளை பார்த்து சிரித்த அர்ஜுன்,
“உன்னை மாதிரி லூசுங்க தான் அவங்க டார்கெட்… சரி முறைக்காத… கேக்கறதுக்கு பதில சொல்லு… மொத்தம் இந்தியால எத்தனை டவுன், சிட்டி இருக்குன்னு தெரியுமா?”
“ம்ஹூம்… தெரியாது…” என்று தலையை ஆட்ட
“. ஐம்பதாயிரத்துக்கும் மேல பாப்புலேஷன் இருக்கற ஊரு மொத்தம் 798… இதுல பத்து லட்சத்துக்கும் மேல பாப்புலேஷன் இருக்கற ஊர் மொத்தம் முப்பத்து அஞ்சு…”
அஞ்சலி முதல் முறையாக அவன் மேல் மரியாதையோடு நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்!
“ஆவரேஜா ஒரு ஊருக்கு ஆயிரம் எஸ்எம்எஸ் அந்த இருபது நிமிஷத்துல போகுதுன்னு வை… ஒரு எஸ்எம்எஸ்க்கு ஆறு ருபாய் சார்ஜ் பண்றோம் அப்போ வால்யு எவ்வளவு?”
அவள் கணக்கு போட்டு பார்த்து
“ஐயோ… நாற்பத்தி ஏழு லட்சத்தி எண்பத்து எட்டாயிராம்… உப்ப்…”
“இது சும்மா மேலோட்டமான கணக்கு அஞ்சு… அதுவும் வெறும் இருபது நிமிஷத்துக்கு… ஒரு சிட்டில இருந்து ஒரு லட்சம் எஸ்எம்எஸ் கூட வரும்… அப்போ நினைச்சு பாரு… ஒரு மணி நேரத்துக்கு… அப்புறம் எல்லா எபிசொட்க்கும் நினைச்சு பாரு… அந்த ரெண்டு லட்சம் ப்ரைஸ் எந்த மூலைக்கு… அந்த ரெண்டு கோடி தான் எந்த மூலைக்கு?”
“ஐயோ… அர்ஜுன்… இத்தன பணம் யாருக்கு?”
“ம்ம்ம்… ரோட்ல போறவனுக்கு… வேற யாருக்கு லூசு… நம்மள மாதிரி டெலிகாம் கம்பனிக்கு… அப்புறம் அந்த ஷோ நடத்தரவங்க… அப்புறம் சேனல் ஓனர்… அப்புறம் காம்பியர் பண்றவங்க…”
“ஐயோ… அவ்ளோவா?” அப்பாவியாக அஞ்சலி!
“இதுல ஒவ்வொரு சர்வீஸ் ப்ரோவைடரும் அவங்களுக்கு ஷேர் குடுக்கணும்… ஸ்பான்சர் பண்ணனும்… அந்த ஷேர் தான் ரெண்டு பெர்சென்ட் அதிகமா வேணும்னு ஒரு சேனல்ல கேக்கறாங்க… அத தான் அந்த அம்மா என் கிட்ட கன்வே பண்ணாங்க அஞ்சலி… புரிஞ்சுதா?”
“புரிஞ்சுதே…” என்று தலையை வேகமாக ஆட்டினாள் அஞ்சலி
“என்ன புரிஞ்சுது?” என்று அர்ஜுன் கேட்க
“இனிமே நான் எஸ்எம்எஸ் அனுப்பவே கூடாதுன்னு புரிஞ்சுது…” என்று முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு சொல்லவும்.
“ஹேய்… லொள்ளுடி உனக்கு…” என்று சாதரணமாக சொல்லிவிட்டு நாக்கை கடித்து கொண்டான்!
“என்னது டி யா? ஹலோ என்ன மரியாதை தேயுது…” என்று ஒரு மார்கமாக பார்த்து மிரட்ட ஆரம்பிக்க… அவனது பார்வை அவள் கொண்டு வந்து வைத்த செல்பேசியிலேயே இருக்க.
“ஏன் நான் சொல்ல கூடாதா?” புருவத்தை மேலேற்றி அவளை பார்த்து கண்ணை சிமிட்டி கொண்டு கேட்டு அந்த செல்பேசியை எடுத்து கொண்டு மெதுவாக அவள் அருகில் வந்தான்!
பார்த்த அஞ்சலிக்கு ஜிவ்வென்று ரத்த ஓட்டம் மேலெழுந்தது… இதயம் துடிப்பதை நிறுத்தி பின் துடிக்க… சிவந்த முகத்தை மறைக்க வேறுபுறம் திரும்பி வெளியே செல்ல முயன்றாள்! சட்டென்று அவளது கையை பிடித்த அர்ஜுன் கொஞ்சம் கொஞ்சமாக தன் பக்கம் அவளை கொணர்ந்தவன், சில்லிட்டிருந்த அவளது கைகளில் செல்பேசியை குடுத்து.
“ஹேய்… அஞ்சுகுட்டி… நான் எது குடுத்தாலும் திருப்பி குடுப்பியா? ம்ம்ம்ம்…”
அவளது நரம்புகளில் இசை மீட்டினான்! கைகளை விடுவித்து கொண்டு வெளியே செல்ல முயன்ற அவளின் முயற்சியை வெகு இயல்பாக முறியடித்தவனை விட்டு விலக முடியாமல் தவித்தது பெண்மை!
“அர்ஜுன்ன்ன்… வி… விடுங்க… இ… இதெல்லாம் சரி இல்ல…” குரல் நடுங்க
“எதல்லாம் சரி இல்லடா… நான் கேட்டதுக்கு பதில சொல்லு… நான் எது குடுத்தாலும் திருப்பி குடுப்பியா?”
ஒரு மாதிரியான குரலில் கேட்டு விட்டு அவளது இடுப்பை வளைத்து பிடித்து இன்னும் நெருங்கியவன்… அவளது உடல் நடுங்கியதை உணர்ந்தான்! தன்னோடு அவளை அவன் இறுக்க முயல… அவளோ விலகும் வழி தெரியாமல் தவிக்க… அவள் செய்த முயற்சி அனைத்தையும் முறியடித்து தன்னோடு அணைத்து கொண்டான் அர்ஜுன்.
“அர்ஜுன்… வேணாம் விடுங்க… எனக்கு இது பிடிக்கல…” கண்களில் அவளையும் அறியாமல் நீர் கோர்க்க.
“நிஜமா… என்னை பிடிக்கல…” அவளின் முகத்தை கைகளில் ஏந்தி அவனது மூச்சு காற்று அவள் மேல் படுமளவு நிறுத்தி அவன் கேட்ட போது என்ன சொல்ல? நேர்கொண்ட அவனது பார்வையை சந்திக்க முடியாமல் கண்களின் குடைகள் கீழ்சரிய… அதில் மயங்கிய அர்ஜுன் அவளின் அதரங்களை சிறையெடுக்க துணிந்த போது,
“ம்ம்ம்… ஆமா பிடிக்கல…” அவளிடம் இருந்து வந்து விழுந்தன சொல்லம்புகள்!
“காரணத்த சொல்லு…” அவன் கைகளை முகத்திலிருந்து விலக்கியவள்… அவன் புறம் திரும்பாமல் வேறு புறம் திரும்பி,
“இதுல என்ன காரணம் தேவை இருக்கு? நான் வந்தது வேலை செய்ய… உங்களோட இப்படி கூத்தடிக்க இல்ல… இதுக்கெல்லாம் வேற ஆள் இருப்பாங்க… அவங்கள வெச்சு செய்ங்க…” கண்களில் நீரோடு அவனது முகத்தை பார்க்காமல் ஒரு வழியாக கோர்வையாக சொல்லி முடித்தாள்! எப்படியாவது அவன் பக்கமே ஓடும் தனது மனதை வென்று… அர்ஜுனை மறுக்கும் வேகத்தோடு.
அதை கேட்ட அர்ஜுனின் கோப சூடு ஏறியதில்… முறைத்து கொண்டே சட்டென்று அவன் அவளை விட அவள் தனியே நிற்க முடியாமல் தடுமாறினாள்!
“ரப்பிஷா பேசாத அஞ்சலி… என்னை பார்த்தா இப்படி சொல்ற நீ? சின்ன பொண்ணாச்சேன்னு பார்த்தா… ச்சே… ஏன் நீ தானே சொன்ன ரிச் அண்ட் ஹன்ட்சமா இருந்தா தான் லவ் பண்ணுவேன்னு… இப்போ தான் பார்த்துட்டியே… என் ஸ்டேடஸ் என்னன்னு… இப்போ கூட நான் வேணாமா?” கண்மண் தெரியாத கோபத்தில் வார்த்தைகளை கத்தியாக பாய்ச்சினான்!
அவள் பதில் பேசாமல் அவனை வெறுமையாக பார்த்துவிட்டு வெளியே போக முயல அவளது கைகளை பிடித்து நிறுத்தியவன்
“பதில் சொல்லிட்டு போ…”
“என்ன சொல்றது?”
“ஏன் என்னை விட பணக்காரனா தேடறியா… இல்ல…” கோபத்தில் தெறித்து விழுந்தன வார்த்தைகள்!
“அர்ஜுன்ன்ன்ன்ன்ன்…”
“ஏண்டி கத்துற… உண்மைய தான் சொல்லிடேன்… என் கிட்ட இருக்கற பணம் பத்தாதுன்னு… அதனால தானே கிளிபிள்ளைக்கு சொல்ற மாதிரி சொன்னேன்… ச்சே… எனக்கு என்னதான் பண்றதுன்னே புரியலடி… நீ என்னதான் எதிர்பார்க்குற அஞ்சலி…”
அவனது ஒவ்வொரு வார்த்தைக்கும் லட்சம் முறை இறந்து கொண்டிருந்தாள் அஞ்சலி… பதில் பேச கூட சக்தி இல்லாமல் தொய்ந்து போய் கீழே சரிந்து அமர்ந்தாள்… அவள் கைகளின் நடுக்கம் குறையவில்லை… உடலின் சக்தி அனைத்தும் வடிந்து விட கைகளால் முகத்தை மூடி கொண்டு கதற ஆரம்பித்தாள்!
“அஞ்சலி… ஏய் அஞ்சலி…” அவளை அர்ஜுன் உலுக்க அதற்கு அஞ்சலியிடம் பதில் இல்லாமல் போனது… அவளது கதறல் நின்றபாடில்லை… அர்ஜுனோ பதட்டமாக,
“அஞ்சு… ப்ளீஸ் அழாதடா… இது ஆபீஸ் மா… ப்ளீஸ்… என்னால தாங்க முடில… ப்ளீஸ் அழாத…” என்று தழுதழுக்க அவன் கூறுவதை கேட்டவள் சற்றே முகத்தை உயர்த்தி அவனை பார்த்தாள்!
“எனக்கு எதுவுமே வேணாம்… வேலையும் வேணாம்… மும்பையும் வேணாம்… நான் சென்னைக்கே போறேன்… என்னை ரிலீவ் பண்ணிருங்க… ப்ளீஸ்… என்னால முடியாது…” அழுது கொண்டே கூற
“சாரிடா… கோபத்துல கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்… ப்ளீஸ்… இதுக்கெல்லாம் இப்படி நினைக்காதம்மா… என் தங்கம்ல… அழாதடா… ப்ளீஸ்…” எப்படியாவது சமாதான படுத்தி விடும் நோக்கத்தோடு அவளிடம் கெஞ்ச
“இங்க இருந்தா இப்படியே தான் பேசிட்டு இருப்பீங்க… என்னால தாங்க முடில…” அழுகை குறைந்து விசும்பலாக மாறி இருந்தது!
“சரி… ஓகே… பேசவே மாட்டேன் போதுமா?” என்று கூறி விட்டு அவளை சோபாவில் உட்கார வைத்து தண்ணீர் குடுக்கும் போதே செல்பேசி அழைக்க
“கௌதம் தான் அஞ்சு… நீ அழுது வைக்காத… என்னை வேற மாதிரி தப்பா நினைச்சுடுவான்…” ன்று கூறிவிட்டு
“ஹலோ… சொல்லுடா மச்சான்…”
“அர்ஜுன்… ஒரு ஷாக்கிங் நியூஸ்… மேகாவை… அந்த சசி கல்யாணம் பண்ண கூட்டிட்டு போகலடா…”
“பின்ன… எதுக்குடா…” அதிர்ச்சியில்.
“கடத்திட்டு போயிருக்கான்…”
“என்னடா சொல்ற? உனக்கு எப்படி தெரியும் கௌதம்?”
“இங்க அவங்க வீட்ல தான் இருக்கேன்… கணபதி ஸ்டோர்ஸ் ஓனர் பொண்ணுதான் மேகா… இங்க ஒரே களேபரமா இருக்கு அர்ஜுன்… என்ன பண்றதுன்னு தெரியல… அதான் உனக்கு போன் பண்ணினேன்…” குரலின் பதட்டத்தை அர்ஜுனால் உணர முடிந்தது!
“சரி நீ கிளம்பி உடனே மும்பை வா… அதுக்குள்ள யோசிக்கலாம்… கவலை படாத கௌதம்… கண்டிப்பா மேகாவ கண்டுபிடிச்சுறலாம்…”
பேசி கொண்டிருக்கும் போதே ஹாலில் இருந்த டிவி சேனலில் ஒரு பெண்ணின் பேட்டி ஒளிபரப்பாகியது.
“நடிகையை ஏமாற்றிய தொழிலதிபர்! பாருங்கள் கண்ணீர பேட்டியை!” என்று ஆரம்பித்த பேட்டியில் தோன்றியவள் கௌதம் ரயிலில் சசியுடன் பார்த்த பெண்… இவள் எப்படி இதில்? என்று யோசித்து கொண்டே
“அர்ஜுன் உடனே ***டிவிய போடு… சீக்கிரம்…”
அர்ஜுன் ஓடி சென்று அறையில் இருந்த டிவி யை ஆன் செய்து குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு தாவ
தன்னை பற்றியும் கணபதிக்கும் தனக்குமான உறவை பற்றியும் அவர் செய்து வந்த அநியாயங்களை பற்றியும் கடைசியாக தனக்கு அனைத்து உண்மையும் தெரிந்து இருந்ததால் விலக நினைப்பவளை கூட விலக விடாமல் கொன்று விடுவதாக மிரட்டுவதால் பயந்து இப்படி பேட்டி குடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானதாக கண்ணீருடன் கூறினாள்! தனக்கு ஏதாவது ஆனது என்றால் அதற்க்கு காரணம் கணபதி தான் என்பதையும் அறிவித்து இருந்தாள்!
கணபதி அதை பார்த்து அதிர்ச்சியில் கைகள் நடுங்க… கோபம் கொப்பளிக்க
“கோபாலா…” என்று கத்தினார்
அவர் அழைத்தது அவரது உதவியாளரை… உடன் ஓடி வந்த அந்த கோபாலன் கணபதி இருக்கும் கோபத்திற்கு என்ன நடக்குமோ என்று நடுங்கி கொண்டு
“என்னங்க அண்ணாச்சி…”
“இந்த *** க்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது… அவ மொதல்ல எங்கன்னு பாரு…” கிட்டத்தட்ட கத்தினார்.
அர்ஜுனிடம் பேசி கொண்டிருந்த கௌதமோ
“சார்… டென்ஷன் ஆகாதீங்க… இப்போ உங்களுக்கு உங்க மகள் வேணுமா வேணாமா?”
“என்ன தம்பி… இப்படி சொல்றீங்க?”
“அப்படீன்னா கேக்கறதுக்கு உண்மையான பதில சொல்லுங்க… உங்களுக்கு வேற யார் மேல சந்தேகம்? நிச்சயமா தனிபட்ட ஆளோட வேலை இல்ல இது…”
“யார் மேலன்னு தம்பி சந்தேகபடுறது… எங்க வியாபாரத்துல பகையாகறது சகஜமாச்சே… எனக்கு எல்லாமும் ஒண்ணா சேர்ந்தா வரணும்…”
அவர் இப்படி புலம்பவும் சட்டென்று தோன்றியது
“அப்படீன்னா கண்டிப்பா பழைய பகைதான்… யார்ன்னு யோசிங்க சார்… நான் இப்போ மும்பை கிளம்பறேன்… கண்டிப்பா உங்க பொண்ண கூட்டிகிட்டு தான் வருவேன்…” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே கணபதி வீட்டு தொலைபேசி சினுங்கியது… எடுத்து பேச சொல்லி கண்ணை அசைக்க.
“அவன் தான் அர்ஜுன் லைன்ல வெயிட் பண்ணு…” என்று அவனிடமும் கூறினான் கௌதம்.
“நம்பர் டிஸ்ப்ளே ஆகுதா கௌதம்…”
“ம்ம்ம்… ஆகுது மச்சான்… ஆனா அது ஏதோ ஸ்கைப் நம்பர் மாதிரி தெரியுது… ட்ரேஸ் பண்ண முடியுமா…”
“நம்பர் குடு… ஆனா ஸ்கைப் நம்பர்னா கொஞ்சம் கஷ்டம் கௌதம்… அவரை ஸ்பீக்கர் போட சொல்லு…” என்று அர்ஜுன் சொல்லவும் கௌதம் சைகையால் கணபதியிடம் கூறினான்!
“என்ன மிஸ்டர் கணபதி… ராகினி பேட்டி பார்த்தீங்களா… நல்லா இருந்துச்சா…”
“தம்பி… தயவு செஞ்சு என் பொண்ண விட்டுடுப்பா… கெஞ்சி கேக்கறேன்…” என்று குரல் நடுங்க கெஞ்சினார்!
“விட்டுடறேன் கணபதி சார்… ஆனா முழுசாவா இல்ல பாக் பண்ணியான்னு இன்னும் நீங்க சொல்லவே இல்லையே…”
“ஐயோ… கடவுளே… தம்பி… என்ன நான் பண்ணி இருந்தாலும் என்னை வெட்டி கூட போடுப்பா… என் பொண்ண விட்ரு… அது வாழ வேண்டிய பொண்ணு…” அவனிடம் கெஞ்சி கதறினார்!
“அப்படீன்னா நாங்க மட்டும் உங்களுக்காக சாக வேண்டியவங்களா கணபதி சார்?” குரலில் கல்லின் தன்மையோடு சசி கேட்க.
“தம்பி… தயவு செஞ்சு என் பொண்ணு கூட பேசவாச்சும் விடுப்பா அவ குரலையாவது கேக்கறேன்…” அவரது கண்களில் கண்ணீர் கரைபுரண்டது… வெளியில் அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் தன் மகளுக்கு ஒன்று எனும் போது?
“ம்ம்ம் கேக்கலாமே… இப்போ தான் உங்களுக்கு லைவ் டெலிகாஸ்ட் பண்ண போறேனே… உங்க பொண்ண ரேப் பண்றத… அப்போ அவ குரலை நல்லா கேட்டுகோங்க கணபதி சார்…”
அதை கேட்ட கௌதம்?





