அத்தியாயம் – 4
அத்தியாயம் – 4
இதோ ஏற குறைய அவர்களின் திருமண நாளும் வந்தாகிற்று …அமரனின் சீதையாக தாலியும் பூட்டியாகிற்று …ஏனோ ஏழு முறை அக்னியை சுற்றி அவனுடன் வலம் வரும்போது அந்த அக்னி ஜிவாலையில் தன்னை தாமே மாய்த்து கொள்ள மாட்டோமா என்று மனம் பொசுங்கியது கதறியது …
இங்கு நானோ மனம் வெந்து நிக்க இவனோ யாரோ ஓர் பெண்ணிடம் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்கிறானே என்று தமையனை பார்க்கும் நேரங்களில் எல்லாம் வேதனை மனதை பிசைந்தது …
” ஓய்…என்னாச்சி…” என்று முகம் கசங்கி தன்னுடன் நின்றிந்தவளை அவன் பார்க்க …
” ஆஹ் …புண்ணாப்போச்சி …” என்று அவள் ஒளர …
” என்ன ? ” என்று அவள் முகத்தை ஆராய்ந்தவன் அந்த கல்யாண கும்பலிலும் அவளுக்கு தன் கைக்குட்டையை நீட்டினான் …
” தேங்க்ஸ் …” என்று வாங்கியவள் அவன் வைத்து விட்ட குங்குமத்தையும் அளிக்க போக …
” ஏய் இரு …” என்றவன் குங்குமத்தை தவிர்த்து அவனாகவே அவளில் பூத்திருந்த வேர்வை துளிகளை தன் கைக்கொண்டு துடைத்துவிட்டான் …அவன் என்னவோ எல்லார்முன்னும் கொஞ்சமும் கூச்சமின்றி செய்துவிட்ட செயல் தான் …ஆனால் பெண்ணவளுக்கு பிடிக்காத திருமணம் என்றால் இத்தனை நெருக்கத்தில் தன்னுடன் ஓர் ஆண் என்பதிலே திண்டாடி போய் இருந்தவள் …அவனின் செயல்களில் செயல் இழந்து தான் போயிருந்தாள் …
” மாப்பிளைக்கு ரொம்ப அக்கறை போலவே …” என்று கூட்டத்தில் ஓர் பெண்மணி கூற …
” ரொம்பதான் அக்கறை …” என்று முகத்தை திருப்பி கொண்டு சொன்னவளின் செயலில் அமரனின் முகத்தில் அவனை அறியாமலே குறுநகை …
” என்ன மாப்பிளை …எவளவு நேரம் எங்க பொண்ணையே பார்ப்பீங்க …நல்ல நேரம் முடியறதுக்குள்ள வீடு திரும்பணும் “என்ற ஒருவரின் வார்த்தை படி இருவரும் மனமக்களுக்கே உண்டான வாகனத்தில் ஏறிக்கொண்டு தங்கள் இல்லறத்தை நோக்கி ஓர் பயணம் கொண்டனர் …
” நீங்க ஏன் அப்படி பண்ணீங்க …” என்றவளின் கேள்வி வண்டி எடுத்தவுடன் அவனை நோக்கி பாய …ஒரு நிமிடம் டிரைவர் என்ன செய்கிறார் என்று பார்த்தவன் …
” எப்படி பண்ணேன் …” என்று இப்போது அவளை கண்களாலே களவாடி கொண்டு கேட்க ….
” என்ன ,,,” என்றவள் அவனின் வழித்து விழுங்கிவிடும் பார்வையில் இருந்து தன் பார்வையை அகற்றி …
” எல்லார் முன்னாyடியும் kercheif எடுத்து தொடச்சிவிடுறீங்க …”
” ஏன் நான் பண்ணக்கூடாத …” என்றவனின் வார்த்தைகளில் திரு திருவென முழித்தவளை பார்த்து நகைத்தவன் …
” எல்லாம் ஒரு அக்கறை தான் …” என்று ஹஸ்கி டோனில் இப்போது அவன் பேச …
” அக்கறையும் வேண்டாம் உங்க சக்கரையும் வேண்டாம் …” என்றவள் அவனிடம் இதற்கு மேல் பேசுவது வீண் வம்பு என்று தெரிந்தவள் அவனை பார்க்காமல் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் …
” ம்ம் …ரொம்ப அக்கறை தான் …எனக்கு …உன்மேல ” என்றவனின் வார்த்தைகள் அழுத்தி நிதானமாய் காதில் வந்து விழுந்தாலும் கேட்காதவள் போல தன் பார்வையை கிஞ்சிதமும் அவனிடம் திருப்பவில்லை …அவன் அதற்குமேல் பேசவர அதற்குள் வீடும் வந்துவிட மீண்டும் அவர்களில் ஓர் மௌனம் …கல்யாண வீட்டின் கலையில் சிறு சிறு சடங்குகளும் நிறைவேற …இதோ பட்டு புடவை ஜராஜருக்கா மல்லிகை பூ மணமுடன் கையில் சொம்புடன் அவர்களுக்கான இரவின் அரைக்குள் உல் வர அங்கோ பரிதாபம் யாரும் இல்லை …
இதில் வேறு சொந்தகார பெண்மணிகள் காலை வரை வெளிவரக்கூடாதென்று அவர்களின் அறையை தாள் போட்டிருக்க …இங்கோ அவளின் மணாளனே முதலில் இல்லை …வெக்கத்துடன் மணமகளுக்கே உரிய கனவுடனெல்லாம் வரவில்லை …தான் மறுப்பை மதிக்காமல் தன்னை திருமணம் செய்து கொண்டவனின் இல்லற வாழ்க்கையை நரகமாக்க நினைத்து கடவுளிடம் வேண்டிக்கொண்டே இங்கு வந்திருந்தாள் …
” ச்சே …இவனை இன்னைக்கே கதற விடலாம்னு பார்த்தா ஆளையே காணோம் ” என்றவள் டங் என்று அந்த சொம்பை அங்கிருந்த மேஜையில் வைத்தவள் …மல்லிப்பூ நிறைந்த அந்த மெத்தையில் போய் அமர்ந்தாள் …
” இது என்னடா …புருஷன் தான் பொண்டாட்டிக்காக காத்திருப்பாங்க …இங்க என்னமோ எல்லாம் உல்ட்டாவா இருக்கு ” என்று சிரித்து கொண்டவளின் மனசாட்சி ச்சீ சிரிக்கிறியா …அவன் மட்டும் வந்தான் இன்னைக்கு உன் நெலமை அவ்ளோதான் …உன்ன கதற கதற rape பண்ணபோறான் …என்றவளின் நிலையை அந்த காட்டமான குரல் கலைத்தது …
” ஏய் …” என்று குரல் மட்டும் வர ….எங்கிருந்து குரல் வருகிறது என்று தலையை சுற்றி முற்றி பார்த்தவளை பார்த்து தலையில் அடித்துக்கொண்டவன் …
” இங்க பாருடி …” என்று பாத்ரூமின் கதவின் பின் உடம்பை மட்டும் மறைத்து அவன் கூப்பிட …அவனின் கோலத்தில் சிறிது அரண்டவள் அப்போதும் தன் துடுக்கு தனத்தை முன் நிறுத்தி ” என்ன ” என்று திமிராக அமர்ந்த படியே அவனை நோக்கி ஓர் பார்வை வீசினாள் …
இது வரை அவனை யாரும் இப்படி எல்லாம் திமிராக பார்த்ததில்லை …பார்த்தாலும் அடுத்த நிமிடம் அவர்கள் மாயமாகி இருப்பார்கள் …ஆனால் அவனின் அகங்காரம் எல்லாம் தொலையும் இடம் இவளாக இருக்க கொஞ்ச கொஞ்சமாக அவளில் உயிர் கரைந்து கொண்டிருந்தான் அமரன் …
” ஏய் என்ன திமிரா …ஒரு துண்டு எடுத்துட்டு வாடி …” என்று அவன் அவளை பார்த்து முறைக்க …
” அய்யே …என் பேர் ஒன்னும் ஏய் இல்லை …call me seetha …சீதாலக்ஷ்மி ” என்று இப்போது பதிலுக்கு திமிருடன் இவள் பார்க்க …
“ஓகே மேடம் …கொஞ்சம் towel எடுத்து கொடுங்க …” என்றவனின் கெஞ்சலில் அது என்று ஒரு பார்வையுடன் அவனிடம் துண்டை நீட்ட …அதை வாங்கியவன் ” தேங்க்ஸ் ” என்று சொல்லி மீண்டும் கதவை மூடிக்கொள்ள …அவனின் செய்கையில் இவளுக்கு சிரிப்போ சிரிப்பு …
” பெரிய மன்மத குஞ்சு இவரு …” என்று அவள் கட்டிலை நோக்கி போக அவளை பலமாக ஓர் கரம் இழுத்து தழுவிருந்தது …
தொடரும் …






Nice