அத்தியாயம் – 3
அத்தியாயம் – 3
” சொல்லு …எதோ பேசணும்னு கூப்பிட்ட …இப்ப அமைதியா இருக்க ” என்ற அமரனின் குரல் அந்த கனமான அமைதியை கலைத்தது …
” சொல்றேன் …” என்று சொன்னவளுக்கும் அவனிடம் எப்படி இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல சொல்வது என்று பல தரப்பட்ட
குழப்பங்கள் …யோசனைகள் …
” என்ன மேடம் சொல்றேன் சொல்லிட்டு என் முகத்தயே பாத்துகிட்டு வாயடச்சி போய் நிக்குற …மாமாவே சைட் அடிக்கிறியா ” என்று சொல்லி கண்ணடித்தவனை பார்த்து ஒரு நிமிடம் என்ன இவன் இப்படி எல்லாம் செய்கிறான் என்று
நினைத்தவள் …நாசுக்காக அவனுக்கு முதுகை காமித்து ” ஓஹ் …துறைக்கு அந்த நினைப்பு வேற இருக்க ” என்றவள் …
” எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்ல அமரன் ” என்று சொல்லியவளின் முன் வந்து நின்றவன் அவளின் முகத்தை இரண்டு நிமிடம் ஆழ்ந்து பார்க்க ஏதோ படபடப்பு அவளுள் ….அந்த படபடப்பு பட்டாம்பூச்சியோ அல்லது கரப்பாண்பூச்சியோ அது அவளுக்கே வெளிச்சம் …
” என்ன …ஏன் அப்படி பாக்குறீங்க ” என்று பெண்ணுக்கே உண்டான வெக்க சிவப்புடன் தரையை பார்த்து கொண்டு கேட்டவளை பார்த்து சத்தமாக அவன் சிரிக்க இப்பொது கேள்வியாக அவன் முகத்தை நோக்கி பார்ப்பது இவளின்
செயல் ஆகிற்று ….
” sure ” என்று சொன்னவனை சந்தோஷமும் குழப்பமும் கொண்டு அவள் பார்த்து கொண்டு நிற்க …
” எதுக்கு …” என்று கேள்வி கேட்டவளின் கண்ணம் அவனின் இதழ்களால் க்ஷண நேரத்தில் அர்ச்சனை செய்ய பட்டிருந்தது …
அவனின் அந்த நொடி நேர செயலை திகைத்து பார்த்தவள் அவர்களை யாராவது பார்த்துவிட்டார்களா என்று அலச …
” அடியே …உள்ள வாடி …யாரும் பார்க்கல ” என்று அவர்களின் தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் செல்லும் அவன் கத்திக்கொண்டே செல்ல …இங்கு ஒருத்தியின் முகமோ வெட்கத்தில் சிவந்ததை விட கோபத்தில் சிவப்பின் நிறத்தை கன்னத்தில் பூசிக்கொண்டு நின்றிந்தாள் …
இதோ இரண்டு நாள் முன் தான் இந்த பாலாஜி இப்படி ஒரு இடியை என் தலையில் வந்து இறக்கினான் என்று நினைத்தவளின் நினைவலைகள் இரண்டு நாளுக்கு முன் நடந்த விடயங்களில் கரையை கடந்தது …
****
ஏற்கனவே அவன் முத்தம் குடுத்ததை அவள் தப்பாக நினைக்கவில்லை என்றாலும் ஏனோ மனம் தான் அத்தனை கேவலமானவளா என்று வெம்பி துடித்தது …தானே தன்னை பாலாஜி உடன் ஒப்பிட்டு தம்மை தாழ்த்தி கொண்டு வந்திருக்கிறோம் என்று மனம் இன்னும் வாட்ட …ஈசல் பூச்சியாக நெருப்பில் வெந்து கொண்டிருந்தாள் சீதா …அவளின் பேரை நினைக்கையில் இன்னும் அருவெறுப்பாகியது …சீதாவாம் சீதா …என்று தன்னை தானே காரி துப்பியது மனம் ….
தன் மனைவியை விடுத்து ஆபாச விடுதிக்கு செல்லும் தந்தைக்கும் பணத்துக்காக படுக்கும் தாய்க்கும் பிறந்தவளுக்கு பேர் சீதாவும் …என்றவளுக்கு ஆத்திரமும் அழுகையும் சேர்ந்த வருவது போல் இருந்தது …இதில் ஒழுக்கங்கெட்ட அண்ணன் வேறு என்று மனசாட்சி திட்ட …ஒரு முத்ததுக்கே தானும் தன் தாயை போல் வேசி தான் போல என்று தேவையில்லாத விடயங்களை நினைத்து
மருகிக்கொண்டு இருந்தவள் …
அந்த முத்தத்தின் பின்னான மூன்று வாரத்துக்கு பின் தான் தெளிய ஆரம்பித்தாள் …
” நானா போய் முத்தம் குடுன்னு சொன்னேன் அவனா தானே முத்தம்
குடுத்தான் …இங்க எங்க என் நடத்தை கெட்டது …ஒழுக்கங்கெட்ட அண்ணனுக்கும் சுகத்துக்கு அலையிற அப்பனுக்கும் காசுக்காக படுக்கும் அந்த பொம்பளைக்கும் பிறந்தது என் தப்பா …நானா கேட்டேன் என்ன பெத்துக்கோங்கன்னு …அவங்கவங்க சுகத்துக்கு என்ன பெத்ததுக்கு நான் என்ன பண்ணுவேன்…” என்று தெளிந்தவள் …
” என்ன சூழ்ந்து இருக்குறவங்க யாரும் நல்லவங்க இல்லைனாலும் நான் என் ஒழுக்கம் தவறாம தானே இருக்கேன் ” என்று தன்னை தானே தேற்றிக்கொண்டவள் …பழையபடி பட்டாம்பூச்சியாக சிறகடிக்க ஆரம்பித்து
இருந்தாள் ….
அதோ அந்த சிறகை உடைத்து விடுவதை போல பாலாஜியின் சொற்கள் …
” சீதா …உனக்கு alliance வந்திருக்கு ” என்று அவன் சொன்னதே முதல் அதிர்ச்சி என்றால் …
” மாப்பிளை என் நண்பன் அமரன் …” என்று சொல்ல அவனின் முகத்தில் அடித்தது போல் அவளிடம் இருந்து நிராகரிப்பே வந்தது …அதை எதுவும் கண்டுக்கொள்ளாதவனாக …
” நீ கண்டிப்பா அமரனை கல்யாணம் பண்ற ” என்று அவன் கத்த …
” சும்மா கத்துற வேலை என்கிட்டே வெச்சிக்காத ” என்றவள் அவனை விட பலத்த குரலில் ” NO ” என்று கத்த …அவளின் நிராகரிப்புகளை ஒரு வாக்கியத்தில் முடித்து விட்டு சென்றிருந்தான் பாலாஜி …
” இங்க பாரு …இப்ப வேண்டாம்னு சொல்லி வெளிய போக ட்ரை பண்ண ..எனக்கு ஒன்னும் இல்ல உனக்கு தான் ஓடுகாலி பட்டம் ” என்று எங்கு அடிக்கனுமோ அங்கு குறி பார்த்து அடித்துவிட்டு சென்றிருந்தான் …அதன் பலன் இதோ அவர்களின் திருமண வைபோக நாளை இன்னும் இரண்டே வாரத்தில் முடிவு செய்திருந்தார்கள் …
தொடரும் …






Nice