arrow_back
பரமபதம் அத்தியாயம் 12
பரமபதம் chevron_right பகுதி 12 / 54

அத்தியாயம் 12

visibility 798
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.4/5 (10 மதிப்பீடுகள்)
பகிர்

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் சத்யன். அவளது தோளில் சாய்ந்தவாறே உறங்கியிருக்க அவனைச் சாய்த்துக் கொண்டு அவளும் உறங்கியிருந்தாள்! எங்கோ செல்பேசி அழைப்பு கேட்கவே இமைகளைப் பிரயத்தனப்பட்டுப் பிரித்தான். தனது செல்பேசி தான் அழைத்தது! எடுத்து யாரென்று பார்க்க… அழைத்தது சுபர்ணா! எடுக்காமல் விட்டுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அழைப்பு நின்றது. மனம் நிம்மதியாக அவன் செல்பேசியைக் கீழே வைக்க யத்தனித்தபோது மீண்டும் அழைப்பு!

“ஹலோ… சொல்லுங்க…” மிக இயல்பான குரலில் அவன் பேச

“என்ன பிரகாஷ்? அப்பாகிட்ட என்னைச் சாக்கடைன்னு சொன்னீங்களாம்…” அவளது குரலும் இயல்பாகவே இருந்தது!

“ஆமாங்க சொன்னேன்…”

“பிரகாஷ்… எனக்கு உடம்பு கொஞ்சம் சரி இல்ல. அதான் உங்க அம்மா அப்பா டெத்க்கு வர முடியலை. அதுக்காக இப்படியா சொல்வீங்க?”

“ஏங்க சுபர்ணா? உடம்புக்கு என்ன முடியல? நேத்து பார்ட்டி மப்பு ஓவரா ஆகிடுச்சா இல்ல எக்ஸ்டசி போதை இன்னும் தீரலையா?”

“வாட்? என்ன சொல்றீங்க பிரகாஷ்?” அதிர்ச்சியடைவது போல அவள் குரல் ஒலிக்க,

“இன்னும் வேற சொல்லனுமாங்க? அதை எல்லாம் சொல்லக் கூட எனக்குக் கூசுதுங்க சுபர்ணா. வேணாம் பேசாதீங்க… வெச்சுடுங்க…”

“சோ நேத்து பார்ட்டிக்கு நீங்க வந்தீங்க?” அவளது குரல் இனிமேல் நடிக்கத் தேவை இல்லையென்று சமன்பட்டது, வெளிப்பட்டது!

“எஸ்…”

“சோ வாட்? உங்களைக் கல்யாணம் பண்றதால நான் பார்ட்டி பண்ண கூடாதா பிரகாஷ்?”

“நீங்க எப்படி வேணும்னாலும் பார்ட்டி பண்ணுங்க சுபர்ணா மேடம். பட் ஐ ஆம் நாட் தி கேம். இந்த அசிங்கமான விளையாட்டுக்கு நான் வரலை…”

“நீங்க விட்டுடுன்னு சொன்னா நான் விட்டுடுவேனா பிரகாஷ்?”

“அதனால?” கேள்வியாக நிறுத்தினான்!

“விட முடியாது. உங்களைவிடவே மாட்டேன் பிரகாஷ்…” அவளது குரலில் பயமுறுத்தகூடிய உறுதி தென்பட,

“அது முடியவே முடியாதுங்க…” அவன் மிக இயல்பான குரலில் மறுதலித்தான்!

“இட்ஸ் எச் சேலஞ்ச் பிரகாஷ்…” மிக உறுதியாக ஒலித்தது!

“ம்ம்ம் பாக்கலாமே…” அவனது குரலும் உறுதியாக ஒலித்தது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 13

வாழ்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்! போர்க்களம் மாறலாம் தோள்கள் தான் மாறுமா? பி ஆர் குரூப்ஸ் தலைமை அலுவலகம். குழுமி இருந்த மக்களிடையே முன் சென்று படியில் ஏறி நின்றான் சத்யப்ரகாஷ்! கூட்டம் சலசலத்தது... ஊழியர்கள் என்னவாகுமோ என்ற பயம் உள்ளே…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

  1. Idiot17பொதுக் கருத்துIdiot17

    So, we got the anchor that’s going to move the story forward… lovely! 😉

உங்கள் கருத்தைப் பகிருங்கள்