arrow_back
காஞ்சித் தலைவன் அத்தியாயம் 7
காஞ்சித் தலைவன் chevron_right பகுதி 7 / 19

அத்தியாயம் 7

visibility 537
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அத்தியாயம் 5 
ஆண்டு -2019 மாதம்- ஏப்ரல்.
-இரவு 2. 00 மணி.
இடம் -காஞ்சிபுரம்.

ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான      சரித்திரத்திற்க்கு,   பல்வேறு மன்னர்களின்    வீர, தீரச் சாகசத்திற்கு  சான்றாய், பல சமயங்களை வளர்த்து,  ஆன்மீக    நகரமாய், கல்வி செல்வத்தின் உறைவிடமாய்,  நிமிர்ந்து நின்று     .கொண்டிருந்த காஞ்சிபுரம், அன்றிரவு மேலும் நடக்க  இருக்கும்  தெய்வ     நாடகத்திற்கு   மௌன சாட்சியாய்   இருந்தது.

காஞ்சி   காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி     விசாலாட்சி” என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி   வடிவங்களைக்   குறிப்பிட்டுச்   சொல்லும்.

‘மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள், நிறைவேற்றுபவள்’ என்பதாலும், அம்பிகைக்கு, ‘காமாட்சி’  என்னும்   திருநாமம்  வந்ததாய்      சொல்வார்கள்.

அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி     செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன் அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை   நாடி   வந்து    துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம்     நிறைவேற்றி   அருள்பவள்,   அன்னை   காமாட்சி.

‘காம’  என்றால்,  ‘அன்பு, கருணை.’
‘அட்ச’  என்றால், ‘கண்.’
எனவே, ‘காமாட்சி’ என்றால், கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள்.

புண்ணிய பூமியான பாரத தேசத்தில் (இந்தியாவில்) உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், ‘காமகோடி பீடம்’ என்று அழைக்கப்படும்    காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது.

தந்திர சூடாமணியின்  படி    இது,   51   சக்தி   பீடங்களில்,   தேவியின்   இடுப்பு    எலும்பு   விழுந்த சக்தி                பீடமாகும்.

ஸ்ரீ  லலிதா   திரிபுரசுந்தரியின்  பூரண பிம்ப சொரூபிணியாகத்   திகழ்வது, அருள்மிகு அன்னை காஞ்சி  காமாட்சியின்  மூல விக்கிரகம் ஒன்றுதான்.

அன்னை  காமாட்சி,  கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள்.

அன்னை  காமாட்சி திருக்கோயில் காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில், ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய  ராஜகோபுரத்துடன்,   கண்களையும், உள்ளத்தையும்  பக்திப் பரவசமாக்கும் ஓர் அழகிய, கம்பீரமான ஆலயமாக எழுந்து    நிற்கின்றது.

அன்னை காமாட்சி இத்திருக்கோயிலில்,  ‘ஸ்தூலம்,  சூட்சுமம், காரணம்’ எனும் மூவகை வடிவிலும்  அமைந்து  அருள்  புரிகின்றாள்.

பெரும்பாலான  கோயில்களில்  இவற்றில்  ஒன்றிரண்டு   வடிவில்  தான் அன்னை      காட்சியளிப்பாள்.

அந்த  மூவகை  வடிவங்களாவன: காமகோடி காமாட்சி (ஸ்தூல வடிவம்   மூல   .விக்கிரக   உருவில்) அஞ்சன காமாட்சி (அரூப லட்சுமி) (சூட்சும வடிவம்) காமகோடி  பீடம்  எனப்படும்,  ‘ஸ்ரீ   சக்கரம்    (காரண வடிவம்).

காமாட்சி   அன்னைக்கு,   ‘மகாதேவி,   திரிபுரசுந்தரி,   ராஜராஜேஸ்வரி,  காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர  நாயகி’  என்னும்  திருப்பெயர்களும்  உண்டு.

காஞ்சிபுரம்   திருத்தலத்திலுள்ள  எல்லா    சிவாலயங்களுக்கும்  காமாட்சி   அம்பாளே   மூலவர்  அம்பாளாக   விளங்குகிறாள். இதனால்  காஞ்சீபுரத்தில்  உள்ள சிவாலயங்களில்,  அம்பாளுக்குத்   தனி    சந்நிதிகள்   இருப்பதில்லை.

அயோத்தியின்   தசரத    சக்ரவர்த்தி    இத்திருக் கோயிலில்   ‘புத்திர காமேஷ்டி’    யாகம்  செய்தார். இது   மார்கண்டேய   புராணத்தில்    உள்ள    தகவல்   ஆகும். இங்கு   யாகம்    செய்ததாலேயே, ‘ஸ்ரீமன்                    நாராயணன், ஸ்ரீராமராய்’ தசரதனுக்கு மகனாய் பிறந்ததாக   ஐதீகம்.

நித்திய  கன்னியாய்  இருந்து, பெண்களின்   திருமாங்கல்யத்திற்கு  காவலாகவும், உலகத்திற்கே  அன்னையாக  இருந்து, பெண்களின் மணி வயிற்றை மலரச் செய்து, சந்தான பாக்கியத்தை வழங்கும்   தாயாகவும்   அருள்  பாலிக்கிறாள்    ஜகத் ரட்சகி.

காமாட்சியின்  பிரகாசமான  முகத்தை  தீர்கமாகத்   தரிசிப்பவர்களுக்கு,   அம்மனின்     கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை  ஏற்படுத்தும்  பேரதிசயமும் இந்தக் கோவிலில்  நிகழும்   அற்புதமாகும்.

கிருதயுகத்தில் துர்வாசரரால், 2,000 ஸ்லோகங்களாலும், திரேதாயுகத்தில் பரசுராமரால், 1,500 ஸ்லோகங்களாலும், துவாபரயுகத்தில் தௌமியாசார்யரால், 1,000 ஸ்லோகங்களாலும்,     கலியுகத்தில்  ஆதிசங்கரரால், 500 ஸ்லோகங்களாலும் போற்றி  வழிபடப் பெற்றவள் காஞ்சி காமாட்சி அம்மன்.

மகா பெரியவா தம்முடைய அருளுரையில், ‘மாயைக்குக்  காரணமான  பிரம்ம சக்தி காமாட்சி தேவி.  அவளே  ஞானமும் அருள்பவள்.   அனைத்துக்கும்   அவளுடைய கருணைதான்  காரணம்.

மாயைகள் பலவற்றை அவள்     நம்முடைய    வாழ்க்கையில் நிகழ்த்தினாலும், அவற்றில்  இருந்து  விடுவிக்கிற  கருணையும் அவளிடம்  பூரணமாக  உள்ளது.
மாயையினால் நாம் உண்டாக்கிக் கொள்கிற   கஷ்டங்களுக்கும் துக்கங்களுக்கும்  காரணம்              நம்முடைய   இந்திரியங்களும்  மனசும் தான். 

இந்திரிய சுகங்களின் வழியில் நம்முடைய     மனதைச்  செலுத்தி,  நம்முடைய   ஸ்வபாவமான ஆத்ம  சுகத்தை  மறந்து விடுகிறோம்.  பஞ்சேந்திரியங்களும், மனமும்    நம்மை      ஆட்டிப்   படைக்கின்றன.
இவற்றுக்குக்  காரணம்   மாயை.  அந்த மாயையே இவற்றைச் சுத்தப்படுத்தி,  இந்திரிய  விகாரங்களில்  இருந்தும்,  மன சஞ்சலங்களில் இருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காகவே   அம்பிகை காமாக்ஷியாக வருகிறாள்” என்று  அருளி  உள்ளார்.

‘ச்ரியம்  வித்யாம் தத்யாத் ஜனனி 
நமதாம் கீர்த்திமமிதாம்   ஸுபுத்ரம் 
ப்ராதத்தே  தவ  ஜடிதி  காமாக்ஷி!
கருணா த்ரிலோக்யா மாதிக்யம்
த்ரிபுரபரி பந்திப்ரணயினி ப்ரணாமஸ்த்வத்பாதே
ஸமிததுரிதே  கிம் ந குருதே’
‘காமாக்ஷி அன்னையே!… உன்னை வணங்குபவர்களுக்கு  உனது   கருணையானது    தனம், வித்தை,   அளவற்ற   கீர்த்தி, நல்ல புத்திரன், மூவுலகிலும் மேன்மையாக இருக்கும் தன்மை, ஆரோக்கியம், ஆயுள் ஆகியவற்றை வெகு   விரைவிலேயே  வரமாகத்  தருகிறது.
திரிபுர  சம்ஹாரம்   செய்த பரமேஸ்வரரின்  பத்தினியே!… பக்தர்களது பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த  நமஸ்காரமானது,   எங்களுக்கு   எதைத்   தான் கொடுக்காது?…’ என்று  மூக  பஞ்ச  சதியில்,  காஞ்சி   மஹா  பெரியவரின்  சுலோகம்  சொல்லாமல் சொல்கிறது அன்னை  காமாக்ஷியின்   கருணையை.

கருணை கடலான அந்த அன்னையின் முன், நள்ளிரவில் பூட்டியிருந்த கோயிலுக்குள் பூஜை செய்து,   ஒரு  கோயிலிலிருந்து இன்னொரு கோயிலுக்கு    மாயமாய்    வந்த    தவசீலர்,    பத்மாசனத்தில் கண் மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

அவர்   முன்னே    பல வருடங்களுக்கு முன்    தஞ்சையில் , முத்துசாமி  தீக்ஷிதரின்  முன்  அமர்ந்திருந்த  அதே  குழந்தை  அமர்ந்து    சிரித்து கொண்டிருந்தது.

மாய   மந்திர   வித்தை    போல்,   அந்தக்      கர்ப்பகிரகத்தில்  அந்தக்  குழந்தை மேல் மலர்மாரி  பொழிந்து  கொண்டிருந்தது.

‘அஷ்டோத்திர தீபம்’ எனப்படும், நூற்றியெட்டு அடுக்கு கொண்ட தங்க விளக்கு அந்தரத்தில் பறந்தவாறு  தீபாராதனையை  அந்தக்                   குழந்தைக்குக்  காட்டி  கொண்டிருந்தது.

எங்குமே காண கிடைக்காத, பிறவி என்னும் பெருங்கடலை கடக்க உதவும் தரிசனம்.

‘தான்’  என்ற  அகந்தை  அழிந்து,  அனைத்தும்  சக்திமயம் என்று  உள்ளம்  உருகும்  அருள்  வடிவம் அது.
எப்பேற்பட்ட  கடாக்ஷம்  இது!

முப்பத்து முக்கோடி தேவதைகளும், பஞ்சப்ரேத மூர்த்தங்களுக்கும்  கிடைக்காத  தர்சனம்.

“வித்யுத் கோடி ஸமப்ரபாம்!!” என ஜயதுர்கா த்யானம் கூறுகிறதே!…  அதுபோல்  கோடி  மின்னல் தோன்றி   மறைந்தது  போலோரு  தேஜோ  ரூபம்  அது.

காமாக்ஷி  ஸாதாரண  சக்தி  இல்லை.  மஹாசக்தி!…
காளி  முதல்  கமலை    ஈராகத்,  தசமஹா   வித்யை களின்  ஸர்வ  ஸமஷ்டியும்  ஐக்யமான  மஹாசக்தி.

காமாக்ஷியை காளியாக  கண்ட மஹான்கள் உண்டு. மஹாஷோடஷீயாகவும் கண்ட மஹான்கள் உண்டு. கௌரீயாகக் கண்ட மஹான்களும் உண்டு.

க்ஷணத்திற்கு  க்ஷணம்  சக்தியின்  தீக்ஷண்யம் மாறுபட்டுக் கொண்டே  இருக்கும்  கருவறை அது.
சில   ஸமயம்    மந்தஹாஸம்  இருக்கும்   அவளிடம்.
சிலஸமயம்  அட்டஹாஸ  சிரிப்பு  தோன்றும்.
சிலஸமயம்  ஆனந்தலஹரியாய் இருப்பாள்.
சிலஸமயம் மோனத்தில் ஆழ்ந்திருப்பாள்.
சில  ஸமயம் காளியாகவும் தோன்றுவாள்!
சில  சமயம் குழந்தையாகவும்     காட்சி யளிப்பாள்.

ஸாக்ஷாத் ஸம்பூர்ண லலிதா பராபட்டாரிகா இவள்.
எவளுக்கு மேல் ஒரு வஸ்து   இல்லையோ  அந்த  லலிதை  இவள்!
மஹா த்ரிபுரஸுந்தரி
மஹா ராஜராஜேச்வரீ .
மஹா ஷோடஷீ இவள்.

கண்  மூடி  ஒரு  கணம்  தியானிக்க, உடலே    காணாமல் போய் விட்ட உணர்வையும், தேக  சிலிர்ப்பையும் கொடுக்கும் உன்னத   ஆன்மீக அலை   சூழும்   படி   செய்பவள்.

‘காமாக்ஷி கருணா விலாசினி!
காமக்கோடி பீட வாசினி! 
சஞ்சீவினி! 
காமக்கோடி பீட வாசினி ,
மந்தஹாசினி!… மதுர பாஷினி!… 
சந்திராலோசனி!.. சாபவிமோசனி!..
பவதாரிணி!… பரிபூரணி!..
சகல லோக சௌக்கிய தாரிணி  சஞ்சீவினி, 
காமக்கோடி பீட வாசினி,
கிருஷ்ண சோதரி, 
கனக சுந்தரி, 
திவ்ய மஞ்சரி!…
தேவ மனோகரி!… 
பரமேஸ்வரி, பஞ்சாட்சரி 
அனந்தயான அமிர்தசாகரி !
சஞ்சீவினி…  காமக்கோடி பீட வாசினி!…’
என்று  ஊனும்,    உயிரும்   உருக   வைக்கும் தெய்வ சொரூபம்,  அங்குக்  குழந்தை  வடிவில்  தன்  நாடகத்தைப்   பக்தனிடம்   நடத்தி   கொண்டிருந்தது.
https://www.youtube.com/watch?v=ZIwtwsJajcw
எத்தனை  ஜென்மத்து  சௌபாக்கியமோ!…

உலகத்திற்கே அன்னையவள், சிறு குழந்தையாய்,  ‘சின்ன சிறுக்கி’ என்று மதுரை குழந்தையானந்த  ஸ்வாமிகள்   என்றும்     மீனாட்சி  மைந்தன்  என்று   அழைக்கப்பட்டவர் வர்ணித்த அதே  தெய்வ  சொரூபம்.

வெளியே  மழை வெளுத்து வாங்கி  கொண்டிருக்க,  அதே   சமயம், இன்னொரு கோயிலான  ஏகாம்பரேஸ்வர்  கோயில் மதில் சுவர்  அருகே   நின்றது  ஒரு  வேன்.

அதிலிருந்து திடக்காத்திரமாய் இறங்கினார்கள் நால்வர்.
முகத்திலேயே எழுதி ஒட்டியிருந்தது அவர்கள் எந்தவிதமான பஞ்சமா பாதகத்திற்கும் அஞ்சாதவர்கள்  என்று.
வேனிலிருந்து   இறங்கியவர்கள்,  தங்கள் முகத்தை  மாஸ்க்கினால்  கொண்டார்கள்.

அவர்கள்   கண்கள்   மட்டுமே  வெளியே  தெரிந்தது.

பெய்து கொண்டிருந்த கணமழை அவர்களுக்கு ஒரு  பொருட்டாகவே  இல்லை.  கோயிலின் பின்புறம் துறு பிடித்த இரும்பு கதவொன்று இருக்க,  வெகுசுலபமாய்  அதை   அறுத்து உள்ளே       நுழைந்தார்கள்.

நாற்பது   ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள        அந்தக்  கோயில் முக்கிய   வளாகத்திற்குள்       நுழையவே    நீண்ட    தூரம்   நடக்க வேண்டி      இருக்கும்.

பஞ்ச  பூத  ஸ்தலத்தில்  மண் தளம் ஆயிற்றே!…
மனதில் பக்தியுடன் நடக்காமல் இறைவனை அடைய முடியாது என்று சொல்லாமல் சொல்லி கொண்டிருந்ததோ  என்னவோ.

எத்தனை   உயரம்  சென்றாலும், எத்தனை      செல்வம் சேர்த்து வைத்தாலும், கடைசியில்     பிடி    மண்ணாய்  போவது    தானே மனித வாழ்க்கை என்று   உபதேசம்  செய்யும்  ப்ரிதிவி  தளம்.

இதையெல்லாம்   புரிந்து கொண்டிருந்தால்,      நம்மைப் படைத்தவனையே திருட வேண்டும் என்ற  எண்ணம்  ஏன்  வரப்  போகிறது?

இந்திய  அளவில்  பழமையான  கோயில்   சிலைகளைக் கொள்ளையடித்து   வெளிநாடு களுக்கு  விற்கும்  கும்பலின்,  தமிழக கிளையைச்  சார்ந்தவர்கள்  அவர்கள்.

 

சிலை கடத்தல் பன்முக தன்மை 

இந்தியாவின்  நீண்ட வரலாறு, அது வளமான சமூக  கலாச்சாரம், கடந்த காலங்களில் பல விலைமதிப்பற்ற கலைகள் உருவாக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.

எவ்வாறாயினும், கலை மற்றும் கலாச்சாரத்தின் இந்த ஆதாரங்கள், ஒவ்வொரு இந்தியனின்  பெருமை, திறமைக்குச் சான்று என்று இருப்பதற்கு பதில் துரதிருஷ்டவசமாகத் திருடப்படுகின்றன.

வருடத்திற்கு கணக்கில் தெரிந்து கடத்தப்படும் சிலைகளின்    எண்ணிக்கை மட்டும்  ஆயிரத்திற்கும்    மேல்.   கணக்கில்    வராதவை இன்னும்  எத்தனையோ.

ஒரு   சமுதாயத்தின்   கலாச்சாரத்தை அழித்து       விட்டால்,  அங்கே  மத  மாற்றத்தைக் கொண்டு  வருவது வெகுசுலபம்.

l பணமும் கிடைத்தது.
உலகையே ஆண்ட உன்னத  சமுதாயத்தைக்  காட்டு  மிராண்டிகள்  என்ற     முத்திரை   குத்தியது போலவும்   ஆனது.

சமூகத்தில்   நடக்கும்   சில   குற்றங்கள்    எப்படி ஒரு   கோணத்தை மட்டும் கொண்டு  இருக்காதோ,  அதே  போன்றதே     சிலை    கடத்தல்கள்.

தொழில்துறை ஏல வீடுகள்/Industrial auction houses  இந்திய  கலைப்படைப்புகள், சட்டபூர்வமாக, சட்ட  விரோதமாக  வாங்குபவரைக்  கண்ட றிந்ததும், கலைப்படைப்பு / சிலை திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இதற்காகத்  தனி கேட்டலாகு மெயின்டைன்     செய்யப்படுகிறது.

இந்தியாவில்  கலைப்படைப்புகளின்   மைய      காப்பகம்  இல்லை. இது திருடப்பட்ட கலைப் படைப்புகளை  பட்டியலிடுவதில்  சிக்கலை உருவாக்குகிறது.

இந்தியாவில் கடத்தல்களைத்  தடுக்காத  மிகக்  குறைவான  சட்டங்களும் உள்ளன. இத்தாலியுடன்  ஒப்பிடுகையில் அதன் கடுமையான  சட்டங்களைக்  கொண்டு,  1978 முதல்  378,00  கலைப்படைப்புகளை  மீட்டுள்ளது.

அதே  நேரத்தில்  இந்தியா  27  கலைப்படைப்பு களை மட்டுமே  பெற்றுள்ளது.
கலைப்படைப்பு கடத்தலுக்கான உலகளாவிய அணுகுமுறையும்  மாற வேண்டும்.
கையகப்படுத்தல் ஒரு சட்டபூர்வமான கொள் முதல்  என்பதை   நிரூபிப்பதற்கான பொறுப்பு வாங்குபவர்களுக்கு  வைக்கப்பட வேண்டும்.

இது கடத்தப்பட்ட கலைப்படைப்பு / சிலைகளை  வாங்குபவர்களைத்  தடுக்கும்.
ஒவ்வொரு தசாப்தத்திலும் இந்தியாவை விட்டு வெளியேறும் 10,000 க்கும் மேற்பட்ட முக்கிய கலைப்  பணிகளை  நாங்கள்  மதிப்பிடுகிறோம். ” என்று எஸ். விஜய் குமார் கூறினார்.

15 ஆண்டு களாக  மதிப்பிற்குரிய தெய்வ சிலை  திருட்டைக் கண்காணித்து வருகிறார். இவற்றில் சில 15-16 டன் அளவுக்குக் கனமானவை.

குமார் சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட,  “தி ஐடல் திருடன்”  என்ற  புத்தகத்தில் கலைப்படைப்பு திருட்டை  விவரித்துள்ளார்.

15-16 டன் சிற்பங்கள், பெருங்கடல் கொள்  கலன்களால்  நாட்டை  விட்டு வெளியேற்றப்பட்டு,       பித்தளை,  மரச்சாமான் என்ற பெயரில், பழம்,   காலணிகள்  என்று   ஏற்றுமதி  ஆகிறது.

கண்காணிப்பிலிருந்து தப்பிக்க, சென்னை, மும்பை, கொல்கத்தா,  ஹாங்காங்கிலிருந்து      நியூயார்க்   மற்றும்   லண்டன்   மற்றும்   பிற     சர்வ தேச இடங்களுக்கு மிகப்பெரிய சிற்பங்களைக்      கொள்கலன்  அனுப்பும்  வழிகள் மாற்றப்பட்டு ள்ளன.

சிறிய  துண்டுகள்   கூரியர்   செய்யப்படு கின்றன. இந்தத் திருடப்பட்ட துண்டுகளுக்கு அமெரிக்கா மிகப் பெரிய  சந்தையாகும்.  அதைத் தொடர்ந்து இங்கிலாந்து. இந்தத் திருடப்பட்ட துண்டுகளைக் கண்டு           பிடிப்பது  எல்லையற்ற  ஐரோப்பிய ஒன்றியத்தில்      கடினம்.

சர்வதேச சந்தையில் கிட்டத்தட்ட திருடப்பட்ட இந்திய  கலைப்படைப்புகள்  அனைத்தும்  ஆவணங்கள்   இல்லாமல்   உள்ளன. 30 உறுப்பினர்கள் மற்றும் பல தன்னார்வலர் களைக்  கொண்ட,  ‘இந்தியா  பிரைட்  திட்டம்’,  திருடப்பட்ட  கலைப்பொருட்களைக்  கண்டு பிடித்து அவற்றை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான  முயற்சியில்   ஈடுபட்டுள்ளது.

ஐடல் விங்/idol  wing என்பது தமிழக காவல்துறையின் மிகப் பழமையான  துறைகளில்  ஒன்றாகும். குற்றவியல் புலனாய்வுத்  துறையின்  குற்றப்பிரிவுடன் இணைந்தவுடன்,  இந்த  குழு  இப்போது மாநில காவல்துறையின் பொருளாதார  குற்றப்பிரிவின் கீழ் வந்துள்ளது.

ஐடல் விங் குறைவான பணியாளர்கள், ஆயுதம் கொண்டது.  இது புதிதாக உருவாக்கப்பட்டபோது,  அதில்  100  காவல்துறை அதிகாரிகள் இருக்க வேண்டும். இப்போது அதன் இணைய தளத்தில் ஏழு அதிகாரிகள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இப்படி திருக்கோயில்கள் கேட்பாரற்று இருந்தால் வேறு என்னதான் நடக்கும்!

நாம் தெருவில் உள்ள ஒவ்வொரு கோயிலும் நாம் தத்தெடுத்தாலே இது போன்ற சிலை திருட்டுகளை ஓரளவுக்கு குறைக்க முடியும்.

இப்படி சிதிலமடைந்து ஒருவேளை விளக்கு கூட ஏற்றப்பட முடியாத பல கோயில்கள் நம் தமிழ்நாட்டில் உண்டு.இதற்கு யார் காரணம் மக்களாகிய நமது மெத்தனமே காரணம்

மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தால்,அதற்கு தேவையான வருமானம் இருந்தால், ஒரு காவலாளியையாவது அல்லது சிசிடிவி கேமராவயாவது நம்மால் பிக் செய்ய முடியும்.

இந்த சிலை கடத்தல் குற்றவாளிகளுக்கு நாமும் துணை போகிறோம் என்பதுதான் உண்மையான விஷயம்.

அடுத்த அத்தியாயம்

8

7காஞ்சி   ஏகாம்பரேஸ்வரர்  திருக்கோயிலில்    காவலுக்கு   என்று  வயதான காவலாளி இருக்க, அவரை  அடித்துப்  போட்டு,  உள்ளே  நுழைந்தது  அந்தச்  சிலை  கடத்தல்  கும்பல்.“என்ன  கோயில்  இத்தனை பெருசாய் இருக்கு?...”  என்றான்  அந்தக்  குழுவில்  ஒருவன். அப்போ   நமக்கு   நல்ல வேட்டை தான்...”   என்றான்   இன்னொருவன்.நடந்து  கொண்டே…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்