மன்னர்களுக்கு எல்லாம்
மன்னன் அவன்
கன்னிகளின் இதயத்தை
திருடிச் செல்லும்
கள்வன் அவன்
வீரத்திற்கே விளைநிலம் அவன்
காதலின் வித்து அவன்
தங்க அரண்மனையின்
நாயகன் அவன்
செரு களத்தில் வித்தைகள்
புரிந்த கோமகன் அவன்
வஞ்சனையால் வீழ்த்தப்பட்டவன் அவன்
வரலாற்று பக்கத்திலிருந்து
மறைக்கப்பட்டவன்
புவியில் நிகரில்லா
கொற்றவன் அவன்
காஞ்சியின் தலைவன் அவன்!காஞ்சிபுரத்தில் தங்க அரண்மனை
காணாமல் போன வைரத்தால் செய்யப்பட்ட நிசும்பசூதனி சிலை
யுகங்கள் கடந்தாலும், ஜென்மங்கள் பல ஆனாலும் கை சேரும் காதல்
ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் விடுவிக்க முடியாத அரசியல் படுகொலை
தமிழக மக்களின் வீரம், அரசியல் அறிவு, சாணக்கிய தந்திரம், கட்டிட கலை, போர் முறைகள்!'விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர் என்ற ஆன்மீக தந்திரம்!...'என்று உங்கள் மனதை திக் திக் என்று அதிர வைக்கும் நாவல்.
அதிக பக்கங்கள், நிறைய புதிர்கள்!